வாக்குப் பதிவு நடந்த மே 13ந்தேதி வெளியான குமுதம் இதழில் துக்ளக்(ஆசிரியர்)சோ ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.அதில் அவர் கூறியுள்ள ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கருத்து ..."இந்த தேர்தலில் தமிழகத்தில் இலங்கைப் பிரச்னை பெரிய அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை"
ஆரம்பத்தில் நிறைய பேருக்கு இந்த கருத்து அல்லது பயம் இருந்தது உண்மை.மறுக்கவில்லை.ஆனால் நாளடைவில் மனிதாபிமானிகளும் இன உணர்வு உள்ளவர்களும் நிம்மதிப் பெருமூச்சுவிடும் வகையில் ஈழ விவகாரம் தமிழக தேர்தல் பிரசாரத்தை ஆட்டிப் படைத்தது என்பது எல்லோர்க்கும் தெரிந்த விசயம்.
ஒரு வேளை தேர்தல் அறிவிக்கப் பட்ட ஆரம்பக் கட்டத்தில் சோ இப்படி ஒரு கருத்தைக் கூறி இருந்தால் கூட சரியாகத்தான் கணிக்கிறாரோ என்று நாம் எல்லாரும் தவறாக நினைத்து இருக்கக் கூடும்.
ஆனால் ஈழப் பிரச்னை தமிழக தேர்தல் களத்தை முழுதாக ஆக்கிரமித்து விட்டது கண்டு வட இந்திய அரசியல்வாதிகளே கிடுதாக்கிப் போய் இருந்த நிலையில் வாக்குப் பதிவு அன்று வெளியாகிற இதழில் அவர் இப்படி ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார் என்றால் ... அப்புறம் கவுண்டமணி பாணியில் " ரொம்ப நாள் 'உள்ள' இருந்துட்டு வந்தீங்களா?" என்று கேட்பதைத் தவிர வேறு வழியில்லை.
அவரது கருத்துக்கு வலு சேர்க்க அவர் கண்டுபிடித்துச் சொல்லி இருக்கும் காரணம் .. அடடா அபாரம்! அதாவது ஜெயலலிதா பேசசுகிற கூட்டங்களில் எல்லாம் அவர் பேசத் துவங்குவதற்கு முன்பு ரபி பெர்னார்ட் மக்களிடம் அதிமுகவை ஆதரிப்பதற்கு என்ன காரணம் என்றூ கேள்வி கேட்கிரறாராம்.அதற்கு எல்லாரும் விலைவசி உயர்வு , மின்சாரத் தட்டுப்பாடு போன்றவற்றைத்தான் காரணமாகச் சொல்கிறார்களாம் . யாரும் இலங்கைப் பிரச்னையைக் காரணமாகச் சொல்லவே இல்லையாம்.அதனால்தான் சொல்கிறாராம் .. இந்த தேர்தலில் இலங்கைப் பிரச்னை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையாம். இது எப்படி இருக்கு? சில மாதங்கள் முன்பு வரை ஈழம் என்ற சொல்லையே உச்சரிக்க வெறுத்த-- ஜெயலலிதா போர் என்றால் அப்பாவி மக்கள் சாவது சகஜம்தான் என்று சொன்ன ஜெயலலிதா இன்று தனி ஈழ முழக்கத்தில் திளைப்பதைப் பார்த்தாலே புரியும் ஈழப் பிரச்னை எந்த அளவு தமிழக தேர்தல் களத்தைப் பாதித்து உள்ளது என்பதை உணர.
சோ உதாரணம் காட்டிய ஜெயலலிதாவின் பிரசாரக் கூட்டங்களில் இருந்தே சோவுக்கு நிரூபிக்க முடியும். பொதுவில் வழக்கமாக ... ஜெயலலிதவுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ ... எம்.ஜி.ஆரின் பெயரையும் இரட்டை இலை சின்னம் பற்றியும் ஜெயலலிதா பேசும்பொதுதான் , அதிமுக கூட்டங்களில் அதிக கைத்தட்டலையும் கரகோஷத்தையும் பார்க்க முடியும்.ஆனால் இந்த முறை அந்தப் பெருமை தனி ஈழ ஆதரவுப் பிரகடனத்துக்குப் போய்விட்டது என்ற உண்மை ... வெயிலுக்குப் பயந்து ஏ.ஸி. அறையிலேயே அடைந்து கிடந்ததால் சோவுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்.பாவம்.
தேர்தல் களத்தை விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் பாதிக்கவே இல்லை என்று சொன்னால் அப்புறம் சோவுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். நமக்கு எதற்கு அந்த கேவலம்? விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் தமிழனின் உணவையும் ஈழக் கொடுமைகளும் அதற்கான இந்தியத் துரோகங்களும் அவன் உணர்வையும் பாதித்தது என்பதே நிஜமான அறிவாளிகளின் சரியான புரிதல்.
அப்படி இருக்க இலங்கைப் பிரச்னை தேர்தல் களத்தில் பாதிப்பை எற்படுத்தவில்லை என்று சோ செருமுவதைப் பார்க்கும்போது அந்தப் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.சோ என்ற பூனை கண் மூடிக் கொள்வதால் தமிழகத்தின் தனி ஈழ ஆதரவு என்ற பூலோகம் இருண்டு விடவில்லை.

7 comments:
மிகச் சரியா சொல்லியிர்கீங்க செந்தில்குமரன்.
மிக்க நன்றி பிரபு
it is better and intersting to read rather an news paper
Guess Now Everyone agrees Cho is right!!
Now we know Who is the 'Kanmoodi knoda poonai'.
NEVER UNDER-ESTIMATE CHO's ACUMEN.
சபாஷ் ராஜேஷ். இப்போது தெரிந்திருக்கும் யார் கண் மூடிய பூனை என்று.
ஈழ பிரச்னையை மக்களிடம் சரியானபடி கொண்டு செல்லாமல் அதை தரங்கெட்ட பாரதிராஜா, போன்ற சினிமாக்காரர்கள் தூக்கிக்கொண்டு திரிந்ததால் வந்த வினை இது. உங்களுக்கு நீங்களே வைத்துக்கொண்ட ஆப்பு.
ஈழ தமிழருக்கு யாராவது உதவி செய்ய விரும்பினால், தயவு செய்து சினிமாக்காரார்களை அதில் இழுக்காதீர்கள். அதுவும் சீமான், செல்வமணி, பாரதிராஜா போன்ற தரங்கெட்ட ஆசாமிகளை வைத்து....
அய்யா கண் மூடாத பூனைகளே!
இப்போதும் சோ சொன்னது தப்புதான்.
இவ்வளவு பண நாயகத்தையும் மீறி இத்தனை இடங்களில் அதிமுக அணி வெல்லக் காரணமும் ,கொட்டப் பட்ட பணக் கட்டுக்களையும் மீரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் , தங்கபாலு, மணசங்கர அய்யர் தோற்கவும் , 3000 ஓட்டு வித்தியாசத்தில் ப.சிதம்பரம் திருட்டு வெற்றி பெறவும் காரணம் .... இவர்கள் எல்லோருமே ஈழப் பிரச்னையில் மனசாட்சியின்றிப் பேசியவர்கள்.அப்படி என்றால் வை.கோ. ஏன் தோற்றார்? அதான கேட்குறீங்க? ஆளும் அணியின் பணம். அதே பாணியில் விஜயகாந்த் கட்சியின் மா.பா. பாண்டியரஜன் காசு கொட்டிப் பிரித்த ஒன்னேகால் லட்சம் ஓட்டுக்கள்.
u r all upper setimating cho always (alas) man.
dont close ur eyes with cho(rus)
வெற்றி தோல்வி கட்டுரைக்கு ஈழ நண்பன் என்ற அடைமொழியோடு வந்து பசப்பி விட்டு இங்கு சோவை ஆதரிக்கும் சிவ சிவா, இப்பதான் புரியுது.அவனா நீ? சினிமாக்கரங்கள குறி வச்சுத் தாக்குறியே.. நீ சினிமா ல சேர ஆசைப் பட்டு சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்னு ஓடி
வந்தவன் இல்லியே...
Post a Comment