Tuesday, February 9, 2010

# இதுவா சாதனை?





‘‘தமிழக முதல்வர் கலைஞரின் தொடர் வலியுறுத்தல்கள¢ காரணமாக மெட்ராஸ் ஹை கோர்ட் என்ற பெயர், இனி சென்னை ஹை கோர்ட் என்று மாற்றப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது’’ என்று ஒரு செய்தியை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.


சென்னை மட்டுமல்ல; பம்பாய் ஹைகோர்ட், மும்பை ஹைகோர்ட் ஆகிறது. கல்கத்தா ஹை கோர்ட், கொல்கத்தா ஹை கோர்ட் ஆகிறது என்றும் தகவல்கள் தொடர்கின்றன.

ஆக, இந்தியா முழுவதும் இந்த மாற்றம் நடக்கிறது எனும்போது, முதல்வர் வலியுறுத்தாவிட்டாலும் மெட்ராஸ் ஹைகோர்ட், சென்னை ஹைகோர்ட் என்று மாறியிருக்கத்தான் போகிறது. இதில் முதல்வர் வலியுறுத்த என்ன இருக்கிறது? உண்மையில் இந்தப் பெயர் மாற்றங்கள் என்பது இந்தியா முழுக்க சென்னை, மும்பை, கொல்கத்தா, குவகாத்தி போன்ற இடங்களில் நடக்கிறது.


அடுத்த சட்டமன்றத் தேர்தலைப்பற்றி இப்போதே யோசித்துக் களம் இறங்கிவிட்டது தி.மு.க.. எனவே வரும் சட்டமன்றத்தேர்தலில் தி.மு.க. அரசின் சாதனைப் பட்டியலில், இந்தப் பெயர் மாற்றமும் சேர்ந்துவிடும். கழகக் கண்மணிகள் பிரசார மேடைகளில், ‘‘மெட்ராஸ் ஹைகோர்ட் என்று இருந்த பெயரை சென்னை ஹைகோர்ட் என்று மாற்றிய பெருமை தமிழக முதல்வர் கலைஞரையே சாரும்’’ என்று சோடா குடித்தபடி முழங்கத்தான் போகின்றனர்.


உண்மையில் இதுவா முதல்வரின் சாதனை?

மொழிவாரி மாநிலங்கள் பிரிந்தபோது, அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்றவை பிரிந்தன. தமிழர்கள் வாழும் பகுதிகளையும் சேர்த்து தெலுங்கர்களும், மலையாளிகளும், கன்னடர்களும் பிடுங்கியது போக, மிச்சமுள்ள பகுதி அப்படியே கிடந்தது, சென்னை மாகாணம் என்ற பெயரில்! அண்ணா முதல்வர் ஆனபோது, சட்டமன்றத்தில் அதற்கு ‘தமிழ்நாடு மாநிலம்’ என்று பெயரிட்டார்.

அதோடு சரி.


நம்மிடம் இருந்து (நம்மையும் ஏய்த்து) பிரிந்துபோன மாநிலங்களின் உயர்நீதி மன்றங்கள் எல்லாம் மாநிலத்தின் பெயரையே உயர்நீதி மன்றங்களுக்கு வைத்தன. அதோடு தத்தம் மாநில மொழியையும் தமது உயர்நீதிமன்றத்தில் சரியாசனம் தந்து பெருமை பெற்றன. உதாரணம்: கர்நாடக உயர் நீதிமன்றம். கர்நாடக உயர் நீதிமன்றத்தின் பெயர்ப் பலகையே கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் என்று பெரிய எழுத்தில் கன்னடத்திலும், HIGH COURT OF KARNATAKA என்று சிறிய எழுத்தில் ஆங்கிலத்திலும் இருக்கும்.

மற்ற மாநிலங்களிலும் அப்படியே!


ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தமிழ்நாடு மாநில உயர் நீதிமன்றம் என்று, 42 ஆண்டுகளாக இன்னும் பெயர் மாற்றவில்லை. MADRAS HIGH COURT என்று ஆங்கிலத்தில் மட்டும் உள்ளது. ‘மெட்ராஸ் ஹைகோர்ட்’ என்று தமிழில்கூட இல்லை. ஆங்கிலம் மட்டுமே! சரி HIGH COURT OF TAMIL NADU என்றாவது ஆங்கிலத்தில் உள்ளதா என்றால் அதுவும் இல்லை.


தவிர உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக இல்லை.பயன்மொழியாக இல்லை. உயர் நீதிமன்றத்தின் பெயர்ப் பலகையில் தமிழ்நாடு என்ற பெயர் இல்லை. தமிழ் இல்லை. ஏன் MADRAS HIGH COURT என்ற ஆங்கிலப் பெயரை மெட்ராஸ் ஹைகோர்ட் என்றுகூட தமிழில் எழுதவில்லை.


இந்த நிலையில் மத்திய அரசின் முடிவின் பெயரில் மும்பையிலும், கொல்கத்தாவிலும் குவகாத்தியிலும் நடைபெறும் அதே மாற்றம் அதே காரணத்தால், சென்னையிலும் நடக்கிறது. இதில் முதல்வர் வலியுறுத்த என்ன இருக்கிறது?

இந்த முடிவால் என்ன மாற்றம் வரப்போகிறது?

MADRAS HIGH COURT என்ற பெயரில் MADRAS என்ற ஆங்கில வார்த்தையை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக CHENNAI என்று மாற்றப்போகின்றனர். இதைச் செய்ய பச்சை மையும், இந்திய அரசு இலச்சினை ரப்பர் ஸ்டாம்பும் கொண்ட ஓர் அதிகாரியே போதுமே.MADRAS என்ற ஆறெழுத்து ஆங்கில வார்த்தையை CHENNAI என்று ஏழு எழுத்து ஆங்கில வார்த்தையாக மாற்ற மாநிலமுதல்வரின்‘வலியுறுத்தல்’ எதற்கு?


அதை ஒரு சாதனையாகவும் பெருமையாகவும் கூறிக்கொண்டு செய்தி தருவது என்ன மனோநிலை?


மும்பையிலும் கொல்கத்தாவிலும் குவகாத்தியிலும் கூட இதே மாற்றம் நடக்கிறது என்றாலும், நமது உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியைப் புறக்கணிப்பதைப்போல, அங்கெல்லாம் வங்காள மொழியும், அசாமிய மொழியும் புறக்கணிக்கப்படுவதில்லையே.


உண்மையிலேயே முதல்வர் கலைஞர் இந்த விஷயத்தில் என்ன செய்ய வேண்டும்?


கர்நாடக, கேரள உயர் நீதிமன்றங்களைப்போல... MADRAS HIGH COURT என்பதை HIGH COURT OF TAMILNADU STATE என்று ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்து, அதையே ‘தமிழ்நாடு உயர் நீதிமன்றம்’ என்று தமிழிலும் பெயர்ப்பலகையில் இடம் பெற ஆவன செய்யவேண்டும். இதுதான் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தவுள்ள இந்த நேரத்தில் செய்யவேண்டிய ஆக்கபூர்வமான பணியாக இருக்க முடியும்.

வெறுமனே MADRAS என்று இருக்கும் இடத்தில் CHENNAI என்று மாற்றுவதால் மட்டும் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.


தமிழ் உணர்வாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் ஆதங்கம் கலந்த குரல் இது.

கவனிக்க வேண்டும்.

7 comments:

Kumar said...

Mmmm...May be

But name changes makes lot of difference in certain cases

When Dhakshanamoorthy becames Karunanidhi...
When Staline becames Thalapathi
When Alzhagiri becames Anjanenjan

Uthamaputhra Purushotham said...

தமிழ் நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட ஹை கோர்ட்டுக்கள் வரவேண்டும். எனவே ‘High court of Tamil Nadu - Chennai' 'High Court of Tamil Nadu - Madurai' என்று இடம் பெறுவதே பொருத்தமாக இருக்கும். அன்றில் High Court Chennai, Tamil Nadu/ High Court Madurai, Tamil Nadu என்று இருந்தாலும் கூட ஓகே தான். அதாவது மானிலப் பெயர் கூடவே இருப்பது இன்னும் தெளிவாக்கத்தான்.

Uthamaputhra Purushotham said...

பெயர் மாற்றம் என்பதற்குச் சம்பந்தப்பட்ட துறையின் வழக்கம் என்னவோ அதைப் பின்பற்றினால் போதுமே. கோர்ட் சீல்களிலிருந்து, அனைத்துப் பேப்பர்களிலும் அடையாளப் படுத்த முறையான ஆணை தேவைதான். இதில் எல்லாம் பெயரெடுக்கப் பார்ப்பது, கோர்ட்டு வளாகத்தில் நாங்கள் தான் புதிய கழிப்பறை கட்டினோம், அதற்கு வாளி வாங்கி வைத்தோம் என்றெல்லாம் போவதைப் போன்றது தான். கருணாநிதிக்கு எதிலெல்லாம் தன் பெயரைப் பதிக்க ஆசை...

சு.செந்தில் குமரன் said...

kumar
ha ha ha
enjoyed

சு.செந்தில் குமரன் said...

uNmai uththama puthran

donvicky said...

Only one thing karunanidhi can do is this thing only.. He cant make the unemployment problem to be solved. Another thing he can do is can earn lots & lots of crores for his family. In cbe alone he has assets in 50 places. Owning all the big 5 start hotels that are coming up in his son's & daughters names.. In trichy, he owned a place nearly 2 acres near the tidel park which is gonna come up.. In Tamil Nadu if a person thinks to whom to vote im damn sure he ll not vote for DMK.. But these scoundrels ll put fake vote for them & ll try to come again.. First we have to reject the electronic voting system.. Those who think to reject the electronic voting system take voe that you gonna use form 49 for this election..i.e. not interested in voting to anyone..

சு.செந்தில் குமரன் said...

accepted vicky

Post a Comment