Tuesday, April 5, 2011

#உலகக்கோப்பை வெற்றி ....! கேள்வியும் பதிலும் நானே


இந்திய அணியின் வெற்றி எப்படிப்பட்டது ?

இன்னும் கம்பீரமாக வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் ஸ்ரீசநத் புண்ணியத்தால் (பாவத்தால்?) கொஞ்சம் போராட வேண்டி இருந்தது , முதலில் ஆடிய இலங்கை அணி 25 ஓவர்களை ஆடி முடித்திருந்த போது அணியின் ஸ்கோர் 126 . அதில் ஸ்ரீசாந்த் கொடுத்தது மட்டும் 64 ரன்கள் . எட்டு ஓவர்களில் ஒரு விக்கெட்டை கூடா வீழ்த்தாமல் . இலங்கை பிரச்னைக்கு பிறகு இந்தியாவை விட இலங்கையிடம் ரகசிய காதலில் இருக்கும் -- நமது மத்திய அரசில் 'சக்தி'யோடு இருக்கும் ---மலையாளிகள் சிங்களவனுடன் சேர்ந்து இந்திய அணியை வீழ்த்த திட்டமிட்டு ஸ்ரீசாந்தை களம் இறக்கினார்களோ என்ற அச்சம் எழுந்தது . கம்பீர் கம்பீரமாகவும் தோனி, தோணியாகவும் ஆனதால் வென்றோம்

ஒருவேளை இலங்கை அணி வென்று இருந்தால் ?

ஒரு கொடுமையும் ஒரு நல்லதும் நடந்திருக்கும் .

கொடுமை . முதல் முதலில் ஷேவாக் கை வீழ்த்தியவுடன் லசித் வெளிப்படுத்திய காட்டுத்தனமான எக்ஸ்பிரஷன் ஆயிரம் மடங்காக வாங்கடே மைதானத்தை அசிங்கப்படுத்தியிருக்க்கும் . அந்த கொடுமை நல்ல வேலை நடக்கவில்லை .

1992 ஆசிய கோப்பையில் செமி பைனலில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது . பைனலில் இந்தியாவை இலங்கை வீழ்த்தியது . உடனே தன்னை வென்ற இந்தியாவை வென்ற இலங்கை அணியை விருந்துக்கு அழைத்தது பாகிஸ்தான் . விளையாட்டை விளையாட்டாகப் பார்க்காமல் அரசியலாகப் பார்த்த அற்ப இலங்கை தனது வெற்றி அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பியது . அங்கு இரு அணி வீரர்களும் அரசு பிரமுகர்களும் சேர்ந்து குடித்து கும்மாளம் அடித்து இந்தியா down down என்று கோஷமிட்டு கொண்டாடினார்கள் . இப்போதும் இலங்கை வென்று இருந்தால் இந்திய இலங்கை நட்பின் லட்சணம் மீண்டும் மக்களுக்குப் புரிந்திருக்கும் . அந்த நல்லது நடக்காததில் வருத்தமே .

ஜெயவர்தனேவின் செஞ்சுரி பற்றி?

இலங்கை அணியின் மிகப் பெரிய பலவீனம் வெற்றிக்காக ஆடாமல் தனிப்பட்ட சாதனைகளை மட்டுமே மனதில் வைத்து ஆடியது . ஜெயவர்தனே செஞ்சுரி போட்டபோது கேலரியில் இருந்து வாழ்த்திய அந்த உறவுக்காரப் பெண்மணி முகத்தில் இலங்கை தோற்றபோது பெரிய வருத்தம் தெரியவில்லை .

ஷேவாக் அவுட் ஆனது ...?

அது சரியான எல் பி டபிள்யூ என்று பச்சைக் குழந்தைக்கு கூட பார்த்த உடனே தெரிந்தது . ஆனால் ரிவியூ போய் ஒரு வாய்ப்பை வீணாக்கியது நியாயமா வீரு?

சச்சின் அவுட் ... ?

இன்னும் கூட அவரால் சரியாக கணிக்க முடியாத பந்துகள் வருகின்றன . நிஜமாகவே கிரிக்கெட் என்பது ஒரு பெரிய கடல்தான் .

கம்பீரின் 97 பற்றி ?

சச்சின் டெண்டுல்கர் நூறாவது செஞ்சுரியை நெருங்க முக்கிய காரணம் என்ன தெரியுமா? பெரும்பாலான தனது சத ஆட்டங்களில் 96 ரன்களை நெருங்கிய பிறகு அவர் கிரீசை விட்டு வெளியே வந்து பவுண்டரி அடிக்கவோ சிக்சர் அடிக்கவோ முயல்வதில்லை . சதம் அடித்த பிறகுதான் அந்த வேலை எல்லாம் . ஆனால் கம்பீர் ? 97 இல் இருக்கும்போது அப்படி கிரீசை விட்டு வெளியே வந்து முயற்சிக்க வேண்டிய அவசியம் என்ன ? சதம் அமைந்த பிறகு அதையெல்லாம் செய்து தொலைக்க வேண்டியதுதானே ? பக்குவமில்லாத ஆட்டம் .தோனியின் 91 எப்படி?


தனிப்பட்ட சாதனைபற்றி கிஞ்சிற்றும் கவலைப் படாமல் அணியின் வெற்றிக்காக மட்டுமே ஆடிய ஆட்டம் இது . அருமை . ஒரு கேப்டன் என்ற விதத்தில் அணியினரை தேர்ந்தெடுக்கும் விதத்தில் அவர் தோற்று இருந்தாலும் ஓர் ஆட்டக்காரனாக அவர் ஆட்ட நாயகன்தான்

ஆட்டம் முடிந்த பிறகு மைதானத்தில் ஒழுங்காக ஆடாத சச்சினிக்கு தோனியை விட அதிக முக்கியத்துவம் கொடுத்தது சரியா ?

அந்த அவஸ்தை சச்சின் முகத்திலேயே தெரிந்ததுதான் அழகு . அவர் பந்து பொறுக்கிப் போடும் பையனாக ஆரம்பித்த மைதானம் அது . இதுவரை அவரது காலத்தில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது இல்லை . இப்போது வென்ற அணியில் அவரும் இருக்கிறார் என்பதால் அவருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் அப்படி செய்துள்ளனர் . தவிர அவர் மண்ணின் மைந்தன் . எல்லோருமே மானம் கெட்ட தமிழம் மாதிரியே இருக்க முடியுமா? அந்த ரசிகர்களை குஷிப் படுத்த அது ஒரு வழி . பரவாயில்லை .

மைதானத்தில் ரஜினிகாந்த்தைப் பார்த்தீர்களா ?

நிஜமான மராட்டியன் அவர் . மும்பை வான்கடே மைதானத்தில் கூடும் ரசிகர்களும் அப்படியே . ஆக மராட்டிய இன உணர்வோடு அங்கு வீற்றிருந்தார் அவர் . நீ உப்பு போட்டு சோறு திங்காத ஈன தமிழ் இனத்தில் பிறந்தவன் என்பதற்காக அவரை குறை சொல்ல தேவை இல்லை . ஆனால் அங்கே போய் "மாதா வாரிக் கொடுத்தது தாய்ப்பாலு . என்னை வாழ வைத்தது மராட்டியப் பாலு " என்று பாடி யாரும் பிழைக்க முடியாது . காசுக்காக அப்படி எழுதும் கட்டை பஞ்சாயத்து கவிஞன் யாரும் அங்கு இல்லை .


பொறுக்க முடியாத அநியாயம் ?


தேர்வுக் குழுவினர் ஒவ்வொருவருக்கும் 25 லட்சம் பரிசாம் . ஸ்ரீசாந்தை தேர்ந்தேடுத்தவனுக்கு ஒரு கோடி ரூபாய அபராதம் போடாதது மட்டும் மன்னிக்கவே முடியாத அநியாயம் .

இந்திய அணி வென்றதை இலங்கையில் யாழ் மாவட்ட தமிழர்கள் சந்தோஷமாக கொண்டாடி சிங்களவனிடம் அடி வாங்கி இருக்கிறார்களே ..

தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் பேசிக் கொண்டு உயர்சாதி ஆணவம் காரணமாகவும் டெல்லி துப்பும் எச்சிலை குடிக்கும் அரசியல் காரணமாகவும் தமிழினமே அழிக்கப் படுவது பற்றி கவலைப் படாமல் இலங்கையின் இறையாண்மை பற்றிஇங்கே இருந்தபடியே கவலைப் பட்ட , பண்ணாடைகளிடம் பரதேசிகளிடம் கம்மனாட்டிகளிடம் கபோதிகளிடம் இதை சொல்லுங்கள் .இத்தனை துரோகம் செய்த பிறகும் ஈழத் தமிழன் யாரை நேசிக்கிறான் என்பதை 'சோ 'வென செருப்பால் அடித்துச் சொல்லுங்கள் .

6 comments:

Anonymous said...

gampir dropped catch and run out

சு.செந்தில் குமரன் said...

ok

sharfu said...

in ur statement, its seems to be sreesanth is been accused cos he is a malayalee rather he didnt played well.

please avoid these kind of communal statements.

sreesanth should be sacked because of his poor perfomance and worst attitude.

சு.செந்தில் குமரன் said...

u r right? but u know how sreesanth got in the team ? pity on u . while all the states are working on communal basis , if u r like a saint ur underwear too will be removed soon .

plz .try to know about the illegal role of malayalees in indian politics

the assistant of u.n .seceratary , srilankan military advisor , one important person in our central government are brothers who have the family name of NAMBIYAAR .

sharfu said...

plz .try to know about the illegal role of malayalees in indian politics

the assistant of u.n .seceratary , srilankan military advisor , one important person in our central government are brothers who have the family name of NAMBIYAAR

ya true ,

everywhere malayalee, there will a lobby for them,

it should be stopped in all aspect,

only perfomance should be the weightage for selection criteria rather it should not be the representive of part of a country.

once a cricket legend said that the cricket selection commitee is bunch of jokers.

and again to u, if they are doing it, why should we?

சு.செந்தில் குமரன் said...

. they are doing it . so i pointed out it . i am not doing what they are doing . if so i will not be qualified to scold them

but if u dont have the awareness of it and dont give voice against that .... then u will be cheated more than any others in india
k?

Post a Comment