Saturday, May 16, 2009

ஏன் தோல்வி? எப்ப‌டி வெற்றி??

தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் பெற்றி தோல்விக்கான காரண காரியங்களைச் சொல்வது ஒன்றும் பெரிய விசயமில்லை என்பது உண்மைதான்.ஆனால் சொல்ல வேண்டியது அவசியம் என்பதும் உண்மைதான்.
அ.தி.மு.க அணி தோற்கக் காரணங்கள்:**************************
1)இன நலம் , சமூக நலம், பொது நலம் இல்லாத ...ஆக்க பூர்வமான சுய நலம் கூடப் பார்க்கத் தெரியாத ...தற்காலிக அற்ப சந்தோஷம் தருகிற சில நூறு ருபாய்த் தாள்களில் தன்னைத் தொலைத்து விடுகிற ஒரு தரப்பு மக்களின்வெட்கங் கெட்ட நாலந்தர சுய நலம்.
2)முடிவுகளைத் தீர்மானிக்கிற மக்களின் மன நிலையைக் கூட கடைசி நேரத்தில் மாற்றுகிற ... நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட கலைஞர் கருணாநிதியின் தேர்தல் காலத் தந்திரங்க‌ளும் வாக்குப் பதிவு நேரச் செயல்பாடுகளும்.
3)ரொம்ப‌ கால‌மாக‌ ஈழ‌ ம‌க்க‌ளுக்கு எதிராக‌வே செய‌ல் ப‌ட்டுவிட்டு க‌டைசி நேர‌த்தில் த‌னி ஈழ‌ ஆதர‌வை மிக‌வும் உர‌த்து முழ‌ங்கிய‌தால் ஜெயலலிதா மீது ம‌க்களுக்கு ஏற்ப‌ட்ட‌ ந‌ம்ப‌க‌மின்மை.(ம‌ற்ற‌ப‌டி ஈழ‌ ஆத‌ர‌வு அலையே இல்லை என்ப‌தை ஒத்துக் கொள்ள‌ முடியாது)
4)கூட்ட‌ணிக் க‌ட்சித் த‌லைவ‌ர்க‌ளோடு ஒரு மேடையில் கூட‌ ஜெய‌ல‌லிதா ஒன்றாக‌த் தோன்றி ம‌க்க‌ளுக்கு ம‌க்க‌ள் ம‌ன‌தில் ஒரு இண‌க்க‌ உண‌ர்வை ஏற்ப‌டுத்தாத‌து.
5)வைகோவை ஜெய‌ல‌லிதா க‌டைசி வ‌ரை முழுமையாக‌ அங்கீக‌ரித்து ஈழ‌ ஆத‌ர‌வுக் குர‌லை ம‌க்க‌ள் மக்க‌ள் ந‌ம்பும் வ‌கையில் முழுமைப் ப‌டுத்திக் கொள்ளாத‌து.
6)காங்கிர‌சிட‌ம் பொட்டி வாங்கிக் கொண்ட விஜயகாந்த் அதற்குப் பிரதி பலனாக‌ தீவிரப் பிர‌ச்சார‌ம் செய்து ஆளுங்க‌ட்சிக்கு எதிரான‌ ம‌ன‌ நிலையுள்ள மக்களின் வாக்குக‌ளில் ஒரு ப‌குதியைப் பிரித்து வீணாக்கிய‌து.(உதார‌ண‌ம் வைகோவின் தோல்வி)
7)க‌டைசி தின‌ம் வ‌ரை பா.ம‌.க‌. ம‌த்திய‌ ஆட்சியில் அங்க‌ம் வ‌கித்த‌தை ம‌க்க‌ள் அவ்வ‌ள‌வாக‌ ர‌சிக்காத‌து.
8)வாராது வ‌ந்த‌ மாம‌ணி போல‌ கோர்ட் அனும‌தி வ‌ழ‌ங்கிய‌ ஈழ‌ ஆத‌ர‌வு வீடியோக்க‌ளின் ஒளிப‌ர‌ப்பை ம‌க்க‌ள் டி.வி.ம‌ட்டும் ஒளிப‌ர‌ப்ப‌ ஜெயா‌ டி.வி. தானும் அதைச் செய்து ம‌க்க‌ள் மத்தியில் உண‌ர்வு அலையை எழுப்ப‌த் த‌வ‌றிய‌து. அத‌ன் ஒளிப‌ர‌ப்பை காவ‌ல்துறை த‌டுத்த‌ போது ஜெயலலிதா அதை மக்கள் மன்றத்துக்கு வலுவோடு கொண்டு போகத் தவறியது.
9)ஓட்டுப் ப‌திவுக்கு முன்பே ,ஜெயித்து முடித்துவிட்ட‌ மித‌ப்பில் ஜெய‌ல‌லிதா காட்டிய கடைசி கட்ட ‌அல‌ட்சிய‌ம்.தொண்டர்க‌ளும் கடைசி நேர‌த்தில் ஓய்ந்து விட்ட‌து
10)தேர்த‌ல் பிர‌ச்சார‌ ச‌ம‌ய‌த்தில் கூட‌ ஒழுங்காக‌ ப‌ண‌ம் செல‌வழிக்காம‌ல் தொண்ட‌ர்க‌ளை அதிமுக‌ க‌றும்புள்ளிக‌ள் காய‌ விட்ட‌து.
எப்ப‌டி வென்றது தி.மு.க‌. அணி??************************
என் பணம் பண‌ம் ...உன் ப‌ண‌ம் ப‌ண‌ம் ...உன் ப‌ணம் , என் ப‌ண‌ம்! உன் ப‌ணம் ப‌ண‌ம் ...என் ப‌ணம் ப‌ணம் ...என் ப‌ணம்,என் ப‌ண‌ம்!(பொறூமையாக‌ ஊன்றிப் ப‌டித்தால் உள்ளர்த்த‌ம் புரியும்)

12 comments:

siva said...

இன்னொன்னு விட்டுட்டியே.... இந்த மாதிரி பதிவு எழுதி எழுதி விழ இருந்த ஒன்னு ரெண்டு ஓட்டையும் கெடுத்தது....

இப்படி அற்பமான காரணங்களை கூறுவது உங்களை நீங்களே ஏமாற்றுவதற்கு சமம்.

உனக்கு மூளைன்னு ஏதாவது இருந்தா இப்படி எழுதுவியா? திமுக கூட்டணி வென்றதற்கு காரணம் பணம் இல்லை. ஈழ ஆதரவாளர்களின் அருவருப்பான பேச்சு. அதை கேட்டு தான் எல்லாம் மாறிச்சு. பணம் தான் திமுகவின் வெற்றிக்கு காரணம் என்றால் அதிமுக கூட்டணி 12 இடங்களில் வென்றது எப்படி? நிறைய இடங்களில் இழுபறி நிலவியது எப்படி?

ஜெ. வழக்கம் போல திமுகவின் தில்லுமுல்லு, தேர்தல் கமிஷன் ஓரவஞ்சனை என்று பழிபோட்டுவிட்டார். (இவங்க திருந்தவே மாட்டாங்களா? அங்கே பாருங்க பிஜேபி கௌரவமா தோல்வியை ஒத்துக்கிட்டாங்க. இந்தம்மா என்னடான்னா பணம், அது இதுன்னு உள்ளர்றாங்க...)

சீமான் பேசிய பேச்சு ரொம்ப ஓவர். ஒரு சாம்பிள்: "காங்கிரசுக்கு ஓட்டு போட்டீங்கன்ன நீங்க ஒரு அப்பனுக்கு பொறந்தவங்க இல்ல.... " இது மாதிரி தரங்கெட்ட தனமா பேசினா எப்படி மக்கள் ஒட்டுபோடுவாங்க?

ஈழத் தமிழர்களுக்கான தமிழ் நாட்டு மக்கள் ஆதரவு என்பது தார்மீக ரீதியிலானது. அது மக்களாக விரும்பி அளிக்கக்கூடியது. அதை அவர்கள் கழுத்தில் கத்தி வைத்தும், ஒழுக்கங்கெட்ட சினிமாகாரர்கள் மூலம் தகாத வார்த்தைகள் கோரியும் கேட்டால் எந்த தமிழன் அளிப்பான்? அதுமட்டுமல்லாது, இது போன்ற பல தளங்களில் வந்து தரங்கெட்ட வார்த்தைகளை பின்னூட்டமாக இட்டு, அதிமுக கூட்டணிக்கு விழ இருந்த ஒரு சில ஓட்டுக்களையும் இங்குள்ள சில சோம்பேறிகள் கெடுத்தார்கள்.

இது தான் உண்மை.

இதையெல்லாம் ஏற்றுக்கொல்லாமால் பணம், பணம் என்று உலரிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை நண்பரே....

ஈழ நண்பன்

XLmoron said...

//காரணங்கள்:**************************
1)இன நலம் , சமூக நலம், பொது நலம் இல்லாத ...ஆக்க பூர்வமான சுய நலம் கூடப் பார்க்கத் தெரியாத ...தற்காலிக அற்ப சந்தோஷம் தருகிற சில நூறு ருபாய்த் தாள்களில் தன்னைத் தொலைத்து விடுகிற ஒரு தரப்பு மக்களின்வெட்கங் கெட்ட நாலந்தர சுய நலம்.//

மக்களை ரொம்பவும் கேவலமாக எடை போட்டு வெச்சு இருக்கீங்க நண்பரே..! மக்கள் எப்போதும் தெளிவான, சரியான முடிவு எடுப்பார்கள் என்பது வரலாறு. அது உங்களை போன்ற self-proclaimed அறிவுஜீவிகளுக்கு தெரியாது.

su.senthil kumaran said...

கருணாநிதி போன்ற ஈழ நண்பன் சிவாவுக்கு,

பல லட்சம் மக்களை அதுவும் நம் இன மக்களை அழிக்க ஆயுதம் கொடுத்தவர்களை ஆதரிப்பதை விட சீமான் பேசியதான் அருவறூப்பு என்று நீ நினைத்தால் உன் மன நிலையை நான் சந்தேகப் படுகிறேன்.(அதே நேரம் சீமான் பேசியதை நான் ஆதரிக்கவில்லை)

12 இடங்களில் வென்றதற்கு காரணம் தமிழ் உணர்வு அதிகம் உள்ள மேற்கத்திய பிராந்தியமும் அந்த பகுதிகளின் தி.மு.க அணி வேட்பாளர்கள் அதிகப் பணம் செலவலிக்காததும் என்பது தற்குறிகளுக்குப் புரிய வாய்ப்பு இல்லை.

ஜெ.வை ஆதரிப்பது என் நோக்கம் இல்லை என்பது ஒழூங்காகப் படித்து இருந்தால் உங்களுக்குப் புரிந்திருக்கும்

ஒரு இனத்தின் கழுத்தில் கத்தை வைப்பதை அதற்கு இங்குஙு மேலும் கீழும் ஆள்வோர்கள் துணை போவதை இன்னொருத்தன்சொன்னல்தான் உனக்கு புரியுமா? நீ உப்பு போட்டுதான் தின்னுகிறாயா? இல்லை சாப்பிடுவது சோறே இல்லையா? அவன் எப்படி சொன்னால் என்ன? உன்னைப் போன்ற ஒழுக்க யோக்கிய சிகாமணிகள் காசுக்கு ஓட்டைவிற்கும் உலுக்கம் கெட்ட வேலையை விட அவன் மேல்.வெற்றிகொண்டானும் துரை முருகனும் பேசுவதை விடவா சீமானின் பேச்சு தரம்கெட்டதனமாக இருக்கிறது? அது மட்டும் உன் சாக்கடை ரசனைக்கு இனிக்கிறதா?

மூணு லட்சம் பேரின் மரண‌த்துக்கு துணை போனவர்களுக்கு தேர்தலில் மரண அடி கொடுப்பாயா? இல்லை தார்மீக‌ ஆதரவு ..விரும்பி அதரவு அளிப்பது என்றூ வசனம் பேசுவாயா? உனது உறவின் வீடு பற்றி எரியும்போது பக்கத்தில் ஒருவன் பல் விளக்கவில்லை என்பதைக் காரணம் காட்டி வேடிக்கை பார்ப்பாயா?

தளங்கள்தான் இவ்வளவு சுய நல சுழலிலும் உண்மையான தமிழ் உணர்வை வாழவைப்பன.அது உன்னைப் போன்ற சோறாம் போன சோம்பேறிகளுக்குப் புரியவாய்ப்பு இல்லை.த‌ன்மான‌ம் என்ற தலையே இல்லாத‌ நீ மூளை இல்லை என்று ம‌ற்றவர்க‌ளைச் சொல்ல‌க் கூடாது.

பதிவில் எழுதுகிறோம் மூகாம் தெரியாது என்ற நம்பிக்கையில் மரியாதை இல்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது . பாருங்கள் ,உங்களால் நானும் பயன்படுத்த வேண்டியாதகிவிட்டது, ஈன நண்பரே!

எல்லாம் சரி நீங்க ஓட்டுக்கு எவ்வளவு வாங்குனீங்க? அந்தக் காசுல உங்க புள்ளைங்களுக்கு ஒரு பிஸ்கட் கூட வாங்கித் தராதீங்க.அவங்களுக்கு எதுக்கு அந்தப் பாவம்?

su.senthil kumaran said...

socially wellclaimed அறிவு ஜீவி நண்பர் XLmoron அவர்களுக்கு,

அந்த வர்த்தைகளை எழுதுவதற்கு முன்பு நான் எவ்வளவு வேதனைப் பட்டேன் தெரியுமா? அதுவும் நான் எல்லோரையும் கூறவில்லை. ஒரு தரப்பு என்றுதான் கூறினேன்.உண்மை அதுதான் நண்பா.. தொடர்ந்து அவர்களைப் பிச்சைக்காரர்களாகவே தக்க வைத்துக் கொண்ட அரசியல்வாதிகள் மக்களை அப்படி ஆக்கி விட்டனர்.அந்த உண்மை விரைவில் உங்களுக்கு புரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.


தவிர எனது இரண்டாவது காரணத்தில் பெருவாரியான மக்களின் மன நிலை என்று கூறி நல்ல மக்களைக் கவுரவப் படுத்தி இருக்கிறேன்.

ம‌க்க‌ள் எப்போதும் ச‌ரியான‌ முடிவு எடுப்பார்க‌ள் என்ப‌து எல்லாம் ஒரு வித‌மான‌ க‌ண்மூடித்த‌ன‌மான முடிவு

அப்ப‌டியென்றால் 450 மீன‌வ‌ர்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்ட‌ போதும் அதைப் ப‌ற்றிக் காதிலேயே போட்டுக் கொல்லாத‌ அர‌சுக‌ளின் கூட்ட‌ணி எப்ப‌டி நாக‌ப் ப‌ட்டின‌ம் தொகுதியிலேயே ஜெயிக்கிறதூ? அந்த‌ மீன‌வ‌ர்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்ட‌து ச‌ரி என்று ந‌க‌ப் ப‌ட்டின‌ம் ம‌க்க‌ல் ச‌ரிய‌ன‌ முடிவு எடுத்து ஓட்டுப் போட்டுள்ள‌ன‌ரா?

இல‌ங்கையில் கொல்ல‌ப்ப‌டுவ‌தும் சிங்க‌ள‌க் க‌ட‌ற்ப‌டையால் கொல்ல‌ப் ப‌டும் இந்திய‌னும் ம‌லையாளியாக‌வும் தெலுங்க‌‌னாக‌வும் க‌ன்ன‌ட‌னாக‌வும் இருந்திருந்தால்,அந்த‌ந்த‌ மானில‌ங்க‌ளில் பாலாறும் தேனாறும் ஓடி இருந்தால் கூட‌ அவ‌ர்க‌ள் இப்ப‌டி ஜெயிக்க‌ விட்டிருக்க‌ மாட்டா‌ர்க‌ள்.

ஆனால் இங்கே ...?


விலைவாசி உட்ப‌ட‌ ப‌ல‌ விச‌யங்க‌ளால் உண‌வுக்கும் பிர‌ச்னை. ஈழ‌ப் பிர‌ச‌னையால் உண‌ர்வுக்கும் துரோக‌ம்.இர‌‌ண்டையும் ச‌கித்துக் கொண்டு ஓட்டுப் பொடுவ‌த‌ன் மூல‌ம் என்ன வ‌ரலாறையும் புவியிய‌லையும் இந்த‌ ம‌க்க‌ள் ப‌டைக்க‌ப் போகின்றன‌ர்.யோசியுங்க‌ள்.

க‌ண்ணியமாக‌ விவாதிக்கும் உங்க‌ள் கருத்துக்க‌ளை நான் ம‌திக்கிறேன்.

renu said...

siva & XLmoron, I like both of your views analytically, logically, shows your intellectual satire. But I wish to remind you both, this is more an emotional problem than analytical, similar supporting your mother the one genuine in a problem. Still I won't ask you to change the views, rather wait for some time, may be years, when we the remaining Tamil race in the motherland will be crushed for some good reasons as one Rajabaksha had with our EEzham brothers. But that time you won't remain to utter a word with logic.

su.senthil kumaran said...

well s(aid)et renu.salute u ! we beleive females like u to make a new generation with dignity to answer these kind of persons.

siva said...

உங்களுக்கெல்லாம் ஒரு வித மனநோய் பீடித்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.

காசு வாங்கிட்டு தான் தமிழன் ஓட்டு போட்டான்னு நீங்க எப்படி முடிவுக்கு வந்தீங்க? ஒரு சிலர் அங்கே இங்கே போட்டிருக்கலாம். அதுக்காக ஒட்டுமொத்த இனத்தையும் இப்படி கேவலமா பேசுவது தவறு.

ஈழப்பிரச்னையின் முக்கியத்துவத்தை புரிந்துக்கொள்ளாமல் தமிழர்கள் வேறு பிரச்சனைகள் பால் ஈர்க்கப்பட்டு வாக்குகளை தவறாக அளித்துவிட்டார்கள் என்று சொல். நானும் ஒத்துக்கொள்வேன். அது தான் உண்மை. அதைவிட்டுவிட்டு "தமிழன் காசு வாங்கிட்டு ஓட்டு போட்டுட்டான்" "தமிழன் காசு வாங்கிட்டு ஓட்டு போட்டுட்டான்"ன்னு திரும்ப திரும்ப சொல்றதை பார்த்தால் எரிச்சல் தான் மிஞ்சுகிறது.

என் தொகுதியில நானும் தான் ஓட்டு போட்டேன். எவனும் காசு கொடுக்க வரலியே...

சரி, இதுவே ஜெ ஆட்சி நடந்திருந்து, ரவி சங்கர் கடைசி நேரத்துல வந்து இதே மாதிரி சொல்லி, அவங்க மனசு மாறி, இதே மாதிரி பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட்டுகளோடு ஒரு கூட்டணி அமைச்சு ஜெயிச்சா - அதுக்கு திமுககாரன் நீ சொல்ற மாதிரி "தமிழன் காசுக்கு விலை போய்விட்டான்"னு சொன்னா நீ ஏத்துக்குவியா? மனசாட்சியை தொட்டு சொல்லு... நீங்க எதிர்பார்த்த மாதிரி தேர்தல் முடிவு வரலைங்குறதால இப்படி எல்லாரையும் காசுக்கு விலை போய்ட்டாங்கன்னு சொல்லாதே... அதை தான் நான் தப்புன்னு சொல்றேன். கருணாநிதி சொல்வாரில்ல அடிக்கடி அவருக்கு ஓட்டு போட்டா தமிழன் புத்திசாலி, போடாட்டா முட்டாள் அது மாதிரி இருக்கு நீங்க சொல்றது. இதை தான் நான் சுட்டி காட்ட விரும்பினேன். அதுக்கு என்னை கடிச்சு குதறிட்டீங்க.

மற்றபடி தேர்தல் களத்தில் ஈழபிரச்னை சரியானபடி சரியான நபர்களால் கொண்டுசெல்லப்படவில்லை என்பதை நீங்களே விரைவில் உணர்வீர்கள். இவ்விஷயத்தில் உங்களுக்கு இருப்பது போல அணுகுமுறையும் தெளிவும் எல்லாருக்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கமுடியாதே!

su.senthil kumaran said...

அதாவது பைத்தியக்காரன் மத்தவனப் பாத்து பைத்தியம்னு சொல்லுவான்னு கேள்விப் பட்டு இருக்கேன் . அதுக்கு சரியான உதாரணம் நீதான்.


நீ எந்த ஊர்லப்பா இருக்க? ஜெயில்ல இருக்கியா? இல்ல பல மாசமா மன நோய் மருத்துவ மனையில இருக்கியா?

ஒவ்வொரு ஊர்லயும் காசக் கொடுத்துட்டு புள்ள மேல சத்தியம் , தாலி மேல சத்தியம்,பால் நனைச்சு சத்தியம்.. நகர்ப் புறங்கள்ல நூறுகும் இருநூறுக்கும் நாக்க தொங்கப் போடுற ஆளுங்களுக்கு பணத்தக் கொடுத்தது.. வாங்கினவன் ஓட்டுப் போடலைன்னா ஒவ்வொரு ஏரியாவிலயும் விழுற ஓட்ட வச்சு கண்டு பிடிச்சுடுவோம்னு மிரட்டினது ....ஆரம்பத்துல தீவிரமா இருந்த நரேஷ் குப்தாவ கடைசி நேரத்துல டம்மியாக்கினது ... இதெல்லாம் தெரியாம எங்க நீ புல் புடுங்கிட்டு இருந்த?
உனக்கு காசு தரலங்கறதுதான் முக்கியமா? உன்னப் பாத்தா வாக்காளன் மாதிரியே தெரியாம இருந்திருக்கலாம்.

மத்த பிரச்னையும் நான் சொல்லி இருக்கேன்.அதோட ஒண்ணாதான் இதையும் சொன்னேன் . உனக்கு ஒழுங்கா தமிழ் படிக்கத் தெரியாதா? செலக்டிவ் அம்னீசியாவா? இல்ல ஷார்ட் டெர்ம் மெமரி லாஸா? நல்லா படி.


அடேய்... நல்லா வருது வாயில...யாரு யாருகூட கூட்டணியா இருந்தாலும் ... காசே வாங்கிட்டு ஒரு நல்ல காரியத்துக்கு துணை போறது தப்பில்ல.. வசதியில்லாதவன் காசுக்கு ரத்தம் கொடுக்கிறா மாதிரி .ஆனா இனத் துரோகத்த , தன் தலையில தானே மண்ண அள்ளிப் போட்டுகறத காசுக்கு பண்ணினாலும் , உன்ன மாதிரி இலவசமா பண்ணினாலும் தப்புதான்.இந்த ஓட்டு இலங்கைப் பிரச்னையில பெரிய பாதிப்பை ஏற்படுத்துமென்பதே தமிழ் நாட்டுல யாருக்கும் தெரியாதுனு சொல்லாத. டீக்கடையில உட்கார்ந்து அவனவன் எப்படி அரசியல் பேசறான்னு பாரு.

அப்ப அப்பிடி சொல்ற திமுககாரனுக்கும் இப்ப இப்படி பேசுற உனக்கும் என்ன வித்தியாசம்.? மனசாட்சின்னா என்னன்னு தெரியுமா உனக்கு? ஒரு சமுதாயத்தையே எதிர்க்க வேண்டியது நியாயம்னா அத கூட உண்மையா செய்யறதுதான்.ஹிப்பொக்ரட்டிக்கா உன்ன மாதிரி வீம்புக்கு ஊளையிடுவது இல்ல.

நான் பண்ணின ஒரே தப்பு உன்ன விசயம் உள்ளவன்னு நினச்சு உனக்கு பதில் சொன்னதுதான்.

இனிமே நான் அத செய்ய மாட்டேன். எனக்கு நிறைய வேற வேலை இருக்கு.எவனாவது அறிவும் உணர்வும் உள்ளவன் வந்து சொன்னா சொல்லட்டும் . இல்லன்னா இதையும் வேடிக்கை பார்க்கட்டும்.
ரேணு சொன்ன மாதிரி உங்களையும் நசுக்க ஒரு ராஜபக்ஷே வருவான் . ஆனா நீங்க பைத்தியமா இருக்கறதால உங்க மேல பரிதாபம் காட்ட மாட்டான்.‌

siva said...

நல்ல காமெடி தான். நான் சொல்லவேண்டியதை எல்லாம் நீ சொல்லிக்கிட்டுருக்கே.

திமுக கூட்டணி ஜெயிச்சதுக்கு காரணம் கேப்டன் பிரிச்ச ஓட்டுக்கள் தான்னு சின்ன குழந்தை கூட சொல்லும். எல்லாரும் ஒத்துக்குற விஷயம் இது. தனியா நிக்க காங்கரஸ்-திமுக கிட்டே அண்ணன் வெயிட்டா வாங்கிட்டாருன்னு இதழாளர்கள் எல்லாரும் சொல்றாங்க. நீ என்னடான்னா அதை பத்தி மூச்சு விட மாட்டங்குற.... அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

அவர் அதிமுக ஓட்டை தான் பிரிப்பாருன்னு தெரிஞ்சும், விஜயகாந்த்தை ஏத்திவிட்ட பத்திரிக்கைகள் குறிப்பா குமுதம் விகடன் இவங்க தான் திமுக கூட்டணி வெற்றிக்கு காரணம். அதை முதல்ல ஒத்துக்கோ.

su.senthil kumaran said...
This comment has been removed by the author.
su.senthil kumaran said...

முடிவாயிடுச்சி..

நிச்சயமா நீ மெண்டல்தான்

எப்படின்னு கேளு.

நீ இவ்வளவு வெறூம் பேச்சுக்கு அப்புறம் சொல்ற இந்த விஜயகாந்த் விவகாரத்த நான் ஆரம்பத்துலயே 6)பாயிண்ட்டா சொல்லி இருக்கேன் .

அதுக்குதான் சொன்னேன் கருமம் புடிச்சவா.. கருத்து சொல்றேன்னு உளறுவதற்கு முன்னாடி முழுசா என்ன சொல்லி இருக்குன்னு படிக்கணும்.

அத விட்டுட்டு நான் மூச்சு கூட விடமாட்டேங்கறேன்னு பினாத்தறீயே..

உனக்கு எவன்டா கணிப்பொறி வாங்கிக் கொடுத்தான்?

அப்பனா? இல்ல மாமனார் துட்டா?

அந்த ஆளு எங்க இருக்கான்னு சொல்லு.. வெட்டணும்டா..

இதுல நீ சொல்ல வேண்டியதை எல்லாம் அதாவது உளற வேண்டியதப் போயி நான் சொல்றேன்னு சொல்லி ..

அட மடப்பய மருமவனே! நீ பொறந்த 'மண்'ணு எது ராசா!

க. தங்கமணி பிரபு said...

செந்தில், ஏன் கோபப்படுகிறீர்கள்?

சிவா ஒரு அடையாளம்தான்!

அதாவது நமது தேர்தல் முடிவுகள் எந்த அளவு ஈழத்தை பாதிக்கிறது அல்லது பாதித்துள்ளது என்பது புரியாத ஒரு வகையான மக்களின் அடையாளமே இந்த சிவா!
இவர்களை போன்றவர்களுக்கு 5 வருடத்துக்கு ஒரு முறைதான் தேர்தல் அது நம் வாழ்வாதாரத்தை பாதிக்ககூடியது என்பதாக தெரியாமல், ஏதோ தேர்தல் என்பது மாதாமாதம் வரும் ஒரு நிகழ்வாகவே கருதுகிறார்கள்.

தேர்தலின்போது வீட்டை விட்டு வெளியே வந்து பணப்பட்டுவாடா எங்கனம் எவ்விதம் நடக்கிறது? வரிசையில் நின்று ஓட்டுப்போடும் ஏழைசனங்களின் மனநிலை எவ்வாறானது என்கிற எல்லாவற்றையும் இணையம் அல்லது செய்தித்தாள்களில் மட்டுமே அறிந்துகொண்டு அதனடிப்படையில் செய்யப்படும் வெட்டி விவாதம் தவிர ஏது அறியாத இது போன்ற பலரும் இணையத்தில் அலைகிறார்கள்.

தினகரன் ஊழியர்கள் மரணம், தா.கிருட்டிணன் கொலை போன்றவை அவர்கள் வீட்டரருகே நிக்ழ்ந்தாலோ அல்லது ஈழத்தில் இவர்களது இரத்த சொந்தங்கள் கொல்லப்பட்டாலோயன்றி இவர்க்ள் இப்படித்தான் இருப்பார்கள்.

சிவா நீங்க கலக்குங்க!!

Post a Comment