Sunday, May 24, 2009

பிடீ சாபம்!!! தோற்றது சென்னை சூப்ப‌ர் கிங்ஸ் அணி !கல்வி , கலை , விளையாட்டு ,தொழில் எதுவானாலும் போட்டி என்று வந்துவிட்டால் ... எனது ஊருக்கும் இன்னொரு ஊருக்கும் போட்டி என்றால் எனது ஊர் ஜெயிக்க வேண்டும் என்றும் , எனது தாலுக்காவிற்கும் இன்னொரு தாலுக்காவிற்கும் போட்டி என்றால் எனது தாலுக்கா ஜெயிக்க வேண்டும் என்றும் ,
இப்படியே மாவட்டம் , மாநிலம் , பிரதேசம், நாடு ,பிராந்தியம் , கண்டம்,உலகம் என்று விரிந்து.... எனது பூமிப் பந்துக்கும் இன்னொரு கிரகத்துக்கும் போட்டி என்று வந்தால் எனது புவிக் கிரகமே வெல்ல வேண்டும் என்று ஆசைப் படுகிற ,ஒரு சாதாரண மனிதப் பிறவிதான்
ஆனாலும் ஐ.பி.எல் பருவம் இரண்டில் , சென்ற வருடம் போல இறுதிப் போட்டிக்குக் கூடப் போகாமல் ,அரை இறுதியிலேயே சென்னை சூப்ப‌ர் கிங்ஸ் அணி தோற்ற‌போது ஒரு துளி கூட‌ நான் வ‌ருத்த‌ப் ப‌ட‌வில்லை. அமைச்ச‌ர் ப‌த‌விப் ப‌ங்கீட்டில் க‌ருணா நிதியின் தோல்வியும் ஐ.பி.எல் .போட்டியில் சென்னை சூப்ப‌ர் கிங்சின் தோல்வியும் மிக‌வும் நியாய‌‌ம்.

கார‌ணம் அத‌ன் பின்னால் இருக்கிற‌து த‌மிழ் உணர்வாள‌ர்க‌ளின் சாப‌ம்! இல‌ங்கையில் த‌மிழ் இன‌த்தை முற்றாக‌ அழிக்கும் (அ)ராஜ‌(க‌) ப‌க்ஷேவின் செய‌ல்பாடுக‌ளால் அந் நாட்டுட‌னான‌ எல்லா உற‌வுக‌ளையும் துண்டிக்க‌ வேண்டும் என்று க‌ருத்து வ‌ந்த‌ போது அதில் கிரிக்கெட்டும் ஒரு கார‌ணியாக‌ வ‌ந்த‌‌து. மும்பைத் தாக்குத‌லில் பல‌ர் இறந்தத‌ற்காக‌ பாகிஸ்தானுட‌ன் கிரிக்கெட் ஆட‌க் கூடாது என்று எழுந்த‌ குர‌லுக்கு ம‌திப்ப‌ளித்து ந‌ம் அணி அதை ந‌டைமுறைப் ப‌டுத்திக் கொள்ளவும் செய்ய‌ வைக்க‌ப் ப‌ட்ட‌து.

அதே வ‌கையில் ஈழ‌த்தில் த‌மிழ் இன‌த்தை அழிக்கும் இல‌ங்கை அர‌சுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வ‌கையில் இல‌ங்கையுட‌னும் கிரிக்கெட் ஆட‌க் கூடாது என்று க‌ருத்துருவாக்க‌ம் எழுந்த‌து.ஆனால் அது இந்தியாவின் பிர‌ச்னை இல்லையே என்ற‌ன‌ர் ந‌ம‌து தேசிய 'வியாதிக‌ள்'!
"அப்ப‌டியா..பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய மும்பைத் தாக்குதால்ல‌ இறந்த‌ இந்திய‌ர்க‌ளை விட‌ , சிங்க‌ள ராணுவ‌க் கொடுங்கோல் வாதிக‌ளால் இற‌ந்த‌ இந்தியர்க‌ள் அதிக‌ம் இல்லியா? அத‌னால இல‌ங்ககையையும் புற‌க்க‌ணி .அவ‌ன் உயிர்தான் ச‌க்க‌ரைக் க‌ட்டி. த‌மிழ்னாட்டு இந்திய‌ன் உயிர் செங்க‌ ம‌ட்டியா?"என்று கேட்ட‌ போது ஒரு ப‌ய‌லும் வாய‌த் தொறக்க‌ல‌.
'சரி...இந்திய‌ கிரிக்கெட் வாரிய‌த்துல‌ முக்கிய‌ப் ப‌ங்கு வ‌கிப்ப‌வ‌ரும் சென்னை சூப்ப‌ர் கிங்ஸ் அணியின் உரிமையாள‌ருமான‌ இந்தியா சிமெண்ட்ஸ் அதிப‌ர் சீனிவாச‌னிட‌ம் கேட்ட‌ போது ரொம்ப‌ ப‌ந்தாவா "அதுக்கும் இதுக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்(!). நாங்க‌ளும் த‌மிழ‌ர்க‌ள்தான்(அப்ப‌டியாஆஆஆ?) என்றார்.

என்ன‌ கொடுமை சீனிவாச‌ன்!

(இல‌ங்கையில ல‌ட்ச‌க் க‌ண‌க்கா த‌மிழ‌ன் , அநியாய‌மாச் சாகிறான்.இனிமேயாச்சும் அவ‌ன் ந‌ல்ல‌ இருக்க‌ணும்னு பிரார்த்த‌னை ப‌ண்ண‌ச் சொல்லி ஒரு ப‌ய‌லும் எஸ்.எம்.எஸ்.ப‌ண்ண‌ல‌. ஆனா இந்த‌ ஆட்ட‌த்துல‌ சென்னை சூப்ப‌ர் கிங்ஸ் தோத்துப் போச்சுன்னா அப்புற‌ம் சீனிவாச‌ன் தெருவுக்கு வ‌ந்துருவார் .. தோனி பிச்சை எடுப்பாருன்னு ப‌ய‌ந்து , ந‌ம்ம‌ த‌றுத‌லைப் புள்ளைங்க‌ pray for chennai super kings அப்ப‌டின்னு sms அனுப்பிக் க‌ட‌ந்த‌ ஒரு மாச‌மா க‌த‌றிக் கிட்டுக் கிட‌ந்த‌து பாருங்க‌ .. அந்த‌க் க‌ரும‌த்துக்காக‌வே இந்த அணி ம‌ண்ணக் க‌வ்வ‌ணும்னு தோணுச்சி.இது ஒரு த‌னி விவ‌கார‌ம்.)
ச‌ரி சென்னை சூப்ப‌ர் கிங்ஸ் அணியில அணி முத்தையா முர‌ளித‌ர‌னைச் சேத்திருக்காறேன்னு ச‌ந்தோஷ‌ப் ப‌ட‌லாம்னு பார்த்தா.. துஷ்ரான்னு ஒரு சிங்க‌ளனையும் சேர்த்து த‌ன்னோட‌ த‌மிழ்ழ்ழ்ழ்ழ் உணர்வ‌ காட்டினாரு.அவ‌ன் என்ன‌டான்னா சென்னை அணி கொடியில‌ இருந்த‌ சிங்க‌த்து ப‌ட‌த்த த‌ன்னோட‌ நாட்டுக் கொடியில‌ இருக்கிற (அ)சிங்க‌த்துப் ப‌ட‌மா நென‌ச்சுப் புல்ல‌ரிச்சுக் கிட்டுக் கிட‌ந்திருக்கான்.
சீனிவாச‌னின் இந்த‌ துரோக‌ங்க‌ளுக்காக‌வே இந்த‌ அணி ம‌ண்ணக் க‌வ்வ‌ணும்னு ஆசைப் ப‌ட்டாங்க‌ , உண‌ர்வுள்ள‌ ப‌ல‌பேரு.அப்ப‌டியே ஆன‌துல‌ ச‌ந்தோஷ‌ம்தான் ந‌ம‌க்கு .

கேட்கலாம்..."அட‌ப் போங்க‌ .. இப்ப‌ தோத்துப் போனதால‌ நீங்க‌ளே சொன்ன‌ மாதிரி சீனிவாச‌ன் தெருவுக்கு வ‌ர‌ப் போறாரா? இதுக்குப் போயி இவ்வளவு சந்தோஷப் படறீங்களே..."ன்னு .

நமக்கு எதுக்குங்க அப்படி ஆசைப் படுற பாவம்.
சீனிவாசனுக்குப் பணம் ஒரு பிரச்னை இல்லைதான். ஆனா கடைசி நாலு ஓவர்ல ஜெயிப்போம்னு நம்பி "ஓஓஓஓ...."ன்னு கத்தி சந்தோஷம் எல்லாம் பட்டு கடைசியில (கொஞ்சம் பணம் நஷ்டமாவதையும் நினைச்சு நொந்து போனார் இல்ல.. அதான் அவருக்கான தண்டனை . நியாயம் விட்ட சாபம் பலிச்சது.
இவ‌ருக்கு சாப‌ம் இப்ப‌டி த‌ண்டனை கொடுத்த‌து .
இதுக்க்க்க்க்க்கே இப்ப‌டின்னா...

ராஜ பக்ஷே, ங்கோத்தா பய ராஜ பக்ஷே, சரத்து பொன்சேகா,எம்.கே. நாராயணன் , சிவசங்கர மேனன் , பிரணாப் மூகர்ஜி,தங்க பாலு , ஈ.வி.கே.எஸ்.எளங்கோவன் ,சுதர்சனம் தாத்தா,சோனியா காந்தி , கருணாநிதி இவங்களுக்கு எல்லாம் எப்படி பலிக்குமோ..... நெனச்சாலே நடுக்குதுப்பா!

1 comment:

THANGAMANI PRABU said...

எனனிப்பொறுத்தவரை இந்த மொத்த ஐபிஎல் மேட்ச்களுமே அயோக்யத்தனத்தின் உச்சகட்டம்! இங்கே இந்தியாவின் தலைவிதியை வரும் 5 வருடங்களுக்கு தீர்மானம் செய்யும் பாரளுமன்ற தேர்தல் நடக்கிறது. பல காலமாக மூன்றில் இரண்டு பங்கு குடிமக்களே ஓட்டுப்போடுகிறார்கள். தபால் ஓட்டு இன்னும் எளிமைப்படுத்தப்படவில்லை. சுமார் 80 சதவிகித ஓட்டுப்பதிவே தீர்மானமாக மக்கள் முடிவை பிரதிபலிக்கும். மிக முக்கியமாக மக்கள் அணைவரும் கூர்ந்து கணித்து தங்களின் அடுத்த 5 வருட தலைவிதியை நிர்ணயித்துக்கொள்ளவேண்டும். இந்த நிலையில் இப்படி மிக பிரமாண்டமான விளம்பரம் மற்றும் பரபரப்பான விளையாட்டு தேவையா? கேள்வி கேட்க வேண்டிய அரசியல்வா(வியா)திகளுக்கு எள்ளளவும் கவலையில்லை. லலித்மோடி தொடங்கி நம்ம சென்னை சீனி வரைக்கும் குவிக்கப்போகும் கோடிகளில் குறி. விழிப்ப்ண்ர்வோடு செயல்படவேண்டிய இளைஞ்ர் பட்டாளத்திற்க்கு விளையாட்டு போதை(பின்ன இவனுகளுக்கு விளையாட்டு வெறி என்றா சொல்லமுடியும்). மானமுள்ள தமிழன் எனப்படுபவன், இரத்தம் தெறித்துக்கொண்டிருந்த இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் அணி சென்ற மாத்திரத்திலேயே அந்த விளையாட்டை, அதுவும் இந்த பணவெறி கும்பலின் சூதாட்டத்தை பார்ப்பானா?

Post a Comment