Thursday, June 11, 2009

# சோனியா ......................... காந்தியா?


இத்தாலியில் மாஃபியா கேங் இனமான சிசிலி என்ற ஒரு கீழ்த்தரமான‌இனத்தில் பிறந்த சோனியா ராஜிவ் காந்தியை மணந்ததால் சோனியா 'காந்தி' ஆனார்.




இந்திரா காந்திக்கு மகன் என்பதால் ராஜிவ்......., 'காந்தி' ஆனார்.


இந்திரா ......, 'காந்தி' ஆனது எப்படி?



குஜராத்தில் கத்தியவார் அருகில் போர்பந்தர் என்ற ஊரில் கரம்சந்த் காந்திக்கு(ம் புத்தலி பாய் என்ற மாதரசிக்கும்) மகனாகப் பிறந்ததால் மோகன்தாஸ்........, மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியாகி, பின்னர் மகாத்மா காந்தியானது நியாயம்.




மகாத்மா காந்திக்கு மகனாகப் பிறந்த தேவதாஸ்...., தேவதாஸ் காந்தியானதும் அதே போல துஷார்...., துஷார் காந்தியானதும் நியாயம்.



மோதிலால் நேரு என்ற காஷ்மீர் பண்டிட்டுக்குப் பிறந்த ஜவஹர்லால்......., ஜவஹர்லால் நேருவானது நியாயம்.



ஜவ‌ஹர்லால் நேருவுக்குப் பிறந்த இந்திரா..... இந்திரா நேருவாக கொஞ்ச காலம் அறியப் பட்ட பின்னர், திடிரென்று இந்திரா 'காந்தி'யானது எப்படி?




"அய்யய்ய..... இது கூடத் தெரியாதா?

இந்திரா நேரு, பருவம் வந்ததும் ஃபெரோஸ் காந்தியக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க...அதனால புருஷன் பேரையோ புருஷன் குடும்பப் பேரையோ தனது பேருடன் சேர்த்துக் கொள்கிற இந்திய வழக்கப்படி இந்திரா.....'காந்தி'யானார் . அப்புறம் என்ன?"

---‍‍ என்று விளக்கம் தருகிற அத்தனை பேருக்கும் என் நமஸ்காரம்.



ஃபெரோஸ் .....'காந்தி'யானது எப்படி?



குஜராத்தி பணியா குடும்பத்துக்குச் சொந்தமான காந்தி என்ற குடும்பப் பெயர் பாரசீக முஸ்லிமான ஃபெரோசுக்குப் போனது எப்படி?



ஃபெரோசின் தந்தை பெயர் நவாப் கான்.. தாய் ஒரு பாரசீக முஸ்லீம். ஃபெரோஸ்கான் ஐ இந்திரா காந்தி காதலித்துத் தந்தைக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார் . அதன் படி இந்திரா கான் தான்.

கான் காந்தியானது எப்படி?


அது பற்றிக் கட்டி விட்டிருக்கிறார்கள் பாருங்கள் கதைகள்.!



கதை எண் ஒன்று.


திருமண்த்துக்குப் பிறகு அண்ணல் காந்தி, ஃபெரொஸ் கானைத் தத்து எடுத்தாராம். அதனால் கான் காந்தி ஆகி விட்டாரம்.(இந்த கதைப் படி பெற்ற பிள்ளைகளுக்கே எந்தச் சலுகையும் காட்டாத‌ மஹாத்மா காந்தி ஃபெரோஸ்கானைத் தத்தெடுக்க அலைந்ததாகக் கூறுவது நல்ல நகைச்சுவை)



கதை எண் இரண்டு


ஃபெரோஸ் கானின் அப்பா முஸ்லிம் ,அம்மா பாரசீக முஸ்லிம் என்றாலும் அம்மாவின் ஒண்ணு விட்ட தாத்தாவின் பெயரில் காந்தி என்ற வார்த்தை வருமாம் . அதை வைத்து ஃபெரோஸ்கான் ஃபெரோஸ் காந்தி ஆனாராம்.


( சரிங்க.. பாரசீக முஸ்லிம் பெண்ணின் குடும்பப் பெயரில் எப்படி காந்தி என்ற வார்த்தை வரும் என்றால்.... அதற்கு அவர்கள் சொல்கிற பதில் இருக்கிறதே...


அடேஏஏஏங்கப்பா............!


அதாவது அந்த காந்தி என்ற பெயர் மஹாத்மா காந்தியின் குடும்பப் பெயராக வரும் GANDHI இல்லையாம். அது GHANTHI யாம். அதன்படி ஃபெரோஸ் காந்தியாகி இன்று சோனியா காந்தி வரை வந்து நிற்கிறதாம் ஆனால் இந்திராவில் இருந்து எல்லோருமே GANDHI என்றுதான் பெயரை எழுதவும் கையெழுத்துப் போடவும் செய்கின்றனர் என்பது வேறு விசயம்)




இப்படிப் பல கதைகள் ஒருபக்கம்.



" அதெல்லாம் ஒண்ணும் கிடையாது... இந்திராவின் கணவர் பெயர் ஃபெரோஸ் கண்டே (GANTE) என்பதுதான். நேரு பெயரை விட காந்தி பெயரைச் சொல்லிக் கொண்டால் அரசியலில் யோக்கியவான்களாகக் காட்டிக் கொள்ள வசதியாக இருக்கும் என்பதால் கண்டே என்ற பெயரின் உச்சரிப்புச் சத்தத்தை வைத்து காந்தி என்று .....அரசியல் பிழைப்புக்காகக் குடும்பப் பெயரையே மாற்றிக் கொண்டவர்கள் இவர்கள் " என்று முழங்கிய பழைய ஜன சங்க ஆட்களும் உண்டு.




" எதுவானா இருக்கட்டுங்க.... இப்ப எதுக்கு அந்தப் பழைய கதை எல்லாம்? உங்களுக்கு வேற வேலை இல்லையா ?" என்று அதட்டும் அன்பு நெஞ்சங்களே!



இப்போது இதை எல்லாம் விளக்கமாகக் கிளறி இப்போது இந்திரா காந்தி அம்மையாரக் களங்கப் படுத்தும் எண்ணம் எனக்கு நிச்சயமாக இல்லை.


ஆனால் இதை எல்லாம் எழுத வேண்டிய கட்டாயத்தை ராஜீவ் -‍ சோனியா இருவரும் தம்பதி சமேதராக உருவாக்கி விட்டார்கள்



ஏன் எனில்

காந்தி என்று சொன்னாலே நம் எல்லோருக்கும் இன்றும் நினைவுக்கு வருகிற மகாத்மா காந்தியின்,

இரண்டு பொன்மொழிகள் !



ஒன்று



"ஒரு இனம் முற்றாக அழிக்கப் படும்போது அது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வன்முறையைக் கையில் எடுத்துப் போராடலாம் . அதில் தவறில்லை. நான் அதை வன்முறை என்றே சொல்ல மாட்டேன்."



இரண்டு


"ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப் படுகிற போது அந்தப் பெண் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தலாம். குறைந்த பட்சம் தனது கூரிய நகங்களைப் பயன்படுத்தியாவ‌து தப்பிக்க முயல வேண்டும். அது போன்ற சூழ் நிலைக்கு பெண்களை ஆட்படுத்துகிற யாரையும் மன்னிக்க முடியாது ".



ஆம்!

அகிம்சா மூர்த்தி .... ஜீவ காருண்யச் சீலர் ... மஹாத்மா என்று அழைக‌கப் பட்ட காந்தியே வன்முறையை ஆதரித்த சூழல்கள் இவை .



முதல் பொன்மொழிப்படிதான் ஈழத்தில் விடுதலைப் புலிகள் ஆயுதம் எடுத்தனர். ஆனால் அந்த நியாயமான விடுதலைப் போரின் அழிவுக்கு அடித்தளம் போட்டதன் மூலம் மகாத்மா காந்தியையே இழிவு படுத்தியவர்தான் ராஜீவ் 'காந்தி'



பிரபாகரன் மரணம் , விடுதலைப் புலிகள் அழிக்கப் பட்டதற்குக் காரணமாக இருந்தது மட்டுமல்ல ... நாகரிகமில்லாத சிங்கள ராணுவத்துக்கு பிதாமகளாக இருந்து இன்றும் இலங்கையின் பல வதை முகாம்களில் ஏராளமான தமிழ்ப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப் படுவதற்குக் காரணமானதன் மூலம் மகாத்மாவாலேயே மன்னிக்க முடியாத குற்றவாளி தான் சோனியா 'காந்தி'.

ஆக இனியும் சோனியா ராஜிவ் ... தனது பெயரில் காந்தி என்ற பெயரை ( அதுவும் GANDHI என்ற எழுத்துக்களுடனேயே ) வைத்துக் கொண்டிருப்பது அண்ணல் காந்திக்கு இழைக்கப் படும் அவமானம்.

மனசாட்சியுள்ள யாரும் அருகில் இருந்தால் சோனியா ராஜிவிடம் எடுத்துச் சொல்லுங்கள்!

Wednesday, June 10, 2009

# கம்யூனிஸ்ட் கபோதிகளும் புத்திக் கெட்ட(டு?) பு(ளு)த்த‌ மதமும் !



இன்னும் மனது ஆறவில்லை.



ராஜ பக்சே மட்டுமல்ல. ஐ. நா .சபையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நார்வே உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவாக ஓட்டுப் போட்ட ஒவ்வொரு நாடும் சிங்களத்தைப் போல காட்டுமிராண்டி தேசம்தான்.



அதன் தலைவர்கள் ஒவ்வொருவரும் ராஜபக்சேவைப் போன்ற காடையர்கள்தான்.



இதுவரை உலகத்தில் கம்யூனிசம் என்றால் அதை பின்பற்றாதவர்கள் கூட சில விசயங்களுக்கும் சில பிரச்னைகளுக்கும் கம்யூனிஸ்டுகளால் தான் தீர்வு சொல்ல முடியும் என்று கூறுகிற சூழ்நிலை இருந்து வந்தது.




அதேபோல 'மதங்கள் என்பவை எல்லாம் மனிதனை அழிக்கும் ஆயுதங்களே'என்று கூறியவர்கள் கூட புத்த மதத்தைக் கொஞ்சம் கருணைப் பார்வை பார்க்கவே செய்திருக்கிறார்கள்.


ஆனால் இலங்கைப் பிரச்னையில் சிங்கள வெறியர்களை ஆத‌ரித்ததன் மூலம் 'உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட' என்று புத்த மதம் , கம்யூனிசம் இரண்டும் கெட்டுக் குட்டிச் சுவராக ஆகி இருக்கிறது.


"இலங்கையில் உள்ளது புத்த மதமே இல்லை.சிங்களன் இப்ப‌டி நடந்து கொள்வதற்காக புத்தமதமே மோசம் என்று சொல்லக் கூடாது. சீனாவில் உள்ளதுதான் உண்மையான புத்த மதமாக்கும்' என்று இதுவரை சப்பைக் கட்டுக் கட்டி வந்தவர்கள் இனி எங்கே முகத்தை வைத்துக் கொள்வார்கள் என்றும தெரியவில்லை.



அது போல 'கம்யூனிசம் மட்டும் இல்லாவிட்டால் எப்போதோ சுற்றும் பூமி நின்றிருக்கும் ' என்று பீத்திக் கொண்ட தோழர்கள் (அதாவது கொலைகாரனுக்கு)இனி எதை வாயில் வைத்துக் கொண்டு மெல்லுவார்கள் என்று தெரியவில்லை.


ஏனெனில் புத்தம் , கம்யூனிசம் இரண்டும் சேர்ந்துதான் இலங்கைச் சிங்களவனுக்கு ஜட்டி துவைத்துப் போட்டு இருக்கிறது.


4000 கிலோ மீட்டர் தாண்டி இந்தியாவின் தெற்கு எல்லையிலும் அதற்கூ ஒரு 'செக்'என்று சீனா விரும்பியதென்பது அரசியல் காரணம் என்றால்...


இலங்கைக்கும் சீனாவுக்கும் பொதுவான மதமான புத்தமதம் இலங்கையில் முழுதாகத் தழைக்க வேண்டும்;அது நடக்க வேண்டுமென்றால் , பெரும்பான்மையாக இந்து மதத்தை ஆதரிக்கிற ஈழத் தமிழர்கள் அழிய வேண்டும் என்பது சீனாவின் மத வெறித் திட்டம்.


( இந்த உண்மை தெரிந்தும் இந்து மதக் காவலர்கள் நாங்கள்தான் என்று இந்தியாவில் கூறிக் கொள்கிற ஒரு பயலும் மதரீதியாகக் கூட ஈழத் கமிழனை ஆதரிக்கவில்லை என்பது ஒரு பெருங் கொடுமை.இது பற்றி உபயோகமான பின்னூட்டங்கள் எழுதலாம்)



ஆக, மதப் பித்து காரணமாகவே இலங்கையை சீனா ஆதரித்தது . ஆனால் இந்த உண்மையைக் கண்டு கொள்ளாமல் சீனா ஒரு கம்யூனிஸ்டு தேசம் என்பதால் ரஷ்யா, கியூபா போன்ற பல கம்யூனிஸ்டு நாடுகள் அறிவு கெட்ட ஆட்டுமந்தைகள் போல கண்மூடித்தனமாக இலங்கையை ஆதரிக்கின்றன .


கிராமங்களில் கண் பார்வை இல்லதவர்களை கபோதி என்று திட்டுவார்கள் . அப்படித் திட்டுவது பாவம். காரணம் கண்ணிழப்பது என்பது அவர்களை மீறிய செயல்.


ஆனால் ஆணவத்தில் அறிவுக்கண்ணை இழந்திருக்கிற உலகளாவிய கம்யூனிஸ்ட்டுகளை இனி யாரும் கபோதிகள் என்று அழைக்காவிட்டால் ....


அது பரிகாரமே இல்லாத மகா பாவம் . !



எனவே எல்லோரும் இனி கம்யூனிஸ்டுகளை கபோதிகள் என்று மறவாமல் அழைத்து உங்களைக் கவுரவப் படுத்திக் கொள்ளுங்கள் .



( இவனுங்க கொஞ்ச காலமா உண்டியல் குலுக்கறத நிறுத்தின அப்பவே நினைச்சேன். எதோ விபரீதமா பண்ணாப் போறாங்கன்னு....)


அதே போல , புத்த மதம் தோன்றிய இந்தியா , புத்த மதத்தின் உலக அடையாளமாக இன்று விளங்கும் சீனா இரண்டும் சேர்ந்து....


புத்தமதத்தின் அவமானமாக விளங்கும் சிங்களனுக்காக , உலகின் மிகப் பெரிய ஒரு இனப் படுகொலைக் கொடுமைக்குத் துணை போன பிறகு புத்த மதம் புளுத்த மதமாகி விட்டது.



இனி எவனாவது கச்சாமி சொன்னாலும் , சிவப்புத் துண்டைப் போட்டுக்கிட்டு செங்கொடி அது இதுன்னு சிங்கிடி அடிச்சாலும் கண்ண மூடிக்கிட்டு ( அப்பக் கூட அவனுங்க மூஞ்சில முழிக்கக்கூடாது ; அதுக்குதான் கண்ண மூடச் சொல்றேன்) காறித் துப்பலாம்.


தப்பே இல்ல....!







Tuesday, June 9, 2009

# சே குவாராவைச் செருப்பால் அடித்த கியூபா (ஃபிடல்) காஸ்ட்ரோ(க்கள்)





தனது தாய் மண் , தாய் நாடு , தாய் இனம், தாய் மொழி இவற்றின் விடுதலைக்காகப் போராடுகிற மாவீரர்கள் ,


கடவுளுக்குச் சமமாக (அப்ப்டி யாரும் அல்லது எதுவும் இருந்தால்...... ஏனெனில் ஈழத்தின் அவல அழிவுக்குப் பின்னால் எனக்குக் கடவுள் நம்பிக்கை போய் விட்டது)மதிக்கப்படும் தகுதியை அடைகிறார்கள்.


ஆனால் அவர்கள் எல்லோரையும் விட உயர்ந்த யுக புருஷன் சே குவாரா. !



காரணம் உண்டு.


ஒரு உலகப் பார்வையில் பார்க்கும்போது தனது நாடு , தனது மொழி , தனது இனம் என்று போராடுவது கூட ஒரு வித சுய‌ ந‌லம்(!) தான்.

அனால் சே.... ?

உலகம் எங்கும் ஒடுக்கப்பட்ட அடக்கப் பட்ட மக்களுக்காகப் போராடிய தாய்மை குணப் போராளி அவன். மகாத்மா காந்தியையும் பிரபாகரனும் சரியான விதத்தில் கலந்த... சேர்ந்த ஒரு காவியக் கலவை சே குவாரா!



எந்த கியூபா நாட்டின் வரலாற்றோடு இன்று சே வின் பெயர் பின்னிப் பிணைந்து கிடக்கிறதோ ... அந்த கியூபா நாட்டைச் சேர்ந்தவன் இல்லை சே.


ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு ஆதரவாகக் கியூபா நாட்டில் களமாடி கியூபாவுக்கு மட்டும் விடுதலை வாங்கித் தர‌வில்லை அவன்.


அதன் பிறகு உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களைத் தேடித் தேடிச் சென்று அவர்களின் விடுதலைக்காக உதிரம் சிந்தியவன் அவன்.


கியூபா நாட்டு விடுதலைக்குப் பிறகு அவன் நினைத்து இருந்தால் பெரும் பதவி பணம் சுகவாசம் என்று பின்னாளைய நெல்சம் மண்டேலாவைப் போல்!



ஆனால் ஆப்பிரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் சர்வாதிகார இன வெறி பிடித்த அந்த தேசத்து ராஜ பக்சேக்களுகு எதிராக களம் கண்டவன்.



கடைசியில் பொலீவிய நாட்டில் அந்த அப்பாவி மகளுக்காகப் போராடிய போது பொலீவிய ராணுவத்திடம் பிடிபட்டது அந்தப் போராளிகளின் குல தெய்வம்.



காட்டிக் கொடுத்தது எதிரிகள் அல்ல. அந்த ஊர் கருணா ( உடன் ஒரு ' நிதி'யைச் சேர்த்துக் கொண்டாலூம் தப்பில்லை)



அவன் பிணத்தையும் பார்த்துப் பயந்தது பொலீவிய ராணுவம். உடலையும் இரு கைகளையும் வெட்டித் தனித் தனியாக மூன்று இடங்களில் புதைத்தனர். அப்படிப் பட்ட மாவீரன் சே!



ஆனால் லண்டனில் அறிவிலும் செல்வத்திலும் வேலை வாய்ப்பிலும் ஓஹோவென்று வாழ்ந்து கொண்டிருந்த மகனை ஈழப் போர்க்களத்துக்கு அழைத்து களத்தில் பலி கொடுத்த தியாக வீர வாய்ப்பு பிரபாகரனுக்கு அமைந்தது.



அன்று கியூபாவில் சர்வாதிகாரி பாடிஸ்டா வுக்கு எதிராகப் போராட ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு சேகுவார மட்டும் துணை இல்லை என்றால் காஸ்ட்ரோவின் கதை முடிந்திருக்கும். சென்ற வருடம் வரை அவர் கியூபாவின் நீஈஈஈஈண்ட நாள் அதிபராக இருந்திருக்க முடியாது. தற்போதும் கூட உடல் நிலையைக் காரணம் காட்டி தனது தம்பி ரால் காஸ்ட்ரோவை அதிபராக்கி இருக்க முடியாது ஃபிடல் காஸ்ட்ரோவால்...!



தவிர நாங்கள் அமெரிக்கா என்ற பெரும் தேசத்தின் காலடியில் உள்ள குட்டி தேசம் என்றாலும் அமெரிக்கவின் சிம்ம சொப்பனமாக விளங்குகிறோம் என்று அலட்டிக் கொண்டிருக்க முடியாது.



அனால் இப்போது... ?


கியூபா என்ற கன்றுக்குட்டி சிங்களம் என்ற பன்றியோடு சேர்ந்து மலம் தின்ன ஆரம்பித்து விட்டது.



சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஃபிடல் காஸ்ட்ரோ , ரௌல் காஸ்ட்ரோ என்ற இரண்டு கன்றுக் குட்டிகள் ..... செ குவாரா என்ற வீரப் புலியோடு பழகிய கன்றுக் குட்டிகள் ... இன்று ராஜ பக்சே என்ற பன்றியோடு சேர்ந்து ... ருசித்து மலம் தின்கின்றன.



ஆம்!


இலங்கையில் அப்பாவித் தமிழர்களைக் கூட்டம் கூட்டமாக கும்பல் கும்பலாக கொத்துக் கொத்தாக குலை குலையாகக் கொன்று குவித்த இலங்கைக்கு எதிராக ஐ. நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப் பட்டபோது....



மனதைக் கல்லாக்கிக் கொள்ளுங்கள் ... உலகெங்கும் உள்ள உயர்நத இன விடுதலை வீரர்களே!


இலங்கைக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டது, ஃபிடல் காஸ்ட்ரோவின் புதிய பித்தால்லடக் கியூபா!



கேட்டால் என்ன நடந்தாலும் எப்போதும் அமெரிக்காவுக்கு எதிரான அணியில்தான் கியூபா இருக்குமாம். அதே போல அமெரிக்க ஆதரவு நாடுகள் எந்த நல்ல சேவை செய்தாலும் கூட கண்மூடித்தனமாக அதை எதிர்த்துதான் (பைத்தியக் காரன் போல) கியூபா செயல்படுமாம். இந்த பித்துக் குளித்தனம்தான் கியூபாவின் வெளி நாட்டுக் கொள்கையாம்.



தவிர தன்னை(கியூபாவை)ப் போன்ற ஒரு தீவான இலங்கையில் உள் நாட்டுக் குழப்பத்துக்கு கியூபா துணை போகாதாம்.


அட எடுபட்ட சிறுக்கி மகன் காஸ்ட்ரோக்களே!


அன்றைக்கு கியூபாவில் பாடிஸ்டா உங்களை எல்லாம் போட்டு நசுக்கும்போது கூட அவன் இதைத் தானே சொன்னான்.அன்றைக்கு கியூபாவில் பாடிஸ்டாவுக்கு எதிராக நீங்கள் செய்ததும் கூட 'உள் நாட்டுக் குழப்பம்"தானே..!


" ஆங்.... அது எப்படி? பாடிஸ்டா அப்பாவி மக்களைக் கொன்று குவித்த சர்வாதிகாரி அல்லவா?....?" என்றால் ......



1000 பாடிஸ்டா சேர்ந்தாலும் ஒரு ராஜ பக்சேவுக்கு இணையாக முடியாதே!


அப்படிப் பார்த்தால் நீ இன்று இலங்கைக்கு எதிராக 1000 முறை 1000 ஓட்டு அல்லவா போட வேண்டும்?


அதை விட்டு விட்டு இன்னொரு 1000 பாடிஸ்டாக்களுக்கு ஆதரவு தரவா அன்று எங்கள் சே குவாராவின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டாய்?


இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்படியா ஈனப் புத்தியைக் காட்டுவது?

அடச் சீ...........!

ஆம் உலகத்தீரே..


என்றோ புதைக்கப்பட்ட சேகுவாராவின் உடல் பாகங்களைத் தோண்டி எடுத்துச் செருப்பால் அடித்திருக்கிறார்கள் கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோவும் அவன் தம்பி ரால் காஸ்ட்ரோவும்!

நண்பர்களே தனது துரோகிகளாகிக் தன்னைக் காட்டிக் கொடுத்த போதும் கலங்காத சே வின் ஆன்மா...

இன்று ஈழப் பிரச்னையில் தமிழர்களுக்கு எதிராகவும் ராஜ பக்சேவுக்கு ஆதரவாகவும் கியூபா ஓட்டுப் போட்ட கணம் முதல் கதறிக் கதறி அழும் பேரோலத்தின் ஓசை ......


பொலீவிய மண்ணில் இருந்து கிளம்பி கியூபாவின் வெளிகளை ஊடுருவி உலகம் முழுக்க ஒலிப்பது....... உலகெங்கும் திணறும் விடுதலைப் போராட்ட மூச்சுக் காற்றுகளின் செவியில் இடியோசையாய் ஒலிக்கிறது.

மனிதாபிமானம் உள்ள அனைத்து மக்களின் மனசாட்சியின் கதவுகளையும் அது தட்டுகிறது.

செவியிருப்பவன் கேட்கக் கடவன்!

Sunday, June 7, 2009

# Rajapakse, the new TNCC president next to k.v.Thangabalu?



கடந்த பத்து நாட்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வி.தங்கபாலுவுக்கு கடுமையான குளிர் காய்ச்சல்.! என்னென்னவோ மருந்து மாத்திரை சாப்பிட்டும் குணமானபாடில்லை. அடிக்கடி உடல் தூக்கித் தூக்கிப் போடுவதோடு உளறல் பிதரற்றல் இரண்டும் அதிகமாகிக் கொண்டே போகிறது.

"போன மாசம் வரை நம்ம கலைஞரய்யாவ நினைச்சு நினைச்சு பயந்துக் கிட்டே இருந்தேன்.காங்கிரஸ் கட்சிக்கு எதிரா யாராவது ஒரு வார்த்தை சொல்லிட்டா போதும் .. அதுக்கு எதிரா என்ன பதில் சொல்றதுன்னு நான் யோசிக்கறதுக்குள்ள, சம்பந்தப் பட்டவங்களக் கண்டிச்சுகலைஞர் அய்யா எட்டுக்காலம் வசை மாரி பொழிஞ்சுடுவாரு. காங்கிரசுக்கு எதிரானவங்க மேல எங்கள விட அவருதான் அதிகமா கோபப் பட்டாரு.
டில்லியில இருந்தே எனக்கு போன் பண்ணி ' என்ன பாலூ..... தமிழ்நாடு காங்கிரச தி.மு.க.வோட சிஸ்டர் கன்சர்னா கொடுத்துடலாமான்னு கேட்டாங்க... ஒருவேளை தேர்தல்ல தோத்துட்டா கலைஞரையே தமிழ் நாடு காங்கிரஸ் தலைவரா ஆக்கிடலாமான்னு டில்லி தலைமை யோஅசிச்சதும் கூட எனக்குத் தெரியும். நல்லவேளை தேர்தல்ல ஓகோன்னு ஜெயிச்சோம் . நான் தோத்தாலும் என் பதவி தப்புச்சு.

ச‌ரி... எப்ப‌டியாவ‌து த‌ப்பிச்சுக்க‌லாம்னு நினைச்சா..இந்த‌க் க‌ரும‌ம் புடிச்ச‌ ராஜ‌ப‌க்சே.. என் தாலிய‌ அறுக்கறான்......." --- என்று கூறும் த‌ங்க‌பாலு, 'ஓய்வெடுக்க‌ வேண்டும்' என்ற‌ ம‌ருத்துவ‌ரின் அறிவுரையையும் மீறித் தொட‌ர்ந்து புல‌ம்புகிறார் .அத‌ற்குக் கார‌ண‌ம் உண்டு.
சென்ற‌வார‌ம் ராஜ‌ப‌க்சே என்ற அந்த விஷக் குருத்து தெரிவித்த‌ ஒரு க‌ருத்துதான் த‌ங்க‌பாலுவை இந்த‌ நிலைக்கு ஆளாக்கிவிட்ட‌து.

" விடுத‌லைப் புலிக‌ள் செய்த‌ மாபெரும் த‌வ‌றே ராஜிவ் காந்தியைக் கொன்ற‌துதான்.எல்லோராலும் நேசிக்க‌ப் ப‌ட்ட ராஜிவ் காந்தியை அவ‌ர்க‌ள் கொன்றிருக்க‌க் கூடாது.அதுதான் அவ‌ர்க‌ள் செய்த‌ பெரிய‌ பிழையாக‌ப் போய்விட்ட‌து.."

எப்ப‌டி இருக்கு ?

"ஆமா... ராஜிவ் காந்திய‌க் கொல்லாம‌ இருந்திருந்தா‌ ம‌ட்டும் , த‌ங்க‌த் த‌ட்டுல‌ வ‌ச்சுத் த‌மிழ் ஈழ‌த்தைக் கொடுத்து இருப்பீங்க‌ளாக்கும்.போடாங்ங்ங்ங்ங்..........." என்று நீங்க‌ளும் நானும் வ‌ண்டை வ‌ண்டையாய்த் திட்டுவ‌து ஒரு ப‌க்க‌ம் இருக்க‌ட்டும்.

ராஜ‌ ப‌க்சே சொல்ல‌ வ‌ருவ‌து என்ன‌வென்றால்..." ராஜிவ் காந்தியை அணிவ‌குப்பு ம‌ரியாதையோடு வ‌ர‌வேற்று பிளாட்பார‌த்து பிச்சைக்கார‌னை அடிப்ப‌து போல‌ க‌ட்டையால் பின் ம‌ண்டையில் அடிக்க‌லாம். ஏன் ஆசைப் ப‌ட்டால் செருப்பால் கூட‌ அடிக்க‌லாம்...ஆனால் அடிப்ப‌வ‌ன் சிங்க‌ள‌னாக‌ இருக்க‌ வேண்டும் .விள‌க்குமாற்றால் கூட‌ அடிக்க‌லாம் .ஆனால் அடிப்ப‌வ‌ள் சிங்க‌ள‌த்தியாக‌த்தான் இருக்க‌ வேண்டும்.அதுதான் நியாய‌ம்!
என்ன‌தான் த‌மிழ் இன‌த்தின் அழிவுக்கும் எங்க‌ள் வாழ்வுக்கும் ராஜிவ் காந்தி பிள்ளையார் சுழியைப் போட்டு விட்டுப் போயிருந்தாலும் அவ‌ரை எப்ப‌டி விடுத‌லைப் புலிக‌ள் கொல்ல‌லாம்?" என்ப‌துதான்.

இப்ப‌டிச் சொல்வ‌த‌ன் மூல‌ம் விடுத‌லைப் புலிக‌ள்தான் ராஜிவ் காந்தியைதக் கொன்றார்க‌ள் என்ற பொய்யைத் திரும்ப‌த் திரும்ப‌க் கூறி அத‌ற்குக் கார‌ண‌மான‌ சி.ஐ.ஏ.சாமிக‌ளையும் இத்தாலிய‌ மாமிக‌ளின் உள்விவ‌கார‌ங்க‌ளையும் ம‌றைக்க‌ உத‌வுகிறார் என்ப‌து ஒரு ப‌க்க‌ம் இருந்தாலும் இன்னொரு ப‌க்க‌ம் ராஜிவ்காந்தியைச் சிங்க‌ள‌வ‌னால் கொல்ல‌ முடியாம‌ல் போய்விட்ட‌தே என்ற ஏக்க‌த்தையும் வெளிப்ப‌டுத்துகிறாரோ என்ற ஐய‌ம் எழுகிற‌து.

இது புரியாத‌ டில்லி எருமைக‌ள் ராஜ‌ ப‌க்சேவின் அந்த‌ அறிக்கையைக் க‌ண்டு நெகிழ்ந்து நெக்குருகிக் க‌ண்ணீர் வ‌டிக்கின்ற‌ன‌ராம். அடுத்த‌ க‌ட்ட‌மாக அதிபர் பதவியில் இருந்து ராஜ பக்சேவுக்கு ஓய்வு கொடுத்து , கோத்தாபய ராஜ பக்சேவை அதிபராக்கி விட்டு ராஜ‌ ப‌க்சேவைத் த‌மிழ‌க‌ காங்கிரஸ் க‌மிட்டித் த‌லைவ‌ராக‌ ஆக்க‌ முடிவு செய்து விட்ட‌தாக‌வும் த‌க‌வ‌ல்.

ஆனால் ராஜ‌ ப‌க்சேவோ இல‌ங்கையை இந்தியாவின் ஒரு மாநில‌மாக ஆக்க‌ ஆசைப் ப‌டுகிறாராம் . த‌னி நாடாக‌ இருப்ப‌தால் ஈழ‌த் த‌மிழ‌னை ம‌ட்டும்தான் கொல்ல‌ முடிந்த‌து . இந்தியாவின் ஒரு மாநில‌மாக‌ ஆகி விட்டால் , கர்நாட‌க‌ , கேர‌ள‌ மாநில‌ங்க‌ளின் பாணியில் அவ‌ர்க‌ளை வ‌லிவாக‌ச் செய‌ல் ப‌ட்டு த‌மிழ்நாட்டுத் த‌மிழ‌னையும் கொன்று குவிக்க‌லாமே என்ப‌து அவ‌ர‌து ஆசை.

ஆனால் த‌மிழ் நாட்டில் எல்லோரும் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு விப‌ச்சார‌ம் செய்யாத ‌ வ‌ரை அது சாத்திய‌ம் இல்லை என்ப‌தால் அந்த‌ திட்ட‌ம் இப்போது சாத்திய‌ப் ப‌டாது என்ப‌தை ராஜ‌ ப‌க்சேவிட‌ம் சோனியா க‌ண்ணீரூம் கம்ப‌லையுமாக‌த் தெரிவித்து விட்டாராம்.
'முதலில் த‌மிழ்நாடு காங்கிர‌ஸ் தலைவ‌ராக‌ வாருங்க‌ள் . மற்றவ‌ற்றைப் பிற‌கு திட்ட‌மிட‌லாம் ' சோனியா க‌ட்ட‌ளை இட்ட‌த‌ன்பேரில் அத‌ற்கு ராஜ‌ ப‌க்சேவும் ச‌ம்ம‌தித்து விட‌..

த‌ங்க‌பாலுவின் குளிர்காய்ச்ச‌ல் அதிக‌மாகிக் கொண்டே போகிற‌து.
ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....!
இன்னும் எத்த‌னை பேர்தான் போட்டிக்கு வ‌ருவார்க‌ளோ.... பாவ‌ம் த‌ங்க‌பாலு!

Saturday, June 6, 2009

is it right that sarathkumar is acting in pazhasiraja?

எனக்குத் தெரிந்த கேரளத்து நபர் ஒருவர் , பழஸி ராஜா திரைப்படத்தைப் பற்றி ரொம்பப் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார்.


அதாகப் பட்டது ....மலையாளத்தில் தயாரிக்கப் படுகிற --‍ தமிழிலும் இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்படவிருக்கிற -‍‍ இன்றைய தேதியில் மலையாளத் திரை உலகின் பிரம்மாண்டமான படமாகக் கூறப் படுகிற பழஸி ராஜா என்ற படம்...


இந்தியாவிலேயே முதன்முதலாக வெள்ளைக்காரனை எதிர்த்துப் போராடிய முதல் அரசன்(?),தமிழர்களும் அப்படிக் கூறிக் கொள்பவர்களும் கவனிக்க..! இந்தியாவிலேயே முதன்முதலாக வெள்ளைக்காரனை எதிர்த்துப் போராடிய முதல் அரசன்... இந்தப் பழஸி ராஜாதான் என்ற உண்மையை(!)ச் சொல்ல‌ வ‌ருகிற‌ ப‌ட‌மாம்.


இதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் அந்தப் படம் தமிழிலும் (தமிழர்களும் அப்படிக் கூறிக் கொள்பவர்களும் மறுபடியும் கவனிக்க..! ) இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப் படுகிறதாம்.அதில் சரத்குமார் நடிப்பது என்பது அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய கவுரவமாம்.


சரத்குமாருக்கு இது கவுரவமா இல்லையா என்பதை அப்புறம் பார்க்கலாம். ஆனால் அந்த கேரளத்து நபர் சொல்வது போல இந்தியாவிலேயே வெள்ளைக்காரனை எதிர்த்து முதன்முதலில் போராடியது பழஸிராஜா என்று சொல்ல வருவதுதான் அந்தப் படத்தின் நோக்கம் என்றால்..


நான் கொஞ்சம் சவுக்கை எடுக்க வேண்டியுள்ளது.!


பழஸிராஜாவின் காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசி .சரியாகச் சொல்லப் போனால் அவர் கொல்லப் பட்டது 1805 ஆம் ஆண்டு. வீர‌ பாண்டிய‌க் க‌ட்ட‌பொம்ம‌ன் தூக்கில் இட‌ப்ப‌ட்ட‌து 1799.ல்.ப‌ழஸிராஜாவுக்கு ஆறுவ‌ருட‌ம் முன்பு. ப‌ழஸிராஜாவின் பெய‌ர் வெளிச்ச‌த்துக்கு வ‌ருவ‌தே 1790க‌ளின் இறுதியில்தான். ஆனால் வீர‌பாண்டிய‌க் க‌ட்ட‌ பொம்ம‌ன் பெய‌ர் 1780க‌ளிலேயே ல‌ண்டனையே தொட்டுவிட்ட‌து என்ப‌த‌ற்கு ஆதா‌ர‌ங்க‌ள் உல‌க‌றிந்த ஒன்று.


ஆக வீர பாண்டிய‌க் க‌ட்ட‌பொம்மனுக்கு முந்தையவராக‌ விட ப‌ழ‌ஸி ராஜா இருக்க‌ வாய்ப்பில்லை.


ஆனால் வீர‌ பாண்டிய‌க் க‌ட்ட‌ பொம்ம‌ன் பிற‌ந்த‌து 1760ஆம் ஆண்டு ஜ‌ன‌வ‌ரி 4ந்தேதி. ப‌ழ‌ஸிராஜா பிறந்த‌ தேதி ப‌ற்றி ச‌ரியான‌ குறிப்பு இருப்ப‌தாக‌த் தெரிய‌வில்லை.



இந்த‌க் குழ‌ப்ப‌த்தைத் த‌ங்க‌ளுக்குச் சாதக‌மாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொண்டு வீர பாண்டிய‌க் க‌ட்ட‌பொம்ம‌னை விட‌ ப‌ழஸி ராஜா முந்தைய‌வ‌ர் என்று த‌வ‌றாக‌ நிறுவ‌ ப‌ழ‌ஸி ராஜா ப‌ட‌ம் எடுப்ப‌வ‌ர்கள் த‌ந்திர‌மாக‌த் திட்ட‌மிட‌லாம்.


அதை வைத்து வீர‌பாண்டிய‌க் க‌ட்டபொம்ம‌னுக்கு முந்தைய‌வ‌ன் என்று புதிதாக‌க் க‌தை விட‌ அவ‌ர்கள் ஆசைப் படலாம்.
அதை த‌மிழ் நாட்டிலும் விட‌‌ வேண்டும் என்ற ஆசை.அப்ப‌டியானால் த‌மிழ் நாட்டிலும் ப‌ட‌ம் ஆவ‌லோடு பார்க்க‌ப் படவேண்டும்.அதற்கு த‌மிழ்த் திரையுல‌க‌ம் ந‌ன்கு அறிந்த ஒரு ந‌டிக‌ர் வேண்டும்.


ச‌ர‌த்குமார்.!

பிர‌ப‌ல‌ ந‌டிக‌ர். ந‌டிக‌ர் ச‌ங்க‌த் த‌லைவ‌ர். ஒரு குறிப்பிட்ட‌ ச‌முதாய‌ப் ப‌ல‌மும் பின்ன‌ணியும் கொண்ட‌வ‌ர். த‌விர‌ த‌மிழ‌க‌த்தின் ஒரு அர‌சிய‌ல் க‌ட்சியின் த‌லைவ‌ர் கூட‌.போதாதா?


"இப்ப‌டியெல்லாம் பேச‌க் கூடாது.அதில் வ‌ரும் ஒரு முக்கிய‌க் க‌தாபாத்திர‌த்துக்கு ஏற்ற‌ உட‌ல்க‌ட்டு, நிற‌ம் உள்ளிட்ட‌ ப‌ல‌ பொருத்த‌ங்க‌ள் அவ‌ரிட‌ம் உண்டு.அத‌னால்தான் ந‌டிக்க‌ அழைத்துள்ள‌ன‌ர் " என்று வாதாடும் ந‌ல்ல‌வ‌ர்க‌ளுக்கு ஒரு வார்த்தை.


இதை விட‌... ச‌ர‌த்குமாருக்குப் பொருத்த‌மான‌ ப‌ல வேட‌ங்க‌ள் மலையாள‌த்தில் வ‌ந்த‌ போது எல்லாம் ச‌ர‌த்குமாரின் உட‌ற்கட்டையும் நிற‌த்தையும் பார்த்து விய‌ந்து அவ‌ரை அழைத்தார்க‌ளா?


நன்றாக யோசியுங்கள்...பழஸிராஜவுக்கு மட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டும் ஏன்? அங்கே தான் இருக்கிறது அந்த அந்திர தந்திரம்.


"ஸரிதான் ஸாரே... ஞிங்கள் ஸொல்லும்படிப் பார்ர்க்கினும் கட்டபொம்மனுக்கும் பழஸிராஜவுக்கும் ஒரிப் பத்து வருஷம்தன்னே வித்யாசம்..? பின்னெந்துக்கு இத்தர யொரு ஆர்ட்டிக்கிள்?"என்று கேட்பவர்களுக்கு சில விசயங்கள்!


உண்மையில் வெள்ளையரை எதிர்த்து இந்தியாவிலேயெ முதன்முதலாக வீர முழக்கமிட்டவன் கட்டபொம்மன் என்பதே சரியான வரலாறு அல்ல.


கட்டபொம்மனுக்கு முன்பே பூலித் தேவன் , தீரன் சின்னமலை என்று இரண்டு(கட்டபொம்மன்,பழஸிராஜா போன்ற)குறு நில மன்னர்கள் வெள்ளையரை எதிர்த்துப் போராடியிருக்கின்றனர்.இதில் பூலித்தேவனின் காலம் எது தெரியுமா?



பொல்லாப் பாண்டியக் கட்டபொம்மன் என்று அழைக்கப் பட்ட ஜெகவீர பாண்டியக் கட்டபொம்மனின் காலம்.


இந்த பொல்லாப் பாண்டியக் கட்ட பொம்மனின் பிள்ளைதான் வீரபாண்டியக் கட்டபொம்மன்.பூலித்தேவனுக்கு உதவாமல் வேடிக்கை பார்த்தவன் பொல்லாப் பாண்டியக் கட்டபொம்மன்.


பூலித்தேவனும் தீரன் சின்னமலையும் கிட்டத்தட்ட‌ சமகாலத்தவர்கள்.


கொள்ளைக்காரன் போன்ற சில விமர்சனங்களுக்கு உட்பட்டாலும் வெள்ளைக்காரனை எதிர்ப்பதில் மாசு மருவற்று விளங்கியவன் கட்டபொம்மன். அந்த‌க் குறை கூட‌ச் சொல்ல‌ முடியாத‌வ‌ர்க‌ள் தீரன் சின்ன மலையும் பூலித் தேவ‌னும் க‌ட்ட‌பொம்ம‌ன் த‌ம்பி ஊமைத் துரைக்கு அடைக்க‌ல‌ம் கொடுத்த‌தால் வெள்ளைக்கார‌னால் க‌ருவ‌றுக்க‌ப் ப‌ட்ட‌ ம‌ருது பாண்டியர்க‌ளும்.!


ஆனால் ப‌ழ‌ஸிராஜா?


ஆர‌ம்ப‌த்தில் வெள்ளைக்கார‌னுக்கு ப‌ட்டுக் க‌ம்ப‌ள‌ம் விரித்த‌வ‌ன்.அவ‌ர்க‌ளுக்கு அத்த‌னை வ‌ச‌திகளும் செய்து கொடுத்த‌வ‌ன்.பின்ன‌ர் ம‌ன‌ம் மாறி எதிர்த்த‌வ‌ன்.



அப்ப‌டி இருக்க இவ‌ர்க‌ளை எல்லாம் விட்டு விட்டு ப‌ழ‌ஸிராஜாவைப் போய்,'இந்தியாவில் வெள்ளைக்க‌ர‌ர்க‌ளை முதன்முதலாக எதிர்த்த‌ மாவீர‌ன் என்று சொல்கிற (உண்மையில் அப்படி சொல்ல அவ‌ர்க‌ள் முய‌ன்றால்)ஒரு வ‌ரலாற்றுப் புர‌ட்டுக்கு ச‌ர‌த்குமார் தெரிந்தோ தெரியாம‌லோ துணைபோன‌ ப‌ழி ச‌ர‌த்குமாருக்கு எத‌ற்கு?



இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய வரலாற்றை எழுதிய வட இந்தியர்கள் விடுதலைப் போராட்டத்தில் தென்னிந்தியாவின் பங்கை இருட்டடிப்புச் செய்தனர்.அப்போது எல்லாம் மற்ற தென் இந்திய மாநிலத்தவர்கள் டில்லிக்கு காவடி தூக்குவதிலேயே கவனமாக இருந்து தங்கள் உரிமை பறி போவதைத் தடுக்கவில்லை. இன்னொன்று 'அது எல்லாம் தமிழ் நாட்டில்தானே நடந்தது . நம் மாநிலத்தில் எல்லாம் மெதுவாகத்தானே வந்தது.இன்று தமிழன் வரலாறு மறைக்கப்படுவதற்காக நாம் ஏன் வருத்தப் படவேண்டும் ?'என்ற சிறுகுணம்.


குடிகார ஊதாரி மகனுக்கு வாரிசுப் பட்டம் சூட்ட அனுமதிக்கவில்லை என்ற சுய நலத்தால் வெள்ளைக்காரனை எதிர்த்த ஜான்ஸி ராணியையும் ,வெள்ளைக்காரப் பெண்கள் மீது கைவைத்து வெள்ளைக்காரன் பகையைச் சம்பாதித்துக் கொண்ட தாந்தியா தோப்பெயையும்(பெயர் சரிதானே)வெள்ளைக்காரனை எதிர்த்துப் போட்டியிட்ட முதல் இந்திய சுதந்திரப் போராட்ட மன்னர்களாக ...



கொஞ்சம் கூட மனசாட்சியின்றிச் சித்தரித்து அதை பாடப் புத்தகத்தில் போட்டு படிக்கவும் வைத்தார்கள்.



அந்த நிலையில் முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் தமிழ் மண்ணில்தான் நிகழ்ந்தது என்ற உண்மையை அவசர அவசரமாக நிரூபிக வேண்டிய சூழல் ஏற்பட ...அப்போது தீரன் சின்னமலை , பூலித் தேவன் போன்றவர்களின் வரலாற்றை ஆராய்ந்து சொல்ல வேண்டிய கால அவகாசம் இல்லாத கொடுமையில் .... ம.பொ.சிவஞானம் போன்றவர்கள், சரியான குழப்பமில்லத குறிப்புகளோடு தெளிவாக இருந்த வீரபாண்டியக் கட்டபொம்மனின் வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிப்படுத்தினர்.அவன் அதிர்ஷ்டக்காரன்.



இல்லாவிட்டால் உலகப் பெரு நடிகர்(பட்டம் வழங்கியது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்)ந‌டிகர் திலகம் சிவாஜி கணேசன் அவனுக்குக் கிடைப்பாரா? உலகப் புகழ் கிடைத்தது கட்ட பொம்மனுக்கும்!



இன்று உலகெங்கும் உள்ள பிரான்ஸ் நாட்டு அமைப்புகள் தங்கள் ஜென்ம எதிரிகளான வெள்ளைக்காரர்களின் வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்ற அந்தப் படத்டை சப் டைட்டிலோடு உலகம் முழுக்க காட்டுகின்றனர்.


இதுதான் உண்மையிலும் உண்மையான வரலாற்று உண்மைகள்.


இப்படி இருக்க தமிழனின் வரலாற்றைத் தந்திரமாக மறைத்து பொய்யாக பழஸி ராஜாவுக்கு அந்தப் பெயரைத் தவறாகத் தர‌ முயலும் ஒரு படத்தை தமிழ் மக்களிடமே அறிமுகப் படுத்தும் ஒரு சதிக்கு சரத்குமாரை அவர்கள் பயன்படுத்திவிடக் கூடாது.



அப்படி அவர்கள் செய்யவில்லை என்றால் ...
அதாவது இந்தப் படத்தின் மூலம் 'இந்தியாவில் வெள்ளைக்காரனை எதிர்த்துப் போராடிய முதல் அரசன் பழஸி ராஜாதான்' என்றபொய்யை அவர்கள் சொல்லவில்லை என்றால் ....


ஒரு சுதந்திரப் போராட்ட வீரனின் கதை என்ற வகையில் பழஸி ராஜாவை நானும் கொண்டாடத் தயார்.