Thursday, April 14, 2011

# 49ஓ வை பஞ்சராக்கிய தேர்தல் கமிஷன் அலுவலர்கள்இந்த தேர்தலின் முடிவுகள் மூலம் ஓரளாவது நன்மைகள் பெற , (அல்லது குறைந்த அளவில் தீமைகள் பெற ?) 234 தொகுதிகளிலும் மக்கள் ஒட்டுப் போடவேண்டிய வேட்பாளர்கள் யார் என்பது பற்றி முன்பு கொடுத்த பட்டியல் காரணமாகவும் ,

அல்லது அதற்கு முன்பே சில தொகுதிகளில் மட்டுமாவது 49 ஓ வின் அவசியம் பற்றி அதிகம் தெரிந்தவர்களும் ,

பல்வேறு தொகுதிகளில் 49ஓ வில் வாக்களிக்க முயன்றிருக்கிறார்கள் . ஆனால் அவர்களுக்கு கிடைத்த அவமானங்களும் புறக்கணிப்புகளும் கேவலமான பார்வைகளும்! அட ! அட ! அடடா....... !

அந்த அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் கேவலமான பார்வைகளையும் வழங்கியவர்கள் அங்கு இருந்த கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள்

---- எனறால் அதில் வருத்தப் பட (பெரிதாய் ) ஒன்றும் இல்லை .

ஆனால் அந்த 'சாதனைகளை' நிகழ்த்தியவர்கள் பூத்களில் உள்ள தேர்தல் அலுவலர்கள்தான் என்பதைப் பார்க்கும்போது இந்த தேர்தல் கமிஷனர்கள் , ஏராளமான டிவி மைக்குகள் சூழ வெற்றிப் புன்னகையோடு" மக்கள் பயமில்லாமல் வாக்களிக்கப் போகலாம்" என்று உறுமுவது எல்லாம் சும்மா ஊளை உதாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.


(அடப் பாவி ! எந்த அளவுக்கு இந்த முறை தேர்தல் கமிஷன் வன்முறை நடவாமல் பார்த்துக் கொண்டுள்ளது ... ! பணப் புழக்கத்தை எப்படி கொஞ்சூண்டாச்சும் குறைத்து உள்ளது.....! இது நல்ல விஷயமில்லையா என்று கருத்துக் கூறக் கை பரபரப்போரே! உங்கள் வீட்டுப் பெண்கள் சோறு மட்டும் குழையாமல் வடித்தால் போதுமா? குழம்பு அடிபிடித்து தொண்டை காந்தினால் பரவாயில்லையா ? நீங்கள் குழம்பு அடிபிடித்ததைக் குற்றம் சொல்லும்போது "அதான் சோறு குழையாம இருக்கு இல்ல... தின்னுடா வெண்ண .." எனறால் ஓகே வா ?)

என் பேச்சை கேட்டு 49 ஓ போடப் போன தென் மாவட்டப் பெரியவர் ஒருவர் எனக்கு போன் செய்து . "ஏய் ..என்னப்பா இது... ?ஒம் பேச்சக் கேட்டு 49 ஓ போடப் போனா ... அந்தத் தாயளி மவன், என்ன பீத்தொடைகிற கல்லு அளவுக்கு கூட மதிக்கிலப்ப்பா " என்றார் . அவர் சொன்னது எந்தக் கட்சியின் பூத் எஜண்டையும் அல்ல . தேர்தல் நடத்திய அலுவலர் தொன்னைகளை
!

அதே போல சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கே கே நகர் தபால் அலுவலகத்துக்கு எதிர் சந்தில் உள்ள எம் ஏ கே கான்வென்ட் பள்ளியில் 49 ஓ போடப் போன ஒருவர்.......,

தன்னை கோர்ட் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்தது போல நிற்க வைத்ததையும் சம்மந்தப்பட்ட தேர்தல் அலுவலர் 49 ஓ போடவேண்டும் என்ற கோரிக்கையை காதில் வாங்கவே இல்லை என்பதையும் (செவிடன்களை எல்லாம் தேர்தல் பணிக்கு போடலாமா பிரவீன் குமார்?) எவ்வளவோ வற்புறுத்தியும் முடியாத நிலையில் வேறு வழி இல்லாமல் ஒரு கடசி வேட்பாளருக்கு போட்டு விட்டு வந்ததையும் விளக்கினார் , பரிதாபமாக .

பொதுவாக 49 ஓ போடப் போனால் என்ன நடக்கும் ?

49 ஓ என்று சொன்னதும் எல்லா கடசி ஏஜெண்டுகளும் முறைப்பார்கள் . ஐந்து வருடமாக தெரு நாய் சொறிநாய் கணக்காய் தங்களுக்குள் அடித்துக் கொண்டிருந்தவன் எல்லாம் அதிசயமாக , ஒன்று கூடி ஒன்றிணைந்து முறைப்பார்கள் . எல்லா பயலுக்கும் தான் எதிரி என்பதை அந்த வாக்காளன் சத்தம் போட்டு அறிவிக்கிறான் அல்லவா? அதுதான் காரணம் . ! ஆனால் அதற்கு பெரிதாக பயப்படத் தேவை இல்லை . திரும்பி முறைத்தோ அல்லது குறைந்த பட்சம் அந்த முறைப்புகளை கண்டு கொள்ளாமலோ வாக்காளன் 49 ஓ வில் பதிவு செய்துவிட்டு வரலாம் . (என்ன .. காசு வாங்கிக் கொண்டு 49 ஓ எனறால் , காசு கொடுத்த கட்சிக்காரன் செருப்பு பிய்ய பிய்ய அடிப்பான் ) மற்றபடி தேர்தல் அலுவலர்கள் 49 ஓ வில் பதிய உதவுவார்கள்


------ என்றுதான் அறியப் பட்டது .

ஆனால் இந்த முறை பூத்களின் கடசி ஏஜெண்டுகள் வழக்கம் போல முறைத்துள்ளனர் . திரும்பி முறைத்த தைரியசாலிகளிடம் சில பூத் ஏஜெண்டுகள் " எதுக்குண்ணா உங்க ஓட்ட வேஸ்ட் பண்றீங்க ?" என்று தப்பான நியாயம் பேசி மனம் மாற்றவும் முயன்றுள்ளனர் . ஆனால் அதற்கு மேல் எந்தத் தொகுதியிலும் எந்த கட்சியின் பூத் ஏஜெண்டுகளும் 49 ஓ போட ஆசைப் படும் மக்கள் மீது பெரிதாக கோபப் பட்டதாக தெரியவில்லை . நன்றி அனைத்து கட்சிகளின் பூத் ஏஜெண்டுகளுக்கு !

ஆனால் .. ஏதோ எங்க வீட்டுப் பிள்ளை எம்ஜி ஆர் கணக்காய் தேர்தல் கமிஷன் இந்த முறை சவுக்கெடுத்து விட்டதாக எல்லோரும் பீத்திக் 'கொல்லும்' வேளையில், 49 ஓவுக்கு எதிராக தேர்தல் கமிஷனின் பூத் அலுவலர்கள் என்னவெல்லாம் செய்துள்ளனர் தெரியுமா?

1 ) வாக்காளனின் 49 ஓ கோரிக்கையை கண்டு கொள்ளாமல் புறக்கணிப்பது

2 ) வாக்காளரை தாமதிக்க வைத்து கட்சிக்காரகளின் கோபப் பார்வைக்கு ஆளாக்கி ஏதாவது கட்சிக்கு ஒட்டுப் போட்டுவிட்டும் வெளியேறும் மன நிலையை ஏற்படுத்துவது .

3 ) வாக்காளரின் அடையாள அட்டையை உயரத் தூக்கிப் பிடித்து எல்லா கடசி ஏஜெண்டுகளுக்கும் அர்த்த புஷ்டியோடு காட்டுவது .

4 ) வேட்பாளரின் பெயர் தந்தை பெயர் முகவரி ஆகியவற்றை மீண்டும் மீண்டும் சத்தம் போட்டு படித்து கட்சிக்காரர்கள் (அனைவருக்கும் ) இவன் உங்கள் அனைவருக்கும் எதிரானவன் என்று பிரகடனப் படுத்தி பயமுறுத்துவது .

5 ) 49 ஓ வாக்காளரை கேவலமாகப் பார்ப்பது .

6 ) கையெழுத்துப் போட பேனாவைத் தூக்கிப் போடுவது .


இதையெல்லாம் செய்வது எங்க வீட்டுப் பிள்ளை திரைப்பட எம்ஜி ஆரின் வாரிசுகளாக தங்களை இந்த முறை காட்டிக் கொண்ட தேர்தல் கமிஷன் தலைமையில் பணியாற்றிய தேர்தல் அதிகாரிகளே !

சந்தேகங்கள் மூன்று

தேர்தல் பணி அலுவலர்கள் பலரும்

1 ) 49 ஓ வுக்கான பணியை செய்வதை எக்ஸ்ட்ரா வேலை என்று நினைக்கும் வாழைப்பழச் சோம்பேறிகளா ?

2 ) இல்லை .. ஆளுங்கட்சி அல்லது அடுத்த ஆளுங்கட்சியாக நம்பப் படும் கட்சிகளுக்கு சொம்படிப்பவர்களா?

3 ) அல்லது இரண்டுமா?


(இதை ஏதாவது அரசுத் தேர்வில் தாராளமாக கேள்வியாக வைக்கலாம் )


பல இடங்களில் பல அலுவலர்கள் 49 ஓ வை அனுமதித்து உள்ளனர் . மறுக்கவில்லை .ஆனால் எப்படி நடந்துள்ளது?

ஒன்று அந்த அலுவலர்கள் அத்தி பூத்தாற்போல நேர்மையாளர்களாக இருந்திருக்க வேண்டும் . அல்லது 49 ஓ போடப் போனவர்கள் ஏதாவது ஒரு பொதுப் பிரச்னையின் அடிப்படையில் கும்பலாக போயிருக்க வேண்டும் .

ஆக , ஒரு தனி மனிதன் பொதுவில் பொது நல நோக்கில் 49 ஓ போடுவது இன்னும் சுலபமாகவில்லை .

49 ஓ போடப் போவதில் உள்ள அடிப்படைப் பிரச்னை என்ன?

நாம் முன்னரே குறிப்பிட்டது போல ,.

49 ஓ என்று சொன்னதும் எல்லா கடசி ஏஜெண்டுகளும் நம்மை முறைப்பார்கள் . ஐந்து வருடமாக தங்களுக்குள் அடித்துக் கொண்டிருந்தவன் எல்லாம் அதிசயமாக , ஒன்று கூடி ஒன்றிணைந்து முறைப்பார்கள் . எல்லா பயலுக்கும், தான் எதிரி என்பதை அந்த வாக்காளன் சத்தம் போட்டு அறிவிக்கிறான் அல்லவா? அதுதான் காரணம் . !

ஆனால் தேர்தல் கமிஷன் என்ன சொல்கிறது ? உங்கள் வாக்கு ரகசியமானது எனவே பயப்பாடாமல் வாக்களியுங்கள் என்கிறது .
ஆனால் 49 ஓ போடுவதில் ரகசியம் எங்கே வாழ்கிறது ?


'பொதுவாக ஒட்டுப் போடுவபவனுக்குதான் ரகசியம் காக்கப் படும் என்று தேர்தல் கமிஷன் சொல்கிறது...... . ஆனால் 49 ஓ என்பது யாருக்கும் ஓட்டு இல்லை என்று கூறுவது ...... அவனது ரகசியம் எதற்கு காக்கப் பட வேண்டும்?' என்று அநியாயமாக வாதாடத் தயாராகும் அறிவு ரவுடிகளுக்கு ஒரு வார்த்தை .

தேர்தல் நாளில் ஒட்டுப் போடும் இடத்துக்கு அரசால் அனுமதிக்கப் பட்டு, ஒட்டுப் போடுபவர்களின் அதே வரிசையில் வந்து, 49 ஓ போடுகிறவன் என்ன செய்ய வருகிறான்? எல்லா கட்சிகளும் தவறான வேட்பாளரை நியமித்துள்ளதைக் கண்டித்துதான் , தன் கருத்தை --- குரலை -- வாக்குரிமையை பயன்படுத்துகிறான் . ஆக அவனும் வாக்காளன்தான் . சொல்லப் போனால் அவன் , எல்லா கட்சிகளின் அயோக்கியத்தனததையும் கண்டிக்கிற கம்பீர வாக்காளன் . அவனுக்கு தனி வழி ஏற்படுத்திக் கொடுத்தால் கூடத் தப்பில்லை . ஆனால் அதுவும் அவனை அடையாளப் படுத்தும் என்பதால் சமுதாய நேர்மையின் பொருட்டு வாக்களிக்க வரும் கும்பலோடு கும்பலாக அவனும் நிற்கிறான் . அவன் உயர்ந்தவன் . ரகசியமான மானசீகமான மரியாதைக்குரியவன் ,


ஆனால் பிக்பாக்கெட் அடித்தவனை ஊரறிய முச்சந்தியில் நிறுத்துவது போல, அந்த கம்பீர வாக்காளனை நிற்க வைத்து அடையாள அட்டையை சுற்றிச் சுற்றி வளைத்து வளைத்துக் காட்டி, பெயர் , தந்தை பெயர் முகவரி இவற்றை ஏலம் போட்டு காட்டிக் கொடுத்து கயமை செய்வது என்ன நியாயம்?

இப்படி செய்துவிட்டு உங்கள் வாக்குரிமை ரகசியமானது என்று சொல்வது என்ன நியாயம் ?


என்ன செய்யவேண்டும்?

கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுக்கான அடையாளங்கள் எப்படி வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிக்கப் படுகிறதோ அதே போல 49 ஓ வுக்கும் ஒரு பட்டன் வைக்கப் பட வேண்டும் .

49 ஓ பதிவும் இரகசியமாக்கப் பட வேண்டும் .

அதுவும் மாற்றுக் கருத்துக்கு மரியாதை தருவதுதான் உண்மையான ஜனநாயகம் எனறால் முதல் பட்டனை 49 ஓ வுக்கு அளிக்க வேண்டும் . . அதுதானே நியாயம் ?


சரி .... மற்ற வேட்பாளர்களை விட 49 ஓ அதிக வாக்குகளைப் பெற்றால் ?

வேறென்ன ... மீண்டும் மறு தேர்தல்தான் .

என்ன தப்பு?

யாரோ ரவுடிகள் ஓட்டு இயந்திரத்தை உடைத்ததால் மறு தேர்தல் வைக்கிறோம் .

ஏதோ ஒரு பொறுக்கி கும்பல் கள்ள ஒட்டுப் போட்டது நிரூபிக்கப் பட்டால் மறுதேர்தல் வைக்கிறோம் .

இருபத்தி நாலு மணி நேர குடிகாரனை எம் எல் ஆ வாக்கி அந்த ஆள் சொல்லாமல் கொள்ளாமல் போதையில் புட்டுக் கொண்டால் மறுதேர்தல் வைக்கிறோம் .


ஒரு நல்ல வேட்பாளரை கூட தர முடியாத எல்லா கட்சிகளையும் மக்கள் கண்டித்திருப்பதைக் கொண்டாட ஒரு மறுதேர்தல் வைத்தால் என்ன?


செலவுதான் பிரச்னை எனறால் அதற்கும் வழி உண்டு .

ஒரு தொகுதியில் 49 ஓ வெற்றி பெற்றது என்று வைத்துக் கொள்வோம் . அங்கு வேட்பாளர்களை நிறுத்திய மற்ற கட்சிகள் மறு தேர்தலுக்கான செலவை பகிர்ந்து கொள்ள வேண்டும் . குறைந்த ஓட்டுக்களைப் பெற்ற கடசி அதிக செலவு . அதிக ஓட்டுகளைப் பெற்ற கடசி குறைந்த செலவு என சதவீத அடிப்படையில் பிரித்துக் கொள்ள வேண்டும்


49 ஓ வை ஒட்டுப் பதிவு இயந்திரத்துக்குள் அமைத்து அதையும் ரகசிய வாக்காக மாற்றாதவரை 49 ஓ பற்றி மூச்சு முட்ட பேசுவதில் பயன் இல்லை .


இதுதான் இந்தத் தேர்தல் வாக்குப் பதிவு நமக்கு உணர்த்திய பாடம் .

நடக்குமா?

No comments:

Post a Comment