Saturday, June 13, 2009

ஈழத் தமிழனுக்கு இனி என்ன செய்யலாம்?


இத்தனை ஆண்டுகளாக நம்பக் கூடாதவர்களை தமிழ் இனத்தலைவர்கள் என்று நம்பி நாம் ஏமாந்ததன் விளைவு?...


ஈழத்தில் 3 லட்சம் தமிழர்கள் கொன்றழிக்கப் பட்டு விட்டார்கள்.தாய் தந்தையை இழந்த பிள்ளைகள் ,தனி மரமான பெண்கள்,துணை இல்லாத முதியவர்கள் என்ட்ரு ஒரு தலைமுறையே அனாதையாகிக் கிடக்கிறது.இங்கே தமிழ் ஈழ கோஷங்கள் அரசியலுக்காக காதைப் பிளக்கின்றன.


உண்மையான தேசப் பற்று இல்லாத இன்றைய மத்திய ஆட்சியாளர்களின் வஞ்சக செயல்களால் ‍- இனி யாரவது உண்மையாகவே இந்திய ராணுவத்தை இலஙைக்கு அனுப்பி தமிழ் ஈழம் அமைக்க முயன்றாலும் சீனாவின் செல்லப் பிள்ளையாக மாறி விட்ட இலஙைக்கு ஆதரவாக சீனாவே களம் இறங்கும்.


அது இந்திய சீனப் போராக மாறி, மூன்றாம் உலகப் போராக ஆகவும் வாய்ப்பு ஏற்படும்.இப்படி நடந்தால் அதற்கான முழுப் 'பெருமை'யும் சோனியா ,கருணாநிதி, மன்மோகன் சிங்,ப்ரணாப் மூகர்ஜி,எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன்,தங்கபாலு , ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கும்பலுக்கே போய்ச் சேரும்.

ஆக ,ஈழம் காண‌ போராடுவ‌த‌ற்கு முன்பு உட‌ன‌டியாக‌ச் செய்ய‌ வேண்டிய‌ வேலை ஒன்று உண்டு ஈழ‌த்தில் தாய் தந்தை இழ‌ந்த‌ குழந்தைக‌ளை , குழந்தை இல்லாத‌ ந‌ம் ஊர் தம்பதிக‌ள் ஏன் தத்தெடுத்து கொள்ள‌க் கூடாது?


வசதி மிக்க‌வ‌ர்க‌ள் குழ‌ந்தை இருந்தாலும் கூட‌ ஒரு குழ‌ந்தையை த‌த்தெடுக்க‌லாம்.அப‌லையான‌ பெண்க‌ளை திரும‌ண‌ம் ஆகாத‌ ந‌ம் ஆண்க‌ள் திரும‌ணம் செய்து கொள்ள‌லாம்.முதிய‌வ‌ர்களைத் த‌த்தெடுக்க‌லாம் .


ங்க‌யே ஆயிர‌ம் அனாதைக‌ள் ...இஙுங்கு உள்ள‌ அக‌தி முகாம்க‌ளிலேயே ப‌ல‌ ஈழ அனாதைகள்...இதுல ஈழத்துல தவிக்கிற‌வங்க‌ள‌ த‌த்தெடுக்க‌ணுமாம்..."என்று கிண்ட‌ல் செய்ய‌லாம்.

"யு ஸீ...இன்னொரு நாட்டு குழ‌ந்தைய‌ த‌த்தெடுக்கறதுல‌ நிறைய‌ பிராப்ள‌ம்ஸ் இருக்கு ..."என்று பாண்டித்ய‌ம் காட்ட‌லாம்.


" யார்றா இவ‌ன்....அவ‌னுக்கு அவ‌ன் நாட்டை மீட்டுக் கொடுத்து அவ‌ன் ம‌ண்ணுல‌யே க‌ம்பீர‌ம‌ வாழ‌ வைக்காம‌ நாட‌ற்றவ‌னா ஆக்க‌ சொல்றியா ?" என்று கோப‌ப் ப‌ட‌லாம் .


அவ‌னுக்கு த‌மிழ் ஈழ‌ம் வேண்டும் . அது அமையும் நாள் வரும்.அந்த‌ப் பாதையையே க‌டின‌ப் ப‌டுத்தி விட்ட‌து சோனியா ‍-க‌ருணாநிதி வ‌கையறா.

த‌மிழ் ஈழ‌ம் அமையும்போது அஙுங்கு சென்று வாழ ஈழத் த‌மிழ‌ர்க‌ள் வேண்டும்.அத‌ற்கு அவ‌ர்க‌ள் உயிரோடு வேண்டும்.

"ஈழ‌த்த‌மிழ‌னே இல்லாத‌ போது த‌மிழ் ஈழ‌ம் எத‌ற்கு?" என்றூ நாளைக்கு சிங்க‌ள‌ மிருக‌ங்கள் எகத்தாளமாகக் கேட்கக் கூடாது.

செங்கல்பட்டுக்காரர் நாகர்கோவிலுக்கும் திருநெல்வெலிக்காரர் சென்னை அண்ணா ந‌கருக்கும் பெண் தேடிப் போவது இல்லையா?

கன்யாகுமரியை அடுத்து ஒரு கடல் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நாம் முள்ளிவாய்க்கால் தமிழச்சியை நம் வீட்டு குடும்ப விளக்காக ஆகியிருக்கலாம்.மதுரைப் பெண் யாழ்ப்பாணத்துத் தமிழனுக்கு இல்லத்தரசி ஆகி இருக்கலாம்.

உல‌க‌மே ஒரு கிராம‌மாக‌ இன்று சுருங்கி விட்ட‌ நிலையில் , நாம் இனியும் இடையில் உள்ள பெருங்க‌ட‌லை உற‌வால் அள்ளிக் குடித்து விட‌ முடியும்.

ஒரு ஜெர்மானியன் தான்சானிய‌ நாட்டுக் குழந்தையை த‌த்தெடுக்கும்போது நாம் ஏன் ந‌ம் ர‌த்த‌ உற‌வுக் குழ‌ந்தைக‌ளை நாம் ஏன் த‌த்தெடுக்க‌க் கூடாது?ந‌ம் இன‌த்து அப‌லைப் பெண்களுக்கு ந‌ம்ம‌வ‌ர்க‌ள் ஏன் வாழ்க்கை கொடுக்க‌க் கூடாது? அத‌ற்கான‌ சாத்திய‌க் கூறுக‌ளைப் ப‌ற்றி சிந்திப்போம்.
இது தியாகமோ பெருமையோ இல்லை
கடமை. !

11 comments:

க. தங்கமணி பிரபு said...

சிந்திக்க வைக்கும் அருமையான பதிவு! என் நண்பரொருவர் ஆவலோடு இருக்கிறார், ஆனால் ப்ராக்டிக்கலாக சாத்தியமா? எனில், அதையும் விளக்கி ஒரு பதிவாக இடலாமே!
அல்லது பின்னூட்டக்காரர்கள் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்களேன். எரியூட்டியபின் பலமணிநேரங்கள் கழித்தே உருக்குலையும் கடைசி எலும்புள்ளவரைக்கும் வெட்கம் பிடுங்கிதின்னுமளவு ஈழத்தமிழனுக்கு நாம் செய்துள்ள துரோகத்திற்க்கு பரிகாரம் செய்யக்கிடைத்த ஒரு வாய்ப்பாகவே இதை பாவிக்கிறேன்.

சு.செந்தில் குமரன் said...

பார்த்தீர்களா பிரபு?
இதற்குக் கமெண்ட் எழுதக் கூட ஒருவரும் தயாராக இல்லை...?

பா.மோசே செல்வகுமார் said...

அன்பு செந்தில்
நான் ஒரு ஆராய்ச்சி மாணவன்
மித அருமையான சிந்தனை
நான் ஒரு குழந்தைக்கு உதவலாம் என்று விரும்புகிறேன்
எப்படி செய்வது ....
நான் நேரடியாக செய்ய இயலுமா ..இல்லை வெரதும் வழி உள்ளதா....

param said...

அன்புள்ள நன்பரே, உங்களின் இந்த கட்டுரையை நான் வேரொரு தளத்தில் பதிவு செய்தால் இன்னும் அதிக நலம் பயக்குமென நினைக்கிறேன் .ஆகையால் உங்களுக்கு ஆட்சேபணை இல்லயென்றால் உங்கள் அனுமதியை வேண்டுகிறேன்

சு.செந்தில் குமரன் said...

அன்பு செல்வா..

வழி உள்ளது நண்பரே...உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகுங்கள்.. நீங்கள் சந்திப்பது ஒரு இன
உணர்வுள்ள மனிதாபிமானமுள்ள அதிகாரியாக இருக்கட்டும்

சு.செந்தில் குமரன் said...

அன்பு பரம்
. தாரளமாகப் பதிவு செய்யுங்கள்.
அதை எனது ப்ளாக் கின் பெயர் பெயருடன் பதிவு செய்தால் மகிழ்வேன்.
விளம்பர மோகத்தினால் அல்ல,
நான் மேலும் எழுதும் தமிழ் உணர்வுக் கருத்துகளை தொடர்ந்து எல்லோரும் படிக்க வேண்டும்
அதனால் ஏதேனும் பயன் விளையும் என்ற நம்பிக்கையில்!
எந்த தளம் என்று எனக்குச் சொல்ல முடியுமா, அன்புடன்?

param said...

tamil2friends.com இந்தத் தளத்தில்தான் உங்கள் கட்டுரையை சுட்டு போடிருக்கிறேன். அனுமதி கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

param said...

இந்தத் தளத்தில்தான் உங்கள் கட்டுரையை சுட்டு போடிருக்கிறேன். அனுமதி கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

சு.செந்தில் குமரன் said...

நன்றி நான் சொல்ல வேண்டும் உங்கள் தமிழுணர்வுக்கும் பெருந்தன்மைக்கும்

param said...

படித்துப் பார்த்தீர்களா எவ்வளவு கொமென்ட்ஸ் என்று. நீங்களும் வந்து கலந்து கொண்டால் நான் சந்தோஷம் கொள்வேன். ஏனென்றால் கருத்தை விட்டு விட்டு தமிழினத் தலைவரை மட்டும் பிடித்துக் தொங்குகிறார்கள் என் நண்பர்கள். முடியுமா?

சு.செந்தில் குமரன் said...

அன்பு பரம்..
நீங்க போட்டிருக்கிற ரெண்டு கட்டுரையிலும் என் கருத்தை எழுதிவிட்டேன்.
பார்த்துட்டு சொல்லுங்க.
உங்க அம்மா பதிவு என் மனச உலுக்கிடுச்சு.
அபடியெல்லாம் நினைக்காதீங்க. நாங்க இருக்கோம்.

Post a Comment