Thursday, June 11, 2009

# சோனியா ......................... காந்தியா?


இத்தாலியில் மாஃபியா கேங் இனமான சிசிலி என்ற ஒரு கீழ்த்தரமான‌இனத்தில் பிறந்த சோனியா ராஜிவ் காந்தியை மணந்ததால் சோனியா 'காந்தி' ஆனார்.




இந்திரா காந்திக்கு மகன் என்பதால் ராஜிவ்......., 'காந்தி' ஆனார்.


இந்திரா ......, 'காந்தி' ஆனது எப்படி?



குஜராத்தில் கத்தியவார் அருகில் போர்பந்தர் என்ற ஊரில் கரம்சந்த் காந்திக்கு(ம் புத்தலி பாய் என்ற மாதரசிக்கும்) மகனாகப் பிறந்ததால் மோகன்தாஸ்........, மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியாகி, பின்னர் மகாத்மா காந்தியானது நியாயம்.




மகாத்மா காந்திக்கு மகனாகப் பிறந்த தேவதாஸ்...., தேவதாஸ் காந்தியானதும் அதே போல துஷார்...., துஷார் காந்தியானதும் நியாயம்.



மோதிலால் நேரு என்ற காஷ்மீர் பண்டிட்டுக்குப் பிறந்த ஜவஹர்லால்......., ஜவஹர்லால் நேருவானது நியாயம்.



ஜவ‌ஹர்லால் நேருவுக்குப் பிறந்த இந்திரா..... இந்திரா நேருவாக கொஞ்ச காலம் அறியப் பட்ட பின்னர், திடிரென்று இந்திரா 'காந்தி'யானது எப்படி?




"அய்யய்ய..... இது கூடத் தெரியாதா?

இந்திரா நேரு, பருவம் வந்ததும் ஃபெரோஸ் காந்தியக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க...அதனால புருஷன் பேரையோ புருஷன் குடும்பப் பேரையோ தனது பேருடன் சேர்த்துக் கொள்கிற இந்திய வழக்கப்படி இந்திரா.....'காந்தி'யானார் . அப்புறம் என்ன?"

---‍‍ என்று விளக்கம் தருகிற அத்தனை பேருக்கும் என் நமஸ்காரம்.



ஃபெரோஸ் .....'காந்தி'யானது எப்படி?



குஜராத்தி பணியா குடும்பத்துக்குச் சொந்தமான காந்தி என்ற குடும்பப் பெயர் பாரசீக முஸ்லிமான ஃபெரோசுக்குப் போனது எப்படி?



ஃபெரோசின் தந்தை பெயர் நவாப் கான்.. தாய் ஒரு பாரசீக முஸ்லீம். ஃபெரோஸ்கான் ஐ இந்திரா காந்தி காதலித்துத் தந்தைக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார் . அதன் படி இந்திரா கான் தான்.

கான் காந்தியானது எப்படி?


அது பற்றிக் கட்டி விட்டிருக்கிறார்கள் பாருங்கள் கதைகள்.!



கதை எண் ஒன்று.


திருமண்த்துக்குப் பிறகு அண்ணல் காந்தி, ஃபெரொஸ் கானைத் தத்து எடுத்தாராம். அதனால் கான் காந்தி ஆகி விட்டாரம்.(இந்த கதைப் படி பெற்ற பிள்ளைகளுக்கே எந்தச் சலுகையும் காட்டாத‌ மஹாத்மா காந்தி ஃபெரோஸ்கானைத் தத்தெடுக்க அலைந்ததாகக் கூறுவது நல்ல நகைச்சுவை)



கதை எண் இரண்டு


ஃபெரோஸ் கானின் அப்பா முஸ்லிம் ,அம்மா பாரசீக முஸ்லிம் என்றாலும் அம்மாவின் ஒண்ணு விட்ட தாத்தாவின் பெயரில் காந்தி என்ற வார்த்தை வருமாம் . அதை வைத்து ஃபெரோஸ்கான் ஃபெரோஸ் காந்தி ஆனாராம்.


( சரிங்க.. பாரசீக முஸ்லிம் பெண்ணின் குடும்பப் பெயரில் எப்படி காந்தி என்ற வார்த்தை வரும் என்றால்.... அதற்கு அவர்கள் சொல்கிற பதில் இருக்கிறதே...


அடேஏஏஏங்கப்பா............!


அதாவது அந்த காந்தி என்ற பெயர் மஹாத்மா காந்தியின் குடும்பப் பெயராக வரும் GANDHI இல்லையாம். அது GHANTHI யாம். அதன்படி ஃபெரோஸ் காந்தியாகி இன்று சோனியா காந்தி வரை வந்து நிற்கிறதாம் ஆனால் இந்திராவில் இருந்து எல்லோருமே GANDHI என்றுதான் பெயரை எழுதவும் கையெழுத்துப் போடவும் செய்கின்றனர் என்பது வேறு விசயம்)




இப்படிப் பல கதைகள் ஒருபக்கம்.



" அதெல்லாம் ஒண்ணும் கிடையாது... இந்திராவின் கணவர் பெயர் ஃபெரோஸ் கண்டே (GANTE) என்பதுதான். நேரு பெயரை விட காந்தி பெயரைச் சொல்லிக் கொண்டால் அரசியலில் யோக்கியவான்களாகக் காட்டிக் கொள்ள வசதியாக இருக்கும் என்பதால் கண்டே என்ற பெயரின் உச்சரிப்புச் சத்தத்தை வைத்து காந்தி என்று .....அரசியல் பிழைப்புக்காகக் குடும்பப் பெயரையே மாற்றிக் கொண்டவர்கள் இவர்கள் " என்று முழங்கிய பழைய ஜன சங்க ஆட்களும் உண்டு.




" எதுவானா இருக்கட்டுங்க.... இப்ப எதுக்கு அந்தப் பழைய கதை எல்லாம்? உங்களுக்கு வேற வேலை இல்லையா ?" என்று அதட்டும் அன்பு நெஞ்சங்களே!



இப்போது இதை எல்லாம் விளக்கமாகக் கிளறி இப்போது இந்திரா காந்தி அம்மையாரக் களங்கப் படுத்தும் எண்ணம் எனக்கு நிச்சயமாக இல்லை.


ஆனால் இதை எல்லாம் எழுத வேண்டிய கட்டாயத்தை ராஜீவ் -‍ சோனியா இருவரும் தம்பதி சமேதராக உருவாக்கி விட்டார்கள்



ஏன் எனில்

காந்தி என்று சொன்னாலே நம் எல்லோருக்கும் இன்றும் நினைவுக்கு வருகிற மகாத்மா காந்தியின்,

இரண்டு பொன்மொழிகள் !



ஒன்று



"ஒரு இனம் முற்றாக அழிக்கப் படும்போது அது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வன்முறையைக் கையில் எடுத்துப் போராடலாம் . அதில் தவறில்லை. நான் அதை வன்முறை என்றே சொல்ல மாட்டேன்."



இரண்டு


"ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப் படுகிற போது அந்தப் பெண் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தலாம். குறைந்த பட்சம் தனது கூரிய நகங்களைப் பயன்படுத்தியாவ‌து தப்பிக்க முயல வேண்டும். அது போன்ற சூழ் நிலைக்கு பெண்களை ஆட்படுத்துகிற யாரையும் மன்னிக்க முடியாது ".



ஆம்!

அகிம்சா மூர்த்தி .... ஜீவ காருண்யச் சீலர் ... மஹாத்மா என்று அழைக‌கப் பட்ட காந்தியே வன்முறையை ஆதரித்த சூழல்கள் இவை .



முதல் பொன்மொழிப்படிதான் ஈழத்தில் விடுதலைப் புலிகள் ஆயுதம் எடுத்தனர். ஆனால் அந்த நியாயமான விடுதலைப் போரின் அழிவுக்கு அடித்தளம் போட்டதன் மூலம் மகாத்மா காந்தியையே இழிவு படுத்தியவர்தான் ராஜீவ் 'காந்தி'



பிரபாகரன் மரணம் , விடுதலைப் புலிகள் அழிக்கப் பட்டதற்குக் காரணமாக இருந்தது மட்டுமல்ல ... நாகரிகமில்லாத சிங்கள ராணுவத்துக்கு பிதாமகளாக இருந்து இன்றும் இலங்கையின் பல வதை முகாம்களில் ஏராளமான தமிழ்ப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப் படுவதற்குக் காரணமானதன் மூலம் மகாத்மாவாலேயே மன்னிக்க முடியாத குற்றவாளி தான் சோனியா 'காந்தி'.

ஆக இனியும் சோனியா ராஜிவ் ... தனது பெயரில் காந்தி என்ற பெயரை ( அதுவும் GANDHI என்ற எழுத்துக்களுடனேயே ) வைத்துக் கொண்டிருப்பது அண்ணல் காந்திக்கு இழைக்கப் படும் அவமானம்.

மனசாட்சியுள்ள யாரும் அருகில் இருந்தால் சோனியா ராஜிவிடம் எடுத்துச் சொல்லுங்கள்!

4 comments:

நாமக்கல் சிபி said...

//மனசாட்சியுள்ள யாரும் அருகில் இருந்தால் சோனியா ராஜிவிடம் எடுத்துச் சொல்லுங்கள்! //

எடுத்துச் சொல்ல நாம என்ன அவங்களுக்கு சமமாவா இருக்கோம்! இந்தியாவையே அந்த இத்தாலிக்கார அம்மணிகிட்டே அடகு வெச்சிட்டு அடிமையவல்ல இருக்கோம்!

வெள்ளைத் தொப்பிக் காரங்க கொண்டாடும் வரை நாம ஒண்ணியும் பண்ண முடியாது!

வாழ்க பாரத(!?) மாதா!

சு.செந்தில் குமரன் said...

அதனாலதான் சிபி..
யாரும் இருந்தால்னு
சொல்லி இருக்கேன்.

'அருகில் இருப்பவர் யாருக்கும் மன சாட்சி இருந்தால்.......'
னு கூட
அர்த்தப் படுத்திக்கலாம்‌. நன்றி

கல்கி said...

கதை எண் 3 கூட இருக்குண்ணே...

நான் கேள்விப்பட்டது, மஹாத்மா காந்தியின் மேல் இருந்த அன்பின் காரணமாக நேரு தன் மகளுக்கு இந்திரா காந்தின்னு பேரு வச்சாராம்ல....

சு.செந்தில் குமரன் said...

இந்தக் கதைல சென்டிமென்ட் ரொம்ப அதிகமா இருக்கே கல்கி.
இப்ப எடுபடுமா?

Post a Comment