Tuesday, June 9, 2009

# சே குவாராவைச் செருப்பால் அடித்த கியூபா (ஃபிடல்) காஸ்ட்ரோ(க்கள்)

தனது தாய் மண் , தாய் நாடு , தாய் இனம், தாய் மொழி இவற்றின் விடுதலைக்காகப் போராடுகிற மாவீரர்கள் ,


கடவுளுக்குச் சமமாக (அப்ப்டி யாரும் அல்லது எதுவும் இருந்தால்...... ஏனெனில் ஈழத்தின் அவல அழிவுக்குப் பின்னால் எனக்குக் கடவுள் நம்பிக்கை போய் விட்டது)மதிக்கப்படும் தகுதியை அடைகிறார்கள்.


ஆனால் அவர்கள் எல்லோரையும் விட உயர்ந்த யுக புருஷன் சே குவாரா. !காரணம் உண்டு.


ஒரு உலகப் பார்வையில் பார்க்கும்போது தனது நாடு , தனது மொழி , தனது இனம் என்று போராடுவது கூட ஒரு வித சுய‌ ந‌லம்(!) தான்.

அனால் சே.... ?

உலகம் எங்கும் ஒடுக்கப்பட்ட அடக்கப் பட்ட மக்களுக்காகப் போராடிய தாய்மை குணப் போராளி அவன். மகாத்மா காந்தியையும் பிரபாகரனும் சரியான விதத்தில் கலந்த... சேர்ந்த ஒரு காவியக் கலவை சே குவாரா!எந்த கியூபா நாட்டின் வரலாற்றோடு இன்று சே வின் பெயர் பின்னிப் பிணைந்து கிடக்கிறதோ ... அந்த கியூபா நாட்டைச் சேர்ந்தவன் இல்லை சே.


ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு ஆதரவாகக் கியூபா நாட்டில் களமாடி கியூபாவுக்கு மட்டும் விடுதலை வாங்கித் தர‌வில்லை அவன்.


அதன் பிறகு உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களைத் தேடித் தேடிச் சென்று அவர்களின் விடுதலைக்காக உதிரம் சிந்தியவன் அவன்.


கியூபா நாட்டு விடுதலைக்குப் பிறகு அவன் நினைத்து இருந்தால் பெரும் பதவி பணம் சுகவாசம் என்று பின்னாளைய நெல்சம் மண்டேலாவைப் போல்!ஆனால் ஆப்பிரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் சர்வாதிகார இன வெறி பிடித்த அந்த தேசத்து ராஜ பக்சேக்களுகு எதிராக களம் கண்டவன்.கடைசியில் பொலீவிய நாட்டில் அந்த அப்பாவி மகளுக்காகப் போராடிய போது பொலீவிய ராணுவத்திடம் பிடிபட்டது அந்தப் போராளிகளின் குல தெய்வம்.காட்டிக் கொடுத்தது எதிரிகள் அல்ல. அந்த ஊர் கருணா ( உடன் ஒரு ' நிதி'யைச் சேர்த்துக் கொண்டாலூம் தப்பில்லை)அவன் பிணத்தையும் பார்த்துப் பயந்தது பொலீவிய ராணுவம். உடலையும் இரு கைகளையும் வெட்டித் தனித் தனியாக மூன்று இடங்களில் புதைத்தனர். அப்படிப் பட்ட மாவீரன் சே!ஆனால் லண்டனில் அறிவிலும் செல்வத்திலும் வேலை வாய்ப்பிலும் ஓஹோவென்று வாழ்ந்து கொண்டிருந்த மகனை ஈழப் போர்க்களத்துக்கு அழைத்து களத்தில் பலி கொடுத்த தியாக வீர வாய்ப்பு பிரபாகரனுக்கு அமைந்தது.அன்று கியூபாவில் சர்வாதிகாரி பாடிஸ்டா வுக்கு எதிராகப் போராட ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு சேகுவார மட்டும் துணை இல்லை என்றால் காஸ்ட்ரோவின் கதை முடிந்திருக்கும். சென்ற வருடம் வரை அவர் கியூபாவின் நீஈஈஈஈண்ட நாள் அதிபராக இருந்திருக்க முடியாது. தற்போதும் கூட உடல் நிலையைக் காரணம் காட்டி தனது தம்பி ரால் காஸ்ட்ரோவை அதிபராக்கி இருக்க முடியாது ஃபிடல் காஸ்ட்ரோவால்...!தவிர நாங்கள் அமெரிக்கா என்ற பெரும் தேசத்தின் காலடியில் உள்ள குட்டி தேசம் என்றாலும் அமெரிக்கவின் சிம்ம சொப்பனமாக விளங்குகிறோம் என்று அலட்டிக் கொண்டிருக்க முடியாது.அனால் இப்போது... ?


கியூபா என்ற கன்றுக்குட்டி சிங்களம் என்ற பன்றியோடு சேர்ந்து மலம் தின்ன ஆரம்பித்து விட்டது.சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஃபிடல் காஸ்ட்ரோ , ரௌல் காஸ்ட்ரோ என்ற இரண்டு கன்றுக் குட்டிகள் ..... செ குவாரா என்ற வீரப் புலியோடு பழகிய கன்றுக் குட்டிகள் ... இன்று ராஜ பக்சே என்ற பன்றியோடு சேர்ந்து ... ருசித்து மலம் தின்கின்றன.ஆம்!


இலங்கையில் அப்பாவித் தமிழர்களைக் கூட்டம் கூட்டமாக கும்பல் கும்பலாக கொத்துக் கொத்தாக குலை குலையாகக் கொன்று குவித்த இலங்கைக்கு எதிராக ஐ. நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப் பட்டபோது....மனதைக் கல்லாக்கிக் கொள்ளுங்கள் ... உலகெங்கும் உள்ள உயர்நத இன விடுதலை வீரர்களே!


இலங்கைக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டது, ஃபிடல் காஸ்ட்ரோவின் புதிய பித்தால்லடக் கியூபா!கேட்டால் என்ன நடந்தாலும் எப்போதும் அமெரிக்காவுக்கு எதிரான அணியில்தான் கியூபா இருக்குமாம். அதே போல அமெரிக்க ஆதரவு நாடுகள் எந்த நல்ல சேவை செய்தாலும் கூட கண்மூடித்தனமாக அதை எதிர்த்துதான் (பைத்தியக் காரன் போல) கியூபா செயல்படுமாம். இந்த பித்துக் குளித்தனம்தான் கியூபாவின் வெளி நாட்டுக் கொள்கையாம்.தவிர தன்னை(கியூபாவை)ப் போன்ற ஒரு தீவான இலங்கையில் உள் நாட்டுக் குழப்பத்துக்கு கியூபா துணை போகாதாம்.


அட எடுபட்ட சிறுக்கி மகன் காஸ்ட்ரோக்களே!


அன்றைக்கு கியூபாவில் பாடிஸ்டா உங்களை எல்லாம் போட்டு நசுக்கும்போது கூட அவன் இதைத் தானே சொன்னான்.அன்றைக்கு கியூபாவில் பாடிஸ்டாவுக்கு எதிராக நீங்கள் செய்ததும் கூட 'உள் நாட்டுக் குழப்பம்"தானே..!


" ஆங்.... அது எப்படி? பாடிஸ்டா அப்பாவி மக்களைக் கொன்று குவித்த சர்வாதிகாரி அல்லவா?....?" என்றால் ......1000 பாடிஸ்டா சேர்ந்தாலும் ஒரு ராஜ பக்சேவுக்கு இணையாக முடியாதே!


அப்படிப் பார்த்தால் நீ இன்று இலங்கைக்கு எதிராக 1000 முறை 1000 ஓட்டு அல்லவா போட வேண்டும்?


அதை விட்டு விட்டு இன்னொரு 1000 பாடிஸ்டாக்களுக்கு ஆதரவு தரவா அன்று எங்கள் சே குவாராவின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டாய்?


இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்படியா ஈனப் புத்தியைக் காட்டுவது?

அடச் சீ...........!

ஆம் உலகத்தீரே..


என்றோ புதைக்கப்பட்ட சேகுவாராவின் உடல் பாகங்களைத் தோண்டி எடுத்துச் செருப்பால் அடித்திருக்கிறார்கள் கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோவும் அவன் தம்பி ரால் காஸ்ட்ரோவும்!

நண்பர்களே தனது துரோகிகளாகிக் தன்னைக் காட்டிக் கொடுத்த போதும் கலங்காத சே வின் ஆன்மா...

இன்று ஈழப் பிரச்னையில் தமிழர்களுக்கு எதிராகவும் ராஜ பக்சேவுக்கு ஆதரவாகவும் கியூபா ஓட்டுப் போட்ட கணம் முதல் கதறிக் கதறி அழும் பேரோலத்தின் ஓசை ......


பொலீவிய மண்ணில் இருந்து கிளம்பி கியூபாவின் வெளிகளை ஊடுருவி உலகம் முழுக்க ஒலிப்பது....... உலகெங்கும் திணறும் விடுதலைப் போராட்ட மூச்சுக் காற்றுகளின் செவியில் இடியோசையாய் ஒலிக்கிறது.

மனிதாபிமானம் உள்ள அனைத்து மக்களின் மனசாட்சியின் கதவுகளையும் அது தட்டுகிறது.

செவியிருப்பவன் கேட்கக் கடவன்!

5 comments:

SU.BA.Kannan said...

Good. Now we can understand one more thing. There is no difference between socialism and capitalism. Both are same like two side of a coin.

ராஜ நடராஜன் said...

கம்யூனிசத் தோழர்களே!உயிர் கொடுப்பான் தோழன் என்ற சொல்லுக்கு கண் முன் இலக்கணமே விடுதலைப் புலிகள்.ஈழ வரலாற்றில் சறுக்கல்கள்,குறைகள் நிறைய இருக்கலாம்.ஆனால் ஒரு வீர வரலாற்றையே பல மொழிகளால் அவமதிப்பது தமிழனுக்கு நல்லதல்ல.

சேகுவாரா வை க்யூபா மக்களே மறந்திருப்பார்கள்.ஆனால் தமிழகத்தில் பல தோழர்கள் தங்கள் நெஞ்சங்களில் பனியன்களாக இட்டுக் கொண்டார்கள்.அதற்கான பரிசுதான் மனித உரிமை அவையின் க்யூபாவின் எதிர் ஓட்டு.

மானுடமே இங்கே மரிக்கும் போது கம்யூனிசமென்ன?கேபிடலிசமென்ன?

Anonymous said...

மகாத்மா காந்தியையும் பிரபாகரனும் சரியான விதத்தில் கலந்த... சேர்ந்த ஒரு காவியக் கலவை சே குவாரா! //

நீங்களும் சேகுவேராவை செருப்பால் அடித்து விட்டீர்களே.....

சு.செந்தில் குமரன் said...

// நீங்களும் சே குவராவைச் செருப்பால் அடித்து விட்டேர்களே// இதையும் ஒரு (யுவன்)பிரபாகரன் சொல்லிக் கேட்பதுதான் தமிழ் இனத்தின் தலை எழுத்து

என் பக்கம் said...

.......................

Post a Comment