Saturday, February 19, 2011

#எங்கேயடா புதைப்ப்பீர்கள் ?








ஒரு
தியாகத்தின் திருக்கடல்
ஒரே 'மூச்சில்'
குடிக்கப் பட்டிருக்கிறது .

எத்தனையோ
வீரத்தாய்கள்
இறந்த இதே பூமியில் ,
முதன் முதலாய்
மறைந்திருக்கிறது ...
வீரத்தின் தாய் .

வெறுப்பை எதிர்கொண்டே
இருப்பை தொடர்ந்த
ஒரு இனத்தின் மண்ணில் ...

அம்மா!

நீ மட்டும்
நெருப்பை சுமந்த
கருப்பை .
இனமானம் வளர்த்த
திருப்பை.

அடேய்...

எங்கே.....
எப்படியடா
புதைப்பீர்கள் ,
இணையில்லா அந்தச்
சிறப்பை ?

நாற்காலிகளுக்கெனப்
பிள்ளை பெறும்
நாடிருக்கும் இனத்தில் ,
நீ மட்டுமே
சமருக்கென
சந்ததி வளர்த்தவள்!
படைக் களத்துக்கென
பாரம் சுமந்தவள் !

என்னை மன்னித்து விடு
தாயே . !

சொக்கத் தங்கத்துக்கு
சோப்பு போட்டே
கைகள் தேய்ந்து போன
கயவர்கள் நிறைந்த மண்ணில் ...

வடக்கே இருந்து
ஜிப்பா போட்டுக்கொண்டு
எக்குத்தப்பான நடையோடு
எவன் வந்தாலும்,
கை குலுக்குவதிலேயே
காவியப் பெருமை பெறும்
கசடுகள் நிறைந்த நிலத்தில் ....

முன்னூறு ரூபாய்க்கு
வாக்குச் சீட்டை வைத்து
விபச்சாரம் செய்து விட்டு ,
மூவாயிரம் கொடுத்தால்
யாரை வைத்து
விபச்சாரம் செய்யலாம் என,
வீட்டுப் பெண்களை
விரல் விட்டு எண்ணிக் கொண்டிருக்கிற
விகாரர்கள் நிறைந்த
ஒரு சமூகத்தில் ...

காலைக் கழுவிக் குடிப்பதையே
கதை கவிதை இலக்கியம்
என்று சொல்லி
ஓக்காலிக்க் வைக்கிற
ஒரு கும்பல்,
விருது பெறும் எருதுகளாக
பல்லிளிக்கும்
ஒரு பாழும் சூழலில்

இருந்துகொண்டு ....

உனக்காக
ஒரு துளி கண்ணீர்
விடுவதைத் தவிர
எதுவும் செய்ய முடியவில்லை
என்னால்.


குண்டு வைத்துக்
கொத்துக் கொத்தாய்
கொன்று போடும்
கொலைகாரத தீவிரவாதக்
கூட்டத்தில்
பிறந்தவர்களுக்கும்....
தீவிரமாய் சிகிச்சை அளித்து
திருப்பி அனுப்பும்
அஹிம்சை தேசம்

ஒரு
கிழவிக்கு சிகிச்சை அளிக்க மறுத்து ..

இதோ !
கிழிந்து கிடக்கிறது .

சிகிச்சை அளிக்க மறுத்த
அதே தேசம்
பிச்சை போடுவது போல
பிறகு அழைக்கையில் ....

மறுத்த போது
அந்தப் பெண்மையின் வீரம்
திசைகளைக் கிழித்தது.

பார்வதி அம்மாளைப்
புதைப்பவர்களே !

கூடவே இன்னொரு
குழி வெட்டுங்கள் .

புதைப்பதற்கு
இன்னொரு உடலைத் தேடாதீர்கள் .

இருக்கவே இருக்கிறது ...
இந்தியாவின் காந்தீயம்!




6 comments:

chandru2110 said...

வீரத் தாயை வணங்கி , வருந்துகிறேன்.

சு.செந்தில் குமரன் said...

நன்றி சந்த்ரு

தமிழ்நதி said...

”காலைக் கழுவிக் குடிப்பதையே
கதை கவிதை இலக்கியம்
என்று சொல்லி
ஓங்காளிக்க வைக்கிற
ஒரு கும்பல்,
விருது பெறும் எருதுகளாக
பல்லிளிக்கும்
ஒரு பாழும் சூழலில்”

கலைஞர் அவையை நன்றாகப் பிரதிபலித்திருக்கிறீர்கள். நன்றி.

சு.செந்தில் குமரன் said...

அன்புக்கும் மதிப்பீட்டுக்கும் நன்றி தமிழ் நதி

J.P Josephine Baba said...

நெகிழ்ச்சியான பதிவு. நிச்சயம் நல்ல வீரமுள்ள மானமுள்ள மகனை பெற்ற தாய் போற்றுதலுக்கு உரியவளே.

சு.செந்தில் குமரன் said...

நன்றி . இந்த வார ஜூவியில் வாலி கவிதை படித்து விடுங்கள் . வாலி கூட வாளாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை . ஆனால் பின்னணியில் ஏதாவது காரணம் இருக்குமோ என்றும் யோசிக்கிறேன் -- வாலி எழுதியதற்கு

Post a Comment