Sunday, February 14, 2010

# தமிழன் உருப்படாததற்குப் பத்து காரண‌ங்கள்இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்... ஒரு நிமிடம்!

இது பல்பொடி விளம்பரம் அல்ல. தமிழன் புறக்கணிக்கப்படுகிற, அடிவாங்குகிற தேசங்களின் பட்டியல் தான் இது.

கேரளா, கர்நாடகாவில் தமிழன் ஜென்ம எதிரியாகவே பார்க்கப்படும் நிலை. ஆந்திராவிலும் தமிழனுக்கு எதிரான ஆவேசம். மராட்டியம், மும்பையில் தமிழன் என்றாலே எட்டிக்காய். கல்கத்தாவிலும், டில்லியிலும் தமிழனுக்கு எதிரான அரசியல். ஜெர்மனியில் கூட நியோ நாஜிக்கள் என்ற குழுவினருக்குத் தமிழன் என்றால் பிடிக்கவில்லை.

தமிழனுக்கு என்ன ஆச்சு? எல்லோரும் திட்டமிட்டு அவனுக்கு கட்டம் கட்டுவது ஏன்? அவன் செய்த தவறுதான் என்ன?

*முதல் காரணம் தமிழனின் அறிவாற்றல்!

எந்த இடத்தில் விட்டாலும் அதில் மூளையைச் செலுத்தி முன்னேறும் ஆற்றல். அந்த தன்னம்பிக்கை காரணமாகவே அவன் தன் மண்ணில் மற்ற யார் பிழைப்பதையும் தடுப்பது இல்லை. ஆனால், அதே தமிழன் வேறு மண்ணில் பிழைக்கப் போகும் போது அங்கு அவன் காட்டும் ஆற்றல் மற்றவர்களைப் பொறாமையும் ஆத்திரமும் கொள்ளச் செய்கிறது. அதற்குத் தீர்வாக &தம் மண்ணில் தமிழனைப் பிழைக்க விடக்கூடாது என்று முடிவெடுத்து மற்றவர்கள் செயல்படுகின்றனர்.* தமிழன் அறிவாளி. ஆனால், புத்திசாலி அல்ல.
இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. தன் அறிவை எல்லோருக்கும் பயன்பெறத் தருபவன் அறிவாளி (உதாரணம்: தாமஸ் ஆல்வா எடிசன்). தன் அறிவையும் மற்றவர்கள் அறிவையும் தனக்கு லாபமாக பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம் (உதாரணம்: தமிழக அரசியல் தலைக்ள்). பிழைக்கச் செல்லும் இடங்களில் தன்னைப் பார்த்து வயிறு எரிகிற மற்றவர்களை தாஜா செய்வது பற்றி கவலையே படாமல் கண்ணை மூடிக்கொண்டு உழைத்து முன்னேறுவது. அதனால் ஒரு நிலையில் அநியாயம் செய்கிற எதிரிகளிடம் சுலபமாகச் சிக்கிக் கொள்கிறான்.


* மிருகங்களில் நாய்... பாலில் பெண்பால்... இனத்தில் தமிழன்... இந்த மூன்றுக்கும் ஒரு வினோத ஒற்றுமை உண்டு. தம்மவர்கள் முன்னேறினால் பொறுக்காது.

ஒரு நாய் அதிகம் குரைப்பதே தெருவில் இன்னொரு நாய் வரும்போதுதான். அது போல சக பெண்ணின் முன்னேற்றம் இன்னொரு பெண்ணைத்தான் மனம் சுருங்கச் செய்யும். இது உண்மை. அதைப்போலவே ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ, போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான்.

இந்தச் சண்டையை இங்கு பிழைக்க வரும் மற்ற இனத்தவர் பயன்படுத்திக்கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது. தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம்.


அதே நேரம் தமிழ்நாட்டுக்கு ஒரு மலையாளியோ, தெலுங்கரோ, கன்னடரோ பிழைக்க வந்தால், தான் காலூன்றியவுடன், தன் மண்ணில் இருந்து பிழைக்க வருபவனைத் தேடிப்பிடித்து அரவணைத்துக் கொள்கிறார்கள். திட்டமிட்டு அழைத்துக்கொண்டும் வருகிறார்கள். இன்று மலையாளிகளுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு தரும் மலையாள வீட்டு உரிமையாளர்களே சென்னையில் உண்டு. அதுபோல கடை உரிமையாளர்களும் உண்டு. குறைந்தது அவர்களுக்கு வாடகையாவது குறைக்கப்படும். தமிழனுக்கு அதிக வாடகை. நடப்பது கேரளாவில் அல்ல தமிழகத்தில்!*பெண்ணாசை

பெண்ணாசைக்கு தமிழினம் , மங்கோலிய இனம் என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது
என்றாலும் கூட , தமிழனுக்கு காலகாலமாக மரபணுவிலேயே அது கொஞ்சம்
அதிகமாக ஊறிவிட்டதோ என்று யோசிக்கத் தோன்றுகிறது .அந்தக் கால அரசர்கள் ,
பின்னால் வந்த குறு நில மன்னர்கள் , என்று பெண்ணாலும் அழகிய பெண்களை
முன் நிறுத்திய படைகள் மற்றும் தனிப்பட்ட விதத்திலும் பெண்ணால்
அழிந்தவர்கள் என்று வரலாற்றில் அதிகம் . இன்றும் கூட பெரிய வணிக
நிறுவனங்களை உருவாக்கி அதை பிழைப்பு தேடி வரும் வேற்று மாநிலப்
பெண்களிடம் இழந்து புலம்புபவர்கள் அதிகம் .
காலகாலமாக இதை மற்றவர்கள்
பயன்படுத்திக் கவிழ்த்துப் பலன் பெறுகின்றனர்.


* மற்ற மொழியினத்தவர்கள் எல்லோரும், தங்கள் மொழி, இன உணர்வைக் காக்க, சாதி மத உணர்வுகளைத் தாராளமாகத் தள்ளி வைப்பார்கள். உதாரணமாக கிறித்தவரான கே.ஜே.யேசுதாஸின் குரல், தினசரி ‘அரிவராசனம்’ பாடி சபரி மலை அய்யப்பனைத் தூங்க வைக்கும். அது மலையாளிகளின் ஒற்றுமை. ஆனால், தமிழனோ மத, சாதி உணர்வுகளுக்காக, தமிழ் உணர்வையும், தமிழின உணர்வையும் தரையில் போட்டு மிதிப்பான்.

இலங்கையில் முதன் முதலாக பிரச்னை வந்தது சிங்களர்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும்தான். ஆனால், தமிழர்களில் பெரும்பான்மையான இந்துக்கள், புத்தமதச் சிங்களன்தான் நமக்கு நெருக்கம் என்று அவனோடு உறவாடி தமிழ் முஸ்லிம்களை எதிர்த்தனர். அங்கே மொழியை விட மதம் பெரிதாகப் போனது.

வடக்கு மாகாணத் தமிழன், கிழக்கு மாகாணத் தமிழனை ‘மட்டக்களப்பான் மடையன்’ என்று சொல்லி& தாழ்ந்த ஜாதி என்று காரணம் காட்டித் தள்ளி வைத்தான். புறக்கணித்தான். அங்கே மொழியை விட சாதி பெரிதாகப் போனது. தமிழகத்தில் இருந்து இலங்கை போன மலையகத் தமிழர்களை, சிங்கள அரசு ஒடுக்கியபோது, ஈழத் தமிழன் அதைக் கண்டுகொள்ளவில்லை. அங்கும் இன உணர்வில்லை.
* தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். ஒரு வங்காளி எங்கு போனாலும் வங்காளியாகவே இருப்பான். ஒரு மலையாளி எங்கு போனாலும் தன் கலாசார வேர்களைக் கைவிடுவது இல்லை. ஆனால், தமிழன் அதைப்பற்றிக் கவலைப்படுவதே இல்லை. பொதுவாக உலக மக்களிடம் உள்ள இன உணர்வு தமிழனிடம் இல்லாததால் மரியாதை கிடைப்பது இல்லை. ஒரு நிலையில் தமிழன் கேலிப் பொருள் ஆகிறான்.

* இரண்டு மலையாளிகள் சந்தித்துக் கொண்டால் மலையாளத்தில் பேசுவார்கள். இரண்டு தெலுங்கர்கள் சந்தித்துக்கொண்டால் தெலுங்கில் பேசுவார்கள். இரண்டு கன்னடர்கள் சந்தித்துக் கொண்டால் கன்னடத்தில் பேசிக்கொள்வார்கள். இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால்..? ஆங்கிலத்தில் பேசுவார்கள்!
நீங்கள் அறிந்த விஷயம் இது. ஆனால் தாய்மொழியை மதிக்கிற எந்த இனமும் இந்த கேடுகெட்ட குணத்தை மதிப்பது இல்லை. அதனால் ஏற்படும் எரிச்சல் கோபமாக மாறுகிறது. தாய்மொழியை தாய் மண்ணிலேயே புறக்கணிக்கிற எந்த இனமும் உருப்பட முடியாது என்பதற்கு தமிழனே உலகளாவிய சாட்சி!


* மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழ் மக்களுக்கு நிலம் சொந்தமாக உள்ள பல பகுதிகள், தமிழின வரலாற்றின் களமாக இருந்த பல நிலங்கள், தமிழின கலாசாரமாக சின்னமாக இருந்த நிலங்கள், நியாயமாகத் தமிழ்நாட்டோடு வரவேண்டிய பல வளமான பகுதிகள், நதி உற்பத்தியாகும் இடங்கள் எல்லாம், மற்ற மாநிலத்தவரால் திட்டமிட்டுப் பிடுங்கப்பட்டன. அப்போது திராவிட நாடு என்ற கனவில் இருந்த தி.மு.க., அதையெல்லாம் எதிர்த்தால் அந்த மாநிலங்களில் ஓட்டு வாங்க முடியாது என்று எண்ணி, தமிழ்ப் பெருமாநிலம் சிதறிப்போனதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. திராவிட நாடு என்ற சித்தாந்தம் காரணமாக பெரியாரும் இதைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தார்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, ஆந்திர, கேரள, கர்நாடக மாநிலங்களில் உயர்பதவிகளில் இருந்த தமிழர்கள் எல்லோரும் பதவி பறிக்கப்பட்டனர். விரட்டப்பட்டனர். அடுத்தடுத்த கட்டங்களில் தமிழர்கள் அங்கே பதவிக்கு வருவது தடுக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடோ திராவிடம் என்ற பெயரில் எல்லோரையும் தொடர்ந்து அனுமதித்தது. இங்கு வளர்ந்த மற்ற மொழி பேசும் அதிகார வர்க்கத்தினர், அதன் பின்னர் தமிழ்நாட்டில் வேலைப் பார்த்துக்கொண்டே, தங்கள் மாநிலத்துக்கு உண்மையாக நடந்தனர். தமிழனை சுரண்டினர். தமிழன் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், மீட்டிங் பார்ப்பதில் குறியாக இருந்தான்.

* இந்தியாவின் ஜனாதிபதியாக அப்துல்கலாம் இருந்த நேரம்... காங்கிரஸ் கட்சி அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகப் பிரதீபா பட்டீலை நிறுத்துகிறது. அவர் மராட்டியப் பெண்மணி. மராட்டியத்தில் காங்கிரஸும், சிவசேனாவும் எதிர்க்கட்சிகள். ஆனால் சிவசேனா தலைவர் பால்தாக்கரே சொன்னார், ‘‘பிரதீபா பட்டில் எங்கள் ஜென்ம விரோதக் கட்சியான காங்கிரஸ் ஆளாக இருக்கலாம். ஆனால் எங்கள் மண்ணின் மகள். மராட்டிய மாணிக்கம். எனவே கட்சி உணர்வை தூக்கி எறிந்துவிட்டு, கூட்டணி&எதிரணி என்று பாராமல் பிரதீபா பட்டீலை ஆதரிக்கிறேன்’’ என்று சொன்னார்.


ஆனால் தமிழரான அப்துல் கலாமுக்கு எதிராகக் களம் இறங்கிய பிரதீபா பட்டீலை, அப்துல் கலாம் பிறந்த தமிழ்நாட்டுக்கே முதன் முதலாகக் கொண்டு வந்து அறிமுகக் கூட்டம் நடத்தி, பிரதீபா பட்டீலுக்கு பலம் சேர்த்து, ஒரு ஜனாதிபதித் தமிழன் வீழக் காரணமாக இருந்தவர்கள் சாட்சாத் தமிழர்கள்தான்.

* ஆந்திராவோ, கர்நாடகாவோ, கேரளாவோ அந்த மொழி இனம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னைக்காக, ஒரு போராட்டம் நடந்தால், அரசாங்கம், அரசியல் தலைவர், ஆள்வோர் அதை அடக்கச் சொன்னாலும் அதிகார வர்க்கமும், காவல்துறையும் போராட்டக்காரர்களை பூப்போலக் கையாளும். அவர்கள் எல்லாம் உப்பு போட்டு சோறு தின்பதாலேயோ என்னவோ, நம் இன மொழிக்குத்தானே போராடுகிறான் என்ற உணர்வு அங்கு பலருக்கும் இருக்கும். அதே நேரம் ஈழப் பிரச்னைக்காக பெங்களூரில் மறியல் செய்த தமிழர்களை கர்நாடக போலீஸ் எப்படி புரட்டிப் புரட்டி அடித்தது என்பதையும் பார்த்தோம்.
ஆனால் தமிழ்நாட்டில்? நமது மீனவர்களை சிங்களக் கடற்படை என்ன செய்தாலும் கவலை இல்லை. ஆனால் அத்து மீறி தமிழக எல்லைக்குள் வரும் சிங்கள மீனவர்களைப் பார்த்து குனிந்து கும்பிட்டு, சுடுநீரில் குளிப்பாட்டி, சொறிந்து விட்டு, சொடக்கெடுத்து, தலைவாழை இழைபோட்டு, உணவு ஊட்டி, பீடா மடித்துக்கொடுக்கும் தமிழக போலீஸ்...
தமிழ்நாட்டில் யாராவது தமிழுக்காக, தமிழனுக்காக போராடினால் மட்டும் சட்டக் கல்லூரிக்குள்ளேயே புகுந்து புரட்டி எடுக்கும் தமிழகக் காவல்துறை.


* காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவதில் மூத்த குடி கன்னடக் குடிதான் என்றாலும், அது கட்சி அரசியலோடு நின்றுவிடும். கன்னட இனம் அழியும் போது காசுக்கு அவர்கள் ஓட்டுப்போட மாட்டார்கள். ஆனால், தொப்புள் கொடி நீளமுள்ள தூரத்தில் 80,000 தமிழர்கள் கொசுக்கள் போல நசுக்கப்பட்டபோதும்... அது பற்றிக் கவலைப்படாமல், ஒரு நாளைக்கு கூட உருப்படியாகப் பலன் தராத ஓரிரு நூறுரூபாய்த் தாளுக்காக ஓட்டு வியாபாரம் செய்த தமிழக வாக்காளர்கள்...
தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும், இப்படிப் பல காரணங்கள்....

பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும்

9 comments:

சு.செந்தில் குமரன் said...

மாறவேண்டும்....

மாறவேண்டும்.... மாறவேண்டும்....


"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது"

என்றென்றும் நட்புடன்,
dharshi.
மாற வேண்டும்னா எப்படி? மத்த

மாற வேண்டும்னா எப்படி?
மத்த இனத்தவங்களை எதிரியா பார்க்க சொல்றீங்களா?
தேசியம் வேண்டாமா? திராவிடம் வேண்டாமா? தமிழன்ங்கற உணர்வு மட்டும் போதுமா?


சந்துரு
இரண்டு மலையாளிகள் சந்தித்துக்

இரண்டு மலையாளிகள் சந்தித்துக் கொண்டால் மலையாளத்தில் பேசுவார்கள். இரண்டு தெலுங்கர்கள் சந்தித்துக்கொண்டால் தெலுங்கில் பேசுவார்கள். இரண்டு கன்னடர்கள் சந்தித்துக் கொண்டால் கன்னடத்தில் பேசிக்கொள்வார்கள். இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால்..? ஆங்கிலத்தில் பேசுவார்கள்!
நீங்கள் அறிந்த விஷயம் இது. ஆனால் தாய்மொழியை மதிக்கிற எந்த இனமும் இந்த கேடுகெட்ட குணத்தை மதிப்பது இல்லை. அதனால் ஏற்படும் எரிச்சல் கோபமாக மாறுகிறது. தாய்மொழியை தாய் மண்ணிலேயே புறக்கணிக்கிற எந்த இனமும் உருப்பட முடியாது என்பதற்கு தமிழனே உலகளாவிய சாட்சி...!!!!
"
இது மிக்க‌ உண்மை..!!!
ந‌ம‌து த‌ள‌ம் ஒரு மிக‌ச் சிறந்த திறனாய்‌வாள‌ரைப் பெற்றிருப்ப‌தில் நான் ம‌ட்ட‌ற்ற‌ ம‌கிழ்ச்சி அடைகிறேன்..!!
அருமை தோழ‌ரே..!!


" வீழ்வது நாமாக இருப்பினும்
வாழ்வது தமிழாக இருக்கட்டும்..!!
"
அன்பன்.,
அண்ணாமலை.,


கசப்பான உண்மைகள் : (

கசப்பான உண்மைகள் : (


வினோத் கன்னியாகுமரி
ஒரு நொடி துணிச்சல் இருந்தால் இறந்து விடலாம், ஒவ்வொரு நொடியும் துணிச்சல் இருந்தால் ஜெயித்து விடலாம்.


su.senthilkumaran
நன்றி தர்ஷி

நன்றி தர்ஷி


அவன் உன்ன எதிரியா பார்த்து

அவன் உன்ன எதிரியா பார்த்து அடிச்சுக் கொல்றப்ப...தண்ணிய கடல்ல வெட்டியா கொட்டினாலும் கொட்டுவேன் உனக்குத் தர மாட்டேன்னு சொல்றப்ப ..... நீ இங்க அவன் மொழிய வாழ வைக்கிறப்ப அவன் அவன் மாநிலத்துல உன் மொழிய அழிக்கும்போது ... நீ பூப் பறிச்சுகிட்டு இருப்பியா?
நீ அவன எல்லாம் திராவிடன்னு உன் மண்ணுல அரவணைக்குற ..அவன் அந்த மண்ணுல உன்ன திராவிடன்னு அரவணைக்குறானா?

முதல்ல தமிழன் .. அத அழிக்காம கெடுக்காம மத்தத எங்க வேண்ணா எப்படி வேண்ணா வச்சுக்க...

உன்னைப் போன்றவர்களின் தெளிவின்மை , தமிழன் உருபடாததற்கு 11 வது காரணம் .


நன்றி அண்ணா.. ஆனா நான் மிக எளிய மனிதன் .

ஆம் வினோத்
ஆனால் அளவுக்கு மீறி கசக்கிறது


பார்த்தீர்களா.. தோழா அண்ணாமலை..!! ,
நிறை குடம் தளம்புவதில்லை என்பதற்க்கு சிறந்த எடுத்துக்காட்டு தோழர் செந்தில் குமரன் அவர்கள்....


"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது"

என்றென்றும் நட்புடன்,
dharshi.

தோழி said...

மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும்///

நச்சுன்னு இருக்கு...
இதை வாசிப்பவர்களை கொஞ்ச நேரமாவது சிந்திக்க வைத்ததே உங்கள் வெற்றி தோழா..!!

Anonymous said...

தமிழன் வெறுக்கப்பட காரணம்

அவனது அடிமைத்தனம். எங்கு சென்றாலும், அவன் அடிமையாகவே இருக்க ஆசைப்படுகிறான்.

கோழைத்தனம். பய்ந்தாங்கொள்ளி. காரணம், எங்கே தன்னிடம் இருப்பதும் பறிக்கப்படுமோ என்ற பயம்.

மனதில் வைத்துத்தான் பழகுவான். நட்டாத்தில் விட்டுவிட்டு அவன் ஓடிவிடுவான்.

தமிழன் அறிவாளி என்பதெல்லாம் கப்சா. எல்லாரும் அறிவாளியாகலாம்.

கடும் உழைப்பாளி ஆனால் அவன் அடிமைத்தனத்தால் அது பிறருக்கும் செய்யும் சேவையாகப் போய் விடுகிறது.

பார்ப்பன எதிர்ப்பை தவறாகப் பயன்படுத்தி, பார்ப்பனர்களைப்பிரித்த்தால், தமிழன் ஒரு பெரும் சக்தியையும் இழந்துவிட்டான்.

பெண்ணாசை என்பதெல்லாம் ஒருவாதமே இல்லை. எங்கும் அஃது உண்டு. தமிழனைத் தனியாக்ச் சொல்ல முடியாது.

தமிழ்ப்பெண்களை அடிமை செய்வதற்கு தமிழன் கண்ட பலவழிகளைக்கண்டான். எனவே தமிழ்பெண்கள் முன்னேற முடியாமல் கோழைகளாகிப்போனார்கள்.

பிறருக்குக்கொடி பிடிக்கும் பழக்கம். சினிமா நடிகன்களைத் தெய்வமாக்கி வணங்கும் அடிமைத்தனம். சுய்மரியாதை என்பது பற்றி தமிழனுக்கு கவலையில்லை. நடிகன்கனின் படங்களைபோட்டு இரசிகர் மன்றங்கள் நடாத்தி தலைமுறைதலைமுறையாக தன் கலாச்சாரத்தைக்கேடு பண்ணிய்வன் தமிழன்.

என்றுமே தமிழனுக்கு மானயுணர்வு என்பது கிடையாது.

சுத்தம் சுகாதாரம் என்பது கிடையாது. Dress sense என்பது கிடையாது. சாலைகளில் பார்த்தால் தெரியும்.

இதைப்புரிந்த மற்றவர்கள், ஏன் இந்தப்புழுவை நாம் மதிக்கவேண்டும் என்று கேட்டால் வியப்பென்ன?

Kumar said...

"உன்னைப் போன்றவர்களின் தெளிவின்மை , தமிழன் உருபடாததற்கு 11 வது காரணம்"

-Perfect reason also-

Why these ppl are not thinking about what is happening around us ???
May be they will realise when they are affected personally...

சு.செந்தில் குமரன் said...

நன்றி என்னுயிர்த் தோழி

சு.செந்தில் குமரன் said...

//தமிழன் வெறுக்கப்பட காரணம்

அவனது அடிமைத்தனம்.

கடும் உழைப்பாளி ஆனால் அவன் அடிமைத்தனத்தால் அது பிறருக்கும் செய்யும் சேவையாகப் போய் விடுகிறது.

//பார்ப்பன எதிர்ப்பை தவறாகப் பயன்படுத்தி, பார்ப்பனர்களைப்பிரித்த்தால், தமிழன் ஒரு பெரும் சக்தியையும் இழந்துவிட்டான்.//

தப்பு ரொம்பத் தப்பு . மன்னிக்க முடியாத கருத்து இது .
பார்ப்பனன் தமிழனை காலகாலமாக ஏமாற்றியதால் தமிழன் காட்டிய நியாயமான
எதிர்ப்பு அது . பின்னால் அரசியல்வாதிகள் அந்த எதிர்ப்பை வைத்துப் பலன்
பெற்றது மட்டுமின்றி பார்ப்பன குடும்பங்களிலேயே பெண்ணெடுத்து
பார்ப்பனர்களுக்கு, பார்ப்பன எதிர்ப்பு அரசியலிலேயே பலம் தந்தனர் . அப்படிப் பலம் தந்தவர்கள் தமிழை வைத்துப்
பிழைத்தவர்களே தவிர உண்மையில் தமிழர்களே அல்ல.எளிய
தமிழன் ஏய்க்கப்பட்டான் . ஆக அது மாபெரும் சக்தி என்பது சும்மா . மாய்மால
சக்தி என்பதுதான் உண்மை .

நண்பர் அமலன் இன்னும் நமது அரசியல் வரலாறு சமூக சூழலைப் படிக்க
வேண்டும்
//கோழைத்தனம். பய்ந்தாங்கொள்ளி. காரணம், எங்கே தன்னிடம் இருப்பதும் பறிக்கப்படுமோ என்ற பயம்.

மனதில் வைத்துத்தான் பழகுவான். நட்டாத்தில் விட்டுவிட்டு அவன் ஓடிவிடுவான்.

தமிழன் அறிவாளி என்பதெல்லாம் கப்சா
சுத்தம் சுகாதாரம் என்பது கிடையாது. Dress sense என்பது கிடையாது. //

இந்தக் கருத்துக்களை வன்மையாகக் கண்டிக்கிறேன் .
இவை மடமையான கருத்துக்கள்


பிறருக்குக்கொடி பிடிக்கும் பழக்கம். சினிமா நடிகன்களைத் தெய்வமாக்கி வணங்கும் அடிமைத்தனம். நடிகன்கனின் படங்களைபோட்டு இரசிகர் மன்றங்கள் நடாத்தி தலைமுறைதலைமுறையாக தன் கலாச்சாரத்தைக் கேடு பண்ணிய்வன் தமிழன்.//

இவைகளை ஏற்கிறேன்

சு.செந்தில் குமரன் said...

yes kumar
i am also feeling for that .
seems to be very difficult making them think in the right way

donvicky said...

Senthil PLease make your writings to be available every public.. make propagating this website in all social networks so that where ever the tamilians are there, they ll get a chance to see it. atleast if 10 to 20 tamilians in a city sees that in a country many of them ll realise.. Particularly this writing, When i read this i really felt how we tamilians are degrading ourselves & putting ourselves in vain... I ll surely help another tamilian here in b'lore.. atleast one person.. Another bad habit for our tamilian is if something we go ourselves & do a favor he/she is considering us as like a servant.. So that i stopped helping others here.. But here after im not gonna consider that.. even if anyone thinks me like a servant i ll do my helps to him..

Vignesh

சு.செந்தில் குமரன் said...

feel ur feelings . thanks for ur decision

Post a Comment