Sunday, June 5, 2011

# எஸ் ஜானகிக்கு வாய்ப்பு கொடுத்த பி லீலா
இன்று (06-06-2011)காலை ஜெயா தொலைக்காட்சியில் சிறப்புத் தேன்கிண்ணம் பகுதியில் தோன்றிய கவிஞர் பிறைசூடன் அவர்கள், 'கொஞ்சும் சலங்கை' படத்தில் இடம் பெற்ற "சிங்கார வேலனே தேவா" பாடல் பற்றி குறிப்பிடும்போது

"பொதுவாக நாதஸ்வரமும் குரலும் இணைந்து இழையாது என்பதால் முதலில் காருக்குறிச்சி அருணாச்சலம் அவர்களை வைத்து நாதஸ்வர இசைப் பகுதிகளை வாசிக்கச் செய்து ஒலிப்பதிவு செய்தனர் பின்னர் இசை படிக்காவிட்டாலும் இசையாகவே வாழ்கிற எஸ் ஜானகியை பாட வைத்தனர் "
என்றார் .
உண்மை .


ஆனால் இதில் மற்றோர் நெகிழ்ச்சியான விஷயமும் உண்டு .

முதலில் இந்தப் பாடலைப் பாடுவதற்கு அணுகப்பட்ட பாடகி பி லீலா அம்மையார்தான் . ஆனால் லீலா அம்மையார்
"இந்த உயரத்துக்கு என் குரல் போகாது" எ
ன்று திறந்த மனதோடு கூறியதோடு மட்டும் அல்லாமல்
" இன்றைய நிலையில் இந்த நாதஸ்வர இசைக்கு இணையாக ஒலிக்கும் குரல் ஜானகியிடம்தான் உள்ளது அவரையே பாடச் சொல்லுங்கள் "
என்று பெருந்தன்மையோடு சிபாரிசும் செய்தார் .

அதனால் பாட்டு ஜானகிக்குப் போனது .

"என்னால் பாட முடியாது' என்று கூறியதோடு லீலா அம்மா விட்டிருக்கலாம் . ஆனால் ஜானகியால்தான் முடியும்ணு சொல்லி என்னைப் பாட வச்சார் . இந்த பெருந்தன்மை வேறு யாருக்கு வரும் "
என்று பத்திரிக்கையாளனாகவும் உதவி இயக்குனராகவும் இருந்த என்னிடம் ஒருமுறை சொல்லும்போதே ஜானகியின் கண்ணில் இருந்து கரகரவென கண்ணீர் வந்ததை என்னால் மறக்கவே முடியாது

நன்றிக் கண்ணீர் !

by the by இப்ப அதெல்லாம் எங்கயாவது ஊறுதா ?

Monday, May 30, 2011

# ஐ பி எல் விதிகள் மாறுமா?


ஐ பி எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது . மகிழ்ச்சி . ஆனால் ஐ பி எல் போட்டி விதிகளை மட்டுமல்ல உலகக் கோப்பை உட்பட இரண்டு அணிகளுக்கு மேல் மோதும் எல்லா ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளிலும் இன்னும் கூர்மையாக விதிகளை திருத்த வேண்டும் என்பதையே இந்த ஐபி எல் போட்டி நடத்தப் பட்ட விதம் காட்டுகிறது.

பொதுவாக ஒரு நாள் போட்டிகளில் லீக் ஆட்டங்களில் பெற்ற வெற்றிகள் ரன்களின் அடிப்படையில் பெற்ற புள்ளிகள் இவற்றின் அடிப்படையில் முதல் வரிசைப் பட்டியல் தேர்ந்தேடுக்கப் படும் . இந்த ஐ பி எல் போட்டியிலும் அதே போல ஒன்றரை மாதமாக எல்லா அணிகளும் மீண்டும் மீண்டும் தங்களுக்குள் முட்டி மோதிக் கொண்டதன் அடிப்படையில் முதல் நான்கு இடங்களில் முறையே பெங்களூர் அணி . சென்னை அணி மும்பை அணி கல்கத்தா அணிகள் வந்தன .

முன்பெல்லாம் உலகக் கோப்பை போட்டிகளில் இப்படி நான்கு அணிகள் வரை வடிகட்டப் பட்டதும் முதலிடம் பெற்ற அணியும் நான்காவது இடம் பெற்ற அணியும் ஒரு அரை இறுதியில் மோத இரண்டாவது மூன்றாவது இடம் பெற்ற அணிகள் இன்னொரு அரை இறுதியில் மோதி வென்ற அணிகள் இறுதிப் போட்டிக்கு வரும் . இதில்தான் ஒரு அநியாயம் நடக்கும் சூழல் வந்தது.

பல்வேறு போட்டிகளில் வென்று முதலிடம் பெற்ற அணி ஒரு ஆட்டத்தில் கொஞ்சம் தவறினால் கூட நாலாவது இடம் பெற்ற அணியிடம் தோற்று ஆட்டத்தில் இருந்தே வெளியேற வேண்டிய நிலை . பல ஆட்டங்களில் கொஞ்சம் சுமாராகவே விளையாடி நாலாவது இடம் பெற்ற அணி ஒரு ஆட்டத்தில் நன்றாக விளையாடிய காரணத்தால் , இதற்கு முன்பு பல ஆட்டங்களில் நன்றாக விளையாடிய அணியை வெளியேற்றும் விந்தை நடந்தது . அதே போலத்தான் (வித்தியாசம் குறைவு என்றாலும் )இரண்டாவது மூன்றாவது இடத்தில் வந்த அணிகளுக்கு இடையே நடக்கும் ஆட்டங்களிலும் இதே விந்தை .

இதை மாற்ற செய்யப்பட புதிய ஏற்பாட்டின் படிதான் நடந்து முடிந்த ஐ பி எல் போட்டிகளில் ப்ளேஆப் மற்றும் அரை இறுதிப் போட்டிக நடந்தன .

அதன்படி ....முதலாவது இடம் பெற்ற அணியும் இரண்டாவது இடம் பெற்ற அணியும் மோதிய ஆட்டத்தில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது . ஆனால் அதில் தோற்கும் அணி (முந்தைய வழக்கம் போல) வெளியேற்றப் படவில்லை . மாறாக அரை இறுதிக்கு இருத்தி வைக்கப் பட்டது .

அதே போல மூன்றாவது நான்காவது இடங்களில் இருந்த அணிகள் ஆடிய ப்ளே ஆப் ஆட்டத்தில் தோற்ற அணி வெளியேற வேண்டும் என்றும் வென்ற அணி முன்பு இருத்தி வைக்கப் பட்ட அணியோடு விளையாட வேண்டும் என்றும் முடிவு செய்யப் பட்டது .


புரியாதவர்களுக்கு இந்த பத்தியில் புரிந்து விடும் ....ப்ளே ஆப் ஆட்டத்துக்கு முன்னால் புள்ளிகள் அடிப்படையில் வந்த தர வரிசைப் பட்டியல் படி பெங்களூர் அணி முதல் இடம் . சென்னை அணி இரண்டாவது இடம் மும்பை அணி மூன்றாவது இடம் , கல்கத்தா அணி நான்காவது இடம் என்று வந்தது அல்லவா?

பெங்களூர் அணியும் சென்னை அணியும் மோதிய ஆட்டத்தில் சென்னை வென்றது . ப்ளே ஆப் பெற்றது .(ஆனால் தர வரிசைப் படி சென்னை இரண்டாவது இடத்தில்தான் இருந்தது )மும்பை கல்கத்தா அணி ஆடிய ஆட்டத்தில் (நல்ல வேளையாக ) நான்காவது இடம் பெற்ற கல்கத்தா அணியே தோற்று வெளியேறியது .

பிறகு மூன்றாவது இடம் பெற்ற மும்பை அணியும்... முதல் இடம் பெற்று இருந்தும் ப்ளே ஆப் ஆட்டத்தில் தோற்ற பெங்களூர் அணியும் விளையாடி, அதில் பெங்களூர் அணியே வென்றது .

இறுதிப் போட்டியில் பெங்களூர் சென்னை அணிகள் விளையாட அதில் நமது சென்னை அணி வென்று நம்ம சந்தோஷப் படுத்தியது .

இப்போது புரிகிறதா ?

இங்கே என் கேள்வி என்னவென்றால் மூன்றாவது இடம் பெற்ற மும்பை அணியும் நான்காவது இடம் பெற்ற கல்கத்தா அணியும் ஆடிய ஆட்டத்தில் மும்பை அணி தோற்று இருந்தால் .. நான்காவது இட பெற்ற கல்கத்தா அணி அடுத்த கட்டத்துக்கு முன்னேறி இருக்கும் . மூன்றாவது இடம் பெற்ற மும்பை அணி வெளியேறி இருக்கும் . அப்போது தரவரிசையில் மூன்றாவது இடத்தில் மும்பை அணி கல்கத்தா அணியை விட ஒருபடி மேலே இருந்ததற்கு என்ன பலன்?

அப்படித்தானே சென்னை அணியும் பெங்களூர் அணியும் விளையாடிய ப்ளே ஆப் ஆட்டத்தில் நடந்தது ? முதல் இடம் பெற்ற பெங்களூர் அணியை ப்ளே ஆப் ஆட்டம் என்ற ஒரு ஆட்டத்தில் வீழ்த்தியதன் மூலமே சென்னை அணி ப்ளே ஆப் தகுதி பெற்றது . அப்படியானால் அதுவரை பெங்களூர் அணி முதல் இடம் பெற்று இருந்ததற்கு என்ன பலன்? ஒன்றும் இல்லையே .

ஆக இது எப்படி முறையான தகுதி ஆகும் ?


"அதற்கு என்ன செய்வது ? தர வரிசை என்பது தனிப்பட்ட அணி பெறுவது . ஆனால் இரண்டு அணிகள் சேர்ந்துதானே ஆட முடியும்?" என்று நீங்கள் கொந்தளிப்பது காதில் கேட்கிறது .
அப்படியானால் முன்பு இருந்தது போல முதலிடம் பெற்ற அணியும் நான்காவது இடம் பெற்ற அணியும் ஒரு அரை இறுதியில் மோத இரண்டாவது மூன்றாவது இடம் பெற்ற அணிகள் இன்னொரு அரை இறுதியில் மோதி வென்ற அணிகள் இறுதிப் போட்டிக்கு வரும் பழக்கத்தையே பயன்படுத்தலாமே .

அது முறையல்ல என்பதால்தானே ...முதலாவது இடம் பெற்ற அணியும் இரண்டாவது இடம் பெற்ற அணியும் மோதிய ஆட்டத்தில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது . ....ஆனால் அதில் தோற்கும் அணி (முந்தைய வழக்கம் போல) வெளியேற்றப் படவில்லை . மாறாக அரை இறுதிக்கு இருத்தி வைக்கப் பட்டது..... .

அதே போல மூன்றாவது நான்காவது இடங்களில் இருந்த அணிகள் ஆடிய ப்ளே ஆப் ஆட்டத்தில் தோற்ற அணி வெளியேற வேண்டும் என்றும் வென்ற அணி முன்பு இருத்தி வைக்கப் பட்ட அணியோடு விளையாட வேண்டும் என்றும் முடிவு செய்யப் படுகிறது . .

ஆக நியாயம் வழங்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அது முழுமையாக இருக்க வேண்டும் அல்லவா?

என்ன செய்யலாம் ?

நான் ஒரு திட்டம் சொல்லவா? இதை கிரிக்கெட் உலக மேதைகள் ஏற்பார்களா?
இப்போது தர வரிசைப் படி முதல் நான்கு அணிகளை அப்படியே எடுப்போம் .
1 )பெங்களூர் ராயல் சேலஞ்ச் அணி
2 )சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
3 ) மும்பை இந்தியன்ஸ் அணி
4 )கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி

முதல் ப்ளே ஆப் ஆட்டம் பெங்களூர் அணி க்கும் சென்னை அணிக்கும் நடந்தது அல்லவா?
அதன் வெற்றி இலக்கு நிர்ணயிக்கும் முன்பு ஒரு காரிய செய்ய வேண்டும் .

பெங்களூர் அணி எந்த லீக் ஆட்டத்தில்(எதிர் அணி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை) மொத்தத்தில் அதிக ரன் எடுத்தது ? தவிர சென்னையோடு ஆடிய எந்த ஆட்டத்தில் குறைவான ரன்கள் எடுத்தது ?இரண்டையும் கூட்டி இரண்டால் வகுக்க வேண்டும் . இது முதகுள் விடை (ரெண்டு ஒரே ஆட்டமாக கூட இருக்கலாம் தப்பில்லை )
அதே போல இரண்டாவது இடம் பெற்ற சென்னை அணி எந்த லீக் ஆட்டத்தில்(எதிர் அணி எதுவாக இருந்தாலும் ஓகே ) மிக குறைவான ரன் எடுத்தது பெங்களூர் அணியோடு ஆடிய எந்த ஆட்டத்தில் அதிக ரன் எடுத்தது ?(முதல் இடம் பெற்ற அணிக்கும் இரண்டாவது இடம் பெற்ற அணிக்கும் இடையே தேர்ந்தெடுக்கப் படும் ஆட்டங்களில் சின்ன வித்தியாசம் இருக்கிறது ... கவனியுங்கள் . முதல் இடத்துக்கும் இரண்டாவது இடத்துக்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா?)இரண்டையும் கூட்டி இரண்டால் வகுக்க வேண்டும் . இது இரண்டாவது விடை .
(ஓராண்டு கணக்கீட்டிலுமே டை ஆட்டங்கள் சேர்ப்பு இல்லை . டாக் வொர்த் லீவிஸ் விதியில் முடிவு காணப்பட்ட ஆட்டங்கள் சேர்க்கக் கூடாது )

பெரிய விடையில் இருந்து சின்ன விடையை கழிக்க வரும் புது விடையை புள்ளிகள் அடிப்படையில் ரன்களாக மாற்றம் செய்ய வேண்டும் . அப்படி செய்யும்போதுஏழு ரன்கள் என்று ஒரு விடை வருகிறது என்று வைத்துக் கொள்வோம் .
இப்போது பாருங்கள் ....
ப்ளே ஆப் ஆட்டத்தில் சென்னையும் பெங்களூர் அணியும் மோதியது . தரவரிசைப் படி முதல் இடத்தில் உள்ள அணி பெங்களூர் அணி . எனவே டாஸ் போட்டு ஆட்டம் நடந்து பெங்களூர் அணி சேஸ் செய்கிறது எனறால் சென்னை அணி எடுத்திருக்கும் ரன்களை விட ஏழு ரன்கள் குறைவாக எடுத்தாலே பெங்களூர் அணி வென்றதாக பொருள் .
அதே நேரம் சென்னை அணி சேஸ் செய்தால் பெங்களூர் அணியை விட ஏழு ரன்கள் கூட ஒரு ரன் ஆக எட்டு ரன் எடுத்தால்தான் வென்றதாகப் பொருள் .
இப்படி முடிவுகளை அறிவிக்க வேண்டும் .

இது இறுதிப் போட்டி வரை போகவேண்டும் . இறுதிப் போட்டியில் மோதும் இரு அணிகளுக்கும் இப்படி கணக்கீடு செய்யவேண்டும்.
அப்படி செய்தால்தான் ஆரம்பம் முதலே ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு அணி வெல்வது அல்லது தோற்பதன் பலன் கடைசிவரை பயனாகும் . எல்லா ஆட்டத்திலும் ஒழுங்காக விளையாடுவார்கள் . எந்த ஆட்டமும் போர் அடிக்காமல் இருக்கும் . தேர்வு மிக அறிவுப் பூர்வமானது என்றும் பொருள் .

இதுதான் உண்மையான தேர்வும் கூட .


கிரிக்கெட் அறிவாளிகள் சிந்திப்பார்களா?

Friday, May 20, 2011

# திகார் முன்னேற்ற கழகம் !
*அல்லற்பட்டாற்றாது அழுத கண்ணீர் ஒன்றே
செல்வத்தை தோய்க்கும் படை .
----வள்ளுவத் தாத்தன் .

செல்வத்தை மட்டுமல்ல .. அது சுயநலமான பாசத்தையும் தோய்க்கும்

* தி மு க .. புதிய விளக்கம் என்ன தெரியுமா....? திகார் முன்னேற்ற கழகம் !

* கவலைப் பட வேண்டாம் கலைஞரே ....
உங்கள் 'ஆதரவுடன் ' உருவான
முள்வேலிக் கம்பிகளை விட ,
திகார் ஜெயில் ஒன்றும்
மோசமானதில்லை !


* யாரங்கே !
கலைஞர் கையில்
ஒரு பேனாவும்
கொஞ்சம் பேப்பரும் கொடுங்கள் ..
மகளின் விடுதலைக்காக
பிரதமருக்கும்
சோனியாவுக்கும்
நிறைய
கடிதம் எழுத வேண்டியுள்ளது .

கொஞ்சம்
தந்தி விண்ணப்பங்கள்
கொடுங்கள் .
மகளின் விசுதலையை
வலியுறுத்தி ...
மத்திய அரசுக்கு
தந்தி அடிக்க வேண்டியுள்ளது .

* இப்போதுதான்
தூறல்
துவங்கியுள்ளது ..
இனிமேல் பெருமழை ....
அப்புறம்தான்
நீங்கள் சொன்னது போல
தூவானம் வரும்
வரிசை
சரிதானே ...

ஐந்தமிழ் அறிஞரே

Monday, May 16, 2011

# நானும் மக்களும் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்கள்
நானும் மக்களும் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்கள்
**********************************************************************************************

வணக்கம்

தமிழகத்தைச் சேர்ந்த 234 தொகுதிகளுக்கும் மக்கள் ஒட்டுப் போட வேண்டிய வேட்பாளர்கள் என்ற ஒரு பட்டியலை நான் தேர்தலுக்கு முன்பு கொடுத்திருந்ததை நீங்கள் அறிவீர்கள் .


"எந்தக் கடசி சார்பும் இல்லாமல் எந்த நிருபர் படையும் இல்லாமல் எந்த தனியார் நிறுவனத்தின் சேவையும் இல்லாமல் நான் மட்டும் ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்த பட்டியல் இது .

சுமார் இருபது வருட பத்திரிக்கையாளர் பணி ....... ஒரு உதவி இயக்குனராக தமிழகம் முழுதும் (ஓரளவு ) அலைந்து திரிந்த அனுபவம் ..... தனிப்பட்ட எந்த தலைவருக்கும் ஜால்ரா அடிக்காமல் , நான் ஒரு தூய தமிழன் என்ற காரணத்தால் ஓட்டு மொத்த தமிழகத்தையும் என் தாய் பூமியாக நேசிக்கும் உள்ளம் ....அதனால் பல்வேறு பகுதிகளின் வாழ்க்கை, கலாச்சார, பொருளாதாரச் சூழல்களையும் ஊன்றிப் படித்து மனிதில் பதிய வைத்த பாங்கு , மாநிலம் முழுக்க எனக்கு உள்ள நண்பர்கள் , சுமார் ஐநூறு தொலைபேசி அழைப்புகள் , இவற்றின் மூலம் நான் தீர விசாரித்து தீர்மானித்து கொடுக்கும் பட்டியல் இது .

வேட்பாளரின் நேர்மை . எளிமை , , அவரது கட்சியில் அவரது செல்வாக்கு , திறமை , முந்தைய செயல்பாடுகள் , அவரைப் பற்றிய பொதுவான மக்களின் எண்ணம் இவற்றின் அடிப்படையில் உங்கள் தொகுதியில் உங்கள் நன்மைக்காக நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைப் பொது மக்களுக்காக கூறுகிறேன் . இதை பின்பற்றினால் பொதுமக்களுக்கு நன்மை .
"என்றும் முன்னுரையில் குறிப்பிட்டு இருந்தேன் .

"எந்தக் கட்சிக்கும் ஆதரவாக நான் இதை வெளியிடவில்லை . மற்ற தொகுதி ஆர்வலர்களின் புரிதளுகாகவே அடைப்புக் குறியில் கட்சியைக் குறிப்பிடுகிறேன் , எந்த சாதி சங்கத்துக்கும் ஆதரவாகவும் நான் இதை வெளியிடவில்லை (பிராமணர் முதற்கொண்டு தலித் வரை எந்த மெஜாரிட்டி சாதியையும் சேர்ந்தவன் இல்லை நான் i )

யாருடைய நேரடி அல்லது மறைமுக தூண்டுதல் காரணமாகவும் நான் இதை வெளியிடவில்லை . என் கையில் என் ஒரு ஓட்டு தவிர யார் ஓட்டும் இல்லை . ( என் மனைவியிடமே என் கருத்தை மட்டுமே கூறுவேன் . மற்றபடி இந்தக் கட்சிக்குதான் ஓட்டுப் போடவேண்டும் என்று கட்டளையிட மாட்டேன்)

ஆக , இது , யார் ஜெயிப்பார்கள் என்பததற்கான கருத்துக் கணிப்பு அல்ல ! அல்ல !! அல்ல!!!

யாருக்கு ஓட்டுப் போட்டால் மக்கள் ஓரளவாவது ஜெயிப்பார்கள் அல்லது ரொம்பவும் தோற்க மாட்டார்கள் என்பதற்கான கருத்தாக்கம் மட்டுமே இது .
"என்றும் குறிப்பிட்டு இருந்தேன் .


இதோ தேர்தல் முடிவுகள் வந்து விட்டன . நான் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள் எத்தனை பேர் மக்கள் மனதிலும் இடம் பிடித்தது வெற்றி பெற்று உள்ளனர் . எத்தனை தொகுதிகளின் கணிப்பில் நான் (மக்களும் ) மண்ணைக் கவியது என்று தொகுதி வாரியாக பார்க்கலாம் வாருங்கள் (பட்டியலில் வரும் அவரே என்ற வார்த்தை எனது தெரிவும் மக்களின் முடிவும் ஒன்றாக உள்ளதைக் குறிக்கிறது )


பாராளுமன்றத் தொகுதி
******************************

ச. ம . தொகுதி ---- - ஜெயிக்க வேண்டிய வேட்பாளார்-- மக்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்

திருவள்ளூர் பா ம தொகுதி
*****************************************
1 . பொன்னேரி -----------------------------------பொன்ராஜா(அதிமுக )-----அவரே

2 . திருவள்ளூர்---------------------------------------------- பிவி ரமணா (அதிமுக) -----அவரே

3 பூந்தமல்லி ------------------------------------------ ----------- மணிமாறன் (அதிமுக)-----அவரே


4 ஆவடி ----------------------------------------------- -------- அப்துல் ரஹீம் (அதிமுக)-----அவரே


5 .மாதவரம்---- --------------------------------------------------------மூர்த்தி (அதிமுக)-----அவரே


6 .கும்மிடிப்பூண்டி ------------------------------------------------- ---- 49 ஒ----- அசோக் (தே மு தி க)

வடசென்னை

********************

7 திருவொற்றியூர் ------------------------------------------------------- குப்பன்(அதிமுக)-----அவரே8 டாக்டர்ராதாகிருஷ்ணன் நகர் -----------------------வெற்றிவேல் (அதிமுக)-----அவரே

9 .பெரம்பூர் ------- ---------------------------------------------------சவுந்திரராஜன் (சிபிஎம்)-----அவரே

10 கொளத்தூர்

----------------------------------- முக ஸ்டாலின் (திமுக (அல்லது) . சைதை துரைசாமி (அதிமுக)

(இருவருமே தகுதியானவர்கள்தான் )----- மு க ஸ்டாலின் (தி மு க)11 திருவிக நகர் --------------------------------------- நீலகண்டன் (அதிமுக)-----அவரே12 .ராயபுரம்------------------------------------------------------ -ஜெயக்குமார் (அதிமுக)-----அவரேதென்சென்னை

******************


13 .விருகம்பாக்கம்-------------------------------------------------------------- 49 ஓ----பார்த்தசாரதி (தே மு தி க )14சைதாப்பேட்டை- ------------------------ செந்தமிழன்(அதிமுக) -----அவரே


15 தி . நகர் -------------------------------------------------------------கலைராஜன் (அதிமுக)-----அவரே

16 .மைலாப்பூர் -----------------------------------------------------அசோக் (மக்கள் சக்தி ) --ராஜ லட்சுமி (அ தி மு க)


17 .வேளச்சேரி------------------------------------ தமிழிசை சவுந்திரராஜன் (பாஜக )---- அசோக் (அதி முக )18 .சோழிங்க நல்லூர்-----------------------------------------------------கந்தன் (அதிமுக)-----அவரே

மத்திய சென்னை

******************


19 .வில்லிவாக்கம் -------------------அன்பழகன் (திமுக)---------------------------பிரபாகர் (அ தி மு க )20 எழும்பூர்----------------------------------------------------பரிதிஇளம்வழுதி(திமுக)--நல்ல தம்பி (தே மு தி க )


21துறைமுகம்------------------------------------------------பழகருப்பையா(அதிமுக) -----அவரே


22 சேப்பாக்கம் -----------------தமிமுன்அன்சாரி (மனிதநேய மக்கள் கடசி )----- அன்பழகன் (திமுக)


23 ஆயிரம் விளக்கு--------- 49 ஓ------------------------------------- வளர்மதி ( அ தி மு க)


24அண்ணாநகர்------------------------------------------ கோகுல இந்திரா (அதிமுக) -----அவரே


ஸ்ரீ பெரும்புதூர்

*****************

25 .மதுரவாயல்--------------------செல்வம் (பாமக)----------------பீமாராவ் ( கம்யூ. மா )

26 .அம்பத்தூர்--------------------ரங்கநாதன் (திமுக)---- வேதாச்சலம் (அ திமுக)


27ஆலந்தூர்----------------------------------------பண்ருட்டி ராமசந்திரன் (தேமுதிக)-----அவரே


28 . ஸ்ரீபெரும்புதூர் ----------------------------------------- பெருமாள் (அதிமுக )-----அவரே29 பல்லாவரம-------------------------------------------------------------- தனசிங் (அதிமுக)-----அவரே

30 தாம்பரம்----------------------------------------------------- எஸ் ஆர் ராஜா (திமுக) ---சின்னையா (அதி முக )

காஞ்சீபுரம்

*****************

31 .செங்கல்பட்டு -----------------------ரங்கசாமி (பாமக )--- அனகை முருகேசன் (தே மு தி க )

32 திருப்போரூர்---------------------------------------------------கே.மனோகர்(அதிமுக)-----அவரே

33 செய்யூர் ----------------------------------------------------------வி எஸ் ராஜி (அதிமுக)-----அவரே


34 .மதுராந்தகம் ---------------------கணிதா சம்பத் (அதிமுக)-----அவரே35உத்திர மேரூர்-------------------------கணேசன்(அதிமுக) -----அவரே36 .காஞ்சீபுரம்------------------------------சோமசுந்தரம்(அதிமுக)-----அவரேஅரக்கோணம்

*********************

37 .திருத்தணி ------------------------------------அருண் சுப்பிரமணியம்(தேமுதிக) -----அவரே

38 . அரக்கோணம் -------------------------------------------------ரவி (அதிமுக)-----அவரே

39 .சோளிங்கர்----------------------------------பி ஆர் மனோகர் (தேமுதிக)-----அவரே

40 காட்பாடி ----------------- அப்பு ராதா கிருஷ்ணன் (அதிமுக)---துரைமுருகன் (திமுக)

41 ராணிபேட்டை ---------------------------------------------ஜான் (அதிமுக)-----அவரே

42 .ஆற்காடு ----------------------------------------------------சீனிவாசன் (அதிமுக)-----அவரே


வேலூர்
************

43 . வேலூர்-------------------------------------------------------------விஜய் (அதிமுக)-----அவரே

44 அணைக்கட்டு ----கலையரசு (பா ம க )--------- கலையரசு (பாமக )-----அவரே


45 .கே வி குப்பம் -----------செ கு தமிழரசன் (இந்தியா குடியரசு கடசி)-----அவரே

46 .குடியாத்தம்-----------------லிங்கமுத்து (இந்திய கம்யூனிஸ்டு கடசி)-----அவரே

47 .ஆம்பூர்------அஸ்லம் பாட்ஷா (மனித நேய மக்கள் கடசி)-----அவரே


48 . வாணியம்பாடி ----------------------------------சம்பத் குமார் (அதிமுக)-----அவரே


கிருஷ்ணகிரி
*******************
49 ஊத்தங்கரை--------------------------------------மனோரஞ்சிதம் (அதிமுக)-----அவரே


50 பர்கூர் -------------------------------------- கிருஷ்ணமூர்த்தி (அதிமுக)-----அவரே


51 கிருஷ்ணகிரி ----------------------------------------கேபி.முனுசாமி(அதிமுக)-----அவரே
52 வேப்பனஹள்ளி----------------------49 ஓ-----செங்குட்டுவன் (தி மு க)


53 .ஓசூர்--------------------------சத்யா (சுயேச்சை)----கோபிநாத் (காங்)54 ..தளி ----------------------------------------------------டி.ராமசந்திரன் (இ கம்யூ )-----அவரே


தருமபுரி
************
55 பாலக்கோடு ---------------------------------------------------------அன்பழகன் (அதிமுக)-----அவரே


56 .பென்னாகரம்---------------------------------------------------- நஞ்சப்பன் (இ கம்யூ )-----அவரே


57 . தருமபுரி -------------------சாந்தமூர்த்தி (பாமக)------பாஸ்கர் (தே மு தி க)


58 .பாப்பிரெட்டி பட்டி ----------------- முல்லைவேந்தன் (திமுக)---பழனியப்பன் (அதி முக )


59 .அரூர் --------------------------------டில்லி பாபு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் )-----அவரே

60 . மேட்டூர் ---------------------------------------------------------பார்த்திபன்(தேமுதிக)-----அவரே


திருவண்ணாமலை
*********************************
61 ஜோலார் பேட்டை ------வீரமணி(அதிமுக)-----அவரே

62 .திருப்பத்தூர் ---------------ரமேஷ் (அதிமுக)-----அவரே

63 .செங்கம் --------------------------49 ஓ --------சுரேஷ் (தே மு தி க )

64 திருவண்ணாமலை ---------------ராமசந்திரன் (அதிமுக)--- எ வ வேலு (திமுக)

65கீழபெண்ணாத்தூர்அரங்கநாதன்(அதிமுக )---- அவரே

66 கலசபாக்கம் ----அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக)---- அவரே

ஆரணி
***********
67 போளூர் -----ஜெயசுதா (அதிமுக)---- அவரே

68 .ஆரணி -----சிவானந்தம் (தி முக )-- பாபு முருகவேல் (தே மு தி க)

69 . செய்யாறு ---முக்கூர் சுப்பிரமணி (அதிமுக)---- அவரே

70 .வந்தவாசி ----குணசீலன் (அதிமுக)---- அவரே

71 . செஞ்சி ----கணேஷ்குமார் (பா ம க )---- அவரே

72 மைலம் ---கே பி நாகராஜ் (அதிமுக).---- அவரே


விழுப்புரம்
****************
73 . திண்டிவனம் ---ஹரிதாஸ் (அதிமுக )---- அவரே

74 . வானூர் -- ஜானகி ராமன் (அதிமுக)---- அவரே

75 . விழுப்புரம் --- சி வி சண்முகம் (அதிமுக)---- அவரே

76 .விக்கிரவாண்டி -- ராம மூர்த்தி (மா கம்யூ)---- அவரே

77 . திருக் கோவிலூர்-- ---- தங்கம் (திமுக)--- வெங்கடேசன் (தே மு திக)

78 . உளுந்தூர்பேட்டை -- குமரகுரு (அதிமுக)---- அவரே

கள்ளக் குறிச்சி
**********************
79 .ரிஷிவந்தியம் ------------49 ஓ----விஜயகாந்த் (தே தி மு க)

80 . சங்கராபுரம் ---ப .மோகன் (அதிமுக)---- அவரே

81 .கள்ளக்குறிச்சி -அழகுவேல் பாபு (அதிமுக)---- அவரே

82 .கெங்கவல்லி--சிவகாமி (மக்கள் சக்தி )------சுபா (தே மு தி க)

83 .ஆத்தூர் --- மாதேஸ்வரன் (அதிமுக)---- அவரே

84 ஏற்காடு ----பெருமாள் (அதிமுக)---- அவரே

சேலம்
**********

85 . ஓமலூர் -- பல்பாக்கி கிருஷ்ணன் (அதிமுக)---- அவரே

86 எடப்பாடி--- எடப்பாடி பழனிசாமி (அதிமுக)---- அவரே

87 சேலம் மேற்கு --- ராஜேந்திரன் (திமுக)---வெங்கடாச்சலம் (அதி மு க)

88 .சேலம் வடக்கு -- மோகன்ராஜ் (தேமுதிக)---- அவரே

89 . சேலம் தெற்கு ----செல்வராஜ் (அதிமுக)---- அவரே

90 . வீரபாண்டி ----எஸ் கே செல்வம் (அதிமுக)---- அவரே

நாமக்கல்
***************
91 .சங்ககிரி ----விஜயலட்சுமி பழனிச்சாமி (அதிமுக)---- அவரே

92 .ராசிபுரம் ---விபி துரைசாமி (திமுக)----தனபால் (அதிமுக)

93 . சேந்தமங்கலம் ---பொன்னுசாமி (திமுக)------சாந்தி (தே மு தி க)

94 .நாமக்கல் -- பாஸ்கர் (அதிமுக)---- அவரே

95 பரமத்தி வேலூர் --- தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை)---- அவரே

96 .திருச்செங்கோடு ----49 ஓ---சம்பத் குமார் (தே மு தி க)

ஈரோடு
***********
97 .குமாரபாளையம் ----தங்கமணி (அதிமுக)---- அவரே

98 .ஈரோடு கிழக்கு ----முத்துசாமி (திமுக)---- சந்திரசேகர் (தே மு தி க)

99 .ஈரோடு மேற்கு -- கே வி ராமலிங்கம் (அதிமுக)---- அவரே

100 . மொடக் குறிச்சி ---- கிட்டுசாமி (அதிமுக)---- அவரே

101 . தாராபுரம் --- ஜெயந்தி (திமுக)-----பொன்னுசாமி (அதி மு க)

102 . காங்கேயம் ---- பொன்னுசாமி (பாஜக)--- நடராஜ் (அதி முக)

திருப்பூர்
*************
103 .பெருந்துறை ---------தோப்பு வெங்கடாசலம் (அதிமுக)---- அவரே

104 . பவானி ----------மகேந்திரன் (பாமக )--- பி ஜி நாராயணன் (அதிமுக)

105 . அந்தியூர் -------ரமணீதரன் (அதிமுக)---- அவரே

106 கோபிசெட்டிபாளையம் ----செங்கோட்டையன் (அதிமுக)---- அவரே

107 . திருப்பூர் வடக்கு ----ஆனந்தன் (அதிமுக)---- அவரே (முரட்டட்ட்டு வெற்றி)

108 .திருப்பூர் தெற்கு ----தங்கவேல் (மா கம்யூ)---- அவரே


நீலகிரி
***********
109 .பவானிசாகர் --சுந்தரம் (இ கம்யூ)---- அவரே

110 .ஊட்டி ----புத்தி சந்திரன் (அதிமுக)---- அவரே

111 .கூடலூர் ----செல்வராஜ் (தேமுதிக)-----திராவிட மணி (தி மு க)

112 . குன்னூர் ----- பெள்ளி(இ கம்யூ )-----ராமச்சந்திரன் (திமுக)

113 மேட்டுப் பாளையம் -- அருண்குமார் (திமுக)----சின்னராஜ் (அதிமுக)

114 .அவினாசி ---- கருப்பு சாமி (அதிமுக)---- அவரே

கோயம்புத்தூர்
*********************

115 .பல்லடம் -----------பரமசிவம் (அதிமுக)---- அவரே

116 .சூலூர் ----ஈஸ்வரன் (கொங்கு முன்னேற்றக் கழகம்)----தினகரன் (தே மு தி க)

117 .கவுண்டம்பாளையம் ---ஆறுக் குட்டி (அதிமுக)---- அவரே

118 . கோவை வடக்கு ----வீரகோபால் (திமுக)---மலரவன் (அதிமுக)

119 கோவை தெற்கு ---பொங்கலூர் பழனிசாமி (திமுக)----சேலஞ்சர் துரை (அதிமுக)

120 . சிங்கா நல்லூர் -----49 ஓ------சின்னசாமி (அதிமுக)

பொள்ளாச்சி
******************
121 தொண்டாமுத்தூர் ------------------ வேலுமணி (அதிமுக)---- அவரே

122 கிணத்துக் கடவு -------------------- பாலாஜி இளங்கோ (மக்கள் சக்தி)---தாமோதரன் (அதிமுக)

123 .பொள்ளாச்சி ---------கருப்பசாமி (அதிமுக)---- அவரே

124 .வால்பாறை -----ஆறுமுகம் (இ கம்யூ )---- அவரே

125 .உடுமலைப் பேட்டை ---பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக)---- அவரே

126 .மடத்துக்குளம் --- சண்முகவேலு (அதிமுக)---- அவரே


திண்டுக்கல்
*******************
127 .பழனி ----------------வேணுகோபால் (அதிமுக)---- அவரே

128 ஒட்டன் சத்திரம் ் --- பாலசுப்ரமணி (அதிமுக)----சக்கரபாணி (தி மு க)

129 . ஆத்தூர் -------- ஐ . பெரியசாமி (திமுக)---- அவரே

130 .நிலகோட்டை----- 49 ஓ---- ராமசாமி (புதிய தமிழகம்)

131 . நத்தம் -------- விஸ்வநாதன் (அதிமுக)---- அவரே

132 . திண்டுக்கல் ------பாலபாரதி (மா கம்யூ )---- அவரே

கரூர்
*******
133 .வேடசந்தூர் ---- பழனிசாமி (அதிமுக)---- அவரே

134 . அரவாக்குறிச்சி -----கே சி பழனிசாமி (திமுக)---- அவரே

135 .கரூர் --------------செந்தில் பாலாஜி (அதிமுக)---- அவரே
(கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி இந்திராவுக்கு . நான் தேவி வார இதழில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தபோது நீங்கள் இந்திரா என்ற புனைப் பெயரில் எழுதிய வீடு என்ற குறு நாவலை பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்தேன் . ஆனால் இப்போது மக்கள் தேர்ந்தெடுக்கும் தரத்தில் நீங்கள் இல்லை . காலக் கொடுமை !)

136 கிருஷ்ணராயபுரம் ------எஸ் காமராஜ் (அதிமுக)---- அவரே

137 .மணப்பாறை --------------சந்திரசேகர் (அதிமுக)---- அவரே

138 .விராலிமலை -------- ரகுபதி (திமுக)-- விஜயபாஸ்கர் (அதிமுக)

திருச்சி
***********
139 .ஸ்ரீரங்கம் ----------ஜெ. ஜெயலலிதா (அதிமுக)---- அவரே

140 .திருச்சி மேற்கு ---மரிய பிச்சை (அதிமுக)---- அவரே

141 .திருச்சி கிழக்கு ------மனோகரன் (அதிமுக)---- அவரே

142 .திருவெறும்பூர் ----- 49 ஓ----- செந்தில் குமார் (தே மு தி க)

143 .கந்தர்வகோட்டை -----சுப்பிரமணியன் (அதிமுக)---- அவரே

144 புதுக்கோட்டை --- முத்துக்குமரன் (சி பி ஐ )---- அவரே

பெரம்பலூர்
******************
145 .குளித்தலை ------- 49 ஓ--- பாபா சுந்தரம் (அதி முக)

146 .லால்குடி -----பார்கவன் பச்சமுத்து (இந்திய ஜனநாயக கடசி)--சவுந்திர பாண்டியன் (திமுக)

147 மண்ணச்ச நல்லூர் -----செல்வராஜ் (திமுக)--- பூனாட்சி (அதிமுக)

148 .முசிறி -----------சிவபதி (அதிமுக)---- அவரே

149 .துறையூர் -----இந்திரா காந்தி (அதிமுக)---- அவரே

150 . பெரம்பலூர் ----இளம்பை தமிழ்ச்செல்வன் (அதிமுக)---- அவரே

கடலூர்
************
151 . திட்டக்குடி ---சிந்தனைச் செல்வன் (விடுதலை சிறுத்தைகள்)---தமிழ் அழகன் (தே மு திக)

152 விருத்தாச்சலம் --------------------49 ஓ--- முத்துக்குமார் (தே மு தி க)

153 .நெய்வேலி ----பண்ருட்டி வேல்முருகன் (பா ம க )---- சிவ சுப்பிரமணியன் (அதி முக)

154 பண்ருட்டி ------.சபா ராஜேந்திரன் (திமுக)-- சிவக் கொழுந்து (தே மு தி க)

155 .கடலூர் --------- எம் சி சம்பத் (அதிமுக)---- அவரே

156 .குறிஞ்சிப்பாடி -------எம் ஆர் கே பனீர் செல்வம் (திமுக)--சொரத்தூர் ராஜேந்திரன் (அதிமுக)

சிதம்பரம்
***************
157 .குன்னம் ----- சிவ சங்கர் (திமுக)---- அவரே

158 .அரியலூர் -----------துரை மணிவேல் (அதிமுக)---- அவரே

159 .ஜெயங்கொண்டம் -----காடுவெட்டி குரு (பா ம க )---- அவரே

160 .புவனகிரி -----------செல்வி ராமஜெயம்(அதிமுக)---- அவரே

161 .சிதம்பரம் ----பாலகிருஷ்ணன் (மா கம்யூ)---- அவரே

162 . காட்டுமன்னார்குடி --- ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்)-- முருகுமாறன் ் (அதிமுக)
(ரவிகுமார்.....! உங்களிடம் மக்கள் இன்ன்ன்னும் நிறைய்ய்ய்யய்ய்ய்ய எதிர்பார்க்கிறார்கள்கலைஞருக்கு சப்பை கட்டு கட்ட பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக கட்டுரை எழுதினால் மட்டும் போதாது . கவனம் )

மயிலாடுதுறை
***********************
163 . சீர்காழி ---------------------------சக்தி (அதிமுக)---- அவரே

164 .மயிலாடுதுறை -------------49 ஓ---பால அருட்செல்வம் (தே மு தி க)

165 பூம்புகார் -----பவுனுராஜ் (அதிமுக)---- அவரே

166 .திருவிடைமருதூர் --- பாண்டியராஜன் (அதிமுக)---கோவி செழியன் (தி மு க)

167 . கும்பகோணம் -------------- 49 ஓ---அன்பழகன் (திமுக)

168 பாபநாசம் ---------------------49 ஓ -----துரைக்கண்ணு (அ தி முக)

நாகபட்டினம்
********************
169 . நாகபட்டினம் ---------- ஜெயபால் (அதிமுக)---- அவரே

170 .கீழ் வேளூர்----- நாகை மாலி (மா கம்யூ )---- அவரே

171 . வேதாரண்யம் -------காமராஜ் (அதிமுக)---- அவரே

172 . திருத்துறைப் பூண்டி ------உலகநாதன் (இ கம்யூ)---- அவரே

173 .திருவாரூர் ------ மு. கருணாநிதி (திமுக)---- அவரே

174 .நன்னிலம் --- காமராஜ் (அதிமுக)---- அவரே
(சபாஷ் நாகப்பட்டினம்)

தஞ்சை
***********
175 மன்னார்குடி ----------49 ஓ----- ராஜா (திமுக)

176 .திருவையாறு ------------ரத்னசாமி (அதிமுக)---- அவரே

177 தஞ்சாவூர் ------------ரங்கசாமி (அதிமுக)---- அவரே

178 ஒரத்தநாடு -------------49 ஓ-- வைத்தியலிங்கம் (அதிமுக)

179 பட்டுக் கோட்டை ---- யோகநாதன் (சுயேச்சை)----ரங்கராஜன் (காங்)

180 பேராவூரணி ------ --------------- 49 ஓ-- அருண் பாண்டியன் (தே மு தி க)

சிவகங்கை
****************
181 . திருமயம் ----------------வைரமுத்து (அதிமுக)---- அவரே

182 .ஆலங்குடி -----------ராஜபாண்டியன் (சுயேச்சை)-- கு ப கிருஷ்ணன் (அதிமுக)

183 .காரைக்குடி -----------------------------------49 -- பழனிச்சாமி (அதிமுக)

184 .திருப்பத்தூர் -------------------49 ஓ---- பெரிய கருப்பன் (திமுக)

185 .சிவகங்கை --------------------49 ஓ----- குணசேகரன்( கம்யூ இ )

186 . மானாமதுரை --------------49 ஓ----குணசேகரன் (அதிமுக)

மதுரை
***********
187 . மேலூர் -------------ஆர் . சாமி (அதிமுக)---- அவரே

188 . மதுரை கிழக்கு ----தமிழரசன் (அதிமுக)---- அவரே

189 .மதுரை வடக்கு ----- 49 ஓ--- போஸ் (அதிமுக)

190 . மதுரை தெற்கு ---- அண்ணாதுரை (மா கம்யூ )---- அவரே

191 .மதுரை நடுவண் ---- கவுஸ் பாஷா (திமுக)----சுந்தர்ராஜன் (தே மு தி க)

192 .மதுரை மேற்கு ----செல்லூர் ராஜு (அதிமுக)---- அவரே


தேனி
**********
193 சோழவந்தான் -----கருப்பையா (அதிமுக)---- அவரே

194 உசிலம்பட்டி ------கதிரவன் (பார்வார்டு பிளாக் )---- அவரே

195 .ஆண்டிப்பட்டி --------------------- 49 ஓ---தங்க தமிழ்ச்செல்வன் (அதிமுக)

196 .பெரியகுளம் ----லாசர் (மா கம்யூ )---- அவரே

197 . போடிநாயக்கனூர் ---- லட்சுமணன் (திமுக)----- ஓ பன்னீர் செல்வம் ( அதிமுக)

198 .கம்பம் -------------ராமகிருஷ்ணன் (திமுக)---- அவரே

விருதுநகர்
****************

199 .திருப்பரங்குன்றம் ------- ஏ கே டி ராஜா (தேமுதிக)---- அவரே

200 திருமங்கலம் ---------முத்துராமலிங்கம் (அதிமுக)---- அவரே

201 . சாத்தூர் --------கடற்கரை ராஜு (திமுக)-----உதயகுமார் (அதிமுக)

202 . சிவகாசி ----------ராஜேந்திர பாலாஜி (அதிமுக)---- அவரே

203 . விருதுநகர் -------மாபா பாண்டியராஜன் (மதிமுக )---- அவரே

204 . அருப்புக்கோட்டை -------வைகை செல்வன் (அதிமுக)---- அவரே


ராமநாதபுரம்
*********************
205 அறந்தாங்கி --------ராஜ நாயகம் (அதிமுக)---- அவரே

206 திருச்சுழி -----------.தங்கம் தென்னரசு (திமுக)---- அவரே

207 .பரமக்குடி ----சுந்தர்ராஜன் (அதிமுக)---- அவரே

208 . திருவாடானை ------ சிவமகாலிங்கம் (பாஜக)----சுப தங்கவேலன் (திமுக)

209 .ராமநாதபுரம் ---- ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கடசி )---- அவரே

210 . முதுகுளத்தூர் ------முருகன் (அதிமுக)---- அவரே

தூத்துக்குடி
*****************
211 .விளாத்திகுளம் --------------49 ஓ---மார்க்கண்டேயன் (அதிமுக)

211 தூத்துக்குடி ---------------------செல்லப் பாண்டியன் (அதிமுக)---- அவரே

212 .திருச்செந்தூர் ---------------மனோகரன் (அதிமுக)----அனிதா ராதா கிருஷ்ணன் (தி முக)

213 ஸ்ரீவைகுண்டம் ---------------- 49 ஓ---சண்முகநாதன் (அதிமுக)

214 .ஓட்டப்பிடாரம் ---------------------49 ஓ-----கிருஷ்ணசாமி (புதிய தமிழகம் )

215 கோவில்பட்டி --------------------49 ஓ-----கடம்பூர் ராஜு (அதிமுக)

தென்காசி
***************
217 ராஜபாளையம் -----------------கோபால் சாமி (அதிமுக)---- அவரே

218 .ஸ்ரீவில்லிபுத்தூர் ------------ 49 ஓ--- பொ ன்னுபாண்டி (இ கம்யூ)

219 .சங்கரன்கோவில்------49 ஓ---- கருப்பசாமி (அதிமுக)


220 . வாசுதேவநல்லூர் ------துரையப்பா (அதிமுக)---- அவரே

221 . கடையநல்லூர் --------490 ----- செந்தூர் பாணியன் (அதிமுக)

222 தென்காசி ------------ 49 ஓ-- சரத் குமார் (ச ம க )


திருநெல்வேலி
***********************

223 .ஆலங்குளம் -----------பி ஜி ராஜேந்திரன் (அதிமுக)---- அவரே

224 .திருநெல்வேலி --------ஏ எல் எஸ் லட்சுமணன் (திமுக)----நைனார் நாகேந்திரன் (அதிமுக)

225 அம்பாசமுத்திரம் -------சுப்பையா (அதிமுக)---- அவரே

226 .பாளையங்கோட்டை ------பழனி (மா கம்யூ)-- மைதீன் கான் (திமுக)

227 . நாங்குநேரி -------------------மகா கண்ணன் (பாஜக)----நாராயணன் (ச ம க)

228 .ராதாபுரம் ---------------49 ஓ-- மைக்கேல் ராயப்பன் (தே மு தி க)


கன்னியாகுமரி
************************
229 .கன்யாகுமரி ----பசசைமால் (அதிமுக)---- அவரே

230 . நாகர்கோவில் ---------பொன் ராதா கிருஷ்ணன் (பாஜக)----நாஞ்சில் முருகேசன் (அதிமுக)

231 .குளச்சல் -----------லாரன்ஸ் (அதிமுக)--- பிரின்ஸ் (காங்)

232 .பத்மநாபபுரம் -------புஷ்பலீலா (திமுக)---- அவரே

233 . விளவங்கோடு --------லீமா ரோஸ் (மா கம்யூ )---- விஜயதாரணி (காங்)

234 .கிள்ளியூர் -------------------ஜார்ஜ் (அதிமுக )--- ஜான் ஜேக்கப் (காங்)

முடிஞ்சு போச்ச்ச்ச் !

காங்கிரசைக் கருவறுத்தாச்சு நேரு சீமான் உட்பட எல்லோரும் சந்தோஷப் பட்டாலும் ஐந்து தொகுதிகளில் தமிழகத்தில் காங்கிரஸ் வென்றதை என்னால் சீரணிக்க முடியவில்லை .

இதில் கிள்ளியூர் , விளவங்கோடு , குளச்சல் போன்ற தொகுதிகளில் மலையாளிகள் அதிகம் . அதே போல ஓசூரில் தெலுங்கர்கள் கன்னடர்கள் அதிகம் . தமிழினத்தை காங்கிரஸ் அழிப்பதற்காகவே இவர்கள் ஒட்டுப் போட்டு இருப்பார்கள் .(தன்மானத் தமிழர்கள் நினைப்பதை தமிழ்நாட்டில் முழுமையாக நிறைவேற்ற முடியாத நிலை தமிழ் நாட்டில் பெருகி வருவதற்கு இதுவே சாட்சி )

ஆனால் என் வேதனை என்னவென்றால் பட்டுக் கோட்டையில் காங்கிரஸ் ஜெயித்துள்ளதே .... என்ன கொடுமை ! கேட்டால் அது காங்கிரசின் பாரம்பரியத் தொகுதி என்று ஒரு பன்னாடைத் தனமான பதில் . என்ன புண்ணாக்கு பாரம்பரியம் ? முப்பது வருடம் நம் குடும்பப் பெண்களுக்கு ஒருவன் வளையல் விற்றவன் என்பதற்காக குளிக்கும்போது அவன் எட்டிப் பார்ப்பதை அனுமதிக்க முடியுமா?

அடச்சே !

34 நான்கு தொகுதிகளில் நான் 49 ஓ வை சிபாரிசு செய்தேன் . (திமுகவின் வெற்றியை விட அதிகம்) "49 ஓ வை தேர்தல் ஊழியர்களே புறக்கணித்தபோது அதை உங்கள் தோல்வியாக கருத முடியாது " என்று எனக்கு சப்பை கட்டு கட்டினார் ஒரு அன்பு நண்பர் .

ஆனால் நான் அதை ஏற்கவில்லை . ஏனெனில் அதையும் மீறி மக்கள் 49 ஓ வுக்கு வாக்களித்து உள்ளனரே ! ஆக அது என் சறுக்கல் (அல்லது மக்களின் சறுக்கல் )தான் .
ஆக கூட்டிக் கழித்துப் பார்த்ததில் ..... 87 தொகுதிகளில் அடியேனின் தேர்வுக்கு மாறாக மக்கள் தங்கள் சட்ட மன்ற உறுப்பினரை தேர்ந்தெடுத்துள்ளனர் (வாழ்க வளர்க ! மக்களும் .....ஏன் அவர்களும் கூட )

147 தொகுதிகளில் மக்களின் தீர்ப்பும் எனது தெரிவும் ஒன்றாகவெ இருந்துள்ளது .

எனவே நானும் கூட அறுதிப் பெரும்பான்மையில் வென்றுள்ளேன் , அதிமுகவைப் போலவே ....
என்று சொல்லலாம் தானே ?

Friday, April 29, 2011

# தாதா( சாஹிப் பால்கே)வுக்கு எல்லாம் தாத்தா

இயக்குனர் பால சந்தருக்கு தாதா சாஹிப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்ற செய்தி வந்ததும் .....

இது ரொம்ப பொருத்தமான விருது . ஆனா இதுவே ரொம்ப லேட் . 'நூறாண்டுகளுக்கு ' முன்பே பாலச்சந்தருக்கு இந்த விருதை கொடுத்திருக்க வேண்டும் (அதாவது பால்கே பிறப்பதற்கு முன்பே?) என்று மாய்மாலம் பண்ணும் சில பல பத்திரிக்கைகள் ஒருபுறம் .

"அந்த விருதுக்கு உண்மையிலேயே பாலச்சந்தர் தகுதியானவர்தானா? உலகப் படங்களைப் பார்தது காப்பியடித்து கதைச்சுருக்கம் எழுதித் தருவதையே அனந்துவுக்கு வேலையாக கொடுத்து அவற்றை சுட்டு படங்கள் எடுத்தவர் ... அதையும் படமாக எடுக்காமல் , சினிமா என்பது கேமரா மொழி என்பதையே மறந்து ரேடியோ நாடகங்களை பிலிமில் எடுத்து பீம்சிங் ஸ்ரீதர் போன்ற மாபெரும் இயக்குனர் மேதைகள் உயர்த்தி வைத்த தமிழ் சினிமா உத்திகளை பல அடிகள் பள்ளத்தில் தள்ளியவர் ,...... தனது அதிமிகைப் படங்களின் வெற்றியின் மூலம் மகேந்திரன் பாரதிராஜா போன்ற இயக்குனர் சிற்பிகளையும் பின்னால் இழுத்தவர் ... அப்படிப்பட்ட பாலச்சந்தருக்கு தாதா சாகிப் பால்கே விருது தருவது நியாயமா ?" என்று கொந்தளிக்கும் 'அறிவுஜீவி'கள் மறுபுறம் .....

இந்த இரண்டு கட்சிகளையும் ஒரே பக்கம் ஒதுக்கிவிட்டு .. உண்மையிலும் உண்மையான ஒரு விசயத்தைப் பற்றிப் பேச வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது .

அதாகப் பட்டது நண்பர்களே .....!

ஆத்துத் தண்ணி கடைமடைப் பகுதிக்கு கடைசியாகத்தான் வரும் எனறால் அது யதார்த்தம் . ஆனால் சிறந்த சாதனைகளுக்காக தரப்படும் உயர்ந்த விருதுகளைக் கூட தகுதி . தரம் பார்க்காமல் வடக்கே இருந்து தெற்கே வரிசையாகக் கொடுத்து கடைசியில்தான் தமிழ்நாட்டுக் கலைஞனுக்கு தருவோம் என்றால் அப்படி செய்பவன் கூட மடையன்தான் . அதுவும் முதல் மடையன் அல்ல . அவன்தான் கடை(சி) மடையன் .

தாதா சாஹிப் பால்கே விருதும் அப்படித்தான் யுகக் கலைஞன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் வந்தது . "சிவாஜியைப் பார்த்துதான் நடிப்பு என்றால் என்ன என்றே அறிந்தேன் " என்றும் "புராணங்களில் திரேதா யுகம் , கலியுக என்று பல யுகங்கள் இருக்கலாம் . ஆனால் நடிப்பு எனறால் அது ஒரே யுகம்தான் . அதான் பெயர் சிவாஜி யுகம் " என்றும் கூறிய கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு எல்லாம் தாதா சாகிப் பால்கே விருதைக் கொடுத்து விட்டு கடைசியாக சிவாஜிக்கு தாதா சாகிப் பால்கே விருதை தூக்கிப் போட்டார்கள்
.

சிவாஜிக்கு முன்பு ராஜ்குமாருக்கு கொடுத்தபோதே தாதா விருது , தாத்தா விருதாக வீரியம் இழந்தது .

இப்போது போய் கஞ்சா கருப்பு , சிசர் மனோகர் , கிரேன் மனோகர் போன்ற வளரும் நடிகர்களிடம் கூட உங்களுக்கு தாதா சாகிப் விருது வேணுமா இல்ல மூவாயிரம் ரூபா பணம் வேணுமா என்று கேட்டுப் பாருங்கள் . ":அந்த மானம் கெட்ட விருது நமக்கு எதுக்குண்ணே.. காசு இருந்தா நாலு காஞ்ச வயித்துக்கு சோறாவது போடலாம் " என்பார்கள் . தாதா சாஹிப் பால்கே விருதின் லட்சணம் அவ்வளவுதான் . அந்த விருதுதான் இப்போது பாலச்சந்தருக்கு வழங்கப் பட்டுள்ளது .
இருக்கட்டும் .

ஆனால் இந்திய அளவில் வாழ் நாள் சாதனையாளருக்கான விருதை தாதா சாகிப் பால்கே பெயரில்தான் வழங்க வேண்டுமா? அவரை விட தகுதியானவர் யாரும் கிடையாதா? உண்டு . இருக்கிறார்ஒருவர் . அநியாயமாக மறைக்கப் பட்ட ஒரு சரித்திரம் அது .


ஒட்டுமொத்த இந்தியாவில் இந்தியர் அனைவரும் சமம் என்று வடக்கத்திவாலாக்கள் உண்மையிலேயே கருதி இருந்தால் இந்த தாதா சாகிப் பால்கே விருதை யார் பெயரில் வழங்கி இருக்கே வேண்டும் தெரியுமா? சாமிக்கண்ணு வின்சென்ட் என்ற தமிழனின் பெயரில்தான் வழங்கி இருக்க வேண்டும் . சாதனையாளர் சாமிக்கண்ணு வின்சென்ட் விருது என்ற பெயரில் .

யார் இந்த சாமிக்கண்ணு வின்சென்ட்?

இன்று சினிமாவில் கோடி கோடியாகக் குவித்து மஞ்சள் குளிக்கிற அனைவராலும் நினைவு கூறப் படவேண்டிய தமிழன், இந்தியன்தான் சாமிக்கண்ணு வின்சென்ட் . ஆம்! .இந்தியாவிலேயே முதன் முறையாகப் படங்களைத் திரையிட ஆரம்பித்தவர் இந்த சாமிக்கண்ணுதான். கண்ணு....... !

1883 ல் பிறந்த சாமிக்கண்ணு 1905 இல் தென்னக ரயில்வேயில் எழுத்தராக நம்ம திருச்சிராப் பள்ளி புகைவண்டி நிலையத்தில் பணியாற்றி வந்தார் மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் செய்த பணி அவருக்கு திருப்தி தரவில்லை (ஆத்தாடி அன்னிக்கு அது எவ்வளவு பெரிய தொகை!)

அப்போது அவர் திருச்சியில் ஒரு பிரெஞ்சுக்காரரைச் சந்தித்தார் . பெயர் டூபான். டூபானின் தொழில் சினிமாப் படம் காட்டுவது (பார்றா !) இந்தியா, இலங்கை என்று பிரயாணித்துப் போய் சினிமா படம் காட்டி பிழைத்தவர் அவர் . டூபான் காட்டிய சில திரைப்படங்களைப் பார்த்த சாமிக்கண்ணுக்கு அந்த புதிய தொழில்நுட்பம் மிகக் கவர்ச்சிகரமாக இருந்தது .... சில்க் சுமிதாவின் பார்வை மாதிரி !. பிடித்துப் போனது.... பத்மினியின் நவரசம் மாதிரி !

ஆனால் டுபானுக்கு? நம்ம ஊர் பழக்கமில்லாத ஊர்.... புதிய சூழ்நிலை!

எனவே தன் வியாபாரத்தை தொடர முடியாத டூபான் தனது படம் காட்டும் கருவிகளையும், படச்சுருள்களையும் விற்க முடிவு செய்தார். சந்தோஷமாக வாங்கிக் கொண்டார் சாமிக்கண்ணு . இப்படியாக சினிமா எனும் சொர்க்க பூமி (நன்றி 'புதிய பாதை' பார்த்திபன்) ஒரு பிரஞ்சுக்காரன் கையில் இருந்து ஒரு இந்தியன் கைக்கு முதன்முதலாக வந்தது அப்போதுதான் .

டூபானிடம் இருந்து காசு போட்டு வாங்கிய படக் கருவிகளையும் படச்சுருளையும் கொண்டு சாமிக்கண்ணுவே ஒளிப் படங்களை காட்ட ஆரம்பித்தார்.

1897 ஆம் ஆண்டு லூமியர் சகோக்கள் இயேசுவின் வாழ்க்கை (the life of jesus christ ) என்ற படத்தை நொடிக்கு பதினாறு பிரேம்கள் என்ற மேனிக்கு தயாரிக்கிறார்கள் . இந்தப் படம் 1896 ஜூலை ஏழாம் தேதி முதன்முதலாக இந்தியாவில் திரையிடப் பட்டது

அந்தப் படத்தை சொந்தமாக ஒரு பிரதி வாங்கிய சாமிக்கண்ணு அந்தப் படத்தை இந்தியா முழுக்க போய் போட்டுக் காட்டினார் படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.(மதம் மாறிய கிறிஸ்தவர் அல்லவா? அவருக்கு பொருத்தமான படத்தைதான் காட்டி இருக்கிறார் . ஆமென்!)

தொடர்ந்து லூமி சகோதரர்கள் தயாரித்த படமான "ரயிலின் வருகை' (மலைப்பாங்கான பின்னணி ரயில் ஒன்று நிலையத்தில் வந்து ரயில் நிற்க ஆட்கள் ஏறி இறங்குவதுதான் 46 செகண்ட் ஓடும் மொத்த படமே. ஆரம்பத்தில் அதைப் பார்த்த மக்கள் ரயில் தம் மீது மோதிவிடும் என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினராம்.) உள்ளிட்ட துண்டுப் படங்களைத் நாடு முழுதும் சுற்றித் திரையிட்டுக் காட்டினார் சாமிக்கண்ணு வின்சென்ட்

தவிர , அயல் நாடுகளிலிருந்து படச் சுருள்களையும், எந்திரங்களையும் இறக்குமதி செய்து பயன்படுத்தினார் சாமிக்கண்ணு . ( இவர் தயாரித்த படங்களுடன் சேர்த்து, மொத்தம் 136 வெளிநாட்டு மவுனப் படங்கள் தமிழகத்தில் காட்டப் பட்டுள்ளன ) தனது படங்களுக்கு விளம்பரம் செய்வதற்கு, துண்டு பிரசுரங்களை அச்சடிக்க 1916 இல் மின்சாரத்தால் இயங்கும் முதல் அச்சகத்தையும் கோவையில் நிறுவிஇருக்கிறார்

ஆந்திரம், கேரளம், மும்பை, கல்கத்தா, பெஷாவர், இலங்கை உள்ளிட்ட இடங்களிலும் இவர் படங்களைத் திரையிட்டிருக்கிறார். இதற்காக அப்போது வெளிநாட்டில் இருந்த ஒரு படம் தயாரிக்கும் கம்பெனியிடம் ஒப்பந்தமும் போட்டிருக்கிறார். . மின்வசதி இல்லாத நேரத்தில் மெக்னீஷியத்தைப் பயன்படுத்தி ஒளி உண்டாக்கிப் படத்தைத் திரையிட்டிருக்கிறார்.. படம் பார்ப்பதற்குகட்டணமாக அணாவாகவோ, அல்லது நெல்- தானியங்களோ வாங்கியிருக்கிறார் .

மவுனப் படம் என்பதால் அதன் கதையை விளக்குவதற்காக ஒவ்வொரு காட்சியிலும் கையில் குச்சியுடன் திரையருகே நிற்பாராம் சாமிக்கண்ணு .

(கிட்டத்தட்ட இதே கால கட்டத்தில் மருதமுத்து மூப்பனார் என்பவர் இங்கிலாந்து சென்று அன்றைய இளவரசரின் திருமணத்தைப் படம் பிடித்து வந்து தமிழகத்தில் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். மருதமுத்து மூப்பனாரின் புகைப்படம்கூட கிடைக்கவில்லை என்பது வருத்தமான செய்தி )

சும்மா குச்சியோடு நின்றதோடு நின்று விடவில்லை சாமிக்கண்ணு . படம் காட்டும் முறையில் பல புதுமைகளை அறிமுகப் படுத்தினார் அவற்றுள் ஒன்று தான் டென்ட் (கூடார) கொட்டகை சினிமா. ஒரு புது ஊருக்கு படம் காட்டச் சென்றால் அங்கு இருக்கும் காலி மைதானங்களில் கூடாரம் அமைத்து படங்களைத் திரையிடுவார் . இப்படி டெண்ட் அடித்து படம் காட்டுவது இவர் செய்த பெரிய புதுமை

அது மட்டுமல்ல . சென்னையில் எஸ்பளனேடு பகுதியில் எடிசன் சினிமா மெகாஃபோன் என்ற பெயரில் சினிமா காட்ட என்றே முதல் டென்ட் சினிமா கொட்டகையைக் கட்டினார்சாமிக்கண்ணு . (பெயரைப் பார்த்தீர்களா? தாமஸ் ஆல்வா எடிசனுக்கு சமர்ப்பணம்!) மின்சார விளக்குகள் ஒளிர்ந்த அவரது கொட்டகைகளுக்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். அதி நவீன எந்திரங்களை பயன்படுத்தி காட்டப்பட்ட அவரது படங்களைக் காண மக்கள் கூட்டமாக வந்தனர். இதனைத் தொடர்ந்து, வட இந்தியா , மலேசியா ,சிங்கப்பூர் , பர்மா ஆகிய நாடுகளுக்கும் சென்று படங்களைத் திரையிட்டார்.

மழைக்காலத்தில் டெண்டுக் கொட்டகை ஒழுகி படம் பார்க்க விடாமல் தொந்தரவு செய்வதைப் பார்த்த சாமிக் கண்ணு சினிமா காட்ட கூடாரத்தைவிட நிரந்தரமான ஒரு கட்டிடம் வேண்டுமென்பதை முடிவு செய்து முதன்முதலில் (இந்தியாவில் என்று தாராளமாகச் சொல்லலாம்) 1914 இல் கோவையில் வெரைட்டி ஹால் திரையரங்கைக் கட்டினார். (பின்னாளில் அதுதான் கோவை டிலைட் தியேட்டர் )இன்று அந்தச் சாலை வெரைட்டி ஹால் சாலை என்றே அழைக்கப்படுகிறது. மின்சாரத்தைப் பயன்படுத்தித் திரையிட்ட நாட்களில் மின்வசதியால் இயங்கும் தியேட்டர் என்று சாலையில் கூவி விளம்பரம் செய்வார்களாம் இந்தத் திரையரங்குக்கு .

சாமிக்கண்ணுவைப் பின்பற்றி சென்னையில் வெங்கையா என்பவரால் கெயிட்டி திரையரங்கம் கட்டப் பட்டது , நீண்ட ஆயுள் பெற்ற திரையரங்கம் இது )இதையடுத்து சென்னையில் மேலும் சில நிரந்தர திரையரங்குகள் கட்டப்பட்டன.

இங்கேதான் அந்த சம்பவம் பற்றி குறிபிட வேண்டியுள்ளது .

வின்சென்ட் சாமிக்கண்ணு காட்டிய ஏசுவின் வாழ்க்கை படத்தை பார்க்கிறார் ஒருவர் ,

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள , டிம்பகேஷ்வர் என்ற ஊரில் பிறந்து மும்பையிலும் பரோடாவிலும் கல்வி கற்று கோத்ரா நகரில் ஒரு போட்டோ கிராபராக வாழ்க்கையைத் துவக்கி, இந்திய தொல்பொருள் துறையில் டிராப்ட்ஸ் மேனாக பணியாற்றி ஓவியர் ராஜா ரவி வர்மாவிடமும் பணியாற்றி .....லூமியர் சகோதரர்களின் கீழ் பணியாற்றிய நாற்பது மேஜிக் பணியாளர்களில் ஒருவரான கார்ல் ஹெட்ஸ் என்பவரையும் சந்திக்கும் வாய்பையும் பெற்றிருந்த ....(கொஞ்சம் மூச்சு விட்டுக்கவா?)அவரின் பெயர் தண்டி ராஜ் கோவிந்த பால்கே . உங்கள் எல்லோருக்கும் உடனே புரிய வேண்டும் எனறால் தாதா சாஹேப் பால்கே !

நம்ம ஊரு வின்சென்ட் சாமிக்கண்ணு காட்டிய இயேசுவின் வாழ்க்கை படத்தைப் பார்தது கவரப் பட்டு சினிமா என்கிற தொழில் நுட்பத்தை கற்றுக் கொண்ட பால்கே, பிறகு படம் எடுக்கவே முடிவு செய்தார் . மும்பை காரனேஷன் அரங்கில் நடிக்கப் பட்ட புண்டளிக் என்ற மேடை நாடகத்தை முதன்முதலில் படம் பிடித்துப் பார்த்தார் பால்கே . (சத்தம் எதுவும் வராது . ஊமைப் படம்தான் )

1912 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் படமான அதாகப் பட்டது முதல் மவுனப் படமான ராஜா ஹரிச் சந்திராவை தயாரித்து 1913 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் நாள், புண்டளிக் மேடை நாடகத்தை படம் பிடிதத , அதே மும்பை காரனேஷன் அரங்கில் போட்டுக் காட்டினார் .

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் படம் அந்த ஹரி சந்திரா .

படம் எடுத்த பால்கே பெயரால் வருடா வருடம் கம்பீர திரை விருது

அதில்தான் நம்ம சிவாஜிக்கு தர வேண்டிய சமயத்தில் தந்து கவுரவப் படுத்தாமல் தோலான் துருத்திகெல்லாம் கொடுத்து விட்டு கடைசியாக தூக்கிப் போட்டார்கள் .

ஆனா அந்த பால்கே வுக்கே படம் எடுக்க தூண்டுதலாக இருந்த ... பால்கேவுக்கு சினிமா சொல்லிக் கொடுத்த முதல் இந்திய சினிமாக்காரர் வின்சென்ட் சாமிக்கண்ணு பேரால் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் விருதாவது உண்டா?

ஒருவேளை வின்சென்ட் சாமிக்கண்ணு அந்தக் கால ராமேஸ்வரம் மீனவரோ என்னவோ?

பால்கேவுக்கு படம் காட்டியதோடு நின்றிருந்தால் கூட சாமிக்கன்னுவைப் புறக்கணிப்பதற்கு ஒரு சொட்டை சொள்ளை காரணமாவது கிடைக்கும் .

ஆனால் அதன் பின்னரும் தொடர்ந்த சாமிக்கண்ணுவின் சாதனைகளைச் சொல்லவா?

தாங்குவீர்களா?


கோவையில் முதன் முதலில் மின்சாரத்தால் இயங்கும் அரிசி ஆலையையும், நிறுவியவர் இவரே. கோவையின் முதல் மின்சார உற்பத்தி ஆலையும் இவரால் நிறுவப்பட்டதே. . தனது ஆலையில் உற்பத்தியான உபரி மின்சாரத்தை கோவை ஸ்டேன்ஸ் பள்ளிக்கு தர அரசிடம் அனுமதி பெற்றார். சென்னை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் மின்சாரத் துறை பொறுப்பிலிருந்த சி. பி. ராமசாமியின் ஆதரவால் தனியாக ஒரு மின்சார உற்பத்தி ஆலை அமைக்க சாமிக்கண்ணுக்கு உரிமம் வழங்கப் பட்டது. அவர் உற்பத்தி செய்த மின்சாரத்தால் கோவையின் வீதிகளில் மின்சார விளக்குகள் ஒளிர்ந்தன.

சினிமா துறைக்கும் சாமிக்கண்ணு ஆற்றிய சேவைகள் கொஞ்ச நஞ்சமல்ல

ஆரம்பத்தில் படங்களை இறக்குமதி மட்டும் செய்து வந்த சாமிக்கண்ணு பின்னர், மக்களின் ரசனைக்க்கேற்றபடி புதிய படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். பேசும் படங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது, 1933 இல் கல்கத்தா சென்று வள்ளி திருமணம் என்ற பேசும்படத்தை தயாரித்தார் . புகழ்பெற்ற நடிகை நடிகை டி பி ராஜ லட்சுமி , வள்ளியாக நடித்த அந்தப் படம், பெருவெற்றி பெற்றது. சென்னை எல்பின்ஸ்டோன் திரையரங்கில் அப்போதே தினம் மூன்று காட்சிகள் திரையிடப்பட்டது அந்தப் படம் . . அதன் வெற்றியைத் தொடர்ந்து 1935 இல் ஹரிச்சந்திரா என்ற படத்தை சாமிக்கண்ணு தயாரித்தார். பிரஃபுல்லா கோஷ் இயக்கத்தில் வி. ஏ. செல்லப்பா, டி. பி. ராஜலட்சுமி ஆகியோர் நடிப்பில் அது கல்கத்தாவில் தயாரிக்கப்பட்டது. அடுத்து சாமிக்கண்ணு தனது வெரைட்டி ஹால் டாக்கீஸ் நிறுவனம் மூலம் தயாரித்த படம் சுபத்ரா பரிணயம் .

இதோடு போச்சா ?1936 இல் பேலஸ் திரையரங்கை விலைக்கு வாங்கிய சாமிக்கண்ணு அதில் இந்தி மொழித் திரைப்படங்களைத் திரையிட்டார்.(அப்படியும் புறக்கணிச்சுட்டாங்களே ) மொத்தம் பதினெட்டு திரையரங்குகள் வைத்திருந்தார் சாமிக்கண்ணு .

பின்னாளில் பெறும் புகழ் பெற்று தமிழ் சினிமா நாயகர்கள் பலரை உருவாக்கிய சென்ட்ரல் ஸ்டுடியோஸ் 1937 இல் கோவையில்தொடங்கப் பட்டபோது, அதில் இயக்குனராக வேலைக்கு சேர்ந்தார். 1939 இல் ஓய்வு பெற்றார்.சாமிக்கண்ணு 1942 இல் மரணமடைந்தார்.

இப்படிப் பட்ட ஒரு மாபெரும் சினிமாக்காரனை மறைத்து விட்டுதான் தாதா சாஹிப் பால்கேவை மட்டு தூக்கிப் பிடித்தார்கள் தாதாத்தனமாக !


இப்போது சொல்லுங்கள் தாதாசாஹிப் பால்கே விருது யார் பெயரால் வழங்கப் படவேண்டும் . இந்த உண்மையை உரக்கச் சொல்லிவிட்டு அப்புறம் நம்மவர்கள் விருது வாங்கப் போகட்டும் .

Thursday, April 14, 2011

# 49ஓ வை பஞ்சராக்கிய தேர்தல் கமிஷன் அலுவலர்கள்இந்த தேர்தலின் முடிவுகள் மூலம் ஓரளாவது நன்மைகள் பெற , (அல்லது குறைந்த அளவில் தீமைகள் பெற ?) 234 தொகுதிகளிலும் மக்கள் ஒட்டுப் போடவேண்டிய வேட்பாளர்கள் யார் என்பது பற்றி முன்பு கொடுத்த பட்டியல் காரணமாகவும் ,

அல்லது அதற்கு முன்பே சில தொகுதிகளில் மட்டுமாவது 49 ஓ வின் அவசியம் பற்றி அதிகம் தெரிந்தவர்களும் ,

பல்வேறு தொகுதிகளில் 49ஓ வில் வாக்களிக்க முயன்றிருக்கிறார்கள் . ஆனால் அவர்களுக்கு கிடைத்த அவமானங்களும் புறக்கணிப்புகளும் கேவலமான பார்வைகளும்! அட ! அட ! அடடா....... !

அந்த அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் கேவலமான பார்வைகளையும் வழங்கியவர்கள் அங்கு இருந்த கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள்

---- எனறால் அதில் வருத்தப் பட (பெரிதாய் ) ஒன்றும் இல்லை .

ஆனால் அந்த 'சாதனைகளை' நிகழ்த்தியவர்கள் பூத்களில் உள்ள தேர்தல் அலுவலர்கள்தான் என்பதைப் பார்க்கும்போது இந்த தேர்தல் கமிஷனர்கள் , ஏராளமான டிவி மைக்குகள் சூழ வெற்றிப் புன்னகையோடு" மக்கள் பயமில்லாமல் வாக்களிக்கப் போகலாம்" என்று உறுமுவது எல்லாம் சும்மா ஊளை உதாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.


(அடப் பாவி ! எந்த அளவுக்கு இந்த முறை தேர்தல் கமிஷன் வன்முறை நடவாமல் பார்த்துக் கொண்டுள்ளது ... ! பணப் புழக்கத்தை எப்படி கொஞ்சூண்டாச்சும் குறைத்து உள்ளது.....! இது நல்ல விஷயமில்லையா என்று கருத்துக் கூறக் கை பரபரப்போரே! உங்கள் வீட்டுப் பெண்கள் சோறு மட்டும் குழையாமல் வடித்தால் போதுமா? குழம்பு அடிபிடித்து தொண்டை காந்தினால் பரவாயில்லையா ? நீங்கள் குழம்பு அடிபிடித்ததைக் குற்றம் சொல்லும்போது "அதான் சோறு குழையாம இருக்கு இல்ல... தின்னுடா வெண்ண .." எனறால் ஓகே வா ?)

என் பேச்சை கேட்டு 49 ஓ போடப் போன தென் மாவட்டப் பெரியவர் ஒருவர் எனக்கு போன் செய்து . "ஏய் ..என்னப்பா இது... ?ஒம் பேச்சக் கேட்டு 49 ஓ போடப் போனா ... அந்தத் தாயளி மவன், என்ன பீத்தொடைகிற கல்லு அளவுக்கு கூட மதிக்கிலப்ப்பா " என்றார் . அவர் சொன்னது எந்தக் கட்சியின் பூத் எஜண்டையும் அல்ல . தேர்தல் நடத்திய அலுவலர் தொன்னைகளை
!

அதே போல சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கே கே நகர் தபால் அலுவலகத்துக்கு எதிர் சந்தில் உள்ள எம் ஏ கே கான்வென்ட் பள்ளியில் 49 ஓ போடப் போன ஒருவர்.......,

தன்னை கோர்ட் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்தது போல நிற்க வைத்ததையும் சம்மந்தப்பட்ட தேர்தல் அலுவலர் 49 ஓ போடவேண்டும் என்ற கோரிக்கையை காதில் வாங்கவே இல்லை என்பதையும் (செவிடன்களை எல்லாம் தேர்தல் பணிக்கு போடலாமா பிரவீன் குமார்?) எவ்வளவோ வற்புறுத்தியும் முடியாத நிலையில் வேறு வழி இல்லாமல் ஒரு கடசி வேட்பாளருக்கு போட்டு விட்டு வந்ததையும் விளக்கினார் , பரிதாபமாக .

பொதுவாக 49 ஓ போடப் போனால் என்ன நடக்கும் ?

49 ஓ என்று சொன்னதும் எல்லா கடசி ஏஜெண்டுகளும் முறைப்பார்கள் . ஐந்து வருடமாக தெரு நாய் சொறிநாய் கணக்காய் தங்களுக்குள் அடித்துக் கொண்டிருந்தவன் எல்லாம் அதிசயமாக , ஒன்று கூடி ஒன்றிணைந்து முறைப்பார்கள் . எல்லா பயலுக்கும் தான் எதிரி என்பதை அந்த வாக்காளன் சத்தம் போட்டு அறிவிக்கிறான் அல்லவா? அதுதான் காரணம் . ! ஆனால் அதற்கு பெரிதாக பயப்படத் தேவை இல்லை . திரும்பி முறைத்தோ அல்லது குறைந்த பட்சம் அந்த முறைப்புகளை கண்டு கொள்ளாமலோ வாக்காளன் 49 ஓ வில் பதிவு செய்துவிட்டு வரலாம் . (என்ன .. காசு வாங்கிக் கொண்டு 49 ஓ எனறால் , காசு கொடுத்த கட்சிக்காரன் செருப்பு பிய்ய பிய்ய அடிப்பான் ) மற்றபடி தேர்தல் அலுவலர்கள் 49 ஓ வில் பதிய உதவுவார்கள்


------ என்றுதான் அறியப் பட்டது .

ஆனால் இந்த முறை பூத்களின் கடசி ஏஜெண்டுகள் வழக்கம் போல முறைத்துள்ளனர் . திரும்பி முறைத்த தைரியசாலிகளிடம் சில பூத் ஏஜெண்டுகள் " எதுக்குண்ணா உங்க ஓட்ட வேஸ்ட் பண்றீங்க ?" என்று தப்பான நியாயம் பேசி மனம் மாற்றவும் முயன்றுள்ளனர் . ஆனால் அதற்கு மேல் எந்தத் தொகுதியிலும் எந்த கட்சியின் பூத் ஏஜெண்டுகளும் 49 ஓ போட ஆசைப் படும் மக்கள் மீது பெரிதாக கோபப் பட்டதாக தெரியவில்லை . நன்றி அனைத்து கட்சிகளின் பூத் ஏஜெண்டுகளுக்கு !

ஆனால் .. ஏதோ எங்க வீட்டுப் பிள்ளை எம்ஜி ஆர் கணக்காய் தேர்தல் கமிஷன் இந்த முறை சவுக்கெடுத்து விட்டதாக எல்லோரும் பீத்திக் 'கொல்லும்' வேளையில், 49 ஓவுக்கு எதிராக தேர்தல் கமிஷனின் பூத் அலுவலர்கள் என்னவெல்லாம் செய்துள்ளனர் தெரியுமா?

1 ) வாக்காளனின் 49 ஓ கோரிக்கையை கண்டு கொள்ளாமல் புறக்கணிப்பது

2 ) வாக்காளரை தாமதிக்க வைத்து கட்சிக்காரகளின் கோபப் பார்வைக்கு ஆளாக்கி ஏதாவது கட்சிக்கு ஒட்டுப் போட்டுவிட்டும் வெளியேறும் மன நிலையை ஏற்படுத்துவது .

3 ) வாக்காளரின் அடையாள அட்டையை உயரத் தூக்கிப் பிடித்து எல்லா கடசி ஏஜெண்டுகளுக்கும் அர்த்த புஷ்டியோடு காட்டுவது .

4 ) வேட்பாளரின் பெயர் தந்தை பெயர் முகவரி ஆகியவற்றை மீண்டும் மீண்டும் சத்தம் போட்டு படித்து கட்சிக்காரர்கள் (அனைவருக்கும் ) இவன் உங்கள் அனைவருக்கும் எதிரானவன் என்று பிரகடனப் படுத்தி பயமுறுத்துவது .

5 ) 49 ஓ வாக்காளரை கேவலமாகப் பார்ப்பது .

6 ) கையெழுத்துப் போட பேனாவைத் தூக்கிப் போடுவது .


இதையெல்லாம் செய்வது எங்க வீட்டுப் பிள்ளை திரைப்பட எம்ஜி ஆரின் வாரிசுகளாக தங்களை இந்த முறை காட்டிக் கொண்ட தேர்தல் கமிஷன் தலைமையில் பணியாற்றிய தேர்தல் அதிகாரிகளே !

சந்தேகங்கள் மூன்று

தேர்தல் பணி அலுவலர்கள் பலரும்

1 ) 49 ஓ வுக்கான பணியை செய்வதை எக்ஸ்ட்ரா வேலை என்று நினைக்கும் வாழைப்பழச் சோம்பேறிகளா ?

2 ) இல்லை .. ஆளுங்கட்சி அல்லது அடுத்த ஆளுங்கட்சியாக நம்பப் படும் கட்சிகளுக்கு சொம்படிப்பவர்களா?

3 ) அல்லது இரண்டுமா?


(இதை ஏதாவது அரசுத் தேர்வில் தாராளமாக கேள்வியாக வைக்கலாம் )


பல இடங்களில் பல அலுவலர்கள் 49 ஓ வை அனுமதித்து உள்ளனர் . மறுக்கவில்லை .ஆனால் எப்படி நடந்துள்ளது?

ஒன்று அந்த அலுவலர்கள் அத்தி பூத்தாற்போல நேர்மையாளர்களாக இருந்திருக்க வேண்டும் . அல்லது 49 ஓ போடப் போனவர்கள் ஏதாவது ஒரு பொதுப் பிரச்னையின் அடிப்படையில் கும்பலாக போயிருக்க வேண்டும் .

ஆக , ஒரு தனி மனிதன் பொதுவில் பொது நல நோக்கில் 49 ஓ போடுவது இன்னும் சுலபமாகவில்லை .

49 ஓ போடப் போவதில் உள்ள அடிப்படைப் பிரச்னை என்ன?

நாம் முன்னரே குறிப்பிட்டது போல ,.

49 ஓ என்று சொன்னதும் எல்லா கடசி ஏஜெண்டுகளும் நம்மை முறைப்பார்கள் . ஐந்து வருடமாக தங்களுக்குள் அடித்துக் கொண்டிருந்தவன் எல்லாம் அதிசயமாக , ஒன்று கூடி ஒன்றிணைந்து முறைப்பார்கள் . எல்லா பயலுக்கும், தான் எதிரி என்பதை அந்த வாக்காளன் சத்தம் போட்டு அறிவிக்கிறான் அல்லவா? அதுதான் காரணம் . !

ஆனால் தேர்தல் கமிஷன் என்ன சொல்கிறது ? உங்கள் வாக்கு ரகசியமானது எனவே பயப்பாடாமல் வாக்களியுங்கள் என்கிறது .
ஆனால் 49 ஓ போடுவதில் ரகசியம் எங்கே வாழ்கிறது ?


'பொதுவாக ஒட்டுப் போடுவபவனுக்குதான் ரகசியம் காக்கப் படும் என்று தேர்தல் கமிஷன் சொல்கிறது...... . ஆனால் 49 ஓ என்பது யாருக்கும் ஓட்டு இல்லை என்று கூறுவது ...... அவனது ரகசியம் எதற்கு காக்கப் பட வேண்டும்?' என்று அநியாயமாக வாதாடத் தயாராகும் அறிவு ரவுடிகளுக்கு ஒரு வார்த்தை .

தேர்தல் நாளில் ஒட்டுப் போடும் இடத்துக்கு அரசால் அனுமதிக்கப் பட்டு, ஒட்டுப் போடுபவர்களின் அதே வரிசையில் வந்து, 49 ஓ போடுகிறவன் என்ன செய்ய வருகிறான்? எல்லா கட்சிகளும் தவறான வேட்பாளரை நியமித்துள்ளதைக் கண்டித்துதான் , தன் கருத்தை --- குரலை -- வாக்குரிமையை பயன்படுத்துகிறான் . ஆக அவனும் வாக்காளன்தான் . சொல்லப் போனால் அவன் , எல்லா கட்சிகளின் அயோக்கியத்தனததையும் கண்டிக்கிற கம்பீர வாக்காளன் . அவனுக்கு தனி வழி ஏற்படுத்திக் கொடுத்தால் கூடத் தப்பில்லை . ஆனால் அதுவும் அவனை அடையாளப் படுத்தும் என்பதால் சமுதாய நேர்மையின் பொருட்டு வாக்களிக்க வரும் கும்பலோடு கும்பலாக அவனும் நிற்கிறான் . அவன் உயர்ந்தவன் . ரகசியமான மானசீகமான மரியாதைக்குரியவன் ,


ஆனால் பிக்பாக்கெட் அடித்தவனை ஊரறிய முச்சந்தியில் நிறுத்துவது போல, அந்த கம்பீர வாக்காளனை நிற்க வைத்து அடையாள அட்டையை சுற்றிச் சுற்றி வளைத்து வளைத்துக் காட்டி, பெயர் , தந்தை பெயர் முகவரி இவற்றை ஏலம் போட்டு காட்டிக் கொடுத்து கயமை செய்வது என்ன நியாயம்?

இப்படி செய்துவிட்டு உங்கள் வாக்குரிமை ரகசியமானது என்று சொல்வது என்ன நியாயம் ?


என்ன செய்யவேண்டும்?

கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுக்கான அடையாளங்கள் எப்படி வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிக்கப் படுகிறதோ அதே போல 49 ஓ வுக்கும் ஒரு பட்டன் வைக்கப் பட வேண்டும் .

49 ஓ பதிவும் இரகசியமாக்கப் பட வேண்டும் .

அதுவும் மாற்றுக் கருத்துக்கு மரியாதை தருவதுதான் உண்மையான ஜனநாயகம் எனறால் முதல் பட்டனை 49 ஓ வுக்கு அளிக்க வேண்டும் . . அதுதானே நியாயம் ?


சரி .... மற்ற வேட்பாளர்களை விட 49 ஓ அதிக வாக்குகளைப் பெற்றால் ?

வேறென்ன ... மீண்டும் மறு தேர்தல்தான் .

என்ன தப்பு?

யாரோ ரவுடிகள் ஓட்டு இயந்திரத்தை உடைத்ததால் மறு தேர்தல் வைக்கிறோம் .

ஏதோ ஒரு பொறுக்கி கும்பல் கள்ள ஒட்டுப் போட்டது நிரூபிக்கப் பட்டால் மறுதேர்தல் வைக்கிறோம் .

இருபத்தி நாலு மணி நேர குடிகாரனை எம் எல் ஆ வாக்கி அந்த ஆள் சொல்லாமல் கொள்ளாமல் போதையில் புட்டுக் கொண்டால் மறுதேர்தல் வைக்கிறோம் .


ஒரு நல்ல வேட்பாளரை கூட தர முடியாத எல்லா கட்சிகளையும் மக்கள் கண்டித்திருப்பதைக் கொண்டாட ஒரு மறுதேர்தல் வைத்தால் என்ன?


செலவுதான் பிரச்னை எனறால் அதற்கும் வழி உண்டு .

ஒரு தொகுதியில் 49 ஓ வெற்றி பெற்றது என்று வைத்துக் கொள்வோம் . அங்கு வேட்பாளர்களை நிறுத்திய மற்ற கட்சிகள் மறு தேர்தலுக்கான செலவை பகிர்ந்து கொள்ள வேண்டும் . குறைந்த ஓட்டுக்களைப் பெற்ற கடசி அதிக செலவு . அதிக ஓட்டுகளைப் பெற்ற கடசி குறைந்த செலவு என சதவீத அடிப்படையில் பிரித்துக் கொள்ள வேண்டும்


49 ஓ வை ஒட்டுப் பதிவு இயந்திரத்துக்குள் அமைத்து அதையும் ரகசிய வாக்காக மாற்றாதவரை 49 ஓ பற்றி மூச்சு முட்ட பேசுவதில் பயன் இல்லை .


இதுதான் இந்தத் தேர்தல் வாக்குப் பதிவு நமக்கு உணர்த்திய பாடம் .

நடக்குமா?

Wednesday, April 13, 2011

#காங்கிரசைக் கருவறுப்போம்பிரபாகரனின் குடும்பத்தாருக்கு தமிழ் கற்றுக் கொடுத்தவர் தமிழகத்தைச் சேர்ந்த தமிழாசிரியர் அறிவரசன் .

இந்திய ராணுவத்தின் உதவியோடு சிங்களக் காடையர்கள் ஈழத்தில் தமிழர்ககளை கொன்று குவித்த கோரப் புகைப் படங்களைக் காட்டி, அறிவரசன் அவர்கள் காங்கிரசாருக்கு ஓட்டளிக்கக் கூடாது என்று கடையநல்லூரில் பரப்புரை செய்திருக்கிறார் .

அவரை -----அந்த பெரியவரை ---முதியவர் என்றும் பாராமல் சில காங்கிரஸ் கம்மனாட்டிகள் அடித்து காயப் படுத்தியுள்ளனர் .

நூறடி தூரத்தில் பிரச்சாரம் செய்தும் அதைக் கண்டு கொள்ளவில்லை காங்கிரஸ் வேட்பாளரான பீட்டர் அல்போனஸ்.(நன்றி ஜூனியர் விகடன் )

நமக்கு வந்த சில கடையநல்லூர் நண்பர்களின் தொலைபேசி அழைப்புகள் அடிக்க சொன்னதே இந்த பீட்டர் அல்(பை)போன்ஸ்தான் என்கின்றன .

தமிழக மீனவனை தினம் சுட்டுக் கொல்லும் சிங்களவனையோ துணை போகும் மத்திய அரசு கபோதிகளையும் கண்டிக்க துப்பு இல்லாமல் ....

உண்மையை சொன்னதற்காக தமிழ் நாட்டைச் சேர்ந்த வயதில் மூத்த தமிழாசிரியர் அடிபடக் காரணமாக இருந்த பீட்டர் அல்போன்சை இனி கேண்டீன் கான்ட்ராகடராகக் கூட சட்ட மன்ற வளாகத்தில் நுழைய விடக் கூடாது .

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ராஜபக்செவைக் கொண்டு வந்து தாம்பூலம் மடித்து கொடுத்தது தாசித்தனம் செய்தது மத்திய அரசு .

ஆனால் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவிடம் தோற்றதற்காக நாலு தமிழக மீனவர்களை கொன்று உள்ளான் இலங்கை இராணுவத்தான் .

இந்த அநியாயத்தை கண்டு கொள்ளாத காங்கிரஸ் காட்சியை சட்டமன்றத்தில் சதிராட விடடால் அப்புறம் நம் ஊரில் உப்பளங்கள் எதற்கு ?


காங்கிரசை கருவறுப்போம் .

Tuesday, April 12, 2011

# அவசியம் ஒட்டுப் போடுங்கள் ;


வாக்குப் பதிவு அறையில் அவன் நுழைவதைப் பாருங்கள் . ஒடுக்கப் பட்ட பாட்டாளியின் முகபாவத்தோடு உள்ளே நுழைகிறான் . அவன் வெளியே வரும்போது மன்னனின் சாயலோடு திரும்புகிறான் " --- பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் பிரபல எழுத்தாளர் விக்டர் ஹியூகோ பேசியது


--- நன்றி பத்திரிக்கை நண்பர் ப. திருமா வேலன் (17 --04 --11 ஜூனியர் விகடனில் )

பாட்டாளிகளே! மன்னராக அவசியம் ஒட்டுப் போடுங்கள் !

எல்லா கரைகளுமே களங்கங்கள் இல்லை . ஆள் காட்டி விரலில் வைக்கப் படும் ஓட்டு அடையாள மைக் கறை புனிதமானது ! கம்பீரமானது ! ஆண்களே ! அவசியம் ஒட்டுப் போடுங்கள் !

பெண்களே ! உங்கள் அழகான -- புனிதமான --- தெய்வீகமான --செல்லக் குழந்தையின் கன்னத்தில் வைக்கப் படும் திருஷ்டி மையை விட கோடி மடங்கு புனிதமானது இன்று நீங்கள் உங்கள் ஆள் காட்டி விரலில் வைத்துக் கொள்ளும் தேர்தல் மை . . அதுதானே உங்கள் செல்லக் குழந்தையின் வருங்காலத்தை நிர்ணயிக்கப் போகிறது!


எனவே , இந்தக் கறை நிஜமாலுமே நல்லது !

எனவே அவசியம் ஒட்டுப் போடுங்கள் .

வெயில் அதிகம்தான் . ஆனால் நீங்கள் போடும் ஓட்டு அடுத்த ஐந்து ஆண்டு உங்களை லஞ்ச ஊழல் இனத்துரோக வெம்மையில் இருந்து காக்க பயன்படட்டும் .

மறவாமல் வாக்களியுங்கள் .

Monday, April 11, 2011

# உங்கள் தொகுதியில் யாருக்கு உங்கள் ஓட்டு?முழுப் பட்டியல்
அன்பர்களுக்கு வணக்கம் .

உங்கள் தொகுதியில் நீங்கள் ஓட்டுப் போட வேண்டிய வேட்பாளர் யார் என்று தேர்ந்தெடுத்து உங்களுக்கு அளித்துள்ளேன் .

எந்தக் கடசி சார்பும் இல்லாமல் எந்த நிருபர் படையும் இல்லாமல் எந்த தனியார் நிறுவனத்தின் சேவையும் இல்லாமல் நான் மட்டும் ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்த பட்டியல் இது .

சுமார் இருபது வருட பத்திரிக்கையாளர் பணி ....... ஒரு உதவி இயக்குனராக தமிழகம் முழுதும் (ஓரளவு ) அலைந்து திரிந்த அனுபவம் ..... தனிப்பட்ட எந்த தலைவருக்கும் ஜால்ரா அடிக்காமல் , நான் ஒரு தூய தமிழன் என்ற காரணத்தால் ஓட்டு மொத்த தமிழகத்தையும் என் தாய் பூமியாக நேசிக்கும் உள்ளம் ....அதனால் பல்வேறு பகுதிகளின் வாழ்க்கை, கலாச்சார, பொருளாதாரச் சூழல்களையும் ஊன்றிப் படித்து மனிதில் பதிய வைத்த பாங்கு , மாநிலம் முழுக்க எனக்கு உள்ள நண்பர்கள் , சுமார் ஐநூறு தொலைபேசி அழைப்புகள் , இவற்றின் மூலம் நான் தீர விசாரித்து தீர்மானித்து கொடுக்கும் பட்டியல் இது .

வேட்பாளரின் நேர்மை . எளிமை , , அவரது கட்சியில் அவரது செல்வாக்கு , திறமை , முந்தைய செயல்பாடுகள் , அவரைப் பற்றிய பொதுவான மக்களின் எண்ணம் இவற்றின் அடிப்படையில் உங்கள் தொகுதியில் உங்கள் நன்மைக்காக நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைப் பொது மக்களுக்காக கூறுகிறேன் . இதை பின்பற்றினால் பொதுமக்களுக்கு நன்மை . சில தொகுதிகளுக்கு 49 ஒ வை பரிந்தரை செய்துள்ளேன் (வேறு வழி இல்லை)

மற்றபடி எந்தக் கட்சிக்கும் ஆதரவாக நான் இதை வெளியிடவில்லை . மற்ற தொகுதி ஆர்வலர்களின் புரிதளுகாகவே அடைப்புக் குறியில் கட்சியைக் குறிப்பிடுகிறேன் , எந்த சாதி சங்கத்துக்கும் ஆதரவாகவும் நான் இதை வெளியிடவில்லை (பிராமணர் முதற்கொண்டு தலித் வரை எந்த மெஜாரிட்டி சாதியையும் சேர்ந்தவன் இல்லை நான் i )

யாருடைய நேரடி அல்லது மறைமுக தூண்டுதல் காரணமாகவும் நான் இதை வெளியிடவில்லை . என் கையில் என் ஒரு ஓட்டு தவிர யார் ஓட்டும் இல்லை . ( என் மனைவியிடமே என் கருத்தை மட்டுமே கூறுவேன் . மற்றபடி இந்தக் கட்சிக்குதான் ஓட்டுப் போடவேண்டும் என்று கட்டளையிட மாட்டேன்)

ஆக , இது , யார் ஜெயிப்பார்கள் என்பததற்கான கருத்துக் கணிப்பு அல்ல ! அல்ல !! அல்ல!!!

யாருக்கு ஓட்டுப் போட்டால் மக்கள் ஓரளவாவது ஜெயிப்பார்கள் அல்லது ரொம்பவும் தோற்க மாட்டார்கள் என்பதற்கான கருத்தாக்கம் மட்டுமே இது .

வழக்கமாக எனது கட்டுரைகளைப் படித்து விட்டு கருத்து கூட இடாமல் அதாவது படித்த மாதிரியே காட்டிக் கொள்ளாமல் நான் சொல்வதை தங்கள் சிந்தனை போல வேறு இடங்களில் பயன்படுத்துவோரே ... சற்றே விலகி இரும் பிள்ளாய். (இந்தக் கருத்து என்னைப் பின்பற்றுவோரைக்---followers-- குறிக்காது )

மற்றபடி இந்தக் கருத்தாக்கத்தின் எந்தப் பகுதியையும் எந்தக் கடசிக்கும் ஆதரவாக பயன்படுத்தக் கூடாது . அதே தனிப்பட்ட விதத்தில் எல்லா கடசி வேட்பாளருக்கும் ஆதரவாக இதை .எனக்கு உடனடியாக தகவல் தெரிவித்து விட்டு பயன்படுத்திக் கொள்ளலாம் . வலைப்பூவான http://susenthilkumaran.blogspot.com , பேஸ் புக் , எனது மின்னஞ்சலான su.senthilkumaran@gmail.com ஆகியவற்றிற்கு எழுதலாம்

நான் சொல்பவர்கள் ஜெயிக்கப் போகிற வேட்பாளர்களா எனறால்...... யாம் அறியோம் பராபரமே !

ஆனால் ஓட்டுப் போடும் அப்பாவி ஜனம் ஓரளவாவது நன்மைபெறவேண்டுமானால், இவர்களே ஜெயிக்க வைக்கப்பட வேண்டிய வேட்பாளர்கள் .

இதில் ......தொகுதிகளை வரிசைப் படுத்த மட்டும் ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பில் வெளிவந்த பாராளுமன்றத் தொகுதிவாரியான வரிசையைப் பயன்படுத்திக் கொண்டேன் . அதற்காக (மட்டும்) ஜு வி க்கு நன்றிகள் .

இனி .. இதோ உங்கள் தொகுதியில் நீங்கள் ஜெயிக்க வைக்க வேண்டிய வேட்பாளர் .

பாராளுமன்றத் தொகுதி
******************************
******
ச. ம . தொகுதி ---- - ஜெயிக்க வேண்டிய வேட்பாளார்

திருவள்ளூர் பா ம தொகுதி
*****************************************
1 . பொன்னேரி -----------------------------------பொன்ராஜா(அதிமுக )

2 . திருவள்ளூர்---------------------------------------------- பிவி ரமணா (அதிமுக)

3 பூந்தமல்லி ------------------------------------------ ----------- மணிமாறன் (அதிமுக)


4 ஆவடி ----------------------------------------------- -------- அப்துல் ரஹீம் (அதிமுக)


5 .மாதவரம்---- --------------------------------------------------------மூர்த்தி (அதிமுக)


6 .கும்மிடிப்பூண்டி ------------------------------------------------- ---- 49 ஒ

வடசென்னை

********************

7 திருவொற்றியூர் ------------------------------------------------------- குப்பன்(அதிமுக)8 டாக்டர்ராதாகிருஷ்ணன் நகர் -----------------------வெற்றிவேல் (அதிமுக)

9 .பெரம்பூர் ------- ---------------------------------------------------சவுந்திரராஜன் (சிபிஎம்)

10 கொளத்தூர்

----------------------------------- முக ஸ்டாலின் (திமுக (அல்லது) . சைதை துரைசாமி (அதிமுக)

(இருவருமே தகுதியானவர்கள்தான் )11 திருவிக நகர் --------------------------------------- நீலகண்டன் (அதிமுக)12 .ராயபுரம்------------------------------------------------------ -ஜெயக்குமார் (அதிமுக)தென்சென்னை

******************


13 .விருகம்பாக்கம்-------------------------------------------------------------- 49 ஓ14சைதாப்பேட்டை- ------------------------ செந்தமிழன்(அதிமுக)


15 தி . நகர் -------------------------------------------------------------கலைராஜன் (அதிமுக)

16 .மைலாப்பூர் -----------------------------------------------------அசோக் (மக்கள் சக்தி )


17 .வேளச்சேரி------------------------------------ தமிழிசை சவுந்திரராஜன் (பாஜக )18 .சோழிங்க நல்லூர்-----------------------------------------------------கந்தன் (அதிமுக)

மத்திய சென்னை

******************


19 .வில்லிவாக்கம் --------------------------------------------------அன்பழகன் (திமுக)20 எழும்பூர்----------------------------------------------------பரிதிஇளம்வழுதி(திமுக)-


21துறைமுகம்------------------------------------------------பழகருப்பையா(அதிமுக)


22 சேப்பாக்கம் -----------------தமிமுன்அன்சாரி (மனிதநேய மக்கள் கடசி )


23 ஆயிரம் விளக்கு------------------------------------------------------------------- 49 ஓ


24அண்ணாநகர்------------------------------------------ கோகுல இந்திரா (அதிமுக)


ஸ்ரீ பெரும்புதூர்

*****************

25 .மதுரவாயல்--------------------------------------------------------------செல்வம் (பாமக)

26 .அம்பத்தூர்-------------------------------------------------------------ரங்கநாதன் (திமுக)

27ஆலந்தூர்----------------------------------------பண்ருட்டி ராமசந்திரன் (தேமுதிக)


28 . ஸ்ரீபெரும்புதூர் ----------------------------------------- பெருமாள் (அதிமுக )29 பல்லாவரம-------------------------------------------------------------- தனசிங் (அதிமுக)

30 தாம்பரம்----------------------------------------------------- எஸ் ஆர் ராஜா (திமுக)

காஞ்சீபுரம்

*****************


31 .செங்கல்பட்டு -----------------------------------------------------------ரங்கசாமி (பாமக )

32 திருப்போரூர்---------------------------------------------------கே.மனோகர்(அதிமுக)

33 செய்யூர் ----------------------------------------------------------வி எஸ் ராஜி (அதிமுக)


34 .மதுராந்தகம் ------------------------------------------------கணிதா சம்பத் (அதிமுக)35உத்திர மேரூர்-----------------------------------------------------கணேசன்(அதிமுக)36 .காஞ்சீபுரம்-----------------------------------------------------சோமசுந்தரம்(அதிமுக)அரக்கோணம்

*********************

37 .திருத்தணி ------------------------------------அருண் சுப்பிரமணியம்(தேமுதிக)

38 . அரக்கோணம் -------------------------------------------------ரவி (அதிமுக)

39 .சோளிங்கர்----------------------------------பி ஆர் மனோகர் (தேமுதிக)

40 காட்பாடி ----------------- அப்பு ராதா கிருஷ்ணன் (அதிமுக)

41 ராணிபேட்டை ---------------------------------------------ஜான் (அதிமுக)

42 .ஆற்காடு ----------------------------------------------------சீனிவாசன் (அதிமுக)


வேலூர்
************

43 . வேலூர்-------------------------------------------------------------விஜய் (அதிமுக)

44 அணைக்கட்டு ----கலையரசு (பா ம க )--------- கலையரசு (பாமக )


45 .கே வி குப்பம் -----------செ கு தமிழரசன் (இந்தியா குடியரசு கடசி)

46 .குடியாத்தம்-----------------லிங்கமுத்து (இந்திய கம்யூனிஸ்டு கடசி)

47 .ஆம்பூர்------அஸ்லம் பாட்ஷா (மனித நேய மக்கள் கடசி)


48 . வாணியம்பாடி ----------------------------------சம்பத் குமார் (அதிமுக)


கிருஷ்ணகிரி
*******************
49 ஊத்தங்கரை--------------------------------------மனோரஞ்சிதம் (அதிமுக)


50 பர்கூர் -------------------------------------- கிருஷ்ணமூர்த்தி (அதிமுக)


51 கிருஷ்ணகிரி ----------------------------------------கேபி.முனுசாமி(அதிமுக)
52 வேப்பனஹள்ளி-----------------------------------------------------49 ஓ


53 .ஓசூர்--------------------------------------------------------------------------சத்யா (சுயேச்சை)54 ..தளி ----------------------------------------------------டி.ராமசந்திரன் (இ கம்யூ )


தருமபுரி
************
55 பாலக்கோடு ---------------------------------------------------------அன்பழகன் (அதிமுக)


56 .பென்னாகரம்---------------------------------------------------- நஞ்சப்பன் (இ கம்யூ )


57 . தருமபுரி -------------------------------------------------------------சாந்தமூர்த்தி (பாமக)


58 .பாப்பிரெட்டி பட்டி ---------------------------- முல்லைவேந்தன் (திமுக)


59 .அரூர் --------------------------------டில்லி பாபு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் )

60 . மேட்டூர் ---------------------------------------------------------பார்த்திபன்(தேமுதிக)


திருவண்ணாமலை
*********************************
61 ஜோலார் பேட்டை ------வீரமணி(அதிமுக)

62 .திருப்பத்தூர் ---------------ரமேஷ் (அதிமுக)

63 .செங்கம் --------------------------49 ஓ

64 திருவண்ணாமலை ---------------ராமசந்திரன் (அதிமுக)

65கீழபெண்ணாத்தூர்அரங்கநாதன்(அதிமுக )

66 கலசபாக்கம் ----அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக)

ஆரணி
***********
67 போளூர் -----ஜெயசுதா (அதிமுக)

68 .ஆரணி -----சிவானந்தம் (தி முக )

69 . செய்யாறு ---முக்கூர் சுப்பிரமணி (அதிமுக)

70 .வந்தவாசி ----குணசீலன் (அதிமுக)

71 . செஞ்சி ----கணேஷ்குமார் (பா ம க )

72 மைலம் ---கே பி நாகராஜ் (அதிமுக).


விழுப்புரம்
****************
73 . திண்டிவனம் ---ஹரிதாஸ் (அதிமுக )

74 . வானூர் -- ஜானகி ராமன் (அதிமுக)

75 . விழுப்புரம் --- சி வி சண்முகம் (அதிமுக)

76 .விக்கிரவாண்டி -- ராம மூர்த்தி (மா கம்யூ)

77 . திருக் கோவிலூர்-- ---- தங்கம் (திமுக)

78 . உளுந்தூர்பேட்டை -- குமரகுரு (அதிமுக)

கள்ளக் குறிச்சி
**********************
79 .ரிஷிவந்தியம் ------------49 ஓ

80 . சங்கராபுரம் ---ப .மோகன் (அதிமுக)

81 .கள்ளக்குறிச்சி -அழகுவேல் பாபு (அதிமுக)

82 .கெங்கவல்லி--சிவகாமி (மக்கள் சக்தி )

83 .ஆத்தூர் --- மாதேஸ்வரன் (அதிமுக)

84 ஏற்காடு ----பெருமாள் (அதிமுக)

சேலம்
**********

85 . ஓமலூர் -- பல்பாக்கி கிருஷ்ணன் (அதிமுக)

86 எடப்பாடி--- எடப்பாடி பழனிசாமி (அதிமுக)

87 சேலம் மேற்கு --- ராஜேந்திரன் (திமுக)

88 .சேலம் வடக்கு -- மோகன்ராஜ் (தேமுதிக)

89 . சேலம் தெற்கு ----செல்வராஜ் (அதிமுக)

90 . வீரபாண்டி ----எஸ் கே செல்வம் (அதிமுக)

நாமக்கல்
***************
91 .சங்ககிரி ----விஜயலட்சுமி பழனிச்சாமி (அதிமுக)

92 .ராசிபுரம் ---விபி துரைசாமி (திமுக)

93 . சேந்தமங்கலம் ---பொன்னுசாமி (திமுக)

94 .நாமக்கல் -- பாஸ்கர் (அதிமுக)

95 பரமத்தி வேலூர் --- தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை)

96 .திருச்செங்கோடு ----49 ஓ

ஈரோடு
***********
97 .குமாரபாளையம் ----தங்கமணி (அதிமுக)

98 .ஈரோடு கிழக்கு ----முத்துசாமி (திமுக)

99 .ஈரோடு மேற்கு -- கே வி ராமலிங்கம் (அதிமுக)

100 . மொடக் குறிச்சி ---- கிட்டுசாமி (அதிமுக)

101 . தாராபுரம் --- ஜெயந்தி (திமுக)

102 . காங்கேயம் ---- பொன்னுசாமி (பாஜக)

திருப்பூர்
*************
103 .பெருந்துறை ---------தோப்பு வெங்கடாசலம் (அதிமுக)

104 . பவானி ----------மகேந்திரன் (பாமக )

105 . அந்தியூர் -------ரமணீதரன் (அதிமுக)

106 கோபிசெட்டிபாளையம் ----செங்கோட்டையன் (அதிமுக)

107 . திருப்பூர் வடக்கு ----ஆனந்தன் (அதிமுக)

108 .திருப்பூர் தெற்கு ----தங்கவேல் (மா கம்யூ)


நீலகிரி
***********
109 .பவானிசாகர் --சுந்தரம் (இ கம்யூ)

110 .ஊட்டி ----புத்தி சந்திரன் (அதிமுக)

111 .கூடலூர் ----செல்வராஜ் (தேமுதிக)

112 . குன்னூர் ----- பெள்ளி(இ கம்யூ )

113 மேட்டுப் பாளையம் -- அருண்குமார் (திமுக)

114 .அவினாசி ---- கருப்பு சாமி (அதிமுக)

கோயம்புத்தூர்
*********************

115 .பல்லடம் -----------பரமசிவம் (அதிமுக)

116 .சூலூர் ----ஈஸ்வரன் (கொங்கு முன்னேற்றக் கழகம்)

117 .கவுண்டம்பாளையம் ---ஆறுக் குட்டி (அதிமுக)

118 . கோவை வடக்கு ----வீரகோபால் (திமுக)

119 கோவை தெற்கு ---பொங்கலூர் பழனிசாமி (திமுக)

120 . சிங்கா நல்லூர் -----49 ஓ

பொள்ளாச்சி
******************
121 தொண்டாமுத்தூர் ------------------ வேலுமணி (அதிமுக)

122 கிணத்துக் கடவு -------------------- பாலாஜி இளங்கோ (மக்கள் சக்தி)

123 .பொள்ளாச்சி ---------கருப்பசாமி (அதிமுக)

124 .வால்பாறை -----ஆறுமுகம் (இ கம்யூ )

125 .உடுமலைப் பேட்டை ---பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக)

126 .மடத்துக்குளம் --- சண்முகவேலு (அதிமுக)


திண்டுக்கல்
*******************
127 .பழனி ----------------வேணுகோபால் (அதிமுக)

128 ஓட்டப்பிடாரம் --- பாலசுப்ரமணி (அதிமுக)

129 . ஆத்தூர் -------- ஐ . பெரியசாமி (திமுக)

130 .நிலகோட்டை----- 49 ஓ

131 . நத்தம் -------- விஸ்வநாதன் (அதிமுக)

132 . திண்டுக்கல் ------பாலபாரதி (மா கம்யூ )

கரூர்
*******
133 .வேடசந்தூர் ---- பழனிசாமி (அதிமுக)

134 . அரவாக்குறிச்சி -----கே சி பழனிசாமி (திமுக)

135 .கரூர் --------------செந்தில் பாலாஜி (அதிமுக)
(கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி இந்திராவுக்கு . நான் தேவி வார இதழில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தபோது நீங்கள் இந்திரா என்ற புனைப் பெயரில் எழுதிய வீடு என்ற குறு நாவலை பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்தேன் . ஆனால் இப்போது மக்கள் தேர்ந்தெடுக்கும் தரத்தில் நீங்கள் இல்லை . காலக் கொடுமை !)

136 கிருஷ்ணராயபுரம் ------எஸ் காமராஜ் (அதிமுக)

137 .மணப்பாறை --------------சந்திரசேகர் (அதிமுக)

138 .விராலிமலை -------- ரகுபதி (திமுக)

திருச்சி
***********
139 .ஸ்ரீரங்கம் ----------ஜெ. ஜெயலலிதா (அதிமுக)

140 .திருச்சி மேற்கு ---மரிய பிச்சை (அதிமுக)

141 .திருச்சி கிழக்கு ------மனோகரன் (அதிமுக)

142 .திருவெறும்பூர் ----- 49 ஓ

143 .கந்தர்வகோட்டை -----சுப்பிரமணியன் (அதிமுக)

144 புதுக்கோட்டை --- முத்துக்குமரன் (சி பி ஐ )

பெரம்பலூர்
******************
145 .குளித்தலை ------- 49 ஓ

146 .லால்குடி -----பார்கவன் பச்சமுத்து (இந்திய ஜனநாயக கடசி)

147 மண்ணச்ச நல்லூர் -----செல்வராஜ் (திமுக)

148 .முசிறி -----------சிவபதி (அதிமுக)

149 .துறையூர் -----இந்திரா காந்தி (அதிமுக)

150 . பெரம்பலூர் ----இளம்பை தமிழ்ச்செல்வன் (அதிமுக)

கடலூர்
************
151 . திட்டக்குடி ---------சிந்தனைச் செல்வன் (விடுதலை சிறுத்தைகள்)

152 விருத்தாச்சலம் --------------------49 ஓ

153 .நெய்வேலி ----பண்ருட்டி வேல்முருகன் (பா ம க )

154 பண்ருட்டி ------.சபா ராஜேந்திரன் (திமுக)

155 .கடலூர் --------- எம் சி சம்பத் (அதிமுக)

156 .குறிஞ்சிப்பாடி -------எம் ஆர் கே பனீர் செல்வம் (திமுக)

சிதம்பரம்
***************
157 .குன்னம் ----- சிவ சங்கர் (திமுக)

158 .அரியலூர் -----------துரை மணிவேல் (அதிமுக)

159 .ஜெயங்கொண்டம் -----காடுவெட்டி குரு (பா ம க )

160 .புவனகிரி -----------செல்வி ராமஜெயம்(அதிமுக)

161 .சிதம்பரம் ----பாலகிருஷ்ணன் (மா கம்யூ)

162 . காட்டுமன்னார்குடி --- ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்)
(ரவிகுமார்.....! உங்களிடம் மக்கள் இன்ன்ன்னும் நிறைய்ய்ய்யய்ய்ய்ய எதிர்பார்க்கிறார்கள்கலைஞருக்கு சப்பை கட்டு கட்ட பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக கட்டுரை எழுதினால் மட்டும் போதாது . கவனம் )

மயிலாடுதுறை
***********************
163 . சீர்காழி ---------------------------சக்தி (அதிமுக)

164 .மயிலாடுதுறை -------------49 ஓ

165 பூம்புகார் -----பவுனுராஜ் (அதிமுக)

166 .திருவிடைமருதூர் --- பாண்டியராஜன் (அதிமுக)

167 . கும்பகோணம் -------------- 49 ஓ

168 பாபநாசம் ---------------------49 ஓ .

நாகபட்டினம்
********************
169 . நாகபட்டினம் ---------- ஜெயபால் (அதிமுக)

170 .கீழ் வேளூர்----- நாகை மாலி (மா கம்யூ )

171 . வேதாரண்யம் -------காமராஜ் (அதிமுக)

172 . திருத்துறைப் பூண்டி ------உலகநாதன் (இ கம்யூ)

173 .திருவாரூர் ------ மு. கருணாநிதி (திமுக)

174 .நன்னிலம் --- காமராஜ் (அதிமுக)

தஞ்சை
***********
175 மன்னார்குடி ------------------------------ 49 ஓ

176 .திருவையாறு ------------ரத்னசாமி (அதிமுக)

177 தஞ்சாவூர் ------------ரங்கசாமி (அதிமுக)

178 ஒரத்தநாடு -----------------------------49 ஓ

179 பட்டுக் கோட்டை ---- யோகநாதன் (சுயேச்சை)

180 பேராவூரணி ------ --------------- 49 ஓ

சிவகங்கை
****************
181 . திருமயம் ----------------வைரமுத்து (அதிமுக)

182 .ஆலங்குடி -----------ராஜபாண்டியன் (சுயேச்சை)

183 .காரைக்குடி -----------------------------------49 ஓ

184 .திருப்பத்தூர் -------------------49 ஓ

185 .சிவகங்கை --------------------49 ஓ

186 . மானாமதுரை --------------49 ஓ

மதுரை
***********
187 . மேலூர் -------------ஆர் . சாமி (அதிமுக)

188 . மதுரை கிழக்கு ----தமிழரசன் (அதிமுக)

189 .மதுரை வடக்கு ----- 49 ஓ

190 . மதுரை தெற்கு ---- அண்ணாதுரை (மா கம்யூ )

191 .மதுரை நடுவண் ---- கவுஸ் பாஷா (திமுக)

192 .மதுரை மேற்கு ----செல்லூர் ராஜு (அதிமுக)


தேனி
**********
193 சோழவந்தான் -----கருப்பையா (அதிமுக)

194 உசிலம்பட்டி ------கதிரவன் (பார்வார்டு பிளாக் )

195 .ஆண்டிப்பட்டி --------------------- 49 ஓ

196 .பெரியகுளம் ----லாசர் (மா கம்யூ )

197 . போடிநாயக்கனூர் ---- லட்சுமணன் (திமுக)

198 .கம்பம் -------------ராமகிருஷ்ணன் (திமுக)

விருதுநகர்
****************

199 .திருப்பரங்குன்றம் ------- ஏ கே டி ராஜா (தேமுதிக)

200 திருமங்கலம் ---------முத்துராமலிங்கம் (அதிமுக)

201 . சாத்தூர் --------கடற்கரை ராஜு (திமுக)

202 . சிவகாசி ----------ராஜேந்திர பாலாஜி (அதிமுக)

203 . விருதுநகர் -------மாபா பாண்டியராஜன் (மதிமுக )

204 . அருப்புக்கோட்டை -------வைகை செல்வன் (அதிமுக)


ராமநாதபுரம்
*********************
205 அறந்தாங்கி --------ராஜ நாயகம் (அதிமுக)

206 திருச்சுழி -----------.தங்கம் தென்னரசு (திமுக)

207 .பரமக்குடி ----சுந்தர்ராஜன் (அதிமுக)

208 . திருவாடானை ------ சிவமகாலிங்கம் (பாஜக)

209 .ராமநாதபுரம் ---- ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கடசி )

210 . முதுகுளத்தூர் ------முருகன் (அதிமுக)

தூத்துக்குடி
*****************
211 .விளாத்திகுளம் --------------49 ஓ

211 தூத்துக்குடி ---------------------செல்லப் பாண்டியன் (அதிமுக)

212 .திருச்செந்தூர் ---------------மனோகரன் (அதிமுக)

213 ஸ்ரீவைகுண்டம் ---------------- 49 ஓ

214 .ஓட்டப்பிடாரம் ---------------------49 ஓ

215 கோவில்பட்டி --------------------49 ஓ

தென்காசி
***************
217 ராஜபாளையம் -----------------கோபால் சாமி (அதிமுக)

218 .ஸ்ரீவில்லிபுத்தூர் ------------ 49 ஓ

219 .சங்கரன்கோவில்------49 ஓ

220 . வாசுதேவநல்லூர் ------துரையப்பா (அதிமுக)

221 . கடையநல்லூர் --------49 ஓ

222 தென்காசி ------------ 49 ஓ


திருநெல்வேலி
***********************

223 .ஆலங்குளம் -----------பி ஜி ராஜேந்திரன் (அதிமுக)

224 .திருநெல்வேலி --------ஏ எல் எஸ் லட்சுமணன் (திமுக)

225 அம்பாசமுத்திரம் -------சுப்பையா (அதிமுக)

226 .பாளையங்கோட்டை ------பழனி (மா கம்யூ)

227 . நாங்குநேரி -------------------மகா கண்ணன் (பாஜக)

228 .ராதாபுரம் ---------------49 ஓ


கன்னியாகுமரி
************************
229 .கன்யாகுமரி ----பசசைமால் (அதிமுக)

230 . நாகர்கோவில் ---------பொன் ராதா கிருஷ்ணன் (பாஜக)

231 .குளச்சல் -----------லாரன்ஸ் (அதிமுக)

232 .பத்மநாபபுரம் -------புஷ்பலீலா (திமுக)

233 . விளவங்கோடு --------லீமா ரோஸ் (மா கம்யூ )

234 .கிள்ளியூர் -------------------ஜார்ஜ் (அதிமுக )

---------------------------------------------------------------------------------------- நிறைவு


அவசியமான பின் குறிப்பு
***************************************
எங்கள் தொகுதியில் மூணாவது மூலையில் முக்கிய சந்தில் வசிக்கும் முனுசாமி சுயேச்சை ரொம்ப நல்லவர் . அவர்தான் வேட்பாளர்களிலேயே ரொம்ப நல்லவர் . அவருக்கு ஓட்டுப் போடச் சொல்லாமல் கடசி அரசியலுக்கு ஓட்டுப்[ போட சொல்வது என்ன நியாயம் என்று கேள்வி கேட்க காத்திருப்போரே .

ஒரு நிமிஷம் . நான் ரஜினிகாந்த் இல்லை . நான் வாய்ஸ் கொடுத்தால் எல்லோரும் ஓட்டு போட . கேவலம் நான் குஷ்பூ கூட இல்லை . எந்த கடசி ஆதரவாளனும் இல்லை . எந்த மெஜாரிட்டி சாதியை சார்ந்தவனும் இல்லை . அப்படியிருக்க நான் சொல்லி ஒரு நாலு ஓட்டு சுயேச்சைக்கு போவதால் என்ன பலன்?

எந்த ஓட்டும் வீணாகக் கூடாது அல்லவா?

அந்த அடிப்படையில்தான் நான் நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கிறேன் . முடியாத நிலையில் 49 ஓ வை சிபாரிசு செய்கிறேன்.

நீங்கள் தேர்ந்தெடுத்த எங்கள் தொகுதி வேட்பாளர் ரொம்ப யோக்கியமா ? என்று கேட்பவருக்கு ஒரு சின்ன கதை .
பல பிள்ளைகள் பெற்ற ஒரு தாயிடம் உங்கள் பிள்ளைகளிலேயே நல்ல பிள்ளை யார் என்று கேட்டபோது அவள் சொன்னாளாம் "அதோ! கூரை ஏறிக் கொள்ளி வைக்கிறானே . அவன்தான் உள்ளவர்களிலேயே நல்ல பிள்ளை "என்று.

மற்ற பிள்ளைகள் அதை விட மோசமாக இருக்கும்போது கூரை ஏறிக் கொள்ளி வைக்கும் பிள்ளைதானே நல்ல பிள்ளையாகிறான் .

ஒருவேளை நான் உங்களுக்கு சுட்டிக் காட்டும் பிள்ளை கூரை ஏறிக் கொள்ளி வைப்பவராகவும் இருக்கலாம் . என்ன செய்ய நீங்கள் 'பெற்ற ' மற்ற பிள்ளைகளை விட , நான் சொல்லும் இந்தப் பிள்ளை மேல் என்று தெரியவருகிறது .

-------------------------------------------- முற்றும்


#உங்கள்தொகுதியில் உங்கள்ஓட்டு யாருக்கு?பகுதி4
அன்பர்களுக்கு வணக்கம் .

உங்கள் தொகுதியில் நீங்கள் ஓட்டுப் போட வேண்டிய வேட்பாளர் யார் என்று தேர்ந்தெடுத்து உங்களுக்கு அளித்துள்ளேன் .

எந்தக் கடசி சார்பும் இல்லாமல் எந்த நிருபர் படையும் இல்லாமல் எந்த தனியார் நிறுவனத்தின் சேவையும் இல்லாமல் நான் மட்டும் ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்த பட்டியல் இது .

சுமார் இருபது வருட பத்திரிக்கையாளர் பணி ....... ஒரு உதவி இயக்குனராக தமிழகம் முழுதும் (ஓரளவு ) அலைந்து திரிந்த அனுபவம் ..... தனிப்பட்ட எந்த தலைவருக்கும் ஜால்ரா அடிக்காமல் , நான் ஒரு தூய தமிழன் என்ற காரணத்தால் ஓட்டு மொத்த தமிழகத்தையும் என் தாய் பூமியாக நேசிக்கும் உள்ளம் ....அதனால் பல்வேறு பகுதிகளின் வாழ்க்கை, கலாச்சார, பொருளாதாரச் சூழல்களையும் ஊன்றிப் படித்து மனிதில் பதிய வைத்த பாங்கு , மாநிலம் முழுக்க எனக்கு உள்ள நண்பர்கள் , சுமார் ஐநூறு தொலைபேசி அழைப்புகள் , இவற்றின் மூலம் நான் தீர விசாரித்து தீர்மானித்து கொடுக்கும் பட்டியல் இது .

வேட்பாளரின் நேர்மை . எளிமை , , அவரது கட்சியில் அவரது செல்வாக்கு , திறமை , முந்தைய செயல்பாடுகள் , அவரைப் பற்றிய பொதுவான மக்களின் எண்ணம் இவற்றின் அடிப்படையில் உங்கள் தொகுதியில் உங்கள் நன்மைக்காக நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைப் பொது மக்களுக்காக கூறுகிறேன் . இதை பின்பற்றினால் பொதுமக்களுக்கு நன்மை . சில தொகுதிகளுக்கு 49 ஒ வை பரிந்தரை செய்துள்ளேன் (வேறு வழி இல்லை)

மற்றபடி எந்தக் கட்சிக்கும் ஆதரவாக நான் இதை வெளியிடவில்லை . மற்ற தொகுதி ஆர்வலர்களின் புரிதளுகாகவே அடைப்புக் குறியில் கட்சியைக் குறிப்பிடுகிறேன் , எந்த சாதி சங்கத்துக்கும் ஆதரவாகவும் நான் இதை வெளியிடவில்லை (பிராமணர் முதற்கொண்டு தலித் வரை எந்த மெஜாரிட்டி சாதியையும் சேர்ந்தவன் இல்லை நான் i )

யாருடைய நேரடி அல்லது மறைமுக தூண்டுதல் காரணமாகவும் நான் இதை வெளியிடவில்லை . என் கையில் என் ஒரு ஓட்டு தவிர யார் ஓட்டும் இல்லை . ( என் மனைவியிடமே என் கருத்தை மட்டுமே கூறுவேன் . மற்றபடி இந்தக் கட்சிக்குதான் ஓட்டுப் போடவேண்டும் என்று கட்டளையிட மாட்டேன்)

ஆக , இது , யார் ஜெயிப்பார்கள் என்பததற்கான கருத்துக் கணிப்பு அல்ல ! அல்ல !! அல்ல!!!

யாருக்கு ஓட்டுப் போட்டால் மக்கள் ஓரளவாவது ஜெயிப்பார்கள் அல்லது ரொம்பவும் தோற்க மாட்டார்கள் என்பதற்கான கருத்தாக்கம் மட்டுமே இது .

வழக்கமாக எனது கட்டுரைகளைப் படித்து விட்டு கருத்து கூட இடாமல் அதாவது படித்த மாதிரியே காட்டிக் கொள்ளாமல் நான் சொல்வதை தங்கள் சிந்தனை போல வேறு இடங்களில் பயன்படுத்துவோரே ... சற்றே விலகி இரும் பிள்ளாய். (இந்தக் கருத்து என்னைப் பின்பற்றுவோரைக்---followers-- குறிக்காது )

மற்றபடி இந்தக் கருத்தாக்கத்தின் எந்தப் பகுதியையும் எந்தக் கடசிக்கும் ஆதரவாக பயன்படுத்தக் கூடாது . அதே தனிப்பட்ட விதத்தில் எல்லா கடசி வேட்பாளருக்கும் ஆதரவாக இதை .எனக்கு உடனடியாக தகவல் தெரிவித்து விட்டு பயன்படுத்திக் கொள்ளலாம் . வலைப்பூவான http://susenthilkumaran.blogspot.com , பேஸ் புக் , எனது மின்னஞ்சலான su.senthilkumaran@gmail.com ஆகியவற்றிற்கு எழுதலாம்

நான் சொல்பவர்கள் ஜெயிக்கப் போகிற வேட்பாளர்களா எனறால்...... யாம் அறியோம் பராபரமே !

ஆனால் ஓட்டுப் போடும் அப்பாவி ஜனம் ஓரளவாவது நன்மைபெறவேண்டுமானால், இவர்களே ஜெயிக்க வைக்கப்பட வேண்டிய வேட்பாளர்கள் .

இதில் ......தொகுதிகளை வரிசைப் படுத்த மட்டும் ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பில் வெளிவந்த பாராளுமன்றத் தொகுதிவாரியான வரிசையைப் பயன்படுத்திக் கொண்டேன் . அதற்காக (மட்டும்) ஜு வி க்கு நன்றிகள் .

இனி .. இதோ உங்கள் தொகுதியில் நீங்கள் ஜெயிக்க வைக்க வேண்டிய வேட்பாளர் .

பாராளுமன்றத் தொகுதி
******************************
******
ச. ம . தொகுதி ---- - ஜெயிக்க வேண்டிய வேட்பாளார்

சிவகங்கை
****************
181 . திருமயம் ----------------வைரமுத்து (அதிமுக)

182 .ஆலங்குடி -----------ராஜபாண்டியன் (சுயேச்சை)

183 .காரைக்குடி -----------------------------------49 ஓ

184 .திருப்பத்தூர் -------------------49 ஓ

185 .சிவகங்கை --------------------49 ஓ

186 . மானாமதுரை --------------49 ஓ

மதுரை
***********
187 . மேலூர் -------------ஆர் . சாமி (அதிமுக)

188 . மதுரை கிழக்கு ----தமிழரசன் (அதிமுக)

189 .மதுரை வடக்கு ----- 49 ஓ

190 . மதுரை தெற்கு ---- அண்ணாதுரை (மா கம்யூ )

191 .மதுரை நடுவண் ---- கவுஸ் பாஷா (திமுக)

192 .மதுரை மேற்கு ----செல்லூர் ராஜு (அதிமுக)


தேனி
**********
193 சோழவந்தான் -----கருப்பையா (அதிமுக)

194 உசிலம்பட்டி ------கதிரவன் (பார்வார்டு பிளாக் )

195 .ஆண்டிப்பட்டி --------------------- 49 ஓ

196 .பெரியகுளம் ----லாசர் (மா கம்யூ )

197 . போடிநாயக்கனூர் ---- லட்சுமணன் (திமுக)

198 .கம்பம் -------------ராமகிருஷ்ணன் (திமுக)

விருதுநகர்
****************

199 .திருப்பரங்குன்றம் ------- ஏ கே டி ராஜா (தேமுதிக)

200 திருமங்கலம் ---------முத்துராமலிங்கம் (அதிமுக)

201 . சாத்தூர் --------கடற்கரை ராஜு (திமுக)

202 . சிவகாசி ----------ராஜேந்திர பாலாஜி (அதிமுக)

203 . விருதுநகர் -------மாபா பாண்டியராஜன் (மதிமுக )

204 . அருப்புக்கோட்டை -------வைகை செல்வன் (அதிமுக)


ராமநாதபுரம்
*********************
205 அறந்தாங்கி --------ராஜ நாயகம் (அதிமுக)

206 திருச்சுழி -----------.தங்கம் தென்னரசு (திமுக)

207 .பரமக்குடி ----சுந்தர்ராஜன் (அதிமுக)

208 . திருவாடானை ------ சிவமகாலிங்கம் (பாஜக)

209 .ராமநாதபுரம் ---- ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கடசி )

210 . முதுகுளத்தூர் ------முருகன் (அதிமுக)

தூத்துக்குடி
*****************
211 .விளாத்திகுளம் --------------49 ஓ

211 தூத்துக்குடி ---------------------செல்லப் பாண்டியன் (அதிமுக)

212 .திருச்செந்தூர் ---------------மனோகரன் (அதிமுக)

213 ஸ்ரீவைகுண்டம் ---------------- 49 ஓ

214 .ஓட்டப்பிடாரம் ---------------------49 ஓ

215 கோவில்பட்டி --------------------49 ஓ

தென்காசி
***************
217 ராஜபாளையம் -----------------கோபால் சாமி (அதிமுக)

218 .ஸ்ரீவில்லிபுத்தூர் ------------ 49 ஓ

219 .சங்கரன்கோவில்------49 ஓ

220 . வாசுதேவநல்லூர் ------துரையப்பா (அதிமுக)

221 . கடையநல்லூர் --------49 ஓ

222 தென்காசி ------------ 49 ஓ


திருநெல்வேலி
***********************

223 .ஆலங்குளம் -----------பி ஜி ராஜேந்திரன் (அதிமுக)

224 .திருநெல்வேலி --------ஏ எல் எஸ் லட்சுமணன் (திமுக)

225 அம்பாசமுத்திரம் -------சுப்பையா (அதிமுக)

226 .பாளையங்கோட்டை ------பழனி (மா கம்யூ)

227 . நாங்குநேரி -------------------மகா கண்ணன் (பாஜக)

228 .ராதாபுரம் ---------------49 ஓ


கன்னியாகுமரி
************************
229 .கன்யாகுமரி ----பசசைமால் (அதிமுக)

230 . நாகர்கோவில் ---------பொன் ராதா கிருஷ்ணன் (பாஜக)

231 .குளச்சல் -----------லாரன்ஸ் (அதிமுக)

232 .பத்மநாபபுரம் -------புஷ்பலீலா (திமுக)

233 . விளவங்கோடு --------லீமா ரோஸ் (மா கம்யூ )

234 .கிள்ளியூர் -------------------ஜார்ஜ் (அதிமுக )

---------------------------------------------------------------------------------------- நிறைவு

அவசியமான பின் குறிப்பு
***************************************
எங்கள் தொகுதியில் மூணாவது மூலையில் முக்கிய சந்தில் வசிக்கும் முனுசாமி சுயேச்சை ரொம்ப நல்லவர் . அவர்தான் வேட்பாளர்களிலேயே ரொம்ப நல்லவர் . அவருக்கு ஓட்டுப் போடச் சொல்லாமல் கடசி அரசியலுக்கு ஓட்டுப்[ போட சொல்வது என்ன நியாயம் என்று கேள்வி கேட்க காத்திருப்போரே .

ஒரு நிமிஷம் . நான் ரஜினிகாந்த் இல்லை . நான் வாய்ஸ் கொடுத்தால் எல்லோரும் ஓட்டு போட . கேவலம் நான் குஷ்பூ கூட இல்லை . எந்த கடசி ஆதரவாளனும் இல்லை . எந்த மெஜாரிட்டி சாதியை சார்ந்தவனும் இல்லை . அப்படியிருக்க நான் சொல்லி ஒரு நாலு ஓட்டு சுயேச்சைக்கு போவதால் என்ன பலன்?

எந்த ஓட்டும் வீணாகக் கூடாது அல்லவா?

அந்த அடிப்படையில்தான் நான் நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கிறேன் . முடியாத நிலையில் 49 ஓ வை சிபாரிசு செய்கிறேன்.

நீங்கள் தேர்ந்தெடுத்த எங்கள் தொகுதி வேட்பாளர் ரொம்ப யோக்கியமா ? என்று கேட்பவருக்கு ஒரு சின்ன கதை .

பல பிள்ளைகள் பெற்ற ஒரு தாயிடம் உங்கள் பிள்ளைகளிலேயே நல்ல பிள்ளை யார் என்று கேட்டபோது அவள் சொன்னாளாம் "அதோ! கூரை ஏறிக் கொள்ளி வைக்கிறானே . அவன்தான் உள்ளவர்களிலேயே நல்ல பிள்ளை "என்று.

மற்ற பிள்ளைகள் அதை விட மோசமாக இருக்கும்போது கூரை ஏறிக் கொள்ளி வைக்கும் பிள்ளைதானே நல்ல பிள்ளையாகிறான் .

ஒருவேளை நான் உங்களுக்கு சுட்டிக் காட்டும் பிள்ளை கூரை ஏறிக் கொள்ளி வைப்பவராகவும் இருக்கலாம் . என்ன செய்ய நீங்கள் 'பெற்ற ' மற்ற பிள்ளைகளை விட , நான் சொல்லும் இந்தப் பிள்ளை மேல் என்று தெரியவருகிறது .

-------------------------------------------------------------------------------------------------------------------------------முற்றும்