Thursday, May 14, 2009

கமலஹாசனும் நரேஷ்குப்தாவும் என்ன செய்திருக்க வேண்டும்?





மே 13ந்தேதி வாக்குப் ப‌திவு தின‌த்த‌ன்று , தின‌த்த‌ந்தி நாளித‌ழில் க‌ட்ட‌ம் க‌ட்டி வ‌ரும் அள‌வுக்கு க‌ம‌ல்ஹாச‌ன் பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தார்.ஜ‌ன‌னாய‌க‌த்தில் த‌னக்கு உள்ள‌ ந‌ம்பிக்கை.... ஓட்டுப் போடுவ‌த‌ன் அவ‌சிய‌ம் குறித்து த‌ன‌து ர‌சிக‌ர்க‌ளுக்குக் கூட‌ அரிவவுறுத்தும் த‌ன‌து சுபாவ‌ம் குறித்து எல்லாம் கமல் குறிப்பிட்டிருந்த அந்த பேட்டியின் சாராம்சம் என்னவென்றால்...
க‌ம‌ல‌ஹாச‌னுக்கு இந்த முறை ஓட்டு இல்லை. அதாவ‌து வாக்காள‌ர் ப‌ட்டிய‌லில் அவ‌ர‌து பெய‌ர் இட‌ம் பெற‌வில்லை. க‌ம‌ல் அது குறித்து கார‌ண‌ம் கேட்ட‌போது , "ப‌ரிசோத‌னைக்கு நாங்க‌ள் வந்த‌போது வீட்டில் உங்க‌ளைப் பார்க்க‌ முடிய‌வில்லை.அத‌னால் உங்க‌ளுக்கு ஓட்டு இல்லை"என்று கூறிவிட்டார்க‌ளாம்.என‌க்கே ஓட்டு இல்லை என்றால் சாத‌ர‌ண‌ ம‌க்க‌ளின் நிலை என்ன‌ என்று க‌ம‌ல் கேள்வி எழுப்பி இருந்தார்.
இது குறித்து ப‌தில் சொன்ன‌ ந‌ரேஷ் குப்தா, க‌ம‌ல‌ஹாச‌னுக்கு எக்மோரிலேயோ எங்கேயோ ஓட்டு உள்ள‌து.அஙே போய் அவ‌ர் போட்டு இருக்க‌லாம் என்று ப‌தில் சொன்னார்.
எந்த‌ குள‌றுப‌டி ந‌ட‌ன்ஹ்டாலும் தேர்த‌ல் க‌மிஷ‌னை தொட‌ர்பு கொள்ள‌லாம் என்று கூறியிருனந்த‌ தேர்த‌ல் க‌மிஷ‌ன் அத‌ற்கான‌ தொலை பேசி எண்க‌ளையும் கொடுத்திருந்த‌து.
வாக்க‌ளிப்ப‌த‌ன் அவ‌சிய‌த்தை உண்மையாக‌ அறிந்த‌வ‌ராக கூறும் க‌ம‌ல் நினைத்தால் ந‌ரேஷ் குப்தாவுட‌ன் கூட‌ எளிதாக‌ பேசி இருக்க முடியும்முடியும் .அப்ப‌டி பேசி , ந‌ரெஷ் குப்தா சொன்ன‌ப‌டி எக்மோருக்கு போய் தான் எப்ப‌டி ஓட்டுப் போடப் போகிறேன் என்பதை என்ப‌தை அவ‌ர் அன்று காலை பேட்டியாக‌ கொடுத்து இருந்தால், அது பாராட்டுக்குரிய‌ விஷ‌ய‌மாக‌ இருந்திருக்கும்.
அது கமலின் அதே சூழலில் இருந்த மற்ற வாக்காளர்களுக்கும் ஒரு உந்து சக்தியாக -பாடமாக இருந்திருக்கும் .எப்படியாவது ஓடு போடப் போராட வேண்டும் என்ற மன நிலையை ஏற்படுத்தி இருக்கும் . ஆனால் க‌ம‌லின் க‌ழிவிர‌க்க‌ப் பேட்டியின் ப‌ல‌ன்? " ந‌ம‌க்கு ம‌ட்டும் இந்த‌ நிலைமை இல்ல‌ப்பா... க‌ம‌லுக்கே இதே நிலைமைதான் , அவ‌ராலேயே முடிய‌ல‌. நாம‌ ம‌ட்டும் என்ன‌ செய்ய‌ முடியும் என்று புல‌ம்பும் நிலையையே ம‌க்க‌ளிட‌ம் உருவாக்கிய‌தை க‌ண்கூடாக‌ப் பார்க்க‌ முடிந்த‌து.
"ஆமா. பெரிய பெரிய அரசியல் தலைவர்களுக்கே அக்கறை இல்ல.‌க‌ம‌லிட‌ம் இந்த‌ அள‌வு எதிர்பார்க்க‌ வேண்டுமா" என்றூ கேட்கலாம் .கமல் ஒன்றும் சாதரண‌ நடிகர் அல்லவே.‌ த‌மிழ் ந‌டிக‌ர்க‌ளிலேயே அதிக‌ ச‌மூக‌ அக்கறையுள்ள‌ ஒரு சில‌ரில் ஒருவ‌ராக‌ வெளிப் ப‌டுத்த‌ப் ப‌டும் க‌ம‌லிட‌ம் இதை எதிர்பார்ப்ப‌தில் த‌வ‌று இல்லையே.
ச‌ரி...க‌ம‌ல‌ஹாச‌னையே க‌ண்டு பிடிக்க‌ முடியாத‌ ‍ அவ‌ர‌து பெய‌ரையே வாகாளர் ப‌ட்டிய‌லில் சேர்க்க‌ முடியாத‌ 'க‌ட‌மை உண‌ர்ச்சி மிக்க‌' ந‌ம‌து தேர்த‌ல் அலுவ‌ல‌ர்க‌ள்,வாட‌கை வீட்டில் குடியிருந்த‌ப‌டி வ‌ருடத்துக்கு இர‌ண்டு முறை வீடு மாறும் சாத‌ர‌ண‌ ம‌க்க‌ளுக்கு எப்ப‌டி உண்மையாக‌ இருக்க‌ப் போகிறார்க‌ள்? "நாங்க‌ள் போன‌போது க‌ம‌ல் வீட்டில் இல்லாத‌தால் அவ‌ர‌து பெய‌ரை அங இட‌ம் பெற‌ச் செய்ய‌ முடிய‌வில்லை "என்று கூறிய‌ அதிகாரியை நரேஷ் குப்தா க‌ண்டித்திருக்க‌ வேண்டாமா?
அதோடு முடிந்த‌தா? " வாக்காள‌ர் ப‌ட்டிய‌லில் தங்க‌ள் பெய‌ர் உள்ள‌தா என்று ம‌க்கள் ச‌ரி பார்க்காத‌ அலட்சியத்தின் விளைவுதன் இந்த‌ நிலை என்று ம‌க்க‌ளுக்கு அறிவுரைக‌ள் வேறு.
அர‌சிய‌ல்வாதிகள் ப‌ண்ணுகிற‌ கூத்தில் ஓட்டுப் போடுவ‌தே வெட்டி வேலை என்று ம‌க்கள் விர‌க்திய‌டைகிற‌ சூழ‌லில் ஆர்வ‌த்தோடு ஓடிப் போய் வாக்காள‌‌ர் ப‌ட்டிய‌லை ச‌ரி பார்க்கிற நிலையில‌ ம‌க்க‌ள் இருக்கிறார்க‌ள்?
ஓரிர‌ண்டு பெய‌ர் விட்டுப் போவ‌தே பெரிய‌ த‌வ‌றுதான் . அப்படி இருக்க‌ ப‌ல‌ ஊர்க‌ளில் கும்ப‌ல் கும்ப‌லாக‌ 200 ... 300 ...பெய‌ர் விட்டுப் போன‌து கூட‌ ம‌க்க‌ளின் அல‌ட்சிய‌ம் தான் என்று நரேஷ் குப்தா சொல்வாரா‌?
வாக்காள‌ர் ப‌ட்டியலில் த‌ங்க‌ள் பெய‌ர் இருக்கிறதா‌ என்று ம‌க்க‌ள்தான் க‌வ‌னித்து கொள்ள‌ வேண்டும் என்ற வாத‌மே த‌வறான‌து . அது ச‌ம்ப‌ளம் வாங்கிக் கொண்டு வேலை செய்கிற‌ அதிகாரிக‌ள் செய்ய‌ வேண்டும் . முறைப்ப‌டி அத‌ற்கு இனி தேர்த‌ல் க‌மிஷ‌ன‌ர்க‌ள் ஏற்பாடு செய்ய‌ட்டும் .
தேர்த‌ல் க‌மிஷ‌ன‌ர் நவீன் சாவ்லலா ம‌ட்டும் ஓட்டு இல்லாவிட்டாலும் ஓட்டுப் போட்டுவிட்டுப் போவார்.ஆனால் அதிகாரிக‌ள் செய்கிற‌ த‌வ‌றுக‌ளுக்காக‌ ம‌க்க‌ள் ம‌ட்டும் அடையாள‌ அட்டை இருந்தும் ஓட்டு போடாம‌ல் புல‌ம்பி விட்டுப் போய்விட‌ வேன்டுமா‌?
எந்த‌ ஊர் நியாய‌ம் இது?






2 comments:

BADRI krish said...

once cho was vigorous in writting like this ..now mr.senthil doing in a proper way..
keep it up...

XLmoron said...

ஹ ஹா .... இதற்க்கு மேல் தான் இவர் சோவை திட்டி ஒரு பதிவு போட்டிருந்ததை படித்து விட்டு இங்கு வந்தால் "நீங்கள் சோ மாதிரி அருமையாக எழுதறீங்க", என்று ஒருவர் இவருக்கு பின்னூட்டம் போட்டு இருக்கிறார். ஒரே நகைச்சுவை போங்க..!

Post a Comment