
"அந்த வீட்டுக்குக்
குடி போக வேணாம் "
அம்மா சொன்னார்கள்.
"அஞ்சாறு மாசம் முன்னாடி
வயசுப் பொண்ணொருத்திய,
அந்த வீட்டுல
ரெண்டு ரவுடிப் ப்சங்க
கெடுத்துக்
கொலை பண்ணிட்டாங்களாம்.
குழந்தைங்க இருக்கற
நம்ம
குடும்பத்துக்கு
ஆகாது அந்த வீடு ...!"
அய்ய்ய்யோ அம்மா....
நூற்றுக்கணக்கான
குழந்தைகளைக் கொன்று
ஆயிரக்கணக்கான
கற்பழித்து
லட்சக்கணக்கான
கர்ப்பப்பைகளைச் சிதைத்து ...
கிளி நொச்சியைக்
கிரானிகா ஆக்கி
முல்லைத்தீவை
மூலதூவா ஆக்கி...
ஓர்
இனமே இருந்த
அடையாளத்தை அழித்து
கும்பல் கும்பலாகக்
குடியமர்த்தப் போகிறானே..
அவன் இனம் மட்டும்
எப்படித் தாயே
உருப்படும்?
9 comments:
//அவன் இனம் மட்டும்
எப்படித் தாயே
உருப்படும்//
உருப்படவே உருப்படாது
நன்றி நண்பரே. தள்ளாடாத உங்கள் உணர்வைப் பாரட்டுகிறேன். உடல் நலம் காத்து வாருங்கள்
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
அன்புள்ள செய்தி வளையம் குழுவினருக்கு.. நன்றி
இந்த வலைப்பதிவை நானும் இணைத்து விட்டேன். இனி எனது எழுத்துக்கள்
தானாக செய்தி வளையத்தில் பதிவாகும? இல்லை ஒவ்வொன்றையும் நான்
இணைக்க வேண்டுமா? விளக்கினால் மகிழ்வேன்
உருப்படாது நண்பரே...உருப்படாது..தெளிவான ...மனதை நெகிழ்விக்கும் அருமையான பதிவு...
என்னுடைய புதிய பதிப்பிற்கு வருகை தருக .. கருத்துக்களை விட்டுச் செல்க ...
நன்றி செம்மொழி. அவசியம் வருகிறேன்
நல்ல கவிதை வரிகள்! தோழர் செந்தில் குமரன்..தங்களது முதலாவது படம் சூடு சொரனை அற்ற ..குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் தமது மானம் முதற்கொண்டு அனைத்தையும் விற்கும் தமிழினத்தைசாடி அதற்கு விழிப்புண்ர்வு உண்டாக்கும் விதத்தில் இருக்கவேண்டும் என்பது எனது தனிபட்ட வேண்டுகோள்! உதாரண்ம்.. இயக்குநர் சீமானின் தம்பி.. எருமை மாட்டிற்கு சவால் விடும் நம்மின மாக்களை மாற்றி பற்ற வைத்தால் பற்றி கொள்ளும் கற்புரமாக மாற்ற வேண்டியது உம் போன்ற இயக்குநர்களின் கடமையும் ஆகிறது...
என்னுடைய ஆக்கங்கள்:http://siruthai.wordpress.com
நிச்சயம் செய்வேன் சிறுத்தை . அது என் கடமை. நன்றி
காட்டமான பதிவு! உண்மையும் கூட!
Post a Comment