Monday, April 11, 2011
# உங்கள்தொகுதியில் உங்கள்ஓட்டு யாருக்கு? பகுதி 3
அன்பர்களுக்கு வணக்கம் .
உங்கள் தொகுதியில் நீங்கள் ஓட்டுப் போட வேண்டிய வேட்பாளர் யார் என்று தேர்ந்தெடுத்து உங்களுக்கு அளித்துள்ளேன் .
எந்தக் கடசி சார்பும் இல்லாமல் எந்த நிருபர் படையும் இல்லாமல் எந்த தனியார் நிறுவனத்தின் சேவையும் இல்லாமல் நான் மட்டும் ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்த பட்டியல் இது .
சுமார் இருபது வருட பத்திரிக்கையாளர் பணி ....... ஒரு உதவி இயக்குனராக தமிழகம் முழுதும் (ஓரளவு ) அலைந்து திரிந்த அனுபவம் ..... தனிப்பட்ட எந்த தலைவருக்கும் ஜால்ரா அடிக்காமல் , நான் ஒரு தூய தமிழன் என்ற காரணத்தால் ஓட்டு மொத்த தமிழகத்தையும் என் தாய் பூமியாக நேசிக்கும் உள்ளம் ....அதனால் பல்வேறு பகுதிகளின் வாழ்க்கை, கலாச்சார, பொருளாதாரச் சூழல்களையும் ஊன்றிப் படித்து மனிதில் பதிய வைத்த பாங்கு , மாநிலம் முழுக்க எனக்கு உள்ள நண்பர்கள் , சுமார் ஐநூறு தொலைபேசி அழைப்புகள் , இவற்றின் மூலம் நான் தீர விசாரித்து தீர்மானித்து கொடுக்கும் பட்டியல் இது .
வேட்பாளரின் நேர்மை . எளிமை , , அவரது கட்சியில் அவரது செல்வாக்கு , திறமை , முந்தைய செயல்பாடுகள் , அவரைப் பற்றிய பொதுவான மக்களின் எண்ணம் இவற்றின் அடிப்படையில் உங்கள் தொகுதியில் உங்கள் நன்மைக்காக நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைப் பொது மக்களுக்காக கூறுகிறேன் . இதை பின்பற்றினால் பொதுமக்களுக்கு நன்மை . சில தொகுதிகளுக்கு 49 ஒ வை பரிந்தரை செய்துள்ளேன் (வேறு வழி இல்லை)
மற்றபடி எந்தக் கட்சிக்கும் ஆதரவாக நான் இதை வெளியிடவில்லை . மற்ற தொகுதி ஆர்வலர்களின் புரிதளுகாகவே அடைப்புக் குறியில் கட்சியைக் குறிப்பிடுகிறேன் , எந்த சாதி சங்கத்துக்கும் ஆதரவாகவும் நான் இதை வெளியிடவில்லை (பிராமணர் முதற்கொண்டு தலித் வரை எந்த மெஜாரிட்டி சாதியையும் சேர்ந்தவன் இல்லை நான் i )
யாருடைய நேரடி அல்லது மறைமுக தூண்டுதல் காரணமாகவும் நான் இதை வெளியிடவில்லை . என் கையில் என் ஒரு ஓட்டு தவிர யார் ஓட்டும் இல்லை . ( என் மனைவியிடமே என் கருத்தை மட்டுமே கூறுவேன் . மற்றபடி இந்தக் கட்சிக்குதான் ஓட்டுப் போடவேண்டும் என்று கட்டளையிட மாட்டேன்)
ஆக , இது , யார் ஜெயிப்பார்கள் என்பததற்கான கருத்துக் கணிப்பு அல்ல ! அல்ல !! அல்ல!!!
யாருக்கு ஓட்டுப் போட்டால் மக்கள் ஓரளவாவது ஜெயிப்பார்கள் அல்லது ரொம்பவும் தோற்க மாட்டார்கள் என்பதற்கான கருத்தாக்கம் மட்டுமே இது .
வழக்கமாக எனது கட்டுரைகளைப் படித்து விட்டு கருத்து கூட இடாமல் அதாவது படித்த மாதிரியே காட்டிக் கொள்ளாமல் நான் சொல்வதை தங்கள் சிந்தனை போல வேறு இடங்களில் பயன்படுத்துவோரே ... சற்றே விலகி இரும் பிள்ளாய். (இந்தக் கருத்து என்னைப் பின்பற்றுவோரைக்---followers-- குறிக்காது )
மற்றபடி இந்தக் கருத்தாக்கத்தின் எந்தப் பகுதியையும் எந்தக் கடசிக்கும் ஆதரவாக பயன்படுத்தக் கூடாது . அதே தனிப்பட்ட விதத்தில் எல்லா கடசி வேட்பாளருக்கும் ஆதரவாக இதை .எனக்கு உடனடியாக தகவல் தெரிவித்து விட்டு பயன்படுத்திக் கொள்ளலாம் . வலைப்பூவான http://susenthilkumaran.blogspot.com , பேஸ் புக் , எனது மின்னஞ்சலான su.senthilkumaran@gmail.com ஆகியவற்றிற்கு எழுதலாம்
நான் சொல்பவர்கள் ஜெயிக்கப் போகிற வேட்பாளர்களா எனறால்...... யாம் அறியோம் பராபரமே !
ஆனால் ஓட்டுப் போடும் அப்பாவி ஜனம் ஓரளவாவது நன்மைபெறவேண்டுமானால், இவர்களே ஜெயிக்க வைக்கப்பட வேண்டிய வேட்பாளர்கள் .
இதில் ......தொகுதிகளை வரிசைப் படுத்த மட்டும் ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பில் வெளிவந்த பாராளுமன்றத் தொகுதிவாரியான வரிசையைப் பயன்படுத்திக் கொண்டேன் . அதற்காக (மட்டும்) ஜு வி க்கு நன்றிகள் .
இனி .. இதோ உங்கள் தொகுதியில் நீங்கள் ஜெயிக்க வைக்க வேண்டிய வேட்பாளர் .
பாராளுமன்றத் தொகுதி
******************************
******
ச. ம . தொகுதி ---- - ஜெயிக்க வேண்டிய வேட்பாளார்
பொள்ளாச்சி
******************
121 தொண்டாமுத்தூர் ------------------ வேலுமணி (அதிமுக)
122 கிணத்துக் கடவு -------------------- பாலாஜி இளங்கோ (மக்கள் சக்தி)
123 .பொள்ளாச்சி ---------கருப்பசாமி (அதிமுக)
124 .வால்பாறை -----ஆறுமுகம் (இ கம்யூ )
125 .உடுமலைப் பேட்டை ---பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக)
126 .மடத்துக்குளம் --- சண்முகவேலு (அதிமுக)
திண்டுக்கல்
*******************
127 .பழனி ----------------வேணுகோபால் (அதிமுக)
128 ஓட்டப்பிடாரம் --- பாலசுப்ரமணி (அதிமுக)
129 . ஆத்தூர் -------- ஐ . பெரியசாமி (திமுக)
130 .நிலகோட்டை----- 49 ஓ
131 . நத்தம் -------- விஸ்வநாதன் (அதிமுக)
132 . திண்டுக்கல் ------பாலபாரதி (மா கம்யூ )
கரூர்
*******
133 .வேடசந்தூர் ---- பழனிசாமி (அதிமுக)
134 . அரவாக்குறிச்சி -----கே சி பழனிசாமி (திமுக)
135 .கரூர் --------------செந்தில் பாலாஜி (அதிமுக)
(கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி இந்திராவுக்கு . நான் தேவி வார இதழில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தபோது நீங்கள் இந்திரா என்ற புனைப் பெயரில் எழுதிய வீடு என்ற குறு நாவலை பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்தேன் . ஆனால் இப்போது மக்கள் தேர்ந்தெடுக்கும் தரத்தில் நீங்கள் இல்லை . காலக் கொடுமை !)
136 கிருஷ்ணராயபுரம் ------எஸ் காமராஜ் (அதிமுக)
137 .மணப்பாறை --------------சந்திரசேகர் (அதிமுக)
138 .விராலிமலை -------- ரகுபதி (திமுக)
திருச்சி
***********
139 .ஸ்ரீரங்கம் ----------ஜெ. ஜெயலலிதா (அதிமுக)
140 .திருச்சி மேற்கு ---மரிய பிச்சை (அதிமுக)
141 .திருச்சி கிழக்கு ------மனோகரன் (அதிமுக)
142 .திருவெறும்பூர் ----- 49 ஓ
143 .கந்தர்வகோட்டை -----சுப்பிரமணியன் (அதிமுக)
144 புதுக்கோட்டை --- முத்துக்குமரன் (சி பி ஐ )
பெரம்பலூர்
******************
145 .குளித்தலை ------- 49 ஓ
146 .லால்குடி -----பார்கவன் பச்சமுத்து (இந்திய ஜனநாயக கடசி)
147 மண்ணச்ச நல்லூர் -----செல்வராஜ் (திமுக)
148 .முசிறி -----------சிவபதி (அதிமுக)
149 .துறையூர் -----இந்திரா காந்தி (அதிமுக)
150 . பெரம்பலூர் ----இளம்பை தமிழ்ச்செல்வன் (அதிமுக)
கடலூர்
************
151 . திட்டக்குடி ---------சிந்தனைச் செல்வன் (விடுதலை சிறுத்தைகள்)
152 விருத்தாச்சலம் --------------------49 ஓ
153 .நெய்வேலி ----பண்ருட்டி வேல்முருகன் (பா ம க )
154 பண்ருட்டி ------.சபா ராஜேந்திரன் (திமுக)
155 .கடலூர் --------- எம் சி சம்பத் (அதிமுக)
156 .குறிஞ்சிப்பாடி -------எம் ஆர் கே பனீர் செல்வம் (திமுக)
சிதம்பரம்
***************
157 .குன்னம் ----- சிவ சங்கர் (திமுக)
158 .அரியலூர் -----------துரை மணிவேல் (அதிமுக)
159 .ஜெயங்கொண்டம் -----காடுவெட்டி குரு (பா ம க )
160 .புவனகிரி -----------செல்வி ராமஜெயம்(அதிமுக)
161 .சிதம்பரம் ----பாலகிருஷ்ணன் (மா கம்யூ)
162 . காட்டுமன்னார்குடி --- ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்)
(ரவிகுமார்.....! உங்களிடம் மக்கள் இன்ன்ன்னும் நிறைய்ய்ய்யய்ய்ய்ய எதிர்பார்க்கிறார்கள்கலைஞருக்கு சப்பை கட்டு கட்ட பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக கட்டுரை எழுதினால் மட்டும் போதாது . கவனம் )
மயிலாடுதுறை
***********************
163 . சீர்காழி ---------------------------சக்தி (அதிமுக)
164 .மயிலாடுதுறை -------------49 ஓ
165 பூம்புகார் -----பவுனுராஜ் (அதிமுக)
166 .திருவிடைமருதூர் --- பாண்டியராஜன் (அதிமுக)
167 . கும்பகோணம் -------------- 49 ஓ
168 பாபநாசம் ---------------------49 ஓ .
நாகபட்டினம்
********************
169 . நாகபட்டினம் ---------- ஜெயபால் (அதிமுக)
170 .கீழ் வேளூர்----- நாகை மாலி (மா கம்யூ )
171 . வேதாரண்யம் -------காமராஜ் (அதிமுக)
172 . திருத்துறைப் பூண்டி ------உலகநாதன் (இ கம்யூ)
173 .திருவாரூர் ------ மு. கருணாநிதி (திமுக)
174 .நன்னிலம் --- காமராஜ் (அதிமுக)
தஞ்சை
***********
175 மன்னார்குடி ------------------------------ 49 ஓ
176 .திருவையாறு ------------ரத்னசாமி (அதிமுக)
177 தஞ்சாவூர் ------------ரங்கசாமி (அதிமுக)
178 ஒரத்தநாடு -----------------------------49 ஓ
179 பட்டுக் கோட்டை ---- யோகநாதன் (சுயேச்சை)
180 பேராவூரணி ------ --------------- 49 ஓ
------ தொடரும்
அவசியமான பின் குறிப்பு
***************************************
எங்கள் தொகுதியில் மூணாவது மூலையில் முக்கிய சந்தில் வசிக்கும் முனுசாமி சுயேச்சை ரொம்ப நல்லவர் . அவர்தான் வேட்பாளர்களிலேயே ரொம்ப நல்லவர் . அவருக்கு ஓட்டுப் போடச் சொல்லாமல் கடசி அரசியலுக்கு ஓட்டுப்[ போட சொல்வது என்ன நியாயம் என்று கேள்வி கேட்க காத்திருப்போரே .
ஒரு நிமிஷம் . நான் ரஜினிகாந்த் இல்லை . நான் வாய்ஸ் கொடுத்தால் எல்லோரும் ஓட்டு போட . கேவலம் நான் குஷ்பூ கூட இல்லை . எந்த கடசி ஆதரவாளனும் இல்லை . எந்த மெஜாரிட்டி சாதியை சார்ந்தவனும் இல்லை . அப்படியிருக்க நான் சொல்லி ஒரு நாலு ஓட்டு சுயேச்சைக்கு போவதால் என்ன பலன்?
எந்த ஓட்டும் வீணாகக் கூடாது அல்லவா?
அந்த அடிப்படையில்தான் நான் நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கிறேன் . முடியாத நிலையில் 49 ஓ வை சிபாரிசு செய்கிறேன்.
நீங்கள் தேர்ந்தெடுத்த எங்கள் தொகுதி வேட்பாளர் ரொம்ப யோக்கியமா ? என்று கேட்பவருக்கு ஒரு சின்ன கதை .
பல பிள்ளைகள் பெற்ற ஒரு தாயிடம் உங்கள் பிள்ளைகளிலேயே நல்ல பிள்ளை யார் என்று கேட்டபோது அவள் சொன்னாளாம் "அதோ! கூரை ஏறிக் கொள்ளி வைக்கிறானே . அவன்தான் உள்ளவர்களிலேயே நல்ல பிள்ளை "என்று.
மற்ற பிள்ளைகள் அதை விட மோசமாக இருக்கும்போது கூரை ஏறிக் கொள்ளி வைக்கும் பிள்ளைதானே நல்ல பிள்ளையாகிறான் .
ஒருவேளை நான் உங்களுக்கு சுட்டிக் காட்டும் பிள்ளை கூரை ஏறிக் கொள்ளி வைப்பவராகவும் இருக்கலாம் . என்ன செய்ய நீங்கள் 'பெற்ற ' மற்ற பிள்ளைகளை விட , நான் சொல்லும் இந்தப் பிள்ளை மேல் என்று தெரியவருகிறது .
------தொடர்வோம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நீங்க குறிப்பிட்டுள்ள இந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் புதுசா என்ன பண்ண போறாங்க. எந்த பிரச்சனையும் தீரபோரது இல்ல.. waste of time
வேறு எந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் புதுசா செய்யப் போறாங்க? அப்படி யாரும் நிக்கறாங்களா? நின்னாலும் நான் சொன்னா ஓட்டு மொத்த தமிழகமே ஓட்டுப் போடுமா? எது வேஸ்ட் ஆப் டைம்? நான் தேர்ந்தெடுத்தா? இல்ல ஓட்டுப் போடறதேவா?
நண்பரே ! இது போன்ற கருத்துக்களை எதிர்பார்த்து நான் முன்பே குறிப்பில் எழுதியுள்ள விஷயத்தை (கட்டுரைக்குள்ளேயே ) பாருங்கள் .
//அவசியமான பின் குறிப்பு
***************************************
எங்கள் தொகுதியில் மூணாவது மூலையில் முக்கிய சந்தில் வசிக்கும் முனுசாமி சுயேச்சை ரொம்ப நல்லவர் . அவர்தான் வேட்பாளர்களிலேயே ரொம்ப நல்லவர் . அவருக்கு ஓட்டுப் போடச் சொல்லாமல் கடசி அரசியலுக்கு ஓட்டுப்[ போட சொல்வது என்ன நியாயம் என்று கேள்வி கேட்க காத்திருப்போரே .
ஒரு நிமிஷம் . நான் ரஜினிகாந்த் இல்லை . நான் வாய்ஸ் கொடுத்தால் எல்லோரும் ஓட்டு போட . கேவலம் நான் குஷ்பூ கூட இல்லை . எந்த கடசி ஆதரவாளனும் இல்லை . எந்த மெஜாரிட்டி சாதியை சார்ந்தவனும் இல்லை . அப்படியிருக்க நான் சொல்லி ஒரு நாலு ஓட்டு சுயேச்சைக்கு போவதால் என்ன பலன்?
எந்த ஓட்டும் வீணாகக் கூடாது அல்லவா?
அந்த அடிப்படையில்தான் நான் நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கிறேன் . முடியாத நிலையில் 49 ஓ வை சிபாரிசு செய்கிறேன்.//
சரி எந்த அடிப்படையில் நான் தேர்வு செய்தேன் ? அதையும் குறிப்பில் கூறியுள்ளேன்
//
சுமார் இருபது வருட பத்திரிக்கையாளர் பணி ....... ஒரு உதவி இயக்குனராக தமிழகம் முழுதும் (ஓரளவு ) அலைந்து திரிந்த அனுபவம் ..... தனிப்பட்ட எந்த தலைவருக்கும் ஜால்ரா அடிக்காமல் , நான் ஒரு தூய தமிழன் என்ற காரணத்தால் ஓட்டு மொத்த தமிழகத்தையும் என் தாய் பூமியாக நேசிக்கும் உள்ளம் ....அதனால் பல்வேறு பகுதிகளின் வாழ்க்கை, கலாச்சார, பொருளாதாரச் சூழல்களையும் ஊன்றிப் படித்து மனிதில் பதிய வைத்த பாங்கு , மாநிலம் முழுக்க எனக்கு உள்ள நண்பர்கள் , சுமார் ஐநூறு தொலைபேசி அழைப்புகள் , இவற்றின் மூலம் நான் தீர விசாரித்து தீர்மானித்து கொடுக்கும் பட்டியல் இது .
வேட்பாளரின் நேர்மை . எளிமை , , அவரது கட்சியில் அவரது செல்வாக்கு , திறமை , முந்தைய செயல்பாடுகள் , அவரைப் பற்றிய பொதுவான மக்களின் எண்ணம் இவற்றின் அடிப்படையில் உங்கள் தொகுதியில் உங்கள் நன்மைக்காக நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைப் பொது மக்களுக்காக கூறுகிறேன் . இதை பின்பற்றினால் பொதுமக்களுக்கு நன்மை . சில தொகுதிகளுக்கு 49 ஒ வை பரிந்தரை செய்துள்ளேன் (வேறு வழி இல்லை)
மற்றபடி எந்தக் கட்சிக்கும் ஆதரவாக நான் இதை வெளியிடவில்லை . மற்ற தொகுதி ஆர்வலர்களின் புரிதளுகாகவே அடைப்புக் குறியில் கட்சியைக் குறிப்பிடுகிறேன் , எந்த சாதி சங்கத்துக்கும் ஆதரவாகவும் நான் இதை வெளியிடவில்லை (பிராமணர் முதற்கொண்டு தலித் வரை எந்த மெஜாரிட்டி சாதியையும் சேர்ந்தவன் இல்லை நான் i )
யாருடைய நேரடி அல்லது மறைமுக தூண்டுதல் காரணமாகவும் நான் இதை வெளியிடவில்லை . என் கையில் என் ஒரு ஓட்டு தவிர யார் ஓட்டும் இல்லை . ( என் மனைவியிடமே என் கருத்தை மட்டுமே கூறுவேன் . மற்றபடி இந்தக் கட்சிக்குதான் ஓட்டுப் போடவேண்டும் என்று கட்டளையிட மாட்டேன்)//
போதுமா ?அவசியம் ஓட்டுப் போடுங்க . இல்லன்னா நம்ம கிழிசல்களுக்கு ஒட்டுப் போடக் கூட முடியாது . நன்றி
Post a Comment