
RUBBISH IN A COSTLY DUSTBIN .....!
இதுதான் சர்வம் படம் பற்றிய சுருக்கமான விமர்சனமாக இருக்க முடியும்.
படத்தில் என்னைக் கவர்ந்த விசயங்கள் இரண்டு.
முதல் விசயம்..
சுமார் 22 வருடங்களுக்கு முன்பு இசைஞானி இளையராஜா இசைத்த - வயலின்கள் கொஞ்சியபடி குதூகல ஊஞ்சல் ஆடும் - அந்த அற்புதமான பின்னணி இசையை இன்று மிகச் சிறந்த ஒலி அமைப்புக் கொண்ட நல்ல திரையரங்கில் கேட்டபோது மனசுக்குள் அலையடித்த சிலிர்ப்பு.
( நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்த வாழ்க்கை என்ற திரைப் படத்தில் ரவீந்தர் , சில்க் சுமிதா இருவரும் நடனமாடும் "மெல்ல மெல்ல என்னைத் தொட்டு ..' என்று துவங்கும் அம்சமான பாடல் இது.இதைக் குறிப்பிட்டு எழுதக் கூட இன்றைய பல பிரபல பத்திரிக்கைகளில் விசயம் தெரிந்த விமர்சகர்கள் இல்லை என்பது கவனிக்கத் தக்கது.
சன் தொலைக்காட்சியில் நான் நிகழ்ச்சி இயக்குனராக(programme produceர்) இருந்த போது 2000 ம் ஆண்டு பிறந்த இரவில் நான் இயக்கி வழங்கிய நுற்றாண்டுத் திரை இசை என்ற நிகழ்சியில் , இளையராஜாவின் மிகச் சிறந்த வாத்தியப் பயன்பாட்டுப் பாடல் என்று அதை நான் குறிப்பிட்டிருந்தது எனக்கு இன்னும் பசுமையாக ஞாபகம் உள்ளது)
சர்வம் படத்தில் என்னை மிகவும் கவர்ந்த இரண்டாவது விசயம்... நிரவ் ஷா வின் ஒளிப்பதிவு.
என் நண்பர் தங்கமணி பிரபு தனது சிந்தனி வலைப் பதிவில் சர்வம் படத்தின் ஒளிப்பதிவு பற்றி எழுதும்போது,ஒரு முறை ரவி.கே.சந்திரன் அவரிடம் 'ஒரு படத்தில் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது என்று தனித்துத் தெரியும்படி இருந்தால் அது நல்ல ஒளிப்பதிவு அல்ல' என்ற ரீதியில் ஒரு கருத்துக் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.சரிதான். ஆனால் அது சர்வம் படத்தின் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவைக் குறை சொல்லப் பொருந்தது என்பதே என் கருத்து.
தலை, கண் ,மூக்கு , கை , கால் என்று எதுவுமே சரியாக இல்லாத ஒரு நபருக்கு பல் வரிசை மட்டும் மிக அழகாக அமைந்து விட்டால் ... அவர் என்னதான் அதை அடக்கி வைத்துப் பார்த்தாலும் அவரையும் அறியாமல் வாய் விட்டுச் சிரிக்கும்போது பளிச் என்று பலரையும் கவர்ந்து விடும்.
அது போல எதுவுமே உருப்படியாக இல்லாத சர்வம் படத்தில் நீரவ் ஷா வின் ஒளிப்பதிவு மட்டும் நன்றாக உள்ள நிலையில் ( உண்மையில் அவர் கொஞ்சம் அடக்கி வாசித்திருகும்போதும் கூட, அது பலரையும் கவரும்படி ஆகிவிட்டது)
பொதுவில் இயக்குனர் விஷ்ணுவர்தனிடம் மதிக்கும்படி பெரிதாக எந்தத் திறமையும் கிடையாது. நயனதாரவின் டூ பீஸ் மட்டும் இல்லாவிட்டால் பில்லாவே கொஞ்சம் பீஸ் பீஸ் ஆகியிருக்கும்.
மற்றபடி பலரும் சர்வம் படத்தைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதிக் குவித்துவிட்ட நிலையில் அதன் விமர்சனத்தை விலாவாரியாக எழுத நன் வரவில்லை.
நான் சொல்ல வருவது மலையளிகளின் inteelectual arrogance பற்றி!
பில்லா படத்துக்குப் பிறகு விஷ்ணுவர்தன் சிம்புவிடம் கால்ஷீட் கேட்டுப் போனதாகவும் அவர் மறுத்து விட்டபடியால் , சிம்பு படம் பார்ப்பதை விட மாடியில் இருந்து குதித்து விடலாம் என்பது போலவும் அதே நேரம் அஜீத் படம் பார்த்தால் மட்டும் 100 அடி உயரத்தில் இருந்து குதித்தால் கூட மாயக் கம்பளம் அப்படியே ஏந்தி இறக்கி விட்டு விடும் என்பது போலவும் வசனத்தை அற்பத்தனமாக வைத்துள்ளார்.
என்னோடு படம் பார்த்து படம் போட்ட ரம்பம் மற்றும் மேற்படி வசனத்தால் முகம் சுளித்த ஒரு ஒளிப்பதிவாளர் (அவர் அனுமதியின்றிப் பெயர் சொல்ல எனக்கு அனுமதி இல்லை) என்னிடம், "சிம்புவாச்சும் இந்த வயசுலயே ஒரு நல்ல நடிகர், திரைக்கதையாளர்,இயக்குனர்,பாடகர்னு எல்லாம் தன்னை நிரூபிச்சாச்சு. ஆனா , அஜித் குளோஸ் அப் ல சிரிக்கிற மாதிரியான ஷாட்கள எடுக்கும்போது கொஞ்சம் கெர்ஃபுல்லா லைட்டிங் பண்ணலைன்னா மார்சுவரியில பிணம் சிரிக்கிற மாதிரியே இருக்கும்." என்றவர் நான் அதை அவ்வளவாக ரசிக்கவில்லை என்று தெரிந்ததும் "அட.. நெஜமா சார்.. பில்லா எடுத்த விஷ்ணுவர்த்தனுக்கு இது நல்லாவே தெரிஞ்சிருக்கும்..அதப் பத்தி அடுத்த படத்துல அவரு டயலாக் வைக்கட்டும்" என்றார் சீரியஸாக.
நம்ம ஆட்களுக்கு படத்தில் எதாவ்து ஒரு நல்ல மியூசிக் பிட் வந்து விட்டால் போதும். உடனே கேரளத்துக் கதக்களி ஆடுபவர்களுக்கு சொல்லி விட்டு விடுவார்கள். கேட்டால் குஷ்டரோகி மாதிரி கைகளை விரித்து ஃபிரேம் பார்த்தபடி , "ஸீ..இட்ஸ் வெரி கலர்ஃபுல்யா.." என்பார்கள்.கதக்களியைவிட வண்ணமயமான எத்தனையோ தமிழ்க் கலாச்சார நடனங்கள் உண்டு.மக்கள் தொலைக்காட்சியை கொஞ்ச நேரம் பார்த்தாலே பல கிடைக்கும்.ஆனாலும் நம்மவர்களே கதக்களியின் காலைக் கழுவிக் குடிக்கும்பொது விஷ்ணுவர்தன் சர்வம் படத்திலும் கதக்களி நடனத்தைப் பயன்படுத்தியதை நான் பெரிதாகக் கருதவில்லை.
சர்வம் படத்தில் என்னை மிகவும் கடுப்பேற்றிய கொடுமை ஒன்று ... கதைப்படி மூணு ஷாவின்( நன்றி;தமிழக கிசுகிசுப் பத்திரிக்கையளர்கள்)மாற்று இதயம் பொருத்தப்பட்ட சிறுவனாக நடித்த பயல் பேசும் மலையாள நாற்றம் அடிக்கும் பேச்சுத் தொனிதான்.
படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் ஒரு மலையளி. ஆர்யா மலையாளி.சிறுவனின் தந்தையாக வரும் இந்திரஜித் மலையாளி.மன நல மருத்துவர் பாத்திரம் என்றால் வேறு ஆளே இல்லை என்பது போல இதிலும் நடித்திருக்கும் முதல் மூத்த 'சித்தப்பா' பிரதாப் போத்தன் மலையாளி.அந்தச் சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ள சிறுவனும் மலையாளி.வில்லனாக வரும் ஜே.டி. மலையாளியில்லை. இருங்க.. அவசரப் படாதீங்க..அவர் தமிழர் இல்லை .. தெலுங்கர்... ஆனால் இது தமிழ்ப் படம் .. தூ......!
- என்று நான் சொன்னால்.."என்ன பேச்சு இது? திரிஷா தமிழர் இல்லையா...யுவன் ஷங்கர் ராஜா தமிழன் இல்லையா..'என்பார்கள் . "பின்னும் கலைக்கு மொழியில்லா ஸாரே..."
அப்படியே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம். படத்தில் கதைப்படி அப்பா நல்ல தமிழில் பேசும்போது , மகன் இப்படி மலையாள நாற்றத்தோடு பேசுவது எப்படி சாத்தியம்..? என்ன லாஜிக்?
பொதுவாக குழந்தைகள் , நல்லவர்கள் ஆபத்துக்கு ஆளாவதைக் கதைகளில் கூடச் சீரணிக்க முடியாத உங்களைப் போன்ற மனிதன்தான் நான் .
ஆனால் தமிழை அந்தச் சிறுவன் கொன்று குதறியதால் எழுந்த ஆத்திரத்தில் வில்லன் ஜே.டி . எப்போது அந்தப் பயலைக் கொன்று புதைப்பார். அல்லது வில்லனின் வேட்டை நாய் எப்போது தமிழைக் கடித்துக் குதறும்அந்தச் சிறுவனின் கழுத்தைக் கடித்துக் குதறும் என்று ஏங்க ஆசைப் படுகறது பாழும் மனசு.
"என்னவோ எல்லா நடிகர்களும் தமிழை ஒழுங்காகப் பேசுவது போல எண்ணி அந்த சிறுவன் கதாபாத்திரத்தின் மேல் இவ்வளவு கோபப் படுவது சரியா என்று கேட்கலாம்.
ஒரு மொழியை ஒழுங்காகப் பேசாதது கொடுமை எனில்,அந்த மொழியின் மேல் வேறொரு மொழியைத் திணித்துக் கொடுமை செய்வது என்பது கொடுங் கொடூரக் கொடுமை!
அதாவது அந்தக் கதாபாத்திரத்தில் ஒரு மலையாள சிறுவனைத்தான் நடிக்க வைப்பார்களாம்.அதே நேரத்தில் அவனுக்கு ஒழுங்காகத் தமிழ் பேசச் சொல்லிக் கொடுக்கவும் மாட்டார்களாம் .சரி அவனுக்கு ஒழுங்காகத் தமிழ் பேச முடியவில்லை என்றால் சரியான வேறு ஒரு சிறுவனை வைத்துப் பின்னணிக் குரல் கொடுக்கவும் செய்ய மாட்டார்களாம் .
எவ்வளவு கேவலமாகப் பேசினாலும் தமிழ் குதறப் பட்டாலும் லாஜிக் எந்த அளவுக்கு இடித்தாலும் படத்தில் நடிதத அந்த மலையாளச் சிறுவன்தான் பின்னணி பேசவும் வேண்டுமாம்.தமிழ்தானே.. கேவலமாக இருந்தால் என்ன ?
ஆனால் பேச்சு நடவடிக்கைகளைப் பாருங்கள்..10 கோடி ரூபாய் பணத்தை வானத்தில் வீசி எறிந்து விட்டு ஒன்றையும் விட்டு விடாமல் மீண்டும் பிடித்து விட்ட ஆட்கள் மாதிரி அலட்டுவார்கள்.
இவர்கள் எல்லோரையும் கூட மன்னித்து விடலாம்.
மன்னிக்கவே முடியாத ஆட்கள் இருவர்.
ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் இந்தப் படத்தை இப்படி எடுக்க அனுமதித்த எடுத்த லண்டன் கருணாஸ் ஒரு இலங்கைத் தமிழர்.அதன் இணைத் தயாரிப்பளர் ( நடிகர்)அரூண் பாண்டியன் ஒரு தமிழ் நாட்டுத் தமிழர்.
அப்புறம் எப்படி தமிழீழம் கிடைக்கும்?