
சிங்கள மிருகங்களின் சித்திரவதை முகாம்களில் சுமார் 50000 தமிழர்கள் கைகாலிழந்து கடுந்துயரில் தவிக்கின்றனர் என்றும்
தினந்தோறும் 15 தமிழ் உயிர்கள் பட்டினியால் இழைஇழையாகப் பிரிந்து மரணமடைகின்றன என்றும்
சிங்கள ராணுவத்தால் தாக்கப்படும் தமிழ்நாட்டு மீனவனின் துயர் துடைப்பது பற்றி உண்மையாகச் சிந்திக்க ஒரு நாதியும் இல்லை என்றும்
உணர்ந்த ஒரு நொடியில் பொங்கிய கோபத்தின் வெளிப்பாடு.
* துருவ முனைகளையும் துருவிச் சென்று பூமிப் பந்தையே புரட்டிப் போடும் ஈழத் தமிழனின் கோர அலறல் ... இரக்கமற்ற டில்லியே!உனக்கு மட்டும் கேட்காதது ஏன்?
* குளிரால் ஏற்பட்ட காது அடைப்பா? இல்லை 'குளிர்' விட்டுப் போனதால் வந்த காது புடைப்பா?
*'வடக்கு வாழ்கிறது ; தெற்கு தேய்கிறது' என்று வாளை எடுத்தவர்களே , இன்று வாலாட்டி நிற்பதால் வடக்கு விடைக்கிரதோ? தெற்கைத் தேய்க்கிறதோ?
*பாராளுமன்றம் கட்ட பதியம் போட்ட கற்களை , இதயத்தில் திணித்துக் கொண்டாயா , இதயமற்ற வடக்கே?
*'சமாதானப் புறா'வைத் தலைவராகக் கொண்டிருந்ததாகச் சதிராட்டம் போட்ட இயக்கமே....!ஈழத்தில் இன்று மனிதாபிமான மயில்களைக் கொன்று மசாலாக் கறி சமைத்ததில், எண்ணையும் அடுப்பும் உந்தன் உபயம் தானே?(மயில் ... இந்திய தேசியப் பறவை)
*கப்பல் கப்பலாய் ஆயுதம் அனுப்பிக் கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு ..... பிணத்தின் மணிக்கட்டுச் சுளுக்கெடுக்க மருத்துவக் குழுவா?
*'எதிர்கால இந்தியாவின் தெற்கெல்லைக் காவல் ஈழத் தமிழினம்தான்' என்ற அறிவாண்மை கொண்ட அன்னை இந்திராவை அன்று கொன்றது...... இரண்டு சீக்கியர்கள் !
இன்று அனுதினமும் கொல்கிறதா, அவர் கண்ட அமைப்பே?
*தான் வாழும் மண்ணை கெடுத்துக் கொண்டு ..... தமிழன் வாழ்ந்த மண்ணையும் அழித்துவிட்டு ....சுய நல மலத்துக்காக டில்லியில் கதறும் கதரும்.......துணை போகும் துரோகிகளும்..... தூக்கும் காவடியால் வந்த கொழுப்பா?
சீச்சீ! இதுவும் ஒரு பிழைப்பா?
*முத்துக் குமார் தொடங்கி முந்தைய நொடி வரை ,எரியும் பிணங்கள் இனி உன் வீட்டில் எரியாதா?
பால் மணம் மாறாத பச்சிளம் மழலைகளின் சிதறும் உடல் பிண்டம் இனி உன் வீட்டில் சிதறாதா?
தம் வீட்டுப் பெண்ணின் சிதைபட்ட உடல் பார்த்துப் பீறிடும் அவலக் கண்ணீர் இனி உன் கண்களில் ஊறாதா?
நேர்மை என்றொன்றிருந்தால் அது உன் குலத்தினையே கொளுத்தாதா?
* இரக்கமற்ற ஏகாதிபத்தியமே!என்னதான் செய்யவில்லை தமிழன் உனக்கு?
ஏனிந்த அலட்சியம் ?
எடு உன் வழக்கு!
* நடுவுநிலைமைக் கொள்கையை நாசப் படுத்திக் கொண்டு....
எதிர்கால இந்திய நலனை எரியூட்டிக் கொண்டு....
அயலுறவுக் கொள்கையை அசிங்கப் படுத்திக் கொண்டு.....
உலக நாடுகள் முன்பு உளுத்தனாய் நின்று கொண்டு....
நியாயம் உமிழும் எச்சிலை முகத்திலே ஏந்திக் கொன்டு...
தமிழினத்தைத் தகர்ப்பதில் என்ன பலன் உனக்கு ? அதை விளக்கு!
*ஒன்றரை லட்சம் உயிர் போயும் ஒன்றரை லட்சம் நடைப் பிணமாயும் இன்னும் வஞ்சம் தீராதெனில் உன் கையில் எதற்கு நீதி எனும் விளக்கு? அதை விலக்கு!
*உலகுக்கும் உனக்கும் நாகரீகம் கற்றுத் தந்தது தமிழன் குற்றமா?
(இங்கும் இலங்கையிலும்)வந்தாரை வாழவைத்து வகையற்றுப் போனது எம் குற்றமா?
காமராஜர் , கலாம் என நேர்மையின் சிகரங்களை உனக்கு நேர்ந்து விட்டது எம் குற்றமா?
எமக்கு எதிரான அறுபதாண்டுச் சதிகளை இந்திய தேசப் பற்றின் பெயரால் ஏற்று கொண்டது எம் குற்றமா?
*கொடி நாள் என்றாலும் குஜராத் குலுங்கினாலும் கொட்டிக் கொடுப்பவன் தமிழன் தானே?
கார்கில் வெடித்த போதும் கங்கை அழித்த போதும் தமிழனின் கண்ணீரும் ரத்தமும் கிடைத்ததா இல்லையா?
*காவிரி நீரோட்டம் காய்ந்த போதும் தேசிய நீரோட்டம் தேயாது காத்தவன்
தமிழன்
*தண்ணீர் இல்லை என்போர்க்கும் மின்சாரம் தருபவன் தமிழன்.
* எவரும் அங்கும் தன்னைப் பிழைக்க விடாத போதும் எல்லோரையும் தன்னிடத்தே உயர வைப்பவன் தமிழன்.
*தமிழன் என்ன.. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை உதறித் தள்ளி இந்திய தேசியத்தைக் கற்பழிக்கும் க....சடான மாநிலத்தவனா?
யுத்தக் குழுக்கள் வளர்த்து நித்தம் வெடி வெடிக்கும் ஆ....பத்தான மாநிலத்தவனா?
போலித் தேசியம் பேசிக் கொண்டு காஷ்மீர் தீவிரவாதத்துக்கு ஆள் அனுப்பும் கே....டுகெட்ட மாநிலத்தவனா?
*'வாடை' வீசும் வாடைக் காற்றே!
இரக்கமற்ற வடக்கத்தி ஏகாதிபத்தியமே!
இதையெல்லாம் செய்யாததுதான் தமிழன் குற்றமா?
செய்பவன்தான் உனது சுற்றமா?
* நம்மைக் கெடுக்கும் நாடுகளோடு சேர்ந்து ஈழத் தமிழனைக் கூண்டோடு அழித்ததில் என்ன கிடைக்கும் உனக்கு?
*சிங்களாவனுக்கும் உனக்கும் என்ன, 'பெண்வழி' உறவா இருக்கு?
*எங்கே போய்த் தீர்ப்பாய் இந்தப் பாவக் கணக்கு? இதற்கெல்லாம் தீர்ப்பு இருக்கிறது உனக்கு!
*இன்றும் துதிக்கிறோம் இந்தியா நம் தேசம்!என்றும் நினைக்கிறோம் இதன் நலனே நம் வாழ்வு!
* ஆதலால் ஒன்று சொல்வேன் அறிவற்ற டில்லியே!
*தமிழினம்
தளர்ந்து போனால் ....
இந்தியம்
இடிந்து போகும்.
* துரோகச் சாக்கடைகள் பல துள்ளித் துள்ளி ஓடினாலும் தமிழன் என்பவன் அணையாப் பெருநெருப்பு .
*எங்களை வைத்து விளக்கேற்றிக் கொள்ளப் போகிறாயா?
நீயே வீட்டைக் கொளுத்திக் கொள்ளப் போகிறாயா?
* விடை ஒன்று சொல்லி விடு.
வஞ்சக குணத்துக்கு விடை ஒன்று கொடுத்து விடு.
சிங்கள விஷப் பாம்பைக் கொன்று விடு!
விருப்பமில்லையெனில்....
உனக்கு நீயே
கொள்ளி இடு!*
உனக்கு நீயே
கொள்ளி இடு!*
6 comments:
-/ காவிரி நீரோட்டம் காய்ந்த போதும் தேசிய நீரோட்டம் தேயாது காத்தவன்
தமிழன்
*தண்ணீர் இல்லை என்போர்க்கும் மின்சாரம் தருபவன் தமிழன்.
* எவரும் அங்கும் தன்னைப் பிழைக்க விடாத போதும் எல்லோரையும் தன்னிடத்தே உயர வைப்பவன் தமிழன்.
*தமிழன் என்ன.. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை உதறித் தள்ளி இந்திய தேசியத்தைக் கற்பழிக்கும் க....சடான மாநிலத்தவனா?
யுத்தக் குழுக்கள் வளர்த்து நித்தம் வெடி வெடிக்கும் ஆ....பத்தான மாநிலத்தவனா?
போலித் தேசியம் பேசிக் கொண்டு காஷ்மீர் தீவிரவாதத்துக்கு ஆள் அனுப்பும் கே....டுகெட்ட மாநிலத்தவனா?
*'வாடை' வீசும் வாடைக் காற்றே!
இரக்கமற்ற வடக்கத்தி ஏகாதிபத்தியமே!
இதையெல்லாம் செய்யாததுதான் தமிழன் குற்றமா? -/
Its time for delhi to understand the situation otherwise another soviet like break up is Imminent. Before that their puppets at st.george fort should be given a lesson.
தமிழ்நாட்டில் மத்திய அரசு நிறுவணங்கள் அனைத்தும் மூட வைக்கப் படவேண்டும்.
ரயில்கள் நிறுத்தப் பட வேண்டும்.
மயிலே மயிலே என்றால் இறகு போடாது.
போட வைக்க வேண்டிய் காலம் வந்து விட்டது.
அங்கே வாடுவதும்,வதை படுவதும் சர்தாராகவோ,குஜ்ராத்தியாகவோ இருந்திருந்தால் இந்நேரம் இந்தியா எரிந்து சாம்பலாகியிருக்கும்.
சற்றேறக்குறைய அறம் பாடியுள்ளீர்கள்
உணர்ச்சிகளின் ஆகப்பெரும் வெளிப்பாடு
ஆயினும் கந்தசாமி ரிலீஸ் தள்ளிப்போவதும்
தோரணை நம் யார் கண்ணுக்கும் படாமல் தொடர்ந்து தலமறைவாகவே ஓடிக்கொண்டிருப்பதும், சனவரியில் விஜய் மன்ற மாநாடு இளையதளபதியின் அரசியல் கட்சித்தொடக்கமா என்பதே பெரும் பிரச்சனையாக தெரிகிற ஸீசனில் இன்னமும் ஈழம் (பற்றியது) பற்றி எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்! நல்ல பதிவு!
உணர்வோடு பின்னூட்டம் எழுதிய , எழுதப் போகிற நண்பர்களுக்கு நன்றி.
டில்லிக்கு கும்மாங்குத்து .................
நன்றி செல்வகுமார்.
ஆனால் நம்மிடையே முதுகில் குத்துபவர் நிறைய இருப்பதால் இந்தக் கும்மாங் குத்துகளால்
பெரிதாகப் பலன் இருப்பதில்லை.
Post a Comment