
அம்மா...!
உன்
மரணச் செய்தி என்
மனசைத்
துளைத்த நொடி ....
கண்கள் ஊமையாயின.
காதுகள் குருடாயின.
வாய் செவிடானது.
பல்லிடுக்கில்
சிக்கிய நாக்குக்குப்
பைத்தியம் பிடித்தது.
என்னைப்
புறந்தள்ளிவிட்டுப்
புறப்பட்டுப் போனது
பூமிப் பந்து .
இருளைக் கிழித்த
ஒளியைப் பிளந்து
எழுந்து நடந்தது
இருள்.
தானாக
வானாக
நீ ஆக
சரிகின்ற
தூணாக
நானாக
ஆனேன் அம்மா!
* * * *
நண்பர்களே!
கடந்த டிசம்பர் 2ம் தேதி முதல் நான் அனாதையானேன்.
அன்று என் தாய் பாகயலட்சுமி மரணமடைந்து விட்டர்கள்
6 comments:
வணக்கம் செந்தில்.. நீண்ட நாள் கழித்து ஏதோ பதிவென்று வந்தேன். மிகவும் வருந்துகிறேன். தாயின் பிரிவு ஈடு செய்ய முடியாதது.
இறைவன் அருளால் நீங்கள் உடலும் உள்ளமும் தேறி வர பிரார்த்திக்கிறேன்.
நன்றி
என்ற வார்த்தையை விட , உங்களுக்குச் சொல்ல் என்னிடம் எதுவுமில்லை நண்பரே
நண்பரே, ஆறுதலுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லையே நண்பா! என்ன ரொம்ப நாளாகவே தொடர்பில்லாமலேயே இருக்கிறோமே என்ற மன உருத்தலில் உள் நுழைந்து சொல்ல முடியாத அளவில் மனம் வேதனையில் ஆட்பட்டு விட்டது செந்தில்.இந்த ஒரு மாதமாக எவ்வளவு வேதனைப் பட்டிருப்பீர்கள் என என்னால் உணர முடிகிறது நண்பா! உங்கள் துக்கத்தில் நானும் பங்கெடுத்து கொள்கிறேன் நண்பரே![ நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு நண்பா]
நன்றி என்ற ஒற்றைச் சொல்லைத் தவிர , உங்களுக்குத் தருவதற்கு என்னிடம்
ஒன்றுமில்லை பரம்
Hi Senthil,
Extremely sorry about it and hope you will come up soon...
BTW, I have read all your posts recently and surprisingly your thoughts and emotions are similar to mine (particularaly in EZHAM issue).
Keep the good work, buddy...
Thanks,
Kumar
thank u very much for ur condolence and encouragemeny kumar
Post a Comment