நியாயமா கோபிநாத் ?
*********************************
நீயா நானா நிகழ்ச்சியில் நடிகர் (பவர் ஸ்டார் ) சீனிவாசனிடம் கோபி நடந்து கொண்ட விதத்தைக் கண்டித்து பலரும் தமது கருத்துக்களைப் பதிவு செய்கிறார்கள் .
இந்த நிலையில் எனக்கு ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வருகிறது .
பத்து வருடங்களுக்கு முன்பு தேவி வார இதழில் 'ஜீவ குமாரனின் சின்னத்திரைக் குறிப்புகள்' என்ற பெயரில் டிவி நிகழ்ச்சிகளைப் பற்றி நானா வாரவாரம் எழுதுவேன் .
அப்போது விஜய் டிவி நிகழ்ச்சியில் விவாதம் ஒன்றில் ஒரு கபடி வீரரும் சின்னத்திரை நபர் பாஸ்கியும் எதிர் எதிர் நிலையில் வாதம் செய்தார்கள் .கபடி கிரிக்கெட் இரண்டில் எந்த விளையாட்டு உசத்தி என்பதுதான் டாபிக் .
நிகழ்ச்சி நடத்துனராக இதே கோபிநாத் ,
கபடி வீரர் மிகவும் கண்ணியமாக தனது கருத்துக்களை எடுத்து வைக்க, பாஸ்கியோ கிரிக்கெட்டுக்கு ஆதரவாகப் பேசுவதை விட்டு விட்டு கபடியையும் கருப்பாக உள்ள அந்த கபடி வீரரையும் கிண்டல் செய்தே பேசிக் கொண்டிருந்தார் . கோபிநாத் அதைக் கண்டிக்கவே இல்லை .
நிகழ்ச்சியைப் பார்த்த எனக்கு அதீத கோபம் . மறுவாரம் தேவி வார இதழ் சின்னத்திரைக் குறிப்புகள் நிகழ்ச்சியில் என் நியாயமான கோபத்தை கட்டுரையாக வடித்தேன் . இதில் பாஸ்கியைக் கண்டிப்பதை விட , இதை அனுமதித்த கோபிநாத் தான் பெரிய குற்றவாளி என்று எழுதினேன் . காரணம் , நியாயம் இல்லை என்றாலும் பாஸ்கி ஒரு தரப்புக்கு பேசுகிறார் . கோபிநாத்தோ நிகழ்ச்சியை நடத்துபவர் . எப்படி ஒரு பத்திரிக்கையில் நிருபர் எழுதும் கருத்துக்களுக்கு ஆசிரியரே பொறுப்பாக ஆகிறாரோ , அது போல பாஸ்கி பேசிய விசயங்களுக்கு கோபியே பொறுப்பு என்று எழுதினேன் .
பிறகு ஒருமுறை முதன் முதலாக கோபியை சந்திக்கும் வாய்ப்பு வந்தபோது நான் யாரென்று தெரிந்ததும் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிக்காக கோபி என்னிடம் மன்னிப்பு தெரிவிக்கும் விதத்தில் பேசினார் .
ஒரு நிகழ்ச்சி நடத்துனராக என்னை செழுமைப் படுத்தியதில் ஜீவ குமாரனின் சின்னத்திரைக் குறிப்புகளுக்கு பெரும் பங்கு உண்டு என்று பின்னாளில் அவர் குறிப்பிட்டதாக எல்லாம் எனக்கு செய்திகள் வந்தன
அது வளரும் கோபிநாத் .
ஆனால் இன்று இருப்பவர் வளர்ந்த கோபிநாத் .
வேறு என்ன சொல்ல?

7 comments:
உச்சியில் இருப்பத்தாக எண்ணுவதால் அடுத்த அடி பள்ளம் நோக்கி தானோ?
நிஜம்தான் ஜோஸ்
அண்ணே இந்த பதிவை ஒரு பிரின்ட் அவுட் எடுத்து நம்ம கோபி கிட்டே அனுப்ப சொல்றேன்.
உங்க அன்புக்கு நன்றி தம்பி
When I was watching,I feel the same.Well said.
thank u ayisha
Post a Comment