
அட..ஆஸ்திரேலியா இல்லீங்க .. ஆஸ்திரியா..! உங்க சந்தேகம் நியாயமனதுதான். நம்ம ஆட்கள் பல பேருக்கு ஆஸ்திரேலியா தெரிஞ்ச அளவுக்கு ஆஸ்திரியா தெரியாது.
அந்த ஆஸ்திரியாவுல வியன்னான்னு ஒரு நகரம் ..அங்க ஒரு குருத்துவாரா..!அந்த குருத்துவாரா உள்ள துப்பாக்கியோட நுழைஞ்ச சிலபேரு சுட்டதுல அந்த குருத்துவாராவுல இருந்த ராமானந்த் என்ற குரு இதயத்துல துவாரம் விழுந்து செத்துப் போயிட்டாரு.அவருடன் இன்னும் ஒரு 8 பேரும் செத்துட்டாங்க!சுமார் 30 பேரு படுகாயத்துடன் கவலைக்கிடம்.
நடந்தது எங்க...?
அடஆஸ்திரேலியா இல்லைங்க ..ஆஸ்திரியா..!
எங்க ,திருப்பிச்சொல்லுங்க ..ஆஸ்திரியா.கரெக்ட்!
சுட்டவன் வேற மதத்துக்காரனோ வேற மொழிக்காரனோ வேற .இனத்துக்கரனோ இல்லீங்க.அதேஏஏ....... சீக்கியன்ல இன்னொரு பிரிவு.அதாவது நம்ம ஊர்கள்லயும் அப்பப்ப முட்டாள்தனமா நடக்குமே சாதிக் கலவரம் ... அது மாதிரியான
சமாச்சாரம்
சமபவம் நடந்த சில மணி நேரத்துக்குள்ள இந்திய பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் எல்லாம் அநியாயமா ஆஸ்திரியாவோட ..ஆங்.. அது என்னங்க.. அதான் .. இறையாண்மை...அதுல அராஜகமா தலையிட்டு.."உடனே நடவடிக்கை எடு .. உடனே நடவடிக்கை எடு "ன்னு படுத்தி எடுத்துட்டாங்க..
ஆஸ்திரியாக்காரன் ,"அட இருங்கடா.. உங்க ஆளுங்க .. இங்க பொழைக்க வந்துட்டு இங்கயும் ஜாதி பிரச்னை அது இதுன்னு அசிங்கம் பண்ணி சுட்டுக்கிட்டு அசிங்கப் படுத்தினா , நீ வேற சரியா விசாரணை கூட பண்ண விட உசுர வாங்கறீங்க"ன்னு பொரிஞ்சுக் கிட்டே பதில் சொல்லுறான் .
ஆஸ்திரியாவுல ..மறுபடியும் சொல்றேன் ஆஸ்திரேலியா இல்ல...ஆஸ்திரியா ..அங்க சீகியனுங்க ரெண்டு பிரிவா பிரிஞ்சு அடிச்சுக்கிட்டதுக்காக.. இங்க .. நம்ம நாட்டுல ... பஞ்சாப் ல அதே ரெண்டு பிரிவு சீக்கியனுங்களும் அடிசுக்கிட்டு வெட்டிக்கிட்டுச் சாகுறாங்க.. சரி அது அவங்க விருப்பம் .. நாம சொல்ல ஒண்ணும் இல்ல..
ஆனா..மக்கள் வரிப் பணத்துல உருவாக்கப் பட்ட ஏகப் பட்ட பொது சொத்துக்களை உடைச்சு எரிச்சு நாசம் பண்றாங்க.லுதியானா , ஜலந்தர், ஜம்மு கலவரம் சும்மா அம்மு அம்முனு அம்முது.கன்யாகுமரி வர்ற ரயிலுக்கு தீ வச்சு இருக்காங்கனா பாருங்களேன்.
இங்க இலங்கையில அ நியாயமா அழிக்கப் படுற தமிழனுக்காகவும் அவன காப்பாத்தப் போராடின இயக்கங்களுக்காகவும், இலங்கைக் க்டற்படையால் சுட்டுக் கொல்லப் படுற தமிழ் நாட்டு மீனவனுக்காகவும் குரல் கொடுத்து ரெண்டு வார்த்தை பேசினாலே தேசிய பாதுகாப்புச் சட்டத்தைத் தூகிக் கிட்டு வந்த பசங்க .. அதுக்கு ஒத்து ஊதின வெத்து வேட்டுங்க எல்லாம்..
சீக்கியன்னு வரும்போது மட்டும் ஊரடங்கு உத்தரவு போடுறானே ஒழிய..மத்தபடி வாயப் பொத்திக்கறான். நியாயமான விசயத்துக்கு சட்டத்தை ஆண்மையொடு பயன்படுத்தாத வெத்துவேட்டாத் திரியுறான்.
பிரதமர் மன்மோகன்சிங் என்னடான்னா.. ஒரு பிரதமரா லட்சணமா குற்றம் செய்பவர்களை எச்சரிக்காம ... அமைதியா இருங்கன்னு கால்ல விழுந்து கெஞ்சிக் கதறி அறிக்கை விடறாரு.
ஊர ஏமாத்தி ஜெயிச்சி உள்துறை அமைச்சரா உட்கார்ந்துருக்கற ப(ணப் பெட்டி).சிதம்பரமும் கூட,உள்துறை அமைச்சரா லட்சணமா கலகம் செய்பவர்களைக் கண்டிச்சு அறிக்கை விட வக்கு இல்லாம பஞ்சாப்க்கு 14 துணை ராணுவப் பிரிவுகளை அனுப்பியாசுன்னு சொல்லி நிறுத்திக்கிச்சு.
அட அதோட விட்டிருந்தா கூட இன்னிக்கு நான் இத எழுத வேண்டிய அவசியம் வந்திருக்காது.
பஞ்சாப் ல சதி வெறி பிடிச்சு கலவரம் பண்ணி இந்தியாவின் பல பகுதி மக்களையும் பாதிப்புக்குள்ளாக்குகிற தேச விரோதிகளையும் கலகக் காரர்களையும் கண்டிச்சு ஒரு வார்த்தை கூட .. ஒரு ஹோம் மினிஸ்டர் என்ற ரீதியில் பேசும் ஆண்மை இல்லாத ப.சிதம்பரம் இன்னிக்கும் சொல்லி இருக்கிறது என்னனா..
"விடுதலைப் புலிகள் ....கடற்கரை வழியாக.... ஊடுருவ வாய்ப்பு உள்ளது.....கவனமா இருக்கணும்......"
அட தூ.........................!
இதெல்லாம் என்ன ஜென்மம்னே தெரியல.
கண்முன்னாடி கலவரம் பண்ணி பொது சொத்துக்களைச் சேதப் படுத்தும் சீக்கியனை ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இன்னும் விடுதலைப் புலிகளின் பெயரைச் சொல்லிப் பிழைக்கத் துடிக்கும் இதுகளை மனசாரத் திட்ட உலகின் எந்த மொழிகளிலும் வார்த்தைகள் இருப்பதகத் தெரியவில்லை.
ஆகவே தமிழா..!
எங்கோ..ஆஸ்திரியாவுல (ஆஸ்திரேலியா இல்ல....) ஒரு பத்துப் பதினைஞ்சு சீக்கியனுங்க கொழுத்துப் போயி தங்களுக்குள்ள துப்பாக்கியால சொறிஞ்சுகிட்டதூகாக இன்னிக்கு சீக்கியர்கள் கலவரம் செய்து இந்தியாவின் ஒரு பெரிய பகுதியையே ஸ்தம்பிக்க வச்சாலும், அவனுங்க மேல கை வைக்க ஒரு பய புள்ளைக்கும் தெம்பு இல்ல..
ஆனா.. இலங்கையில உன் ரத்த உறவுகள் மூணு லட்சம் பேர் கொல்லப் பட்டு .. பழைய பதுங்கு குழிகளில் உயிரோடு தள்ளப் பட்டு மண் கொட்டி உயிரோடு மூச்சுத் திணற வைத்துக் கொல்லப் பட்டாலும், காயம் அடைந்த மக்கள் மீது புல்டோசர் கொண்டு ஏற்றி நொறுக்கிக் கொல்லப் பட்டாலும் உன்னால ஒண்ணும் புடுங்க முடியாது.
ஏன்னா.. நீ இன உணர்வு இல்லாத ஜடம்.தேவையான தேர்தல் சமயத்துல மட்டும் சில நூறு ரூபாய்களை உன் மூஞ்சியில வீசி அடிச்சா, அதைப் பொறுக்கிக் கிட்டு உன் வாக்குரிமையை கூட்டிக் கொடுத்துடுவன்னு அவனுக்கு நம்பிக்கை இருக்கு.
அரசியல் தலைவர்கள் என்பவர்கள் நமது வேலைக்காரர்கள் என்பதையும் வேலையை ஒழுங்காகச் செய்ய வில்லை என்றால் அவனைத் துக்கி எறிய வேண்டும் என்றும் தெரியாமல் ,
என்னதான் அரசியல்வாதிகள் உன்னை ஏமாற்றினாலும் ஓட்டுப் போடுவது என்பதை, தவறாக ... குல மகளிரின் கற்பு நெறி போல அவனுக்கே ஓட்டுப் போடுகிற அற்பம் நீ.
என்னதான் அரசியல்வாதிகள் உன்னை ஏமாற்றினாலும் ஓட்டுப் போடுவது என்பதை, தவறாக ... குல மகளிரின் கற்பு நெறி போல அவனுக்கே ஓட்டுப் போடுகிற அற்பம் நீ.
அதனல்தான் சீக்கியன் அநியாயம் செய்தும் இந்தியாவைக் கதற வைக்கிறான் .
ஆயிரமாயிரம் இழப்புக்களைச் சந்தித்தும் நீ வின்னர் படத்துக் கைப் புள்ள வடிவேலு மாதிரி வீணாகிக் கொண்டிருக்கிறாய்!
2 comments:
அற்புதமான செய்தி, ஆனால் உண்மை சுடுகிறது!
If i making a comment on this, i will b in trouble and also i will get the author also in to that. so am contraining my self......
Post a Comment