Thursday, May 21, 2009

பிரபாகரன் மரணம் -‍ தமிழக காங்கிரசார் கதறல்

பிரபாகரன் மரண(?) செய்தியால் உலகெங்கும் உள்ள - மொழிகளைக் கடந்த இன விடுதலை ஆதரவாளர்களும், தமிழ் உணர்வாளர்களும் போர்க்களத்தில் மகனை இழக்கத் துணிந்த நிஜமான தியாக வீரம் கண்டு உலகம் முழுக்க உள்ள மனிதாபிமானிகளும் வருத்தப் படும் வேளையில்,

தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் மற்ற அனைவரையும் விட அதிகமாக கண்ணீர் விட்டு கதறிக் கொண்டுள்ளனர் என்பதை அறிந்து வியந்து அது பற்றிக் காரணம் கேட்டபோது ....

த‌ங்க‌பாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவ‌ன்,வேலூர் ஞான‌சேக‌ர‌ன்,மணி சங்கர அய்யர், சுத‌ர்ச‌ன‌ம், ஹ‌ச‌ன் அலி,பீட்ட‌ர் அல்போன்ஸ்,போன்றோர் ( ப‌.சித‌ம்ப‌ர‌ம் அங்கு இல்லை என்ப‌தை நாம் ம‌றைக்க‌ விரும்ப‌வில்லை) அழுத‌ க‌ண்ணீரூம் சிந்திய‌ மூக்கும், நீர் ஒழுகும் வாயும் க‌ச‌ங்கிய‌ கன்ன‌மும் சிவ‌ந்த‌ க‌ண்க‌ளுமாக‌ கூறிய‌தாவ‌து..


"அந்த‌ கொடுமைய‌ ஏன் த‌ம்பி கேட்குறீங்க‌.. உங்க‌ளுக்கு விச‌ய‌ம் முழுசா புரிய‌ணும்னா முத‌ல்ல எங்க‌ள‌ப் ப‌த்தி நீங்க‌ தெரிஞ்சுக்க‌ணும்.. எங்க‌ள்ள‌ முக்கிய‌மான‌ சில‌ பேரோட‌ தாய்மொழி த‌மிழே இல்ல... க‌ன்ன‌ட‌ம் , துளு,தெலுங்கு,உருது இப்ப‌டிப் ப‌ல மொழிக‌ள்.சில‌ருக்கு தாய்மொழி த‌மிழ்தான். ஆனா அவ‌ங்க‌ எல்லாம் சுய‌ ந‌ல‌த்துக்காக தாயையும் தாய்மொழியையும் மொழி இன‌த்தையும் விலைபேசி டில்லிக்குக் காவ‌டி தூக்க‌த் த‌ய‌ங்காத‌வ‌ங்க‌... எங்க‌ளுக்கு இருக்கிற மூக்கிய‌ ஒற்றுமையே.. த‌மிழ் த‌மிழ‌ன் எப்ப‌டிப் போனாலும் நாங்க‌ வ‌யிறு வ‌ளர்க்க‌ணும். ரொம்ப‌ இக்கட்டான‌ சூழ‌ல்ல‌ , எப்ப‌டி மாய்மால‌ம் ப‌ண்ற‌துன்னு சொல்லித் த‌ர‌ அண்ண‌ன் க‌லைஞ‌ர் இருக்காரு..


காம‌ராஜ‌ருக்கே குழி ப‌றிச்ச‌ அப்புற‌ம் பொதுவா எங்க‌ளுக்கு தமிழ் நாட்டுல நிஜ‌மான‌ ம‌ரியாதைன்னு ஒரு ம‌ண்ணும் இல்ல‌...டில்லியிலும் வெட்டிப் ப‌ச‌ங்க‌ன்னு க‌ண்டுக்க‌ மாட்டாங்க‌...வேற‌ ஒண்ணும் இல்ல‌ த‌ம்பி ....' ந‌ம்ம‌ சொல்றத‌க் கேட்டு தாய் மொழி இன‌த்துக்கும் சொந்த‌ மாநில‌த்துகும் குழி ப‌றிக்கிற‌ ப‌ச‌ங்க‌ , நாளைக்கு வேற‌ யார் பேச்சையாவ‌து கேட்டு ந‌ம்ம‌ளுக்கே குழி பறிச்சாலும் பறிப்பாங்க ' அப்படிங்கறதுதான் டில்லிக்காரங்க பயம். நாங்க‌ டில்லிய‌ கேட்காம‌ த‌மிழ் நாடு காங்கிர‌ஸ் கட்சி ஆபீஸ்ல‌ ஒண்ணுக்கு கூட‌ போக‌ முடியாது.


பொதுவா த‌மிழ் நாட்டுல‌ இப்ப‌ப் பொற‌ந்த‌ க‌ட்சிக‌ளோட‌ க‌டைசித் தொண்ட‌ன் கூட க‌ட்சி லெட்ட‌ர் பேடுல‌ சுய‌மா நாலு வார்த்தை எழுதி ப‌த்திரிக்கை ஆபீஸ்க்கு அனுப்புவான்.ஆனா நாங்க எத‌ எழுதினாலும் அதிமுக‌ வும் (முன்ன‌ எல்லாம்)திமுக‌வும் கோவிச்சுக்கும். உட‌னே டில்லியில‌ இருந்து எங்க க‌ட்சித் த‌லைமை எச்சில் துப்பி அத‌ எங்க‌ளுக்கு பார்ச‌லா அனுப்பி வைக்கும்.

அத‌னால க‌ட‌ந்த‌ சில த‌லைமுறைக‌ளா நாங்க சுய‌மா ஒரு புள்ளி க‌மா கூட‌ யோசிச்ச‌து இல்ல‌..

த‌ம்பி .. வெளிய‌ சொன்னா வெக்க‌ம்; அழுதா துக்க‌ம் ..இருந்தாலும் சொல்றோம் ...

க‌ட்சியில எங்க‌ பேருல அச்ச‌டிகிற‌ லெட்ட‌ர் பேடையெல்லாம் எங்க வீட்டுப் பொம்ப‌ளைங்க‌..(அட‌ , ஆமாங்க‌ .. சின்ன‌ பெரிய‌ வீட்டுப் பொம்ப‌ளைங்க ரெண்டு பேரையும் சேர்த்துதான் சொல்றோம்...இல்ல‌னா.. அப்புற‌ம் 'அங்க‌' நுழைய‌ முடியாது..)ஆங்....எங்க‌ வீட்டுப் பொம்ப‌ளைங்க இஸ்திரிக்கார‌ன் க‌ண‌க்கு எழுத‌வும் , பால் க‌ண‌க்கு எழுத‌வும்,மார்கழி மாசம் கோலம் போடவும்தான் யூஸ் பண்ணுவாங்க.. வேலைக்கார‌ர்க‌ள் கூட தண்ணி வ‌ர‌ல‌ன்னா டாய்லெட் ல‌ யூஸ் ப‌ண்றாதப் பார்த்தும் பாக்காம‌ த‌லையத்‌ திருப்பிக்குவோம்.அதையும் மீறி மிச்ச‌ம் இருந்தா ப‌ழைய‌ பேப்ப‌ர்க‌டையில‌ போட்டுடுவாங்க‌. டாய்லெட் விச‌ய‌ம் தெரிஞ்ச‌ அப்புறம் அவ‌ங்க‌ளும் எங்க‌ லெட்ட‌ர் பேட‌ வாங்க‌ற‌து இல்ல‌...


இப்ப‌டியே எங்க‌ கால‌ம் தீவ‌ட்டித் த‌ண்ட‌மா போயிக்கிட்டு இருந்த‌து.எங்க‌ வீட்டு வாச‌ல்ல நாங்க‌ பார்த்து க‌ட்டிப் போட்ட‌ நாய் கூட‌ எங்க‌ள ம‌திக்காத‌ நிலைய‌ நினைச்சு நாங்க‌ எல்லாம் ராத்திரி ப‌னிரெண்டு ம‌ணிக்கு மேல போர்வைய‌ போத்திகிட்டு ச‌த்த‌ம் இல்லாம‌ அழுவோம் . ந‌ம்ம‌ள‌க் காப்பாத்த‌ ஒரு தேவ‌ தூத‌ன் எப்ப‌ வ‌ருவான்னு காத்திருனந்தோம் .


அப்ப‌தான் எங்க‌ள‌க் காப்பாத்த‌ - சினிமாவில‌ எம்.ஜி.ஆர் . வ‌ர்ற மாதிரி வ‌ந்தார் , சுத்த‌மான‌ ர‌த்த‌த்துக்குப் பிறந்த அந்த மாவீரன் பிரபாகரன்.


ராஜிவ்காந்தி ம‌ர‌ண‌த்துக்குப் பிற‌கு எங்க‌ளுக்கு ஒரு அற்புதமான‌ பிழைப்பு கிடைச்ச‌து .

முத‌ல் காரிய‌மா எங்க‌ லெட்ட‌ர் பேடுக‌ளை எங்க‌ளுடைய‌ பொம்ப‌ளைங்க‌ கிட்ட‌ இருந்து மிட்டோம்.


பிதாம‌க‌ன் ப‌ட‌த்துல விக்ரம்,திடீர் திடீர்னு த‌லைய‌ 45 டிகிரி கோண‌த்துல‌ சாச்சிக் கிட்டு,"உன்னையே நீ எண்ணிப் பாரு "ன்னு பாடுவார் பாருங்க‌.. அந்த‌ மாதிரி திடீர் திடீர்னு லெட்ட‌ர் பேட‌ எடுத்து " ராஜிவ் காந்திய‌க் கொன்ன பிர‌பாக‌ர‌ன ம‌ன்னிக்க முடியாது .. ராஜிவ் காந்திய‌க் கொன்ன விடுத‌லைப் புலிக‌ளை ம‌ன்னிக்க முடியாது .. "ன்னு .. அவ‌ங்க‌ எதோ எங்க‌ கிட்ட‌ வ‌ந்து ம‌ன்னிக்க‌ச் சொல்லிக் கெஞ்சின‌ மாதிரி ... தின‌ச‌ரி மூணு த‌ட‌வை எழுதி எழுதி ப‌த்திரிக்கை ஆபிஸ்க்கு அனுப்புவோம்.


எங்களை மாதிரியே டில்லியில உப்புக் கெட்ட சோறு வாங்கித் திங்கிற‌ சில‌ துப்புக் கெட்ட ப‌த்திரிக்கைகள் அதுக்கு முக்கியத்துவம் கொடுத்து போடும். சில‌ச‌மய‌ம் நாங்க‌ ம‌றந்துட்டாக் கூட , அவ‌ங்க‌ளே ஞாப‌க‌ப் ப‌டுத்திக் கேட்பாங்க‌. நாங்க‌ளும் கொஞ்ச‌ம் கூட‌ ச‌லிக்காம ம‌றுப‌டியும் ம‌றுப‌டியும் அதையே எழுதி அனுப்புவோம்.ஜெராக்ஸ் எடுத்து அனுப்பினா டில்லி கோவிச்சுக்குமோங்க‌ற‌ ப‌ய‌ம்தான்.


சொன்னா ந‌ம்ப‌மாட்டீங்க‌ த‌ம்பீ.. இந்த‌ அப‌த்த‌ ப‌ஜ‌னையை நாங்க‌ ஆர‌ம்பிச்ச‌ அப்புறம்தான் ,எங்க‌ள மாதிரி சில‌ ஜ‌ந்துக்க‌ள் உயிர் வாழ‌ற‌தையே டில்லி ஒத்துக்குச்சி.


நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய‌ ச‌லுகைக‌ளும் கொடுத்துச்சி டில்லி.சொன்னா ந‌ம்ப‌ மாட்டீங்க‌.. க‌ட்சி ஆபீஸ்ல உள்ள ஒண் பாத்ரூம் ரூமை டில்லியோட பர்மிஷன் இல்லாமலேயே பயன்படுத்திக்கலாம்கற பெரிய உரிமையையே கொடுத்தது டில்லி.‌


அது ம‌ட்டுமில்ல.. எங்க‌ திருவோடுக‌ளிலும் சில்ல‌றை ம‌ட்டும் இல்லாம‌ல் நிறைய‌ ப‌ண‌க் க‌ட்டுக‌ளையும் போட்டது டில்லி.வீட்டுப் பொம்பளைங்க காலைல எழுந்ததும் கேட்காமலே காப்பி எல்லாம் கொடுக்க ஆரம்பிச்சாங்க. நாங்களும் மனுசப் பிறவிகளா மதிக்கப் பட்டோம்

. உண்மைய‌ச் சொல்றோம் த‌ம்பீ.. ராஜிவ் காந்தி செத்த‌ அப்புறம்தான் நாங்க‌ பொழைச்சோம். ஆனா எங்க‌ளப் பொழைக்க வ‌ச்ச‌து பிர‌பாக‌ர‌ன்.


ராஜீவ் கான்திய‌க் கொன்ற பிர‌பாக‌ர‌னை ம‌ன்னிக்க‌ முடியாதுன்னு இன்னும் ரொம்ப‌ கால‌த்துக்கு கீழ்ப்பாக்க‌த்துப் பாட்ட‌ப் பாடி .. எதோ க‌லைஞ‌ர் குடும்ப‌ம் அள‌வுக்கு 19 த‌லைமுறைக்கு சொத்துச் சேர்க்க‌ முடியாட்டியும் ஒரு 9 த‌லைமுறைக்காவ‌து சொத்துச் சேக்க‌லாம்னு க‌ணக்குப் போட்டோம்.


ஆனா இந்த‌ப் பிர‌பாகர‌ன் எங்க‌ மேல‌ கொஞ்ச‌ம் கூட‌ க‌ருணை இல்லாம திடீர்னு செத்துப் போயிட்டாரு.


இப்ப‌ ம‌றுப‌டியும் எங்க‌ளோட சாக்க‌டைக் கால‌ம் தொட‌ங்கிருச்சி த‌ம்பீ..



லெட்ட‌ர் பேடை எல்லாம் எங்க‌ வீட்டுப் பொம்ப‌ளைங்க கைப்ப‌ற்றிட்டாங்க‌!கேட்டா,"அந்த‌ வீரபுருஷந்தான் செத்துட்டாரே .. இனிமே உனக்கு எதுக்குய்யா லெட்டர் பேடு? நாளைல‌ இருந்து ம‌ரியாதையா காலைல‌ எழுந்து காப்பி போடற வேலையப் பாருன்னு சொல்லிட்டாங்க... அட‌ ஒரு நினைவுச் சின்ன‌மா இருக்க‌ட்டுமேன்னு ஆளுக்கு ஒரு க‌ட்டு லெட்ட‌ர் பேட த‌னியா எடுத்து வ‌ச்சிருந்தொம்...அதையும் எங்க வேலைக்கார‌ங்க‌ எடுத்துட்டுப் போயி .. அவுட் ஹ‌வுஸ்ல‌ அவ‌ங்க‌ளுக்குன்னு இருக்க‌ற டாய்லெட்ல வச்சு யூஸ் பண்றாங்க .. அதுலயும் ஒரு பாதிய மாந‌க‌ராட்சிக் கட்டணக் கழிப்பிடத்துக்கு இலவசமா ... உபயம் னு எங்க‌ பேர‌ப் போட்டுக் கொடுத்துட்டானுங்க‌ .


டில்லியில‌ க‌ருணாநிதிக்கே மந்திரிப் பதவியில த‌ண்ணிக் காட்டிட்ட‌ எங்க இத்தாலி அன்னை, இனி செருப்பத் தூக்கக் கூட எங்க‌ள அனும‌திக்காது.இனி எங்க‌ த‌ட்டுல‌ டில்லியில‌ இருந்து சில்ல‌றை கூட‌ விழுவாது.எங்க‌ பொழைப்பே இப்ப‌டி திடீர்னு ம‌ண்ணாப் போச்செ!


இதுக்கெல்லாம் கார‌ணம் அந்த‌ மாவீர‌ன் பிர‌பாக‌ர‌ன் செத்த‌துதான‌..


ப‌.சித‌ம்ப‌ர‌ம் ம‌ட்டும் ஜெயிச்ச‌தால‌ த‌ப்பிச்சிட்டாரு .. அவ‌ருக்கு 'சின்ன‌‌ வ‌ய‌சுல'இருந்தே க‌ணக்கும் படிச்ச பிறகு வ‌ழ‌க்கும் ந‌ல்லா தெரியும்.அவ‌ருக்கு இனிமே பிர‌பாக‌ர‌ன் தேவை இல்ல..


ஆனா நாங்க‌ அப்ப‌டியா.. ? பிர‌பாக‌ர‌ன் இல்லாம‌ நாங்க‌ இனி எப்ப‌டி வ‌யிறு வ‌ள‌ப்போம்? இதையெல்லாம் பிர‌பாக‌ர‌ன் யோசிச்சிருக்க‌ வேண்டாமா?


நியாய‌த்த‌ நீங்க‌ளே சொல்லுங்க‌.

நம்புன‌ எங்க‌ள ந‌ட்டாத்துல விட்டுட்டு ..பிர‌பாக‌ர‌ன் இப்ப‌டி சாக‌லாமா? இது நியாய‌மா? த‌ர்ம‌மா அடுக்குமா?


எல்லாரும் சொல்ற மாதிரி அவ‌ரு உயிரோட‌ வ‌ந்து எங்க‌ள ம‌றுப‌டியும் வாழ‌ வைக்கணும்னு நாங்க‌ குடும்ப‌த்தோட‌ குல‌ தெய்வ‌ம் கோயில்ல‌ மொட்டை போட‌ப் போறோம் த‌ம்பீ.. இத‌ விட‌ எங்க‌ளால‌ வேற என்ன‌ செய்ய‌ முடியும் த‌ம்பீ... "


-- என்று கத‌றி அழுத‌தைப் பார்த்த‌போது ந‌ம‌க்கே ரொம்ப‌ப் ப‌ரிதாப‌மாக‌த்தான் இருந்த‌து.

1 comment:

க. தங்கமணி பிரபு said...

தலைவர் பிரபாகரன் மறைந்திருக்கலாம் அல்லது மறைவாய் இருக்கலாம். யுத்தம் போதும், ஆயுத சத்தம் போதும் என்றெண்ணியவனும் தன் அடிப்படை பாதுகாப்பு பறி போனதை முழுதாய் உணர்ந்திருக்கிறான். ஈழத்தில் அகதி முகாமில் வாழும் ஈழத்தமிழர்களின் பயத்தை விட மிககொடுமையான பயம் எழுந்துள்ள இடம் இங்குள்ள நமக்குதான். யாழ்பானத்தை தலைமையகமாகக் கொண்டு ஒரு கட்டுப்பாடான அரசு, போர் படையும் வைத்தியங்கிய தம்பி பிரபாகரணன் பிடிக்கவும் ஏனைய போராளித் தலைவர்களை கொல்லவும் எண்ணற்ற பொதுமக்களை உரு்த்தெரியாது சிதைக்கவும் தயங்காத சிங்கள அரசின் போக்கு எந்தவொரு சர்வ்தேச போர் இலக்கணங்களுக்கும் உட்படாத்தது. கூப்ப்டு தொலைவிலிருந்த ஆறு கோடி தமிழர்களின் போராட்டங்களை, கூக்ரலை தலை மயிராகவும் மதிக்கவில்லை இராஜபக்ஷே. எனில் ஒரு வேலை வருங்காலத்தில் வடநாட்டானோ, மலையாளியோ அல்லது கன்னடத்தவனோ தமிழ்நாட்டுக்குள் புகுந்து சிங்கள அராஜகம் செய்தால்.........
(கலைஞ்ர் அனேகமாக வெளியே இருந்து தருவார்)

Post a Comment