Wednesday, May 20, 2009

மாவீரன் பிரபாகரனின்மாபெரும் வெற்றி!

அது பிரபாகரனின் உடல்தானா? எப்படி வாழ்ந்தபோது இருந்ததை விட செத்த பின்பு ஒருவன் இளமையாக முடியும்?

தன்னைச் சுட சிங்களன் வந்த போது , " இரு மொழுமொழுவென்று சவரம் செய்து கொண்டு வருகிறேன்.." என்று சொல்ல பிரபாகரன் என்ன சிங்களன் போல பைத்தியமா? அடையாள அட்டையையும் வில்லையையும் கூடவே வைத்திருப்பரா?.....

கேட்டுக் கொண்டே போக‌ இப்ப‌டி ப‌ல‌ நியாய‌மான‌ கேள்விக‌ள் உள்ள‌ன‌.

பி.பி.சி. போன்ற உலக ஊடகங்கள் எல்லாம் பிரபாகரனை ஒரு மாவீரனாக‍‍ சுதந்திரப் போராட்ட வீரத் தலைவனாக மனசாட்சியோடும் நல்ல ரத்தம் தங்களுக்குள் ஓடுவதை நிருபிக்கும் வகையிலும் விவரிக்க,

மலத்தை உணவாக உண்டு மாரடித்தபடி , பிரபாகரனைத் தீவிரவாதி பயங்கரவாதி என பொய்யாய் நிறுவ மூச்சைப் பிடித்து முட்டியை உடைத்துக் கொள்ளும் சி.என்.என் .ஐ.பி.என்., டைம்ஸ் நவ், என்.டி.டி.வி.போன்ற குப்பைத் தொட்டி டி.வி.க்கள் பிரபாகரன் மரணம் பற்றி எழுப்பும் கேள்விகளூக்கே பதில் சொல்ல முடியாமல் ......

சிங்கள ராணுவ அரைக் கிறுக்கு அபத்தங்கள் பதில் சொல்ல முடியாமல் தடுமாறியதை நேரடி ஒளிபரப்பில் காண முடிந்தது.

பொய்யை எப்படி நம்புகிற மாதிரி சொல்வது என்று கற்றுக் கொடுக்கத்தான் , அணு ஆயுத ஒப்பந்தம் மூலம் இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைத்த அயோக்கியசிகாமணி எம்.கே .நாராயணன் , கருணாநிதியின் கையைத் தன் தலையில் வைத்து வணங்கி ஆசி பெற்று வணங்கி , கொழுப்போடு கொழும்புக்குப் போயிருக்கிறார்.

இதோ, இதை நான் எழுதிக் கொண்டு இருக்கும் இந்த நொடியில் , இலங்கைப் போர்க்களத்தில் மதிவதனியம்மா ,தங்கை துர்க்கா, சின்னத் தம்பி ஆகியோரின் பிணமான உடல்கள் கண்டு பிடிக்கப் பட்டதாக செய்தி , எழுத்துக்களில் உருண்டு நம் ஈரக் குலையை அறுக்கிறது.

இதுவும் உண்மையோ பொய்யோ..இந்தச் செய்திக்குப் பின்னால் எத்தனை நாடகங்களோ..!

அல்லது பிரபாகரன், சார்லஸ் ஆண்டனி, மதிவதனி, துர்க்கா , குட்டித் தம்பி உட்பட அனைவருமே சுயந‌லம் இல்லாத தியாகம் மிக்க வீரமரணத்தைப் போர்க்களத்தில் அடைந்திருக்கலாம்.அதன் மூலம் பிரபாகரன் , ராஜபக்ஷே இருவருமே ஒரே மாதிரி ஈகோயிஸ்டுகள்(ஆணவக்காரர்கள்)என்று பிதற்றிக் கொண்டிருந்த வேசிமகன்களின் ஆணவ மூக்கு உடைந்து ரத்தக் களறியாகலாம்.(இந்த உயிர்களில் ஒரு உயிர் உண்மையாகப் போயிருந்தால் கூட பிரபாகரனை ஆணவக்காரர் என்று கூறியவன் பிறப்பை சந்தேகமின்றி சந்தேகப் படலாம்)

எல்லாரும் செத்து இருந்தாலும் கூட .. விடுதலைப் புலிகள் ஒட்டு மொத்தமாய் ஒருவேளை வீழ்ந்திருந்தாலும் கூட ஒரு விசயம் சாத்தியமாகி இருக்கிறது.

அதாவது 'தமிழினம் என்று ஒரு இனம் இருக்கிறது. அதுதான் தான் உலகிலேயே வீரம் மிக்க இனம் ...வேசித்தனம் செய்து மட்டுமே அதை வீழ்த்த முடியும். நேருக்கு நேர் நின்று அதை வீழ்த்த முடியாது என்ற உண்மையும்...

இலங்கையில் அந்த இனம் அநியாயமாக திட்டமிட்டு அழிக்கப்படுகிறது ...அந்த இனத்தின் பக்கம் மட்டுமே நியாயம் இருக்கிறது.. அந்த இனத்திற்கு உதவுவது மனிதாபிமானம் உள்ள உலக நாடுகளின் கடமை.அதைக் காப்பதன் மூலமே அநியாயமான‌அடக்கு முறைக்கு எதிரான சரியான நியாயத்தை கோருகிற தகுதி நமக்கு இருப்பதாக அர்த்தப் படும்' என்று உலகம் மனசாட்சியோடு யோசிக்கிறது .

கடந்த ஆறு மாதங்களில் உருவான நெகிழ்வான மாற்றம் இது.

ஒருவேளை இந்த பிரபஞ்சத்தில் ,பால்வீதியில் இரக்கம் உள்ள குலங்கள்.. அது மனித குலமோ ..அதை விட மேலான குலமோ...இல்லை அதை விட கீழான குலமோ.. நியாயம் என்று ஒன்றைத் தெரிந்த எல்லோரும் எல்லாமும் இந்த சரியான முடிவுக்குதான் வரவேண்டியிருக்கும் என்ற திட்டவட்டம் ஏற்பட்டுள்ளதே ...

இதுதான் மாவீரன் பிரபாகரனும் அவரது இயக்கமும் அடைந்த மாபெரும் வெற்றி!
No comments:

Post a Comment