
இப்போதுதான் உன்னைப் போல் ஒருவன் பார்த்து விட்டு வந்து இதை எழுதுகிறேன்
மூலப் படமான 'வெட்னஸ் டே'யில் அனுபம் கேர் செய்த அளவில் பாதி கூட அந்தக் கதா பாத்திரத்தை மோஹன் லால் செய்யவில்லை( இதில் 'கேரளா மட்டுமல்ல ; இதுவும் அதாவது தமிழ் நாடும் என் நாடுதான்' என்பது போன்ற வெட்டி வீராப்புகள் ஓரு பக்கம்)
கமல் நடிப்பு நன்றாக இருக்கும் என்பதை சொல்லத் தேவை இல்லை. ஆனால் அந்தக் கதாபாத்திரத்துக்கு இந்தியில் நசுருதீன் ஷா 100 விழுக்காடு பொருத்தம் என்றால் , கமல் 60தான். கமலின் தோற்றம் தோரணை எல்லாம் ஒரு சாதரண மனிதன் கதா பாத்திரத்துக்கு பொருந்தி வரவில்லை.
ஆனால் இதையெல்லாம் மீறி ,கமலின் நடிப்புக்காக ரசித்து விட்டுப் போகலாம் என்று பார்த்தால் ......
கமலுக்கே அது பிடிக்கவிலை போலும்.
விருந்து பரிமாறி சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ,முடியும் நேரத்தில் இலையில் கொஞ்சம் சாக்கடையை அள்ளி
ஊற்றினால் எப்படி இருக்கும்?
அதே கதை.
கடைசிக் காட்சிகளில் கமல் தீவிரவாதத்துக்கு எதிரான சாதாரண மனிதனின் நிலையில் இருந்து பேசுவார். அதில் கமல் உதிர்த்திருக்கும் முத்து .... இல்லை இல்லை , ஒரு உப்பு
" மும்பையில டில்லியில குண்டு வெடிச்சா தமிழ் நாட்டுல யாரும் அதுக்காக வருத்தப் படறது இல்ல... அங்க தான வெடிக்குது ... நம்ம ஊர்லயா வெடிக்குதுங்கற நினைப்பு. இங்க உள்ளவங்களைப் பொறுத்தவரை அது ஒரு நியூஸ். தட்ஸ் ஆல்"
என்பதுதான் அந்த வசனம்.
ஹலோ மிஸ்டர் கமல் !
எந்த ஊருல நீங்க இருகீங்க? உங்க அப்டேட்டிங் அறிவு இம்புட்டுதானா?
பிரபாகரனின் மரணத்தை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய வட இந்தியாவுக்கு காவிரி பிரச்னை பற்றியோ முல்லைப் பெரியாறு பிரச்னை பற்றியோ கவலை இல்லை. தமிழ் நாட்டில், ஆந்திராவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைப் பற்றிக் கவலை இல்லை.
இன்றும் இலங்கையில் மூன்று லட்சம் தமிழ் மக்கள் முள்வேலிக் கம்பி அடிமைகளாய் வாழ்வது பற்றி , அவர்கள் படும் கற்பனைக்கப்பாற்பட்ட துயரங்கள் பற்றி , தமிழ்ப் பெண்களின் கர்ப்பப் பைகள் ஆப்பரேஷன் மூலம் அகற்றப் படுவது பற்றியும் தமிழ் ஆண்கள் திட்டமிட்டுக் கொல்லப் படுவது பற்றியும் உலகத் தொலைக்காட்சிகள் எல்லாம் கண்ணீர் வடித்தாலும், உங்கள் 'இந்தி'யத் தொலைக்காட்சிகளுக்கு அது தெரியாத 'இனக் ' குருடு என்ற மன நோய் இருக்கும்.
ஆனால் தமிழ்னாட்டில் உள்ளவன் மட்டும் வட இந்தியாவில் ஒரு சைக்கிள் டியூப் வெடித்தாலும் மாரடித்துக் கொண்டு மண்ணில் புரண்டு அழ வேண்டுமா கமல்'ஜி'?
உங்கள் கருத்துப்படியே பார்த்தாலும் மும்பையிலும் டில்லியிலும் குண்டு வெடிப்பது நடப்பது இங்கே முதல் பக்க கொட்டை எழுத்துச் செய்தியாகவே அதாவது நியூச் ஆக வாவதுமாறி விடுகிறது
ஆனால் அதை விட அதிக எண்ணிக்கையில் இங்கே தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டிருப்பது உங்கள் வட இந்தியச் சேனல்களில் நியூஸ் ஆகக் கூட வருவது இல்லையே கமல்'ஜி'?
இதை அங்கே சொல்லக் கூடிய விருமாண்டி வீரம் உங்களுக்கு உண்டா?
படத்தில் போலீஸ் அதிகாரி மோகன்லாலிடம் நீங்கள் ஒரு காட்சியில் சொல்வீர்களே , " நீங்க விதம் விதம அவார்டு வாங்கிக் குத்திக்கலாம் " என்று .
அது போல உங்களுக்கு இன்னும் விதம் விதமாய் அவார்டு வாங்கி உடம்பு புண்ணாகும் அளவு குத்திக்கொள்ள ஆசை இருக்கலாம் . அதற்காக ஏன் மனிதாபிமானமுள்ள தமிழர்களின் மனசைப் புண்ணாக்குகிறீர்கள்?
ஒன்று புரிகிறது கமல்....!
ஒரு காட்சியில் உங்கள் கதாபாத்திரம் பற்றிச் சொல்லும் அந்த கம்ப்யூட்டர் தொழில் நுட்ப இளைஞன் சொல்வானே.... " ஹி இஸ் பிரெய்னி ... ஆனா மேதை இல்ல...." என்று.
அதை சற்று மாற்றினால் , உங்களுக்கும் அது பொருந்தும்.
நீங்கள் சிறந்த நடிகராக இருக்கலாம்....
ஆனால் நியாய உணர்வுள்ள. நல்ல கலைஞன் இல்லை.!

26 comments:
ஏன் இப்பூடி படம் நல்லா இருக்கா இல்லயா
இறுதியில் தீவிரவாதத்துக்கு எதிரா பேசாட்டி படம் இந்தியாவில் ஓடுமா? ஓடவிடுவார்களா? அந்த வசனங்கள் வெறும் வியாபார நோக்கு, சொல்ல வந்த விடயம்.
இறந்தவர்கள் குரல்கள் சுவர்களில் ஒலிக்கும், மற்றவர்கள் குரல்கள் திசைகளை அசைக்கும், நிச்சயம் அசைக்கும், அசைக்காவிட்டால் முகமறியாத மரணம், முடிவில்லாத அழிவுதான் நடக்கும்.
ஆனானப்பட்ட தமிழக முதல்வரே மீனவர்களைப் பற்றிப்பேசாமல் ஈழத்தமிழர்களைப் பற்றிபேசாமல் அண்ணா நூற்றாண்டில் தன் புகழ்(?) பாடுவிக்கும் போது கமல் மட்டும் இதைப் பேசவேண்டுமா?
sir,
if u like my blog, pasug.blogspot.com pls join there as follower...thanks...
நண்பரே எப்படி இருக்கீங்க?
ரொம்ப நாளாச்சு உங்களப் பாத்து :)
என்ன கொடுமை ஷபி....
படத்தைப் பத்தியும் சுருக்கமா ஆரம்பத்துலயே சொல்லி இருக்கனே..
தவிர விலாவாரிய விமர்சனம் எழுத தான் ப்ளாக் ல ஒரு கோடி பேர் இருக்காஙகளே....
உண்மைய பேசதானே ஆள் கம்மி.
எப்பூடி சரிதானே?
பிருந்தன்...
தீவிரவாதத்துக்கு எதிரா கமல் தாரளமா பேசட்டும்.
இன்னும் கூட நல்லா விலாவாரியா பேசட்டும்.
(மூலப் படமான வெட்னெஸ் டேல நஸ்ருதீன் ஷா , ஒரு சாதரண மனிதனின் இடத்துல நின்னு பேசுற விஷயங்கள் இன்னும் பிரம்மாதமா இருக்கும்.
ஆனா படத்துல அந்த வசனம் எதுக்கு?
தமிழனுக்குப் படம் எடுத்து அவனையே அநியாயமா கேவலப் படுத்துறது எப்படி வியாபார நோக்கம் ஆகும்?
சொந்த இனம் அழியறதையே நியூஸா பார்த்தவன் தமிழன்.
அவன் இனம் அழியறத மத்தவன் நியூஸா கூட பாக்குறது இல்ல.
கார்கில் போரையும் குஜராத் பூகம்பத்தையும் தமிழன் நியுஸா பாக்கல. அதனால தான் மத்த மாநிலத்தவனை விட அதிகமா அள்ளிக் கொடுத்தான். இன்னிக்கும் வருஷா வருஷம் கொடி நாள் வசூல் அதிகமா தமிழ் நாட்டுல இருந்துதான் போகுது. சரியா?
மத்தபடி உங்க ரெண்டாவது பாரா, கமல் பேசற மாதிரியே இருக்கு . வாழ்த்துகள்!
உண்மைதான் நாவேந்தரே!
கருணா நிதி பற்றி நீங்கள் சொல்வது சரிதான். (இதோ, இன்னிக்கு வழக்கம் போல
பிரதமருக்கு கடுதாசி போட ஆரம்பிச்சிட்டாரு)
கருணாநிதி பேசலைன்னா கமல் பேசக் கூடாதுனு கட்டாயம் இல்ல.
அதுக்காக பேசித்தான் ஆகணும்னு நான் அடம் புடிக்கல.
நிலமை இப்படி இருக்கும்போது கதைக்கும் படத்துக்கும் தேவை இல்லாத,
எந்த பலமும் சேர்க்காத அந்த வசனம் எதுக்காக ? யாரைத் திருப்திப் படுத்த?
கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க.
அதுசரி நீங்க படம் பாக்கலையா இன்னும்?
பாத்திருந்தா இந்த ஒப்புமையை நீங்க கொடுத்து இருக்க மாட்டிங்க.
பாத்துட்டு சொல்லுங்க
உங்க அன்புக்கு ரொம்ப நன்றி பசுபதி ...
ஆனா நான் உங்க சாதி இல்லியே.
எப்படி உங்க ப்ளாக் ல ஃபாலோயர் ஆக முடியும்?
நண்பர் செந்தில்வேலன் அவர்களே !
நல்லா இருக்கேன்.
பெரும்பாலான பிளாக்குகள் சும்மா பொழுது போக்குத் தளமாவே இருக்கு.
ஆக்க பூர்வமா இருக்கற மாதிரி என் சிற்றறிவுக்குத் தெரியல .
நல்ல விஷயம் எழுதினாலும் பெருசா ஆதரவு இல்ல.
இப்ப இது கூட கமல் பத்தியது என்பதால கொஞ்சம் பின்னூட்டம் ஊட்டமா
வந்திருக்கு .
அதனால தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்கள்ல மட்டும் எழுதலாம்னு இருக்கேன்.
கமல் வாழ்க்கை வரலாற்றை நான் இந்த வலைப்பூவில எழுதனும்ணு ,
எதொ என்னைப் பத்தி கொஞ்சம் நல்லா தெரிஞ்ச நண்பர் ஒருத்தர் ஆசைப் பட்டார்.
எனக்கும் பண்ணலாமான்னு தோணுச்சு.
அதுக்குள்ள கமலின் இந்த பட வசனம் மனச நோக வைத்து விட்டது.
அத விடுங்க , நீங்க நலமா இருக்கீங்கள?
//கமல் வாழ்க்கை வரலாற்றை நான் இந்த வலைப்பூவில எழுதனும்ணு ,
எதொ என்னைப் பத்தி கொஞ்சம் நல்லா தெரிஞ்ச நண்பர் ஒருத்தர் ஆசைப் பட்டார்.//
கமல் வாழ்க்கை வரலாறு அவரை விட உங்களுக்கு அதிகமா தெரியும் போலிருக்கு :)
நன்றாக எழுதி இருக்கிறீர்கள். நியாயமாகவும்.
அது எப்படி ஜோ , முடியும்.?
சின்ன வயசுல இருந்து அவரைப் பத்த்கி படிச்ச பல விசயங்கள ,
ஒரு எளிமையான ரசிகனின் பார்வையில , ஒரு தமிழ்க் கலைஞனுக்கு
நம்மளால முடிஞ்ச ஒரு காணிக்கையா எழுத நினைச்சேன்.
அவ்வளவுதான் .
நன்றி தீபா...
1) உங்க மனசாட்சிக்கும்
2) சமுதாய அறிவுக்கும்
3) அதை வெளிப்படுத்திப் பாராட்டிய அன்புக்கும்.
தப்பா நினைச்சுக்காதீங்க செந்தில்குமரன்,
பிரபாகரன், தமிழக மீனவர்கள், ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட விவகாரங்களில் உங்களது உணர்வுகளை நான் மதிக்கிறேன். சொல்லப்போனால் உங்களை விட அதிகமாய் இது குறித்து உணர்ச்சி வசப்பட்டும் இருக்கிறேன்.
ஆனால் ஒரு திரைப்படத்தில் கடைசி காட்சியில் சொல்லப்பட்ட நான்கு வரி டயலாக்கை ஆதாரமாய் கொண்டு நீங்கள் சொல்லி இருக்கின்ற விஷயங்கள் கொஞ்சம் கூட நியாயமானதாய் தெரிய வில்லை.
உடனே ஒரு சாதாரண கமல் ரசிகன் அவனது தலைவரை திட்டி விட்டதால் கோபத்தில் எழுதி இருக்கிறான் என்ற ரீதியில் பார்க்காதீர்கள். கமலை விமர்சிப்பதாயிருந்தால் அதாவது "நியாய உணர்வுள்ள நல்ல கலைஞன் இல்லை" என்று நிறுவ முயன்றால் தாராளமாய் அடுத்து ஒரு பதிவு போடுங்கள். அதில் இப்படி தொடர்ச்சியாய் சில விஷயங்களைச் சுட்டி காட்டி நீங்கள் சொல்ல வருவதை ஆணித்தரமாய் சொல்லுங்கள். இப்படி நான்கு வரி டயலாக்கை பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள்.
சரி என்ன சொல்ல வருகின்றீர்கள். மும்பை குண்டு வெடிப்புக்கு ஈழத்தமிழரை ஆதரிப்போர் பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டும் என்கிறீர்களா? இது ஒரு சாதாரண மனிதனின் எதிர்பார்ப்பாய் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?
//அதற்காக ஏன் மனிதாபிமானமுள்ள தமிழர்களின் மனசைப் புண்ணாக்குகிறீர்கள்?//
பாஸ் கமான். ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தாய் படுகொலை செய்யப்பட்ட போதும் இந்த மானமுள்ள, மனிதாபிமானமுள்ள தமிழர்கள் என்ன பல் குத்திக் கொண்டா இருந்தார்கள். மறுபடி காங்கிரசை தமிழ்நாட்டில ஜெயிக்க வெச்சதும் அதே மனிதாபிமானமுள்ள தமிழர்கள்தான். ஒரே ஆறுதல் தங்கபாலுவும், இளங்கோவனும் தோத்தது மட்டுமே.
அப்புறம் அந்த அவார்டு மேட்டர். இதுக்கும் இந்த டயலாக்குக்கும் என்ன சம்பந்தம்னு தெரியலை.
உங்களுக்கு அந்த குறிப்பிட்ட சீன் பிடிக்கலை.அதனால ரிலேட்டிவ்வா அப்படியே சேர்த்து விட்டிருக்கீங்க. :(
அப்புறம் பதிவுக்கு சம்பந்தமில்லாம இன்னொரு விஷயம். அடிப்படை அறச்சீற்றமாய் எழுதி இருப்பதால் இதை கேட்கிறேன்.
உங்க பதிவுக்கு கீழ பெயரியல் ராசராசனும், திருமாவும் சேர்ந்து மாலை போட்ட போட்டோவை பெருமையா போட்டிருக்கீங்க. திருமா மாலை போட்டதை பெருமையாய் காட்டிக் கொள்ளலாம். தப்பே இல்லை. "நேமியாலஜியை உலகிற்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்"னு ஊரை எல்லாம் ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கும் பெயரியல் பேராசான் என்ற ஒரு அயோக்கியன் கொஞ்சம் செலிபிரிட்டியாய் இருக்கின்ற காரணத்தால் அந்தாளு மாலை போட்டதை எல்லாம் பெருமையாய் எடுத்துக் கொள்ள வேண்டுமா?
ஒவ்வொரு நாளும் காமெடி நிகழ்ச்சிகள் இல்லாமல் விஜய் டீவியில் நைட் 12 மணிக்கு மேல அந்தாளு உதிர்க்கிற பொன்மொழிகளை தொடர்ச்சியாய் கேட்டவன் என்ற முறையில் அந்தாளோட யோக்கியதையும், ஏமாற்று வித்தையும் நல்லாவே தெரிகிறது. இவனுங்களை எல்லாம் இன்னும் நூறு பெரியாரு வந்தாலும்........
http://blog.nandhaonline.com
அன்பு நந்தகுமார்.
அந்த நான்கு வரி டயலாக்தான் பிரச்னையே. அது சாதாரண நாலு வரி இல்லை. இருக்கிற சூழலை உணராமல் ரணத்தை மேலும் ஆழமாக்குகிற நான்கு வரி.
பொதுவில் நானே கமல் ரசிகன்தான்.
ஒரு இனம் நொந்து கிடக்கையில் அதை மேலும் கேவலப்படுத்துகிற ஒரு கருத்தை முன்வைத்த தன்மை ஒன்றே
போதும், கமல் நியாய உணர்வுள்ள கலைஞன் இல்லை என்று நிறுவ.
மற்றபடி கமல் நியாய உணர்வுள்ள கலைஞன் இல்லை என்று நிரூபிக்க ஒரு தனி ஆராய்ச்சி நடத்துவது என் நோக்கமில்லை: காரணம் கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு எனக்கு இல்லை என்பதை எனது பதிவின் மூன்றாவது
பத்தியின், முதல் வரி உங்களுக்கு உணர்த்தியிருக்கும், எங்கும் தொங்காமல் அதை நீங்கள் படித்து இருந்தால்!
விழுந்து கிடக்கும் ஒரு இனத்தின் உணர்வுக் குரலாக நான் தொங்குவது தவறு இல்லை.
ஆனால் கருத்து ரீதியாக நீங்கள் விழுந்து நொறுங்கிக் கிடப்பதுதான் பரிதாபம்
அதாவது
//சரி என்ன சொல்ல வருகின்றீர்கள். மும்பை குண்டு வெடிப்புக்கு ஈழத்தமிழரை ஆதரிப்போர் பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டும் என்கிறீர்களா? // என்று கூறியயுள்ளீர்கள்.
என்ன அரைவேக்காட்டுத்தனமான சிந்தனை? நான் எங்கே அப்படிச் சொன்னேன்? சொல்ல வந்தேன்?
இது ஒரு சாதாரண மனிதனின் எதிர்பார்ப்பாய் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?//
எப்படி ? ரோம் நகரம் பற்றி எரியும்போதும் ஃபிடில் வாசிப்பதுபோல கருத்து உதிர்ப்பதுதான் சாதாரண மனிதனின் எதிர்பார்ப்பா?
நான் நாவேந்தருகான பதிலிலேயே சொன்னேன்."'.கருணாநிதி பேசலைன்னா கமல் பேசக் கூடாதுனு கட்டாயம் இல்ல.
அதுக்காக பேசித்தான் ஆகணும்னு நான் அடம் புடிக்கல.'' என்று.
//பாஸ் கமான். ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தாய் படுகொலை செய்யப்பட்ட போதும் இந்த மானமுள்ள, மனிதாபிமானமுள்ள தமிழர்கள் என்ன பல் குத்திக் கொண்டா இருந்தார்கள். மறுபடி காங்கிரசை தமிழ்நாட்டில ஜெயிக்க வெச்சதும் அதே மனிதாபிமானமுள்ள தமிழர்கள்தான். ஒரே ஆறுதல் தங்கபாலுவும், இளங்கோவனும் தோத்தது மட்டுமே.//
மத்தவன் பல் குத்தலைன்னா, நாம வெளிய உள்ள அழுக்கை எடுத்து பல்லிடுக்கில திணிச்சுகணுமா?
படத்துல மோகன்லால் கதபாத்திரத்தைப் பத்தி கமல் பாத்திரம் பேசுவதுல எவ்வளாவு சம்மந்தம் இருக்கோ, அதே
அளவு சம்மந்தம் அவார்டு மேட்டருக்கும் இருக்கு பாஸ்.
ஒண்ணு புரியுதுங்க....
என்னை மடக்குற முயற்சியில அந்தப் புகைப்படங்களையும் பார்த்து சம்மந்தப் படுத்தப் பாக்குறீங்க.
புன்னகைக்க வச்சதுக்கு நனறி.
அது ஒரு தமிழ் விழா!
அது திருமாவளவனுக்காக போட்ட போட்டோ. கட் பண்ணிப் போடத் தோணல. ஒரு சூழலில் உணர்வுக்காகப் போட்டது . பெருமைக்காகப் போட்டது இல்ல.
ஆனா ஒரு நிலையில திருமாவளவன் மேலயே நமக்கு மன வருத்தம் வந்துருச்சு. . ஆனா அத எடுக்க மறந்துட்டேன்.
அதை தூக்குவது ஒண்ணும் பெரிய விசயமில்லை.
நான் கூட ஒரு பெரிய இடைவேளைக்கு அப்புறம் இப்பதான் பார்த்தேன்.
விசாரிச்சதுல, ராஜ ராஜன் கூட, முதல் பெரியாரைக் கொண்டாடுற திராவிடர் கழகத்து ஆள்தானாம். பெரியார்தாசன்
ராஜராஜன் நிகழ்ச்சிகள் எல்லாத்துலயும் கலந்துக்குவாராம்.( 999 பெரியாரப் பத்திப் பேசி என்ன பண்ணப் போறோம்)
ஏன்னு விசாரிச்சு ஒரு பின்னூட்டம் போடுங்க.
ஒரு போட்டோவுல ராஜராஜன் இருந்தத எடுத்துகிட்டு ரெண்டு பாரா நீளம் தொங்கத் தெரிஞ்ச உங்களுக்கு. அங்கயே அன்னை தெரசா படம் இருந்தத பத்தி ஒரு வரிகூட தொங்கத் தெரியல பாருங்க. நான் அதத்தாங்க பெருமையா நினைக்கிறேன்.நல்லா இருங்க.
நீங்க சொல்றது ஒரு பக்கம் இருக்க .... இவ்வளவு தமிழ் நாட்டு மீனவனைசுட்டுக் கொன்னாலும் அத எதிலுமே சரியாகப் பதிவு செய்யாத . இவனுங்களை யெல்லாம் இன்னும் 5 லட்சம் உயிர் போனாலும்.............
ஒரு வேளை என்னுடைய எதிர் கருத்துக்களோ அல்லது அதில் இருக்கும் தொனியோ உங்களுக்கு கோபத்தைத் தந்திருக்கலாம். அதனால்தான் அரைவேக்காட்டுத் தனமான சிந்தனை, கருத்து ரீதியாக நீங்கள் விழுந்து நொறுங்கிக் கிடப்பதுதான் பரிதாபம் என்பது மாதிரியான வார்த்தைகள். என்ன பாஸ் ஒரு எதிர் கருத்து வெச்சா இப்படியா பட படப்பது? ஒரு வேளை என்னுடைய பின்னூட்டத்திலும் இதே போன்று ஓர் நக்கல் தொனி உங்களுக்கு தெரிந்திருந்தால் மன்னிக்கவும்.
//என்னை மடக்குற முயற்சியில அந்தப் புகைப்படங்களையும் பார்த்து சம்மந்தப் படுத்தப் பாக்குறீங்க.//
இல்லை. உங்களை மடக்கியே ஆகணும் என்பது எனது எண்ணமே இல்லை. சொல்லப்போனால் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் இவ்வளவு தூரம் வருத்தப்படுகின்றாரே என்ற ஒரு காரணம் போதும் உங்களை நான் சிலாகித்துக் கொள்ள. உண்மையிலேயே ராஜராஜன் மேல எனக்கு கண்ணு மண்ணு தெரியாத அளவுக்கு கோபம் இருக்கிறது. பெரியார்தாசன் அந்தாளுடைய விழாக்களில் கலந்து கொள்வது கண்டிப்பாய் விமர்சனத்திற்குரியது என்பதை ஏற்கனவே இது குறித்து பல நண்பர்களிட்ம் குறிப்பாய் பெரியார் கழக தோழர்கள் சிலரிடம் சொல்லி இருக்கின்றேன்.
அந்தாளு பெரியார் கழகத்து ஆளாகவே இருந்தாலும் அதுக்காக அந்தாளு ஊரை ஏமாத்தறது சரியாய் போய் விடுமா என்ன? என்னுடைய ஒரு சில பதிவுகளில் இதை நீங்கள் பார்க்கலாம்.
உங்களுடைய பதிவில் வந்துட்டு இதை ஏன் போட்ட? என்று அதிகாரம் செய்வதல்ல எனது எண்ணம். ”பெருமையாய் எடுத்துக் கொள்ள வேண்டுமா?” என்ற வேண்டுகோளின் தொனியிலேயே கேட்டிருக்கின்றேன். சொல்லப்போனால் இதை பொருட்படுத்துவதும், கண்டு கொள்ளாமல் விடுவதும் உங்கள் இஷ்டம். பதிலுக்கு ஏன் கேட்டாய் என்று என்னையே குற்றம் சொல்ல வேண்டாம்.
பாருங்களேன் ஒட்டு மொத்த படத்தில் அந்த நான்கு வரிகள் உங்களுக்கு ஒரு பதிவே போட வைக்கும் அளவுக்கு கோபத்தை வரவைத்திருக்கிறது. அதிலுள்ள மற்ற சில நல்ல விஷயங்கள் ஒரு சினிமாக்காரராய் இருந்தாலும் உங்களுக்கு அது பெரிதாய் தெரிய வில்லை.
அதே போல்தான் எனக்கும். இவ்வளவு அறச்சீற்றம் கொள்ளும் ஒருவர் போயும் போயும் இந்தாளு ஃபோட்டோ எல்லாம் வைத்துக் கொள்ள வேண்டுமா என்ற எண்ணத்தில் நான் ஒரு பின்னூட்டம் கூட போடக்கூடாது என்கின்றீர்கள். ஏன் அன்னை தெரசா போட்டோ எல்லாம் உங்களுக்கு கண்ணுல தெரியலையா என்று மறு கேள்வி கேட்கின்றீர்கள்.
மற்றபடி கமலின் விஷயமோ அதில் நீங்கள் கொள்ளும் கோபமோ தேவையற்றது என்பது எனது தனிப்பட்ட எண்ணம். ஏற்றுக் கொள்வதும் மறுதலிப்பதும் உங்கள் விருப்பம். எப்படி உங்களது கருத்துக்களை நான் மறுதலித்தேனோ அதே போல்.
அப்புறம் தமிழக தமிழர்கள் மேல எல்லாம் (நானுந்தான்) ஒண்ணும் பெரிய மரியாதை எல்லாம் எனக்கு இல்லைங்க. கடந்த சில வருடங்களாக ஈழத்தமிழர்கள் விஷயத்தைப் பத்தியே போற இடமெல்லாம் பேசிக்கிட்டிருந்தவன் என்ற முறையில இவனுங்களோட ரெஸ்பான்ஸ் என்னன்னு எனக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு. இவனுங்களுக்காக பரிஞ்சு பேசற அளவுக்கு இவனுங்க தகுதியடைய வில்லை என்பது என்னுடைய எண்ணம். ஒரு வேளை அது கூட நீங்கள் சொன்ன அந்த வரிகள் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போனதற்கான காரணமாய் இருக்கலாம்.
உங்க பதிலோட கடைசி பாரால(மீனவர்கள் விஷயத்தில்) எனககு மாற்றுக் கருத்தில்லை. அதனால அதை அப்படியே விட்டுட்டாலும் நீ ஏன் அதைப் பற்றி பேச வில்லை என்று கெட்டால் என்ன செய்வது என்பதற்காக இதை பதிவு செய்கின்றேன்.
http://blog.nandhaonline.com
"உடம்பு எப்படி இருக்கு?"
இதைப் படித்ததும் உங்களுக்கு முதலில் தோன்றுவது என்ன?
மிரட்டுகிற மாதிரி தோணலாம்.
ஆனால் இதே வார்த்தையை நமக்குப் பிடித்த ஒருவர் உடல் நலம் சரியில்லாத போது எந்த விதத்தில் கேட்கிறோம்?
உங்கள் முதல் பதிவு முதல் ரகமாகவும் இரண்டாவது பதிவு இரண்டாவது ரகமாகவும் இருந்தது.
மற்ற வழக்கமான காஸ்மாபாலிடன் தமிழன் யாருக்காவது கமலின் அந்த வசனம் பாதிப்பை
ஏற்படுத்தவில்லை என்றாலெனக்கு கோபம் வந்திருக்காது.
ஆனால் ஒரு இன உணர்வாளராக இருக்கிற உங்களை அது பாதிக்கவில்லை என்பதும் அதற்கு மறுப்பு யோசிக்கக் கூட உங்களுக்கு மனசு வருகிறது என்பதும் அதுவும்
//இப்படி நான்கு வரி டயலாக்கை பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள்.//
என்று சொல்லும் அளவுக்குஇந்த விஷயத்தில் உங்களுக்கு ஏகடியம் வருகிறது என்பதுமே என்னைப் பாதித்தது.
உண்மையில் நாம் முன்பே அறிமுகம் ஆகி இருந்தால் " நீங்கள் இதைச் சொல்லலாமா?" என்று
உரிமையோடு இன்னும் 'படபடத்து'(உங்கள் வார்த்தைப்படி) இருப்பேன்.
என் இனத்துக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை . ஆனால் இருக்கிற சூழலில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் அந்த வசனத்தைக் கண்டிக்க வேண்டியது என் கடமையாகப் பட்டது பாஸ்.
அது உணர்வுதான் .மற்றபடி நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நான் அளவு நான் பெரியவன் அல்ல.
//சரி என்ன சொல்ல வருகின்றீர்கள். மும்பை குண்டு வெடிப்புக்கு ஈழத்தமிழரை ஆதரிப்போர் பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டும் என்கிறீர்களா? //
என்ற உங்கள் கருத்துக்கு, நான் பயன்படுத்திய அரைவேக்காட்டுத்தனமான என்ற வார்த்தை,மிகக்குறைவான கண்டனமே என்பது எனது தாழ்மையான அபிப்ராயம்.
ஒரு மலையாளியோ , தெலுங்கனோ ,கன்னடனோ தான் சம்மந்தப் பட்ட பிரச்னையில் இப்படி ஒரு தவறான வாதத்தை வைத்து தன் இனத்தின் தரப்பை தானே பலவீனப் படுத்துவானா?
ராஜராஜன் விசயம் பற்றி தொடர்ந்தி இங்கு விவாதிக்க வேண்டுமா? அது ஒரு இங்கிதம் கருதி போட்ட போட்டோ
அது பற்றி மேலும் விவாதித்து உங்கள் பொன்னான நேரத்தை(யும்) நான் வீணாக்க விரும்பவில்லை.
//பாருங்களேன் ஒட்டு மொத்த படத்தில் அந்த நான்கு வரிகள் உங்களுக்கு ஒரு பதிவே போட வைக்கும் அளவுக்கு கோபத்தை வரவைத்திருக்கிறது. அதிலுள்ள மற்ற சில நல்ல விஷயங்கள் ஒரு சினிமாக்காரராய் இருந்தாலும் உங்களுக்கு அது பெரிதாய் தெரிய வில்லை.//
இதற்கு பதில் எனது முதன்மைப் பதிவிலேயே உள்ளது
//விருந்து பரிமாறி சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ,முடியும் நேரத்தில் இலையில் கொஞ்சம் சாக்கடையை அள்ளி ஊற்றினால் எப்படி இருக்கும்?//
தயவு செய்து எதையும் முழுமையாகப் படித்துவிட்டு விமர்சித்தால் நான் மிக்க மகிழ்வேன்
//மற்றபடி கமலின் விஷயமோ அதில் நீங்கள் கொள்ளும் கோபமோ தேவையற்றது என்பது எனது தனிப்பட்ட எண்ணம். ஏற்றுக் கொள்வதும் மறுதலிப்பதும் உங்கள் விருப்பம். எப்படி உங்களது கருத்துக்களை நான் மறுதலித்தேனோ அதே போல்.// என்கிறீர்கள்
ஒன்று புரிந்து கொள்ளுங்கள் நந்து.
இவ்வளவு விளக்கங்கள் நாம் பேசிய பின்னும் அந்த வசனைத்தைக் கமல்பேசியது தப்பில்லை
என்று நீங்கள் நினைத்தால் ... ஒரு நாள் உணர்வீர்கள்! உங்கள் மனமும் புண்படாதபடி வேறு என்ன சொல்ல முடியும்?
மற்றபடி.. நான் சொல்வது .. நீங்கள் மறுதலிப்பது .... நான் ..... நீங்கள் .. என்பது எல்லாம் இங்கு விசயமே இல்லை.உண்மை நிரந்தரமானது .அதன் முன்னால் தனி மனிதர்கள் எல்லாம் சுண்டைக்காய்.
//அப்புறம் தமிழக தமிழர்கள் மேல எல்லாம் (நானுந்தான்) ஒண்ணும் பெரிய மரியாதை எல்லாம் எனக்கு இல்லைங்க. கடந்த சில வருடங்களாக ஈழத்தமிழர்கள் விஷயத்தைப் பத்தியே போற இடமெல்லாம் பேசிக்கிட்டிருந்தவன் என்ற முறையில இவனுங்களோட ரெஸ்பான்ஸ் என்னன்னு எனக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு. இவனுங்களுக்காக பரிஞ்சு பேசற அளவுக்கு இவனுங்க தகுதியடைய வில்லை என்பது என்னுடைய எண்ணம். ஒரு வேளை அது கூட நீங்கள் சொன்ன அந்த வரிகள் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போனதற்கான காரணமாய் இருக்கலாம்.//
//அப்புறம் தமிழக தமிழர்கள் மேல எல்லாம் (நானுந்தான்) ஒண்ணும் பெரிய மரியாதை எல்லாம் எனக்கு இல்லைங்க. கடந்த சில வருடங்களாக ஈழத்தமிழர்கள் விஷயத்தைப் பத்தியே போற இடமெல்லாம் பேசிக்கிட்டிருந்தவன் என்ற முறையில இவனுங்களோட ரெஸ்பான்ஸ் என்னன்னு எனக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு. இவனுங்களுக்காக பரிஞ்சு பேசற அளவுக்கு இவனுங்க தகுதியடைய வில்லை என்பது என்னுடைய எண்ணம். ஒரு வேளை அது கூட நீங்கள் சொன்ன அந்த வரிகள் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போனதற்கான காரணமாய் இருக்கலாம்.//
உங்களுடைய இந்த பத்தி உண்மைதான்..... அதிலும்
//இவனுங்களுக்காக பரிஞ்சு பேசற அளவுக்கு இவனுங்க தகுதியடைய வில்லை என்பது என்னுடைய எண்ணம். ஒரு வேளை அது கூட நீங்கள் சொன்ன அந்த வரிகள் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போனதற்கான காரணமாய் இருக்கலாம்.//
என்பதுதான் உங்களுக்கு(ம்) கமல்மேல் கோபம் வராததற்குக் காரணம்
தனிப்பட்ட விதத்தில் ஒரு புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழராலேயே பாதிக்கப் பட்ட அனுபவம் எனக்கு உண்டு.
அதுக்காக நாம மாறலாமா பாஸ்?
நம்ம சரியாவே இருந்துட்டுப் போவமே?எனக்காகக் கொஞ்சம் யோசிங்களேன்...
உங்க இந்தக் கோபத்தை, விரக்தியை நான் மதிக்கிறேன் அதை விட்டு வெளிய வந்து பாருங்க.கமல் அந்த வசனம் பேசியதுல உங்களுக்கும் கோபம் வரும்.
ஒரு குடம் பால் ஊத்தி அதுல ஒரு துளி விஷம் ஊத்தி இருக்கிறார் கமல்.
லட்சக்கணக்கான துளிகள் பாலைப் பார்க்கிற பெருந்தன்மை உங்களுக்கு. தவிர உங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் இருக்கலாம்.
எனக்கு அது இல்லிங்க.
அத குடிக்கப்போற பத்து நோஞ்சான் குழந்தைகளின் நலனைப் பார்க்க என்னை அனுமதிக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
பின்குறிப்பு: உங்கள் பதிவின் பின்னூட்டத்தின் கடைசிப் பாரா அதீதமான கற்பனை. அப்படி கேட்கிற
பழக்கம் எனக்கு வந்தால் அது நீங்கள் எனக்கு அளித்தஅன்புப் பரிசாகவே இருக்கும்.
//
இன்றும் இலங்கையில் மூன்று லட்சம் தமிழ் மக்கள் முள்வேலிக் கம்பி அடிமைகளாய் வாழ்வது பற்றி , அவர்கள் படும் கற்பனைக்கப்பாற்பட்ட துயரங்கள் பற்றி , தமிழ்ப் பெண்களின் கர்ப்பப் பைகள் ஆப்பரேஷன் மூலம் அகற்றப் படுவது பற்றியும் தமிழ் ஆண்கள் திட்டமிட்டுக் கொல்லப் படுவது பற்றியும் உலகத் தொலைக்காட்சிகள் எல்லாம் கண்ணீர் வடித்தாலும், உங்கள் 'இந்தி'யத் தொலைக்காட்சிகளுக்கு அது தெரியாத 'இனக் ' குருடு என்ற மன நோய் இருக்கும்.
//
Yennayum kobapadithugira visayam idhu.. Kudithu vittu koothadiyavargal mangalore il thaakkpatta podhu oru vaaram oppari vaithum,Sharukh khan sodhani seyyapattal pongi yelundhum kondhalitha aangila matrum hindhi seythi oodahangal,ilangayil appavi makkalin avala nilayai kandukollve illai...
//உங்க பதிவுக்கு கீழ பெயரியல் ராசராசனும், திருமாவும் சேர்ந்து மாலை போட்ட போட்டோவை பெருமையா போட்டிருக்கீங்க. திருமா மாலை போட்டதை பெருமையாய் காட்டிக் கொள்ளலாம். தப்பே இல்லை. "நேமியாலஜியை உலகிற்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்"னு ஊரை எல்லாம் ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கும் பெயரியல் பேராசான் என்ற ஒரு அயோக்கியன் கொஞ்சம் செலிபிரிட்டியாய் இருக்கின்ற காரணத்தால் அந்தாளு மாலை போட்டதை எல்லாம் பெருமையாய் எடுத்துக் கொள்ள வேண்டுமா?
//
Ungal padhivil velipatum sindhanaikgalukkum,unarvugalukkum andha photo konjam kooda prothama illai..(ungal vilagangalai paditha pinnum adhuve yenaku thondru girathu) Konjam uruthla gathan irukku...Oru pakkama "edit" pannidugalen.. Thavaraga irundhal mannikkavum..
அன்பு கிருஷ்குமார்...
உங்கள் முதல் பின்னூட்டத்தை நந்தா என்கிற நந்தகுமாருக்கு காணிக்கையாக்குகிறேன்.
உங்கள் இருவரின் கருத்துகளையும் மதித்து அந்த போட்டோவை நீக்கி விட்டேன்
Vendukolai yetramaiku nanri!
Natpudan,
KrishKumar.
உங்கள் பதிவினை உங்களைக் கேட்காமல் சுட்டு போட்டு விட்டேன். அனுமதி கேட்டு பொருத்திருப்பதற்கு எனக்கு பொறுமையில்லை. மன்னிக்கவும்.
நன்றி கிருஷ்..
என் மேல் அன்புடன் நீங்கள் எடுத்துக் கொண்ட உரிமைக்கு.
பரவாயில்லை பரம்...
,, ,, ,, ,,
அன்பு பரம்..
நீங்க போட்டிருக்கிற ரெண்டு கட்டுரையிலும் என் கருத்தை எழுதிவிட்டேன்.
பார்த்துட்டு சொல்லுங்க.
உங்க அம்மா பதிவு என் மனச உலுக்கிடுச்சு.
அபடியெல்லாம் நினைக்காதீங்க. நாங்க இருக்கோம்.
Post a Comment