Monday, June 22, 2009

# விஜ‌ய்க்குப் ப‌ய‌ப்ப‌டுகிறாரா, விஜ‌ய‌காந்த்?


இதை எல்லாம் எழுத வேண்டுமா என்றுதான் முதலில் யோசித்தேன்.

எழுத வைத்த பெருமை (அல்லது சிறுமை) நமது வெகுஜனப் பத்திரிக்கைகளையே சாரக் கடவது!

பத்து நாட்களாகவே விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து அவரது ரசிகர்களை விட அதிகமாகவே ஆர்வம் காட்டுகின்றன பத்திரிக்கைகள் . கல்யாணப் பத்த்ரிக்கைகளைத் தவிர மற்ற எல்ல பத்திரிகைகளிலும் இதே பேச்சு.

அதுவும் ஒரு பெரிய பத்திரிக்கை 'அரசியலுக்கு வருவது உறுதி ‍ விஜய் அறிவிப்பு ' என்று அட்டைப் படக் கட்டுரை போட்டால் அதே நாளில் வரும் இன்னொறு பெரிய பத்திரிக்கை 'விஜய்க்குப் பதில் சொல்லும் அஜித்' என்று அட்டைப் படக் கட்டுரை வெளியிட்டு மக்கள் மீது தனக்குள்ள 'அக்கறை'யைக் காட்டியது.


எத்தனை ரசிகர்களுக்கு தெரியுமோ தெரியாதோ... விஜய்யின் மனைவியாகிய அந்தச் சகோதரி ஓர் இலங்கைத்
தமிழ்ப் பெண். ஆனால் வெகு நாட்களுக்கு முன்பே லண்டனில்( சரிதானே?) வாஅத் துவங்கிய குடும்பம் அது.

அந்த ஒரு காரணாத்துக்காகவே இலங்கைத் தமிழருக்கான ஆதரவுப் போராட்டங்களில் தனது ரசிகர் மன்றத்தின்
துணையோடு விஜய் தீவிரமாகக் களம் இறங்குவார் என்று எதிர்பார்த்த முட்டாள்களில் நானும் ஒருவன். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே ஒரு நாள் உண்ணாவிரதததில் உட்கார்ந்தார். அடுத்து ஒரு நாள்( அல்லது
அதே தினத்தில்?) அவரது ரசிகர்கள் மாநிலம் முழுக்க அடையாள (!) உண்ணாவிரதம் இருந்தனர்.

நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்தின் போது , நன்கொடை வசூலித்து உடல் ஊனமுற்றவர்களைக் காப்பாற்றும் ராகவா லாரன்ஸ் கூட பல லட்சங்கள் ஈழத் தமிழருக்கு நன்கொடை தருவதாக அறிவித்தார். ஆனால் அதே மேடையில் அதை விட அதிக்த் தொகஒ அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜய்.....


'என் ரசிகர்கள் எல்லோரும் பிரதமருக்குத் தந்தி அடிக்க வேண்டும்' என்று அறிவித்தார். (உண்மையில் விஜய்யின் இந்த அறிவிப்பைப் பார்த்து கருணாநிதி ஒரு நிமிடம் ஆடித்தான் போயிருப்பார்.......'என்ன்டா இது... ! கடிதம் எழுதியும் தந்தி அடித்தும் பிரச்னையை இழுத்தடித்து சிங்களவனுக்கு நல்ல நீண்ட நெடிய சந்தர்ப்பம் தந்து ஈழத்த‌மிழன் எல்லோரையும் சாகடிப்பது என்பது நமது ராஜ(நரித்)தந்திரம் ஆயிற்றே..! இந்தத் தம்பி ஏன் அதற்குப் போட்டிக்கு வர்றான்' என்று).

இதுதான் விஜய்யின் அரசியல்!

ஒரு வார அதிரி புதிரிக்குப் பின்பு 'இப்போதைக்கு நேரடி அரசியல் இல்லை' என்ற முடிவுக்கு விஜய் வந்திருபதாகக் கூறப் படுகிறது.

அதே நேரம் 'மக்க்ள் பிரச்னைகளுக்காக எனது ரசிகர்களைத் திரட்டிப் போராடுவேன் ' என்றும் கூறுகிறார் விஜய். ( அட... இதுதான் சார் நிஜமாவே அரசியல்!)

அண்மையில் இது பற்றி விஜய்யின் தந்தையும் மரியாதைக்குரிய இயக்குனருமான எஸ். ஏ. சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறிய ஒரு விஷயம் கவனிக்கத் தக்கது.


' தி.மு.க விற்கு எதிராகப் போகாத நிலையில் விஜய்யின் அரசியல் இருக்கும்' என்றெல்லாம் அதில் கூறியிருந்த சந்திர சேகர் சொல்லியிருந்த இன்னொரு விஷயம்...." விஜய்யின் அரசியல் பிரவேசத்தைப் பார்த்து ( விஜய்யின் ரசிகர்கள் பலத்தைப் பார்த்து )விஜய்காந்தே பயப்படுகிறார்." என்பதுதான்.


இப்படி ஒரு கருத்தை( அது உண்மையென்றே வைத்துக் கொண்டாலும்) சந்திர சேகர் நேரடியாகச் சொன்னது எப்படி?

விஜய்காந்தின் ஆரம்பகால சினிமா வெற்றிகளில் மிகப் பெரும் பங்கு சந்திரசேகரையே சாரும். விஜய்காந்தின் வெற்றியின் குரு என்று சந்திரசேகரைத் தாராளமாகச் சொல்லலாம். அந்த நன்றி காரணமாக தமது கருத்தை எதிர்த்து விஜய்காந்த் ( வெளிப்படையாகப் )பேச மாட்டார் என்று இயக்குனர் நினைத்திருக்கலாம். மீறிப் பேசினால் அதையே விஜய்யின் பரபரப்பான அரசியல் பிரவேசத்திரற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று திட்ட மிட்டிருக்கலாம்.


எப்படி ஆரம்பத்தில் ரஜினிகாந்துக்கும் ( அய்யோ பாவம்) விஜயகாந்துக்கும் ஒரு அரசியல் ஒப்பீடு ஏற்பட்டதோ அப்படி ஒரு ஒப்பீட்டை எடுத்த எடுப்பிலேயே விஜய்காந்த் மூலம் விஜய்க்கு ஏற்படுத்த முடிவு செய்திருக்கலாம். இதைத் தவிர்பதற்காகவே இதற்குப் பதில் சொல்லாமல் விஜய்காந்த் அமைதி காக்கலாம் இன்றுவரை.


ஒரு விசயம் மறக்க முடியாதது.
யாருடைய ஆதரவும் இன்றி... சொல்லப் போனால் விஜய்காந்தின் ஆதரவு கூட இல்லாமல்... விஜய்காந்தின்ரசிகர்கள்உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல.இன்று வரை அரசியலில் விஜய்காந்தின் தங்க நிமிடம் என்று நான் அதைத்தான் சொல்லுவேன்(விருத்தாச்சலம் வெற்றியை விட)
ஆனால் அதன் பின்னர் விஜய்காந்த் அரசியலில் செய்தது எல்லாம் தவறுகள்தான். விளைவு?
'விஜய்காந்த் நினைத்தால் ஒருவரது வெற்றியைத் தடுக்க முடியும். மற்றபடி அவரால் ஜெயிக்க முடியாது.அவர் ஒரு அரசியல் கத்தி. அதைக் கையில் வைத்து இருப்பவர் தனது எதிரியின் கழுத்தை வறட் வறட் என்று நன்றாக அறுக்க முடியும்" என்றாகி விட்டது.
விஜய் ரசிகர்களைப் பொறுத்தவரை ஒரு அமைதியான வேகம் அவர்களிடம் இருப்பதை உணர முடிகிறது.இதுவரை பயன்படுத்தப்படாத உத்வேகம் அவர்களது பலம். இயக்குனர் சந்திர சேகரால் அவர்களை ஒரு வகையிலாவது பயன்படுத்திக் கொள்ள முடியும். ஏனெனில் யாரை நேரடியாக இழுக்க வேண்டும்; யாரிடம் அடக்கி வாசிக்க வேண்டும் என்ற நேக்கு போக்கு அவரிடம் இருக்கிறது.
அதே நேரம் இதுவரை விஜய் செய்திருக்கும் (அரசியல் அல்லாத?) அரசியல் பாராட்டும்படி இல்லை என்பதையும் குறிப்பிட வேண்டியது கட்டாயமாகிறது.
சரி.. ... இயக்குனர் குறிப்பிட்டது போல, உண்மையிலேயே விஜய்யைப் பார்த்து விஜய்காந்த் பயப்படுகிறாரா? அல்லது பயப்பட வேண்டிய நிலையில் இருகிறாரா?
விஜய்காந்தின் தாய்மொழி தெலுங்கு என்றாலும் ( அவரை ஆதரிக்கும் பலபேருக்கு அது தெரியாது என்பது வேறு விசயம்), ' ஏய்க்க்... நான் மதுரைக்காரன்ல்ல.....' என்ற அடையாளம் ... மேடைகளில் அவர் பேசும்போது, " வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும் ' என்ற அவரது பேச்சு கொஞ்சம் உணர்வுடன் இருப்பதாகவே தோன்றியது , படங்களில் அவர் மாய்ந்து மாய்ந்து பேசிய 'தமிழன்' வசனங்கள்... எல்லாம் அவருக்குப் பெரும்பலம். அவரை தமிழராகவே எல்லோரும் பார்த்தார்கள் .
ஆனால் கல்யாணம் என்று வந்த போது தேடிப் போய்த் தெலுங்கு குடும்பத்துப் பெண்ணாகப் பார்த்து செய்தது முதல் சறுக்கல்.( அல்லது பொது மக்களிடம் குட்டு வெளிப் பட்ட முதல் சம்பவம்)


சரி .. நடந்தது நடந்து போச்சு... பொண்டாட்டி , புள்ளைன்னு ஆயிப் போச்சு.. இனிமே மாத்த முடியாதுதான்.
ஆனால் கட்சி ஆரம்பித்த பின்பு மைத்துனரின் விருப்பப்படி பல்வேறு ஊர்களில் கட்சிப் பதவிகளில் தெலுங்கு பேசுபவர்களுக்குத் திட்டமிட்டு ப் பதவிகள் தர‌ப் படுவதாக வந்த புகார்கள் .....
மனைவி , மைத்துனரின் கருத்துப்படி காங்கிரசோடு கூட்டணி அமைத்து நா....ற்பது தொகுதியும் வென்று உடனடியாக ஆட்சியைக் கலைத்து முதல்வராகிவிடலாம் என்ற ஆசையில் , காங்கிரசை எதிர்க்கக் கூடாது என்று .....
ஈழத் தமிழர் பிரச்னையில் வாயில் ஒரு டன் அல்வாவையும் கைகால்களில் 100 டன் இரும்பையும் கட்டிக் கொண்டவர்போல அமைதிகாத்தது...... ( அதிலும் காங்கிரசாரைக் குளிர்விக்க பிரபாகரன் மேல் உள்ள பற்றால் தன் மகனுக்கு அந்தப் பெயர் வைக்கவில்லைகேப்டன் பிரபாகரன் பட ஞாபகமாகத்தான் வைத்தேன் என்று கதர்குல்லா ஆட்களுக்குக் குல்லா [போட்டது எல்லாம் சகிக்க முடியாத வழுக்கல்கள்)
" மின்சாரப் பிரச்னையைத் தீர்க்க என்னிடம் திட்டம் உண்டு.. ஆனால் அதை நான் ஆட்சிக்கு வந்தால்தான் சொல்வேன். இபபவே சொன்னா காப்பி அடிச்சுடுவாங்க' என்ற ரீதியில் பிதற்றியது......
" நான் ஆட்சிக்கு வந்தால் ரேசன் பொருட்களை வீடு தேடி வந்து தரச் செய்வேன்" என்று அறிவித்ததன் மூலம் , தானும் அதே நாற்றக் குட்டையில் ஊறிய மட்டை என்று நிரூபித்தது..!
கட்சியின் கொள்கைத் திட்டத்தில் " தமிழ் மொழியைக் காப்போம் .. அனைத்து மொழிகளையும் கற்போம்" என்று சொல்லாமல் , மனைவி மைத்துனரின் தெலுங்கு ஆதிக்கம் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருந்த அதே சமயத்தில் கொள்கைத் திட்டத்தில் "அன்னை மொழியைக் காப்போம்; அனைத்து மொழிகளையும் கற்போம் " என்று அறிவித்ததன் மூலம், " விஜய்காந்த் யாரோட அன்னை மொழியைக் கற்போம்னு சொல்றாரு? அவரு அன்னை மொழியான தெலுங்கைச் சொல்றாரா? இல்லை நம்ம அன்னை மொழியான தமிழைச் சொல்றாரா? என்ற குழப்பத்தை ஏற்படுத்தியது.......


அண்மைக் கால விசயம் என்றால் திமுக சொல்படி கேட்ட காங்கிரசின் சொல்படி கேட்டு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஈழ ஆதரவுக் கூட்டணியின் ஓட்டுக்களைப் பிரித்து அதைத் தமிழகத்தில் தோற்கடித்து ஈழத்தின் துரோகிகள் பட்டியலில் இணைந்தது.....
இபப‌டி விஜய்காந்த் செய்த தவறுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட விஜய்காந்த் வேறு. ஆனால் கிடைத்த விஜயகாந்த் வேறு.
ஆக ,மேற்கொண்டு விஜய்காந்த் தனது மனைவி மைத்துனருக்கு அரசியலில் அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் விருப்பப்படியும் குடும்பத்துக்கு வெளியேயும் தவறான ஆலோசனை சொல்பவர்களின் பேச்சையே கேட்டுக் கொண்டிருந்தால் சந்திரசேகர் சொன்னபடி இப்போது இல்லாவிட்டாலும் இனிமேலாவது விஜய்யைப் பார்த்து பயப்படவேண்டிய நிலை வரலாம்.
விஜய் என்ன... " வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் பாடலில் ஒரு தம்பி மைக்கைப் பிடித்துக் கொண்டு உறைந்த பார்வையுடன் நிற்பானே.....
அவனைப் பார்த்துக் கூடப் பயப்பட வேண்டிய நிலை வரலாம். !

Friday, June 19, 2009

# டில்லியே ..... பதில் சொல்!சிங்கள மிருகங்களின் சித்திரவதை முகாம்களில் சுமார் 50000 தமிழர்கள் கைகாலிழந்து கடுந்துயரில் தவிக்கின்றனர் என்றும்
தினந்தோறும் 15 தமிழ் உயிர்கள் பட்டினியால் இழைஇழையாகப் பிரிந்து மரணமடைகின்றன என்றும்
சிங்கள ராணுவத்தால் தாக்கப்படும் தமிழ்நாட்டு மீனவனின் துயர் துடைப்பது பற்றி உண்மையாகச் சிந்திக்க ஒரு நாதியும் இல்லை என்றும்
உணர்ந்த ஒரு நொடியில் பொங்கிய கோபத்தின் வெளிப்பாடு.

* துருவ முனைகளையும் துருவிச் சென்று பூமிப் பந்தையே புரட்டிப் போடும் ஈழத் தமிழனின் கோர அலறல் ... இரக்கமற்ற டில்லியே!உனக்கு மட்டும் கேட்காதது ஏன்?

* குளிரால் ஏற்பட்ட காது அடைப்பா? இல்லை 'குளிர்' விட்டுப் போனதால் வந்த காது புடைப்பா?

*'வடக்கு வாழ்கிறது ; தெற்கு தேய்கிறது' என்று வாளை எடுத்தவர்களே , இன்று வாலாட்டி நிற்பதால் வடக்கு விடைக்கிரதோ? தெற்கைத் தேய்க்கிற‌தோ?

*பாராளுமன்றம் கட்ட பதியம் போட்ட கற்களை , இதயத்தில் திணித்துக் கொண்டாயா , இதயமற்ற வடக்கே?
*'சமாதானப் புறா'வைத் தலைவராகக் கொண்டிருந்ததாகச் சதிராட்டம் போட்ட இயக்கமே....!ஈழத்தில் இன்று மனிதாபிமான மயில்களைக் கொன்று மசாலாக் கறி சமைத்ததில், எண்ணையும் அடுப்பும் உந்தன் உபயம் தானே?(மயில் ... இந்திய தேசியப் பறவை)
*கப்பல் கப்பலாய் ஆயுதம் அனுப்பிக் கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு ..... பிணத்தின் மணிக்கட்டுச் சுளுக்கெடுக்க மருத்துவக் குழுவா?

*'எதிர்கால இந்தியாவின் தெற்கெல்லைக் காவ‌ல் ஈழ‌த் த‌மிழின‌ம்தான்' என்ற‌ அறிவாண்மை கொண்ட‌ அன்னை இந்திராவை அன்று கொன்றது...... இரண்டு சீக்கியர்கள் !
இன்று அனுதினமும் கொல்கிறதா, அவர் கண்ட அமைப்பே?
*தான் வாழும் மண்ணை கெடுத்துக் கொண்டு ..... தமிழன் வாழ்ந்த மண்ணையும் அழித்துவிட்டு ....சுய நல மலத்துக்காக‌ டில்லியில் கதறும் கதரும்.......துணை போகும் துரோகிகளும்..... தூக்கும் காவடியால் வந்த கொழுப்பா?
சீச்சீ! இதுவும் ஒரு பிழைப்பா?

*முத்துக் குமார் தொட‌ங்கி முந்தைய‌ நொடி வரை ,எரியும் பிண‌ங்க‌ள் இனி உன் வீட்டில் எரியாதா?
பால் ம‌ண‌ம் மாறாத ப‌ச்சிள‌ம் ம‌ழ‌லைக‌ளின் சிதறும் உட‌ல் பிண்ட‌ம் இனி உன் வீட்டில் சித‌றாதா?
தம் வீட்டுப் பெண்ணின் சிதைப‌ட்ட உடல் பார்த்துப் பீறிடும் அவலக் கண்ணீர் இனி உன் கண்க‌‌ளில் ஊறாதா?
நேர்மை என்றொன்றிருந்தால் அது உன் குல‌த்தினையே கொளுத்தாதா?
* இரக்கமற்ற ஏகாதிபத்தியமே!என்னதான் செய்யவில்லை தமிழன் உனக்கு?
ஏனிந்த அலட்சியம் ?
எடு உன் வழக்கு!

* ந‌டுவுநிலைமைக் கொள்கையை நாசப் படுத்திக் கொண்டு....
எதிர்கால இந்திய நலனை எரியூட்டிக் கொண்டு....
அயலுறவுக் கொள்கையை அசிங்கப் படுத்திக் கொண்டு.....
உலக நாடுகள் முன்பு உளுத்தனாய் நின்று கொண்டு....
நியாயம் உமிழும் எச்சிலை முகத்திலே ஏந்திக் கொன்டு...
தமிழினத்தைத் தகர்ப்பதில் என்ன பலன் உனக்கு ? அதை விளக்கு!
*ஒன்றரை லட்சம் உயிர் போயும் ஒன்றரை லட்சம் நடைப் பிணமாயும் இன்னும் வஞ்சம் தீராதெனில் உன் கையில் எதற்கு நீதி எனும் விளக்கு? அதை விலக்கு!
*உலகுக்கும் உனக்கும் நாகரீகம் கற்றுத் தந்தது தமிழன் குற்றமா?
(இங்கும் இலங்கையிலும்)வந்தாரை வாழவைத்து வகையற்றுப் போனது எம் குற்றமா?
காமராஜர் , கலாம் என நேர்மையின் சிகரங்களை உனக்கு நேர்ந்து விட்டது எம் குற்றமா?
எமக்கு எதிரான அறுபதாண்டுச் சதிகளை இந்திய தேசப் பற்றின் பெயரால் ஏற்று கொண்டது எம் குற்றமா?
*கொடி நாள் என்றாலும் குஜராத் குலுங்கினாலும் கொட்டிக் கொடுப்பவன் தமிழன் தானே?
கார்கில் வெடித்த போதும் கங்கை அழித்த போதும் தமிழனின் கண்ணீரும் ரத்தமும் கிடைத்ததா இல்லையா?
*காவிரி நீரோட்டம் காய்ந்த போதும் தேசிய நீரோட்டம் தேயாது காத்தவன்
தமிழன்
*தண்ணீர் இல்லை என்போர்க்கும் மின்சாரம் தருபவன் தமிழன்.
* எவரும் அங்கும் தன்னைப் பிழைக்க விடாத போதும் எல்லோரையும் தன்னிடத்தே உயர வைப்பவன் தமிழன்.
*தமிழன் என்ன.. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை உதறித் தள்ளி இந்திய தேசியத்தைக் கற்பழிக்கும் க....சடான மாநிலத்தவனா?
யுத்தக் குழுக்கள் வளர்த்து நித்தம் வெடி வெடிக்கும் ஆ....பத்தான மாநிலத்தவனா?
போலித் தேசியம் பேசிக் கொண்டு காஷ்மீர் தீவிரவாதத்துக்கு ஆள் அனுப்பும் கே....டுகெட்ட மாநிலத்தவனா?
*'வாடை' வீசும் வாடைக் காற்றே!
இரக்கமற்ற வடக்கத்தி ஏகாதிபத்தியமே!
இதையெல்லாம் செய்யாததுதான் தமிழன் குற்றமா?
செய்பவன்தான் உன‌து சுற்ற‌மா?
* நம்மைக் கெடுக்கும் நாடுகளோடு சேர்ந்து ஈழத் தமிழனைக் கூண்டோடு அழித்ததில் என்ன கிடைக்கும் உனக்கு?
*சிங்களாவனுக்கும் உனக்கும் என்ன, 'பெண்வழி' உறவா இருக்கு?
*எங்கே போய்த் தீர்ப்பாய் இந்தப் பாவக் கணக்கு? இதற்கெல்லாம் தீர்ப்பு இருக்கிறது உனக்கு!
*இன்றும் துதிக்கிறோம் இந்தியா நம் தேசம்!என்றும் நினைக்கிறோம் இதன் நலனே நம் வாழ்வு!
* ஆதலால் ஒன்று சொல்வேன் அறிவற்ற டில்லியே!
*தமிழினம்
தளர்ந்து போனால் ....
இந்தியம்
இடிந்து போகும்.
* துரோகச் சாக்கடைகள் பல துள்ளித் துள்ளி ஓடினாலும் தமிழன் என்பவன் அணையாப் பெருநெருப்பு .
*எங்களை வைத்து விளக்கேற்றிக் கொள்ளப் போகிறாயா?
நீயே வீட்டைக் கொளுத்திக் கொள்ளப் போகிறாயா?
* விடை ஒன்று சொல்லி விடு.
வ‌ஞ்ச‌க‌ குண‌த்துக்கு விடை ஒன்று கொடுத்து விடு.
சிங்க‌ள‌ விஷ‌ப் பாம்பைக் கொன்று விடு!
விருப்ப‌மில்லையெனில்....
உன‌க்கு நீயே
கொள்ளி இடு!*

Tuesday, June 16, 2009

# வேலுப்பிள்ளை பிரபாகரனும் இரண்டு தெலுங்கர்களும்
சென்னையை குன்றத்துரை அடுத்த நந்தம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி.

வேறு ஒருவரை நான் தேடிப் போயிருந்தபோது எதிர்பாராத விதமாக எனக்கு அறிமுகம் ஆனவர்.

பழக ஆரம்பித்த மிகக் குறைந்த காலத்தில நான் ஒரு வீட்டில் சாப்பிட உட்கார்ந்தது என்றால் அது கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில்தான். அதற்கேற்ப அவரது மனைவியாகிய அன்புசசகோதரியாரின் கம்பீரமும் கனிவுமான விருந்தோம்பல் பண்பு ... ஒரு நல்ல வீட்டில்தான் சாப்பிட உட்கார்ந்து இருக்கிறோம் என்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தை என்னை சமாதானப் படுத்தியது.

கிருஷ்ண‌மூர்த்தியின் தாய்மொழி தெலுங்கு.

அவ‌ர‌து பேச்சில் த‌ன‌து தாய் மொழி இன‌ப் ப‌ற்று ந‌ன்றாக‌வே புல‌ப்ப‌டும். த‌விர‌ என்னைப் ப‌ற்றி அவ‌ருக்கு புரிந்து விட்ட‌தாலும் நியாய‌மான‌ அவ‌ர‌து குண‌ம் கார‌ண‌மாக‌வும் க‌ண்ணிய‌மாக‌வே த‌ன‌து மொழிப் ப‌ற்றை என்னிட‌ம் வெளிப்ப‌டுத்துவார். அதோடு த‌மிழுக்கு த‌மிழின‌ உண‌ர்வுக்கும் எதிராக‌ அவ‌ர் எங்கும் பேசிய‌தாக‌வும் எதுவும் இல்லை.

அதே நேர‌ம் ந‌ம் தாய்மொழி தெலுங்கு என்ற பெரும் பிடிப்புண‌ர்ச்சியை அவ‌ரிட‌ம் நான் பார்த்து அவ‌ர‌து மொழிப் ப‌ற்றை ம‌ன‌துக்குள் பாராட்டியும் இருக்கிறேன்.
இதில் மிக‌ முக்கிய‌மான‌ விச‌ய‌ம் என் த‌ய‌வு கிருஷ்ண‌ மூர்த்திக்குத் தேவை இல்லாத‌ விச‌ய‌ம்.என‌க்காக‌ எதையும் மாற்றிப் பேச‌ வேண்டும் என்ற தேவையோ குண‌மோ இல்லாத‌வ‌ர் அவ‌ர் என்ப‌தை நான் ப‌ல‌ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ளில் உண‌ர்ந்திருக்கிறேன்.

(இவ‌ரை விட‌ என‌க்கு மிக‌ க‌ட‌ந்த‌ இருப‌து ஆண்டுக‌ளாக ஆருயிர் ந‌ண்பராக‌ இருக்கும் என்னுயிர் பெரிய‌குளம் ராதாகிருஷ்ண‌ன் அவ‌ர்க‌ளின் தாய்மொழியும் தெலுங்குதான் என்றாலும் அவ‌ர்க‌ள் த‌மிழையும் அத‌ற்குச் ச‌ம‌மாக‌ நேசிக்கும் ப‌ழ‌க்க‌த்துக்கு எப்போதோ வ‌ந்து விட்ட‌வ‌ர்க‌ள். த‌விர‌, ராதா கிருஷ்ணன் எல்லா எல்லைகளையும் க‌ட‌ந்து உய‌ரிய‌ அன்பால் என்னுட‌ன் ஐக்கிய‌மாகிவிட்ட‌வ‌ர் என்ப‌தால் இந்த‌ இட‌த்தில் அவ‌ர் ச‌ம்ம‌ந்த‌ப் ப‌டவில்லை)
நந்த‌ம்பாக்க‌ம் கிருஷ்ண‌மூர்த்தி ப‌ழ‌குவ‌த‌ற்கு மிக‌ இனிய‌வ‌ர்.
விடுத‌லைப் புலிக‌ள் இய‌க்க‌த் த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் இறந்து விட்ட‌தாக‌ செய்திக‌ளும் தொலைக் காட்சியில் அந்த‌ப் ப‌ட‌ங்க‌ளும் வ‌ந்து மாளாத‌ மீள முடியாத‌ துய‌ரில் நான் மூழ்கிக் கிட‌ந்த‌ வேளை என‌க்கு ந‌ந்த‌ம்பாக்க‌ம் கிருஷ்ண‌ முர்த்தியிட‌ம் இருந்து தொலைபேசி அழைப்பு. எனக்கு இருந்த மன நிலையில் ரொம்ப துவண்ட நிலையில் போனை எடுத்தேன்.

எடுத்த எடுப்பில்." என்ன சார் இப்படி ஆயிப் போச்சு?"என்றார் கரகரத்த குரலில். எந்த நேரமும் அழுதுவிடுவாரோ என்று தோன்றியது.
நான் பயந்து விட்டேன்." என்ன சார் என்ன ஆச்சு?" என்றேன். அவரது குடும்பத்தினருக்கு எதுவும்... அல்லது எதுவும் தொழில் நஷ்டமா? அல்லது மிக நியாயமாக அவருக்கும் எனக்கும் தெரிந்த பொது நண்பர் யாருக்கும் எதாவது ....?என்பது எனது பயம்.

அவரிடம் சிறிது மவுனம். அதில் கோப‌ம் கொஞ்சம் இருப்பதை நான் உணர்ந்து பேச ஆரம்பிப்பதற்குள் அவர் தொடர்ந்தார்.

" சார் .. நாம‌ எல்லாம் வீரபாண்டியக் கட்டபொம்மனைப் பத்தி அவரு பெரிய மாவீரன்னு (கவனிக்க : தெலுங்கினப் பற்றின் அடையாளம் ) படிச்சு இருக்கோம்;கேள்விப் பட்டு இருக்கோம். எதோ ப‌ந்துலு புண்ணிய‌த்தாலயும்( கவனிக்க:மறுபடியும்‌)சிவாஜி ந‌டிப்பால‌யும் நாம‌ அத‌ யூகிக்க‌வும் முடிஞ்ச‌து.
ஆனா ந‌ம்ம‌ கால‌த்துல‌ ந‌ம்ம‌ளோட‌ ர‌த்த‌மும் ச‌தையுமா வாழ்ந்த மாவீர‌ன்னா அது பிர‌பாக‌ர‌ன்தான் ‌ சார். உல‌க‌த்தோட‌ க‌டைசி மாவீர‌ன் செத்துப் போயிக் கிட‌க்க‌றான் சார். அத‌ப் பாக்கும்போது கை கால் எல்லாம் அதிருது சார். இனிமே வீர‌ம்னா என்ன‌ன்னு கேட்கிற ந‌ம்ம‌ புள்ளைங்க‌ளுக்கு இனிமே யார‌ சார் நாம‌ அடையாள‌ம் காட்ட‌ முடியும்?"
மிக‌ ம‌ன‌மும் குர‌லும் உடைந்த‌ நிலையில் கிருஷ்ண‌மூர்த்தி கேட்க, ‌
யாருமில்லாத் த‌னிமையில் நான் நொறுங்கிப் போய் என் அன்பு பிர‌பாவுக்காக சின்ன‌க் குழ‌ந்தை போல் கேவிக் கேவி அழ‌ ஆர‌ம்பித்தேன்.

ஆனால் நான் இதுவரை இது பற்றி வ‌லைப்பூவில் எழுத‌வில்லை. ஆனால் இப்போது எழுத‌ வேண்டிய‌ சுழ‌லை ஏற்ப‌டுத்திய‌வ‌ர் அருண்.!


அருண்?
சன் தொலைக்காட்சியில் என்னோடு ஒன்றாகப் பணிபுரிந்தவர்.(சிந்தனி வலைப்பூவின் நிறுவனர் தங்கமணி பிரபுவும் உடன் பணிபுரிந்த இன்னொருவர். எங்கள் மூன்று பேருக்கும் உள்ள மிகப் பெரிய ஒற்றுமை தமிழினப் பற்று‍ அருணின் பூர்வீகம் கன்னடமாக இருந்தாலும் கூட.)
ஞாயிறு அன்று இர‌வு ப‌த்து மணிவாக்கில் அருண் என‌க்குப் போன் செய்தார்." சார் .. அரை ம‌ணினேர‌த்துக்கு முன்னால‌ என‌க்கு நிக‌ழ்ந்த‌ ஒரு அனுப‌வ‌ம்.. அத‌ உங்களுக்கு உட‌னே போன் ப‌ண்ணிச் சொல்லணும்னு தோணுச்சு.." என்று ஆரம்பித்து அருண் சொல்லத் துவங்கினார்.
ஒரு இட‌ம். ( அதை அருணின் அனும‌தி இன்றி சொல்வ‌து நாகரீக‌ம‌ல்ல‌.)

இனி அருணின் வார்த்தைக‌ளில் உங்க‌ளுக்கு....
" நான் உட்கார்ந்திருந்த இடத்துக்கு அடுத்தபடியா அவர் உட்கார்ந்திடருந்தார் சார் ... டி.வி.யில‌ கிரிக்கெட் ஓடிக்கிட்டு இருந்த‌து. மேட்ச் கொஞ்ச‌ம் போர‌டிச்ச‌ ச‌ம‌ய‌த்துல‌ அவ‌ர் எதோ கோப‌மா க‌மெண்ட் அடிச்சாரு...என்னைப் பார்த்து ந‌ட்பா சிரிக்க‌வும் நானும் புன்ன‌கைத்தேன்.
அடுத்த‌ சில‌ நிமிட‌ங்கள்ல‌ பொதுவா பேச ஆர‌ம்பிச்சார். நானும் ப‌தில் சொன்னேன். பேச்சுல தெலுங்கு வாசனை.
ஒரு நிலையில‌ என்ன‌ப் பார்த்து , ' சார் ... நீங்க‌ த‌மிழா?'ன்னு கேட்டாரு. 'த‌மிழ் நாட்டோட‌ த‌லை ந‌க‌ர்ல‌ என்ன‌ இது கேள்வி'ன்னு நினைச்சுக் கிட்டு நானும் கொஞ்ச‌ம் அழுத்தமா ஆமாம்னு சொன்னேன்.

' ஒண்ணு கேட்டா த‌ப்ப‌ நினைக்க‌மாட்டீங்க‌ளே சார்?'னாரு. நானும் சொல்லுங்க‌னு சொன்னேன்.

'ஏன் சார் நீங்க‌ எல்லாம் இப்ப‌டி இருக்கீங்க‌ .."னாரு. நான் என்ன‌யே மேலும் கீழும் பாத்து 'ந‌ல்லத்தானே இருக்கோம்'னு நினைச்சுக்கிட்டு , "ஏன் என்ன‌ விச‌ய‌ம்?'னு கேட்டேன்.
'பிர‌பாக‌ர‌ன் செத்துப் போன‌ விச‌ய‌த்த‌ நீங்க‌ எல்லாம் எப்ப‌டி சார் இவ்வ‌ள‌வு சாதார‌ண‌மா எடுத்துக்கிட்டீங்க‌ .. சார் அது எவ்வ‌ள‌வு பெரிய‌ துரோக‌ம்... ஞாய‌த்துக்கு கிடைச்ச எப்பேற்ப‌ட்ட‌ தோல்வி.... த‌மிழ் ஆளுங்க‌ எல்லாம் ஒண்ணுமே ந‌ட‌க்காத‌து மாதிரி அவ‌ன‌வன்... அவன் அவன் வேலைய‌ப் பாத்த‌து என‌க்கு ப‌ய‌ங்க‌ர‌மான ஆச்சர்ய‌ம் சார்... எப்ப‌டி சார் இது?'னாரு .
நான் கொஞ்ச‌ம் அதிர்ச்சியான‌த‌ப் பாத்து .. ' சார் .. நாங்க‌ தெலுங்கு சார். இங்க‌ பொழைக்க‌ வ‌ந்தோம். உங்க‌ மொழிய‌ எழுத‌ பேசக் க‌த்துக்கிட்டேன். ச‌த்திய‌மா சொல்றேன் சார் .. த‌மிழ் நாடுனு வ‌ந்த‌ அப்புற‌ம் இங்க‌ என்னய‌ இம்ப்ரெஸ் ப‌ண்ணின‌ ஒரே விச‌ய‌ம் இன்னிக்கு வ‌ரை பிர‌பாக‌ர‌ன்தான் சார்..

அத‌னால‌ நானும் பிர‌பாக‌ர‌ன் ப‌த்தி நிறைய‌ப் ப‌டிச்சேன்.அவ‌ரு மேல‌ சொன்ன‌ ப‌ல‌ குற்றச்சாட்டுக‌ள் குற்றச்சாட்டுங்களே இல்ல‌‌. அவ‌ரோட‌ சிச்சுவேஷ‌ன்ல‌ இருந்து பார்த்தாதான‌ அதுல‌ உள்ள ஞாய‌ம் புரியும். நாம‌ இங்க‌ இருக்கற‌ பொசிஷ‌னை அவ‌ர்மேல அப்ப‌டியே‌ வ‌ச்சு ஒரு நார்ம‌ல் லைஃப் க‌ண்டிஷ‌ன‌ வ‌ச்சு அவ‌ர‌ குறை சொன்ன‌து பெரிய‌ முட்டாள்த‌ன‌ம்.
இதுல‌ சில‌ த‌மிழ் ஆளுங்க‌ளே அவ‌ர‌ப் ப‌த்தி இல்லாத‌தும் பொல்லாத‌துமா சொல்ற‌த‌க் கேட்கும்போது என‌க்கே வாய‌ உடைக்க‌ணும்போல‌த் தோணும்.
இல‌ங்கை ராணுவ‌ம் அப்பாவித் த‌மிழ‌ர்க‌ள‌த் தாக்க‌க் கூடாதுன்னு சொன்னா உங்க‌ ஆளுங்க‌ ப‌ல‌பேரே 'அப்ப‌டின்னா விடுத‌லைப் புலிக‌ளும் ஆயுத‌த்த‌க் கீழ‌ போட‌ணும்னு நாக் கூசாம‌ச் சொன்னாங்க‌... ஏன் சிலோன் க‌வ‌ர்மெண்ட் ஜ‌ன‌ங்க‌ள‌க் கொல்ற‌துக்கும் அந்த‌ ம‌க்களையும் த‌ங்க‌ளையும் கா‌ப்ப‌த்திக்க‌ புலிங்க‌ ஆயுத‌ம் யூஸ் ப‌ண்ற‌துக்கும் உள்ள வித்தியாச‌த்த‌ த‌மிழ‌னுங்க‌தான‌ சார் ம‌த்த‌வ‌ங்க‌ளுக்கு எடுத்துச் சொல்லி இருக்க‌ணும்.
ஆனா உங்க‌ ஆளுங்க‌ளே விடுத‌லைப் புலிக‌ளூம் ஆயுத‌த்த‌க் கீழ‌ போட‌ணும்னு சொன்னது கொடுமை சார்...
இது எல்லாத்தையும் மீறிப் பிரபாகரன் மேல எதாவது தப்பு இருந்தாலும் அத தமிழனுங்களான நீங்களே சொல்லக் கூடாது சார். சார், உலகத்துல எவன் எவனோ எதை எதையோ மூடி மறைச்சு பல லட்சம் கெட்டவங்கள வாழ வசச விஷயம் எல்லாம் வேர்ல்டு ஹிஸ்டரியில எவ்வளவோ இருக்கு சார்.. பிரபாகரன் அப்படி என்ன சார் தப்பு பண்ணான்? இவ்வளவு பிரச்னையிலும் கடைசி வரை குடும்பத்தோட அங்கயே நின்னு இருக்கானே சார்.. அதுக்கு ஈக்குவலா என்ன சார் இருக்கு?

வேலுப்பிள்ளைப் பிரபாகரன் .. அந்த பேர சொல்லிப் பார்த்தா... எதோ ஒரு மஹாராஜா பேரச் சொல்ற மாதிரி ஒரு ஃபீல் வருது சார்... எப்படி சார் கடைசி வரைகண்டுககாம விட மனசு வந்தது தமிழ் ஆளுங்களுக்கு...? நிஜமா எனக்குப் புரியல சார். எப்ப‌டி சார்.. ஒரு சின்ன ரெவல்யூஷன் கூட இல்லாம அந்தச் சாவ ஒரு அனாதைப் பிணம் ரேஞ்சுக்கு அப்படியே விட்டுட்டீங்க?
தெலுங்குல தமிழ் ஆளுங்கள 'அரவாடு'ன்னு சொல்வோம் . சாரி சார்.. இப்ப‌ எல்லாம் எனக்கு அந்த வார்த்தையக் கேட்டாலே ஆக்வர்டா இருக்கு சார்.இன்னும் என்னால டைஜெஸ்ட் பண்ணவே முடியல சார்...'னு(இனி பேசுவது அருண்) அவரு நிஜமான உணர்ச்சியோட நான் ஒரு வேளை அவர் மேல கோபப் பட்டாலும் படலாம்கிறபயம் கொஞ்சம் கூட இல்லாம பேசிக்கிட்டே போனார் ..
என்னால ஒண்ணுமே பதில் சொல்ல முடியல....எனக்கு ஒரு பக்கம் பெருமையா மறுபக்கம் அவமானமா இருந்தது சார்.. திடீர்னு அவருக்கு ஒரு போன் வரவும் அவர் அதுல கவனம் செலுத்த ஆரம்பிச்சாரு சார். நான் ரொம்ப கனத்த மனசோட வெளிய வந்துட்டேன் .. இது எல்லாமே ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னால நடந்து முடிஞ்சது.எனக்கு உடனே உங்ககிட்ட சொல்லலைன்னா மனசு ஆறாது போல‌ இருந்தது." என்று முடித்தார் அருண்.
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்...
பிரபாகரன் இனம் மொழி கடந்து மானமுள்ள எல்லோருக்கும் ஒரு பெரிய ஈர்ப்புச் சக்தியாக இருந்திருக்கிறார்.
இன்னொன்று .. இன்னும் குறைந்தது 200 ஆண்டுகளுக்குக் கழுவப் பட முடியாத களங்கத்தை தமிழன் செய்திருக்கிறான்.உண்மையான ஆதுரத்துடனோ அல்லது குத்திக் காட்டிக் கிண்டல் செய்வதற்கோ அடிக்கடி இந்தக் களங்கம் தமிழனுக்குத் தொடர்ந்துஞாபகப் படுத்தப்படும்.உண்மையான உணர்வாளர்களுக்கு மரியாதையுடன் ஞாபகப் படுத்தப்படும். உணர்வே இல்லாத ஜென்மங்களுக்கு செருப்பால் அடித்து ஞாபகப் படுத்தப் படும்.
பிரபாக‌ரனும் அவரது இளைய மகன் பாலா என்ற அந்தக் குருத்தும் மிக‌க் கொடுமையாக‌ சித்திர‌வ‌தை செய்து கொல்ல‌ப் ப‌ட்ட‌தாக‌ வ‌ரும் செய்திக்ள் ந‌ம் ஈர‌க் குலையை அறுக்கின்றன‌.
பிர‌பாக‌ர‌னை ஆத‌ரித்த தமிழக அர‌சிய‌ல்வாதிக‌ளும் கூட‌ அவ‌ருக்கு சாத்திய‌ம் இல்லா‌த‌ அதிக‌ ப‌ட்ச‌ ந‌ம்பிக்கையைக் கொடுத்து ந‌ம்ப‌ வைத்து விட்டார்க‌ளோ என்ற‌ எண்ணம் எழுகிற‌து.
ஏனெனில் 'இந்தியாவில் நிச்ச‌ய‌ம் ஆட்சி மாற்ற‌ம் நிகழும். போர் நிறுத்த‌ம் வ‌ரும்' என்று தேர்தல் முடிவு வரும் வ‌ரை பிர‌பாக‌ர‌ன் ந‌ம்பிய‌தாக‌வும் என‌வேதான் மிக‌ச் சிறிய‌ ப‌குதிக்குள் குறுக்க‌ப்ப‌ட்ட‌போதும் வ‌ழ‌க்க‌மான‌ எச்ச‌ரிக்கையுட‌ன் அவ‌ர் ந‌ட‌ந்து கொள்ளவில்லை என்றும் வ‌ரும் செய்திக‌ள் ம‌ன‌தைப் பிசைகின்ற‌ன‌. சில‌ அழுக்குக‌ளை நீரில் க‌ரைக்க‌ முடியாது . நெருப்பில்தான் எரிக்க‌ முடியும். அல்ல‌து ம‌ட்கும் வ‌ரை இருக்கும். இந்த‌ அவ‌ல‌த்தை உண‌ராம‌ல் அல‌ட்சிய‌ப் ப‌டுத்திய‌வ‌ர்க‌ள் இத‌ற்குத் துணை போன‌வ‌ர்கள்ஆகிய‌ ஜென்ம‌ங்க‌ள் த‌ங்க‌ள் விரும்பித் தேடிக் கொணட‌ இந்த‌க் க‌ள‌ங்க‌த்தை எரித்தாலும் ம‌ட்கினாலும் கூட மாற்றிக் கொள்ள முடியாது.

Saturday, June 13, 2009

ஈழத் தமிழனுக்கு இனி என்ன செய்யலாம்?


இத்தனை ஆண்டுகளாக நம்பக் கூடாதவர்களை தமிழ் இனத்தலைவர்கள் என்று நம்பி நாம் ஏமாந்ததன் விளைவு?...


ஈழத்தில் 3 லட்சம் தமிழர்கள் கொன்றழிக்கப் பட்டு விட்டார்கள்.தாய் தந்தையை இழந்த பிள்ளைகள் ,தனி மரமான பெண்கள்,துணை இல்லாத முதியவர்கள் என்ட்ரு ஒரு தலைமுறையே அனாதையாகிக் கிடக்கிறது.இங்கே தமிழ் ஈழ கோஷங்கள் அரசியலுக்காக காதைப் பிளக்கின்றன.


உண்மையான தேசப் பற்று இல்லாத இன்றைய மத்திய ஆட்சியாளர்களின் வஞ்சக செயல்களால் ‍- இனி யாரவது உண்மையாகவே இந்திய ராணுவத்தை இலஙைக்கு அனுப்பி தமிழ் ஈழம் அமைக்க முயன்றாலும் சீனாவின் செல்லப் பிள்ளையாக மாறி விட்ட இலஙைக்கு ஆதரவாக சீனாவே களம் இறங்கும்.


அது இந்திய சீனப் போராக மாறி, மூன்றாம் உலகப் போராக ஆகவும் வாய்ப்பு ஏற்படும்.இப்படி நடந்தால் அதற்கான முழுப் 'பெருமை'யும் சோனியா ,கருணாநிதி, மன்மோகன் சிங்,ப்ரணாப் மூகர்ஜி,எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன்,தங்கபாலு , ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கும்பலுக்கே போய்ச் சேரும்.

ஆக ,ஈழம் காண‌ போராடுவ‌த‌ற்கு முன்பு உட‌ன‌டியாக‌ச் செய்ய‌ வேண்டிய‌ வேலை ஒன்று உண்டு ஈழ‌த்தில் தாய் தந்தை இழ‌ந்த‌ குழந்தைக‌ளை , குழந்தை இல்லாத‌ ந‌ம் ஊர் தம்பதிக‌ள் ஏன் தத்தெடுத்து கொள்ள‌க் கூடாது?


வசதி மிக்க‌வ‌ர்க‌ள் குழ‌ந்தை இருந்தாலும் கூட‌ ஒரு குழ‌ந்தையை த‌த்தெடுக்க‌லாம்.அப‌லையான‌ பெண்க‌ளை திரும‌ண‌ம் ஆகாத‌ ந‌ம் ஆண்க‌ள் திரும‌ணம் செய்து கொள்ள‌லாம்.முதிய‌வ‌ர்களைத் த‌த்தெடுக்க‌லாம் .


ங்க‌யே ஆயிர‌ம் அனாதைக‌ள் ...இஙுங்கு உள்ள‌ அக‌தி முகாம்க‌ளிலேயே ப‌ல‌ ஈழ அனாதைகள்...இதுல ஈழத்துல தவிக்கிற‌வங்க‌ள‌ த‌த்தெடுக்க‌ணுமாம்..."என்று கிண்ட‌ல் செய்ய‌லாம்.

"யு ஸீ...இன்னொரு நாட்டு குழ‌ந்தைய‌ த‌த்தெடுக்கறதுல‌ நிறைய‌ பிராப்ள‌ம்ஸ் இருக்கு ..."என்று பாண்டித்ய‌ம் காட்ட‌லாம்.


" யார்றா இவ‌ன்....அவ‌னுக்கு அவ‌ன் நாட்டை மீட்டுக் கொடுத்து அவ‌ன் ம‌ண்ணுல‌யே க‌ம்பீர‌ம‌ வாழ‌ வைக்காம‌ நாட‌ற்றவ‌னா ஆக்க‌ சொல்றியா ?" என்று கோப‌ப் ப‌ட‌லாம் .


அவ‌னுக்கு த‌மிழ் ஈழ‌ம் வேண்டும் . அது அமையும் நாள் வரும்.அந்த‌ப் பாதையையே க‌டின‌ப் ப‌டுத்தி விட்ட‌து சோனியா ‍-க‌ருணாநிதி வ‌கையறா.

த‌மிழ் ஈழ‌ம் அமையும்போது அஙுங்கு சென்று வாழ ஈழத் த‌மிழ‌ர்க‌ள் வேண்டும்.அத‌ற்கு அவ‌ர்க‌ள் உயிரோடு வேண்டும்.

"ஈழ‌த்த‌மிழ‌னே இல்லாத‌ போது த‌மிழ் ஈழ‌ம் எத‌ற்கு?" என்றூ நாளைக்கு சிங்க‌ள‌ மிருக‌ங்கள் எகத்தாளமாகக் கேட்கக் கூடாது.

செங்கல்பட்டுக்காரர் நாகர்கோவிலுக்கும் திருநெல்வெலிக்காரர் சென்னை அண்ணா ந‌கருக்கும் பெண் தேடிப் போவது இல்லையா?

கன்யாகுமரியை அடுத்து ஒரு கடல் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நாம் முள்ளிவாய்க்கால் தமிழச்சியை நம் வீட்டு குடும்ப விளக்காக ஆகியிருக்கலாம்.மதுரைப் பெண் யாழ்ப்பாணத்துத் தமிழனுக்கு இல்லத்தரசி ஆகி இருக்கலாம்.

உல‌க‌மே ஒரு கிராம‌மாக‌ இன்று சுருங்கி விட்ட‌ நிலையில் , நாம் இனியும் இடையில் உள்ள பெருங்க‌ட‌லை உற‌வால் அள்ளிக் குடித்து விட‌ முடியும்.

ஒரு ஜெர்மானியன் தான்சானிய‌ நாட்டுக் குழந்தையை த‌த்தெடுக்கும்போது நாம் ஏன் ந‌ம் ர‌த்த‌ உற‌வுக் குழ‌ந்தைக‌ளை நாம் ஏன் த‌த்தெடுக்க‌க் கூடாது?ந‌ம் இன‌த்து அப‌லைப் பெண்களுக்கு ந‌ம்ம‌வ‌ர்க‌ள் ஏன் வாழ்க்கை கொடுக்க‌க் கூடாது? அத‌ற்கான‌ சாத்திய‌க் கூறுக‌ளைப் ப‌ற்றி சிந்திப்போம்.
இது தியாகமோ பெருமையோ இல்லை
கடமை. !

Thursday, June 11, 2009

# சோனியா ......................... காந்தியா?


இத்தாலியில் மாஃபியா கேங் இனமான சிசிலி என்ற ஒரு கீழ்த்தரமான‌இனத்தில் பிறந்த சோனியா ராஜிவ் காந்தியை மணந்ததால் சோனியா 'காந்தி' ஆனார்.
இந்திரா காந்திக்கு மகன் என்பதால் ராஜிவ்......., 'காந்தி' ஆனார்.


இந்திரா ......, 'காந்தி' ஆனது எப்படி?குஜராத்தில் கத்தியவார் அருகில் போர்பந்தர் என்ற ஊரில் கரம்சந்த் காந்திக்கு(ம் புத்தலி பாய் என்ற மாதரசிக்கும்) மகனாகப் பிறந்ததால் மோகன்தாஸ்........, மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியாகி, பின்னர் மகாத்மா காந்தியானது நியாயம்.
மகாத்மா காந்திக்கு மகனாகப் பிறந்த தேவதாஸ்...., தேவதாஸ் காந்தியானதும் அதே போல துஷார்...., துஷார் காந்தியானதும் நியாயம்.மோதிலால் நேரு என்ற காஷ்மீர் பண்டிட்டுக்குப் பிறந்த ஜவஹர்லால்......., ஜவஹர்லால் நேருவானது நியாயம்.ஜவ‌ஹர்லால் நேருவுக்குப் பிறந்த இந்திரா..... இந்திரா நேருவாக கொஞ்ச காலம் அறியப் பட்ட பின்னர், திடிரென்று இந்திரா 'காந்தி'யானது எப்படி?
"அய்யய்ய..... இது கூடத் தெரியாதா?

இந்திரா நேரு, பருவம் வந்ததும் ஃபெரோஸ் காந்தியக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க...அதனால புருஷன் பேரையோ புருஷன் குடும்பப் பேரையோ தனது பேருடன் சேர்த்துக் கொள்கிற இந்திய வழக்கப்படி இந்திரா.....'காந்தி'யானார் . அப்புறம் என்ன?"

---‍‍ என்று விளக்கம் தருகிற அத்தனை பேருக்கும் என் நமஸ்காரம்.ஃபெரோஸ் .....'காந்தி'யானது எப்படி?குஜராத்தி பணியா குடும்பத்துக்குச் சொந்தமான காந்தி என்ற குடும்பப் பெயர் பாரசீக முஸ்லிமான ஃபெரோசுக்குப் போனது எப்படி?ஃபெரோசின் தந்தை பெயர் நவாப் கான்.. தாய் ஒரு பாரசீக முஸ்லீம். ஃபெரோஸ்கான் ஐ இந்திரா காந்தி காதலித்துத் தந்தைக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார் . அதன் படி இந்திரா கான் தான்.

கான் காந்தியானது எப்படி?


அது பற்றிக் கட்டி விட்டிருக்கிறார்கள் பாருங்கள் கதைகள்.!கதை எண் ஒன்று.


திருமண்த்துக்குப் பிறகு அண்ணல் காந்தி, ஃபெரொஸ் கானைத் தத்து எடுத்தாராம். அதனால் கான் காந்தி ஆகி விட்டாரம்.(இந்த கதைப் படி பெற்ற பிள்ளைகளுக்கே எந்தச் சலுகையும் காட்டாத‌ மஹாத்மா காந்தி ஃபெரோஸ்கானைத் தத்தெடுக்க அலைந்ததாகக் கூறுவது நல்ல நகைச்சுவை)கதை எண் இரண்டு


ஃபெரோஸ் கானின் அப்பா முஸ்லிம் ,அம்மா பாரசீக முஸ்லிம் என்றாலும் அம்மாவின் ஒண்ணு விட்ட தாத்தாவின் பெயரில் காந்தி என்ற வார்த்தை வருமாம் . அதை வைத்து ஃபெரோஸ்கான் ஃபெரோஸ் காந்தி ஆனாராம்.


( சரிங்க.. பாரசீக முஸ்லிம் பெண்ணின் குடும்பப் பெயரில் எப்படி காந்தி என்ற வார்த்தை வரும் என்றால்.... அதற்கு அவர்கள் சொல்கிற பதில் இருக்கிறதே...


அடேஏஏஏங்கப்பா............!


அதாவது அந்த காந்தி என்ற பெயர் மஹாத்மா காந்தியின் குடும்பப் பெயராக வரும் GANDHI இல்லையாம். அது GHANTHI யாம். அதன்படி ஃபெரோஸ் காந்தியாகி இன்று சோனியா காந்தி வரை வந்து நிற்கிறதாம் ஆனால் இந்திராவில் இருந்து எல்லோருமே GANDHI என்றுதான் பெயரை எழுதவும் கையெழுத்துப் போடவும் செய்கின்றனர் என்பது வேறு விசயம்)
இப்படிப் பல கதைகள் ஒருபக்கம்." அதெல்லாம் ஒண்ணும் கிடையாது... இந்திராவின் கணவர் பெயர் ஃபெரோஸ் கண்டே (GANTE) என்பதுதான். நேரு பெயரை விட காந்தி பெயரைச் சொல்லிக் கொண்டால் அரசியலில் யோக்கியவான்களாகக் காட்டிக் கொள்ள வசதியாக இருக்கும் என்பதால் கண்டே என்ற பெயரின் உச்சரிப்புச் சத்தத்தை வைத்து காந்தி என்று .....அரசியல் பிழைப்புக்காகக் குடும்பப் பெயரையே மாற்றிக் கொண்டவர்கள் இவர்கள் " என்று முழங்கிய பழைய ஜன சங்க ஆட்களும் உண்டு.
" எதுவானா இருக்கட்டுங்க.... இப்ப எதுக்கு அந்தப் பழைய கதை எல்லாம்? உங்களுக்கு வேற வேலை இல்லையா ?" என்று அதட்டும் அன்பு நெஞ்சங்களே!இப்போது இதை எல்லாம் விளக்கமாகக் கிளறி இப்போது இந்திரா காந்தி அம்மையாரக் களங்கப் படுத்தும் எண்ணம் எனக்கு நிச்சயமாக இல்லை.


ஆனால் இதை எல்லாம் எழுத வேண்டிய கட்டாயத்தை ராஜீவ் -‍ சோனியா இருவரும் தம்பதி சமேதராக உருவாக்கி விட்டார்கள்ஏன் எனில்

காந்தி என்று சொன்னாலே நம் எல்லோருக்கும் இன்றும் நினைவுக்கு வருகிற மகாத்மா காந்தியின்,

இரண்டு பொன்மொழிகள் !ஒன்று"ஒரு இனம் முற்றாக அழிக்கப் படும்போது அது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வன்முறையைக் கையில் எடுத்துப் போராடலாம் . அதில் தவறில்லை. நான் அதை வன்முறை என்றே சொல்ல மாட்டேன்."இரண்டு


"ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப் படுகிற போது அந்தப் பெண் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தலாம். குறைந்த பட்சம் தனது கூரிய நகங்களைப் பயன்படுத்தியாவ‌து தப்பிக்க முயல வேண்டும். அது போன்ற சூழ் நிலைக்கு பெண்களை ஆட்படுத்துகிற யாரையும் மன்னிக்க முடியாது ".ஆம்!

அகிம்சா மூர்த்தி .... ஜீவ காருண்யச் சீலர் ... மஹாத்மா என்று அழைக‌கப் பட்ட காந்தியே வன்முறையை ஆதரித்த சூழல்கள் இவை .முதல் பொன்மொழிப்படிதான் ஈழத்தில் விடுதலைப் புலிகள் ஆயுதம் எடுத்தனர். ஆனால் அந்த நியாயமான விடுதலைப் போரின் அழிவுக்கு அடித்தளம் போட்டதன் மூலம் மகாத்மா காந்தியையே இழிவு படுத்தியவர்தான் ராஜீவ் 'காந்தி'பிரபாகரன் மரணம் , விடுதலைப் புலிகள் அழிக்கப் பட்டதற்குக் காரணமாக இருந்தது மட்டுமல்ல ... நாகரிகமில்லாத சிங்கள ராணுவத்துக்கு பிதாமகளாக இருந்து இன்றும் இலங்கையின் பல வதை முகாம்களில் ஏராளமான தமிழ்ப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப் படுவதற்குக் காரணமானதன் மூலம் மகாத்மாவாலேயே மன்னிக்க முடியாத குற்றவாளி தான் சோனியா 'காந்தி'.

ஆக இனியும் சோனியா ராஜிவ் ... தனது பெயரில் காந்தி என்ற பெயரை ( அதுவும் GANDHI என்ற எழுத்துக்களுடனேயே ) வைத்துக் கொண்டிருப்பது அண்ணல் காந்திக்கு இழைக்கப் படும் அவமானம்.

மனசாட்சியுள்ள யாரும் அருகில் இருந்தால் சோனியா ராஜிவிடம் எடுத்துச் சொல்லுங்கள்!

Wednesday, June 10, 2009

# கம்யூனிஸ்ட் கபோதிகளும் புத்திக் கெட்ட(டு?) பு(ளு)த்த‌ மதமும் !இன்னும் மனது ஆறவில்லை.ராஜ பக்சே மட்டுமல்ல. ஐ. நா .சபையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நார்வே உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவாக ஓட்டுப் போட்ட ஒவ்வொரு நாடும் சிங்களத்தைப் போல காட்டுமிராண்டி தேசம்தான்.அதன் தலைவர்கள் ஒவ்வொருவரும் ராஜபக்சேவைப் போன்ற காடையர்கள்தான்.இதுவரை உலகத்தில் கம்யூனிசம் என்றால் அதை பின்பற்றாதவர்கள் கூட சில விசயங்களுக்கும் சில பிரச்னைகளுக்கும் கம்யூனிஸ்டுகளால் தான் தீர்வு சொல்ல முடியும் என்று கூறுகிற சூழ்நிலை இருந்து வந்தது.
அதேபோல 'மதங்கள் என்பவை எல்லாம் மனிதனை அழிக்கும் ஆயுதங்களே'என்று கூறியவர்கள் கூட புத்த மதத்தைக் கொஞ்சம் கருணைப் பார்வை பார்க்கவே செய்திருக்கிறார்கள்.


ஆனால் இலங்கைப் பிரச்னையில் சிங்கள வெறியர்களை ஆத‌ரித்ததன் மூலம் 'உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட' என்று புத்த மதம் , கம்யூனிசம் இரண்டும் கெட்டுக் குட்டிச் சுவராக ஆகி இருக்கிறது.


"இலங்கையில் உள்ளது புத்த மதமே இல்லை.சிங்களன் இப்ப‌டி நடந்து கொள்வதற்காக புத்தமதமே மோசம் என்று சொல்லக் கூடாது. சீனாவில் உள்ளதுதான் உண்மையான புத்த மதமாக்கும்' என்று இதுவரை சப்பைக் கட்டுக் கட்டி வந்தவர்கள் இனி எங்கே முகத்தை வைத்துக் கொள்வார்கள் என்றும தெரியவில்லை.அது போல 'கம்யூனிசம் மட்டும் இல்லாவிட்டால் எப்போதோ சுற்றும் பூமி நின்றிருக்கும் ' என்று பீத்திக் கொண்ட தோழர்கள் (அதாவது கொலைகாரனுக்கு)இனி எதை வாயில் வைத்துக் கொண்டு மெல்லுவார்கள் என்று தெரியவில்லை.


ஏனெனில் புத்தம் , கம்யூனிசம் இரண்டும் சேர்ந்துதான் இலங்கைச் சிங்களவனுக்கு ஜட்டி துவைத்துப் போட்டு இருக்கிறது.


4000 கிலோ மீட்டர் தாண்டி இந்தியாவின் தெற்கு எல்லையிலும் அதற்கூ ஒரு 'செக்'என்று சீனா விரும்பியதென்பது அரசியல் காரணம் என்றால்...


இலங்கைக்கும் சீனாவுக்கும் பொதுவான மதமான புத்தமதம் இலங்கையில் முழுதாகத் தழைக்க வேண்டும்;அது நடக்க வேண்டுமென்றால் , பெரும்பான்மையாக இந்து மதத்தை ஆதரிக்கிற ஈழத் தமிழர்கள் அழிய வேண்டும் என்பது சீனாவின் மத வெறித் திட்டம்.


( இந்த உண்மை தெரிந்தும் இந்து மதக் காவலர்கள் நாங்கள்தான் என்று இந்தியாவில் கூறிக் கொள்கிற ஒரு பயலும் மதரீதியாகக் கூட ஈழத் கமிழனை ஆதரிக்கவில்லை என்பது ஒரு பெருங் கொடுமை.இது பற்றி உபயோகமான பின்னூட்டங்கள் எழுதலாம்)ஆக, மதப் பித்து காரணமாகவே இலங்கையை சீனா ஆதரித்தது . ஆனால் இந்த உண்மையைக் கண்டு கொள்ளாமல் சீனா ஒரு கம்யூனிஸ்டு தேசம் என்பதால் ரஷ்யா, கியூபா போன்ற பல கம்யூனிஸ்டு நாடுகள் அறிவு கெட்ட ஆட்டுமந்தைகள் போல கண்மூடித்தனமாக இலங்கையை ஆதரிக்கின்றன .


கிராமங்களில் கண் பார்வை இல்லதவர்களை கபோதி என்று திட்டுவார்கள் . அப்படித் திட்டுவது பாவம். காரணம் கண்ணிழப்பது என்பது அவர்களை மீறிய செயல்.


ஆனால் ஆணவத்தில் அறிவுக்கண்ணை இழந்திருக்கிற உலகளாவிய கம்யூனிஸ்ட்டுகளை இனி யாரும் கபோதிகள் என்று அழைக்காவிட்டால் ....


அது பரிகாரமே இல்லாத மகா பாவம் . !எனவே எல்லோரும் இனி கம்யூனிஸ்டுகளை கபோதிகள் என்று மறவாமல் அழைத்து உங்களைக் கவுரவப் படுத்திக் கொள்ளுங்கள் .( இவனுங்க கொஞ்ச காலமா உண்டியல் குலுக்கறத நிறுத்தின அப்பவே நினைச்சேன். எதோ விபரீதமா பண்ணாப் போறாங்கன்னு....)


அதே போல , புத்த மதம் தோன்றிய இந்தியா , புத்த மதத்தின் உலக அடையாளமாக இன்று விளங்கும் சீனா இரண்டும் சேர்ந்து....


புத்தமதத்தின் அவமானமாக விளங்கும் சிங்களனுக்காக , உலகின் மிகப் பெரிய ஒரு இனப் படுகொலைக் கொடுமைக்குத் துணை போன பிறகு புத்த மதம் புளுத்த மதமாகி விட்டது.இனி எவனாவது கச்சாமி சொன்னாலும் , சிவப்புத் துண்டைப் போட்டுக்கிட்டு செங்கொடி அது இதுன்னு சிங்கிடி அடிச்சாலும் கண்ண மூடிக்கிட்டு ( அப்பக் கூட அவனுங்க மூஞ்சில முழிக்கக்கூடாது ; அதுக்குதான் கண்ண மூடச் சொல்றேன்) காறித் துப்பலாம்.


தப்பே இல்ல....!Tuesday, June 9, 2009

# சே குவாராவைச் செருப்பால் அடித்த கியூபா (ஃபிடல்) காஸ்ட்ரோ(க்கள்)

தனது தாய் மண் , தாய் நாடு , தாய் இனம், தாய் மொழி இவற்றின் விடுதலைக்காகப் போராடுகிற மாவீரர்கள் ,


கடவுளுக்குச் சமமாக (அப்ப்டி யாரும் அல்லது எதுவும் இருந்தால்...... ஏனெனில் ஈழத்தின் அவல அழிவுக்குப் பின்னால் எனக்குக் கடவுள் நம்பிக்கை போய் விட்டது)மதிக்கப்படும் தகுதியை அடைகிறார்கள்.


ஆனால் அவர்கள் எல்லோரையும் விட உயர்ந்த யுக புருஷன் சே குவாரா. !காரணம் உண்டு.


ஒரு உலகப் பார்வையில் பார்க்கும்போது தனது நாடு , தனது மொழி , தனது இனம் என்று போராடுவது கூட ஒரு வித சுய‌ ந‌லம்(!) தான்.

அனால் சே.... ?

உலகம் எங்கும் ஒடுக்கப்பட்ட அடக்கப் பட்ட மக்களுக்காகப் போராடிய தாய்மை குணப் போராளி அவன். மகாத்மா காந்தியையும் பிரபாகரனும் சரியான விதத்தில் கலந்த... சேர்ந்த ஒரு காவியக் கலவை சே குவாரா!எந்த கியூபா நாட்டின் வரலாற்றோடு இன்று சே வின் பெயர் பின்னிப் பிணைந்து கிடக்கிறதோ ... அந்த கியூபா நாட்டைச் சேர்ந்தவன் இல்லை சே.


ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு ஆதரவாகக் கியூபா நாட்டில் களமாடி கியூபாவுக்கு மட்டும் விடுதலை வாங்கித் தர‌வில்லை அவன்.


அதன் பிறகு உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களைத் தேடித் தேடிச் சென்று அவர்களின் விடுதலைக்காக உதிரம் சிந்தியவன் அவன்.


கியூபா நாட்டு விடுதலைக்குப் பிறகு அவன் நினைத்து இருந்தால் பெரும் பதவி பணம் சுகவாசம் என்று பின்னாளைய நெல்சம் மண்டேலாவைப் போல்!ஆனால் ஆப்பிரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் சர்வாதிகார இன வெறி பிடித்த அந்த தேசத்து ராஜ பக்சேக்களுகு எதிராக களம் கண்டவன்.கடைசியில் பொலீவிய நாட்டில் அந்த அப்பாவி மகளுக்காகப் போராடிய போது பொலீவிய ராணுவத்திடம் பிடிபட்டது அந்தப் போராளிகளின் குல தெய்வம்.காட்டிக் கொடுத்தது எதிரிகள் அல்ல. அந்த ஊர் கருணா ( உடன் ஒரு ' நிதி'யைச் சேர்த்துக் கொண்டாலூம் தப்பில்லை)அவன் பிணத்தையும் பார்த்துப் பயந்தது பொலீவிய ராணுவம். உடலையும் இரு கைகளையும் வெட்டித் தனித் தனியாக மூன்று இடங்களில் புதைத்தனர். அப்படிப் பட்ட மாவீரன் சே!ஆனால் லண்டனில் அறிவிலும் செல்வத்திலும் வேலை வாய்ப்பிலும் ஓஹோவென்று வாழ்ந்து கொண்டிருந்த மகனை ஈழப் போர்க்களத்துக்கு அழைத்து களத்தில் பலி கொடுத்த தியாக வீர வாய்ப்பு பிரபாகரனுக்கு அமைந்தது.அன்று கியூபாவில் சர்வாதிகாரி பாடிஸ்டா வுக்கு எதிராகப் போராட ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு சேகுவார மட்டும் துணை இல்லை என்றால் காஸ்ட்ரோவின் கதை முடிந்திருக்கும். சென்ற வருடம் வரை அவர் கியூபாவின் நீஈஈஈஈண்ட நாள் அதிபராக இருந்திருக்க முடியாது. தற்போதும் கூட உடல் நிலையைக் காரணம் காட்டி தனது தம்பி ரால் காஸ்ட்ரோவை அதிபராக்கி இருக்க முடியாது ஃபிடல் காஸ்ட்ரோவால்...!தவிர நாங்கள் அமெரிக்கா என்ற பெரும் தேசத்தின் காலடியில் உள்ள குட்டி தேசம் என்றாலும் அமெரிக்கவின் சிம்ம சொப்பனமாக விளங்குகிறோம் என்று அலட்டிக் கொண்டிருக்க முடியாது.அனால் இப்போது... ?


கியூபா என்ற கன்றுக்குட்டி சிங்களம் என்ற பன்றியோடு சேர்ந்து மலம் தின்ன ஆரம்பித்து விட்டது.சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஃபிடல் காஸ்ட்ரோ , ரௌல் காஸ்ட்ரோ என்ற இரண்டு கன்றுக் குட்டிகள் ..... செ குவாரா என்ற வீரப் புலியோடு பழகிய கன்றுக் குட்டிகள் ... இன்று ராஜ பக்சே என்ற பன்றியோடு சேர்ந்து ... ருசித்து மலம் தின்கின்றன.ஆம்!


இலங்கையில் அப்பாவித் தமிழர்களைக் கூட்டம் கூட்டமாக கும்பல் கும்பலாக கொத்துக் கொத்தாக குலை குலையாகக் கொன்று குவித்த இலங்கைக்கு எதிராக ஐ. நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப் பட்டபோது....மனதைக் கல்லாக்கிக் கொள்ளுங்கள் ... உலகெங்கும் உள்ள உயர்நத இன விடுதலை வீரர்களே!


இலங்கைக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டது, ஃபிடல் காஸ்ட்ரோவின் புதிய பித்தால்லடக் கியூபா!கேட்டால் என்ன நடந்தாலும் எப்போதும் அமெரிக்காவுக்கு எதிரான அணியில்தான் கியூபா இருக்குமாம். அதே போல அமெரிக்க ஆதரவு நாடுகள் எந்த நல்ல சேவை செய்தாலும் கூட கண்மூடித்தனமாக அதை எதிர்த்துதான் (பைத்தியக் காரன் போல) கியூபா செயல்படுமாம். இந்த பித்துக் குளித்தனம்தான் கியூபாவின் வெளி நாட்டுக் கொள்கையாம்.தவிர தன்னை(கியூபாவை)ப் போன்ற ஒரு தீவான இலங்கையில் உள் நாட்டுக் குழப்பத்துக்கு கியூபா துணை போகாதாம்.


அட எடுபட்ட சிறுக்கி மகன் காஸ்ட்ரோக்களே!


அன்றைக்கு கியூபாவில் பாடிஸ்டா உங்களை எல்லாம் போட்டு நசுக்கும்போது கூட அவன் இதைத் தானே சொன்னான்.அன்றைக்கு கியூபாவில் பாடிஸ்டாவுக்கு எதிராக நீங்கள் செய்ததும் கூட 'உள் நாட்டுக் குழப்பம்"தானே..!


" ஆங்.... அது எப்படி? பாடிஸ்டா அப்பாவி மக்களைக் கொன்று குவித்த சர்வாதிகாரி அல்லவா?....?" என்றால் ......1000 பாடிஸ்டா சேர்ந்தாலும் ஒரு ராஜ பக்சேவுக்கு இணையாக முடியாதே!


அப்படிப் பார்த்தால் நீ இன்று இலங்கைக்கு எதிராக 1000 முறை 1000 ஓட்டு அல்லவா போட வேண்டும்?


அதை விட்டு விட்டு இன்னொரு 1000 பாடிஸ்டாக்களுக்கு ஆதரவு தரவா அன்று எங்கள் சே குவாராவின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டாய்?


இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்படியா ஈனப் புத்தியைக் காட்டுவது?

அடச் சீ...........!

ஆம் உலகத்தீரே..


என்றோ புதைக்கப்பட்ட சேகுவாராவின் உடல் பாகங்களைத் தோண்டி எடுத்துச் செருப்பால் அடித்திருக்கிறார்கள் கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோவும் அவன் தம்பி ரால் காஸ்ட்ரோவும்!

நண்பர்களே தனது துரோகிகளாகிக் தன்னைக் காட்டிக் கொடுத்த போதும் கலங்காத சே வின் ஆன்மா...

இன்று ஈழப் பிரச்னையில் தமிழர்களுக்கு எதிராகவும் ராஜ பக்சேவுக்கு ஆதரவாகவும் கியூபா ஓட்டுப் போட்ட கணம் முதல் கதறிக் கதறி அழும் பேரோலத்தின் ஓசை ......


பொலீவிய மண்ணில் இருந்து கிளம்பி கியூபாவின் வெளிகளை ஊடுருவி உலகம் முழுக்க ஒலிப்பது....... உலகெங்கும் திணறும் விடுதலைப் போராட்ட மூச்சுக் காற்றுகளின் செவியில் இடியோசையாய் ஒலிக்கிறது.

மனிதாபிமானம் உள்ள அனைத்து மக்களின் மனசாட்சியின் கதவுகளையும் அது தட்டுகிறது.

செவியிருப்பவன் கேட்கக் கடவன்!

Sunday, June 7, 2009

# Rajapakse, the new TNCC president next to k.v.Thangabalu?கடந்த பத்து நாட்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வி.தங்கபாலுவுக்கு கடுமையான குளிர் காய்ச்சல்.! என்னென்னவோ மருந்து மாத்திரை சாப்பிட்டும் குணமானபாடில்லை. அடிக்கடி உடல் தூக்கித் தூக்கிப் போடுவதோடு உளறல் பிதரற்றல் இரண்டும் அதிகமாகிக் கொண்டே போகிறது.

"போன மாசம் வரை நம்ம கலைஞரய்யாவ நினைச்சு நினைச்சு பயந்துக் கிட்டே இருந்தேன்.காங்கிரஸ் கட்சிக்கு எதிரா யாராவது ஒரு வார்த்தை சொல்லிட்டா போதும் .. அதுக்கு எதிரா என்ன பதில் சொல்றதுன்னு நான் யோசிக்கறதுக்குள்ள, சம்பந்தப் பட்டவங்களக் கண்டிச்சுகலைஞர் அய்யா எட்டுக்காலம் வசை மாரி பொழிஞ்சுடுவாரு. காங்கிரசுக்கு எதிரானவங்க மேல எங்கள விட அவருதான் அதிகமா கோபப் பட்டாரு.
டில்லியில இருந்தே எனக்கு போன் பண்ணி ' என்ன பாலூ..... தமிழ்நாடு காங்கிரச தி.மு.க.வோட சிஸ்டர் கன்சர்னா கொடுத்துடலாமான்னு கேட்டாங்க... ஒருவேளை தேர்தல்ல தோத்துட்டா கலைஞரையே தமிழ் நாடு காங்கிரஸ் தலைவரா ஆக்கிடலாமான்னு டில்லி தலைமை யோஅசிச்சதும் கூட எனக்குத் தெரியும். நல்லவேளை தேர்தல்ல ஓகோன்னு ஜெயிச்சோம் . நான் தோத்தாலும் என் பதவி தப்புச்சு.

ச‌ரி... எப்ப‌டியாவ‌து த‌ப்பிச்சுக்க‌லாம்னு நினைச்சா..இந்த‌க் க‌ரும‌ம் புடிச்ச‌ ராஜ‌ப‌க்சே.. என் தாலிய‌ அறுக்கறான்......." --- என்று கூறும் த‌ங்க‌பாலு, 'ஓய்வெடுக்க‌ வேண்டும்' என்ற‌ ம‌ருத்துவ‌ரின் அறிவுரையையும் மீறித் தொட‌ர்ந்து புல‌ம்புகிறார் .அத‌ற்குக் கார‌ண‌ம் உண்டு.
சென்ற‌வார‌ம் ராஜ‌ப‌க்சே என்ற அந்த விஷக் குருத்து தெரிவித்த‌ ஒரு க‌ருத்துதான் த‌ங்க‌பாலுவை இந்த‌ நிலைக்கு ஆளாக்கிவிட்ட‌து.

" விடுத‌லைப் புலிக‌ள் செய்த‌ மாபெரும் த‌வ‌றே ராஜிவ் காந்தியைக் கொன்ற‌துதான்.எல்லோராலும் நேசிக்க‌ப் ப‌ட்ட ராஜிவ் காந்தியை அவ‌ர்க‌ள் கொன்றிருக்க‌க் கூடாது.அதுதான் அவ‌ர்க‌ள் செய்த‌ பெரிய‌ பிழையாக‌ப் போய்விட்ட‌து.."

எப்ப‌டி இருக்கு ?

"ஆமா... ராஜிவ் காந்திய‌க் கொல்லாம‌ இருந்திருந்தா‌ ம‌ட்டும் , த‌ங்க‌த் த‌ட்டுல‌ வ‌ச்சுத் த‌மிழ் ஈழ‌த்தைக் கொடுத்து இருப்பீங்க‌ளாக்கும்.போடாங்ங்ங்ங்ங்..........." என்று நீங்க‌ளும் நானும் வ‌ண்டை வ‌ண்டையாய்த் திட்டுவ‌து ஒரு ப‌க்க‌ம் இருக்க‌ட்டும்.

ராஜ‌ ப‌க்சே சொல்ல‌ வ‌ருவ‌து என்ன‌வென்றால்..." ராஜிவ் காந்தியை அணிவ‌குப்பு ம‌ரியாதையோடு வ‌ர‌வேற்று பிளாட்பார‌த்து பிச்சைக்கார‌னை அடிப்ப‌து போல‌ க‌ட்டையால் பின் ம‌ண்டையில் அடிக்க‌லாம். ஏன் ஆசைப் ப‌ட்டால் செருப்பால் கூட‌ அடிக்க‌லாம்...ஆனால் அடிப்ப‌வ‌ன் சிங்க‌ள‌னாக‌ இருக்க‌ வேண்டும் .விள‌க்குமாற்றால் கூட‌ அடிக்க‌லாம் .ஆனால் அடிப்ப‌வ‌ள் சிங்க‌ள‌த்தியாக‌த்தான் இருக்க‌ வேண்டும்.அதுதான் நியாய‌ம்!
என்ன‌தான் த‌மிழ் இன‌த்தின் அழிவுக்கும் எங்க‌ள் வாழ்வுக்கும் ராஜிவ் காந்தி பிள்ளையார் சுழியைப் போட்டு விட்டுப் போயிருந்தாலும் அவ‌ரை எப்ப‌டி விடுத‌லைப் புலிக‌ள் கொல்ல‌லாம்?" என்ப‌துதான்.

இப்ப‌டிச் சொல்வ‌த‌ன் மூல‌ம் விடுத‌லைப் புலிக‌ள்தான் ராஜிவ் காந்தியைதக் கொன்றார்க‌ள் என்ற பொய்யைத் திரும்ப‌த் திரும்ப‌க் கூறி அத‌ற்குக் கார‌ண‌மான‌ சி.ஐ.ஏ.சாமிக‌ளையும் இத்தாலிய‌ மாமிக‌ளின் உள்விவ‌கார‌ங்க‌ளையும் ம‌றைக்க‌ உத‌வுகிறார் என்ப‌து ஒரு ப‌க்க‌ம் இருந்தாலும் இன்னொரு ப‌க்க‌ம் ராஜிவ்காந்தியைச் சிங்க‌ள‌வ‌னால் கொல்ல‌ முடியாம‌ல் போய்விட்ட‌தே என்ற ஏக்க‌த்தையும் வெளிப்ப‌டுத்துகிறாரோ என்ற ஐய‌ம் எழுகிற‌து.

இது புரியாத‌ டில்லி எருமைக‌ள் ராஜ‌ ப‌க்சேவின் அந்த‌ அறிக்கையைக் க‌ண்டு நெகிழ்ந்து நெக்குருகிக் க‌ண்ணீர் வ‌டிக்கின்ற‌ன‌ராம். அடுத்த‌ க‌ட்ட‌மாக அதிபர் பதவியில் இருந்து ராஜ பக்சேவுக்கு ஓய்வு கொடுத்து , கோத்தாபய ராஜ பக்சேவை அதிபராக்கி விட்டு ராஜ‌ ப‌க்சேவைத் த‌மிழ‌க‌ காங்கிரஸ் க‌மிட்டித் த‌லைவ‌ராக‌ ஆக்க‌ முடிவு செய்து விட்ட‌தாக‌வும் த‌க‌வ‌ல்.

ஆனால் ராஜ‌ ப‌க்சேவோ இல‌ங்கையை இந்தியாவின் ஒரு மாநில‌மாக ஆக்க‌ ஆசைப் ப‌டுகிறாராம் . த‌னி நாடாக‌ இருப்ப‌தால் ஈழ‌த் த‌மிழ‌னை ம‌ட்டும்தான் கொல்ல‌ முடிந்த‌து . இந்தியாவின் ஒரு மாநில‌மாக‌ ஆகி விட்டால் , கர்நாட‌க‌ , கேர‌ள‌ மாநில‌ங்க‌ளின் பாணியில் அவ‌ர்க‌ளை வ‌லிவாக‌ச் செய‌ல் ப‌ட்டு த‌மிழ்நாட்டுத் த‌மிழ‌னையும் கொன்று குவிக்க‌லாமே என்ப‌து அவ‌ர‌து ஆசை.

ஆனால் த‌மிழ் நாட்டில் எல்லோரும் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு விப‌ச்சார‌ம் செய்யாத ‌ வ‌ரை அது சாத்திய‌ம் இல்லை என்ப‌தால் அந்த‌ திட்ட‌ம் இப்போது சாத்திய‌ப் ப‌டாது என்ப‌தை ராஜ‌ ப‌க்சேவிட‌ம் சோனியா க‌ண்ணீரூம் கம்ப‌லையுமாக‌த் தெரிவித்து விட்டாராம்.
'முதலில் த‌மிழ்நாடு காங்கிர‌ஸ் தலைவ‌ராக‌ வாருங்க‌ள் . மற்றவ‌ற்றைப் பிற‌கு திட்ட‌மிட‌லாம் ' சோனியா க‌ட்ட‌ளை இட்ட‌த‌ன்பேரில் அத‌ற்கு ராஜ‌ ப‌க்சேவும் ச‌ம்ம‌தித்து விட‌..

த‌ங்க‌பாலுவின் குளிர்காய்ச்ச‌ல் அதிக‌மாகிக் கொண்டே போகிற‌து.
ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....!
இன்னும் எத்த‌னை பேர்தான் போட்டிக்கு வ‌ருவார்க‌ளோ.... பாவ‌ம் த‌ங்க‌பாலு!

Saturday, June 6, 2009

is it right that sarathkumar is acting in pazhasiraja?

எனக்குத் தெரிந்த கேரளத்து நபர் ஒருவர் , பழஸி ராஜா திரைப்படத்தைப் பற்றி ரொம்பப் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார்.


அதாகப் பட்டது ....மலையாளத்தில் தயாரிக்கப் படுகிற --‍ தமிழிலும் இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்படவிருக்கிற -‍‍ இன்றைய தேதியில் மலையாளத் திரை உலகின் பிரம்மாண்டமான படமாகக் கூறப் படுகிற பழஸி ராஜா என்ற படம்...


இந்தியாவிலேயே முதன்முதலாக வெள்ளைக்காரனை எதிர்த்துப் போராடிய முதல் அரசன்(?),தமிழர்களும் அப்படிக் கூறிக் கொள்பவர்களும் கவனிக்க..! இந்தியாவிலேயே முதன்முதலாக வெள்ளைக்காரனை எதிர்த்துப் போராடிய முதல் அரசன்... இந்தப் பழஸி ராஜாதான் என்ற உண்மையை(!)ச் சொல்ல‌ வ‌ருகிற‌ ப‌ட‌மாம்.


இதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் அந்தப் படம் தமிழிலும் (தமிழர்களும் அப்படிக் கூறிக் கொள்பவர்களும் மறுபடியும் கவனிக்க..! ) இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப் படுகிறதாம்.அதில் சரத்குமார் நடிப்பது என்பது அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய கவுரவமாம்.


சரத்குமாருக்கு இது கவுரவமா இல்லையா என்பதை அப்புறம் பார்க்கலாம். ஆனால் அந்த கேரளத்து நபர் சொல்வது போல இந்தியாவிலேயே வெள்ளைக்காரனை எதிர்த்து முதன்முதலில் போராடியது பழஸிராஜா என்று சொல்ல வருவதுதான் அந்தப் படத்தின் நோக்கம் என்றால்..


நான் கொஞ்சம் சவுக்கை எடுக்க வேண்டியுள்ளது.!


பழஸிராஜாவின் காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசி .சரியாகச் சொல்லப் போனால் அவர் கொல்லப் பட்டது 1805 ஆம் ஆண்டு. வீர‌ பாண்டிய‌க் க‌ட்ட‌பொம்ம‌ன் தூக்கில் இட‌ப்ப‌ட்ட‌து 1799.ல்.ப‌ழஸிராஜாவுக்கு ஆறுவ‌ருட‌ம் முன்பு. ப‌ழஸிராஜாவின் பெய‌ர் வெளிச்ச‌த்துக்கு வ‌ருவ‌தே 1790க‌ளின் இறுதியில்தான். ஆனால் வீர‌பாண்டிய‌க் க‌ட்ட‌ பொம்ம‌ன் பெய‌ர் 1780க‌ளிலேயே ல‌ண்டனையே தொட்டுவிட்ட‌து என்ப‌த‌ற்கு ஆதா‌ர‌ங்க‌ள் உல‌க‌றிந்த ஒன்று.


ஆக வீர பாண்டிய‌க் க‌ட்ட‌பொம்மனுக்கு முந்தையவராக‌ விட ப‌ழ‌ஸி ராஜா இருக்க‌ வாய்ப்பில்லை.


ஆனால் வீர‌ பாண்டிய‌க் க‌ட்ட‌ பொம்ம‌ன் பிற‌ந்த‌து 1760ஆம் ஆண்டு ஜ‌ன‌வ‌ரி 4ந்தேதி. ப‌ழ‌ஸிராஜா பிறந்த‌ தேதி ப‌ற்றி ச‌ரியான‌ குறிப்பு இருப்ப‌தாக‌த் தெரிய‌வில்லை.இந்த‌க் குழ‌ப்ப‌த்தைத் த‌ங்க‌ளுக்குச் சாதக‌மாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொண்டு வீர பாண்டிய‌க் க‌ட்ட‌பொம்ம‌னை விட‌ ப‌ழஸி ராஜா முந்தைய‌வ‌ர் என்று த‌வ‌றாக‌ நிறுவ‌ ப‌ழ‌ஸி ராஜா ப‌ட‌ம் எடுப்ப‌வ‌ர்கள் த‌ந்திர‌மாக‌த் திட்ட‌மிட‌லாம்.


அதை வைத்து வீர‌பாண்டிய‌க் க‌ட்டபொம்ம‌னுக்கு முந்தைய‌வ‌ன் என்று புதிதாக‌க் க‌தை விட‌ அவ‌ர்கள் ஆசைப் படலாம்.
அதை த‌மிழ் நாட்டிலும் விட‌‌ வேண்டும் என்ற ஆசை.அப்ப‌டியானால் த‌மிழ் நாட்டிலும் ப‌ட‌ம் ஆவ‌லோடு பார்க்க‌ப் படவேண்டும்.அதற்கு த‌மிழ்த் திரையுல‌க‌ம் ந‌ன்கு அறிந்த ஒரு ந‌டிக‌ர் வேண்டும்.


ச‌ர‌த்குமார்.!

பிர‌ப‌ல‌ ந‌டிக‌ர். ந‌டிக‌ர் ச‌ங்க‌த் த‌லைவ‌ர். ஒரு குறிப்பிட்ட‌ ச‌முதாய‌ப் ப‌ல‌மும் பின்ன‌ணியும் கொண்ட‌வ‌ர். த‌விர‌ த‌மிழ‌க‌த்தின் ஒரு அர‌சிய‌ல் க‌ட்சியின் த‌லைவ‌ர் கூட‌.போதாதா?


"இப்ப‌டியெல்லாம் பேச‌க் கூடாது.அதில் வ‌ரும் ஒரு முக்கிய‌க் க‌தாபாத்திர‌த்துக்கு ஏற்ற‌ உட‌ல்க‌ட்டு, நிற‌ம் உள்ளிட்ட‌ ப‌ல‌ பொருத்த‌ங்க‌ள் அவ‌ரிட‌ம் உண்டு.அத‌னால்தான் ந‌டிக்க‌ அழைத்துள்ள‌ன‌ர் " என்று வாதாடும் ந‌ல்ல‌வ‌ர்க‌ளுக்கு ஒரு வார்த்தை.


இதை விட‌... ச‌ர‌த்குமாருக்குப் பொருத்த‌மான‌ ப‌ல வேட‌ங்க‌ள் மலையாள‌த்தில் வ‌ந்த‌ போது எல்லாம் ச‌ர‌த்குமாரின் உட‌ற்கட்டையும் நிற‌த்தையும் பார்த்து விய‌ந்து அவ‌ரை அழைத்தார்க‌ளா?


நன்றாக யோசியுங்கள்...பழஸிராஜவுக்கு மட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டும் ஏன்? அங்கே தான் இருக்கிறது அந்த அந்திர தந்திரம்.


"ஸரிதான் ஸாரே... ஞிங்கள் ஸொல்லும்படிப் பார்ர்க்கினும் கட்டபொம்மனுக்கும் பழஸிராஜவுக்கும் ஒரிப் பத்து வருஷம்தன்னே வித்யாசம்..? பின்னெந்துக்கு இத்தர யொரு ஆர்ட்டிக்கிள்?"என்று கேட்பவர்களுக்கு சில விசயங்கள்!


உண்மையில் வெள்ளையரை எதிர்த்து இந்தியாவிலேயெ முதன்முதலாக வீர முழக்கமிட்டவன் கட்டபொம்மன் என்பதே சரியான வரலாறு அல்ல.


கட்டபொம்மனுக்கு முன்பே பூலித் தேவன் , தீரன் சின்னமலை என்று இரண்டு(கட்டபொம்மன்,பழஸிராஜா போன்ற)குறு நில மன்னர்கள் வெள்ளையரை எதிர்த்துப் போராடியிருக்கின்றனர்.இதில் பூலித்தேவனின் காலம் எது தெரியுமா?பொல்லாப் பாண்டியக் கட்டபொம்மன் என்று அழைக்கப் பட்ட ஜெகவீர பாண்டியக் கட்டபொம்மனின் காலம்.


இந்த பொல்லாப் பாண்டியக் கட்ட பொம்மனின் பிள்ளைதான் வீரபாண்டியக் கட்டபொம்மன்.பூலித்தேவனுக்கு உதவாமல் வேடிக்கை பார்த்தவன் பொல்லாப் பாண்டியக் கட்டபொம்மன்.


பூலித்தேவனும் தீரன் சின்னமலையும் கிட்டத்தட்ட‌ சமகாலத்தவர்கள்.


கொள்ளைக்காரன் போன்ற சில விமர்சனங்களுக்கு உட்பட்டாலும் வெள்ளைக்காரனை எதிர்ப்பதில் மாசு மருவற்று விளங்கியவன் கட்டபொம்மன். அந்த‌க் குறை கூட‌ச் சொல்ல‌ முடியாத‌வ‌ர்க‌ள் தீரன் சின்ன மலையும் பூலித் தேவ‌னும் க‌ட்ட‌பொம்ம‌ன் த‌ம்பி ஊமைத் துரைக்கு அடைக்க‌ல‌ம் கொடுத்த‌தால் வெள்ளைக்கார‌னால் க‌ருவ‌றுக்க‌ப் ப‌ட்ட‌ ம‌ருது பாண்டியர்க‌ளும்.!


ஆனால் ப‌ழ‌ஸிராஜா?


ஆர‌ம்ப‌த்தில் வெள்ளைக்கார‌னுக்கு ப‌ட்டுக் க‌ம்ப‌ள‌ம் விரித்த‌வ‌ன்.அவ‌ர்க‌ளுக்கு அத்த‌னை வ‌ச‌திகளும் செய்து கொடுத்த‌வ‌ன்.பின்ன‌ர் ம‌ன‌ம் மாறி எதிர்த்த‌வ‌ன்.அப்ப‌டி இருக்க இவ‌ர்க‌ளை எல்லாம் விட்டு விட்டு ப‌ழ‌ஸிராஜாவைப் போய்,'இந்தியாவில் வெள்ளைக்க‌ர‌ர்க‌ளை முதன்முதலாக எதிர்த்த‌ மாவீர‌ன் என்று சொல்கிற (உண்மையில் அப்படி சொல்ல அவ‌ர்க‌ள் முய‌ன்றால்)ஒரு வ‌ரலாற்றுப் புர‌ட்டுக்கு ச‌ர‌த்குமார் தெரிந்தோ தெரியாம‌லோ துணைபோன‌ ப‌ழி ச‌ர‌த்குமாருக்கு எத‌ற்கு?இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய வரலாற்றை எழுதிய வட இந்தியர்கள் விடுதலைப் போராட்டத்தில் தென்னிந்தியாவின் பங்கை இருட்டடிப்புச் செய்தனர்.அப்போது எல்லாம் மற்ற தென் இந்திய மாநிலத்தவர்கள் டில்லிக்கு காவடி தூக்குவதிலேயே கவனமாக இருந்து தங்கள் உரிமை பறி போவதைத் தடுக்கவில்லை. இன்னொன்று 'அது எல்லாம் தமிழ் நாட்டில்தானே நடந்தது . நம் மாநிலத்தில் எல்லாம் மெதுவாகத்தானே வந்தது.இன்று தமிழன் வரலாறு மறைக்கப்படுவதற்காக நாம் ஏன் வருத்தப் படவேண்டும் ?'என்ற சிறுகுணம்.


குடிகார ஊதாரி மகனுக்கு வாரிசுப் பட்டம் சூட்ட அனுமதிக்கவில்லை என்ற சுய நலத்தால் வெள்ளைக்காரனை எதிர்த்த ஜான்ஸி ராணியையும் ,வெள்ளைக்காரப் பெண்கள் மீது கைவைத்து வெள்ளைக்காரன் பகையைச் சம்பாதித்துக் கொண்ட தாந்தியா தோப்பெயையும்(பெயர் சரிதானே)வெள்ளைக்காரனை எதிர்த்துப் போட்டியிட்ட முதல் இந்திய சுதந்திரப் போராட்ட மன்னர்களாக ...கொஞ்சம் கூட மனசாட்சியின்றிச் சித்தரித்து அதை பாடப் புத்தகத்தில் போட்டு படிக்கவும் வைத்தார்கள்.அந்த நிலையில் முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் தமிழ் மண்ணில்தான் நிகழ்ந்தது என்ற உண்மையை அவசர அவசரமாக நிரூபிக வேண்டிய சூழல் ஏற்பட ...அப்போது தீரன் சின்னமலை , பூலித் தேவன் போன்றவர்களின் வரலாற்றை ஆராய்ந்து சொல்ல வேண்டிய கால அவகாசம் இல்லாத கொடுமையில் .... ம.பொ.சிவஞானம் போன்றவர்கள், சரியான குழப்பமில்லத குறிப்புகளோடு தெளிவாக இருந்த வீரபாண்டியக் கட்டபொம்மனின் வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிப்படுத்தினர்.அவன் அதிர்ஷ்டக்காரன்.இல்லாவிட்டால் உலகப் பெரு நடிகர்(பட்டம் வழங்கியது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்)ந‌டிகர் திலகம் சிவாஜி கணேசன் அவனுக்குக் கிடைப்பாரா? உலகப் புகழ் கிடைத்தது கட்ட பொம்மனுக்கும்!இன்று உலகெங்கும் உள்ள பிரான்ஸ் நாட்டு அமைப்புகள் தங்கள் ஜென்ம எதிரிகளான வெள்ளைக்காரர்களின் வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்ற அந்தப் படத்டை சப் டைட்டிலோடு உலகம் முழுக்க காட்டுகின்றனர்.


இதுதான் உண்மையிலும் உண்மையான வரலாற்று உண்மைகள்.


இப்படி இருக்க தமிழனின் வரலாற்றைத் தந்திரமாக மறைத்து பொய்யாக பழஸி ராஜாவுக்கு அந்தப் பெயரைத் தவறாகத் தர‌ முயலும் ஒரு படத்தை தமிழ் மக்களிடமே அறிமுகப் படுத்தும் ஒரு சதிக்கு சரத்குமாரை அவர்கள் பயன்படுத்திவிடக் கூடாது.அப்படி அவர்கள் செய்யவில்லை என்றால் ...
அதாவது இந்தப் படத்தின் மூலம் 'இந்தியாவில் வெள்ளைக்காரனை எதிர்த்துப் போராடிய முதல் அரசன் பழஸி ராஜாதான்' என்றபொய்யை அவர்கள் சொல்லவில்லை என்றால் ....


ஒரு சுதந்திரப் போராட்ட வீரனின் கதை என்ற வகையில் பழஸி ராஜாவை நானும் கொண்டாடத் தயார்.