Monday, May 18, 2009

1000 நேதாஜிக்குச் சமமான ஒரு பிரபாகரன்







தலைப்பைப் பார்த்த உடனேயே பிரபாகரனை மட்டம் தட்டுவதற்காகவே "அது எப்படி பிரபாகரனைப் போய் நேதாஜியோடு ஒப்பிடப் போச்சு?அவரது அருமை என்ன பெருமை என்ன அந்தஸ்தென்ன ..." என்று மேட்டிமைத்தனம் காட்டி பின்னூட்டம் எழுத முடிவு செய்து விட்ட மேனாமினுக்கர்கள் இப்போதே வேறு வேலை பார்க்கக் கிளம்பலாம்.இது அவர்கள் படிப்பதற்காக அல்ல.

பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ இந்த நூற்றாண்டின் உலக மகா மாவீரனாக உலகம் பிரபாகரனை அங்கீகரித்து ரொம்ப நாள் ஆச்சு.இதை உண்மையான அறிவாளிகளும் மனசாட்சி உள்ளவர்களும் ஒத்துக் கொள்வார்கள்.

எனவே இந்த தலைப்புக்காகவே அதை எதிர்த்து கூலிக்கு மாரடிக்க காத்து இருந்தால் ... சற்றே விலகி இரும் பிள்ளாய்!
விசயத்துக்கு வருவோம்.

உலகம் எங்கும் உள்ள எல்லா மனித இனங்களும் தம் இனத்தவன் தப்பு செய்தால் கூட அவனை எப்படிக் காப்பாற்றுவது என்றுதான் பார்க்கும்.தன் இனத்தவன் தவறை மூடி மறைக்கத்தான் பார்க்கும்.

ஆனால் தாயகத் தமிழினம்..?

தன் இனத்தவன் உலகின் மிகக் கொடூர கறுப்பு வரலாறாக அழிக்கப் பட்டாலும் பாதிக்கப் படும் நம்மவனுக்கு குரல் கொடுக்க ஆயிரம் நியாயங்கள் இருந்தாலும் அவனுக்காக பூமிப் பந்தின் மற்ற துருவங்கள் குரல் கொடுக்கும்போதும் கூட எதைப் பற்றியும் குரல் கொடுக்காமல் கிரிக்கெட் பார்க்கும்.

தம் இனத்தவனுக்கு ஆதரவாக ஒரு ஓட்டுப் போடச் சொன்னால் கூட , 300 அல்லது 500 ரூபாய்களுக்காக ஓட்டை மாற்றிப் போட்டு... 40 ஆண்டுகளாக எதிரியுடன் வீரமாகப் போராடியவர்களையே தன்னுயிர் தான் மாய்த்துக் கொள்ள வைக்கும். அடுத்த தலைமுறையில் இது நமக்கே கூட நடக்கும் என்ற அறிவு கூட இல்லாமல் தம்மவனையே கழுத்தறுக்கும்.காசுக்கு சோரம் போகும்.

இந்த உண்மையை எடுத்துச் சொன்னால் அதை எதிர்த்து பேச எழுத கூட ஆள் வளர்க்கும்.

எப்படியோ விடுதலைப் புலிகளின் வீர வரலாற்றில் ஒரு பெரும் சோகம். எல்லாம் முடிந்தது.

'பிரபாகரன் உடல் கண்டு பிடிக்கப் பட்டு விட்டது .மரபணு பரிசோதனைக்குப் போய் இருக்கிறது.பிரபாகரனின் ம‌கன் சார்லஸ் ஆண்டனி உட்பட பலரின் உடல் அடையாளம் காணப் பட்டுவிட்டது 'என்றூ என்னென்னவோ உயிரை ஊடறுக்கும் செய்திகள். எது உண்மையாக இருக்கும்?

"வாழ்ந்தாலும் செத்தாலும் இங்குதான் , நான் தப்பி ஓட மாட்டேன் " என்று முன்பே சொன்னபடி பிரபாகரன் களத்தில் உண்மையாகவேமாண்டிருக்கலாம்.

அல்ல‌து பிர‌பாக‌ர‌ன் அடுத்த‌ நிலைப் போராட்ட‌ங்க‌ளுக்காக‌ உயிர் வாழ்வ‌த‌ன் அவ‌சிய‌த்தை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எடுத்துச் சொல்லி த‌ப்பிக்க‌ வைத்திருக்க‌லாம்.அந்த‌ப் ப‌ய‌ண‌த்தில் அவ‌ர் இறக்கலாம் .

அல்ல‌து ஒரு சாத‌ர‌ண ம‌னித‌னாக‌ வ‌ன்னிக் காடுக‌ளில் ர‌க‌சிய‌மாக‌ வாழ‌லாம்.

உலகம் எங்கும் நிலவும் ஈழ ஆதரவு அலையைக் குலைப்பதற்காக ...எதாவ‌து ஒரு இறந்த உட‌லை பிர‌பாக‌ர‌ன் உட‌ல்தான் என்றூ சிங்க‌ளக் காடைய‌ர்க‌ள் பொய் சொல்ல‌லாம்.

பிர‌பாக‌ர‌ன் என்ன‌ முடிவுக்கு ஆளான‌ர் என்ப‌து ஒரு க‌ண்டு பிடிக்க‌ முடியாத‌ ம‌ர்ம‌மாக‌வே போகாலாம்.

இல்லை... இன்னும் சில‌ வ‌ருட‌ங்க‌ளில் மீண்டும் பிர‌பாக‌ர‌ன் எங்கிருந்தாவ‌து வெடித்துக் கிள‌ம்ப‌லாம். அல்ல‌து ... ம‌ன‌ம் நிறைய‌ சோக‌ங்க‌ளோடு மீண்டும் ஒரு த‌லைமுறைக்கு விடுதலைப் போராட்ட‌ உணர்வை ஏற்படுத்த , நூறாண்டுகள் வாழலாம் .(தமிழ் நாட்டை மட்டும் எதற்கும் நம்பாதீங்க என்று சொல்வாரோ?)

பிரபாகரன் மரணம் அடைந்தது நாளையே உறுதியாகலாம்.

அல்லது இன்னும் முப்ப‌து வ‌ருட‌ம் க‌ழித்து பிர‌பாக‌ர‌ன் ம‌ர‌ண‌ம் ப‌ற்றிய‌ ப‌ர‌ப‌ர‌ப்பான‌ செய்தி வ‌ர‌லாம்

ஆக , பிரபாகரன் இன்னொரு நேதாஜி. சொல்லப் போனால் பல விதங்களில் பிரபாகரன் சந்தித்த துரோகங்களை நேதாஜி சந்தித்ததில்லை. நேதாஜி ஏழு நாட்டு ராணுவத்தை எதிர்த்துப் போராடவில்லை. சொந்த இனமே நேதாஜியைக் கழுத்தறுக்கவில்லை.அந்த விதங்களில் பிரபாகரன் நேதாஜியை விட மேல்.

நேதாஜியைத்தான் தனது விடுதலைப் போராட்ட குருவாகக் கொண்டிருந்தார் பிரபாகரன்.இன்று தானும் ஒரு நேதாஜி என்றாகி விட்டார். அன்று நேதாஜி உருவாக முக்கியக் காரணம் அன்றூ அவரைத் தமிழர்கள் ஆதரித்தது.அது நடக்கா விட்டால் நேதாஜிக்கு இவ்வளவு பெருமையும் இல்லை. நேதாஜியைக் காரணம் காட்டி வங்காளிகள் இந்திய அரசுகளில் இன்று அடைந்துள்ள முக்கியத்துவத்தை அடைந்து இருக்கவும் முடியாது.

ஆனால் நன்றி கெட்ட அந்த வங்காளிகள்தான் சிங்களவனுக்கு ஆதரவாக ராஜிவ் காந்தியைத் திருப்பியவர்கள்.ம‌த்திய‌ அர‌சுக‌ளை மாற்றிய‌வ‌ர்க‌ள்.துணை போன‌து த‌மிழ‌னுக்குத் த‌மிழ் உண‌ர்வு வ‌ந்துவிட்டால் அப்புற‌ம் த‌மிழ் நாட்டில் த‌மிழ‌னையே சுரண்டிப் பிழைக்க முடியாது என்று பயந்த மலையாளிகள் .

இந்த தலைமுறையில் தமிழ் உணர்வுள்ள தமிழர்களுக்கு ஒரு அவமானமும் துக்கமும் உண்டு .

நம் தலைமுறையில் ஈழ விடுதலைப் போராட்டம் குலைந்ததும் அதற்கு காசுக்கு ஓட்டுப் போட்ட தமிழனும் ஒரு காரணம் என்பது அவமானம் .

பிரபாகரன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது தலையாய பெருமை.

6 comments:

Chandrasekaran said...

நானறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது
எங்கும் காணோம்..நானறிந்த தலைவரிலே பிரபாகரனை போல்
தமிழுக்கு வாழ்ந்து மறைந்தவர் எங்கும் காணோம்..
வீரத்தின் விளை நிலம் ..வீணர்களின் சதியிலே வீழ்ந்தான்.
மகனைப் போருக்கு அனுப்ப யோசிக்கும் இவ்வுலகில்
மகனுடன் மாண்டான். யாருக்காக ? அவனும் என்னை போல்
சாதாரண மனிதனாய் சம்சாரத்துடன் இருந்திருக்கலாமோ?
அவன் சுத்த தமிழன்... தாய்த் திரு நாட்டை தகர்த்திடும்
மிலேட்சரை மாய்த்திட விரும்பான் வாழ்வும் ஓர் வாழ்வு கொள்?
என பாடம் படித்து பட்டம் வாங்கி என்ன பயன்..?
நான் ஒரு இந்தியனாக இருக்க விருப்பமா? இல்லை
தமிழனாக இருக்க விருப்பமா ? எனகேட்டால்
இந்தியன் என்றே சொல்லுங்கள்..ஏன் என்றால்
தமிழன் மாண்டு விட்டன்.. தமிழ் அழிய ஆரம்பித்து விட்டது.
இருக்கும் வரை இருப்போம்.. நாம் சேர சோழ பாண்டியர் வழி வந்தவரா என்ன? .. நாம் வந்தது ஆங்கிலேயர் வழி..படிப்பது ஆங்கில கல்வி. பேசுவது ஆங்கிலம் . ஆனால் வார்த்தை தெரியா விட்டால் தமிழில் கொஞ்சம் பேசுவோம்.. என் இனமே .. என்னை
நானே பழிக்கின்றேன்..என்ன மந்த பிறவியடா இந்த தமிழர் ...
கலிங்கத்து பரணி பாடினார் போல் புற நானூற்று கவிதை போல்
போர் பரணி பாட வந்தான் .. மறைந்தான

Chandrasekaran said...

சேர மன்னர்கள் , சோழமன்னர்கள், பாண்டிய மன்னர்கள்
இவர்களும் தமிழ் வளர்த்தார்கள். தமிழுக்காக வாழ்ந்தார்கள்..
படை எடுத்தார்கள்..போராடினார்கள்.. மாண்டார்கள்...
இருபதாம் நூற்றாண்டில் இந்த அளவு தமிழுக்காக
போராடியவன் பிரபாகரன் ஒருவனே..

Chandrasekaran said...

மானம் பெரியதென்று வாழும் மனிதர்கள்
மான் என்று சொள்ளவதில்லையா?
தன்னை தானும் அறிந்து கொண்டு
உலகுக்கும் சொன்னவன் ஈழத் தமிழ்
வேலு பிரபாகரன் இல்லையா.

Chandrasekaran said...

உலகத்தில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது..
விடுதலையாக திரிந்த புலிகளை சுட்டுக் கொன்றார்கள்
விடுதலை வேண்டி போராடிய விடுதலைப்புலிகளையும்
கொன்றார்களடா. ..தனி ஒரு மனிதன் பிறந்தால் அவன்
தமிழரின் வீரம் பேசும் மகனாக வேண்டுமடா..
யாருக்காக ?..... இது யாருக்காக ? இந்த மனித வெறித்தாக்குதல்
எதற்காக..? அன்று வாஞ்சி நாதனையும் பகத் சிங்கையும்
பாராட்டியவர்கள் இன்று பிரபாகரனை ஏன் பழிக்கிறார்கள்?
அவனும் விடுதலை வேண்டி போராடியவன் தானே..
அதுவும் என் தமிழுக்கு .. என் தமிழருக்கு ..நமக்கு தான்
வீரம் இல்லை.. என்னையும் சேர்த்துத் தான்.....
இல்லையே.. அவன் வீர மரணத்தை நாளை நாம்
கொண்டாட நமக்கு அருகதை இல்லை .. நாம் தான்
நாயினும் இழிந்த பிறவி ஆயிற்றே ..

Chandrasekaran said...

ஈழம் அழிகிறது.. என் இனம் அழிகிறது..
அய்யகோ..என் செய்வேன்..என் தமிழ்த்தாயே..
என் வாழ் நாளில் இத்தனை பெரிய சாவுகளை
நான் காணும்படி வைத்தாயோ ?
முப்பது மைல் தொலைவில் இருந்தும் முப்பதாயிரம் பேர்
ரசாயன குண்டு வீச்சில் சிதறியதை பார்க்கும் கொடுமை
என்னவோ? நான் என்ன செய்தேன் தமிழுக்கு?
எப்போது செய்ய போகிறேன் தமிழருக்கு?
என் இனம் அழிய என் நாடு துணையா?
அது உண்மையானால் நான் தமிழனாகவே சாவேன்..
இந்தியனாக அல்ல.. என் தாய் மொழி தமிழ் ..
என் தந்தை , தம்பி, தமக்கையார் மொழி தமிழே..
ஆட்சியாளர்களே.... நிறுத்த சொல்லுங்கள்..
ஆசிரியராய் போனேனே.. நான் என்ன செய்துவிட முடியும்..?
அழ தெரியவில்லை.. அழு குரல் கேட்டும்
அமைதியாக இருக்க அசிங்கப்படுகிறேன்..
தமிழனாக அல்ல ... ஒரு மனிதனாக..
ஈழ தமிழரும் , நானும் , நீங்களும் இருக்க மாட்டோம்.
ஆனால் வரலாறு நம்மை கேவலப் படுத்த தான் போகிறது..

சு.செந்தில் குமரன் said...

உண்மை அய்யா...

Post a Comment