

கடந்த பத்து நாட்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வி.தங்கபாலுவுக்கு கடுமையான குளிர் காய்ச்சல்.! என்னென்னவோ மருந்து மாத்திரை சாப்பிட்டும் குணமானபாடில்லை. அடிக்கடி உடல் தூக்கித் தூக்கிப் போடுவதோடு உளறல் பிதரற்றல் இரண்டும் அதிகமாகிக் கொண்டே போகிறது.
"போன மாசம் வரை நம்ம கலைஞரய்யாவ நினைச்சு நினைச்சு பயந்துக் கிட்டே இருந்தேன்.காங்கிரஸ் கட்சிக்கு எதிரா யாராவது ஒரு வார்த்தை சொல்லிட்டா போதும் .. அதுக்கு எதிரா என்ன பதில் சொல்றதுன்னு நான் யோசிக்கறதுக்குள்ள, சம்பந்தப் பட்டவங்களக் கண்டிச்சுகலைஞர் அய்யா எட்டுக்காலம் வசை மாரி பொழிஞ்சுடுவாரு. காங்கிரசுக்கு எதிரானவங்க மேல எங்கள விட அவருதான் அதிகமா கோபப் பட்டாரு.
டில்லியில இருந்தே எனக்கு போன் பண்ணி ' என்ன பாலூ..... தமிழ்நாடு காங்கிரச தி.மு.க.வோட சிஸ்டர் கன்சர்னா கொடுத்துடலாமான்னு கேட்டாங்க... ஒருவேளை தேர்தல்ல தோத்துட்டா கலைஞரையே தமிழ் நாடு காங்கிரஸ் தலைவரா ஆக்கிடலாமான்னு டில்லி தலைமை யோஅசிச்சதும் கூட எனக்குத் தெரியும். நல்லவேளை தேர்தல்ல ஓகோன்னு ஜெயிச்சோம் . நான் தோத்தாலும் என் பதவி தப்புச்சு.
சரி... எப்படியாவது தப்பிச்சுக்கலாம்னு நினைச்சா..இந்தக் கருமம் புடிச்ச ராஜபக்சே.. என் தாலிய அறுக்கறான்......." --- என்று கூறும் தங்கபாலு, 'ஓய்வெடுக்க வேண்டும்' என்ற மருத்துவரின் அறிவுரையையும் மீறித் தொடர்ந்து புலம்புகிறார் .அதற்குக் காரணம் உண்டு.
சென்றவாரம் ராஜபக்சே என்ற அந்த விஷக் குருத்து தெரிவித்த ஒரு கருத்துதான் தங்கபாலுவை இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டது.
" விடுதலைப் புலிகள் செய்த மாபெரும் தவறே ராஜிவ் காந்தியைக் கொன்றதுதான்.எல்லோராலும் நேசிக்கப் பட்ட ராஜிவ் காந்தியை அவர்கள் கொன்றிருக்கக் கூடாது.அதுதான் அவர்கள் செய்த பெரிய பிழையாகப் போய்விட்டது.."
எப்படி இருக்கு ?
"ஆமா... ராஜிவ் காந்தியக் கொல்லாம இருந்திருந்தா மட்டும் , தங்கத் தட்டுல வச்சுத் தமிழ் ஈழத்தைக் கொடுத்து இருப்பீங்களாக்கும்.போடாங்ங்ங்ங்ங்..........." என்று நீங்களும் நானும் வண்டை வண்டையாய்த் திட்டுவது ஒரு பக்கம் இருக்கட்டும்.
ராஜ பக்சே சொல்ல வருவது என்னவென்றால்..." ராஜிவ் காந்தியை அணிவகுப்பு மரியாதையோடு வரவேற்று பிளாட்பாரத்து பிச்சைக்காரனை அடிப்பது போல கட்டையால் பின் மண்டையில் அடிக்கலாம். ஏன் ஆசைப் பட்டால் செருப்பால் கூட அடிக்கலாம்...ஆனால் அடிப்பவன் சிங்களனாக இருக்க வேண்டும் .விளக்குமாற்றால் கூட அடிக்கலாம் .ஆனால் அடிப்பவள் சிங்களத்தியாகத்தான் இருக்க வேண்டும்.அதுதான் நியாயம்!
என்னதான் தமிழ் இனத்தின் அழிவுக்கும் எங்கள் வாழ்வுக்கும் ராஜிவ் காந்தி பிள்ளையார் சுழியைப் போட்டு விட்டுப் போயிருந்தாலும் அவரை எப்படி விடுதலைப் புலிகள் கொல்லலாம்?" என்பதுதான்.
இப்படிச் சொல்வதன் மூலம் விடுதலைப் புலிகள்தான் ராஜிவ் காந்தியைதக் கொன்றார்கள் என்ற பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறி அதற்குக் காரணமான சி.ஐ.ஏ.சாமிகளையும் இத்தாலிய மாமிகளின் உள்விவகாரங்களையும் மறைக்க உதவுகிறார் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ராஜிவ்காந்தியைச் சிங்களவனால் கொல்ல முடியாமல் போய்விட்டதே என்ற ஏக்கத்தையும் வெளிப்படுத்துகிறாரோ என்ற ஐயம் எழுகிறது.
இது புரியாத டில்லி எருமைகள் ராஜ பக்சேவின் அந்த அறிக்கையைக் கண்டு நெகிழ்ந்து நெக்குருகிக் கண்ணீர் வடிக்கின்றனராம். அடுத்த கட்டமாக அதிபர் பதவியில் இருந்து ராஜ பக்சேவுக்கு ஓய்வு கொடுத்து , கோத்தாபய ராஜ பக்சேவை அதிபராக்கி விட்டு ராஜ பக்சேவைத் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஆக்க முடிவு செய்து விட்டதாகவும் தகவல்.
ஆனால் ராஜ பக்சேவோ இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாக ஆக்க ஆசைப் படுகிறாராம் . தனி நாடாக இருப்பதால் ஈழத் தமிழனை மட்டும்தான் கொல்ல முடிந்தது . இந்தியாவின் ஒரு மாநிலமாக ஆகி விட்டால் , கர்நாடக , கேரள மாநிலங்களின் பாணியில் அவர்களை வலிவாகச் செயல் பட்டு தமிழ்நாட்டுத் தமிழனையும் கொன்று குவிக்கலாமே என்பது அவரது ஆசை.
ஆனால் தமிழ் நாட்டில் எல்லோரும் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு விபச்சாரம் செய்யாத வரை அது சாத்தியம் இல்லை என்பதால் அந்த திட்டம் இப்போது சாத்தியப் படாது என்பதை ராஜ பக்சேவிடம் சோனியா கண்ணீரூம் கம்பலையுமாகத் தெரிவித்து விட்டாராம்.
'முதலில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக வாருங்கள் . மற்றவற்றைப் பிறகு திட்டமிடலாம் ' சோனியா கட்டளை இட்டதன்பேரில் அதற்கு ராஜ பக்சேவும் சம்மதித்து விட..
தங்கபாலுவின் குளிர்காய்ச்சல் அதிகமாகிக் கொண்டே போகிறது.
ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....!
இன்னும் எத்தனை பேர்தான் போட்டிக்கு வருவார்களோ.... பாவம் தங்கபாலு!
No comments:
Post a Comment