Thursday, February 11, 2010

# அஜித் - ஜெயராம் - ப.சிதம்பரம் - கலைஞர் :- தமிழர்களோடு ஒரு விளையாட்டு!





அண்மையில் டெல்லியில் பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார், மத்திய உள்துறை அமைச்சரும் தமிழருமான மன்னிக்கவும் தமிழ்நாட்டில் பிறந்தவருமான ப.சிதம்பரம்.
நிருபர்கள் சரமாரியாக ஆங்கிலத்தில் கேள்வி கேட்க, தன் தாய்மொழி(?!)யான ஆங்கிலத்தில் தானும் சரமாரியாக பதில்களை வீசுகிறார் அமைச்சர் ப.சிதம்பரம். இடையில் தமிழ் நிருபர்கள் தமிழில் கேள்வி கேட்க... சிவகங்கைச் சீமையில் பிறந்த ப.சிதம்பரத்துக்கு எரிச்சலோ எரிச்சல்! ‘‘தமிழில் கேட்காதீர்கள்; ஆங்கிலத்தில் கேளுங்கள்’’ என்று முகத்தில் அடித்தாற்போல சொல்கிறார்.

பின்பு சுதாரித்துக் கொண்டு ‘‘தமிழில் கேட்டால் மற்றவர்களுக்குப் புரியாது அல்லவா? அதனால்தான் சொன்னேன்’’ என்று சமாளித்தார்.

அதே நேரம் இந்தியில் சில நிருபர்கள் கேள்வி கேட்ட போது, தனது உதவியாளர்களின் உதவியோடு பொறுப்பான ‘இந்தி’யனாக அதற்கு மட்டும் பதில் சொல்லியிருக்கிறார். ‘‘இந்தியில் கேட்டால் மற்ற எல்லோருக்கும் புரியாது. ஆங்கிலத்திலேயே கேளுங்கள்’’ என்று முகத்தில் அடித்தார் போலச் சொல்லாவிட்டால் கூடப் பரவாயில்லை. மென்மையாகக் கூட மறுக்கவில்லை ப.சிதம்பரம்.

இது பற்றி தமிழக முதல்வர் கலைஞர் கூட ஒரு கேள்வி பதிலில், ‘‘பல்வேறு மொழி பேசுபவரும் இருக்கிற நிலையில் எல்லோருக்கும் தமிழ்த் தெரியாத நிலையில், பதில் புரியாமல் போக வாய்ப்பு உண்டு என்ற நிலையில், அமைச்சரின் பதில் எல்லோருக்கும் கட்டாயம் புரிய வேண்டும் என்ற நிலையில் சிதம்பரம் இருந்த நிலையில்...’’ என்ற ரீதியில் வெண்டைக்காயில் விளக்கெண்ணெய் ஊற்றி செக்காட்டியில் போடு ஆட்டிய கதையாக‌ ,பதில் சொல்லி ப.சிதம்பரத்தின் செயலை நியாயப்படுத்தியிருந்தார்.

பொதுவாக உள்ளூர் விவகாரங்களைக் கடந்த, நாடு தழுவிய பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பல்வேறு மொழிக்காரர்களும் வருவார்கள். பேட்டி தருபவருக்கு எந்த மொழிகள் தெரியுமோ அந்த மொழிகளில் எல்லாம் கேள்விகள் வரும்.

அதற்கான காரணங்கள் இரண்டு

முதல் காரணம்: கேள்வி கேட்பவர் யாராக இருந்தாலும் அவர் தன் தாய்மொழியில் கேள்வி கேட்டுப் பதில் பெறும்போது அதை சரியான முறையில் மக்களிடம் கொண்டு செல்ல முடியும்.

இரண்டாவது காரணம்: ஒரு பத்திரிகையாளர் கேட்கும் கேள்வி எல்லாப் பத்திரிகையாளர்களும் காப்பியடிப்பதற்காக அல்ல. தனது பத்திரிகைகளுக்கான சிறப்புப் பகுதிக்காகவும் அது இருக்கலாம். இது போன்ற சமயங்களில் மொழி ஒரு ரகசிய ஆயுதம்!
இதைப் பயன்படுத்துவது பத்திரிகையாளர்களின் உரிமை. மொழி தெரியும்போது பதில் சொல்வது பிரமுகரின் கடமை. ‘‘எல்லோருக்கும் புரியாது’’ என்ற காரணம் சொல்லி இந்தியிலும் பதில் சொல்ல மறுத்து ‘‘ஆங்கிலத்தில் மட்டும் கேளுங்கள்’’ என்று ப.சிதம்பரம் சொல்லி இருந்தால் அவருடைய நோக்கத்தை நாமும் கூட ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால், தமிழை மறுத்து, இந்திக்கு மட்டும் ஒழுங்காகப் பதில் சொல்ல முடியாத நிலையிலும் உதவியாளரின் உதவியோடு தட்டுத்தடுமாறி பதில் சொல்லியிருக்கிறார் சிதம்பரம் என்றால், அது அங்குள்ள தமிழ் பத்திரிகையாளர்களுக்கு எவ்வளவு அவமானம்?

பொதுவாக சென்னை போன்ற பெரிய நகரங்களின் அரசியல் மற்றும் பன்மொழித் திரைப்பட விழாக்களில் மற்ற மொழிப் பிரபலங்கள் வரும்போது அவர்களிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும் போது ஆங்கிலத்திலோ, அல்லது தமிழ் தெரிந்தால் தமிழிலோ பேசிக்கொண்டிருப்பார்கள். திடீரென்று ஒரு நிருபர் சம்மந்தப்பட்ட பிரபலத்தின் தாய் மொழியில் ஒரு கேள்வி கேட்டால் அந்த பிரபலத்தின் முகம் ஆயிரம் கோடிச் சூரியனாக பிரகாசிப்பதை பார்த்திருக்கிறோம்.

உடனே அந்த கேள்விக்கு அதே தனது தாய் மொழியில் அந்தப் பிரபலம் முன்னிலும் உற்சாகமாக, ஆர்வமாக, விளக்கமாகப் பதில் சொல்வார். உடனே, மற்றப் பத்திரிகையாளர்கள் விவரம் அறிய அந்த பத்திரிகையாளரைத் தொங்குவார்கள். அதை அந்தப் பிரபலங்கள் உள்ளுக்குள் பெருமையாக ரசிப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். அவர்களுக்கெல்லாம் இல்லாத ‘பெருந்தன்மை’ ப.சிதம்பரத்துக்கு இருப்பதாக, யாரும் விளையாட்டுக்குக் கூட விபரீதமாக தயவு செய்து வாதாட வேண்டாம்.

இப்படியெல்லாம் தமிழை இழிவு செய்வதன் மூலம் ராஜ விசுவாசம் காட்டி பலன் பெறலாம் என்பது ப.சிதம்பரத்தின் ‘தாழ்மையான’ அபிப்ராயமாக இருக்கலாம்.

ஆனால், ஒரு காலத்தில் தன் நண்பரோடு சேர்ந்து ‘இலக்கிய சிந்தனை’ அமைப்பை ஏற்படுத்தி நடத்தி தனக்கு தமிழ் பற்று இருப்பதாக காட்டிக் கொண்ட ப.சிதம்பரம், இன்று சுயலாபத்துக்கென்று யாரையோ திருப்திப்படுத்த இவ்வளவு தூரம் இறங்கிப்போவதும் கிறங்கிப் போவதும் என்ன மாதிரி சிந்தனையோ?


சிவகங்கையிலிருந்து அவருக்கு ஓட்டுப்போட்டு டெல்லிக்கு அனுப்பிவர்கள் ஆங்கிலமும், இந்தியும் தெரியாதவர்கள். தமிழ்தான் தெரிந்தவர்கள் என்ற சிந்தனையை அவருக்கு யார் ஏற்படுத்துவது? இதைக் கண்டிக்க வேண்டிய முத்‘தமிழ்’ அறிஞரும், மூத்த பத்திரிகையாளருமான கலைஞர் வலியப்போய் பூசி மெழுகுகிறார் என்றால் என்னவென்று சொல்வது?

நடிகர் ஜெயராம் சமாச்சாரம் முற்றிலும் வேறு.

தமிழ் சினிமாவில் மலையாளப் பெண்களை, அவர்களது உடையை, பேச்சை கிளுகிளுப்பாகப் பயன்படுத்துவது உண்டு. மறுக்கவில்லை. ஆனால், அதற்கும் முன்பிருந்தே மலையாள சினிமாக்களில் தமிழ், தமிழன், தமிழகம் போன்றவற்றைப் பற்றி கேவலமாக சித்தரித்து பலப்பல படங்கள் வந்துள்ளன.


ஒரு மலையாளப் படத்தில் துபாயில் உள்ள உயரமான ஒரு கட்டிடத்தைப் பார்த்து மோகன்லால் சொல்லும் வசனம் ‘‘அடேயப்பா... எவ்வளவு உயரமான கட்டிடம்... எல்.ஐ.சி. கட்டிடம் 14 மாடி இருக்குன்னு பீத்திக்கிற பாண்டனுங்க (தமிழனுங்க) இதைப் பார்த்தா கும்பல் கும்பலா தூக்குப் போட்டு தொங்கிடுவானுங்க’’ என்பார்.

மலையாளிகளின் பொது நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கண்ணகி நாடகமும் வேண்டும், ஆனால் அதே நேரம் தமிழைக் கேவலப்படுத்தவும் வேண்டும்.


அப்படி மலையாளிகளைச் சிரிக்க வைப்பதாக ஜெயராம் உளறியதுதான் ‘கறுத்து தடித்த எருமை போன்ற தமிழச்சி’ என்ற வார்த்தை.

‘‘கறுத்த தடித்த...’’ என்ற வார்த்தை கிண்டலாகவும் பயன்படுத்தலாம். ‘‘அடையாளத்துக்காகச் சொன்னேன்’’ என்று சொல்லி தப்பித்துக் கொள்ளவும் செய்யலாம். எருமை என்ற வார்த்தைக் கூட அந்த வேலைக்கார பெண் தீர்மானிக்க வேண்டிய விஷயம். ‘‘என் முதலாளி என்னைப் பற்றிச் சொன்னார். பரவாயில்லை. நான் தவறாக நினைக்கவில்லை’’ என்று ஜெயராம் வீட்டு வேலைக்காரப் பெண் கூறிவிட்டால் போதும், மூன்றாம் மனிதர் தலையிட முடியாது.

ஆனால், அந்த இடத்தில் ‘தமிழச்சி’ என்ற வார்த்தையை ஜெயராம் பயன்படுத்தியது நிச்சயமாக நன்றிகெட்ட இனத்துவேஷம்; மொழித் துவேஷம்; நிலத் துவேஷம்தான். மலையாளிகளைக் குஷிப்படுத்தி ஜெயராம் பேசிய அற்பத்தனமான பேச்சு அது. சம்பந்ப்பட்ட வேலைக்காரப் பெண்ணே அதை மன்னித்தாலும், எல்லோரும் மன்னிக்கத் தேவையில்லை. அது தண்டைனைக்குரிய குற்றம்தான்.


ஆனால், தமிழ்நாட்டில் தமிழனை யார் என்ன சொன்னாலும் தமிழனை அடக்கி முடக்கி, தமிழனை இழிவுபடுத்துகிறவர்களைக் காக்கிற தாயாக விளங்கும் ‘தமிழ் இனத் தலைவர்’ கலைஞர் வழக்கம் போல ஜெயராமுக்கு ஆதரவாக மறப்போம்; மன்னிப்போம்’’ என்கிறார். ஜெயராம் மீது போடப்பட்ட வழக்கையும் வாபஸ் பெறச் சொல்லி அழுத்தம் கொடுக்கப்பட, அதுவும் வாபஸ் ஆகியுள்ளது.

ஆனால், ஒரு நியாயமான காரணத்திற்காக உணர்ச்சி வசப்பட்டு ஜெயராம் வீட்டைத் தாக்கி, இனி தமிழனைக் கேலி செய்தால் உதை விழுமோ என்ற அச்சத்தை வெற்றிகரமாக ஏற்படுத்திய ‘நாம் தமிழர் இயக்க’த் தொண்டர்களை மட்டும் மறக்கவோ மன்னிக்கவோ ‘தமிழினத் தலைவரின் உள்ளத்தில் இடம் இல்லை.

இதையெல்லாம் பார்த்துதான் அஜித்திற்கு அந்தத் தைரியம் வந்திருக்க வேண்டும்.

பிப்ரவரி 6&ம் தேதி திரையுலகம் கலைஞருக்கு நடத்திய பாராட்டு விழாவில் பேசிய அஜித், ‘‘இந்த விழாவுக்கு நான் விரும்பி வந்திருக்கிறேன். ஆனால், மற்ற சில விஷயங்களுக்கு எங்களை வற்புறுத்தி அழைக்கின்றனர். மிரட்டுகின்றனர். காவிரி பிரச்னைக்கு நாங்கள் போராடாவிட்டால் என்ன போச்சு?அதையெல்லாம் முதல்வராகிய நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் (பார்க்கலையே அஜித்)’’ என்று பேசியுள்ளார்.

அதாவது தமிழன் வியர்வையில் பூக்கும் பணத்துளிகள் மட்டும் தன் வீட்டு உண்டியலைப் பிளந்து கொண்டு உள்ளே கொட்டவேண்டும். ஆனால் அவனுக்கு ஒரு கஷ்டம் ஒரு பிரச்னை ஓர் அவமானம் என்றால் தான் எதையும் செய்யமாட்டேன். உதவமாட்டேன். ஒரு துளி வியர்வையும் சிந்தமாட்டேன். அதற்கு எல்லாம் கூப்பிடவும் கூடாது’’ என்ற தொனி அஜித்தின் பேச்சில் இருந்தது.
உண்மையில் அஜித்தின் பேச்சு ஜெயராமின் பேச்சை விட ஆபத்தான பேச்சு.


ஜெயராம் ஒரு தவறு செய்துவிட்டார். மலையாள சேனலில் தமிழ்ப் பெண்களைக் கேவலப்படுத்தியதற்குப் பதில் கலைஞர் முன்னிலையில் தமிழை, தமிழர்களை, தமிழ் பெண்களை இன்னும் எவ்வளவு கேவலப்படுத்தியிருந்தாலும் அவருக்கு பிரச்னை வந்திருக்காது.

இப்படியாக தமிழை வைத்துப் பிழைத்தவர்கள் தமிழை வைத்து ஜெயித்தவர்கள், தமிழை வைத்து சம்பாதித்தவர்கள் தமிழனின் பணத்தை, பொருளை தமிழனின் எதிர்காலத்தை தமிழனின் அடுத்தடுத்த சந்ததிகளின் வாழ்வைச் சுரண்டியவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் தமிழோடும் தமிழனோடும் அராஜக விளையாட்டு விளையாட,

தமிழனென்று சொல்லடா!
தலை குனிந்து நில்லடா!!

10 comments:

மதுரை சரவணன் said...

ungkal aathaangkam purikirathu. thamilanaay piranthu viddom poruththu povom. ithu kuniya kuniya kottuvathaaka en kollavendum? nam purithal theriyum anru avamaana patuvar.

பெரிய இவன் said...

நீ தமிழர்களுக்கு உன்னுடைய சொத்த எழுதி கொடுத்தியா...அவனவன் சம்பாதிப்பது அவனவன் குடும்பத்துக்கு. பெரிய புடுங்கி மாதிரி பேசாதே...

சு.செந்தில் குமரன் said...

நன்றி சரவணன்.
நல்லது நடக்கட்டும்
உங்களுக்கு கீழ ஒருத்தன் உளறியிருக்கான் பாருங்க . அவன எதால அடிக்கலாம் .
அல்லது என்ன சொல்லி திட்டலாம் . ஒரு பெரிய கெட்ட வார்த்தை சொல்லி
திட்டலாமா? அந்த வார்த்தைக்கான் க்ளூ அவன் பேர்லயே இருக்கு பாருங்க‌

சு.செந்தில் குமரன் said...

அடேய் காளி ..
சொத்து எழுதித் தரத் தேவையில்லை .
உப்புப் போட்டு சோறு தின்னா போதும் .
நீ திங்கற விசயத்துல பன்னியோட சண்டை போடுறவன் போல இருக்கு.
அதே மாதிரி கருத்து விசயத்துல மனுஷங்களோட சண்டை போட வராத .

நீ கெட்ட பயலா? தெரியல.
ஆனா __________ பய .

Kumar said...

Mr Kali, the film industry gets more benefits from the Govt. I am not sure if the other industry get this much benefit.

Tax free for the film with tamil name, subsidy for the low budget film, no upper limit for ticket price, free shooting in public place, reward, award, etc...

Please note, All the above are public money (our money). So obviously the actors must have the responsibility to support the state government and the interest of tamil.

Otherwise, they can ignore the benefits that govt. offers

கோவி.கண்ணன் said...

//சிவகங்கையிலிருந்து அவருக்கு ஓட்டுப்போட்டு டெல்லிக்கு அனுப்பிவர்கள் ஆங்கிலமும், இந்தியும் தெரியாதவர்கள். தமிழ்தான் தெரிந்தவர்கள் என்ற சிந்தனையை அவருக்கு யார் ஏற்படுத்துவது?//

:) சிவகங்கையில் அவருக்கு ஓட்டுப் போடவில்லை, ஓட்டுப் பெட்டியே போடப் பட்டதாகத்தான் தகவல்கள் கசிகின்றன.

சு.செந்தில் குமரன் said...

thank u kumar

சு.செந்தில் குமரன் said...

உண்மை கண்ணன்
ஆனால் நான் அதையும் மீறி
'அப்புச்சி' என்று நம்பி ஓட்டுப் போட்ட
'மரப்பாச்சி'களைப் பற்றிதான் அங்கு பேசியுள்ளேன்

செந்தில் நாதன் Senthil Nathan said...

கண்ணன் சொன்னது (ஓட்டுப் பெட்டியே போடப் பட்டதாக) உண்மை.

ஆனா செந்தில், மரப்பாச்சி என்ற வார்த்தை கொஞ்சம் எல்லை மீறுவதாக படுது.

நாங்க மரப்பாச்சி-னா நீங்க? வார்த்தை விளையாட்டுகள், கருத்து சரியாக இருக்குற வரை தான்....

சு.செந்தில் குமரன் said...

திருப்பாச்சி !
போதுமா?
தவறை ஒத்துக்கொள்ளாமல் இவ்வளவு கோவமா?
ரொம்பக் கஷ்டம்
எப்படி சரிப்படும்?
மரப்பாச்சியே எல்லை மீறலாக உங்களுக்குப் பட்டால்
உங்களுக்கு எல்லைகளைப் பற்றித் தெரியவில்லை என்று பொருள்

Post a Comment