Tuesday, June 16, 2009

# வேலுப்பிள்ளை பிரபாகரனும் இரண்டு தெலுங்கர்களும்




சென்னையை குன்றத்துரை அடுத்த நந்தம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி.

வேறு ஒருவரை நான் தேடிப் போயிருந்தபோது எதிர்பாராத விதமாக எனக்கு அறிமுகம் ஆனவர்.

பழக ஆரம்பித்த மிகக் குறைந்த காலத்தில நான் ஒரு வீட்டில் சாப்பிட உட்கார்ந்தது என்றால் அது கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில்தான். அதற்கேற்ப அவரது மனைவியாகிய அன்புசசகோதரியாரின் கம்பீரமும் கனிவுமான விருந்தோம்பல் பண்பு ... ஒரு நல்ல வீட்டில்தான் சாப்பிட உட்கார்ந்து இருக்கிறோம் என்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தை என்னை சமாதானப் படுத்தியது.

கிருஷ்ண‌மூர்த்தியின் தாய்மொழி தெலுங்கு.

அவ‌ர‌து பேச்சில் த‌ன‌து தாய் மொழி இன‌ப் ப‌ற்று ந‌ன்றாக‌வே புல‌ப்ப‌டும். த‌விர‌ என்னைப் ப‌ற்றி அவ‌ருக்கு புரிந்து விட்ட‌தாலும் நியாய‌மான‌ அவ‌ர‌து குண‌ம் கார‌ண‌மாக‌வும் க‌ண்ணிய‌மாக‌வே த‌ன‌து மொழிப் ப‌ற்றை என்னிட‌ம் வெளிப்ப‌டுத்துவார். அதோடு த‌மிழுக்கு த‌மிழின‌ உண‌ர்வுக்கும் எதிராக‌ அவ‌ர் எங்கும் பேசிய‌தாக‌வும் எதுவும் இல்லை.

அதே நேர‌ம் ந‌ம் தாய்மொழி தெலுங்கு என்ற பெரும் பிடிப்புண‌ர்ச்சியை அவ‌ரிட‌ம் நான் பார்த்து அவ‌ர‌து மொழிப் ப‌ற்றை ம‌ன‌துக்குள் பாராட்டியும் இருக்கிறேன்.
இதில் மிக‌ முக்கிய‌மான‌ விச‌ய‌ம் என் த‌ய‌வு கிருஷ்ண‌ மூர்த்திக்குத் தேவை இல்லாத‌ விச‌ய‌ம்.என‌க்காக‌ எதையும் மாற்றிப் பேச‌ வேண்டும் என்ற தேவையோ குண‌மோ இல்லாத‌வ‌ர் அவ‌ர் என்ப‌தை நான் ப‌ல‌ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ளில் உண‌ர்ந்திருக்கிறேன்.

(இவ‌ரை விட‌ என‌க்கு மிக‌ க‌ட‌ந்த‌ இருப‌து ஆண்டுக‌ளாக ஆருயிர் ந‌ண்பராக‌ இருக்கும் என்னுயிர் பெரிய‌குளம் ராதாகிருஷ்ண‌ன் அவ‌ர்க‌ளின் தாய்மொழியும் தெலுங்குதான் என்றாலும் அவ‌ர்க‌ள் த‌மிழையும் அத‌ற்குச் ச‌ம‌மாக‌ நேசிக்கும் ப‌ழ‌க்க‌த்துக்கு எப்போதோ வ‌ந்து விட்ட‌வ‌ர்க‌ள். த‌விர‌, ராதா கிருஷ்ணன் எல்லா எல்லைகளையும் க‌ட‌ந்து உய‌ரிய‌ அன்பால் என்னுட‌ன் ஐக்கிய‌மாகிவிட்ட‌வ‌ர் என்ப‌தால் இந்த‌ இட‌த்தில் அவ‌ர் ச‌ம்ம‌ந்த‌ப் ப‌டவில்லை)
நந்த‌ம்பாக்க‌ம் கிருஷ்ண‌மூர்த்தி ப‌ழ‌குவ‌த‌ற்கு மிக‌ இனிய‌வ‌ர்.
விடுத‌லைப் புலிக‌ள் இய‌க்க‌த் த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் இறந்து விட்ட‌தாக‌ செய்திக‌ளும் தொலைக் காட்சியில் அந்த‌ப் ப‌ட‌ங்க‌ளும் வ‌ந்து மாளாத‌ மீள முடியாத‌ துய‌ரில் நான் மூழ்கிக் கிட‌ந்த‌ வேளை என‌க்கு ந‌ந்த‌ம்பாக்க‌ம் கிருஷ்ண‌ முர்த்தியிட‌ம் இருந்து தொலைபேசி அழைப்பு. எனக்கு இருந்த மன நிலையில் ரொம்ப துவண்ட நிலையில் போனை எடுத்தேன்.

எடுத்த எடுப்பில்." என்ன சார் இப்படி ஆயிப் போச்சு?"என்றார் கரகரத்த குரலில். எந்த நேரமும் அழுதுவிடுவாரோ என்று தோன்றியது.
நான் பயந்து விட்டேன்." என்ன சார் என்ன ஆச்சு?" என்றேன். அவரது குடும்பத்தினருக்கு எதுவும்... அல்லது எதுவும் தொழில் நஷ்டமா? அல்லது மிக நியாயமாக அவருக்கும் எனக்கும் தெரிந்த பொது நண்பர் யாருக்கும் எதாவது ....?என்பது எனது பயம்.

அவரிடம் சிறிது மவுனம். அதில் கோப‌ம் கொஞ்சம் இருப்பதை நான் உணர்ந்து பேச ஆரம்பிப்பதற்குள் அவர் தொடர்ந்தார்.

" சார் .. நாம‌ எல்லாம் வீரபாண்டியக் கட்டபொம்மனைப் பத்தி அவரு பெரிய மாவீரன்னு (கவனிக்க : தெலுங்கினப் பற்றின் அடையாளம் ) படிச்சு இருக்கோம்;கேள்விப் பட்டு இருக்கோம். எதோ ப‌ந்துலு புண்ணிய‌த்தாலயும்( கவனிக்க:மறுபடியும்‌)சிவாஜி ந‌டிப்பால‌யும் நாம‌ அத‌ யூகிக்க‌வும் முடிஞ்ச‌து.
ஆனா ந‌ம்ம‌ கால‌த்துல‌ ந‌ம்ம‌ளோட‌ ர‌த்த‌மும் ச‌தையுமா வாழ்ந்த மாவீர‌ன்னா அது பிர‌பாக‌ர‌ன்தான் ‌ சார். உல‌க‌த்தோட‌ க‌டைசி மாவீர‌ன் செத்துப் போயிக் கிட‌க்க‌றான் சார். அத‌ப் பாக்கும்போது கை கால் எல்லாம் அதிருது சார். இனிமே வீர‌ம்னா என்ன‌ன்னு கேட்கிற ந‌ம்ம‌ புள்ளைங்க‌ளுக்கு இனிமே யார‌ சார் நாம‌ அடையாள‌ம் காட்ட‌ முடியும்?"
மிக‌ ம‌ன‌மும் குர‌லும் உடைந்த‌ நிலையில் கிருஷ்ண‌மூர்த்தி கேட்க, ‌
யாருமில்லாத் த‌னிமையில் நான் நொறுங்கிப் போய் என் அன்பு பிர‌பாவுக்காக சின்ன‌க் குழ‌ந்தை போல் கேவிக் கேவி அழ‌ ஆர‌ம்பித்தேன்.

ஆனால் நான் இதுவரை இது பற்றி வ‌லைப்பூவில் எழுத‌வில்லை. ஆனால் இப்போது எழுத‌ வேண்டிய‌ சுழ‌லை ஏற்ப‌டுத்திய‌வ‌ர் அருண்.!


அருண்?
சன் தொலைக்காட்சியில் என்னோடு ஒன்றாகப் பணிபுரிந்தவர்.(சிந்தனி வலைப்பூவின் நிறுவனர் தங்கமணி பிரபுவும் உடன் பணிபுரிந்த இன்னொருவர். எங்கள் மூன்று பேருக்கும் உள்ள மிகப் பெரிய ஒற்றுமை தமிழினப் பற்று‍ அருணின் பூர்வீகம் கன்னடமாக இருந்தாலும் கூட.)
ஞாயிறு அன்று இர‌வு ப‌த்து மணிவாக்கில் அருண் என‌க்குப் போன் செய்தார்." சார் .. அரை ம‌ணினேர‌த்துக்கு முன்னால‌ என‌க்கு நிக‌ழ்ந்த‌ ஒரு அனுப‌வ‌ம்.. அத‌ உங்களுக்கு உட‌னே போன் ப‌ண்ணிச் சொல்லணும்னு தோணுச்சு.." என்று ஆரம்பித்து அருண் சொல்லத் துவங்கினார்.
ஒரு இட‌ம். ( அதை அருணின் அனும‌தி இன்றி சொல்வ‌து நாகரீக‌ம‌ல்ல‌.)

இனி அருணின் வார்த்தைக‌ளில் உங்க‌ளுக்கு....
" நான் உட்கார்ந்திருந்த இடத்துக்கு அடுத்தபடியா அவர் உட்கார்ந்திடருந்தார் சார் ... டி.வி.யில‌ கிரிக்கெட் ஓடிக்கிட்டு இருந்த‌து. மேட்ச் கொஞ்ச‌ம் போர‌டிச்ச‌ ச‌ம‌ய‌த்துல‌ அவ‌ர் எதோ கோப‌மா க‌மெண்ட் அடிச்சாரு...என்னைப் பார்த்து ந‌ட்பா சிரிக்க‌வும் நானும் புன்ன‌கைத்தேன்.
அடுத்த‌ சில‌ நிமிட‌ங்கள்ல‌ பொதுவா பேச ஆர‌ம்பிச்சார். நானும் ப‌தில் சொன்னேன். பேச்சுல தெலுங்கு வாசனை.
ஒரு நிலையில‌ என்ன‌ப் பார்த்து , ' சார் ... நீங்க‌ த‌மிழா?'ன்னு கேட்டாரு. 'த‌மிழ் நாட்டோட‌ த‌லை ந‌க‌ர்ல‌ என்ன‌ இது கேள்வி'ன்னு நினைச்சுக் கிட்டு நானும் கொஞ்ச‌ம் அழுத்தமா ஆமாம்னு சொன்னேன்.

' ஒண்ணு கேட்டா த‌ப்ப‌ நினைக்க‌மாட்டீங்க‌ளே சார்?'னாரு. நானும் சொல்லுங்க‌னு சொன்னேன்.

'ஏன் சார் நீங்க‌ எல்லாம் இப்ப‌டி இருக்கீங்க‌ .."னாரு. நான் என்ன‌யே மேலும் கீழும் பாத்து 'ந‌ல்லத்தானே இருக்கோம்'னு நினைச்சுக்கிட்டு , "ஏன் என்ன‌ விச‌ய‌ம்?'னு கேட்டேன்.
'பிர‌பாக‌ர‌ன் செத்துப் போன‌ விச‌ய‌த்த‌ நீங்க‌ எல்லாம் எப்ப‌டி சார் இவ்வ‌ள‌வு சாதார‌ண‌மா எடுத்துக்கிட்டீங்க‌ .. சார் அது எவ்வ‌ள‌வு பெரிய‌ துரோக‌ம்... ஞாய‌த்துக்கு கிடைச்ச எப்பேற்ப‌ட்ட‌ தோல்வி.... த‌மிழ் ஆளுங்க‌ எல்லாம் ஒண்ணுமே ந‌ட‌க்காத‌து மாதிரி அவ‌ன‌வன்... அவன் அவன் வேலைய‌ப் பாத்த‌து என‌க்கு ப‌ய‌ங்க‌ர‌மான ஆச்சர்ய‌ம் சார்... எப்ப‌டி சார் இது?'னாரு .
நான் கொஞ்ச‌ம் அதிர்ச்சியான‌த‌ப் பாத்து .. ' சார் .. நாங்க‌ தெலுங்கு சார். இங்க‌ பொழைக்க‌ வ‌ந்தோம். உங்க‌ மொழிய‌ எழுத‌ பேசக் க‌த்துக்கிட்டேன். ச‌த்திய‌மா சொல்றேன் சார் .. த‌மிழ் நாடுனு வ‌ந்த‌ அப்புற‌ம் இங்க‌ என்னய‌ இம்ப்ரெஸ் ப‌ண்ணின‌ ஒரே விச‌ய‌ம் இன்னிக்கு வ‌ரை பிர‌பாக‌ர‌ன்தான் சார்..

அத‌னால‌ நானும் பிர‌பாக‌ர‌ன் ப‌த்தி நிறைய‌ப் ப‌டிச்சேன்.அவ‌ரு மேல‌ சொன்ன‌ ப‌ல‌ குற்றச்சாட்டுக‌ள் குற்றச்சாட்டுங்களே இல்ல‌‌. அவ‌ரோட‌ சிச்சுவேஷ‌ன்ல‌ இருந்து பார்த்தாதான‌ அதுல‌ உள்ள ஞாய‌ம் புரியும். நாம‌ இங்க‌ இருக்கற‌ பொசிஷ‌னை அவ‌ர்மேல அப்ப‌டியே‌ வ‌ச்சு ஒரு நார்ம‌ல் லைஃப் க‌ண்டிஷ‌ன‌ வ‌ச்சு அவ‌ர‌ குறை சொன்ன‌து பெரிய‌ முட்டாள்த‌ன‌ம்.
இதுல‌ சில‌ த‌மிழ் ஆளுங்க‌ளே அவ‌ர‌ப் ப‌த்தி இல்லாத‌தும் பொல்லாத‌துமா சொல்ற‌த‌க் கேட்கும்போது என‌க்கே வாய‌ உடைக்க‌ணும்போல‌த் தோணும்.
இல‌ங்கை ராணுவ‌ம் அப்பாவித் த‌மிழ‌ர்க‌ள‌த் தாக்க‌க் கூடாதுன்னு சொன்னா உங்க‌ ஆளுங்க‌ ப‌ல‌பேரே 'அப்ப‌டின்னா விடுத‌லைப் புலிக‌ளும் ஆயுத‌த்த‌க் கீழ‌ போட‌ணும்னு நாக் கூசாம‌ச் சொன்னாங்க‌... ஏன் சிலோன் க‌வ‌ர்மெண்ட் ஜ‌ன‌ங்க‌ள‌க் கொல்ற‌துக்கும் அந்த‌ ம‌க்களையும் த‌ங்க‌ளையும் கா‌ப்ப‌த்திக்க‌ புலிங்க‌ ஆயுத‌ம் யூஸ் ப‌ண்ற‌துக்கும் உள்ள வித்தியாச‌த்த‌ த‌மிழ‌னுங்க‌தான‌ சார் ம‌த்த‌வ‌ங்க‌ளுக்கு எடுத்துச் சொல்லி இருக்க‌ணும்.
ஆனா உங்க‌ ஆளுங்க‌ளே விடுத‌லைப் புலிக‌ளூம் ஆயுத‌த்த‌க் கீழ‌ போட‌ணும்னு சொன்னது கொடுமை சார்...
இது எல்லாத்தையும் மீறிப் பிரபாகரன் மேல எதாவது தப்பு இருந்தாலும் அத தமிழனுங்களான நீங்களே சொல்லக் கூடாது சார். சார், உலகத்துல எவன் எவனோ எதை எதையோ மூடி மறைச்சு பல லட்சம் கெட்டவங்கள வாழ வசச விஷயம் எல்லாம் வேர்ல்டு ஹிஸ்டரியில எவ்வளவோ இருக்கு சார்.. பிரபாகரன் அப்படி என்ன சார் தப்பு பண்ணான்? இவ்வளவு பிரச்னையிலும் கடைசி வரை குடும்பத்தோட அங்கயே நின்னு இருக்கானே சார்.. அதுக்கு ஈக்குவலா என்ன சார் இருக்கு?

வேலுப்பிள்ளைப் பிரபாகரன் .. அந்த பேர சொல்லிப் பார்த்தா... எதோ ஒரு மஹாராஜா பேரச் சொல்ற மாதிரி ஒரு ஃபீல் வருது சார்... எப்படி சார் கடைசி வரைகண்டுககாம விட மனசு வந்தது தமிழ் ஆளுங்களுக்கு...? நிஜமா எனக்குப் புரியல சார். எப்ப‌டி சார்.. ஒரு சின்ன ரெவல்யூஷன் கூட இல்லாம அந்தச் சாவ ஒரு அனாதைப் பிணம் ரேஞ்சுக்கு அப்படியே விட்டுட்டீங்க?
தெலுங்குல தமிழ் ஆளுங்கள 'அரவாடு'ன்னு சொல்வோம் . சாரி சார்.. இப்ப‌ எல்லாம் எனக்கு அந்த வார்த்தையக் கேட்டாலே ஆக்வர்டா இருக்கு சார்.இன்னும் என்னால டைஜெஸ்ட் பண்ணவே முடியல சார்...'னு(இனி பேசுவது அருண்) அவரு நிஜமான உணர்ச்சியோட நான் ஒரு வேளை அவர் மேல கோபப் பட்டாலும் படலாம்கிறபயம் கொஞ்சம் கூட இல்லாம பேசிக்கிட்டே போனார் ..
என்னால ஒண்ணுமே பதில் சொல்ல முடியல....எனக்கு ஒரு பக்கம் பெருமையா மறுபக்கம் அவமானமா இருந்தது சார்.. திடீர்னு அவருக்கு ஒரு போன் வரவும் அவர் அதுல கவனம் செலுத்த ஆரம்பிச்சாரு சார். நான் ரொம்ப கனத்த மனசோட வெளிய வந்துட்டேன் .. இது எல்லாமே ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னால நடந்து முடிஞ்சது.எனக்கு உடனே உங்ககிட்ட சொல்லலைன்னா மனசு ஆறாது போல‌ இருந்தது." என்று முடித்தார் அருண்.
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்...
பிரபாகரன் இனம் மொழி கடந்து மானமுள்ள எல்லோருக்கும் ஒரு பெரிய ஈர்ப்புச் சக்தியாக இருந்திருக்கிறார்.
இன்னொன்று .. இன்னும் குறைந்தது 200 ஆண்டுகளுக்குக் கழுவப் பட முடியாத களங்கத்தை தமிழன் செய்திருக்கிறான்.உண்மையான ஆதுரத்துடனோ அல்லது குத்திக் காட்டிக் கிண்டல் செய்வதற்கோ அடிக்கடி இந்தக் களங்கம் தமிழனுக்குத் தொடர்ந்துஞாபகப் படுத்தப்படும்.உண்மையான உணர்வாளர்களுக்கு மரியாதையுடன் ஞாபகப் படுத்தப்படும். உணர்வே இல்லாத ஜென்மங்களுக்கு செருப்பால் அடித்து ஞாபகப் படுத்தப் படும்.
பிரபாக‌ரனும் அவரது இளைய மகன் பாலா என்ற அந்தக் குருத்தும் மிக‌க் கொடுமையாக‌ சித்திர‌வ‌தை செய்து கொல்ல‌ப் ப‌ட்ட‌தாக‌ வ‌ரும் செய்திக்ள் ந‌ம் ஈர‌க் குலையை அறுக்கின்றன‌.
பிர‌பாக‌ர‌னை ஆத‌ரித்த தமிழக அர‌சிய‌ல்வாதிக‌ளும் கூட‌ அவ‌ருக்கு சாத்திய‌ம் இல்லா‌த‌ அதிக‌ ப‌ட்ச‌ ந‌ம்பிக்கையைக் கொடுத்து ந‌ம்ப‌ வைத்து விட்டார்க‌ளோ என்ற‌ எண்ணம் எழுகிற‌து.
ஏனெனில் 'இந்தியாவில் நிச்ச‌ய‌ம் ஆட்சி மாற்ற‌ம் நிகழும். போர் நிறுத்த‌ம் வ‌ரும்' என்று தேர்தல் முடிவு வரும் வ‌ரை பிர‌பாக‌ர‌ன் ந‌ம்பிய‌தாக‌வும் என‌வேதான் மிக‌ச் சிறிய‌ ப‌குதிக்குள் குறுக்க‌ப்ப‌ட்ட‌போதும் வ‌ழ‌க்க‌மான‌ எச்ச‌ரிக்கையுட‌ன் அவ‌ர் ந‌ட‌ந்து கொள்ளவில்லை என்றும் வ‌ரும் செய்திக‌ள் ம‌ன‌தைப் பிசைகின்ற‌ன‌. சில‌ அழுக்குக‌ளை நீரில் க‌ரைக்க‌ முடியாது . நெருப்பில்தான் எரிக்க‌ முடியும். அல்ல‌து ம‌ட்கும் வ‌ரை இருக்கும். இந்த‌ அவ‌ல‌த்தை உண‌ராம‌ல் அல‌ட்சிய‌ப் ப‌டுத்திய‌வ‌ர்க‌ள் இத‌ற்குத் துணை போன‌வ‌ர்கள்ஆகிய‌ ஜென்ம‌ங்க‌ள் த‌ங்க‌ள் விரும்பித் தேடிக் கொணட‌ இந்த‌க் க‌ள‌ங்க‌த்தை எரித்தாலும் ம‌ட்கினாலும் கூட மாற்றிக் கொள்ள முடியாது.

17 comments:

ttpian said...

க்கரைக்கல் பதியும் தெலுங்கந்தான்!
ஆனால்,பிழைப்பது தமிழ்னாட்டில்;எந்த சூழ்னிலையிலும்,தமிழன் என்ற அடையாளத்தை இழந்தது இல்லை:
துரதிஷ்டமான விசயம்:தமிழர்களாகிய நீங்கள் அனைவரும் தமிழன் என்பதை மறந்தது!
இப்போது இல்லாவிட்டால் எப்போதும் இல்லை

சு.செந்தில் குமரன் said...

என்னையும் அந்த வரிசையில் சேர்த்ததன் மூலம் நீங்களூம் தமிழ்ப்பற்று இல்லாதவர் போலத் தோன்றுகிறீர்களே!

யாரோ - ? said...

உங்கள் பதிவுக்கு நன்றி. இந்தப் பிரச்சனைகளுக்குப் பிறகு இந்தியாதான் எனது முதல் எதிரி என்று நினைத்திருந்தேன். ஆனால் உங்களது மற்றும் உங்கள் போன்றவர்களின் பதிவுகள் கொஞ்சம் சிந்திக்க செய்கின்றது. ஏனோ தெரியல்ல சார் நெஞ்சு பொறுக்குதில்லை. வஞ்சகமாக கொன்றவர்களை நினைத்தால். சீனா செய்தால் கூட பரவாயில்லை. ஆனால் இந்தியா.. அதுதான் தாங்க முடியவில்லை. நன்றி சார்.

க. தங்கமணி பிரபு said...

அத்தனை பெரிய இழப்புக்கு இங்கே தாய்த் தமிழர்களின் எதிர்விணை, நம் அரசியல் தலவர்கள் நமக்கு இலவசமாய் அளித்த பிஞ்சுபோன செருப்பில் நம்மை நாமே அடித்துக்கொண்டிருந்தததில் ரொம்ப பிஸியா இருந்துட்டோம். அவவளவுதான், முட்ஞ்சுபோச்சு! அரசியலை விபச்சாரம் போல் கையாளும் காடையர்கள் தலைவர்களாக் இருக்கும் வரை, படிப்பையும் கையில் உள்ள வேலையையும் அரனாக நினைப்பவர் உள்ளவரை, அரசியல் கட்சிகளின் அல்லக்கைகள் தமிழ்நாடு எரிகையில் நம் தலைவன் செல்லும் விமானத்தில் புட்போர்டில் ஏறி தப்பிவிடலாம் என்று கனா காண்பவர்கள் இருக்கும் வரை, நமது நிலை எந்தப் பொதுச்சபையும் ஏறமுடியா நிலை. கண்ணகி கோபம், மதுரையை எரித்த சாபம்! அது நிசம்! கொல்லப்படுவதை, பஞ்சமாபாதகத்தை ஏதோ மர்ம்த்தொடர்கதை மாதிரி ஓடி ஓடிப் படித்தோமே! பிரபாகரன் மரனம் சுவாரஸ்யமானமான சினிமாவில் போரடிக்கும் நீண்ட இடைவெளை! எரியுமடா..... தம்பி! கும்பி கருகும், குடல் அறுந்து போகும், தண்ணீருக்கு பதில் சிறுநீரும் கிடைக்காது சாகும், அடர் பணமளித்த அடுக்குமாடி கணனியகங்கள் மன்மேடாகும்! பார்த்த சாவு போறாது, நீ வாழும் சாவெ சுகமென குரல் சொல்லும்! அடப்போங்கடா......தமிழுணர்வு,மயிரு, வீரம், வெங்காயம்! ஊழிக்காற்றடிக்குது கேட்கலையோ, அத்தனை தமிழ்புலவனும் நமை நோக்கி அறம் பாடுகிறான் காதில்லையோ! வள்ளுவன் சொன்னது போல் 'அளவிளந்தாவது போலக் கெடும்" !!!!

butterfly Surya said...

30 வருட கழக ஆட்சிகளின் அன்பளிப்பு இதுதான்.


தமிழன் மூளையை மழுங்கடித்து சினிமா, டிவி, போதை, பரபரப்பு அரசியல், டாஸ்மாக் என்று எல்லாவிதத்திலும் அடைத்து போட்டு விட்டார்கள். அனைத்தும் ஒரு வித போதையே என்று தெரியாமல் அதை பற்றி கொண்டிருக்கிறோம்.

எந்த சுரணையுமின்றி வேலை,பிழைப்பு, குடும்ப வாழ்க்கை என்று குறுகிய வட்டத்திற்குள் மட்டுமெ இருக்க விழையவும் எந்த போராட்ட குணமுமின்றி யார் வாழ்ந்தால், செத்தால் எனக்கென்ன என்ற மனப்பான்மையை வளர்த்து விட்டவர்கள்.

தலைவர்கள் எவ்வழி.. மக்கள் அவ்வழி...

அப்படியே அதையும் மீறி நடந்த போராட்டங்களை கல்லூரி விடுமுறை, போலிஸ் தடியடி என்று திசை திருப்பி நீர்த்து போகச்செய்தவர்கள்.

தேர்தல் நேரத்தில் யார் ஈழ நிலைப்பாடு சிறந்தது என்று பாப்பையா பட்டி மன்றம் ந்டத்தி ஓட்டு கேட்ட்வர்கள்.

இன்னும் ஒரு சீட்டு கிடைத்தால் எதிர் அணிக்கு தாவ ரெடியாகி விட்ட அரசியல் அனுமான்கள்.


ஊடகங்களே பற்றி சொல்லவே வேண்டாம்.

திடுக் ரிப்போர்ட், அதிர்ச்சி ரிப்போர்ட், சிறப்பு செய்தி என்று எல்லாவற்றையும் காசாக்க எல்லாவித கேடு கெட்ட செயல்களையும் செய்து அவர்களும் போலெரோ வில் சவாரி செய்ய எடிட்டர் காலத்தை எச்சையாக்கி விற்பனையாக்கும் விபச்சாரிகள்.

இன்னும் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இதில் ஏராளம்.

தெரிந்தே அவரவர் த்த்தம் பங்களிப்பை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

நமக்கு தேவை அரசியல் கட்சிகள் அல்ல.

சுயநலமில்லாத நல்ல தலைவன். அதுவே அவசியம்.

அவன் சினிமாக்காரனாக இல்லாதிருத்தல் அதைவிட அவசியம்.

சு.செந்தில் குமரன் said...

மற்ற நண்பர்களின் பின்னூட்டங்களுக்கு நன்றி .

அன்பர் 'யாரோ'வுக்கு மட்டும் சில வார்த்தைகள்.....

ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளின் கைய‌று நிலை கண்டு கொழும்புத் த‌மிழ‌னைவிட‌ அதிக‌ம் நொறுங்கிப் போன‌ த‌மிழ் நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள் நாங்க‌ள் பல‌ர் உண்டு.
ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் படும் துய‌ர‌ங்க‌ளைத் துடைக்க‌ப் போராட‌ முடியாத‌ப‌டி இங்கே கொடுமையாகிவிட்ட‌ வாழ்க்கைச் சூழல்; அதை வளர்க்கும் அரசியல் சூழல் ஆகியவற்றால் பலர் ஜடமாகிவிட்டனர்.

தமிழ் நாட்டுத் தமிழர்களை எதிரியாக நினைப்ப‌து மிக‌த் த‌வ‌றான போக்கு என்பதை உணரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் . நன்றி!

சு.செந்தில் குமரன் said...
This comment has been removed by the author.
butterfly Surya said...
This comment has been removed by a blog administrator.
butterfly Surya said...
This comment has been removed by a blog administrator.
butterfly Surya said...
This comment has been removed by a blog administrator.
Shasi said...

Nalla pathivu

supersubra said...

//30 வருட கழக ஆட்சிகளின் அன்பளிப்பு இதுதான்.


தமிழன் மூளையை மழுங்கடித்து சினிமா, டிவி, போதை, பரபரப்பு அரசியல், டாஸ்மாக் என்று எல்லாவிதத்திலும் அடைத்து போட்டு விட்டார்கள். அனைத்தும் ஒரு வித போதையே என்று தெரியாமல் அதை பற்றி கொண்டிருக்கிறோம். //

கழக கண்மணிகள் ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மை (அவர்கள் எந்த கழகமானாலும்) .

சு.செந்தில் குமரன் said...

நன்றி சசி. நன்றி சூப்பர் சுப்ரா

சு.செந்தில் குமரன் said...

சூப்பர் சுப்ராவின் பாராட்டு வண்ணத்துப் பூச்சியாருக்கு உரித்தாகட்டும்!

கல்கி said...

அண்ணே எனக்கு அரசியல் எல்லாம் தெரியாது. அதனால நான் அரசியல் பத்தி எஅதுவும் இங்க பேசல.

//விஜய்காந்தின் தாய்மொழி தெலுங்கு என்றாலும் ( அவரை ஆதரிக்கும் பலபேருக்கு அது தெரியாது என்பது வேறு விசயம்),//

அண்ணே, அவரு சார்ந்திருக்கிற சாதி தெலுங்கு பேசும் சாதி. அவ்வளவுதான். அவரும் தமிழர்தான். பல நூறு வருஷத்துக்கு முன்னாடியே ஆந்திராவில இருந்து இங்க வந்து குடியேறினவங்க. அப்போ அந்த சாதியை சேர்ந்த யாரும் அரசியலுக்கு வரக்கூடாதா? முதல்வராகனும்ன்னு நினைக்கக்கூடாதா? அப்புறம் எதுக்கு ரேஷன் கார்டு, ஓட்டுரிமை எல்லாம்? அவரு தமிழர் இல்லைன்னு நீங்க சொன்னீங்கன்னா கொஞ்சம் முன்னாள் முதல்வர்களோட வரலாறும் எடுத்துப்பாருங்க. இன்னாளில் இந்தியாவில் பிறக்காத சிலர் செஞ்சிகிட்டு இருக்குற அராஜகத்தையும் கொஞ்சம் நினைச்சுப்பாருங்க.

உங்களுக்கு தெரியுமா இல்ல தெரியாதான்னு எனக்கு தெரியல... சாதி மற்றும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து போராடின பெரியார் கூட தெலுங்கு பேசுபவர்தான். அவரை தெலுங்கு பேசுறவர்ன்னு ஒதுக்க முடியுமா உங்களால?

விஜயகாந்தின் வளர்ச்சி பொறுக்காமலும், மேலும் வளரவிட்டா சிலரால அரசியல் பண்ண முடியாதுங்குற காரணத்தாலும் சிலர் கிளப்பிவிடும் தேவையற்ற பிரச்சாரம்தான் இது.

என்ன மொழி பேசுறாங்கன்னு ஆராய்ச்சி பண்ணாம, மக்களுக்கு உருப்படியா எதாவது பண்ணுறாங்களான்னு பாருங்கண்ணே.

//ஆனால் கல்யாணம் என்று வந்த போது தேடிப் போய்த் தெலுங்கு குடும்பத்துப் பெண்ணாகப் பார்த்து செய்தது முதல் சறுக்கல்.//

ஒரே சாதியில் கல்யாணம் பண்ணது தப்புன்னு சொல்லுறீங்களா?

ஏன் இந்தியரில்லாத ஒரு தாய்க்கு பிறந்ததிற்காக நாளை ராகுல் காந்திக்கு பதவி மறுக்கப்படுமா?

கல்கி said...

அண்ணே, பின்னூட்டம் மாறிப்போச்சு, தப்பா நெனைக்கலீன்னா இந்த இடுகைல இருந்து எடுத்துடுங்க. நான் திரும்பவும் சரியா போட்டுட்டேன்

சு.செந்தில் குமரன் said...

நான் அங்கயே உங்களுக்குப் பதிலும் சொல்லிட்டேன்

Post a Comment