Thursday, February 3, 2011

# நிருபமா ராவ் -- ராஜபக்சே என்ன பேசி இருப்ப்பார்கள் ? -- ஒரு நியாயமான யூகம்
ராஜா பக்சே :வாங்க நிரூ .. என்ன விஷயம் ?

நிருபமா :தெரியாத மாதிரி கேட்காதீங்க . நான் எதுக்கு வந்திருப்பேன்னு தெரியாதா ?

ராஜபக்சே : தெரியும் . ஆனா அத உங்க வாயால நீங்க அசடு வழிய சொல்லி கேட்டா, எங்களுக்கு நல்லா பொழுது போகும் இல்லியா ?

நிருபமா : ஆனாலும் ரொம்ப குறும்ப சார் நீங்க . சரி சொல்லுறேன் . கேட்டுக்குங்க . கோடை இரவுகளிலும் கடல்ல தண்ணி சுடாம இருந்தாலும் இருக்கும . உங்க ராணுவம் தமிழக மீனவர்களை சுடாம இருந்தது இல்ல . நீங்க அதை நிறுத்தணும்னு சொல்லத்தான் வந்தேன் .

ராஜபக்சே : மெய்யாலுமா ? சோனியா பாபி இப்படித்தான் சொல்லி விட்டுச்சா

நிருபமா : (மனதுக்குள் ) என்ட்ரா இதி சால பிராப்ளமுக உன்னாவு (வாய் விட்டு ) அது இல்ல சார் . நீங்க கொஞ்சம் அதை நிறுத்தணும்.

ராஜ பக்சே : கொஞ்சம்னா ... ஒரு நாளைக்கு ஒரு தமிழக மீனவன் என்பதை மாத்தி ஒரு வாரத்துக்கு ஒரு தமிழக மீனவன் ....ஒகே வா ?

நிருபமா : (தயங்கியபடி ) இல்ல சார் ... நீங்க .....ஒரு..... மூணு நாலு மாசத்துக்கு..... யாரையும் .....சுடவே... .....கூடாது

ராஜபக்சே : ( கோபாவேசத்தோடு ) என்னது ? என்ன நிரூ ... கிண்டலா ? எங்க உரிமைய நீங்க பறிக்கப் பாக்குறீங்களா ?
தன் இனம் சாவும்போடும் காசு வாங்கிக்கிட்டு தேர்தல் விபச்சாரம் பண்ணி வாக்குரிமைய கூட்டிக் கொடுக்க எங்களை என்ன மானங்கெட்ட தமிழன்னு நினைச்சீங்களா ?

இல்ல ஒட்டு போட்ட மக்களுக்கே வேட்டு போட நாங்க என்ன தமிழ்க் அரசியல்வாதியா ?

என்ன பேச்சு பேசறீங்க . நீங்க நிஜமாவே டில்லி சொல்லித்தான் வந்தீங்களா ?

டேய் தம்பி கோத்தா பய ... சோனியாவுக்கு போன் போடு .. பிரணாப் முகர்ஜிக்கு போன் போடு . .. எம் கே நாராயணனுக்கு போன் [போடு ....சிவசங்கர மேனனுக்கு போன் போடு .. ராகுல்காந்திக்கு போன் போடு ...

லைன் கிடைக்கலேன்னா , நேரா நம்ம கருணாநிதிக்கே போன் போடு . அதும் பிராப்ளம்னா ஈ விகே எஸ் இளங்கோவனுக்கோ , சோ ராமசாமிக்கோ ஒரு போன் போடுறா .

இந்த பொம்பள நிஜமாவே நம்ம ஆளுங்க சொல்லித்தான் வந்திருக்கான்னு .....

நிருபமா: (குறுக்கிட்டு ) இருங்க இருங்க அவசரப்படாதீங்க . அவங்க சொல்லித்தான் வந்திருக்கேன் .

இது எலக்ஷன் வரப் போற நேரம் . நீங்க பாட்டுக்கு சுட்டுக் கொல்லற ஆட்களோட பாடிய காட்டி அவங்க குடும்பங்களும் ஜனங்களும் 'அநியாயமா (!)" அழுது ஆர்ப்பாட்டம் பண்றாங்க . கலைஞர்காரு வேற தினசரி காலைல எழுந்ததும் பேஸ்ட் பிரஷோட அஞ்சு லட்ச ரூபா பணத்தையும் பக்கத்துல வச்சிக்கிட்டுதான் படுக்கையை விட்டே எந்திரிக்கிறார் . பயமா இருக்கு

என்ன பண்ணி தொலைக்கறது ? இந்தியாவுல தமிழனுக்கு இன்னும் ஓட்டுரிமை இருந்து தொலைக்குதே .அவனுங்க எங்களுக்கு எதிரா ஒட்டு போட்டுட்டா , அப்புறம் நாங்க ஜெயிக்க முடியாம போயிட்டா , நீங்க எப்படி தொடர்ந்து சுட முடியும் ?

உங்க மாதிரி நாங்களும் எப்பதான் இந்தியாவுல தமிழனுன்களோட ஓட்டுரிமையை ரத்து பண்ணப் போறமோ தெரியல . அப்புறம் உங்களை இப்படி தொந்தரவு செய்ய மாட்டோம் . அதுவரைக்கும் எங்களை மன்னிக்கணும்

அதனால தயவு [பண்ணி நீங்க சுடுற வேலைய ஒரு மூணு மாசம் நிறுத்தி வைங்க .

வேண்ணா மூணு மாசத்துல எத்தன பேரை சுடணும்னு கணக்கு பண்ணி வச்சுக்குங்க . தேர்தல் முடிஞ்சதும் மொத்தமா போட்டு தள்ளுங்க . எந்த பய உங்களை கேட்க இருக்கான் ? நம்ம அன்னைய 'பல்க்'கா சந்தோஷப் படுத்துங்க . யாரு வேணாம்னா ?

ராஜ பக்சே : அதான பாத்தேன் . நான் கூட உங்க எல்லாருக்கும் நிஜமான இந்திய தேசப் பற்று வந்துடுச்சோன்னு பார்த்தேன் .

நிருபமா : கொஞ்சம் மனசு வைங்க ராஜா .

ராஜபக்சே : புரியுது நிரூ . என்ன பிரச்னைன்னா , நாங்க தமிழன சுட்டு பொணமா அனுப்பும்போது அதைப் பார்த்து அவன் பொண்டாட்டி புள்ளைங்க எல்லாம் அழுறத பாக்குறதுல ஒரு சந்தோசம் . அந்த சந்தோசம் மூணு மாசம் இல்லாம போற சோகத்தை நினைச்சு என் சிங்கள இனமே கண்ணீர் வடிக்குமே

பரவா இல்ல . ஆனா ஒண்ணு அங்க உள்ள நம்ம ஆளுங்க கிட்ட ஒரு விசயத்தை சொல்லிடுங்க . தமிழன சுட்டுக் கொல்லாம எல்லாம் இருக்க முடியாது . நீங்க கொடுத்த ஆயுதமே இன்னும் நிறைய இருக்கு . அதெலாம எப்ப யூஸ் பண்றது? வேண்ணா ஒண்ணு பண்றோம் . பாடியை அப்படியே விட்டுட்டு வராம இங்க கொண்டு வந்து எரிச்சுகறோம் . ஆனா அதுக்கு பெட்ரோல் செலவு எல்லாம் இந்திய கடல்படைதான் தரணும். டீல் ஒகே வா ?

நிருபமா ; டபுள் ஒகே . மீனவர்கள் காணவில்லைன்னு நியூஸ் வர வச்சு அப்படியே மறக்க அடிச்சுடலாம். கவனம் ......பாடி கிடைக்கவே கூடாது சரியா ?

ராஜபக்சே :. ஓகே ஓகே

நிருபமா ; சும்மா சொல்லக் கூடாது . கில்லாடி சார் நீங்க .

ராஜபக்சே : இல்லன்னா வல்லரசு நொல்லரசுன்னு ஊள உதார் விடற உங்கள நொண்டி நொங்கெடுத்து , என் காலைக் கழுவி குடிக்க வைக்க முடியுமா ? புத்தம் சரணம் கச்சடா ..

நிருபமா ; சார் அது கச்சாமி சார் .

ராஜபக்சே ; அத விடுங்க . எனக்கு ஒரு டவுட்..! நாங்க உங்க இந்தியாவோட தென் எல்லை மீனவர்களை தமிழக மீனவர்கள் அப்படின்னு சொல்றோம் . ஆனா நீங்களும் அவர்களை இந்திய மீனவர்கள் என்று சொல்லாம தமிழக மீனவர்கள் அப்படின்னே சொல்றீங்களே . அவங்க உங்க இந்திய மீனவர்கள் இல்லியா ?

நிருபமா ; என்ன சார் இது ... இப்பதான் உங்கள கில்லாடின்னு சொன்னேன் . இப்படி உளர்றீங்க . நாங்க தமிழர்களை இந்தியர்களா நினைக்கவே மாட்டோம் . ஆனா அவங்க மட்டும்" நாங்க இந்தியர்கள் நாங்க இந்தியர்கள்" னு நினைக்கணும் . அதான் இந்தியா

ராஜபக்சே ; (மெய்சிலிர்த்து கண் கலங்கி உணர்ச்சிவசப்பட்டு ) ஜெய்ய்ய் ஹிந்த்த்த்!


12 comments:

kama said...

நீங்கள் மிகையாக எழுதியது போல் எனக்கு படவில்லை..

சு.செந்தில் குமரன் said...

புரிதலுக்கு நன்றி . உண்மையில் நான் மிகக் குறைவாகத்தான் எழுதியுள்ளேன் . கொஞ்சம் கூட யோசிக்காமல் --- சரியாகச் சொல்லப் போனால் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் எழுதியது அது

Rathi said...

ஏதாச்சும் குட்டு உடையிற விஷயம் என்றால் வேறு யாராவது வருவார்கள், கிருஷ்ணா, சிவ சங்கர் மேனன், பிரணாப் இப்படி. தமிழக மீனவன் தானே அதனால் தான் நிருபமா.

//உங்க மாதிரி நாங்களும் எப்பதான் இந்தியாவுல தமிழனுன்களோட ஓட்டுரிமையை ரத்து பண்ணப் போறமோ தெரியல .//

ஒட்டு உரிமையை மட்டுமா பறிச்சாங்க.

சு.செந்தில் குமரன் said...

ஹும் ம் ம் ......

chandru2110 said...

தமிழ் நாடு தனி நாடுதான். இங்க(வடக்கில்) உள்ளவங்க அப்படிதான் பாக்குறாங்க.
அதனாலதான் பா. சிதப்ம்பரத்தை பிரதமர் ஆக விடலை. இங்க உள்ள மீடியாக்கள் தமிழ் நாட்டை பத்தி பேசுறதே இல்ல.

சு.செந்தில் குமரன் said...

அது சரி....!

ஜோதிஜி said...

தமிழர்களை இந்தியர்களா நினைக்கவே மாட்டோம் . ஆனா அவங்க மட்டும்" நாங்க இந்தியர்கள் நாங்க இந்தியர்கள்" னு நினைக்கணும் . அதான் இந்தியா

என் மனதில் இருக்கும் ஆதங்கமும் இது தான்.

சு.செந்தில் குமரன் said...

தமிழர்களுக்கு மட்டுமல்ல நிஜமான ஒவ்வொரு இந்தியனுக்கும் அந்த ஆதங்கள் வரும் வரை இங்கு தேச பக்தி என்பது கல்கி ஆசிரமத்தில் போதையில் உளறுவது போலத்தான்

ஹேமா said...

வணக்கம் செந்தில் குமரன்.அதுசரி....தமிழனைத் தமிழனாய் இல்லை பரஸ்பரமொரு மனிதனாய்க்கூட பிறந்த நாடுகளில் மதிக்கப்படாமல் மிதிக்கப்படுவது மிகவும் வேதனை.ஆனால் ஒன்று சொந்த நாடுகளிலும் விட வெள்ளைக்காரன் மனிதனாய் மதிக்கிறான் எங்களை !

குகன் said...

தமிழனை மனிதனாகவே நினைக்காதவனுடன், தமிழனை இந்தியனாக நினைக்காதவளின் பேட்டி நன்றாக இருக்கிறது.

சு.செந்தில் குமரன் said...

அந்த உண்மைதான் நம்மைக் கொல்கிறது ஹேமா .

சு.செந்தில் குமரன் said...

உங்கள் புரிதல் அபாரம் குகன் .

Post a Comment