Thursday, July 16, 2009

# மனசெல்லாம் முதல் ஆசிரியை


அருமை நண்பர் செந்தில்வேலன், தனது பள்ளி நினைவுகள் பற்றிய ஒரு
பதிவிற்குப் பின்னூட்டமாக எனது பள்ளி நினைவுகள் பற்றிய ஒரு பதிவைக்
கேட்டிருந்தார். அந்த அன்புக்காக நான் எழுதி அவரது பதிவிற்குப் பின்னூட்டமாக
பதித்திருந்தேன்.

அதை படித்த அவர் , ' இது எனது பதிவின் பின்னூட்டமாக இருந்தால் மட்டும்
போதாது . இந்த அழகான பதிவு உங்கள் வலைப்பூவிலும் தனியாக இடம் பெற
வேண்டும் என அன்புக் கட்டளை இட்டதால் .. இதோ இங்கும்!


4 வயசு.
பாலர் பள்ளி .
எனக்கு பள்ளிக்கூடம் போவதே பிடிக்காது.
அம்மா கூடவே இருக்க ஆசை

முட்டை பணியாரம் நிறைய தின்று தின்று அப்பவே ரொம்ப குண்டாக இருப்பேன்.

ஆசிரியர்கள் மிகவும் கடமை உணர்ச்சியோடு பணியாற்றிய காலம் அது.

விஜயா டீச்சர் என் பாலர்பள்ளி ஆசிரியை , அம்மா அப்பவுக்குப் பிறகு என் முதல் ஆசிரியை. ரொம்ப ஒல்லியாக இருப்பார். அவருக்கு அடிக்கடி இருமல் வரும்.

என்னை பள்ளிக்கூடம் அழை(இழு)த்துப் போக அவர் வீடு தேடி வருவார்.எனக்கு அவரைப் பார்த்ததும் பள்ளிக்கூடம் போக வேண்டுமே என்று அழுகை அழுகையாய் வரும். தெறித்து ஓடித் தப்பிக்கப் பார்க்கும் என்னை இழுத்துப் பிடித்து அவரிடம் ஒப்படைத்து விடுவார்கள்.

அவர் என்னை இழுத்துப் பிடித்து இடுப்பில் உட்கார வைத்துக் கொள்வார். பள்ளி நோக்கி நடப்பார். நான் ஆத்திரம் தாளாமல் அவர் நெஞ்சில் ஆத்திரம் கொண்ட மட்டும் ஓங்கி ஓங்கிக் குத்துவேன்.

அடியின் வலி தாள முடியாது இருமிக் கொண்டே தட்டுத் தடுமாறிச் சமாளித்தபடி என்னைத் தூக்கிக் கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளியில் போய் இற‌க்குவார்.

அழுத அழுகையில் போன உடன் காலைக்கடன் வந்து விடும். ஒரு தாயைப் போல லொஞ்சம் கூட கூசாமல் கழுவி விடுவார். பின்னர் பிஸ்கட் கொடுத்து தாலாட்டியபடி குதிரை பொமையில் உட்கார வைத்து ஆட வைத்து சமாதானப்படுத்துவார்.

நான் அவரை செய்த கொடுமைகளுக்கு அளவே இல்லை.ஒரு நாளும் முகம் சுளித்ததாய் நினைவு இல்லை. இப்போது நினைத்தாலும் கண்கள் பனிக்கிறது.

அண்மையில் என் மகள் PreK.G. முடித்தபோது கடைசி நாள் அந்த வகுப்பறை ஆசிரியை காலில் என் மகளை விழுந்து வணங்கச் செய்தேன். ஒரு நனறி வாழ்த்து மடல் கொடுக்கச் செய்தேன்.

மனசெல்லாம் விஜயா டீச்சர்.

Wednesday, July 15, 2009

# கொலை விழுந்த வீடு"அந்த வீட்டுக்குக்
குடி போக வேணாம் "

அம்மா சொன்னார்கள்.

"அஞ்சாறு மாசம் முன்னாடி
வயசுப் பொண்ணொருத்திய,

அந்த வீட்டுல
ரெண்டு ரவுடிப் ப்சங்க‌

கெடுத்துக்
கொலை பண்ணிட்டாங்களாம்.

குழந்தைங்க இருக்கற
நம்ம
குடும்பத்துக்கு
ஆகாது
அந்த வீடு ...!"

அய்ய்ய்யோ அம்மா....
நூற்றுக்கணக்கான
குழந்தைகளைக் கொன்று
ஆயிரக்கணக்கான
கற்பழித்து
லட்சக்கணக்கான
கர்ப்பப்பைகளைச் சிதைத்து ...

கிளி நொச்சியைக்
கிரானிகா ஆக்கி
முல்லைத்தீவை
மூலதூவா ஆக்கி...

ஓர்
இனமே இருந்த
அடையாளத்தை அழித்து
கும்பல் கும்பலாகக்
குடியமர்த்தப் போகிறானே..

அவன் இனம் மட்டும்
எப்படித் தாயே
உருப்படும்?

Monday, July 13, 2009

# ஆஸ்திரேலியாவின் இறையாண்மை

ஆஸ்திரேலியா, அடுத்து கனடா எனத் தொடர்ந்து இப்போது இங்கிலாந்திலும்இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் அதாவது இன ரீதியான தாக்குதல்கள் ரதொடங்கப் பட்டிருப்பதாகத் தகவல்கள்.

ஏன்?சுதந்திரம் வாங்கி தனி நாடா மலர்ந்த உடனே உலக அரங்குல இந்தியாவுக்குகிடைச்ச பேரு பாம்பாட்டி தேசம் என்பதுதான். அத உடைக்க ஜவஹர்லால் நேரு எடுத்த அற்புதமான நடவடிக்கைதான் சோஷலிஸ ஜனநாயகம் , நடுவு நிலைமைக் கொள்கை, அணி சேராத் தன்மை இது எல்லாம்.

உண்மையிலேயே இந்தியாவுக்கு நேற்று வரைக்கும் உலக அரங்குல மரியாதையான காவலா இருந்ததே இந்தக்கொள்கைகள்தான். அதும் காந்தியோட தேசம் என்ற பெயருக்கு கு இது எல்லாம்அழகா பொருந்தியது.. இந்தியான்னா உள்ளூர் விசயம் முதல் உலக விசயம் வரை அது கருணையின் அடிப்படையிலேயே எதையும் கையாளும் என்ற பேருஇந்தியர்களுக்கு எப்பவும் எங்க‌யும் ஒரு கவுரவமாக இருந்தது .அதனால 'இந்தியன் நம்ம ஊருல வந்து நமம வேலஒய பறிக்கிறான்கற எரிச்சல் மற்ற நாட்டவர்க்கு இருந்தாக் கூட அது கோபமா மாறல.

எல்லாம் கொஞ்ச நாள் முன்பு வரை .

இலங்கைப் பிரச்னையில் இந்தியாவின் கோர முகம் உலகுக்குத் தெரிஞ்ச உடனே எல்லாம் மாறிப்போச்சு. இலங்கையில அநியாயமா அழிக்கப் பட்ட‌தே , இந்தியாவின் மூத்த ஒரு இனத்தின் நீட்சிதான் என்கிற அளவுக்கு உலகத்துல எல்லாருக்கும் விவரம் தெரியாம இருக்கலாம். ஆனா ஒரு இனம் அழியக் காரணமே இந்தியாதான் என்பது எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு.

ஸோ.. இது வரைக்கும் உலக அரங்கில் எது இந்தியனுக்கு ஒரு காவலாக இருந்ததோ அந்த கேடயம் நொறுங்கிப் போச்சு.அதான் அங்கங்க உதை விழுது .

இது ஒரு பக்கம் இருக்க ..

சிறு நீரகக் கல் பிரச்னையால் பெரும் அவதிக்கு ஆளாகி பின்னர் காய்ச்சல் உள்ளிட்ட பல உபாதைகளுக்கு ஆட்பட்டிருந்த என்னை கொதித்தெழ வைத்தது ஒரு செய்தி .

அதாகப் பட்டது .....

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்பட்ட எல்லா சம்பவங்களிலும் சம்மந்தப்பட்ட எல்லா ஆஸ்திரேலியர்களையும் கைது செய்து மாறுகால் மாறு கை வாங்காமல் அந்த சம்பவஙளையெல்லாம் பெட்டி கேஸ் எனப்படும் சாதரண வழக்குகளில் பதிவு செய்திருக்கிறதாம் ஆஸ்திரேலிய அரசு .

தவிர ஆஸ்திரேலிய அமைச்சர் ஒருவர் ஒரு பேட்டியில். " இந்தியர்கள் பெரும்பாலும் தவறான நேரங்களில் தவறான இடங்களிலேயே சுற்றி வருகின்றனர் . அதனாலதான் அடி வாங்குகின்றனர்." என்று கூறிவிட்டார். எப்படி அது மாதிரி சொல்லப் போச்சு என்று தொம்ம்ம்ம்ம்ம் தொம்ம்ம்ம்ம் என்று மாரடித்து அழுதன வட இந்தியச் சேனல்கள் .கொதித்தெழக் காரணம் இதுதான்

"ஆஸ்திரேலியா இப்படிச் சொல்லலாமா?" என்று ஆத்திர‌த்தோடு கேட்டார் நண்பர் ஒருவர்.

நான் மன திடத்தோடு இப்படிச் சொன்னேன்." ஆஸ்திரேலியாவுக்கென்று ஒரு இறையாண்மை உள்ளது.அவர்கள் தேசப் பாதுகாப்புக்கு என்று சில வரையறை இருக்கு.அதுக்கு எதிரா யாரும் செயல்படக்கூடாது. தவிர நாம் பேசும் எந்த வார்த்தையும் அவர்கள் கோபத்தை அதிகப் படுத்தக் கூடாது. நாம் ஆஸ்திரேலியர்களோடு அன்பாக வாழ வேண்டும் "

இவ்வளவு 'சரி'யாக நான் சிந்திப்பதற்கு உதவிய பின்வரும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

வட இந்திய அரசியல்வாதிகள் மற்றும் மீடியாக்கள்

தமிழகத்து ஆங்கில மீடியாக்கள்

தமிழக காங்கிரசார்.

சோ , சுப்பிரமணிய ஸ்வாமி, எஸ்.வி.சேகர் வகையறா

கருணாநிதி

Friday, July 3, 2009

# ஓரினச் சேர்க்கைக்கு உயர்நீதி


ஒன்னும் புரியல சாமி. வெவரம் தெரிஞ்ச மக்கா யாரும் இருந்தா சொல்லுங்க.நீதி மன்றத் தீர்ப்பை யாரும் விமர்சிக்கக் கூடாது .அப்படி செஞ்சா அது கோர்ட் அவமதிப்பு. இது வெள்ளைக்காரன் காலத்துல கொண்டு வரப்பட்ட பழக்கம் . ஆனாலும் நாம இன்னும் வச்சிருக்கோம் .

ஏன்?

நீதிமன்றத்து
மேல மக்களுக்கு மரியாதை வேணும் என்பதற்காக!இந்தியாவுல இன்னும் மக்களோட நம்பிக்கைக்குப் பாத்திரமா இருக்கிற ஒரே அமைப்பு நீதி மன்றங்கள்தான்.


அதனால
மாட்சிமை தாங்கிய இந்திய நீதி மன்ற‌ங்கள் மேல நமக்கு நிறைய மதிப்பும் மரியாதையும் என்றென்றைக்கும் உண்டு.இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.


பொதுவா ஒரு தனி மனிதருகு ஒரு குற்ற சம்பவத்துல தொடர்பு இருக்கோ இல்லியோ...ஆனா ஒரு குற்றம் நடந்தது தெரிஞ்சிருந்தும் அத அவர் தானா முன்வந்து அரசாங்கத்துக்கிட்ட சொல்லாம இருந்தார்னு பல வருசம் கழிச்சுத் தெரிய வந்தாக் கூட , மறைத்த அந்த ஒரு காரணத்த வச்சு அவரையும் குற்றத்துக்கு உடந்தைன்னு சொல்லி தண்டிக்கக் கூடச் செய்யலாம்னு நம்ம அரசியல் சட்டம் சொல்லுது.


ஆனா ந‌ம்ம‌ நீதிப‌தி அய்யா ஒருத்த‌ர் த‌ன்னை ஒரு விச‌ய‌மா ம‌த்திய‌ அமைச்ச‌ர் ஒருத்த‌ர் மிரட்‌டினார்னு சொல்லிட்டு அவ‌ர் பேர‌ இதுவ‌ரை சொல்லாம‌ இருக்கார்.அதாவ‌து ' ஒரு குற்றவாளிய‌த் தெரிஞ்சும் தெரிய‌ப் ப‌டுத்தாம‌ இருக்கறது ஞாயமா ஆராசா'ன்னு அத‌ விட‌ப் பெரிய‌வ‌ங்க யாரும் கேட்க‌ல‌.


‌ரி போகட்டும் .

அதெல்லாம்
பெரிய‌ இட‌த்து வெவ‌கார‌ம்.


அண்மையில் டில்லி உய‌ர் நீதி ம‌ன்ற‌ம் ஒரு வித்தியாச‌மான‌ தீர்ப்பை அளித்துள்ளது.


அதாக‌ப் ப‌ட்ட‌து , 'ஒருமித்த‌ உண‌ர்வோடு ஓரின‌ச் சேர்க்கையில் யார் எப்போது ஈடுப‌ட்டாலும் அவ‌ர்க‌ளைக் கைது செய்ய‌வோ த‌ண்டிக்க‌வோ யாருக்கும் அதிகார‌ம் இல்லை' என‌பதுதான் அந்த‌த் தீர்ப்பு.


பை த‌ பை , ஓரின‌ச் சேர்க்கை என்றால் என்ன‌வென்று இதைப் ப‌டிக்கிற‌ அனைவ‌ருக்கும் தெரியும்தானே


தெரியாத (அப்பாவிகள் யாரும் இருந்தால் அ)வர்களுக்கு மட்டும்...!உலகத்தில் விலங்குகள் ,பறவைகள்,மனிதன் என்று உடலுறவில் ஈடுபடுகிற அனைவருமே ஆணுடன் பெண் அல்லது பெண்ணுடன் ஆண் என்ற ரீதியில் உறவு கொள்வது இயற்கை(என்னது இதுவும் தெரியாதா? இந்தக் கிண்டல்தானே வேணாங்கறது) இப்படி இல்லாமல் ஆணும் ஆணும் அதே போல பெண்ணும் பெண்ணும் உடல் உறவு கொள்வது( அட , ஆமாங்க!)ஓரினச் சேர்க்கை எனப் படுகிறது .


இவர்கள்தான் 'ஒருமித்து' செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது அவர்களை யாரும் டிஸ்டர்ப் செய்யக்கூடாது; போலீஸ் கைது செய்ய முடியாது என்று தீர்ப்பு அளித்துள்ளது நீதி மன்றம்.


இதைத்தான் நமது பத்திரிக்கைகளூம் கூட MAY DAY , PAY DAY போல GAY DAY என்று பேர் வைத்துக் கொண்டாடி விட்டன.


சரி நம் நாட்டின் பெரும் பகுதியில் விபச்சாரம் தடை செய்யப் பட்ட குற்றம்.


ஏன்?


எயிட்ஸ் முதலிய நோய்கள் பரப்பு, கலாச்சார சீரழிவு, பொருள் இழப்பு,குடும்ப அமைப்பு சிதறல் , நம்பிக்கைத் துரோகம் இவை காரணமாக அது தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது.ஓரினச் சேர்க்கை விவகாரத்திலும் இது எல்லாமும் உள்ளது.


எயிட்ஸ் முதலிய நோய்கள் ஓரினச் சேர்க்கையிலும் பரவும்.கலாச்சார சீரழிவு அதிலும் உண்டு.இயல்பான செக்சைவிட இதற்கு ஆள் தேடுவது சிரமம் என்பதால் இதிலும் பணப் புழக்கம் உண்டு.குடும்ப மைப்பு இதிலும் சிதையும். கணவன் மனைவிக்கான நம்பிக்கைத் துரோகச் சிக்கல்கள் இதிலும் நிறைய உண்டு.ஆக ஓரினச் சேர்க்கை , ஈரினச் சேர்க்கை , மூவினச் சேர்க்கை ( சீக்கிரம் இப்படியும் எதையாச்சும் கண்டு புடிப்பானுங்க)எல்லாவற்றிலும் இஷ்டம் போல செயல்படுவது பணத்துக்காகச் செயல்படுவது என்பது காதலற்ற காமம் இவை பிரச்னைகளை உண்டு பண்ணும் என்பதில் சந்தேகமில்லை.அப்படி இருக்க ஓரினச் சேர்க்கையை மட்டும் அனுமதிப்பது சரியா?
அதிலும் சில பேர் இதையும் செய்வார்களாம். அதையும் செய்வார்களாம். அவர்களுக்கு இருபாலின ஈர்ப்பாளர்கள் என்று பெயராம். கில்லாடிங்கப்பா.


கேட்கலாம் . "அதான் கோர்ட் சொல்லுதே.ஒரு மித்த உணர்வோடு ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோரஒ மட்டும்தான் தடுக்கக்கூடாது என்று" எனக் கேட்கலாம்.


இரண்டு பேர் ஈடுபட்டிருக்கும்போது அவர்கள்

இருக்கின்றனர் அல்லது இல்லை என்று மூன்றாவது மனிதர் எப்படித் தீர்மானிப்பது ? அதை சோதிக்கிறேன் என்று போளீஸ் கிளம்பி எதுவும் ஏடாகூடமாகி விட்டால்?


ஆக, இந்த சட்டப்படி ஓரினச் சேர்க்கையாளர்கள் எந்த இடத்தில் எப்படி நடந்து கொண்டாலும் யாரும் ஒன்றும் செய்ய முடியாது . ஏனென்றால் அவர்கள் ஒருமித்து இல்லை என்பதை மூணாம் மனுஷன் நிரூபிக்க முடியாது .


சரி .. இதே போல ஒரு விலைமாதுவையோ அவளுடன் இருப்பவனையோ போலீஸ் கைது செய்யும்போது அவர்கள் இருவரும் 'ஒருமித்து ' உறவு கொள்வதாக அவர்கள் கூறினால் போலீஸ் அவர்களை விட்டு


விடுமா? விடாது என்றால் ஓரினச் சேர்க்கைக்கு ஒரு சட்டம் , இத்தனைக் காலமாக உயிரினம் வளர்த்த இயல்புச் சேர்க்கைக்கு ஒரு சட்டமா?


ஒரு கணவன் மனைவி வெளியூர் வந்து ஒரு விடுதியில் தங்கினாலே ஆயிரம் கேள்வி கேட்கும் போலீஸ்ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மட்டும் இனி கண்ணைக் கட்டிக் கொள்ளுமா?


ஒன்று செய்யுங்க‌ள் .விப‌ச்சார‌த்தை நாடு முழுக்க‌ அங்கீக‌ரித்து விட்டு ஒதுங்கிக் கொள்ளுங்க‌ள். எக்கேடோ கெட்டுப் போக‌ட்டும். வேறென்ன‌?


இல்லை நண்பர்களே ... எனது நோக்கம் விபச்சாரத்தை ஆதரிப்பது அல்ல.
அனால் இது போன்ற நிலைப்பாடுகள் சூழல் தரும் வாய்ப்பை வைத்து பலரையும் ஓரினச் சேர்க்கையை நோக்கித் தள்ளும்.


ஆக ஓரினச் சேர்க்கை விபசாரம் அதிகரிக்கும்.அது இன்னும்பெரிய சீர்கேடுகளை ஏற்படுத்தும்.


ந‌ம்புவோம் .. மாட்சிமை தாங்கிய‌ உச்ச‌ நீதி ம‌ன்றத்தை.