
அம்மா...!
உன்
மரணச் செய்தி என்
மனசைத்
துளைத்த நொடி ....
கண்கள் ஊமையாயின.
காதுகள் குருடாயின.
வாய் செவிடானது.
பல்லிடுக்கில்
சிக்கிய நாக்குக்குப்
பைத்தியம் பிடித்தது.
என்னைப்
புறந்தள்ளிவிட்டுப்
புறப்பட்டுப் போனது
பூமிப் பந்து .
இருளைக் கிழித்த
ஒளியைப் பிளந்து
எழுந்து நடந்தது
இருள்.
தானாக
வானாக
நீ ஆக
சரிகின்ற
தூணாக
நானாக
ஆனேன் அம்மா!
* * * *
நண்பர்களே!
கடந்த டிசம்பர் 2ம் தேதி முதல் நான் அனாதையானேன்.
அன்று என் தாய் பாகயலட்சுமி மரணமடைந்து விட்டர்கள்