Tuesday, April 5, 2011

# பண்ணுருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் அவர்களுக்கு !


அன்பு மிகு பண்ணுருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் அவர்களுக்கு !
உங்கள் அழைப்புக்கிணங்க நான் விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா பார்த்தேன் . நான் முன்பே குறிப்பிட்டது போல எனக்கு உங்களை தனிப்பட்ட விதத்திலும் பிடிக்கும் (இப்படி சொல்வதால் நான் உங்கள் கட்சிக்காரனோ சாதிக்காரனோ அல்ல )

நல்ல வேளை . நேற்று உங்கள் பகுதி முடிந்து தமிழருவி மணியன் உட்காரும்போதுதான் 'ஆற்காட்டார் ' வந்தார் . எனவே அது வரை பார்க்க முடிந்தது . நல்ல பயனுள்ள நிகழ்ச்சி . கொஞ்சம் 'அரசியல்தனம் ' இருந்தாலும் உங்கள் பேச்சு அருமை .

அரசியல் பேச வேண்டியது அவசியம்தான் . ஆனால் இன்று பேசப்படும் அரசியல் எப்படி உள்ளது என்பதுதான் கேள்விக்குறி . எனது சிறு வயதில் ஏதாவது சொந்தக்காரர் வீட்டு விசேஷம் எனறால் இழவு கருமாதி எனறால் கூட நான் ஆர்வமாகப் போவேன் . காரணம் சடங்குகள் முடிந்ததும் பிரம்மாதமாக அரசியல் பேசப் படும் . ஆனால் இன்று ?

எனது சொந்த அனுபவம் ஒன்று . என்னைப் போலவே பத்திரிகைத் துறையிலும் (ஆனால் அவர் சினிமாப் பத்திரிக்கை ) திரைத் துறையிலும் பணியாற்றிய நண்பர் ஒருவர் . மிக நெருக்கமாக இருந்தவர் .அவரது அறையில் நான் கொட்டமடித்த நாட்கள் பல .

.இருவரில் யாருக்கு படம் இயக்க வாய்ப்பு கிடைத்தாலும் அடுத்தவருக்கு இரண்டாம் இடம் தரவேண்டும் என்பது எங்கள் முடிபு . நான் இனம் மொழி நிலம் சார்ந்த அரசியல் பேசுபவன் . அவர் கண்மூடித்தனமான திமுக அனுதாபி . அடிக்கடி நாங்கள் முட்டிக் கொண்டாலும் சற்றென்று அடங்கிப் போகும் .

ஆனால் இலங்கைப் பிரச்னைக்காக ஒன்றரை மணிநேர உண்ணாவிரத நாடகத்தை கலைஞர் நடத்திய அன்று அவரை எதிர்பாராமல் சந்தித்தேன் . அவர்தான் அரசியல் பேச ஆரம்பித்தார் . கலைஞரின் நாடகத்தை நான் தோலுரித்துப் பேச , அவர் ஒரு நிலையில் அவர் என்னை தனிப்பட்ட விதத்தில் கிண்டல் செய்து பேசினார் .
ஒரு நிலையில் கேவலமாக சிரித்தபடி " போற போக்கைப் பாத்தா நீங்க கலைஞருக்கு எதிராக குஷ்புவுக்கு கூட ஓட்டுப் போட ஏங்குவீர்கள் போல " என்றார் . நான் சொன்னேன் இப்படி ஒரு இனத் துரோகத்தை உயிர் துரோகத்தை தமிழ்க் கலாச்சார துரோகம் செய்த குஷ்பூ கூட செய்ய மாட்டார் . எனவே அப்படி ஒரு நிலை வந்தால் இந்த விசயத்தில் கலைஞருக்கு எதிராக அவருக்கு ஓட்டுப் போடுவது கூட நியாயம் ஆகலாம்" என்றேன்.

"அதுக்கு நீங்க தூக்குப் போட்டு தொங்கலாம் " என்றார் . நான் மனம் நொந்தேன் . பேசிப் பயன் இல்லை என்று வந்து விட்டேன் . அதன் பின்பு பார்க்கும்போது எல்லாம் "வாங்க .. குஷ்பூவின் அடிமையே " என்று சொல்லி விழுந்து விழுந்து சிரிப்பார் . கேவலமாய் கிண்டல் செய்வார் . என்னால் அந்தக் கொடுமையை ஜீரணிக்க முடியவில்லை என்றாலும் நட்பு நிமித்தம் பொறுத்துக் கொண்டேன் . அப்போதுதான் அது நடந்தது !

திடீரென்று ஒரு நாள் குஷ்பூவுக்கு மகுடம் சூட்டி 'திராவிடக் குலக்கொடி' ஆக்கினார் கலைஞர் . பெரியாரின் கொள்கைகளை என்பதற்கு பதில் "பெரியாரின் கொள்ளைகளை " என்று குஷ்பூ உளறியபோதும் கடிதோச்சி மெல்ல எறிந்தார் . (பின்னே குஷ்பூ என்ன கடலூர் எம் பி ஆதிசங்கரா ? தீ மிதித்ததற்காக காட்டுமிராண்டி என்று திட்டு வாங்க ?)

இப்போது நான் அந்த எனது நண்பரை தேடிப போனேன் இத்தனை நாள் அவர் என்னைப் பார்த்த கேவலமான பார்வைகளை ஒன்று திரட்டி பார்க்க எண்ணி , ஆளைப் பார்த்ததும் நட்பு முன்னிற்க மெல்ல சிரித்தேன் . அவ்வளவுதான் . முறைத்துக் கொண்டு போய் விட்டார் .

எனது அலைபேசிக்கு அவரிடம் இருந்து கேவலமான குறுஞ்செய்திகள் வந்தன . என்னை ஜெயலிதாவின் அடிமை என்றார் புதிதாக (ஜெயலலிதா திமுகவுக்கு போக மாட்டார் என்ற நம்பிக்கை !) சில தரக் குறைவான தாக்குதல்கள் . கெட்ட வார்த்தைகள் . என்னால் பொறுக்க முடியவில்லை . அவரை விட நிறைய சுளையான கெட்ட வார்த்தைகள் எனக்கும் தெரியும் என்பதை குறுஞ்செய்திகள் மூலம் நானும் நிரூபித்தேன் .

நான் திமுகவின் தமிழின துரோகத்தை மறக்கவில்லை . அவர் கடைசிவரை இனம் மொழி சார்ந்த அரசியலுக்கு வரவில்லை . எனது www.susenthilkumaran.blogspot.com வலைப் பக்கத்திற்கு ஒரு முறை கூட அவர் வரவில்லை . நட்பு முறிந்தது . இன்றும் பார்த்தாலும் முறைத்துக் கொள்கிறோம் .

இங்கே சரியான அரசியல் பேச முடியவில்லை . அதை கெடுக்க பலர் இருக்கிறார்கள் . கலைஞரின் தவறை குறிப்பிட்டால் உடனே அதை ஜெயலலிதாவுக்கு ஆதரவான பேச்சு என்றும் ஜெயலலிதாவின் தவறை சொன்னால் ,உடனே " அப்ப நீங்க கலைஞர் ஆதரவாளரா ?' என்றும் திசைதிருப்பும் வேசித்தனம் கூசாமல் நடக்கிறது

காரணம் இங்கே அடிமைகள் அதிகம் . ஆண்மையாளர்கள் ரொம்ப கம்மி . அடிமையாய் இருத்தலே ஆண்மை என்று எண்ணும் அற்பர்கள் கூட்டம் அதிகம்

கலைஞர் செய்த துரோகத்தை சொன்னால் ஜெயலலிதா மட்டும் கிழித்திருப்பாரா என்கிறார்கள் . ஜெயலிதா கிழிக்கவில்லை என்பதால்தானே இவரை முதல்வர் ஆக்கினோம் இவர் செய்யவில்லையே அப்படி இருக்க இவருக்கு எதற்கு மீண்டும் ஓட்டுப் போடவேண்டும். ரெண்டு பேரில் யாருக்குப் போட்டாலும் ஒன்றுதானே என்ற கேள்வியை யாரும் காதில் வாங்குவது இல்லை . அதிமுக உட்பட எல்லா கட்சிகளும் இப்படிதான் .

ஆனால் இப்படி ஒரு கேவலமான அரசியலை ஆரம்பித்து வைத்ததே கலைஞர்தான் . இப்போது கூட பாருங்கள் . அவரது குறைகளை சொன்னால் ஜெயலலிதா மட்டும் செய்வாரா என்பார் . அதை சொல்ல கலைஞருக்கு அருகதை இல்லை என்பார் ஜெயலலிதா . இன்னும் இதே கூத்துதான் .

தொண்டர்கள் என்ற பெயரில்--- இந்த குழாயடிச் சண்டையை அப்படியே பின்பற்றுகிற ---.பரதேசிகளிடம் ஆக்கபூர்வமான அரசியல் பேச முடியவில்லை . இப்படியாக அண்ணா அறிவுப்பூர்வமாக வைத்திருந்த அரசியலை கலைஞர் அடிமைகளின் கூச்சல் ஆக்கி விட்டார் . எனவே அரசியல் பேசுவது தவறு என்ற தவறான கருத்து உடையவர்களின் எண்ணத்துக்கு ஒரு அநியாயமான நியாயம் கிடைத்து விடுகிறது .

சரிதானே வேல்முருகன் . ஆனால் ஒன்று . என் சிற்றறிவுக்கு எட்டியவரை , நீங்கள் வெற்றி பெற வேண்டியவர் . வெல்ல வாழ்த்துகிறேன் .

12 comments:

sharfu said...

neenga thane devi weekly katturaigal eluthiyadhu?

Arivu said...

enakkum ithey ennam, naan kalaignarukkum ammavukkum matri matri votirukkiren. ippothu kalaignarukku ethiraka entha naai ninraalum aatharikkum manathu vanthuvittathu. atharkku karanam avarathu thurokama, kavithaiyaa (ex: kadalil thookki pottalum...) theriyavillai. kamal, rajini padam enraal enakku oru ticket vaangave kashtamaga irukkumpothu ivar kudumpathu sindu similukal mattum eppadi padathaiye vaangamudikirathu... antha vayitrerichalaaha irukkumooo!

ராஜ நடராஜன் said...

//இங்கே சரியான அரசியல் பேச முடியவில்லை . அதை கெடுக்க பலர் இருக்கிறார்கள் . கலைஞரின் தவறை குறிப்பிட்டால் உடனே அதை ஜெயலலிதாவுக்கு ஆதரவான பேச்சு என்றும் ஜெயலலிதாவின் தவறை சொன்னால் ,உடனே " அப்ப நீங்க கலைஞர் ஆதரவாளரா ?' என்றும் திசைதிருப்பும் வேசித்தனம் கூசாமல் நடக்கிறது//

மண்டையில அடிச்ச மாதிரி வார்த்தைகள்.
மாற்று அரசியலுக்கான தூரம் இன்னும் நகர்ந்து கொண்டே இருப்பது வேதனைக்குரியது.

VJR said...
This comment has been removed by the author.
சு.செந்தில் குமரன் said...

ஆமாம் sharfu

சு.செந்தில் குமரன் said...

அறிவு !கவிதை என்ன செய்யும் ?. கவிதை என்றாலே வாந்தி வரும் அளவு சிலர் செய்து விட்டதால் வந்த கொடுமை இது . எனக்கு கூட இப்போது அய்யகோ என்ற வார்த்தையைக் கேட்டாலே கம்பளிப் பூச்சு ஊர்வது போல உள்ளது . அதற்கு அந்த 'கவிஞர்களை ' குறை சொல்லலாமே தவிர , கவிதை என்ன செய்யும் . ?உங்களுக்காக நான் எழுதிய ஒரு சிறு கவிதை .

எண்ணற்ற துன்பங்களை
நெஞ்சில் சுமந்து ...
எங்கள் முதுகில்
கூனல் விழுந்தது !

பிடிச்சிருக்கா ?

மற்றபடி பொதுவில் உங்கள் உணர்வை மதிக்கிறேன் , வெகுவாக !

சு.செந்தில் குமரன் said...

உண்மை ராஜ நடராஜன். எனது வேதனையும் அதுதான் . உங்கள் புரிதல் வியக்க வைக்கிறது .

சு.செந்தில் குமரன் said...

VJR ...! என்ன எழுதினீங்க ? ஏன் நீக்குனீங்க? பரவால சொல்லுங்க . நான் கருத்துகளை மதிப்பவன் . நீங்களும் நம்மில் ஒருவரே !

சு.செந்தில் குமரன் said...

VJR has left a new comment on your post "# பண்ணுருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் அவர்...":

உங்களுக்கு அரசியல் புரியவில்லை. உங்கள் கூற்றுப்படி ஈழப்பிரச்சினை தீர்க்கதான் தமிழர்கள் கலைஞருக்கு ஓட்டுப் போட்டார்கள் என்றால், பிரபாகரன் இறந்த இரண்டாவது நாளில் நடந்த எலக்சனில் ஏன் மறுபடியும் கலைஞருக்கு ஓட்டுப் போட்டார்கள்?


போங்க சார், இன்னும் யோசிங்க. எங்கு குறை இருக்கு, அதை எப்படி தீர்க்க வேண்டுமென்று?

நீங்கள் நினைப்பது போல்தான் அனைவரும் நினக்க வேண்டுமென்று நினைப்பதும் ஒரு முட்டாள்தனம்.

உமக்கு ஈழம் பெரும் பிரச்சினையாக இருக்கலாம். இங்கிருக்கும் ஒரு கோவனாண்டிக்கு ஒரு கிலோ அரிசி ஒரு விசயமாக இருக்கலாம்.

முதலில் அடுத்தவர்களை முட்டாளென்று நோக்கும் முட்டாள் குணத்தை விட்டொளியுங்கள்.

இதுதான் VJR எனக்கு எழுதி பின்னர் அவராகவே நீக்கிய குருத்து .. சே ! கருத்து

ஈழப் பிரச்னை தீர்க்க கலைஞருக்கு மக்கள் ஓட்டுப் போட்டார்கள் என்று நான் எங்கே சொல்லி இருக்கிறேன் ? போதையில் பின்னூட்டம் போட்டீர்களா ? அன்று காசுக்கு தமிழன் ஓட்டுப் போட்டான் . இன்று அதன் பலனை அனுபவிக்கிறான் ?

உங்களை மாதிரி ஆட்களை வைத்துக் கொண்டு இன்னும் எங்கே யோசிப்பது ? என் உங்களுக்கு யோசிக்கத் தெரியாதா ?

நான் நினைப்பது போல யோசிக்க வேண்டாம் . என்னை விட நன்றாக யோசிக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறேன் .

உங்க தாய் மொழி வீட்டு மொழி என்ன?

அரிசி ஒரு ரூபாய்க்கு விற்று பருப்பு எண்பது ரூபாய் விற்றால் சம்மதமா என்று அந்தக் கோவணாண்டி யோசிக்க வேண்டாமா? வெறும் கஞ்சியை குடிக்க எல்லா கொவன்னாண்டியும் நோயாளியா ?
நான் யாரையும் முட்டாள் என்று நினைக்கவில்லை . அறிவாளிகள் சிந்திக்காமல் இருக்கிறார்களே என்ற வருத்தம்தான் ,

திருச்சி ஆம்னி பஸ்ஸில் பிடிபட்ட அஞ்சரைக் கோடி உங்கள் பணமா ?

சு.செந்தில் குமரன் said...

VJR has left a new comment on your post "# பண்ணுருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் அவர்...":

உங்களுக்கு அரசியல் புரியவில்லை. உங்கள் கூற்றுப்படி ஈழப்பிரச்சினை தீர்க்கதான் தமிழர்கள் கலைஞருக்கு ஓட்டுப் போட்டார்கள் என்றால், பிரபாகரன் இறந்த இரண்டாவது நாளில் நடந்த எலக்சனில் ஏன் மறுபடியும் கலைஞருக்கு ஓட்டுப் போட்டார்கள்?


போங்க சார், இன்னும் யோசிங்க. எங்கு குறை இருக்கு, அதை எப்படி தீர்க்க வேண்டுமென்று?

நீங்கள் நினைப்பது போல்தான் அனைவரும் நினக்க வேண்டுமென்று நினைப்பதும் ஒரு முட்டாள்தனம்.

உமக்கு ஈழம் பெரும் பிரச்சினையாக இருக்கலாம். இங்கிருக்கும் ஒரு கோவனாண்டிக்கு ஒரு கிலோ அரிசி ஒரு விசயமாக இருக்கலாம்.

முதலில் அடுத்தவர்களை முட்டாளென்று நோக்கும் முட்டாள் குணத்தை விட்டொளியுங்கள்.

இதுதான் VJR எனக்கு எழுதி பின்னர் அவராகவே நீக்கிய குருத்து .. சே ! கருத்து

ஈழப் பிரச்னை தீர்க்க கலைஞருக்கு மக்கள் ஓட்டுப் போட்டார்கள் என்று நான் எங்கே சொல்லி இருக்கிறேன் ? போதையில் பின்னூட்டம் போட்டீர்களா ? அன்று காசுக்கு தமிழன் ஓட்டுப் போட்டான் . இன்று அதன் பலனை அனுபவிக்கிறான் ?

உங்களை மாதிரி ஆட்களை வைத்துக் கொண்டு இன்னும் எங்கே யோசிப்பது ? என் உங்களுக்கு யோசிக்கத் தெரியாதா ?

நான் நினைப்பது போல யோசிக்க வேண்டாம் . என்னை விட நன்றாக யோசிக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறேன் .

உங்க தாய் மொழி வீட்டு மொழி என்ன?

அரிசி ஒரு ரூபாய்க்கு விற்று பருப்பு எண்பது ரூபாய் விற்றால் சம்மதமா என்று அந்தக் கோவணாண்டி யோசிக்க வேண்டாமா? வெறும் கஞ்சியை குடிக்க எல்லா கொவன்னாண்டியும் நோயாளியா ?
நான் யாரையும் முட்டாள் என்று நினைக்கவில்லை . அறிவாளிகள் சிந்திக்காமல் இருக்கிறார்களே என்ற வருத்தம்தான் ,

திருச்சி ஆம்னி பஸ்ஸில் பிடிபட்ட அஞ்சரைக் கோடி உங்கள் பணமா ?

chandru2110 said...

ஈழம் விஷயத்தை பொறுத்தவரை கலைஞ்சர் , ஜே ரெண்டு பேருக்கும் ஒட்டு கேக்க தகுதியில்ல. இலவசம்ன்னு நம்மளை பிச்சை காரனா மாத்துறாங்க. எதோ இப்ப விழிப்புணர்வு அதிகமாகுற மாதிரி தேயுது . கிராம புற மக்களை நினைச்சாதான் கவலையா இருக்கு . அவங்கதான் அதிகம் எமாத்தபடுறாங்க . வேலை வாய்ப்புக்கு ஆதாரத்தை பெருக்கக எந்த முயற்சியும் இல்ல.
நான் குஜராத்துல பாக்குறேன், அரசு அலுவலங்கள்ள எந்த லஞ்சமும் இல்ல, கால தாமதமும் இல்ல. என் நண்பனோட அம்மாவுக்கு இறப்பு சான்றிதழ் வாங்குறப்ப , இதை பார்த்தேன். விலை வாசிஎல்லாம் ரொம்ப குறைவு. மது இல்ல. அசைவமும் அதிகம் இல்ல. எங்க பார்த்தாலும் industrial ஏரியா அமைச்சு தொழில்ல பெருக்குறாங்க, அது விவசாயம் பண்ற ஊரா இருந்தாலும். நம்ம தமிழ் நாடு எப்பாதான் இப்படி ஆகுமோ .

சு.செந்தில் குமரன் said...

குஜராத பற்றி இன்னொரு விஷயம் சொல்லவா சந்துரு ?
அரசுப் பணம் ஐயாயிரம் கோடி ரூபாயை தனியார் நிறுவனங்களுக்கு வட்டி வாங்கும் கடனாக கொடுத்து அந்த வட்டி பணத்தில் கூட இலவசப் பிச்சைகளைத் தராமல் தொழில் தொடங்கி முதலீடு செய்கிறது குஜராத் அரசு . அவர்களின் கால் தூசுக்கு ஈடாக மாட்டார்கள் நம்ம குப்பைகள் .

Post a Comment