

இதை எல்லாம் எழுத வேண்டுமா என்றுதான் முதலில் யோசித்தேன்.
எழுத வைத்த பெருமை (அல்லது சிறுமை) நமது வெகுஜனப் பத்திரிக்கைகளையே சாரக் கடவது!
பத்து நாட்களாகவே விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து அவரது ரசிகர்களை விட அதிகமாகவே ஆர்வம் காட்டுகின்றன பத்திரிக்கைகள் . கல்யாணப் பத்த்ரிக்கைகளைத் தவிர மற்ற எல்ல பத்திரிகைகளிலும் இதே பேச்சு.
அதுவும் ஒரு பெரிய பத்திரிக்கை 'அரசியலுக்கு வருவது உறுதி விஜய் அறிவிப்பு ' என்று அட்டைப் படக் கட்டுரை போட்டால் அதே நாளில் வரும் இன்னொறு பெரிய பத்திரிக்கை 'விஜய்க்குப் பதில் சொல்லும் அஜித்' என்று அட்டைப் படக் கட்டுரை வெளியிட்டு மக்கள் மீது தனக்குள்ள 'அக்கறை'யைக் காட்டியது.
எத்தனை ரசிகர்களுக்கு தெரியுமோ தெரியாதோ... விஜய்யின் மனைவியாகிய அந்தச் சகோதரி ஓர் இலங்கைத்
தமிழ்ப் பெண். ஆனால் வெகு நாட்களுக்கு முன்பே லண்டனில்( சரிதானே?) வாஅத் துவங்கிய குடும்பம் அது.
அந்த ஒரு காரணாத்துக்காகவே இலங்கைத் தமிழருக்கான ஆதரவுப் போராட்டங்களில் தனது ரசிகர் மன்றத்தின்
துணையோடு விஜய் தீவிரமாகக் களம் இறங்குவார் என்று எதிர்பார்த்த முட்டாள்களில் நானும் ஒருவன். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே ஒரு நாள் உண்ணாவிரதததில் உட்கார்ந்தார். அடுத்து ஒரு நாள்( அல்லது
அதே தினத்தில்?) அவரது ரசிகர்கள் மாநிலம் முழுக்க அடையாள (!) உண்ணாவிரதம் இருந்தனர்.
நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்தின் போது , நன்கொடை வசூலித்து உடல் ஊனமுற்றவர்களைக் காப்பாற்றும் ராகவா லாரன்ஸ் கூட பல லட்சங்கள் ஈழத் தமிழருக்கு நன்கொடை தருவதாக அறிவித்தார். ஆனால் அதே மேடையில் அதை விட அதிக்த் தொகஒ அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜய்.....
'என் ரசிகர்கள் எல்லோரும் பிரதமருக்குத் தந்தி அடிக்க வேண்டும்' என்று அறிவித்தார். (உண்மையில் விஜய்யின் இந்த அறிவிப்பைப் பார்த்து கருணாநிதி ஒரு நிமிடம் ஆடித்தான் போயிருப்பார்.......'என்ன்டா இது... ! கடிதம் எழுதியும் தந்தி அடித்தும் பிரச்னையை இழுத்தடித்து சிங்களவனுக்கு நல்ல நீண்ட நெடிய சந்தர்ப்பம் தந்து ஈழத்தமிழன் எல்லோரையும் சாகடிப்பது என்பது நமது ராஜ(நரித்)தந்திரம் ஆயிற்றே..! இந்தத் தம்பி ஏன் அதற்குப் போட்டிக்கு வர்றான்' என்று).
இதுதான் விஜய்யின் அரசியல்!
ஒரு வார அதிரி புதிரிக்குப் பின்பு 'இப்போதைக்கு நேரடி அரசியல் இல்லை' என்ற முடிவுக்கு விஜய் வந்திருபதாகக் கூறப் படுகிறது.
அதே நேரம் 'மக்க்ள் பிரச்னைகளுக்காக எனது ரசிகர்களைத் திரட்டிப் போராடுவேன் ' என்றும் கூறுகிறார் விஜய். ( அட... இதுதான் சார் நிஜமாவே அரசியல்!)
அண்மையில் இது பற்றி விஜய்யின் தந்தையும் மரியாதைக்குரிய இயக்குனருமான எஸ். ஏ. சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறிய ஒரு விஷயம் கவனிக்கத் தக்கது.
' தி.மு.க விற்கு எதிராகப் போகாத நிலையில் விஜய்யின் அரசியல் இருக்கும்' என்றெல்லாம் அதில் கூறியிருந்த சந்திர சேகர் சொல்லியிருந்த இன்னொரு விஷயம்...." விஜய்யின் அரசியல் பிரவேசத்தைப் பார்த்து ( விஜய்யின் ரசிகர்கள் பலத்தைப் பார்த்து )விஜய்காந்தே பயப்படுகிறார்." என்பதுதான்.
இப்படி ஒரு கருத்தை( அது உண்மையென்றே வைத்துக் கொண்டாலும்) சந்திர சேகர் நேரடியாகச் சொன்னது எப்படி?
விஜய்காந்தின் ஆரம்பகால சினிமா வெற்றிகளில் மிகப் பெரும் பங்கு சந்திரசேகரையே சாரும். விஜய்காந்தின் வெற்றியின் குரு என்று சந்திரசேகரைத் தாராளமாகச் சொல்லலாம். அந்த நன்றி காரணமாக தமது கருத்தை எதிர்த்து விஜய்காந்த் ( வெளிப்படையாகப் )பேச மாட்டார் என்று இயக்குனர் நினைத்திருக்கலாம். மீறிப் பேசினால் அதையே விஜய்யின் பரபரப்பான அரசியல் பிரவேசத்திரற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று திட்ட மிட்டிருக்கலாம்.
எப்படி ஆரம்பத்தில் ரஜினிகாந்துக்கும் ( அய்யோ பாவம்) விஜயகாந்துக்கும் ஒரு அரசியல் ஒப்பீடு ஏற்பட்டதோ அப்படி ஒரு ஒப்பீட்டை எடுத்த எடுப்பிலேயே விஜய்காந்த் மூலம் விஜய்க்கு ஏற்படுத்த முடிவு செய்திருக்கலாம். இதைத் தவிர்பதற்காகவே இதற்குப் பதில் சொல்லாமல் விஜய்காந்த் அமைதி காக்கலாம் இன்றுவரை.
ஒரு விசயம் மறக்க முடியாதது.
யாருடைய ஆதரவும் இன்றி... சொல்லப் போனால் விஜய்காந்தின் ஆதரவு கூட இல்லாமல்... விஜய்காந்தின்ரசிகர்கள்உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல.இன்று வரை அரசியலில் விஜய்காந்தின் தங்க நிமிடம் என்று நான் அதைத்தான் சொல்லுவேன்(விருத்தாச்சலம் வெற்றியை விட)
ஆனால் அதன் பின்னர் விஜய்காந்த் அரசியலில் செய்தது எல்லாம் தவறுகள்தான். விளைவு?
'விஜய்காந்த் நினைத்தால் ஒருவரது வெற்றியைத் தடுக்க முடியும். மற்றபடி அவரால் ஜெயிக்க முடியாது.அவர் ஒரு அரசியல் கத்தி. அதைக் கையில் வைத்து இருப்பவர் தனது எதிரியின் கழுத்தை வறட் வறட் என்று நன்றாக அறுக்க முடியும்" என்றாகி விட்டது.
விஜய் ரசிகர்களைப் பொறுத்தவரை ஒரு அமைதியான வேகம் அவர்களிடம் இருப்பதை உணர முடிகிறது.இதுவரை பயன்படுத்தப்படாத உத்வேகம் அவர்களது பலம். இயக்குனர் சந்திர சேகரால் அவர்களை ஒரு வகையிலாவது பயன்படுத்திக் கொள்ள முடியும். ஏனெனில் யாரை நேரடியாக இழுக்க வேண்டும்; யாரிடம் அடக்கி வாசிக்க வேண்டும் என்ற நேக்கு போக்கு அவரிடம் இருக்கிறது.
அதே நேரம் இதுவரை விஜய் செய்திருக்கும் (அரசியல் அல்லாத?) அரசியல் பாராட்டும்படி இல்லை என்பதையும் குறிப்பிட வேண்டியது கட்டாயமாகிறது.
சரி.. ... இயக்குனர் குறிப்பிட்டது போல, உண்மையிலேயே விஜய்யைப் பார்த்து விஜய்காந்த் பயப்படுகிறாரா? அல்லது பயப்பட வேண்டிய நிலையில் இருகிறாரா?
விஜய்காந்தின் தாய்மொழி தெலுங்கு என்றாலும் ( அவரை ஆதரிக்கும் பலபேருக்கு அது தெரியாது என்பது வேறு விசயம்), ' ஏய்க்க்... நான் மதுரைக்காரன்ல்ல.....' என்ற அடையாளம் ... மேடைகளில் அவர் பேசும்போது, " வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும் ' என்ற அவரது பேச்சு கொஞ்சம் உணர்வுடன் இருப்பதாகவே தோன்றியது , படங்களில் அவர் மாய்ந்து மாய்ந்து பேசிய 'தமிழன்' வசனங்கள்... எல்லாம் அவருக்குப் பெரும்பலம். அவரை தமிழராகவே எல்லோரும் பார்த்தார்கள் .
ஆனால் கல்யாணம் என்று வந்த போது தேடிப் போய்த் தெலுங்கு குடும்பத்துப் பெண்ணாகப் பார்த்து செய்தது முதல் சறுக்கல்.( அல்லது பொது மக்களிடம் குட்டு வெளிப் பட்ட முதல் சம்பவம்)
சரி .. நடந்தது நடந்து போச்சு... பொண்டாட்டி , புள்ளைன்னு ஆயிப் போச்சு.. இனிமே மாத்த முடியாதுதான்.
ஆனால் கட்சி ஆரம்பித்த பின்பு மைத்துனரின் விருப்பப்படி பல்வேறு ஊர்களில் கட்சிப் பதவிகளில் தெலுங்கு பேசுபவர்களுக்குத் திட்டமிட்டு ப் பதவிகள் தரப் படுவதாக வந்த புகார்கள் .....
மனைவி , மைத்துனரின் கருத்துப்படி காங்கிரசோடு கூட்டணி அமைத்து நா....ற்பது தொகுதியும் வென்று உடனடியாக ஆட்சியைக் கலைத்து முதல்வராகிவிடலாம் என்ற ஆசையில் , காங்கிரசை எதிர்க்கக் கூடாது என்று .....
ஈழத் தமிழர் பிரச்னையில் வாயில் ஒரு டன் அல்வாவையும் கைகால்களில் 100 டன் இரும்பையும் கட்டிக் கொண்டவர்போல அமைதிகாத்தது...... ( அதிலும் காங்கிரசாரைக் குளிர்விக்க பிரபாகரன் மேல் உள்ள பற்றால் தன் மகனுக்கு அந்தப் பெயர் வைக்கவில்லைகேப்டன் பிரபாகரன் பட ஞாபகமாகத்தான் வைத்தேன் என்று கதர்குல்லா ஆட்களுக்குக் குல்லா [போட்டது எல்லாம் சகிக்க முடியாத வழுக்கல்கள்)
" மின்சாரப் பிரச்னையைத் தீர்க்க என்னிடம் திட்டம் உண்டு.. ஆனால் அதை நான் ஆட்சிக்கு வந்தால்தான் சொல்வேன். இபபவே சொன்னா காப்பி அடிச்சுடுவாங்க' என்ற ரீதியில் பிதற்றியது......
" நான் ஆட்சிக்கு வந்தால் ரேசன் பொருட்களை வீடு தேடி வந்து தரச் செய்வேன்" என்று அறிவித்ததன் மூலம் , தானும் அதே நாற்றக் குட்டையில் ஊறிய மட்டை என்று நிரூபித்தது..!
கட்சியின் கொள்கைத் திட்டத்தில் " தமிழ் மொழியைக் காப்போம் .. அனைத்து மொழிகளையும் கற்போம்" என்று சொல்லாமல் , மனைவி மைத்துனரின் தெலுங்கு ஆதிக்கம் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருந்த அதே சமயத்தில் கொள்கைத் திட்டத்தில் "அன்னை மொழியைக் காப்போம்; அனைத்து மொழிகளையும் கற்போம் " என்று அறிவித்ததன் மூலம், " விஜய்காந்த் யாரோட அன்னை மொழியைக் கற்போம்னு சொல்றாரு? அவரு அன்னை மொழியான தெலுங்கைச் சொல்றாரா? இல்லை நம்ம அன்னை மொழியான தமிழைச் சொல்றாரா? என்ற குழப்பத்தை ஏற்படுத்தியது.......
அண்மைக் கால விசயம் என்றால் திமுக சொல்படி கேட்ட காங்கிரசின் சொல்படி கேட்டு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஈழ ஆதரவுக் கூட்டணியின் ஓட்டுக்களைப் பிரித்து அதைத் தமிழகத்தில் தோற்கடித்து ஈழத்தின் துரோகிகள் பட்டியலில் இணைந்தது.....
இபபடி விஜய்காந்த் செய்த தவறுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட விஜய்காந்த் வேறு. ஆனால் கிடைத்த விஜயகாந்த் வேறு.
ஆக ,மேற்கொண்டு விஜய்காந்த் தனது மனைவி மைத்துனருக்கு அரசியலில் அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் விருப்பப்படியும் குடும்பத்துக்கு வெளியேயும் தவறான ஆலோசனை சொல்பவர்களின் பேச்சையே கேட்டுக் கொண்டிருந்தால் சந்திரசேகர் சொன்னபடி இப்போது இல்லாவிட்டாலும் இனிமேலாவது விஜய்யைப் பார்த்து பயப்படவேண்டிய நிலை வரலாம்.
விஜய் என்ன... " வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் பாடலில் ஒரு தம்பி மைக்கைப் பிடித்துக் கொண்டு உறைந்த பார்வையுடன் நிற்பானே.....
அவனைப் பார்த்துக் கூடப் பயப்பட வேண்டிய நிலை வரலாம். !