Monday, June 22, 2009

# விஜ‌ய்க்குப் ப‌ய‌ப்ப‌டுகிறாரா, விஜ‌ய‌காந்த்?






இதை எல்லாம் எழுத வேண்டுமா என்றுதான் முதலில் யோசித்தேன்.

எழுத வைத்த பெருமை (அல்லது சிறுமை) நமது வெகுஜனப் பத்திரிக்கைகளையே சாரக் கடவது!

பத்து நாட்களாகவே விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து அவரது ரசிகர்களை விட அதிகமாகவே ஆர்வம் காட்டுகின்றன பத்திரிக்கைகள் . கல்யாணப் பத்த்ரிக்கைகளைத் தவிர மற்ற எல்ல பத்திரிகைகளிலும் இதே பேச்சு.

அதுவும் ஒரு பெரிய பத்திரிக்கை 'அரசியலுக்கு வருவது உறுதி ‍ விஜய் அறிவிப்பு ' என்று அட்டைப் படக் கட்டுரை போட்டால் அதே நாளில் வரும் இன்னொறு பெரிய பத்திரிக்கை 'விஜய்க்குப் பதில் சொல்லும் அஜித்' என்று அட்டைப் படக் கட்டுரை வெளியிட்டு மக்கள் மீது தனக்குள்ள 'அக்கறை'யைக் காட்டியது.


எத்தனை ரசிகர்களுக்கு தெரியுமோ தெரியாதோ... விஜய்யின் மனைவியாகிய அந்தச் சகோதரி ஓர் இலங்கைத்
தமிழ்ப் பெண். ஆனால் வெகு நாட்களுக்கு முன்பே லண்டனில்( சரிதானே?) வாஅத் துவங்கிய குடும்பம் அது.

அந்த ஒரு காரணாத்துக்காகவே இலங்கைத் தமிழருக்கான ஆதரவுப் போராட்டங்களில் தனது ரசிகர் மன்றத்தின்
துணையோடு விஜய் தீவிரமாகக் களம் இறங்குவார் என்று எதிர்பார்த்த முட்டாள்களில் நானும் ஒருவன். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே ஒரு நாள் உண்ணாவிரதததில் உட்கார்ந்தார். அடுத்து ஒரு நாள்( அல்லது
அதே தினத்தில்?) அவரது ரசிகர்கள் மாநிலம் முழுக்க அடையாள (!) உண்ணாவிரதம் இருந்தனர்.

நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்தின் போது , நன்கொடை வசூலித்து உடல் ஊனமுற்றவர்களைக் காப்பாற்றும் ராகவா லாரன்ஸ் கூட பல லட்சங்கள் ஈழத் தமிழருக்கு நன்கொடை தருவதாக அறிவித்தார். ஆனால் அதே மேடையில் அதை விட அதிக்த் தொகஒ அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜய்.....


'என் ரசிகர்கள் எல்லோரும் பிரதமருக்குத் தந்தி அடிக்க வேண்டும்' என்று அறிவித்தார். (உண்மையில் விஜய்யின் இந்த அறிவிப்பைப் பார்த்து கருணாநிதி ஒரு நிமிடம் ஆடித்தான் போயிருப்பார்.......'என்ன்டா இது... ! கடிதம் எழுதியும் தந்தி அடித்தும் பிரச்னையை இழுத்தடித்து சிங்களவனுக்கு நல்ல நீண்ட நெடிய சந்தர்ப்பம் தந்து ஈழத்த‌மிழன் எல்லோரையும் சாகடிப்பது என்பது நமது ராஜ(நரித்)தந்திரம் ஆயிற்றே..! இந்தத் தம்பி ஏன் அதற்குப் போட்டிக்கு வர்றான்' என்று).

இதுதான் விஜய்யின் அரசியல்!

ஒரு வார அதிரி புதிரிக்குப் பின்பு 'இப்போதைக்கு நேரடி அரசியல் இல்லை' என்ற முடிவுக்கு விஜய் வந்திருபதாகக் கூறப் படுகிறது.

அதே நேரம் 'மக்க்ள் பிரச்னைகளுக்காக எனது ரசிகர்களைத் திரட்டிப் போராடுவேன் ' என்றும் கூறுகிறார் விஜய். ( அட... இதுதான் சார் நிஜமாவே அரசியல்!)

அண்மையில் இது பற்றி விஜய்யின் தந்தையும் மரியாதைக்குரிய இயக்குனருமான எஸ். ஏ. சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறிய ஒரு விஷயம் கவனிக்கத் தக்கது.


' தி.மு.க விற்கு எதிராகப் போகாத நிலையில் விஜய்யின் அரசியல் இருக்கும்' என்றெல்லாம் அதில் கூறியிருந்த சந்திர சேகர் சொல்லியிருந்த இன்னொரு விஷயம்...." விஜய்யின் அரசியல் பிரவேசத்தைப் பார்த்து ( விஜய்யின் ரசிகர்கள் பலத்தைப் பார்த்து )விஜய்காந்தே பயப்படுகிறார்." என்பதுதான்.


இப்படி ஒரு கருத்தை( அது உண்மையென்றே வைத்துக் கொண்டாலும்) சந்திர சேகர் நேரடியாகச் சொன்னது எப்படி?

விஜய்காந்தின் ஆரம்பகால சினிமா வெற்றிகளில் மிகப் பெரும் பங்கு சந்திரசேகரையே சாரும். விஜய்காந்தின் வெற்றியின் குரு என்று சந்திரசேகரைத் தாராளமாகச் சொல்லலாம். அந்த நன்றி காரணமாக தமது கருத்தை எதிர்த்து விஜய்காந்த் ( வெளிப்படையாகப் )பேச மாட்டார் என்று இயக்குனர் நினைத்திருக்கலாம். மீறிப் பேசினால் அதையே விஜய்யின் பரபரப்பான அரசியல் பிரவேசத்திரற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று திட்ட மிட்டிருக்கலாம்.


எப்படி ஆரம்பத்தில் ரஜினிகாந்துக்கும் ( அய்யோ பாவம்) விஜயகாந்துக்கும் ஒரு அரசியல் ஒப்பீடு ஏற்பட்டதோ அப்படி ஒரு ஒப்பீட்டை எடுத்த எடுப்பிலேயே விஜய்காந்த் மூலம் விஜய்க்கு ஏற்படுத்த முடிவு செய்திருக்கலாம். இதைத் தவிர்பதற்காகவே இதற்குப் பதில் சொல்லாமல் விஜய்காந்த் அமைதி காக்கலாம் இன்றுவரை.


ஒரு விசயம் மறக்க முடியாதது.
யாருடைய ஆதரவும் இன்றி... சொல்லப் போனால் விஜய்காந்தின் ஆதரவு கூட இல்லாமல்... விஜய்காந்தின்ரசிகர்கள்உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல.இன்று வரை அரசியலில் விஜய்காந்தின் தங்க நிமிடம் என்று நான் அதைத்தான் சொல்லுவேன்(விருத்தாச்சலம் வெற்றியை விட)
ஆனால் அதன் பின்னர் விஜய்காந்த் அரசியலில் செய்தது எல்லாம் தவறுகள்தான். விளைவு?
'விஜய்காந்த் நினைத்தால் ஒருவரது வெற்றியைத் தடுக்க முடியும். மற்றபடி அவரால் ஜெயிக்க முடியாது.அவர் ஒரு அரசியல் கத்தி. அதைக் கையில் வைத்து இருப்பவர் தனது எதிரியின் கழுத்தை வறட் வறட் என்று நன்றாக அறுக்க முடியும்" என்றாகி விட்டது.
விஜய் ரசிகர்களைப் பொறுத்தவரை ஒரு அமைதியான வேகம் அவர்களிடம் இருப்பதை உணர முடிகிறது.இதுவரை பயன்படுத்தப்படாத உத்வேகம் அவர்களது பலம். இயக்குனர் சந்திர சேகரால் அவர்களை ஒரு வகையிலாவது பயன்படுத்திக் கொள்ள முடியும். ஏனெனில் யாரை நேரடியாக இழுக்க வேண்டும்; யாரிடம் அடக்கி வாசிக்க வேண்டும் என்ற நேக்கு போக்கு அவரிடம் இருக்கிறது.
அதே நேரம் இதுவரை விஜய் செய்திருக்கும் (அரசியல் அல்லாத?) அரசியல் பாராட்டும்படி இல்லை என்பதையும் குறிப்பிட வேண்டியது கட்டாயமாகிறது.
சரி.. ... இயக்குனர் குறிப்பிட்டது போல, உண்மையிலேயே விஜய்யைப் பார்த்து விஜய்காந்த் பயப்படுகிறாரா? அல்லது பயப்பட வேண்டிய நிலையில் இருகிறாரா?
விஜய்காந்தின் தாய்மொழி தெலுங்கு என்றாலும் ( அவரை ஆதரிக்கும் பலபேருக்கு அது தெரியாது என்பது வேறு விசயம்), ' ஏய்க்க்... நான் மதுரைக்காரன்ல்ல.....' என்ற அடையாளம் ... மேடைகளில் அவர் பேசும்போது, " வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும் ' என்ற அவரது பேச்சு கொஞ்சம் உணர்வுடன் இருப்பதாகவே தோன்றியது , படங்களில் அவர் மாய்ந்து மாய்ந்து பேசிய 'தமிழன்' வசனங்கள்... எல்லாம் அவருக்குப் பெரும்பலம். அவரை தமிழராகவே எல்லோரும் பார்த்தார்கள் .
ஆனால் கல்யாணம் என்று வந்த போது தேடிப் போய்த் தெலுங்கு குடும்பத்துப் பெண்ணாகப் பார்த்து செய்தது முதல் சறுக்கல்.( அல்லது பொது மக்களிடம் குட்டு வெளிப் பட்ட முதல் சம்பவம்)


சரி .. நடந்தது நடந்து போச்சு... பொண்டாட்டி , புள்ளைன்னு ஆயிப் போச்சு.. இனிமே மாத்த முடியாதுதான்.
ஆனால் கட்சி ஆரம்பித்த பின்பு மைத்துனரின் விருப்பப்படி பல்வேறு ஊர்களில் கட்சிப் பதவிகளில் தெலுங்கு பேசுபவர்களுக்குத் திட்டமிட்டு ப் பதவிகள் தர‌ப் படுவதாக வந்த புகார்கள் .....
மனைவி , மைத்துனரின் கருத்துப்படி காங்கிரசோடு கூட்டணி அமைத்து நா....ற்பது தொகுதியும் வென்று உடனடியாக ஆட்சியைக் கலைத்து முதல்வராகிவிடலாம் என்ற ஆசையில் , காங்கிரசை எதிர்க்கக் கூடாது என்று .....
ஈழத் தமிழர் பிரச்னையில் வாயில் ஒரு டன் அல்வாவையும் கைகால்களில் 100 டன் இரும்பையும் கட்டிக் கொண்டவர்போல அமைதிகாத்தது...... ( அதிலும் காங்கிரசாரைக் குளிர்விக்க பிரபாகரன் மேல் உள்ள பற்றால் தன் மகனுக்கு அந்தப் பெயர் வைக்கவில்லைகேப்டன் பிரபாகரன் பட ஞாபகமாகத்தான் வைத்தேன் என்று கதர்குல்லா ஆட்களுக்குக் குல்லா [போட்டது எல்லாம் சகிக்க முடியாத வழுக்கல்கள்)
" மின்சாரப் பிரச்னையைத் தீர்க்க என்னிடம் திட்டம் உண்டு.. ஆனால் அதை நான் ஆட்சிக்கு வந்தால்தான் சொல்வேன். இபபவே சொன்னா காப்பி அடிச்சுடுவாங்க' என்ற ரீதியில் பிதற்றியது......
" நான் ஆட்சிக்கு வந்தால் ரேசன் பொருட்களை வீடு தேடி வந்து தரச் செய்வேன்" என்று அறிவித்ததன் மூலம் , தானும் அதே நாற்றக் குட்டையில் ஊறிய மட்டை என்று நிரூபித்தது..!
கட்சியின் கொள்கைத் திட்டத்தில் " தமிழ் மொழியைக் காப்போம் .. அனைத்து மொழிகளையும் கற்போம்" என்று சொல்லாமல் , மனைவி மைத்துனரின் தெலுங்கு ஆதிக்கம் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருந்த அதே சமயத்தில் கொள்கைத் திட்டத்தில் "அன்னை மொழியைக் காப்போம்; அனைத்து மொழிகளையும் கற்போம் " என்று அறிவித்ததன் மூலம், " விஜய்காந்த் யாரோட அன்னை மொழியைக் கற்போம்னு சொல்றாரு? அவரு அன்னை மொழியான தெலுங்கைச் சொல்றாரா? இல்லை நம்ம அன்னை மொழியான தமிழைச் சொல்றாரா? என்ற குழப்பத்தை ஏற்படுத்தியது.......


அண்மைக் கால விசயம் என்றால் திமுக சொல்படி கேட்ட காங்கிரசின் சொல்படி கேட்டு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஈழ ஆதரவுக் கூட்டணியின் ஓட்டுக்களைப் பிரித்து அதைத் தமிழகத்தில் தோற்கடித்து ஈழத்தின் துரோகிகள் பட்டியலில் இணைந்தது.....
இபப‌டி விஜய்காந்த் செய்த தவறுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட விஜய்காந்த் வேறு. ஆனால் கிடைத்த விஜயகாந்த் வேறு.
ஆக ,மேற்கொண்டு விஜய்காந்த் தனது மனைவி மைத்துனருக்கு அரசியலில் அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் விருப்பப்படியும் குடும்பத்துக்கு வெளியேயும் தவறான ஆலோசனை சொல்பவர்களின் பேச்சையே கேட்டுக் கொண்டிருந்தால் சந்திரசேகர் சொன்னபடி இப்போது இல்லாவிட்டாலும் இனிமேலாவது விஜய்யைப் பார்த்து பயப்படவேண்டிய நிலை வரலாம்.
விஜய் என்ன... " வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் பாடலில் ஒரு தம்பி மைக்கைப் பிடித்துக் கொண்டு உறைந்த பார்வையுடன் நிற்பானே.....
அவனைப் பார்த்துக் கூடப் பயப்பட வேண்டிய நிலை வரலாம். !

21 comments:

சரவணகுமரன் said...

விஜய் அரசியலுக்கு வருறத நினைச்சு தமிழ்நாடே பயந்திட்டுதானே இருக்கு?

சரவணகுமரன் said...

//ரசிகர் மன்றத்தின்
துணையோடு விஜய் தீவிரமாகக் களம் இறங்குவார் என்று எதிர்பார்த்த முட்டாள்களில் நானும் ஒருவன்//

நீங்க தான் இதுக்கெல்லாம் காரணமா? :-)

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல நெத்தியடியான கருத்துக்கள்

வாங்க கொஞ்சம்

நிலா அது வானத்து மேல!

கல்கி said...

அண்ணே எனக்கு அரசியல் எல்லாம் தெரியாது. அதனால நான் அரசியல் பத்தி எஅதுவும் இங்க பேசல.

//விஜய்காந்தின் தாய்மொழி தெலுங்கு என்றாலும் ( அவரை ஆதரிக்கும் பலபேருக்கு அது தெரியாது என்பது வேறு விசயம்),//

அண்ணே, அவரு சார்ந்திருக்கிற சாதி தெலுங்கு பேசும் சாதி. அவ்வளவுதான். அவரும் தமிழர்தான். பல நூறு வருஷத்துக்கு முன்னாடியே ஆந்திராவில இருந்து இங்க வந்து குடியேறினவங்க. அப்போ அந்த சாதியை சேர்ந்த யாரும் அரசியலுக்கு வரக்கூடாதா? முதல்வராகனும்ன்னு நினைக்கக்கூடாதா? அப்புறம் எதுக்கு ரேஷன் கார்டு, ஓட்டுரிமை எல்லாம்? அவரு தமிழர் இல்லைன்னு நீங்க சொன்னீங்கன்னா கொஞ்சம் முன்னாள் முதல்வர்களோட வரலாறும் எடுத்துப்பாருங்க. இன்னாளில் இந்தியாவில் பிறக்காத சிலர் செஞ்சிகிட்டு இருக்குற அராஜகத்தையும் கொஞ்சம் நினைச்சுப்பாருங்க.

உங்களுக்கு தெரியுமா இல்ல தெரியாதான்னு எனக்கு தெரியல... சாதி மற்றும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து போராடின பெரியார் கூட தெலுங்கு பேசுபவர்தான். அவரை தெலுங்கு பேசுறவர்ன்னு ஒதுக்க முடியுமா உங்களால?

விஜயகாந்தின் வளர்ச்சி பொறுக்காமலும், மேலும் வளரவிட்டா சிலரால அரசியல் பண்ண முடியாதுங்குற காரணத்தாலும் சிலர் கிளப்பிவிடும் தேவையற்ற பிரச்சாரம்தான் இது.

என்ன மொழி பேசுறாங்கன்னு ஆராய்ச்சி பண்ணாம, மக்களுக்கு உருப்படியா எதாவது பண்ணுறாங்களான்னு பாருங்கண்ணே.

//ஆனால் கல்யாணம் என்று வந்த போது தேடிப் போய்த் தெலுங்கு குடும்பத்துப் பெண்ணாகப் பார்த்து செய்தது முதல் சறுக்கல்.//

ஒரே சாதியில் கல்யாணம் பண்ணது தப்புன்னு சொல்லுறீங்களா?

ஏன் இந்தியரில்லாத ஒரு தாய்க்கு பிறந்ததிற்காக நாளை

கல்கி said...

cont... ராகுல் காந்திக்கு பதவி மறுக்கப்படுமா?

குறை ஒன்றும் இல்லை !!! said...

உங்கள் மொழி பிரிப்பு கொள்கையை ஏற்கமுடியாதது. மேலும் விஜயகாந்த் ஒன்றும் மிகச்சிறந்த மனிதர் அல்ல அவர்மேல் குற்றங்களை தேட.. நீங்க வேறு நல்ல காரணங்களை தேடியிருந்திருக்கலாம்..
மற்றபடி கண்டீப்பாக விஜய் மீது பயம் இருக்கும்.. ஏன் என்றால் மற்றொரு காமெடியனை யாரும் ரசிக்க மாட்டார்கள்..

சு.செந்தில் குமரன் said...

அன்பு சரவண குமரனுக்கு...

ரசிகர் மன்றத்தின் துணையோடு விஜய் தீவிரமாகக் களம் இறங்குவார் என்று எதிர்பார்த்த முட்டாள்களில் நானும் ஒருவன்//

நீங்க தான் இதுக்கெல்லாம் காரணமா? :-)


ச‌த்திய‌மா நான் இல்லீங்க‌...தான் ஆடா விட்டாலும் த‌ன் ச‌தை ஆடும்னு சொல்வாங்க‌ இல்லியா....? அந்த‌ மாதிரி த‌ன் ம‌னைவியின் இன‌த்துக்காக‌ விஜ‌ய் க‌ளம் இற‌ங்குவாருன்னு நான் இன‌ உண‌ர்வோட‌ நினைச்சேன். அம்புட்டுதேன்ங்க‌...!

ந‌ன்றி ஸ்டார்ஜ‌ன் விரைவில் வ‌ருகிறேன்.

சு.செந்தில் குமரன் said...

அன்புத் த‌ம்பி (அல்ல‌து த‌ங்கை க‌ல்கிக்கு)

விஜ‌ய்காந்த் த‌ன்னை த‌மிழ‌ருன்னு நினைச்சார்னா.. அப்புறம் ஏன் ப‌ல‌ ஊர்க‌ள்ல‌ க‌ட்சியின் முக்கிய‌ப் ப‌த‌விக‌ளுக்கு தெலுங்கு மொழி பேசுற‌வ‌ங்க‌ளா பாத்து நிய‌மிச்ச‌தா பிர‌ச்னை வ‌ந்த‌து?

ப‌ல‌ நூறு வ‌ருஷ‌ங்க‌ளா கேர‌ளாவுல‌ வாழுற தமிழ‌ன் இன்னும் அங்க‌ அடிமையாதான் வாழ‌றான் .இப்ப‌வும் இடுக்கி மாவ‌ட்ட‌த்துல த‌மிழ‌ர்க‌ள் யாராவ‌து த‌ன் புள்ளைக்கு ப‌ள்ளிக் கூட‌த்துல‌ த‌மிழ் சொல்லித் த‌ர‌ணும்னு சொன்னா , உட‌னே நீ சொன்ன ரேஷ‌ன் கார்ட‌ ர‌த்து ப‌ண்றாங்க‌ தெரியுமா? சாதியா ம‌ட்டும் பிரிஞ்சு இருக்க‌ற‌து போதாதுன்னு மொழி ரீதியாவும் த‌மிழ‌ன‌ இங்க‌யே ஏமாத்த‌ப் பாக்க‌றாங்க‌ளே ..அதான்ப்பா ரொம்ப‌க் க‌ஷ்ட‌மா இருக்கு. நீ சொன்ன‌ மாதிரி முன்னாள் முத‌ல்வ‌ர்க‌ள் வரலாற்றையெல்லாம் எடுத்துப் பார்த்து நொந்து போன‌தாலதான் இனிமேயாச்சும் க‌வ‌ன‌மா இருப்போம்னு தோணுது. த‌ப்பாம்மா?

அப்புற‌ம் பொய் சொல்ல‌க் கூடாது..பெரியார் தெலுங்கு பேசின‌வ‌ர் இல்ல்ல்ல்ல்ல‌. க‌ன்ன‌ட‌ம்..! தெரிய‌லைன்னா‌ இனிமே தெரிஞ்சிக்க‌.ச‌ரியாப்பா? அப்புற‌ம் பெரியார‌ சாதி மொழி பாக்காம‌ த‌மிழ‌ன் ஆத‌ரிச்சான். அத‌னால‌தான் த‌மிழ் நாட்டுல‌ எல்லா மொழிக்கார‌னும் இன்னிக்கு வ‌ரை ந‌ல்லா த‌மிழ‌னையே ஏமாத்திப் பொழைக‌ முடியுது.ஆனா அதுக்கு பிர‌தி உப‌க‌ர‌மா எந்த‌ மாநில‌த்துல‌யும் இன்னிக்கு வ‌ரை த‌மிழ‌னை சாத‌ர‌ண‌மா கூட‌ பொழைக்க‌ விட‌ல‌ க‌ண்ணு.


அதே போல‌ உன் க‌ருத்துப் ப‌டியே இந்திய‌ர் அல்லாத‌வ‌ர் ப‌ண்ற‌ அராஜ‌க‌ங்க‌ளைத் த‌டுக்க நினைக்க‌ற மாதிரியே இனிமே த‌மிழ‌ர் அல்லாத‌வ‌ர் உட்ப‌ட யாருமே அராஜ‌க‌ம் செய்ய‌ விடாம‌ த‌டுக்கணுமில்ல‌ப்பா....!

விஜ‌ய‌காந்த் எங்க‌ம்மா பெருசா வ‌ளந்தாரு. அவ‌ரே அவர‌ கெடுத்துக்கிட்டாரும்மா....

//‌ஒரு விசயம் மறக்க முடியாதது.
யாருடைய ஆதரவும் இன்றி... சொல்லப் போனால் விஜய்காந்தின் ஆதரவு கூட இல்லாமல்... விஜய்காந்தின்ரசிகர்கள்உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல.இன்று வரை அரசியலில் விஜய்காந்தின் தங்க நிமிடம் என்று நான் அதைத்தான் சொல்லுவேன்(விருத்தாச்சலம் வெற்றியை விட)
ஆனால் அதன் பின்னர் விஜய்காந்த் அரசியலில் செய்தது எல்லாம் தவறுகள்தான். விளைவு?
'விஜய்காந்த் நினைத்தால் ஒருவரது வெற்றியைத் தடுக்க முடியும். மற்றபடி அவரால் ஜெயிக்க முடியாது.அவர் ஒரு அரசியல் கத்தி. அதைக் கையில் வைத்து இருப்பவர் தனது எதிரியின் கழுத்தை வறட் வறட் என்று நன்றாக அறுக்க முடியும்" என்றாகி விட்டது.//

உன் அண்ணனாகிய‌ நான் எழுதின‌ இந்த‌ வ‌ரிக‌ளை ந‌ல்லா ப‌டிக்க‌லியாப்பா?

//என்ன மொழி பேசுறாங்கன்னு ஆராய்ச்சி பண்ணாம, மக்களுக்கு உருப்படியா எதாவது பண்ணுறாங்களான்னு பாருங்கண்ணே.// அப்ப‌டினு சொல்லி இருந்த‌ ... விஜ‌ய்காந்த் ம‌க்க‌ளுக்கு உருப்ப‌டியா ப‌ண்ற‌ ஆளா தெரிஞ்சா அண்ணண் ஏம்மா மொழி ஆராய்ச்சி எல்லாம் ப‌ண்ண‌ப் போறேன்? மகாத்மா காந்தி , அன்னை தெரசா, விவேகானந்தர்கிட்ட நாம மொழி ஆராய்ச்சி பண்ணினமா? ... அவ்வளவு ஏன் ... எம் .ஜி.ஆர் கிட்ட கூட நாம அதிகமா மொழி ஆராய்ச்சி ப‌ண்ண‌லியே..!

நான் தான் சொல்லி இருக்க‌னேப்பா...//ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட விஜய்காந்த் வேறு. ஆனால் கிடைத்த விஜயகாந்த் வேறு.// அப்ப‌டின்னு நான்தான் தெளிவா சொல்லி இருக்க‌னேப்பா!

ஒரு சாதியில காத‌ல் கார‌ண‌மா க‌ல்ய‌ண‌ம் ப‌ண்ணா தப்பு இல்ல‌. ஆனா மூச்சுக்கு முன்னூறு த‌ட‌வை த‌மிழ் த‌மிழ்னு பேசிட்டு மேடைகளில் பேசும்போது எல்லாம் , " வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும் ' என்று முழங்கிவிட்டு கல்ய‌ண‌ம்னு வ‌ந்த‌ உட‌ன சாதி மொழி வெறியோட தேடிப் புடிச்சுக் க‌ல்யாணம் ப‌ண்ணின‌து த‌மிழ்த் துரோக‌ம்தானே( உன் தாய்மொழியும் த‌மிழா இருந்தாதான் இது எவ்வ‌ள‌வு பெரிய‌ துரோக‌ம்னு உன்னால‌ புரிஞ்சிக்க‌ முடியும். தெலுங்கா இருந்தா உன‌க்கு வ‌லிக்காது.)

//கட்சியின் கொள்கைத் திட்டத்தில் " தமிழ் மொழியைக் காப்போம் .. அனைத்து மொழிகளையும் கற்போம்" என்று சொல்லாமல் , மனைவி மைத்துனரின் தெலுங்கு ஆதிக்கம் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருந்த அதே சமயத்தில் கொள்கைத் திட்டத்தில் "அன்னை மொழியைக் காப்போம்; அனைத்து மொழிகளையும் கற்போம் " என்று அறிவித்ததன் மூலம், " விஜய்காந்த் யாரோட அன்னை

சு.செந்தில் குமரன் said...

continued....
மொழியைக் கற்போம்னு சொல்றாரு? அவரு அன்னை மொழியான தெலுங்கைச் சொல்றாரா? இல்லை நம்ம அன்னை மொழியான தமிழைச் சொல்றாரா? என்ற குழப்பத்தை ஏற்படுத்தியது.......// இது சாதார‌ணத் துரோக‌மா? ஒரு த‌மிழ‌ன் தெலுங்க‌ர்க‌ளை ந‌ம்ப‌ வைத்து பின்ன‌ர் இப்ப‌டி ப‌ல்டி அடித்தால் அதை அவ‌ங்க‌ ஒத்துகுவாங்க‌ளா?

ராகுல்காந்திக்கு ப‌த‌வி ம‌றுக்க‌ப்ப‌டுவ‌து ச‌ரின்னு நீ நினைச்சா விஜ‌ய்காந்த்துக்கு வெற்றி ம‌றுக்க‌ப்ப‌டுவ‌தும் ச‌ரின்னு நீ ஒத்துக்க‌ணும்.த‌ப்புன்னு நினைச்சாக்கூட‌ நாளைக்கு ராகுல்காந்திக்கு ம‌னைவியா சோனியா திட்ட‌ம் போட்டு ஒரு இத்தாலிக்காரிய‌ அதும் சிசிலிங்கற தன்னோட இனப் பிரிவுல இருந்தே கொண்டு வந்தா நீ ஒத்துக்குவியா? அப்ப‌வும் ராகுல்காந்திய நீ ஆதரிப்பியா?

//மனைவி , மைத்துனரின் கருத்துப்படி காங்கிரசோடு கூட்டணி அமைத்து நா....ற்பது தொகுதியும் வென்று உடனடியாக ஆட்சியைக் கலைத்து முதல்வராகிவிடலாம் என்ற ஆசையில் , காங்கிரசை எதிர்க்கக் கூடாது என்று .....
ஈழத் தமிழர் பிரச்னையில் வாயில் ஒரு டன் அல்வாவையும் கைகால்களில் 100 டன் இரும்பையும் கட்டிக் கொண்டவர்போல அமைதிகாத்தது...... ( அதிலும் காங்கிரசாரைக் குளிர்விக்க பிரபாகரன் மேல் உள்ள பற்றால் தன் மகனுக்கு அந்தப் பெயர் வைக்கவில்லைகேப்டன் பிரபாகரன் பட ஞாபகமாகத்தான் வைத்தேன் என்று கதர்குல்லா ஆட்களுக்குக் குல்லா [போட்டது எல்லாம் சகிக்க முடியாத வழுக்கல்கள்) // இது நியாய‌மா?


//அண்மைக் கால விசயம் என்றால் திமுக சொல்படி கேட்ட காங்கிரசின் சொல்படி கேட்டு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஈழ ஆதரவுக் கூட்டணியின் ஓட்டுக்களைப் பிரித்து அதைத் தமிழகத்தில் தோற்கடித்து ஈழத்தின் துரோகிகள் பட்டியலில் இணைந்தது.....//
இதற்கு மன்னிப்பு உண்டா?

உன் அண்ண‌ன் யோசிக்காம‌ எதையும் எழுத‌ மாட்டென்ப்பா..

ச‌ரியான‌ பாதையில் சிந்திக்கிற‌ வாய்ப்பு உன‌க்கு அமைய‌ வாழ்த்த‌றேன் . அப்ப‌டி அமைஞ்சா என் க‌ருத்துக்கே நீ சிக்கிர‌ம் வ‌ருவ‌ப்பா...!

சு.செந்தில் குமரன் said...

அன்புக் குறையொன்றுமில்லை.....

உங்கள் பின்னூட்டத்தின் கடைசிவரி சிரிப்பை வரவழைத்தது.

//விஜயகாந்த் ஒன்றும் மிகச்சிறந்த மனிதர் அல்ல அவர்மேல் குற்றங்களை தேட.. நீங்க வேறு நல்ல காரணங்களை தேடியிருந்திருக்கலாம்..//

உங்கள் கருத்துப்படியே சிறந்த‌ ம‌னித‌ர் அல்லாத‌வ‌ரிட‌ம் ந‌ல்ல‌ கார‌ண‌ங்க‌ள் எப்ப‌டி இருக்க‌ முடியும்?

மொழிபிரிப்புக் கொள்கையை ஏற்க‌ முடியாது என்று இன்னும் பேசிக் கொண்டிருந்தால் பக்கத்து மாநிலங்களைப் பாருங்கள்.அப்படியும் ஏற்க முடியாது எனில் அடுத்த‌டுத்த‌ த‌லைமுறைக‌ளுக்கும் அனுப‌வியுங்க‌ள்.வேறு என்ன‌ சொல்ல‌?

கல்கி said...

என்னண்ணே ரொம்ப கடுப்புல இருக்கீங்க போல! :-)

//விஜ‌ய்காந்த் த‌ன்னை த‌மிழ‌ருன்னு நினைச்சார்னா.. அப்புறம் ஏன் ப‌ல‌ ஊர்க‌ள்ல‌ க‌ட்சியின் முக்கிய‌ப் ப‌த‌விக‌ளுக்கு தெலுங்கு மொழி பேசுற‌வ‌ங்க‌ளா பாத்து நிய‌மிச்ச‌தா பிர‌ச்னை வ‌ந்த‌து?//
தன் சாதியை சேர்ந்தவர்களுக்கு பதிவிகள் கொடுப்பதும், சாதி ஓட்டுகள் வாங்குவதும் தமிழக அரசியலில் புதிதில்லையே!

//இப்ப‌வும் இடுக்கி மாவ‌ட்ட‌த்துல த‌மிழ‌ர்க‌ள் யாராவ‌து த‌ன் புள்ளைக்கு ப‌ள்ளிக் கூட‌த்துல‌ த‌மிழ் சொல்லித் த‌ர‌ணும்னு சொன்னா , உட‌னே நீ சொன்ன ரேஷ‌ன் கார்ட‌ ர‌த்து ப‌ண்றாங்க‌ தெரியுமா? //

இருக்கலாம்! இது எனக்கு புது விசயம் தான். ஆனால் எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் இருக்கும் கோடிக்கணக்கான தெலுங்கு பேசும் மக்கள் யாருக்கும் தெலுங்கு எழுதப் படிக்க தெரியாது. அவர்கள் பேசுவது 50:50 தான். ஆந்திராவில் இருப்பவர்கள் கேட்டால் என்ன பேசுறாஙக்ன்னு தெரியாம முழிப்பாங்க. விஜயகாந்த் கூட அப்படித்தான்.

//அப்புற‌ம் பொய் சொல்ல‌க் கூடாது..பெரியார் தெலுங்கு பேசின‌வ‌ர் இல்ல்ல்ல்ல்ல‌. க‌ன்ன‌ட‌ம்..! தெரிய‌லைன்னா‌ இனிமே தெரிஞ்சிக்க‌.ச‌ரியாப்பா? //

சரிண்ணே தெரிஞ்சிக்கிறேன். பொதுவா நாயக்கர்/நாயுடு சாதியினர் தெலுங்கு பேசுவாங்க.அப்புறம் ரெண்டு பேருமே பலிஜா நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள்தான். அதனாலதான் அவர் தெலுங்குன்னு நெனச்சேன். மன்னிச்சிடுங்க.

கல்கி said...

cont...
//அப்புற‌ம் பெரியார‌ சாதி மொழி பாக்காம‌ த‌மிழ‌ன் ஆத‌ரிச்சான்//
ஒரு சின்ன திருத்தம். பெரியார் சாதி மொழி பாக்காம தமிழனுக்காக போராடினார். இல்லன்னா இன்னும் தமிழன் பிராமணர்களுக்கு அடிமையாத்தான் இருந்திருப்பான்.

//அத‌னால‌தான் த‌மிழ் நாட்டுல‌ எல்லா மொழிக்கார‌னும் இன்னிக்கு வ‌ரை ந‌ல்லா த‌மிழ‌னையே ஏமாத்திப் பொழைக‌ முடியுது.ஆனா அதுக்கு பிர‌தி உப‌க‌ர‌மா எந்த‌ மாநில‌த்துல‌யும் இன்னிக்கு வ‌ரை த‌மிழ‌னை சாத‌ர‌ண‌மா கூட‌ பொழைக்க‌ விட‌ல‌ க‌ண்ணு.//

இதுக்கு வேற மாநில மக்கள் மட்டும் காரணம் இல்லண்ணே, தமிழக அரசாங்கம் சரியா இருந்தா எல்லாம் சரியா இருக்கும். நடக்கும் ஒரு சில எதிர்மறையான விஷயங்களை வைத்துக்கொண்டு ஒரு சமூகத்தையோ ஒரு மாநிலத்தையோ தவறாக சொல்லுவது நன்றாகவா இருக்கிறது?

//ஒரு சாதியில காத‌ல் கார‌ண‌மா க‌ல்ய‌ண‌ம் ப‌ண்ணா தப்பு இல்ல‌. ஆனா மூச்சுக்கு முன்னூறு த‌ட‌வை த‌மிழ் த‌மிழ்னு பேசிட்டு மேடைகளில் பேசும்போது எல்லாம் , " வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும் ' என்று முழங்கிவிட்டு கல்ய‌ண‌ம்னு வ‌ந்த‌ உட‌ன சாதி மொழி வெறியோட தேடிப் புடிச்சுக் க‌ல்யாணம் ப‌ண்ணின‌து த‌மிழ்த் துரோக‌ம்தானே//

நான் மறுபடியும் சொல்லுறேண்ணே, கல்யாணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். 20 வருடங்களுக்கு முன்பு நடந்த கல்யாணத்தில் நீங்கள் குற்றம் கண்டுபிடிப்பது தேவையில்லாத ஒன்று. அரசியலில் இருக்கும் எல்லோரும் வேறு சாதியில்தான் திருமணம் செய்கிறார்களா?

கல்கி said...

cont..

//( உன் தாய்மொழியும் த‌மிழா இருந்தாதான் இது எவ்வ‌ள‌வு பெரிய‌ துரோக‌ம்னு உன்னால‌ புரிஞ்சிக்க‌ முடியும். தெலுங்கா இருந்தா உன‌க்கு வ‌லிக்காது.)//

அவரோட விருப்பப்படி கல்யாணம் பண்ணதுல உங்களுக்கு என்ன துரோகமா படுது, என்ன வலின்னு எனக்கு புரியல.

//அதே சமயத்தில் கொள்கைத் திட்டத்தில் "அன்னை மொழியைக் காப்போம்; அனைத்து மொழிகளையும் கற்போம் " என்று அறிவித்ததன் மூலம், " விஜய்காந்த் யாரோட அன்னை
மொழியைக் கற்போம்னு சொல்றாரு? //

அவங்கவங்க அன்னை மொழியை கத்துக்க வேண்டியதுதான், அவரு ஒண்ணும் மற்ற மொழிகளை அழிப்போம்ன்னு சொல்லலைல்ல?

ஈழத்தமிழர்கள் விஷயத்துல மத்தவங்க மட்டும் என்ன பண்ணாங்க? இல்ல நீங்களும் நானும்தான் என்ன பண்ணோம்? மிஞ்சிப்போனா நீங்க சோனியாவையும் கருணாநிதியையும் திட்டி ரெண்டு பதிவு போட்டிருப்பீங்க. நிறைய சிறு கட்சிகள் கூட ஈழதமிழர் பிரச்சனைகளுக்கு போராடியது. அவங்களுக்கு எல்லாம் நம்ம தமிழ் மக்கள் என்ன ஆதரவு கொடுத்தாங்க?

//அதிலும் காங்கிரசாரைக் குளிர்விக்க பிரபாகரன் மேல் உள்ள பற்றால் தன் மகனுக்கு அந்தப் பெயர் வைக்கவில்லைகேப்டன் பிரபாகரன் பட ஞாபகமாகத்தான் வைத்தேன் என்று கதர்குல்லா ஆட்களுக்குக் குல்லா [போட்டது எல்லாம் சகிக்க முடியாத வழுக்கல்கள்//

உண்மையிலயே அவரு அந்த படத்தின் நியாபகமா வச்சிருக்கலாம்ல. முன்பு கேள்விப்பட்டவரை அது உண்மையும்கூட. இப்போது ஈழ ஆதரவு ஓட்டுகள் வாங்குவதற்க்கு அவர் மாற்றிப் பேசியிருந்தால்தான் அது தவறு. உண்மையினை ஒப்புக்கொண்டது ஒரு தவறா?

//உன் அண்ண‌ன் யோசிக்காம‌ எதையும் எழுத‌ மாட்டென்ப்பா..

ச‌ரியான‌ பாதையில் சிந்திக்கிற‌ வாய்ப்பு உன‌க்கு அமைய‌ வாழ்த்த‌றேன் . அப்ப‌டி அமைஞ்சா என் க‌ருத்துக்கே நீ சிக்கிர‌ம் வ‌ருவ‌ப்பா...!//

அரசியலைப்பத்தி சிந்திக்கிற எண்ணம் இப்போதைக்கு எனக்கு இல்ல. அப்படியே நான் சிந்திச்சாலும் நிச்சயமா கண்மூடித்தனமா உப்பு சப்பு இல்லாத விஷயங்களை வைத்து ஒரு இயக்கத்தையோ / தனி மனுஷனையோ எதிர்க்கிற/ஆதரிக்கிற பழக்கம் இல்லாததால உங்க கருத்துக்கு நான் வர்றது கொஞ்சம் கஷ்டம் தான் :-)

கல்கி said...

நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். தி.மு.க வையும் அ.தி.மு.க வையும் தவிர வேறு ஏதாவது 3வது கட்சி ஆட்சிக்கு வராதா என்று எத்தனை நாள் யோசித்திருப்போம்? (எனக்கு அந்த ஆசை உண்டு). ஒருவரை மாற்றி ஒருவர் குறை சொல்வதைத் தவிர ரெண்டு கட்சிகளும் உருப்படியாக ஒன்றும் செய்வதில்லை.

மூன்றாவதாக ஒருவர் தனித்து நின்று போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதில் என்ன தவறு? அவர் மக்களுக்கு ஒன்றும் செய்யா விட்டாலும் போகிறது. மற்றவர்கள் மட்டும் என்ன செய்தார்கள்? வாய்ப்பே அளிக்காமல் அவர் ஒன்றும் நல்லது செய்பவர் போல் தெரியலில்லை என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமாகத்தான் தெரிகிறது எனக்கு.

சு.செந்தில் குமரன் said...

பெரும்பிள்ளை கல்கிக்குக்கு வணக்கம்,

ஆமாம் .. கடுப்புலதான் இருக்கேன். ரொம்ப நல்ல புள்ளையாட்டம் மொதல்ல பேசின உன் சுய ரூபத்த ஆரம்பத்துலயே புரிஞ்சுக்க முடியாமப் போச்சேன்னு என் மேல கடுப்பு.

உன்னோட பின்னூட்டங்கள நீயே ஒரு தடவ படிச்சுப் பாரு. நான் விஜய்காந்த் மேல வச்ச நியாயமான குற்றச் சாட்டுகளக் கண்டுக்காம ரொம்ப வ‌சதியா புறக்கணிச்சுட்டு எப்படியெல்லாம் கேவலமா சின்னச் சின்ன விசயங்கள மட்டும் இழுத்துப் புடிச்சு சப்பைக் கட்டுக் கட்டி உன்ன நீயே அசிங்கப் படுத்திக்கிட்டு இருக்கன்னு புரியும்( சரி அது உனக்குப் புடிக்கலாம் அது உன்னிஷ்டம்.)

//தன் சாதியை சேர்ந்தவர்களுக்கு பதிவிகள் கொடுப்பதும், சாதி ஓட்டுகள் வாங்குவதும் தமிழக அரசியலில் புதிதில்லையே!//

மத்தவங்க பண்ற அயோக்கியத்தனத்தையே இவரும் பண்ணுவார்னா என்ன கருமத்துக்கு இந்த 3வது? அந்த ரெண்டே அத செஞ்சுத் தொலைக்கட்டுமே.

தவிர உன் முட்டாள்தனமான வாதத்துக்கு இன்னொரு விளக்கம்.

ஒரு அரசியல் தலைவன் சாதிய கூட எப்படிப் பயன்படுத்துவான்னா....அந்தப் பகுதியில எந்த சாதி பேசுறவன் அதிகமோ அந்த சாதிக்குதான் அந்தப் பகுதிகள்ல தன் கட்சிப் பதவியில முக்கியத்துவம் தருவான். தலைவனாகிய தன்னோட ஜாதி என்ன? மொழி என்னன்னு பாத்து அந்த சாதி மொழி ஆட்கள் அதிகம் இல்லாத பகுதியிலக் கூட எங்கயோ இருக்கற ஒருத்தன தேடிப் புடிச்சுப் பதவி கொடுத்து மூக்கு உடைஞ்சு நிக்க மாட்டான், உங்க விஜயகாந்த் கட்சிடில நடந்த மாதிரி.

??எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் இருக்கும் கோடிக்கணக்கான தெலுங்கு பேசும் மக்கள் யாருக்கும் தெலுங்கு எழுதப் படிக்க தெரியாது. அவர்கள் பேசுவது 50:50 தான். //

என்னுடைய வேலுப்பிள்ளைப் பிரபாகரனும் இரண்டு தெலுங்கர்களும் கட்டுரையைப் படிச்சு இருந்தா நீ என் கிட்ட இத சொல்ல வேண்டிய தேவையே இருந்திருக்காது.

தமிழ் நாட்டு மக்கள் தொகையே ஆறரைக் கோடிதான். நீ கோ.......டிக்க்க்க் கணக்கான தெலுங்கர்கள்னு சொல்றதப் பார்த்த கூடிய சீக்கிரம் தமிழ்னாட்டின் பெரும்பான்மை மொழி தெலுங்குன்னு சொல்வீங்க போல.ம்ம்ம்ம்ம்....! இன்னும் நிறைய பேசுங்க. அப்பவாச்சும் பூனைக்குட்டி சீக்கிரம் வெளிய வரட்டும்.

அப்புறம் பெரியார் என்ன மொழி பேசினார்னு தெரியாத அளவுக்கு சாதி வெறி உன் கண்ண மறைச்சிருக்கு. அதுக்காக என் கிட்ட மன்னிப்பு கேட்கறது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஆந்திரனுக்கும் கன்னடனுக்கும் மலையாளிக்கும் சேர்த்துதான் பெரியார் போராடினார். ஆன அவன் எல்லாம் பெரியாரையும் மதிக்கல. பெரியாருக்குத் துணை நின்னு தங்களுகாகவும் உ ழைச்ச தமிழனையும் மதிக்கல.

ஆனா பெரியார் பேரச் சொல்லி த‌மிழ் நாட்டுல பொழைக்க வந்து தமிழனுக்கே வினையாப் போன மத்த மொழிக்காரன் அதிகம் . பெரியார் செஞ்ச சேவையை விட அதிக விலைய தமிழன் கொடுத்துட்டான். பாம்பு வாயில தப்பி பல்லி வாயில விழுந்த கதையாப் போச்சு தமிழன் கதை.

இன்னிக்கு தமிழ் நாட்டுக்கு எதிரா செயல்படுற மத்த மாநிலங்கள்ல எல்லாம் ஆட்சி அதிகாரஙள்ல ஒரு பிராமண லாபி இருக்கு . அவங்க தமிழன எதிரிய நினைச்சு தொடர்ந்து செயல்படுறதே தமிழன் பெரியாருக்கு அமைச்சுக் கொடுத்த களமும் அதனால அங்க எல்லாம் அவங்க ஆட்கள் பாதிக்கப்பட்டதும்தான்.


இதையேல்லம் புரிஞ்சிக்கணும்ணா நீ இன்னும் நிறைய படிக்கணும். என்னை சிறுபிள்ளைத்தனம்னு சொல்ற அளவு உன்னை அறிவாளியா நினைக்கிற நீ............. ம்ஹூம் .. படிக்க வாய்ப்பு இல்ல.

பெரியாருக்கு முன்னயே பிராமண எதிர்ப்பும் வேதங்கள் எதிர்ப்பும் இந்த மண்ணுல இருந்தது.

சு.செந்தில் குமரன் said...

continued...

//இதுக்கு வேற மாநில மக்கள் மட்டும் காரணம் இல்லண்ணே, தமிழக அரசாங்கம் சரியா இருந்தா எல்லாம் சரியா இருக்கும். நடக்கும் ஒரு சில எதிர்மறையான விஷயங்களை வைத்துக்கொண்டு ஒரு சமூகத்தையோ ஒரு மாநிலத்தையோ தவறாக சொல்லுவது நன்றாகவா இருக்கிறது?//

தமிழக அரசாங்கம் சரியா இல்லங்கறதாலதான் இனிமேயும் அந்த மாதிரியான‌ ஆட்கள் வரவேணாம்னு தோணுது. அதான் விஜய்காந்த் மேலயும் விமர்சனங்களா மாறுது.

அப்புறம் நீ ரொம்ப தப்பாப் பேசுற. நான் எந்த சமூகத்தையும் தப்பாச் சொல்லல. விஜய்காந்தின் அரசியலதான் விமர்சிச்சேன்.

பக்கத்து மாநிலத்தில் நடக்கிற விவரங்களும் அரசியலும் நடப்பது ஒரு சில சம்பவங்களா இல்ல ஒரு நோக்கத்துடன் கூடிய திட்டமிட்ட நிகழ்வுகளா என்பது புரியாமல், " தவறாக சொல்வது நன்றாகவா உள்ளது?" என்று மேட்டிமையான ஆளாகக் காட்டிக்கொள்ள பஜனை செய்கிற ரீதியில் பேசுவது அரைவேக்காட்டுத்தனம்.

//நான் மறுபடியும் சொல்லுறேண்ணே, கல்யாணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். 20 வருடங்களுக்கு முன்பு நடந்த கல்யாணத்தில் நீங்கள் குற்றம் கண்டுபிடிப்பது தேவையில்லாத ஒன்று. அரசியலில் இருக்கும் எல்லோரும் வேறு சாதியில்தான் திருமணம் செய்கிறார்களா?//

எப்போது நடந்தாலும் தப்பு தப்புதான் தம்பி. 20 வருடம் முன்பு செய்த கொலையில் குற்றாவாளி இப்போது சிக்கினால் சட்டம் சும்மா விடாது. நியாய தர்மங்களும் அப்படித்தான். நானும் மறுபடியும் சொல்றேன். காதல் வந்து விட்டது . திருமணம் செய்துகொள்ளாவிட்டால் ஏமாற்றிய பாவம் வந்து சேரும். ஒரே சாதி மொழி என்பதற்காக அந்தப் பாவத்தைச் செய்ய முடியுமா என்றால் சரி.

ஆனா மூச்சுக்கு முன்னூறு த‌ட‌வை த‌மிழ் த‌மிழ்னு பேசிட்டு மேடைகளில் பேசும்போது எல்லாம் , " வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும் ' என்று முழங்கிவிட்டு கல்ய‌ண‌ம்னு வ‌ந்த‌ உட‌ன சாதி மொழி வெறியோட தேடிப் புடிச்சுக் க‌ல்யாணம் ப‌ண்ணின‌து த‌மிழ்த் துரோக‌ம்தானே...?

//அரசியலில் இருக்கும் எல்லோரும் வேறு சாதியில்தான் திருமணம் செய்கிறார்களா?//

மறுபடியும் கேட்கிறேன் . மத்த அரசியல்வாதிங்க சரி இல்லன்னு சொல்லிதான் நீங்க விஜயகாந்த ஆதரிக்கிறீங்க.... ஆனா மதத அரசியல்வாதிங்க பண்ற அதே தப்ப இவரும் பண்ணினா அதை பூசி மொழுகறீங்க..
மத்தவங்க பண்ணின தப்ப இவரும் பண்ணின அதுல என்ன தப்புன்னு கேட்கறீங்க. பண்றதுக்கு அழாக்குறையா அனுமதி கேட்கறீங்க.

ஆக, நீங்க நல்ல அரசியல் மாற்றத்த எதிர்பார்த்து விஜய்காந்த ஆதரிக்கல. உங்க சாதி மொழிங்கறதால ஆதரிக்கறீங்க.

நல்லாப் புரிஞ்சுக்க . சாதியில கல்யாணம் பண்றமா இல்லையாங்கறது இங்க பிரச்னை இல்ல. அதன் பிண்ணனி
நோக்கம்தான் முக்கியம்.

சு.செந்தில் குமரன் said...

continued....

//அவரோட விருப்பப்படி கல்யாணம் பண்ணதுல உங்களுக்கு என்ன துரோகமா படுது, என்ன வலின்னு எனக்கு புரியல.//

நீ சொல்ற விருப்பம் காதலா இருந்தா பரவால்ல. ஆனா .. தமிழன் தமிழன்னு சொல்லிட்டு தே....டிப் போய் தெலுங்குப் பெண்ணா பார்த்தது ஜாதிக்காரனுக்கு வலியாத் தெரியாது , அத மீறிப் பாக்குறவனுக்குதான் வழியாத் தெரியும்.

ஆனா அதைவிட முக்கிய விசயம் என்னன்னா....

நான் எனது கருத்தாக்கக் கட்டுரையிலேயே.....

//சரி .. நடந்தது நடந்து போச்சு... பொண்டாட்டி , புள்ளைன்னு ஆயிப் போச்சு.. இனிமே மாத்த முடியாதுதான்.
ஆனால் கட்சி ஆரம்பித்த பின்பு .....................................//

என்று நான் ஆரம்பத்திலேயே எழுதிவிட்டதை உன் வசதிக்கு மறைத்து விட்டு திரும்பத் திரும்ப அதைப் பற்றியே விமர்சிக்கும் நிலையை ஏற்படுத்துவதில் இருந்தே தெரிகிறது நீ ஒரு நியாயமான விமர்சகன் இல்லை என்பது.

அடுத்து ஒண்ணு சொல்லி இருக்க பாரு .. சூப்பர்.

//அவங்கவங்க அன்னை மொழியை கத்துக்க வேண்டியதுதான், அவரு ஒண்ணும் மற்ற மொழிகளை அழிப்போம்ன்னு சொல்லலைல்ல?//

ஆக என்னதான் தமிழைப் படிச்சாலும் எழுதினாலும் அதில் படைப்புத் திறமைகூடப் பெற்றாலும் உங்களால (விஜயகாந்த் , நீ , உங்களைப் போன்றவர்கள்)ஒரு தமிழன் என்ற நிலையிலிருந்து சிந்திக்கவே முடியாது என்பதற்கு நீ கொடுத்த ஒப்புதல் வாக்குமூலமாவே இதைக் கருதுகிறேன் . அதற்கு என் நன்றிகள்!

//ஈழத்தமிழர்கள் விஷயத்துல மத்தவங்க மட்டும் என்ன பண்ணாங்க? இல்ல நீங்களும் நானும்தான் என்ன பண்ணோம்? மிஞ்சிப்போனா நீங்க சோனியாவையும் கருணாநிதியையும் திட்டி ரெண்டு பதிவு போட்டிருப்பீங்க. நிறைய சிறு கட்சிகள் கூட ஈழதமிழர் பிரச்சனைகளுக்கு போராடியது. அவங்களுக்கு எல்லாம் நம்ம தமிழ் மக்கள் என்ன ஆதரவு கொடுத்தாங்க?//

ரொம்ப வயிறு குலுங்க சிரிக்க வைக்குற நீ. ஒரே சிரிப்பாச்சி...

மத்தவங்க பண்ணததான் விஜய்காந்தும் பண்ணுவாரு.மத்தவங்க பண்ணாததை இவரும் பண்ண மாட்டாருன்னா... அப்புறம் எதுக்கு இவரு?
இவங்க எல்லாம் சரி இல்லன்னுதான் விஜய்காந்த் ஒரு மாற்றா வருவாருங்கறிங்க. ஆனா மத்தவங்க மாதிரிதான இவரும்னு சொல்றீங்க . பை த பை .. நீங்க உங்கள வச்சே காமெடி கீமெடி பண்ணிக்கலியே?

அப்புறம் நாம என்ன பண்ண முடியும்? நம்மளால முடிஞ்சததான் நாம பண்ண முடியும். நீங்க எதுவும் பண்ணல. விஜயகாந்துக்கு ஓட்டுப் போட்டு எதிராதான் நடந்து இருப்பீங்க. நான் என்னால முடிஞ்சத பதுவ போட்டேன்.
ஆனா விஜய்காந்த் ஒரு கட்சித் தலைவர் . நீங்க எல்லாம் ஆசைப்படுற மூணாவது சக்தி. ஆனா அவரு ஈழ ஆதரவு ஓட்டுக்களைப் பிரிச்சு நீங்க எல்லாரும் திட்டுற கருணா நிதியல்ல ஜெயிக்க வச்சாரு.



தமிழக மக்கள் யாருக்கு ஆதரவு கொடுக்க முடியும்?

3000 அண்டு வரலறு குறித்த தெளிவில்லாமல் ஈழம் என்ற சொல்லே தப்பு என்று சொல்லிவிட்டு கடைசியில் ஓட்டுக்களுக்காக " தனி ஈழம் அமைக்க ஆதரவு " என்று சுயனலத் தலைகீழ் மாற்றம் கண்ட ஜெயலலிதாவுக்கா?

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கமாக அப்ப‌டியே தேர்தல் களம் காணாமல் மக்களை நம்பாமல் ஓடிப்போய் ஜெயலைதாவிடம் ஒட்டிக் கொண்ட ராமதாஸ் , பாண்டியன் , வைகோவுக்கா?

கருணா நிதி , ஜெயலலிதா இருவரும் ஈழத் தமிழர் விசயத்தில் சரி இல்லை என்ற நிலையில் மக்கள் ஆவலோடு விஜய்காந்தை எதிர்பார்க்க காங்கிரஸ் கூட்டணி மற்றும் பல கனவுகள் ஆசையில் தற்காலிக ஊமையான புரட்சி ஊமை விஜயகாந்தையா?

சு.செந்தில் குமரன் said...

continued.......

//உண்மையிலயே அவரு அந்த படத்தின் நியாபகமா வச்சிருக்கலாம்ல. முன்பு கேள்விப்பட்டவரை அது உண்மையும்கூட. இப்போது ஈழ ஆதரவு ஓட்டுகள் வாங்குவதற்க்கு அவர் மாற்றிப் பேசியிருந்தால்தான் அது தவறு. உண்மையினை ஒப்புக்கொண்டது ஒரு தவறா?//

நீ விவாதம் செய்தால் உன்னைப் பாராட்டி இருப்பேன் . வாதம் செய்திருந்தால்கூட வரவேற்றிருப்பேன். ஆனால் விதண்டாவாதம் செய்கிறாயே.. எள்ளி நகையாடுகிறேன்.

என் மகனுக்கு ஏன் பிரபாகரன் என்று பெயர் வைத்தேன் என்று விஜய்காந்த் விகடனில் கொடுத்த பேட்டி ... டி.வி.க்குப் பேட்டி கொடுப்பதில்லை என்ற நிலையில் இருந்து மாறிய பிறகு விஜய்காந்த் கொடுத்த பேட்டி இதெல்லாம் உனக்கு தெரியாதா? வச்சிருக்கலாம்... கலாம்.. லாம்னு எல்லாம் பேசக் கூடாது. அப்ப தேவைன்னா ஒரு பொய்யசி சொல்றது... பின்னாடி வேறு ஒரு தேவைன்னா மறுபடியும் மாத்தி உண்மைய ஒத்துக்கறது...

இத தான மத்த அரசியல்வாதி எல்லாம் பண்றாங்க. அந்த இழவைதான் இவரும் பண்ணுவாருன்னா.. அப்புறம் என்ன நீங்க மாற்று அரசியல் கொண்டு வந்து கிழிக்கப் போறீங்க?

//நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். தி.மு.க வையும் அ.தி.மு.க வையும் தவிர வேறு ஏதாவது 3வது கட்சி ஆட்சிக்கு வராதா என்று எத்தனை நாள் யோசித்திருப்போம்? (எனக்கு அந்த ஆசை உண்டு). //

எனக்கும் அந்த ஆசை உண்டு. ஆனா விஜய்காந்த் கட்சி எண்ணிக்கையில மட்டும் 3 வது கட்சியா இருக்கும். செயல்ரீதியா அந்த 2 களைப் போலதான் இருக்கும்.. அதுக்கு எதுக்கு இவர நம்பணும்?


//ஒருவரை மாற்றி ஒருவர் குறை சொல்வதைத் தவிர ரெண்டு கட்சிகளும் உருப்படியாக ஒன்றும் செய்வதில்லை.//

இந்த சாக்கடை அரசியல் ல விஜய்காந்த் முழுக்க முழுக்க இறங்கி 2 வருஷம் ஆச்சு.

// மூன்றாவதாக ஒருவர் தனித்து நின்று போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதில் என்ன தவறு? அவர் மக்களுக்கு ஒன்றும் செய்யா விட்டாலும் போகிறது. //

இந்த அளவு கேவலமாக ... சொத்தையுஆக வாதம் செய்தாவது விஜய்காந்திற்கு ஆதரவு தரவேண்டும் என்று நீ நினைக்கிறாய் என்றால்.. அந்த அளவு சாதி வெறி அல்லது சினிமா மாயை உன்னையும் மிகக் கொடுமையாகப் பீடித்து உள்ளது . உன் நிலை கண்டு பரிதாபப்படுகிறேன்.

உன்ன மாதிரி ஆட்களுக்கு அரசியலைப் பத்திய சிந்தனை வரவே கூடா.துன்னு இறவனையும் இயற்கையையும் வேண்டிக்கிறேன்.

//கண்மூடித்தனமா உப்பு சப்பு இல்லாத விஷயங்களை வைத்து ஒரு இயக்கத்தையோ / தனி மனுஷனையோ எதிர்க்கிற/ஆதரிக்கிற பழக்கம் இல்லாததால உங்க கருத்துக்கு நான் வர்றது கொஞ்சம் கஷ்டம் தான் :‍)//

என்னுடைய கருத்துக்கள் உப்பு சப்பு இல்லதவை என்றோ நான் சொன்னது தனி மனித எதிர்ப்பு அல்லது ஆதரவு என்றோ உனக்குத் தோன்றினால் உன்னைப் பார்த்து பரிதாபத்தில் வாயடைத்து நிற்பதைத் தவிர
எனக்கு வேறு வழியில்லை. என் கருத்துக்கு நீ வருவது கொஞ்சம் கஷ்டமில்லை. ரொம்ப ரொம்ப கஷ்டம் .

ஆனால் கொஞ்சமாவது சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல் உனக்கு கொஞ்சம் தாமதமாகவாவது கட்டாயம் வரட்டும்.

சு.செந்தில் குமரன் said...

தங்கை அல்லது தம்பி கல்கிக்கு

நான் எழுதி இருக்கிற இந்தப் பின்னூட்டங்களைப் படிச்ச பிறகு கூட இதுலயும் நான் சொல்லி இருக்கிற நியாயமான விசயங்களைப் பின் தள்ளிவிட்டு மறுபடியும் அது அப்படி இருக்கலாம்.. இது இப்படி இருக்கலாம்னு தப்பிச்சு குப்பிச்சு நீ எழுதினா நல்லா ஜாலியா இருக்கும் . அது வேற விசயம் .

ஆனா என் நோக்கம் விஜயகாந்த்தை விமர்சிப்பது மட்டுமில்ல. அதுல நான் விஜய் பத்திக் கண்டிச்சும் சில விசயங்கள் எழுதி இருந்தேன். அதே போல விஜய்காந்தை ஆதரிச்சும் சில விசயங்கள் எழுதி இருந்தேன்.

ஆனா பின்னூட்டம் என்ற பெயர்ல நீ சொன்ன சில கன்னா பின்னா வாதங்களுக்கு நான் பதில் சொல்லப் போக இது என்னவோ விஜய்காந்தின் தவறான அரசியலை மட்டும் அம்பலப் படுத்துகிற பதிவு என்ற கருததை ஏற்படுத்தி இருக்கிறது. என் நோக்கம் இது இல்லை என்றாலும் இந்தப் புதிய அர்த்தம் உருவாக்கித் தந்ததற்கு நன்றி .

ஆனால் நான் முகங்களைப் பார்க்கிறவன் அல்ல. இதயங்களை மட்டுமே.!

Mohankumar said...

விஜய் தான் ஏற்கனவே அவர் திரை படத்தில் வரும் ஒரு பாடலில் " அகதியான மக்களுக்கு அமைதியான நாடுகேட்பேன் " சோகமா பாடிடாரே, இன்னும் வேறென்ன செய்ய வேண்டும். அதுவே பெரிய விஷயம் தானே, அதே போல் விஜயகாந்தும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் (நாமும் அதை மறந்து விட்டோம்) ஈழத்தில் தமிழ் மக்களுக்கு முழு சுதந்திரமும் நிமதியும் கிடைக்கிற வரை பிறந்தநாளே கொண்டாட போவதில்லை என்று சொன்னார்....!!! (கடைபிடித்தாரா என்பது வேறு) இது போதாதா, இன்னும் வேறென்ன ஈழ மக்களுக்காக செய்யவேண்டும்.

சு.செந்தில் குமரன் said...

சரியாச் சொன்னீங்க மோகன்குமார்.
ஹா.... ஆ..ஆஅ..ஆ.....போதுங்க போதும் ( நாயகன் ப‌டத்தில் கமல் சொல்வது போலப் பேசிப் பார்க்கவும் )

Post a Comment