ஐ பி எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது . மகிழ்ச்சி . ஆனால் ஐ பி எல் போட்டி விதிகளை மட்டுமல்ல உலகக் கோப்பை உட்பட இரண்டு அணிகளுக்கு மேல் மோதும் எல்லா ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளிலும் இன்னும் கூர்மையாக விதிகளை திருத்த வேண்டும் என்பதையே இந்த ஐபி எல் போட்டி நடத்தப் பட்ட விதம் காட்டுகிறது.
பொதுவாக ஒரு நாள் போட்டிகளில் லீக் ஆட்டங்களில் பெற்ற வெற்றிகள் ரன்களின் அடிப்படையில் பெற்ற புள்ளிகள் இவற்றின் அடிப்படையில் முதல் வரிசைப் பட்டியல் தேர்ந்தேடுக்கப் படும் . இந்த ஐ பி எல் போட்டியிலும் அதே போல ஒன்றரை மாதமாக எல்லா அணிகளும் மீண்டும் மீண்டும் தங்களுக்குள் முட்டி மோதிக் கொண்டதன் அடிப்படையில் முதல் நான்கு இடங்களில் முறையே பெங்களூர் அணி . சென்னை அணி மும்பை அணி கல்கத்தா அணிகள் வந்தன .
முன்பெல்லாம் உலகக் கோப்பை போட்டிகளில் இப்படி நான்கு அணிகள் வரை வடிகட்டப் பட்டதும் முதலிடம் பெற்ற அணியும் நான்காவது இடம் பெற்ற அணியும் ஒரு அரை இறுதியில் மோத இரண்டாவது மூன்றாவது இடம் பெற்ற அணிகள் இன்னொரு அரை இறுதியில் மோதி வென்ற அணிகள் இறுதிப் போட்டிக்கு வரும் . இதில்தான் ஒரு அநியாயம் நடக்கும் சூழல் வந்தது.
பல்வேறு போட்டிகளில் வென்று முதலிடம் பெற்ற அணி ஒரு ஆட்டத்தில் கொஞ்சம் தவறினால் கூட நாலாவது இடம் பெற்ற அணியிடம் தோற்று ஆட்டத்தில் இருந்தே வெளியேற வேண்டிய நிலை . பல ஆட்டங்களில் கொஞ்சம் சுமாராகவே விளையாடி நாலாவது இடம் பெற்ற அணி ஒரு ஆட்டத்தில் நன்றாக விளையாடிய காரணத்தால் , இதற்கு முன்பு பல ஆட்டங்களில் நன்றாக விளையாடிய அணியை வெளியேற்றும் விந்தை நடந்தது . அதே போலத்தான் (வித்தியாசம் குறைவு என்றாலும் )இரண்டாவது மூன்றாவது இடத்தில் வந்த அணிகளுக்கு இடையே நடக்கும் ஆட்டங்களிலும் இதே விந்தை .
இதை மாற்ற செய்யப்பட புதிய ஏற்பாட்டின் படிதான் நடந்து முடிந்த ஐ பி எல் போட்டிகளில் ப்ளேஆப் மற்றும் அரை இறுதிப் போட்டிக நடந்தன .
அதன்படி ....முதலாவது இடம் பெற்ற அணியும் இரண்டாவது இடம் பெற்ற அணியும் மோதிய ஆட்டத்தில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது . ஆனால் அதில் தோற்கும் அணி (முந்தைய வழக்கம் போல) வெளியேற்றப் படவில்லை . மாறாக அரை இறுதிக்கு இருத்தி வைக்கப் பட்டது .
அதே போல மூன்றாவது நான்காவது இடங்களில் இருந்த அணிகள் ஆடிய ப்ளே ஆப் ஆட்டத்தில் தோற்ற அணி வெளியேற வேண்டும் என்றும் வென்ற அணி முன்பு இருத்தி வைக்கப் பட்ட அணியோடு விளையாட வேண்டும் என்றும் முடிவு செய்யப் பட்டது .
புரியாதவர்களுக்கு இந்த பத்தியில் புரிந்து விடும் ....ப்ளே ஆப் ஆட்டத்துக்கு முன்னால் புள்ளிகள் அடிப்படையில் வந்த தர வரிசைப் பட்டியல் படி பெங்களூர் அணி முதல் இடம் . சென்னை அணி இரண்டாவது இடம் மும்பை அணி மூன்றாவது இடம் , கல்கத்தா அணி நான்காவது இடம் என்று வந்தது அல்லவா?
பெங்களூர் அணியும் சென்னை அணியும் மோதிய ஆட்டத்தில் சென்னை வென்றது . ப்ளே ஆப் பெற்றது .(ஆனால் தர வரிசைப் படி சென்னை இரண்டாவது இடத்தில்தான் இருந்தது )மும்பை கல்கத்தா அணி ஆடிய ஆட்டத்தில் (நல்ல வேளையாக ) நான்காவது இடம் பெற்ற கல்கத்தா அணியே தோற்று வெளியேறியது .
பிறகு மூன்றாவது இடம் பெற்ற மும்பை அணியும்... முதல் இடம் பெற்று இருந்தும் ப்ளே ஆப் ஆட்டத்தில் தோற்ற பெங்களூர் அணியும் விளையாடி, அதில் பெங்களூர் அணியே வென்றது .
இறுதிப் போட்டியில் பெங்களூர் சென்னை அணிகள் விளையாட அதில் நமது சென்னை அணி வென்று நம்ம சந்தோஷப் படுத்தியது .
இப்போது புரிகிறதா ? இங்கே என் கேள்வி என்னவென்றால் மூன்றாவது இடம் பெற்ற மும்பை அணியும் நான்காவது இடம் பெற்ற கல்கத்தா அணியும் ஆடிய ஆட்டத்தில் மும்பை அணி தோற்று இருந்தால் .. நான்காவது இட பெற்ற கல்கத்தா அணி அடுத்த கட்டத்துக்கு முன்னேறி இருக்கும் . மூன்றாவது இடம் பெற்ற மும்பை அணி வெளியேறி இருக்கும் . அப்போது தரவரிசையில் மூன்றாவது இடத்தில் மும்பை அணி கல்கத்தா அணியை விட ஒருபடி மேலே இருந்ததற்கு என்ன பலன்?
அப்படித்தானே சென்னை அணியும் பெங்களூர் அணியும் விளையாடிய ப்ளே ஆப் ஆட்டத்தில் நடந்தது ? முதல் இடம் பெற்ற பெங்களூர் அணியை ப்ளே ஆப் ஆட்டம் என்ற ஒரு ஆட்டத்தில் வீழ்த்தியதன் மூலமே சென்னை அணி ப்ளே ஆப் தகுதி பெற்றது . அப்படியானால் அதுவரை பெங்களூர் அணி முதல் இடம் பெற்று இருந்ததற்கு என்ன பலன்? ஒன்றும் இல்லையே .
ஆக இது எப்படி முறையான தகுதி ஆகும் ?
"அதற்கு என்ன செய்வது ? தர வரிசை என்பது தனிப்பட்ட அணி பெறுவது . ஆனால் இரண்டு அணிகள் சேர்ந்துதானே ஆட முடியும்?" என்று நீங்கள் கொந்தளிப்பது காதில் கேட்கிறது . அப்படியானால் முன்பு இருந்தது போல முதலிடம் பெற்ற அணியும் நான்காவது இடம் பெற்ற அணியும் ஒரு அரை இறுதியில் மோத இரண்டாவது மூன்றாவது இடம் பெற்ற அணிகள் இன்னொரு அரை இறுதியில் மோதி வென்ற அணிகள் இறுதிப் போட்டிக்கு வரும் பழக்கத்தையே பயன்படுத்தலாமே .
அது முறையல்ல என்பதால்தானே ...முதலாவது இடம் பெற்ற அணியும் இரண்டாவது இடம் பெற்ற அணியும் மோதிய ஆட்டத்தில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது . ....ஆனால் அதில் தோற்கும் அணி (முந்தைய வழக்கம் போல) வெளியேற்றப் படவில்லை . மாறாக அரை இறுதிக்கு இருத்தி வைக்கப் பட்டது..... .
அதே போல மூன்றாவது நான்காவது இடங்களில் இருந்த அணிகள் ஆடிய ப்ளே ஆப் ஆட்டத்தில் தோற்ற அணி வெளியேற வேண்டும் என்றும் வென்ற அணி முன்பு இருத்தி வைக்கப் பட்ட அணியோடு விளையாட வேண்டும் என்றும் முடிவு செய்யப் படுகிறது . .
ஆக நியாயம் வழங்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அது முழுமையாக இருக்க வேண்டும் அல்லவா?
என்ன செய்யலாம் ?
நான் ஒரு திட்டம் சொல்லவா? இதை கிரிக்கெட் உலக மேதைகள் ஏற்பார்களா? இப்போது தர வரிசைப் படி முதல் நான்கு அணிகளை அப்படியே எடுப்போம் . 1 )பெங்களூர் ராயல் சேலஞ்ச் அணி 2 )சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ) மும்பை இந்தியன்ஸ் அணி 4 )கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி
முதல் ப்ளே ஆப் ஆட்டம் பெங்களூர் அணி க்கும் சென்னை அணிக்கும் நடந்தது அல்லவா? அதன் வெற்றி இலக்கு நிர்ணயிக்கும் முன்பு ஒரு காரிய செய்ய வேண்டும் .
பெங்களூர் அணி எந்த லீக் ஆட்டத்தில்(எதிர் அணி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை) மொத்தத்தில் அதிக ரன் எடுத்தது ? தவிர சென்னையோடு ஆடிய எந்த ஆட்டத்தில் குறைவான ரன்கள் எடுத்தது ?இரண்டையும் கூட்டி இரண்டால் வகுக்க வேண்டும் . இது முதகுள் விடை (ரெண்டு ஒரே ஆட்டமாக கூட இருக்கலாம் தப்பில்லை ) அதே போல இரண்டாவது இடம் பெற்ற சென்னை அணி எந்த லீக் ஆட்டத்தில்(எதிர் அணி எதுவாக இருந்தாலும் ஓகே ) மிக குறைவான ரன் எடுத்தது பெங்களூர் அணியோடு ஆடிய எந்த ஆட்டத்தில் அதிக ரன் எடுத்தது ?(முதல் இடம் பெற்ற அணிக்கும் இரண்டாவது இடம் பெற்ற அணிக்கும் இடையே தேர்ந்தெடுக்கப் படும் ஆட்டங்களில் சின்ன வித்தியாசம் இருக்கிறது ... கவனியுங்கள் . முதல் இடத்துக்கும் இரண்டாவது இடத்துக்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா?)இரண்டையும் கூட்டி இரண்டால் வகுக்க வேண்டும் . இது இரண்டாவது விடை . (ஓராண்டு கணக்கீட்டிலுமே டை ஆட்டங்கள் சேர்ப்பு இல்லை . டாக் வொர்த் லீவிஸ் விதியில் முடிவு காணப்பட்ட ஆட்டங்கள் சேர்க்கக் கூடாது )
பெரிய விடையில் இருந்து சின்ன விடையை கழிக்க வரும் புது விடையை புள்ளிகள் அடிப்படையில் ரன்களாக மாற்றம் செய்ய வேண்டும் . அப்படி செய்யும்போதுஏழு ரன்கள் என்று ஒரு விடை வருகிறது என்று வைத்துக் கொள்வோம் . இப்போது பாருங்கள் .... ப்ளே ஆப் ஆட்டத்தில் சென்னையும் பெங்களூர் அணியும் மோதியது . தரவரிசைப் படி முதல் இடத்தில் உள்ள அணி பெங்களூர் அணி . எனவே டாஸ் போட்டு ஆட்டம் நடந்து பெங்களூர் அணி சேஸ் செய்கிறது எனறால் சென்னை அணி எடுத்திருக்கும் ரன்களை விட ஏழு ரன்கள் குறைவாக எடுத்தாலே பெங்களூர் அணி வென்றதாக பொருள் . அதே நேரம் சென்னை அணி சேஸ் செய்தால் பெங்களூர் அணியை விட ஏழு ரன்கள் கூட ஒரு ரன் ஆக எட்டு ரன் எடுத்தால்தான் வென்றதாகப் பொருள் . இப்படி முடிவுகளை அறிவிக்க வேண்டும் .
இது இறுதிப் போட்டி வரை போகவேண்டும் . இறுதிப் போட்டியில் மோதும் இரு அணிகளுக்கும் இப்படி கணக்கீடு செய்யவேண்டும்.
அப்படி செய்தால்தான் ஆரம்பம் முதலே ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு அணி வெல்வது அல்லது தோற்பதன் பலன் கடைசிவரை பயனாகும் . எல்லா ஆட்டத்திலும் ஒழுங்காக விளையாடுவார்கள் . எந்த ஆட்டமும் போர் அடிக்காமல் இருக்கும் . தேர்வு மிக அறிவுப் பூர்வமானது என்றும் பொருள் .
*அல்லற்பட்டாற்றாது அழுத கண்ணீர் ஒன்றே செல்வத்தை தோய்க்கும் படை . ----வள்ளுவத் தாத்தன் . செல்வத்தை மட்டுமல்ல .. அது சுயநலமான பாசத்தையும் தோய்க்கும்
* தி மு க .. புதிய விளக்கம் என்ன தெரியுமா....? திகார் முன்னேற்ற கழகம் !
* கவலைப் பட வேண்டாம் கலைஞரே .... உங்கள் 'ஆதரவுடன் ' உருவான முள்வேலிக் கம்பிகளை விட , திகார் ஜெயில் ஒன்றும் மோசமானதில்லை !
* யாரங்கே ! கலைஞர் கையில் ஒரு பேனாவும் கொஞ்சம் பேப்பரும் கொடுங்கள் .. மகளின் விடுதலைக்காக பிரதமருக்கும் சோனியாவுக்கும் நிறைய கடிதம் எழுத வேண்டியுள்ளது .
கொஞ்சம் தந்தி விண்ணப்பங்கள் கொடுங்கள் . மகளின் விசுதலையை வலியுறுத்தி ... மத்திய அரசுக்கு தந்தி அடிக்க வேண்டியுள்ளது .
* இப்போதுதான் தூறல் துவங்கியுள்ளது .. இனிமேல் பெருமழை .... அப்புறம்தான் நீங்கள் சொன்னது போல தூவானம் வரும் வரிசை சரிதானே ... ஐந்தமிழ் அறிஞரே
நானும் மக்களும் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் **********************************************************************************************
வணக்கம்
தமிழகத்தைச் சேர்ந்த 234 தொகுதிகளுக்கும் மக்கள் ஒட்டுப் போட வேண்டிய வேட்பாளர்கள் என்ற ஒரு பட்டியலை நான் தேர்தலுக்கு முன்பு கொடுத்திருந்ததை நீங்கள் அறிவீர்கள் .
"எந்தக் கடசி சார்பும் இல்லாமல் எந்த நிருபர் படையும் இல்லாமல் எந்த தனியார் நிறுவனத்தின் சேவையும் இல்லாமல் நான் மட்டும் ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்த பட்டியல் இது .
சுமார் இருபது வருட பத்திரிக்கையாளர் பணி ....... ஒரு உதவி இயக்குனராக தமிழகம் முழுதும் (ஓரளவு ) அலைந்து திரிந்த அனுபவம் ..... தனிப்பட்ட எந்த தலைவருக்கும் ஜால்ரா அடிக்காமல் , நான் ஒரு தூய தமிழன் என்ற காரணத்தால் ஓட்டு மொத்த தமிழகத்தையும் என் தாய் பூமியாக நேசிக்கும் உள்ளம் ....அதனால் பல்வேறு பகுதிகளின் வாழ்க்கை, கலாச்சார, பொருளாதாரச் சூழல்களையும் ஊன்றிப் படித்து மனிதில் பதிய வைத்த பாங்கு , மாநிலம் முழுக்க எனக்கு உள்ள நண்பர்கள் , சுமார் ஐநூறு தொலைபேசி அழைப்புகள் , இவற்றின் மூலம் நான் தீர விசாரித்து தீர்மானித்து கொடுக்கும் பட்டியல் இது .
வேட்பாளரின் நேர்மை . எளிமை , , அவரது கட்சியில் அவரது செல்வாக்கு , திறமை , முந்தைய செயல்பாடுகள் , அவரைப் பற்றிய பொதுவான மக்களின் எண்ணம் இவற்றின் அடிப்படையில் உங்கள் தொகுதியில் உங்கள் நன்மைக்காக நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைப் பொது மக்களுக்காக கூறுகிறேன் . இதை பின்பற்றினால் பொதுமக்களுக்கு நன்மை ."என்றும் முன்னுரையில் குறிப்பிட்டு இருந்தேன் .
"எந்தக் கட்சிக்கும் ஆதரவாக நான் இதை வெளியிடவில்லை . மற்ற தொகுதி ஆர்வலர்களின் புரிதளுகாகவே அடைப்புக் குறியில் கட்சியைக் குறிப்பிடுகிறேன் , எந்த சாதி சங்கத்துக்கும் ஆதரவாகவும் நான் இதை வெளியிடவில்லை (பிராமணர் முதற்கொண்டு தலித் வரை எந்த மெஜாரிட்டி சாதியையும் சேர்ந்தவன் இல்லை நான் i )
யாருடைய நேரடி அல்லது மறைமுக தூண்டுதல் காரணமாகவும் நான் இதை வெளியிடவில்லை . என் கையில் என் ஒரு ஓட்டு தவிர யார் ஓட்டும் இல்லை . ( என் மனைவியிடமே என் கருத்தை மட்டுமே கூறுவேன் . மற்றபடி இந்தக் கட்சிக்குதான் ஓட்டுப் போடவேண்டும் என்று கட்டளையிட மாட்டேன்)
ஆக , இது , யார் ஜெயிப்பார்கள் என்பததற்கான கருத்துக் கணிப்பு அல்ல ! அல்ல !! அல்ல!!!
யாருக்கு ஓட்டுப் போட்டால் மக்கள் ஓரளவாவது ஜெயிப்பார்கள் அல்லது ரொம்பவும் தோற்க மாட்டார்கள் என்பதற்கான கருத்தாக்கம் மட்டுமே இது ."என்றும் குறிப்பிட்டு இருந்தேன் .
இதோ தேர்தல் முடிவுகள் வந்து விட்டன . நான் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள் எத்தனை பேர் மக்கள் மனதிலும் இடம் பிடித்தது வெற்றி பெற்று உள்ளனர் . எத்தனை தொகுதிகளின் கணிப்பில் நான் (மக்களும் ) மண்ணைக் கவியது என்று தொகுதி வாரியாக பார்க்கலாம் வாருங்கள் (பட்டியலில் வரும் அவரே என்ற வார்த்தை எனது தெரிவும் மக்களின் முடிவும் ஒன்றாக உள்ளதைக் குறிக்கிறது )
பாராளுமன்றத் தொகுதி ******************************
ச. ம . தொகுதி ---- - ஜெயிக்க வேண்டிய வேட்பாளார்-- மக்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்
திருவள்ளூர் பா ம தொகுதி ***************************************** 1 . பொன்னேரி -----------------------------------பொன்ராஜா(அதிமுக )-----அவரே
131 . நத்தம் -------- விஸ்வநாதன் (அதிமுக)---- அவரே
132 . திண்டுக்கல் ------பாலபாரதி (மா கம்யூ )---- அவரே
கரூர் ******* 133 .வேடசந்தூர் ---- பழனிசாமி (அதிமுக)---- அவரே
134 . அரவாக்குறிச்சி -----கே சி பழனிசாமி (திமுக)---- அவரே
135 .கரூர் --------------செந்தில் பாலாஜி (அதிமுக)---- அவரே (கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி இந்திராவுக்கு . நான் தேவி வார இதழில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தபோது நீங்கள் இந்திரா என்ற புனைப் பெயரில் எழுதிய வீடு என்ற குறு நாவலை பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்தேன் . ஆனால் இப்போது மக்கள் தேர்ந்தெடுக்கும் தரத்தில் நீங்கள் இல்லை . காலக் கொடுமை !)
136 கிருஷ்ணராயபுரம் ------எஸ் காமராஜ் (அதிமுக)---- அவரே
137 .மணப்பாறை --------------சந்திரசேகர் (அதிமுக)---- அவரே
155 .கடலூர் --------- எம் சி சம்பத் (அதிமுக)---- அவரே
156 .குறிஞ்சிப்பாடி -------எம் ஆர் கே பனீர் செல்வம் (திமுக)--சொரத்தூர் ராஜேந்திரன் (அதிமுக)
சிதம்பரம் *************** 157 .குன்னம் ----- சிவ சங்கர் (திமுக)---- அவரே
158 .அரியலூர் -----------துரை மணிவேல் (அதிமுக)---- அவரே
159 .ஜெயங்கொண்டம் -----காடுவெட்டி குரு (பா ம க )---- அவரே
160 .புவனகிரி -----------செல்வி ராமஜெயம்(அதிமுக)---- அவரே
161 .சிதம்பரம் ----பாலகிருஷ்ணன் (மா கம்யூ)---- அவரே
162 . காட்டுமன்னார்குடி --- ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்)-- முருகுமாறன் ் (அதிமுக) (ரவிகுமார்.....! உங்களிடம் மக்கள் இன்ன்ன்னும் நிறைய்ய்ய்யய்ய்ய்ய எதிர்பார்க்கிறார்கள்கலைஞருக்கு சப்பை கட்டு கட்ட பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக கட்டுரை எழுதினால் மட்டும் போதாது . கவனம் )
மயிலாடுதுறை *********************** 163 . சீர்காழி ---------------------------சக்தி (அதிமுக)---- அவரே
164 .மயிலாடுதுறை -------------49 ஓ---பால அருட்செல்வம் (தே மு தி க)
232 .பத்மநாபபுரம் -------புஷ்பலீலா (திமுக)---- அவரே
233 . விளவங்கோடு --------லீமா ரோஸ் (மா கம்யூ )---- விஜயதாரணி (காங்)
234 .கிள்ளியூர் -------------------ஜார்ஜ் (அதிமுக )--- ஜான் ஜேக்கப் (காங்)
முடிஞ்சு போச்ச்ச்ச் !
காங்கிரசைக் கருவறுத்தாச்சு நேரு சீமான் உட்பட எல்லோரும் சந்தோஷப் பட்டாலும் ஐந்து தொகுதிகளில் தமிழகத்தில் காங்கிரஸ் வென்றதை என்னால் சீரணிக்க முடியவில்லை .
இதில் கிள்ளியூர் , விளவங்கோடு , குளச்சல் போன்ற தொகுதிகளில் மலையாளிகள் அதிகம் . அதே போல ஓசூரில் தெலுங்கர்கள் கன்னடர்கள் அதிகம் . தமிழினத்தை காங்கிரஸ் அழிப்பதற்காகவே இவர்கள் ஒட்டுப் போட்டு இருப்பார்கள் .(தன்மானத் தமிழர்கள் நினைப்பதை தமிழ்நாட்டில் முழுமையாக நிறைவேற்ற முடியாத நிலை தமிழ் நாட்டில் பெருகி வருவதற்கு இதுவே சாட்சி )
ஆனால் என் வேதனை என்னவென்றால் பட்டுக் கோட்டையில் காங்கிரஸ் ஜெயித்துள்ளதே .... என்ன கொடுமை ! கேட்டால் அது காங்கிரசின் பாரம்பரியத் தொகுதி என்று ஒரு பன்னாடைத் தனமான பதில் . என்ன புண்ணாக்கு பாரம்பரியம் ? முப்பது வருடம் நம் குடும்பப் பெண்களுக்கு ஒருவன் வளையல் விற்றவன் என்பதற்காக குளிக்கும்போது அவன் எட்டிப் பார்ப்பதை அனுமதிக்க முடியுமா?
அடச்சே !
34 நான்கு தொகுதிகளில் நான் 49 ஓ வை சிபாரிசு செய்தேன் . (திமுகவின் வெற்றியை விட அதிகம்) "49 ஓ வை தேர்தல் ஊழியர்களே புறக்கணித்தபோது அதை உங்கள் தோல்வியாக கருத முடியாது " என்று எனக்கு சப்பை கட்டு கட்டினார் ஒரு அன்பு நண்பர் .
ஆனால் நான் அதை ஏற்கவில்லை . ஏனெனில் அதையும் மீறி மக்கள் 49 ஓ வுக்கு வாக்களித்து உள்ளனரே ! ஆக அது என் சறுக்கல் (அல்லது மக்களின் சறுக்கல் )தான் . ஆக கூட்டிக் கழித்துப் பார்த்ததில் ..... 87 தொகுதிகளில் அடியேனின் தேர்வுக்கு மாறாக மக்கள் தங்கள் சட்ட மன்ற உறுப்பினரை தேர்ந்தெடுத்துள்ளனர் (வாழ்க வளர்க ! மக்களும் .....ஏன் அவர்களும் கூட )
147 தொகுதிகளில் மக்களின் தீர்ப்பும் எனது தெரிவும் ஒன்றாகவெ இருந்துள்ளது .
எனவே நானும் கூட அறுதிப் பெரும்பான்மையில் வென்றுள்ளேன் , அதிமுகவைப் போலவே .... என்று சொல்லலாம் தானே ?
மானமுள்ள தமிழன்.
மனசாட்சியுள்ள மனிதன்.
தலை சிறந்த ரசிகன்.
வெற்றிக்குப் போராடிக் கொண்டிருக்கிற(நாளைய)திரைப்பட இயக்குனன்.
வளர்ந்து வரும் நடிகன்.
ஓரளவு நல்ல பெயர் பெற்ற பத்திரிக்கையாளன்