Thursday, January 20, 2011

# பரிதாபத்துக்குரிய கருணாநிதியும் நன்றி மறந்த சோ முதலிய பிராமணர்களும்






துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவின் தொகுப்பை ஜெயா தொலைக்காட்சியில் இரண்டு முறை ஒளிபரப்பினார்கள் .

திமுக காங்கிரஸ் ஆட்சியின் மகா மெகா பகா படா ஊழல்களையும் ஆட்சிகளின் லட்சணத்தையும் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் தனக்கே உரிய பாணியில் புட்டுப் புட்டு வைத்தார் .. ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றியும், ' ஊழலே நடக்கவில்லை' என்றுகபில் சிபல் சப்பைக் கட்டு கட்டியது பற்றியும் பத்திரிக்கையாளர் குருமூர்த்தி விளாசியதும் அருமை . பா ஜ க ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறையில் இதை விட பெரிய ஊழல் நடந்ததாக காங்கிரஸ் திமுக கூட்டணி கூறுவது பற்றியும் அது ஊழல் அல்ல என்பது பற்றியும் குரு மூர்த்தி விளக்கியது கூட ஏற்புடையதே . அதன் பிறகு மன்மோகன் சிங் எப்படி மன்மோகன் 'அசிங்' ஆகப் பொய் விட்டார் என்பது பற்றியும் சோ பேசியது ரசிக்கும்படியும் மதிக்கும்படியும் இருந்தது .

கருணாநிதி ஆட்சியின் ஊழல்களை எல்லாம் மைக் முன் நின்று யோசித்து யோசித்து பாயிண்ட் பிடித்து பிடித்து பேசிய அதே சோ , ஈழத் தமிழர் விவகாரத்தில் கருணாநிதி நடத்திய கோர நாடகங்களைப் பற்றி -- பேசுவதற்கு மலை போல விசயங்கள் இருந்தும்- ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை . அந்த விசயத்தில் இவரும் கருணாநிதியும் ஒரே கொள்கை ('கொல்'கை? ) உடையவர்கள் என்பது புரிந்தது .

இப்படி மனிதாபிமான (ம் இல்லாத) விசயத்தில் இருவரும் ஒரே மாதிரி இருந்து கொண்டு மற்ற விசயங்களில் மட்டும் கலைஞரை சோ தாக்குவது கேலிக்கூத்து . (எல்லா விசயத்திலும் தான் சொல்கிற மாதிரியே கலைஞர் நடக்க வேண்டும் என்ற குழந்தைத்தனமான ஆசை சோவுக்கு இருக்கிறது என்பது புரிந்தது . கலைஞர் --ஜெயலலிதா இருவரின் 'அக்சஸ்' பற்றி பேசிய சோவுக்கு எல்லா விசயத்திலும் கலைஞர் தனக்கே 'அக்சஸ் 'ஆகவேண்டும் . தான் நினைப்பது எல்லாம் சக்சஸ் ஆக வேண்டும் என்று சோ ஆசை படுவது புரிகிறது )

இப்படி ஈழ விவகாரத்தில் கலைஞர் , சோ இருவரும் ஒரே கருத்தில் இருப்பது கூட, சட்டென்று புரியாது . கொஞ்சம் அறிவுப் பூர்வமாக யோசித்தால்தான் புரியும் .

ஆனால் எதற்கு யோசிக்கவெல்லாம் வைத்து மக்களைக் கஷ்டப் படுத்த வேண்டும் என்றோ என்னவோ, ஈழ விவகாரத்தில் தானும் ஒரு கருணாநிதிதான் என்று நேரடியாகவே அந்த நிகழ்ச்சியில் ஒத்துக் கொண்டார் சோ என்பதுதான் விசேஷம்.

சோ வை அப்படி ஒத்துக் கொள்ள வைத்தது , ஒரு சிறுமி கேட்ட கேள்வி

"விடுதலைப் புலிகளை ஒழித்ததற்காக ராஜ பக்சேவை பாராட்டும் நீங்கள் ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களை கொடுமைப் படுத்தும் அந்த ராஜ பக்சேவை எப்போது கண்டிக்கப் போகிறீர்கள் ?"

இதுதான் அந்த சிறுமி கேட்ட அந்தக் கேள்வி .

(தமிழ் இன உணர்வுள்ள யாரையும் சாதி ரீதியாகப் பிரித்துப் பார்ப்பதை நான் விரும்புவது இல்லை என்றாலும் கூட சில நேரம் நல்ல நோக்கில் பாராட்டுவதற்காக பிரித்துப் பார்ப்பதில் தவறில்லை என்றே நம்புகிறேன் . எனவே அடுத்து வரும் பத்திகள் )

துக்ளக் ஆண்டு விழாவிற்கு வருபவர்களில் பெரும்பாலோனோர் பிராமணர்கள்தான் . கேள்வி கேட்ட சிறுமியும் பிராமணச் சிறுமி போலவே தெரிந்தார் . எனவே அந்தக் கேள்வியை எழுதி அனுப்பியது ஒரு பிராமண அன்பராகவே இருக்க வேண்டும் . அப்படி இருந்தால் அந்த மனிதாபிமான ரத்தினத்துக்கு நன்றிகள் ).

சிறுமியின் கேள்விக்கு ஜீவகாருண்ய சோ சொன்ன பதிலில் முதல் வாக்கியம் என்ன தெரியுமா?

" ராஜபக்சே தப்புப் பண்ணும்போது கண்டிக்கலாம் "

அடங்கொக்க மக்கா !

ராஜபக்சே தப்புப் பண்ணும்போது கண்டிக்கலாம் எனறால்..." அவர் இன்னும் தப்பே பண்ணவில்லை பண்ணினால் கண்டிக்கலாம் " என்கிறாரா? ராஜ பக்சே எப்பேர்ப்பட்ட காட்டுமிராண்டி என்று உலகமே பரிகசிக்கும் வேளையில் இந்த சத்ய சீலர் , அஹிம்சை-- நேர்மை என்று பேசி, எங்கே பிராமணண் என்று தேடும் இந்த இந்து மகா சமுத்திரர்.... ராஜ பக்சே இன்னும் என்ன செய்தால்தான் , தப்பு செய்வதாக ஒத்துக் கொள்வார்?

அல்லது

பொதுவில் தப்பு செய்கிற யாரையும் கண்டிக்கலாம் என்ற அர்த்தத்தில்தான் சோ அப்படி சொன்னார் எனறால் ..

விடுதலைப் புலிகளுக்கு எதிராக வளைச்சு வளைச்சு எழுதி ராஜ பக்சேவை ஆதரித்து எழுதிய இந்த 'அறிவு சீவி ' பத்திரிக்கை ' 'ஆ'சி'றி'யர், இதுவரை --- அந்த பிராமண சிறுமி கேட்டபடி -- அப்பாவி மக்களைக் கொடுமைப் படுத்தும் ராஜ பக்சேவை கண்டித்து என்ன எழுதிக் கிழித்திருக்கிறார்?

இது மட்டுமல்ல . கேள்விக்கு பதிலாக ராஜ பக்சேவைக் 'கண்டித்து ' சோ அருளிய ஒரே வாசகம்... " ராஜபக்சே தப்புப் பண்ணும்போது கண்டிக்கலாம் " என்பதுதான் . அதாகப் பட்டது ராஜ பக்சேவைக் கண்டிக்க பர்மிஷன் கிராண்ட் பண்ணியிருக்கிறார் இந்த வேத ஆத்மா . .
அடுத்து சோ என்ன சொன்னார் தெரியுமா?

" (ராஜபக்சே செய்கிற தப்புகளுக்காக) நாமும் கருணாநிதி மாதிரி லெட்டர் போடலாம் , கருணாநிதி மாதிரி தந்தி அடிக்கலாம் . அடடா எப்படி எப்படி எல்லாம் கடிதம் எழுதறாரு .லிப்கோ என்கிற கம்பெனி கடிதம் எழுதற முறைகள் னு ஒரு புத்தகம் போட்ட்டது . அதை விட பல புது முறைகள்ல எல்லாம் இவர் எழுதுறாரு " என்று ஆரம்பித்து "இப்ப காங்கிரஸ் கட்சியிலையே பெரிய கோஷ்டி கலைஞர் கோஷ்டிதான் ..." என்று தத்துப் பித்தென்று பேசி தப்பிப் பிழைத்தார் இந்த மா ஆ ஆ ஆ ஆ பெரும் அரசியல் விமர்சகர் .

என்ன ஒரு அற்பத்தனமான 'எஸ்கேபிசம்' .......!

இன்டல்லக்சுவல் அர்ரகன்ஸ் ...!

சிறுமி கேட்ட கேள்விக்கு இதுதான் பதிலா?

ஒரு முக்கியமான மனிதாபிமானப் பிரச்னையில், பாதிக்கப் பட்ட உயிர்களுக்கு எதிராக, கலைஞர் செய்கிற அதே செயலைத்தான சோ வும் செய்வார் எனறால் அப்புறம் கலைஞருக்கும் சோவுக்கும் என்ன வித்தியாசம்? அப்புறம் கலைஞரை எதிர்க்க , கிண்டல் செய்ய , கேலி செய்ய இவருக்கு என்ன அருகதை இருக்கிறது

அப்புறம் இவர் பேசுகிற காமெடிகளை கேட்பதை விட சந்தானம் காமெடியைப் பார்தது விட்டுப் போகலாமே .

ஒன்று புரிகிறது . திராவிட ஆரிய போராட்டம் என்று கூறி வெளியே வேஷம் போட்டுக் கொண்டு தமிழனுக்கு எதிரான பிரச்னையில் எப்படி இரண்டு தரப்புமே ஒன்றாக இருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட உதாரணம் என்ன வேண்டும்?

இதோடு முடிந்ததா?

ஊழல் குற்றச் சாட்டுக்கு ஆளான தாமஸ் என்ற என்பவரை விஜிலென்ஸ் துறையில் அதிகாரியாக நியமித்தது எவ்வளவு பெரிய தவறு என்பது பற்றிய சோ வின் கருத்து நியாயமானதே . ஆனால் அதற்கு அவர் உதாரணம் சொல்கிறார் பாருங்கள் . "இது எப்படி இருக்குன்னா .. கருணாநிதிய கொண்டு வந்து பிராமண சங்கத் தலைவரா போட்ட மாதிரி ....."

ஏன் கருணாநிதியை பிராமண சங்கத் தலைவராகப் போட்டால் என்ன? என்ன தப்பு? அதற்கான தகுதி , உரிமை அவருக்கு இல்லையா? எத்தனை எத்தனை தகுதிகள் .!

1 ) தமிழை விட சமஸ்கிருதமே பெரிய மொழி என்று சொல்லி வாழ்ந்த சமஸ்கிருதப் பண்டிதரின் மகன் கலைஞர் .

2 ) தன் மனசாட்சியான முரசொலி மாறனுக்கு மல்லிகா என்ற பிராமணப் பெண்ணை திருமணம் செய்து வைத்தார் . முரசொலி மாறனின் முதல் மகன் கலாநிதி மாறனுக்கும் , இரண்டாவது மகன் தயாநிதி பிராமண மாட்டுப் பொண்கள் தகைந்த போது ஏற்று தனது குடும்பத்தில் பிராமண குலம் தழைக்க உதவினார் .

3 ) அம்மட்டோ ! அய்யகோ! ஜெயேந்திரரை ஜெயலலிதா கைது செய்து சிறையில் அடைத்த போது "மாலுமி சரி இல்லை என்பதால் கப்பலைக் கவிழ்த்து விட முடியாது . ஜெயேந்திரருக்காக சங்கர மடம் என்னும் கப்பலைக் கவிழ்த்து விட முடியாது என்று கூறி ' திராவிட' த் துடுப்பின் மூலம் சங்கர மடக் கப்பலுக்கு ஆதரவு காட்டி பிராமண குலக் காவலனாக மாறினார் ,

4 ) தொல்கப்பியரின் மெய்ப்பாட்டியல் , சிலப்பதிகாரம் துவங்கி பரத நாட்டியம் தம்ழினத்தின் தொன்மையில் இருந்து வந்தது என்ற உண்மையை மறுத்து , கற்பனைப் பாத்திரமான 'பரத முனிவர்தான் பரதக் கலையை பரப்பினார்' என்று புளுகும் பத்மா சுப்ரமணியத்தை ஆதரித்து ... தான் பூம்புகார் படத்துக்கு வசனம் எழுதியதையும் , காவிரிப் பூம்பட்டினத்தில் நினைவுச் சின்னம் அமைத்ததையும் மறந்து , பரத முனிவர் பெயரை முன்னிறுத்தி இளங்கோ பெயரைப் பின்னுக்கு தள்ளி பத்மா சுப்ரமணியம் ஆசைப் படி பரதர் -- இளங்கோ கலைப் பண்பாட்டு மையம் என்று பேர் வைக்கிறார் கலைஞர் .

5 ) இதோ! இந்த பொங்கலுக்கு கூட பத்மா சுப்ரமணியத்துக்கு
விருது தந்த பின்னர்தான் கலைஞர் தூங்கவே போனார் . இப்படியாக பத்மா சுப்பிரமணியம் என்னும் பிராமணப் பெண்மணி காலால் இடும் கட்டளையை தலையால் தாங்குகிறார் கலைஞர் .

இன்னும் என்னப்பா கலைஞர் பிராமணர்களுக்காக செய்ய வேண்டும்? இந்த அளவு பிராமணர்களுக்காக எந்த முதல்வராவது உழைத்திருக்கிரார்களா , ராஜாஜி உட்பட ?

எனக்கென்னவோ சங்கராச்சாரியார்கள் கூட இந்த அளவு பிராமண சங்கத்துக்கு உழைத்திருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது (அந்த லட்சியம் இருந்தால் ஜெயேந்திரர் ஏன் இப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும்?)

ஆக இப்படியெல்லாம் பிராமண குலத்துக்காக உழைத்த --- உழைத்துக் கொண்டிருக்கிற --- வாழும் வரை உழைக்கப் போகிற-- கருணாநிதியை பிராமண சங்கத் தலைவராகப் போட்டால் என்ன தப்பு?

பிராமண சங்கத்துக்குள் இப்போது ஒற்றுமையே இல்லையாமே! . பேசாமல் கலைஞரை பிராமண சங்கத் தலைவராகப் போட்டால் சங்கம் உருப்படும் . திராவிட இயக்கத்தையே அதற்குப் பயன்படுத்தி பிராமண சங்கத்தை பலப்படுத்தி 'கலைஞர் சமூகப் புரட்சி' செய்தாலும் செய்வார் .

நல்ல சான்ஸ் . விட்டுறாதீங்கப்ப்பா !

6 comments:

chandru2110 said...

இப்படி ஈழ விவகாரத்தில் கலைஞர் , சோ இருவரும் ஒரே கருத்தில் இருப்பது கூட, சட்டென்று புரியாது . கொஞ்சம் அறிவுப் பூர்வமாக யோசித்தால்தான் புரியும் .///// உண்மையாவே எனக்கும் இப்பதான் புரிகிறது. ஜெயலலிதாவுக்கும் அதே நிலைமைதான்.

சு.செந்தில் குமரன் said...

நிஜம் சந்துரு

கோவி.கண்ணன் said...

சோ வின் அக்மார்க் பார்பனியம் தெரிந்த ஒன்று தான். படிக்கும் போது கொஞ்சம் டென்சன் ஆகி அடங்கியது.

விமர்சனமே என்றாலும் நீங்கள் பார்பனர்களை பிராமணர்கள் என்று எழுதுவதை நிறுத்துவீர்கள் என்று நம்புகிறேன். பிராமணன் என்று பார்பனரல்லாத பிறர் பார்பனர்களை குறிப்பிடுவதை நிறுத்தாதவரை சூத்திரனின் இருப்பையும், நால்வருண கோட்பாட்டையும் நாம் இன்னும் உறுதி செய்கிறோம் என்பது நினைவில் இருக்கட்டும்.

சு.செந்தில் குமரன் said...

மனப்பூர்வமாக ஏற்கிறேன் கோவி . நன்றி, உங்கள் அன்புக்கும் ---அறிவுரைக்கும் , அறிவுரைக்கும் .

ராவணன் said...

//கோவி.கண்ணன் said...

சோ வின் அக்மார்க் பார்பனியம் தெரிந்த ஒன்று தான். படிக்கும் போது கொஞ்சம் டென்சன் ஆகி அடங்கியது.

விமர்சனமே என்றாலும் நீங்கள் பார்பனர்களை பிராமணர்கள் என்று எழுதுவதை நிறுத்துவீர்கள் என்று நம்புகிறேன். பிராமணன் என்று பார்பனரல்லாத பிறர் பார்பனர்களை குறிப்பிடுவதை நிறுத்தாதவரை சூத்திரனின் இருப்பையும், நால்வருண கோட்பாட்டையும் நாம் இன்னும் உறுதி செய்கிறோம் என்பது நினைவில் இருக்கட்டும்.//


பிராமணர்களை பிராமணர்கள் என்றே எழுதவேண்டும். பிராமணர்களை பார்ப்பனர்கள் என்று எந்த மாநிலத்திலும் கூறமாட்டார்கள்.பார்ப்பு என்பது தமிழ்நாட்டில் மட்டுமே,அதுவும் நாம் வைத்த பெயர்.அவர்கள் தங்களை பிராமணர்கள் என்றே கூறிக்கொள்வர்.பிராமணர்களை பார்ப்பு என்று கூறி அவர்கள் நிலை உயர்த்தவேண்டாம்.

பிராமணப் பண்டிகைகளைக் கொண்டாடும் கோவிக்கு பிராமணர்பால் எவ்வளவு பாசம்?

சு.செந்தில் குமரன் said...

இருங்கள் .. இருங்கள் ...

சிலப்பதிகாரம் கூட "மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட "என்கிறது . அது பிராமணர்களைக் குறிக்கிறதா ? அல்லது அன்று பார்ப்பு என்பது ஒரு இனத்தின் பேராக இல்லாமல் தொழிலின் பெயராக இருந்ததா என்பது பற்றி சரியான ஆய்வுகள் இல்லை .

என்னைப் பொறுத்தவரை நான் தமிழன் என்ற உணர்வோடு தமிழினத்துக்கு உண்மையான ஆதரவோடு செயல்படுகிற எல்லோரும் அவர் எந்த வருணத்தில் இருந்தாலும் தமிழ் வண்ணத்தில் நிலை நிறுத்தப் பட வேண்டும் . அதில் பிறப்பால் வேற்று மொழியைச் சேர்ந்த சிலர் கூட இடம்பெறுவதை நான் உணர்ந்திருக்கிறேன் .

ஆக தமிழை தன் தாய் மொழியாகவும் தமிழினத்தை தன் இனமாகவும் உணமையாக ஏற்றுக் கொண்டு ----கவனியுங்கள்...உண்மையாக ---- செயல்படுகிறவர்கள் அவர் பிராமணராக, பார்ப்பனர்களாக அல்லது வேறு யாராக இருந்தாலும் அவர்கள் தமிழர்களே !

Post a Comment