தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் பெற்றி தோல்விக்கான காரண காரியங்களைச் சொல்வது ஒன்றும் பெரிய விசயமில்லை என்பது உண்மைதான்.ஆனால் சொல்ல வேண்டியது அவசியம் என்பதும் உண்மைதான்.
அ.தி.மு.க அணி தோற்கக் காரணங்கள்:**************************
1)இன நலம் , சமூக நலம், பொது நலம் இல்லாத ...ஆக்க பூர்வமான சுய நலம் கூடப் பார்க்கத் தெரியாத ...தற்காலிக அற்ப சந்தோஷம் தருகிற சில நூறு ருபாய்த் தாள்களில் தன்னைத் தொலைத்து விடுகிற ஒரு தரப்பு மக்களின்வெட்கங் கெட்ட நாலந்தர சுய நலம்.
2)முடிவுகளைத் தீர்மானிக்கிற மக்களின் மன நிலையைக் கூட கடைசி நேரத்தில் மாற்றுகிற ... நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட கலைஞர் கருணாநிதியின் தேர்தல் காலத் தந்திரங்களும் வாக்குப் பதிவு நேரச் செயல்பாடுகளும்.
3)ரொம்ப காலமாக ஈழ மக்களுக்கு எதிராகவே செயல் பட்டுவிட்டு கடைசி நேரத்தில் தனி ஈழ ஆதரவை மிகவும் உரத்து முழங்கியதால் ஜெயலலிதா மீது மக்களுக்கு ஏற்பட்ட நம்பகமின்மை.(மற்றபடி ஈழ ஆதரவு அலையே இல்லை என்பதை ஒத்துக் கொள்ள முடியாது)
4)கூட்டணிக் கட்சித் தலைவர்களோடு ஒரு மேடையில் கூட ஜெயலலிதா ஒன்றாகத் தோன்றி மக்களுக்கு மக்கள் மனதில் ஒரு இணக்க உணர்வை ஏற்படுத்தாதது.
5)வைகோவை ஜெயலலிதா கடைசி வரை முழுமையாக அங்கீகரித்து ஈழ ஆதரவுக் குரலை மக்கள் மக்கள் நம்பும் வகையில் முழுமைப் படுத்திக் கொள்ளாதது.
6)காங்கிரசிடம் பொட்டி வாங்கிக் கொண்ட விஜயகாந்த் அதற்குப் பிரதி பலனாக தீவிரப் பிரச்சாரம் செய்து ஆளுங்கட்சிக்கு எதிரான மன நிலையுள்ள மக்களின் வாக்குகளில் ஒரு பகுதியைப் பிரித்து வீணாக்கியது.(உதாரணம் வைகோவின் தோல்வி)
7)கடைசி தினம் வரை பா.ம.க. மத்திய ஆட்சியில் அங்கம் வகித்ததை மக்கள் அவ்வளவாக ரசிக்காதது.
8)வாராது வந்த மாமணி போல கோர்ட் அனுமதி வழங்கிய ஈழ ஆதரவு வீடியோக்களின் ஒளிபரப்பை மக்கள் டி.வி.மட்டும் ஒளிபரப்ப ஜெயா டி.வி. தானும் அதைச் செய்து மக்கள் மத்தியில் உணர்வு அலையை எழுப்பத் தவறியது. அதன் ஒளிபரப்பை காவல்துறை தடுத்த போது ஜெயலலிதா அதை மக்கள் மன்றத்துக்கு வலுவோடு கொண்டு போகத் தவறியது.
9)ஓட்டுப் பதிவுக்கு முன்பே ,ஜெயித்து முடித்துவிட்ட மிதப்பில் ஜெயலலிதா காட்டிய கடைசி கட்ட அலட்சியம்.தொண்டர்களும் கடைசி நேரத்தில் ஓய்ந்து விட்டது
10)தேர்தல் பிரச்சார சமயத்தில் கூட ஒழுங்காக பணம் செலவழிக்காமல் தொண்டர்களை அதிமுக கறும்புள்ளிகள் காய விட்டது.
எப்படி வென்றது தி.மு.க. அணி??************************
என் பணம் பணம் ...உன் பணம் பணம் ...உன் பணம் , என் பணம்! உன் பணம் பணம் ...என் பணம் பணம் ...என் பணம்,என் பணம்!(பொறூமையாக ஊன்றிப் படித்தால் உள்ளர்த்தம் புரியும்)
Showing posts with label fall. Show all posts
Showing posts with label fall. Show all posts
Saturday, May 16, 2009
Subscribe to:
Posts (Atom)
