Tuesday, April 12, 2011

# அவசியம் ஒட்டுப் போடுங்கள் ;


வாக்குப் பதிவு அறையில் அவன் நுழைவதைப் பாருங்கள் . ஒடுக்கப் பட்ட பாட்டாளியின் முகபாவத்தோடு உள்ளே நுழைகிறான் . அவன் வெளியே வரும்போது மன்னனின் சாயலோடு திரும்புகிறான் " --- பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் பிரபல எழுத்தாளர் விக்டர் ஹியூகோ பேசியது


--- நன்றி பத்திரிக்கை நண்பர் ப. திருமா வேலன் (17 --04 --11 ஜூனியர் விகடனில் )

பாட்டாளிகளே! மன்னராக அவசியம் ஒட்டுப் போடுங்கள் !

எல்லா கரைகளுமே களங்கங்கள் இல்லை . ஆள் காட்டி விரலில் வைக்கப் படும் ஓட்டு அடையாள மைக் கறை புனிதமானது ! கம்பீரமானது ! ஆண்களே ! அவசியம் ஒட்டுப் போடுங்கள் !

பெண்களே ! உங்கள் அழகான -- புனிதமான --- தெய்வீகமான --செல்லக் குழந்தையின் கன்னத்தில் வைக்கப் படும் திருஷ்டி மையை விட கோடி மடங்கு புனிதமானது இன்று நீங்கள் உங்கள் ஆள் காட்டி விரலில் வைத்துக் கொள்ளும் தேர்தல் மை . . அதுதானே உங்கள் செல்லக் குழந்தையின் வருங்காலத்தை நிர்ணயிக்கப் போகிறது!


எனவே , இந்தக் கறை நிஜமாலுமே நல்லது !

எனவே அவசியம் ஒட்டுப் போடுங்கள் .

வெயில் அதிகம்தான் . ஆனால் நீங்கள் போடும் ஓட்டு அடுத்த ஐந்து ஆண்டு உங்களை லஞ்ச ஊழல் இனத்துரோக வெம்மையில் இருந்து காக்க பயன்படட்டும் .

மறவாமல் வாக்களியுங்கள் .

5 comments:

அருள் said...

பதிவுலகப் போராளிகளுக்கு ஒரு வேண்டுகோள்.

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_13.html

வலிப்போக்கன் said...

வாக்கு ஆள குடீ மக்களே!

வலிப்போக்கன் said...

http://valipokken.blogspot.com

சு.செந்தில் குமரன் said...

அருள் உங்கள் கட்டுரை நான் படித்தேன் . . ஆனால் என்ன செய்ய ? அவர்களை விட இவர்கள் மாபெரும் தமிழின அழிப்பாளர்களாக மாறியதுதான் காலத்தின் கோலம் . இப்படி, கருத்துக்கு முக்கியத்துவம் தராமல் நபருக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தமிழன் பிரிந்து அடித்துக் கொள்ளவேண்டும் என்று நியதி போலும்

எனது உங்கள் தொகுதியில் நீங்கள் ஒட்டுப் போடவேண்டிய வேட்பாளர் முழு பட்டியல் பாருங்கள் . எத்த்னை தொகுதிகளில் திமுக , பாமக , விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர்களை ஓட்டளிக்க வேண்டியவைகளாக அடையாளம் காட்டியுள்ளேன் என்பதை புரிந்து கொள்ளலாம் . உங்கள் சிந்தனை எனக்கும் உண்டு . ஆனால் இப்போது விடுதலைப்புலிகளின் எதிரிகள் முக்கியமா ? இல்லை ஓட்டு மொத்த ஈழத் தமிழினத்தின் அழிப்பாளர்கள் முக்கியமா என்ற கேள்விதான் முன் நிற்கிறது .

எனக்கு எந்த அரசியல் தலைவரும் முக்கியமில்லை . மக்கள்தான் முக்கியம் . எனவே உங்கள் பதிவின் கடைசி வாக்கியம் என்னை காயப் படுத்தாது . ஆனால் மே பதி மூன்றாம் தேதி அதே வாக்கியம் உங்களுக்கு எதிராக வந்தால் ஆறுதல் தரவும் நான் வருவேன் . மக்கள் தோற்காத வரை எனக்கு யாருடைய ஆறுதலும் தேவையில்லை நன்றி

சு.செந்தில் குமரன் said...

வழிப் போக்கன் ....உங்கள் பதிவு நகைச்சுவையாக உள்ளது . ஆனால் கால நேரத்துக்கு ஏற்ற நகைச்சுவை இல்லை . பிறிதொரு மன நிலையில் பேசுவோம் வழிப்போக்கன்

Post a Comment