Monday, April 11, 2011

#உங்கள் தொகுதியிள் உங்கள் ஓட்டு யாருக்கு ? பகுதி 1

அன்பர்களுக்கு வணக்கம் .

உங்கள் தொகுதியில் நீங்கள் ஓட்டுப் போட வேண்டிய வேட்பாளர் யார் என்று தேர்ந்தெடுத்து உங்களுக்கு அளித்துள்ளேன் .

எந்தக் கடசி சார்பும் இல்லாமல் எந்த நிருபர் படையும் இல்லாமல் எந்த தனியார் நிறுவனத்தின் சேவையும் இல்லாமல் நான் மட்டும் ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்த பட்டியல் இது .

சுமார் இருபது வருட பத்திரிக்கையாளர் பணி ....... ஒரு உதவி இயக்குனராக தமிழகம் முழுதும் (ஓரளவு ) அலைந்து திரிந்த அனுபவம் ..... தனிப்பட்ட எந்த தலைவருக்கும் ஜால்ரா அடிக்காமல் , நான் ஒரு தூய தமிழன் என்ற காரணத்தால் ஓட்டு மொத்த தமிழகத்தையும் என் தாய் பூமியாக நேசிக்கும் உள்ளம் ....அதனால் பல்வேறு பகுதிகளின் வாழ்க்கை, கலாச்சார, பொருளாதாரச் சூழல்களையும் ஊன்றிப் படித்து மனிதில் பதிய வைத்த பாங்கு , மாநிலம் முழுக்க எனக்கு உள்ள நண்பர்கள் , சுமார் ஐநூறு தொலைபேசி அழைப்புகள் , இவற்றின் மூலம் நான் தீர விசாரித்து தீர்மானித்து கொடுக்கும் பட்டியல் இது .

வேட்பாளரின் நேர்மை . எளிமை , , அவரது கட்சியில் அவரது செல்வாக்கு , திறமை , முந்தைய செயல்பாடுகள் , அவரைப் பற்றிய பொதுவான மக்களின் எண்ணம் இவற்றின் அடிப்படையில் உங்கள் தொகுதியில் உங்கள் நன்மைக்காக நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைப் பொது மக்களுக்காக கூறுகிறேன் . இதை பின்பற்றினால் பொதுமக்களுக்கு நன்மை . சில தொகுதிகளுக்கு 49 ஒ வை பரிந்தரை செய்துள்ளேன் (வேறு வழி இல்லை)

மற்றபடி எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவும் , யாருடைய நேரடி அல்லது மறைமுக தூண்டுதல் காரணமாகவும் நான் இதை வெளியிடவில்லை . என் கையில் என் ஒரு ஓட்டு தவிர யார் ஓட்டும் இல்லை . ( என் மனைவியிடமே என் கருத்தை மட்டுமே கூறுவேன் . மற்றபடி இந்தக் கட்சிக்குதான் ஓட்டுப் போடவேண்டும் என்று கட்டளையிட மாட்டேன்)

ஆக , இது , யார் ஜெயிப்பார்கள் என்பததற்கான கருத்துக் கணிப்பு அல்ல ! அல்ல !! அல்ல!!!

யாருக்கு ஓட்டுப் போட்டால் மக்கள் ஓரளவாவது ஜெயிப்பார்கள் அல்லது ரொம்பவும் தோற்க மாட்டார்கள் என்பதற்கான கருத்தாக்கம் மட்டுமே இது .

வழக்கமாக எனது கட்டுரைகளைப் படித்து விட்டு கருத்து கூட இடாமல் அதாவது படித்த மாதிரியே காட்டிக் கொள்ளாமல் நான் சொல்வதை தங்கள் சிந்தனை போல வேறு இடங்களில் பயன்படுத்துவோரே ... சற்றே விலகி இரும் பிள்ளாய். (இந்தக் கருத்து என்னைப் பின்பற்றுவோரைக்---followers-- குறிக்காது )

மற்றபடி இந்தக் கருத்தாக்கத்தின் எந்தப் பகுதியையும் எந்தக் கடசிக்கும் ஆதரவாக பயன்படுத்தக் கூடாது . அதே தனிப்பட்ட விதத்தில் எல்லா கடசி வேட்பாளருக்கும் ஆதரவாக இதை .எனக்கு உடனடியாக தகவல் தெரிவித்து விட்டு பயன்படுத்திக் கொள்ளலாம் . வலைப்பூவான http://susenthilkumaran.blogspot.com , பேஸ் புக் , எனது மின்னஞ்சலான su.senthilkumaran@gmail.com ஆகியவற்றிற்கு எழுதலாம்

நான் சொல்பவர்கள் ஜெயிக்கப் போகிற வேட்பாளர்களா எனறால்...... யாம் அறியோம் பராபரமே !

ஆனால் ஓட்டுப் போடும் அப்பாவி ஜனம் ஓரளவாவது நன்மைபெறவேண்டுமானால், இவர்களே ஜெயிக்க வைக்கப்பட வேண்டிய வேட்பாளர்கள் .

இதில் ......தொகுதிகளை வரிசைப் படுத்த மட்டும் ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பில் வெளிவந்த பாராளுமன்றத் தொகுதிவாரியான வரிசையைப் பயன்படுத்திக் கொண்டேன் . அதற்காக (மட்டும்) ஜு வி க்கு நன்றிகள் .

இனி .. இதோ உங்கள் தொகுதியில் நீங்கள் ஜெயிக்க வைக்க வேண்டிய வேட்பாளர் .

பாராளுமன்றத் தொகுதி
************************************
ச. ம . தொகுதி ---- - ஜெயிக்க வேண்டிய வேட்பாளார்.திருவள்ளூர் பா ம தொகுதி
******************************************

1 . பொன்னேரி ------------------------------------------------ பொன் ராஜா(அதிமுக )2 . திருவள்ளூர்---------------------------------------------- பிவி ரமணா (அதிமுக)3 பூந்தமல்லி ------------------------------------------ ----------- மணிமாறன் (அதிமுக)4 ஆவடி ----------------------------------------------- -------- அப்துல் ரஹீம் (அதிமுக)


5 .மாதவரம்---- --------------------------------------------------------மூர்த்தி (அதிமுக)


6 .கும்மிடிப்பூண்டி ------------------------------------------------- ---- 49 ஒவடசென்னை
********************

7 திருவொற்றியூர் ------------------------------------------------------- குப்பன்(அதிமுக)
8 டாக்டர்ராதாகிருஷ்ணன் நகர் -----------------------வெற்றிவேல் (அதிமுக)


9 .பெரம்பூர் ------- ---------------------------------------------------சவுந்திரராஜன் (சிபிஎம்)10 கொளத்தூர்

----------------------------------- முக ஸ்டாலின் (திமுக (அல்லது) . சைதை துரைசாமி (அதிமுக)

(இருவருமே தகுதியானவர்கள்தான் )11 திருவிக நகர் --------------------------------------- நீலகண்டன் (அதிமுக)

12 .ராயபுரம்------------------------------------------------------ -ஜெயக்குமார் (அதிமுக)

தென்சென்னை

******************


13 .விருகம்பாக்கம்-------------------------------------------------------------- 49 ஓ

14சைதாப்பேட்டை- ------------------------ செந்தமிழன்(அதிமுக)15 தி . நகர் -------------------------------------------------------------கலைராஜன் (அதிமுக)16 .மைலாப்பூர் -----------------------------------------------------அசோக் (மக்கள் சக்தி )17 .வேளச்சேரி------------------------------------ தமிழிசை சவுந்திரராஜன் (பாஜக )

18 .சோழிங்க நல்லூர்-----------------------------------------------------கந்தன் (அதிமுக)மத்திய சென்னை

******************


19 .வில்லிவாக்கம் --------------------------------------------------அன்பழகன் (திமுக)
20 எழும்பூர்----------------------------------------------------------பரிதிஇளம்வழுதி(திமுக)-21துறைமுகம்-----------------------------------------------------பழகருப்பையா(அதிமுக)22 சேப்பாக்கம் -----------------தமிமுன்அன்சாரி (மனிதநேய மக்கள் கடசி )
23 ஆயிரம் விளக்கு------------------------------------------------------------------------- 49 ஓ
24அண்ணாநகர்------------------------------------------ கோகுல இந்திரா (அதிமுக)


ஸ்ரீ பெரும்புதூர்

*****************

25 .மதுரவாயல்--------------------------------------------------------------செல்வம் (பாமக)


26 .அம்பத்தூர்-------------------------------------------------------------ரங்கநாதன் (திமுக)

27ஆலந்தூர்----------------------------------------பண்ருட்டி ராமசந்திரன் (தேமுதிக)28 . ஸ்ரீபெரும்புதூர் ----------------------------------------- பெருமாள் (அதிமுக )

29 பல்லாவரம-------------------------------------------------------------- தனசிங் (அதிமுக)30 தாம்பரம்----------------------------------------------------- எஸ் ஆர் ராஜா (திமுக)


காஞ்சீபுரம்

*****************


31 .செங்கல்பட்டு -----------------------------------------------------------ரங்கசாமி (பாமக )32 திருப்போரூர்---------------------------------------------------கே.மனோகர்(அதிமுக)
33 செய்யூர் ----------------------------------------------------------வி எஸ் ராஜி (அதிமுக)34 .மதுராந்தகம் ------------------------------------------------கணிதா சம்பத் (அதிமுக)

35உத்திர மேரூர்--------------------------------------------------------கணேசன் (அதிமுக)
36 .காஞ்சீபுரம்-----------------------------------------------------சோமசுந்தரம்(அதிமுக)
அரக்கோணம்

*********************

37 .திருத்தணி ------------------------------------அருண் சுப்பிரமணியம்(தேமுதிக)38 . அரக்கோணம் -------------------------------------------------ரவி (அதிமுக)39 .சோளிங்கர்--அருள்அன்பரசு (காங்)------பி ஆர் மனோகர் (தேமுதிக)
பி ஆர் மனோகர் (தேமுதிக)

40 காட்பாடி ----------------- அப்பு ராதா கிருஷ்ணன் (அதிமுக)
41 ராணிபேட்டை ---------------------------------------------ஜான் (அதிமுக)
42 .ஆற்காடு ------------------------------------------------------------சீனிவாசன் (அதிமுக )


வேலூர்
************

43 . வேலூர்--------------------------------------------------------------விஜய் (அதிமுக)


44 அணைக்கட்டு ----கலையரசு (பா ம க )--------- கலையரசு (பாமக )
வேலு(தேமுதிக )


45 .கே வி குப்பம் -----------செ கு தமிழரசன் (இந்தியா குடியரசு கடசி)


46 .குடியாத்தம்-----------------லிங்கமுத்து (இந்திய கம்யூனிஸ்டு கடசி)


47 .ஆம்பூர்------அஸ்லம் பாட்ஷா (மனித நேய மக்கள் கடசி)


48 . வாணியம்பாடி ----------------------------------சம்பத் குமார் (அதிமுக)


கிருஷ்ணகிரி
*******************
49 ஊத்தங்கரை--------------------------------------மனோரஞ்சிதம் (அதிமுக)


50 பர்கூர் -------------------------------------- கிருஷ்ணமூர்த்தி (அதிமுக)


51 கிருஷ்ணகிரி ----------------------------------------கேபி.முனுசாமி(அதிமுக)
52 வேப்பனஹள்ளி-----------------------------------------------------49 ஓ


53 .ஓசூர்--------------------------------------------------------------------------சத்யா (சுயேச்சை)54 ..தளி ---------------------------------)-------------------டி.ராமசந்திரன் (இ கம்யூ )


தருமபுரி
************
55 பாலக்கோடு ---------------------------------------------------------அன்பழகன் (அதிமுக)56 .பென்னாகரம்---------------------------------------------------- நஞ்சப்பன் (இ கம்யூ )57 . தருமபுரி -------------------------------------------------------------சாந்தமூர்த்தி (பாமக)58 .பாப்பிரெட்டி பட்டி ---------------------------- முல்லைவேந்தன் (திமுக)59 .அரூர் --------------------------------டில்லி பாபு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் )


60 . மேட்டூர் ---------------------------------------------------------பார்த்திபன்(தேமுதிக)


------ தொடரும்

அவசியமான பின் குறிப்பு
***************************************
எங்கள் தொகுதியில் மூணாவது மூலையில் முக்கிய சந்தில் வசிக்கும் முனுசாமி சுயேச்சை ரொம்ப நல்லவர் . அவர்தான் வேட்பாளர்களிலேயே ரொம்ப நல்லவர் . அவருக்கு ஓட்டுப் போடச் சொல்லாமல் கடசி அரசியலுக்கு ஓட்டுப்[ போட சொல்வது என்ன நியாயம் என்று கேள்வி கேட்க காத்திருப்போரே .

ஒரு நிமிஷம் . நான் ரஜினிகாந்த் இல்லை . நான் வாய்ஸ் கொடுத்தால் எல்லோரும் ஓட்டு போட . கேவலம் நான் குஷ்பூ கூட இல்லை . எந்த கடசி ஆதரவாளனும் இல்லை . எந்த மெஜாரிட்டி சாதியை சார்ந்தவனும் இல்லை . அப்படியிருக்க நான் சொல்லி ஒரு நாலு ஓட்டு சுயேச்சைக்கு போவதால் என்ன பலன்?

எந்த ஓட்டும் வீணாகக் கூடாது அல்லவா?

அந்த அடிப்படையில்தான் நான் நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கிறேன் . முடியாத நிலையில் 49 ஓ வை சிபாரிசு செய்கிறேன்.

நீங்கள் தேர்ந்தெடுத்த எங்கள் தொகுதி வேட்பாளர் ரொம்ப யோக்கியமா ? என்று கேட்பவருக்கு ஒரு சின்ன கதை .
பல பிள்ளைகள் பெற்ற ஒரு தாயிடம் உங்கள் பிள்ளைகளிலேயே நல்ல பிள்ளை யார் என்று கேட்டபோது அவள் சொன்னாளாம் "அதோ! கூரை ஏறிக் கொள்ளி வைக்கிறானே . அவன்தான் உள்ளவர்களிலேயே நல்ல பிள்ளை "என்று.

மற்ற பிள்ளைகள் அதை விட மோசமாக இருக்கும்போது கூரை ஏறிக் கொள்ளி வைக்கும் பிள்ளைதானே நல்ல பிள்ளையாகிறான் .

ஒருவேளை நான் உங்களுக்கு சுட்டிக் காட்டும் பிள்ளை கூரை ஏறிக் கொள்ளி வைப்பவராகவும் இருக்கலாம் . என்ன செய்ய நீங்கள் 'பெற்ற ' மற்ற பிள்ளைகளை விட , நான் சொல்லும் இந்தப் பிள்ளை மேல் என்று தெரியவருகிறது .

------தொடர்வோம்


2 comments:

ராஜேஷ், திருச்சி said...

தி . நகர் -------------------------------------------------------------கலைராஜன் (அதிமுக...

unmaiyil siripu varudhunga.. kalairajan eppadi pattavar enru T.nagar vandhu paarungal..

adhey pola thousand lightsil jinna nalla vetpaalam when compared to valarmathi..
but you said 49O

mmmmmm

சு.செந்தில் குமரன் said...

நைட்ரஸ் ஆக்சைடை மோந்து இருப்பீங்க . அதான் சிரிப்பு வருது உங்களுக்கு . கலைராஜன் ர்ர்ர்ரொம்ப நல்லவர்னு யாருங்க சொன்னா?

ஜின்னா நல்ல வேட்பாளரா இருந்தா மட்டும் போதுமா?

எனது முன் பின் குறிப்புகளை படிச்சு இருந்தா நீங்க நைட்ரஸ் ஆக்சைடை மோந்து இருக்க மாட்டீங்க .

கலைராஜன் பற்றிய உங்கள் கருத்துக்கு எனது குறிப்பில் உள்ள விளக்கம்

//நீங்கள் தேர்ந்தெடுத்த எங்கள் தொகுதி வேட்பாளர் ரொம்ப யோக்கியமா ? என்று கேட்பவருக்கு ஒரு சின்ன கதை .
பல பிள்ளைகள் பெற்ற ஒரு தாயிடம் உங்கள் பிள்ளைகளிலேயே நல்ல பிள்ளை யார் என்று கேட்டபோது அவள் சொன்னாளாம் "அதோ! கூரை ஏறிக் கொள்ளி வைக்கிறானே . அவன்தான் உள்ளவர்களிலேயே நல்ல பிள்ளை "என்று.

மற்ற பிள்ளைகள் அதை விட மோசமாக இருக்கும்போது கூரை ஏறிக் கொள்ளி வைக்கும் பிள்ளைதானே நல்ல பிள்ளையாகிறான் .

ஒருவேளை நான் உங்களுக்கு சுட்டிக் காட்டும் பிள்ளை கூரை ஏறிக் கொள்ளி வைப்பவராகவும் இருக்கலாம் . என்ன செய்ய நீங்கள் 'பெற்ற ' மற்ற பிள்ளைகளை விட , நான் சொல்லும் இந்தப் பிள்ளை மேல் என்று தெரியவருகிறது .//

ஜின்னா பற்றிய கருத்துக்கு எனது குறிப்பில் உள்ள விளக்கம் .

//வேட்பாளரின் நேர்மை . எளிமை , , அவரது கட்சியில் அவரது செல்வாக்கு , திறமை , முந்தைய செயல்பாடுகள் , அவரைப் பற்றிய பொதுவான மக்களின் எண்ணம் இவற்றின் அடிப்படையில் உங்கள் தொகுதியில் உங்கள் நன்மைக்காக நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைப் பொது மக்களுக்காக கூறுகிறேன் . இதை பின்பற்றினால் பொதுமக்களுக்கு நன்மை . சில தொகுதிகளுக்கு 49 ஒ வை பரிந்தரை செய்துள்ளேன் (வேறு வழி இல்லை)//


ஆயிரம் விளக்கு தொகுதியில் ஜின்னா ஜெயித்தால் அவருக்கு வேலை எங்கு இருக்கும் ? விருகம்பாக்கம் தொகுதியில் பார்த்தசாரதி ஜெயித்தால் அவருக்கு வேலை எங்கு இருக்கும் என்று.......

கலைராஜன் பற்றியே நன்கு அறிந்த உங்களுக்கு தெரியும் என்று .... நம்புகிறேன் .

இனிமே ஆக்சிஜனை மட்டும் சுவாசித்தால் தேவை இல்லாமல் சிரிப்பு வராது , உடல் நலத்தில் கவன செலுத்துங்கள் .

Post a Comment