Tuesday, May 19, 2009
கருணா முதல் கருணாநிதி வரை .. 16 திசையிலும் துரோகம்
புற நானூறு
புதிராய்ப் போனது.
கலிங்கத்துப் பரணி
கலகலத்துப் போனது.
வஞ்சகம் வலை விரிக்க
நயவஞ்சகம் நர்த்தனம் ஆட
சூது சுற்றி வளைக்க
துரோகம் தூபம் போட
ஒரு சூனியக்காரி சூத்திரம் படிக்க
கயவர்கள் உன் கண்ணைக் கட்ட
தந்திரம் மந்திரம் போட
பகைமை பல்லிளிக்க ...
கம்பீரம் கவிழ்ந்தது!
பெருமை பிறழ்ந்தது!
தீரம் தீர்ந்தது!
தன்மானம் தகர்ந்தது!
இனமானம் இடிந்தது!
குலமானம் குலைந்தது!
தமிழ்மானம்
தலைகுப்புற விழுந்தது!
ஆம்!
வேசிப் பிள்ளைகளின் பித்தலாட்டத்தால்
வேலுப் பிள்ளை பிரபாகரன் மாண்டான்!
தம்பீ....!
கருணா முதல் கருணாநிதி வரை..
அப்பப்பா...!
பதினாறு திசையிலும்
உனக்குத் துரோகம்!
இரண்டாம் முறை பிறந்த
கரிகாலச் சோழனே!
முதல் முறை நீ பிறந்தபோது
கல்லணை கட்டினாய்!
இரண்டாம் முறை நீ
பிறந்து வாழ்ந்து முடிந்த போது..
மன்னித்து விடு மாவீரா...!
என்னால் உனக்கு
கண்ணீரணைதான்
கட்ட முடிந்தது கண்ணாளா..!
நீ உன்னை
மாய்த்துக் கொள்ள முடிவு செய்த
அந்த நொடி..
இந்த பூமிப் பந்தின்
கறுப்பு நொடி..!
வீரம் என்றால் என்னவென்று
கேட்கும் நாளைய மனித இனத்துக்கு
உன்னையன்றி யாரை
உலகம் கைசுட்டிக் காட்டும்?
தமிழினமே!
தலைவன் என்ற சொல்லை
பிரபாகரன் பிணத்தோடு புதைத்துவிடு!
கணிகைத்தனத்துக்கு
காவடி எடு.
பரத்தைக் குலத்துக்கு
பதவி கொடு!
விபச்சார குணத்துக்கு
வீணை வாசி!
இன்று
உன் தலையில் நீயே
உல்லாசமாய்
வைத்துக் கொண்ட கொள்ளி
உத்வேகமாய் உன்னை
முழுசாய் எரிக்கையில்
ஆதரவாய் வந்து
அணைப்பதற்கு ...
ஒரு துளி மழையும்
உன்னை நெருங்குமோ!
தவிர்க்க
வேண்டுமென்றால்
இனியாவது துள்ளியெழு!
துரோகக் களைகளைக்
கிள்ளியெடு.!
நாளைய தலைமுறை
நம் நாயகனைக் காட்டி
யாரிது என்று ஆவலாய்க் கேட்டால் ...
சாக்கடைச் சகுனிகளுக்கு
எதிராய்ச் சுழன்ற
சந்தண வீர வாள்
என்று கண்கள் கசியக்
காவியமாய்ச் சொல்லிக் கொடு!
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
வீழ்ந்தது தமிழ்...தமிழ் வீரன் மாண்டானோ?
தமிழ் என்று சொல்லி விடாதீர்கள்.. காரி உமிழ்ந்து விடுவார்கள்.
தமிழனுக்கு என்ன ரோசம்.. இருபதாம் நூற்றாண்டில்
ஒரே ஒரு தமிழ் வீரன் இருந்தான். அவன் செயல் வீரன்..
மற்றோரெல்லாம் வெறும் வாய் வீரர்கள்.. இனி
ஈழமாவது ? என்ன எழவாவது ? போய் கஞ்சிக்கு வழி பார்.
தமிழ் வீரம் செத்து விட்டது.. அன்று சேர, சோழ, பாண்டிய
வீரம் கேட்டேன்....
உலகத்தில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது..
விடுதலையாக திரிந்த புலிகளை சுட்டுக் கொன்றார்கள்
விடுதலை வேண்டி போராடிய விடுதலைப்புலிகளையும்
கொன்றார்களடா. ..தனி ஒரு மனிதன் பிறந்தால் அவன்
தமிழரின் வீரம் பேசும் மகனாக வேண்டுமடா..
யாருக்காக ?..... இது யாருக்காக ? இந்த மனித வெறித்தாக்குதல்
எதற்காக..? அன்று வாஞ்சி நாதனையும் பகத் சிங்கையும்
பாராட்டியவர்கள் இன்று பிரபாகரனை ஏன் பழிக்கிறார்கள்?
அவனும் விடுதலை வேண்டி போராடியவன் தானே..
அதுவும் என் தமிழுக்கு .. என் தமிழருக்கு ..நமக்கு தான்
வீரம் இல்லை.. என்னையும் சேர்த்துத் தான்.....
இல்லையே.. அவன் வீர மரணத்தை நாளை நாம்
கொண்டாட நமக்கு அருகதை இல்லை .. நாம் தான்
நாயினும் இழிந்த பிறவி ஆயிற்றே ..
போர் முடிந்து விட்டதா?
தமிழர்களே...
போர் முடிந்து விட்டதா?
இனி
தந்திரமாய்
அரசியல் செய்து
தமிழர்க்கு சம உரிமை
தருவித்து விடலாமா?
கேளுங்கள்....
அன்பாய் கேளுங்கள்...
பனிவாய் கேளுங்கள்...
அப்போதுதான்
குட்டிமணி, ஜெகனிலிருந்து
மீண்டும் தொடங்லாம்!
இந்த முறை
சிறை கலவரத்துக்கு சற்று முன்பே
பொடியன்களுடன்
தம்பி வந்துவிடுவார்!
நம்புங்கள்
உயிர்த்தெழுவது -நம்
தலைவனுக்கொன்றும் புதிதில்லை!
Post a Comment