Friday, July 3, 2009

# ஓரினச் சேர்க்கைக்கு உயர்நீதி


ஒன்னும் புரியல சாமி. வெவரம் தெரிஞ்ச மக்கா யாரும் இருந்தா சொல்லுங்க.நீதி மன்றத் தீர்ப்பை யாரும் விமர்சிக்கக் கூடாது .அப்படி செஞ்சா அது கோர்ட் அவமதிப்பு. இது வெள்ளைக்காரன் காலத்துல கொண்டு வரப்பட்ட பழக்கம் . ஆனாலும் நாம இன்னும் வச்சிருக்கோம் .

ஏன்?

நீதிமன்றத்து
மேல மக்களுக்கு மரியாதை வேணும் என்பதற்காக!இந்தியாவுல இன்னும் மக்களோட நம்பிக்கைக்குப் பாத்திரமா இருக்கிற ஒரே அமைப்பு நீதி மன்றங்கள்தான்.


அதனால
மாட்சிமை தாங்கிய இந்திய நீதி மன்ற‌ங்கள் மேல நமக்கு நிறைய மதிப்பும் மரியாதையும் என்றென்றைக்கும் உண்டு.இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.


பொதுவா ஒரு தனி மனிதருகு ஒரு குற்ற சம்பவத்துல தொடர்பு இருக்கோ இல்லியோ...ஆனா ஒரு குற்றம் நடந்தது தெரிஞ்சிருந்தும் அத அவர் தானா முன்வந்து அரசாங்கத்துக்கிட்ட சொல்லாம இருந்தார்னு பல வருசம் கழிச்சுத் தெரிய வந்தாக் கூட , மறைத்த அந்த ஒரு காரணத்த வச்சு அவரையும் குற்றத்துக்கு உடந்தைன்னு சொல்லி தண்டிக்கக் கூடச் செய்யலாம்னு நம்ம அரசியல் சட்டம் சொல்லுது.


ஆனா ந‌ம்ம‌ நீதிப‌தி அய்யா ஒருத்த‌ர் த‌ன்னை ஒரு விச‌ய‌மா ம‌த்திய‌ அமைச்ச‌ர் ஒருத்த‌ர் மிரட்‌டினார்னு சொல்லிட்டு அவ‌ர் பேர‌ இதுவ‌ரை சொல்லாம‌ இருக்கார்.அதாவ‌து ' ஒரு குற்றவாளிய‌த் தெரிஞ்சும் தெரிய‌ப் ப‌டுத்தாம‌ இருக்கறது ஞாயமா ஆராசா'ன்னு அத‌ விட‌ப் பெரிய‌வ‌ங்க யாரும் கேட்க‌ல‌.


‌ரி போகட்டும் .

அதெல்லாம்
பெரிய‌ இட‌த்து வெவ‌கார‌ம்.


அண்மையில் டில்லி உய‌ர் நீதி ம‌ன்ற‌ம் ஒரு வித்தியாச‌மான‌ தீர்ப்பை அளித்துள்ளது.


அதாக‌ப் ப‌ட்ட‌து , 'ஒருமித்த‌ உண‌ர்வோடு ஓரின‌ச் சேர்க்கையில் யார் எப்போது ஈடுப‌ட்டாலும் அவ‌ர்க‌ளைக் கைது செய்ய‌வோ த‌ண்டிக்க‌வோ யாருக்கும் அதிகார‌ம் இல்லை' என‌பதுதான் அந்த‌த் தீர்ப்பு.


பை த‌ பை , ஓரின‌ச் சேர்க்கை என்றால் என்ன‌வென்று இதைப் ப‌டிக்கிற‌ அனைவ‌ருக்கும் தெரியும்தானே


தெரியாத (அப்பாவிகள் யாரும் இருந்தால் அ)வர்களுக்கு மட்டும்...!உலகத்தில் விலங்குகள் ,பறவைகள்,மனிதன் என்று உடலுறவில் ஈடுபடுகிற அனைவருமே ஆணுடன் பெண் அல்லது பெண்ணுடன் ஆண் என்ற ரீதியில் உறவு கொள்வது இயற்கை(என்னது இதுவும் தெரியாதா? இந்தக் கிண்டல்தானே வேணாங்கறது) இப்படி இல்லாமல் ஆணும் ஆணும் அதே போல பெண்ணும் பெண்ணும் உடல் உறவு கொள்வது( அட , ஆமாங்க!)ஓரினச் சேர்க்கை எனப் படுகிறது .


இவர்கள்தான் 'ஒருமித்து' செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது அவர்களை யாரும் டிஸ்டர்ப் செய்யக்கூடாது; போலீஸ் கைது செய்ய முடியாது என்று தீர்ப்பு அளித்துள்ளது நீதி மன்றம்.


இதைத்தான் நமது பத்திரிக்கைகளூம் கூட MAY DAY , PAY DAY போல GAY DAY என்று பேர் வைத்துக் கொண்டாடி விட்டன.


சரி நம் நாட்டின் பெரும் பகுதியில் விபச்சாரம் தடை செய்யப் பட்ட குற்றம்.


ஏன்?


எயிட்ஸ் முதலிய நோய்கள் பரப்பு, கலாச்சார சீரழிவு, பொருள் இழப்பு,குடும்ப அமைப்பு சிதறல் , நம்பிக்கைத் துரோகம் இவை காரணமாக அது தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது.ஓரினச் சேர்க்கை விவகாரத்திலும் இது எல்லாமும் உள்ளது.


எயிட்ஸ் முதலிய நோய்கள் ஓரினச் சேர்க்கையிலும் பரவும்.கலாச்சார சீரழிவு அதிலும் உண்டு.இயல்பான செக்சைவிட இதற்கு ஆள் தேடுவது சிரமம் என்பதால் இதிலும் பணப் புழக்கம் உண்டு.குடும்ப மைப்பு இதிலும் சிதையும். கணவன் மனைவிக்கான நம்பிக்கைத் துரோகச் சிக்கல்கள் இதிலும் நிறைய உண்டு.ஆக ஓரினச் சேர்க்கை , ஈரினச் சேர்க்கை , மூவினச் சேர்க்கை ( சீக்கிரம் இப்படியும் எதையாச்சும் கண்டு புடிப்பானுங்க)எல்லாவற்றிலும் இஷ்டம் போல செயல்படுவது பணத்துக்காகச் செயல்படுவது என்பது காதலற்ற காமம் இவை பிரச்னைகளை உண்டு பண்ணும் என்பதில் சந்தேகமில்லை.அப்படி இருக்க ஓரினச் சேர்க்கையை மட்டும் அனுமதிப்பது சரியா?
அதிலும் சில பேர் இதையும் செய்வார்களாம். அதையும் செய்வார்களாம். அவர்களுக்கு இருபாலின ஈர்ப்பாளர்கள் என்று பெயராம். கில்லாடிங்கப்பா.


கேட்கலாம் . "அதான் கோர்ட் சொல்லுதே.ஒரு மித்த உணர்வோடு ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோரஒ மட்டும்தான் தடுக்கக்கூடாது என்று" எனக் கேட்கலாம்.


இரண்டு பேர் ஈடுபட்டிருக்கும்போது அவர்கள்

இருக்கின்றனர் அல்லது இல்லை என்று மூன்றாவது மனிதர் எப்படித் தீர்மானிப்பது ? அதை சோதிக்கிறேன் என்று போளீஸ் கிளம்பி எதுவும் ஏடாகூடமாகி விட்டால்?


ஆக, இந்த சட்டப்படி ஓரினச் சேர்க்கையாளர்கள் எந்த இடத்தில் எப்படி நடந்து கொண்டாலும் யாரும் ஒன்றும் செய்ய முடியாது . ஏனென்றால் அவர்கள் ஒருமித்து இல்லை என்பதை மூணாம் மனுஷன் நிரூபிக்க முடியாது .


சரி .. இதே போல ஒரு விலைமாதுவையோ அவளுடன் இருப்பவனையோ போலீஸ் கைது செய்யும்போது அவர்கள் இருவரும் 'ஒருமித்து ' உறவு கொள்வதாக அவர்கள் கூறினால் போலீஸ் அவர்களை விட்டு


விடுமா? விடாது என்றால் ஓரினச் சேர்க்கைக்கு ஒரு சட்டம் , இத்தனைக் காலமாக உயிரினம் வளர்த்த இயல்புச் சேர்க்கைக்கு ஒரு சட்டமா?


ஒரு கணவன் மனைவி வெளியூர் வந்து ஒரு விடுதியில் தங்கினாலே ஆயிரம் கேள்வி கேட்கும் போலீஸ்ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மட்டும் இனி கண்ணைக் கட்டிக் கொள்ளுமா?


ஒன்று செய்யுங்க‌ள் .விப‌ச்சார‌த்தை நாடு முழுக்க‌ அங்கீக‌ரித்து விட்டு ஒதுங்கிக் கொள்ளுங்க‌ள். எக்கேடோ கெட்டுப் போக‌ட்டும். வேறென்ன‌?


இல்லை நண்பர்களே ... எனது நோக்கம் விபச்சாரத்தை ஆதரிப்பது அல்ல.
அனால் இது போன்ற நிலைப்பாடுகள் சூழல் தரும் வாய்ப்பை வைத்து பலரையும் ஓரினச் சேர்க்கையை நோக்கித் தள்ளும்.


ஆக ஓரினச் சேர்க்கை விபசாரம் அதிகரிக்கும்.அது இன்னும்பெரிய சீர்கேடுகளை ஏற்படுத்தும்.


ந‌ம்புவோம் .. மாட்சிமை தாங்கிய‌ உச்ச‌ நீதி ம‌ன்றத்தை.

9 comments:

மின்னுது மின்னல் said...

good post !!!

வண்ணத்துபூச்சியார் said...

ஆணும் ஆணும் ஒரே அறையில் தங்குவது கூட தவறாக கருதப்படும்...

கேவலம்...

சு.செந்தில் குமரன் said...

நன்றி மின்னும் மின்னலே. நன்றி வண்ணத்துப் பூச்சியாரே.. மிக சரியான கருத்து
உங்களுடையது. நினைச்சாலே பயமா இருக்கு.

பிளெட்சர் said...
This comment has been removed by the author.
செல்வன் said...
This comment has been removed by the author.
செல்வன் said...

இது பற்றி விளக்கமாக இரு பதிவுகள் எழுதியிருக்கிறேன்.பதிவுகளில் இருக்கும் பின்னூட்டங்களையும் நேரமிருப்பின் படியுங்கள்.

பதிவுக்கான சுட்டிகள்

http://holyox.blogspot.com/2007/07/316-1.html

http://holyox.blogspot.com/2007/07/317-2.html

சு.செந்தில் குமரன் said...

செல்வன் , பிளெட்சர் எழுதிய இரு பதிவுகளையும் நான் படிக்கவும் இல்லை . நீக்கவும் இல்லை யாரோ நான் லாக் அவுட் செய்யாத நிலையில் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர்.

சு.செந்தில் குமரன் said...

செல்வன் அவர்களே உங்கள் பதிவுகளைப்படித்தேன்.தவிர ஒரு தோழியும் எனது மின்னஞ்சலுக்குஒரு கடிதமெழுதியுள்ளார் .

ஓரினச் சேர்க்கை என்ற உணர்வுக்கே நான் எதிரானவன் என்ற ஒரு தொனி உங்கள் இருவரின் கருத்திலும் இருப்பதை நான் உணர்கிறேன். ஆனால் அது உண்மையல்ல.

ஓரினச் சேர்க்கைக்கு நான் ஆதரவானவனும் இல்லை. எதிரானவனும் இல்லை.அறிக. எனக்கு அதில்விருப்பம் இல்லைஎன்பதால் அதிலாரவம் உள்ளாவர்களை எள்ளி நகையாடும் எண்ணமும் எனக்கு இல்லை.

என் கேள்வி க்கு பதில் சொல்லுங்கள்.

ஒருமித்த உணர்வு என்ற பெயரிலோரினச் சேர்க்கையாளர்கள் மட்டும் எப்போதும் எங்கும் எந்த நோக்கம் அல்லது விருப்பத்துக்காகவும் இஷ்டம் போல நடந்து கொள்ளாலாம் என்பது நியாயமா?

இயல்புச் சேர்க்கையில் விபச்சாரம் இருபது போல ஓரினச் சேர்க்கையிலும் விபச்சாரம் இருக்கிறது அல்லவா? ஆக,இயல்புச் சேர்ர்க்கையால் வரக்கூடாத நோய்கள், பிர‌ச்னைகள்,சிக்கல்கள் ஓரினச் சேர்க்கையால்மட்டும் வரலாமா?

இயல்புச் சேர்ர்கையில் விபச்சாரம் செய்பவர்களில் ஒருமித்த உணர்வோடு யாரும் செய்யவில்லை என்று கூற முடியுமா?

ஆக, எந்தெந்த விசயங்களில் இயல்புச் சேர்க்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதோ அதே கட்டுப்பாடுகளை ஓரினச் சேர்க்கைக்கும் விதிப்பதுதானே சரி.

பொய்யாக (அல்லது உண்மையாக) ஒருமித்த உணர்வு என்ற பெயரில் ஓரினச் சேர்க்கையாளர்கள்மட்டும் ர்ங்கும் எப்படியும் பலர்பார்க்கக் கூட நடந்து கொண்டு மற்றவரை கூசச் செய்தால்கூட அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்பது என்ன நியாயம்?

J.P Josephine Baba said...

நல்ல பதிவு. பல கொலைகள் இதை சார்ந்தே இளைஞர்கள் மத்தியில் நடந்து வருகின்றது. தனியாக பயணிப்பது பெண்களுக்கு சவால் என்பது போல் ஆண்களுக்கும் வரவுள்ளது!

Post a Comment