Friday, May 15, 2009

ஜெயலலிதாவின் தமிழ் ஈழம் !!!!????!!!!?!?!?!?

"அவ்வளவு நம்பிக்கையா?" என்றூம் ..." இவ்வளவு அப்பாவியா இருக்கீங்களே..." என்றும் என்னைப் பார்த்து உச்சுக் கொட்டுவது எனக்கு நன்றாகவே புரிகிறது.அதனால்தான் தலைப்பிலேயே அத்தனை !களும்,?களும் முன் ஜாக்கிரதையாகவேபோட்டு விட்டேன்.நான் கொஞ்சம் விவரமாக்கும்.
"தமிழ் ஈழம் பெற்றுத் தருவேன் " என்று ஜெயலலிதா, உண்மை உணர்வோடு சொன்னாரோ இல்லை முழுக்க முழுக்க அரசியல் ஆதாயத்துக்காகச் சொன்னாரோ... அது வேறு விசயம்.ஆனால் தேர்தலை முன்னிறுத்திக் கூட அதைச் சொல்ல மற்றவர்கள் தயார் இல்லை என்பதை அறியும்போது ஜெயலைதாவுக்கு கண்ணை முடிக் கொண்டு 10 மார்க் அதிகம் போடுவதைத் தவிர வேறு வழியில்லை.(ஜெயலலிதா 32 பொதுக் கூட்டங்களில் தமிழ் ஈழம் என்று முழங்கிய பிறகு கருணாநிதி வேறு போக்கிடம் இல்லாமல் " மருத்துவமனையில் படுத்துக் கொண்டே தமிழ் ஈழம் அமைக்கப் போராடிக் கொண்டு இருக்கிறேன் " என்று கூறியது எல்லாம்..செல்லாது !செல்லாது!! இந்த அறிக்கை பற்றி என் நண்பர் ரவி சொன்ன கோபமான பதிலை இங்கு எழுதினால் எல்லோரும் மூக்கைப் பொத்திக் கொள்ள வேண்டி வரும். ஆம்! மூக்கைதான்)
ஒரு வருடம் முன்பு வரை கூட தமிழ் ஈழம் அமைப்பது என்பது எளிய வேலையாகத்தான் இருந்திருக்கும்.அதை மேலும் மேலும் சிக்கலாக்கியது சோனியாவும் கலைஞரும்தான்.
இலங்கைக்கு சீனா உதவுவதில் ஒரு பொதுத் தந்திரம் உண்டு.இலங்கையில் தமிழினம் மொத்தமும் அழிந்தால் இந்தியாவுக்கும் இலைங்கைக்குமான நேரடி உறவு அழிந்துவிடும்.தமிழகத்தை நேசிக்கிற யாரும் இலங்கையில் இல்லை என்றால் இந்தியாவின் இலங்கைப் பிடி வலுவிழந்து போகும்.‌இல‌ங்கையை முழுக்க‌ முழுக்க‌ சிங்க‌ள‌ நாடாக்கி விட்டால் ... இலங்கை , சீனா இர‌ண்டும் புத்த‌ ம‌த‌ நாடுகள் என்ற வித‌த்தில் இலங்கையில் சீனாவின் ப‌ல‌ம் அதிக‌ரிக்கும்.இன்னொரு முறை இந்தியாவுட‌ன் ச‌ண்டை போடும் சூழ‌ல் வந்தால்வடக்கே சீனாவும் தெற்கே இலங்கையும் சேர்ந்து ஒரே நேரத்தில் இந்தியாவை என்ன சேதி என்று கேட்க முடியும்.ஒரே நேரத்தில் இந்தியாவை வடக்கு , தெற்கு இரன்டு எல்லைகளிலும் நசுக்க முடியும்.
இலங்கைக்கு உதவுவதில் பாகிஸ்தானுக்கும் ஒரு நோக்கம் உண்டு.இந்தியாவின் மூத்த தேசிய இனமான தமிழினத்தின் நீட்சியை இலங்கையில் அழிக்கத் துணை போவதன் மூலம்,இந்திய அரசுக்கு தார்மீகச் சிக்கலை ஏற்படுத்தி ,இந்தியாவில் பிரிவினை உணர்வுகளைத் தூண்டுவதன் மூலம் தீவிரவாதத்தை வளர்க்க முடியும் . இந்தியாவின் இன்னொரு அண்டை நாட்டுக்கு நெருங்கிய நண்பராக ஆவதன் மூலம் , நாளை இந்தியாவுக்கு எதிராக அந்த நாட்டையும் திருப்பிக் கொள்ள மூடீயும். "எங்கள் ஆயுதங்கள் எப்படியெல்லாம் அழிக்கிறது பாருங்கள்" என்று உதாரணம் காட்டி மற்ற நாடுகள் ஆயுத வியாபாரம் செய்ய முடியும்.
இந்தியாவுக்கு.....?
ராஜிவ்காந்தி கொலைக்கு விடுதலைப்புலிகள் மட்டுமே காரணம் என்றூ மீண்டும் மீண்டூம் சொல்வதன் மூலம் சதியில் பங்கு பெற்ற அமெரிக்க ஏஜெண்ட் சாமிகளையும் இத்தாலிய மாமி(யார்)களையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் .அதற்கு பிரபாகரனைக் கொன்றொழிக்க வேண்டும்.அதில் அப்பாவி மக்கள் செத்தால் என்ன? ஈழத்தமிழினமே அழிந்தால் என்ன? அது எதிர்கால இந்தியாவுக்கு ஆபத்தாக மாறினால் என்ன? ரொம்ப பிரச்னை வந்தால் குடும்பத்தோடு இத்தாலிக்கு விமானம் ஏறி விட்டால் போச்சு
தமிழ்நாடு ஆட்சியாளர்களுக்கு...?
டில்லியில் இருந்து எல்லா வழிகளிலும் 10000 கோடி 20000 கோடி என்று பொட்டி வந்தால் போதும். அவர்கள் இத்தாலிக்கு கிளம்பினால் நாம் அமெரிக்க குடியுரிமை பெற்று ஆபத்துக் காலத்தில் அங்கே போய்விட்டால் போச்சு!
இந்த நிலையில்தான் வாழும்கலை அமைப்பின் தலைவர் ரவிஷங்கர் குருஜியின் பேச்சால் மனம் மாறிய ஜெயலலிதா தமிழ் ஈழம் கோரிக்கையைக் கைக் கொண்டார். அதில் அவர் எந்த அளவுக்கு உண்மையாக‌ இருப்பார்?
தேர்தலில் கிடைத்த தொகுதிகளை வைத்துக் கொண்டு அவர் காங்கிரசுக்கு ஆதரவு தரப் போய்விட்டார் என்றால் ...அப்புறம் அவருக்கும் கருணாநிதிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று ஆகிவிடும்.
பி.ஜே.பி .யுடனோ அல்லது வேறு மாதிரியான ஆட்சியிலோ அவர் முக்கியப் பங்கு எடுத்தால் ... அதன் பின்னரும் அவர் தமிழ் ஈழம் கோரிக்கைக்கு உண்மையாக இருந்தால் அது எப்படிப் பட்ட தமிழ் ஈழமாக இருக்கும்? மிக முக்கியமான கேள்வி இது .
ஜெயலலிதாவுக்கு ஒரு வேளை இந்த நோக்கத்தில் உதவக் கூடீய வாய்ப்பு உள்ள பி.ஜே.பி., இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட எல்லா கட்சிகளும் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் பிரபகரனையும் அங்கீகரிக்கத் தயாராக இல்லை.தடையை நீக்கத் தயாராக இல்லை.தமிழ் உணர்வு பெருகுவதை வட இந்தியர்கள் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.அப்புறம் தமிழ் நாட்டிலேயே தமிழனை அடிமைப் படுத்திப் பிழைப்பது கடினம்.
ஜெயலலிதாவும் போராளிகளை ஆதரித்துப் பேசவில்லை.‌
எனவே ஒரு வேளை இலனங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி(!)ஜெயலலிதா(?)தமிழ் ஈழம் வாங்கித்தர முயன்றால் உடனே சிங்களன் தனது புது அப்பனான சீனாவைப் பார்த்து அழுவான்.இந்தியாவுக்கு எதிராக சீனா களம் இறங்கலாம்.மேற்கத்திய நாடுகள் சீனாவுக்கு எதிராக களம் இறங்கலாம்.
"என் தலைவன் முத்தமிழ் அறிஞன் மட்டும் இல்ல.மூன்றாம் உலகப் போர் உருவாகக் காரணமானவனும் கூட " என்று ரத்தத்தைத் துடைத்துக் கொண்டு உட‌ன் பிறப்புக்க‌ள் ஈன‌ஸ்வ‌ர‌த்தில் பெருமைப் ப‌ட‌லாம்.
இந்த‌க் கொடுமைகளை எல்லாம் மீறி த‌மிழ் ஈழ‌ம் அமைந்தால் அது பிர‌பாக‌ர‌ன் செய‌ல் ப‌டுத்திக் காட்டிய‌ த‌மிழ் ஈழமாக ,குழந்தைக்குத் தமிழில் பெயர் வைத்தால் வங்கியில் பணப் பரிசு போடுகிறதாக,சாராயம் இல்லாததாக ,முழுமையான தமிழ் தேசமாக,ந‌ள்ளிர‌விலும் பெண்க‌ள் அச்ச‌மின்றிப் ப‌ய‌ணித்த‌ ஈழ‌மாக‌..தூய‌ த‌மிழுக்கு முக்கிய‌த்துவம் தருகிற தேசமாக இருக்க வாய்ப்பு இல்லை. அங்கும் கட்சி வளர்ப்பார் ஜெயலலிதா. அங்கும் ஒரு உடன்பிறவா சகோதரி கிடைக்கலாம். இங்கு நடக்கிற எல்லாக் கூத்துகளும் அங்கும் நடக்கலாம். ஆனாலும்...
இப்போது இலங்கையில் தமிழினம் அனுபவிக்கிற கொடுமைகளைப் பார்க்கிற போது, நம்மைப் போலவே ஈழத் தமிழனும் ஒரு சராசரி வாழ்க்கையாவது வாழ்ந்துவிட்டுப் போகட்டும். அந்தப் 'பெருமை' ஜெயலலிதாவுக்குக் கிடைக்கட்டும்.
உண்மையான தமிழ் உணர்வாளர்கள் கனவு கண்ட அற்புதமான தமிழ் ஈழம் கிடைக்காமல் போன பழியை வரலாறு மிகச் சரியாக சோனியா கருணாநிதி இருவரின் பெயரிலும் துரோக வரளாறாகச் செதுக்கி வைக்கட்டும்.

3 comments:

Chandrasekaran said...

என் தமிழரை காப்பாற்றாத அரசா என்னை காக்கப் போகிறது?
தமிழ் வீழ வேண்டும்.. தமிழர் அழிய வேண்டும் என்று
நினைப்பவரா தமிழ் நாட்டுக்கு நல்லது செய்ய போகிறார்கள்?
தமிழன் மானம் கெட்டவன் .. என்னையும் சேர்த்துதான் ...
இல்லாவிட்டால் தமிழ் பேசும் அனைவரும் ஆறு மாதம்
வேடிக்கை பார்ப்போமா ? எனக்கு மானம் இல்லை..
தமிழ் பேசினால் தானே வீரம் வரும்.. நாம் தான்
ஆங்கிலத்தில் பேசிக் கொள்பவராயிற்றே.. .
வெட்கம்.. எனக்கு என் இந்த ஈனப் பிறவீ?...
வரலாற்றை படித்தும் எனக்கு ஏன் இன்னும் ரோசம் வரவில்லை..
ஓ...ஓ......நான் இருப்பது "இந்தி" யாவில் தானே..
இந்தியனாக இருப்பின் செம் மொழி காக்க சென்று இருப்பேன்..
நான் தமிழ் என்று வந்து விட்டால் உடனே அகிம்சா வாதி..
உரிமை என வந்து விட்டால் ஜனநாயக வாதி..போதுமடா.
உன் வெளி வேஷம்..உன் உண்மை உணர்வை ஊருக்கு காட்ட
இப்போதாவது வா வெளியே..இல்லை என்றால்
உனக்கு நீயே சாமாதி கட்டி உள்ளே போய் உறங்கிவிடு..

Chandrasekaran said...

சிங்கள தீவினுக்கு ஓர் பாலம் அமைக்க ..அதில்
தமிழ் இனத்தை அழிப்பவனுக்கு சமாதி அமைக்க..
கை சின்னம் காட்டி வருபவருக்கு அதில் நின்று
என் தம்பியரின் சாம்பலைக் காட்ட ..என்னடா..
தேச பக்தி.. உன் இனத்தையே அளிப்பவருக்கு
உன் தமிழ் வீர முகத்தைக் காட்டு...
யார் வந்தாலும் எச் சின்னம் காட்டினாலும்
உன் இனத்தை காப்பாற்ற முடியுமா ? என கேள்..
இல்லையாயின் நாமே இல்லாமல் போய் விடுவோமடா..
தமிழ் என்றால் சாந்தம் .. அமைதி.. தெளிவு என இருந்தது
போதும்.. போதும்.. தாமரைக்கும் கைக்கும் சூரியனுக்கும்
அரிவாளுக்கும், இரட்டை இலைக்கும் நீ வாக்கு
போடும் முன்னால் இவர்கள் இது வரையில் ஈழ
தமிழருக்கு என்ன செய்தார்கள் என கேட்டு விடு...
செய்ய வில்லையாயின் குப்பை தொட்டியில் உன்
வாக்கை போட்டு விட்டு , உமிழ்ந்து விட்டு போய் விடு..

Chandrasekaran said...

ஈழம் அழிகிறது.. என் இனம் அழிகிறது..
அய்யகோ..என் செய்வேன்..என் தமிழ்த்தாயே..
என் வாழ் நாளில் இத்தனை பெரிய சாவுகளை
நான் காணும்படி வைத்தாயோ ?
முப்பது மைல் தொலைவில் இருந்தும் முப்பதாயிரம் பேர்
ரசாயன குண்டு வீச்சில் சிதறியதை பார்க்கும் கொடுமை
என்னவோ? நான் என்ன செய்தேன் தமிழுக்கு?
எப்போது செய்ய போகிறேன் தமிழருக்கு?
என் இனம் அழிய என் நாடு துணையா?
அது உண்மையானால் நான் தமிழனாகவே சாவேன்..
இந்தியனாக அல்ல.. என் தாய் மொழி தமிழ் ..
என் தந்தை , தம்பி, தமக்கையார் மொழி தமிழே..
ஆட்சியாளர்களே.... நிறுத்த சொல்லுங்கள்..
ஆசிரியராய் போனேனே.. நான் என்ன செய்துவிட முடியும்..?
அழ தெரியவில்லை.. அழு குரல் கேட்டும்
அமைதியாக இருக்க அசிங்கப்படுகிறேன்..
தமிழனாக அல்ல ... ஒரு மனிதனாக..
ஈழ தமிழரும் , நானும் , நீங்களும் இருக்க மாட்டோம்.
ஆனால் வரலாறு நம்மை கேவலப் படுத்த தான் போகிறது..

Post a Comment